கலைஞருக்கு சில TIPS!

Posted on Friday, May 8, 2009 by நல்லதந்தி

வாழும் வள்ளுவம் வாக்கிங் உண்ணாவிரதம் இருந்தது நம்மை சிரிப்புக் கடலில் ஆழ்த்தி மகிழ்ந்தது தெரிந்ததே!. இரண்டு மாதங்களுக்கு முன் அறுவை சிகிச்சை முடிந்த கையோடு ஆஸ்பத்திரி உண்ணாவிரதம் அறிவித்தார். இதனால் நமக்குத் தெரியாமல் ஆஸ்பத்திரியில் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறாரா? என்று அதிர்ச்சியடைந்த டாக்டர்கள் ஆப்பரேஷன் முடிந்த கையோடு நீங்கள் இப்படி அறிவித்தால் மக்கள் நீங்கள் உண்மையிலேயே ஆபரேஷன் செய்து கொண்டிருக்கிறீர்களா? அல்லது ஐகோர்ட் பிரச்சனையில் இருந்து தப்பிக்க ஆஸ்பத்திரி டிராமாவை நடத்துகிறாரா? என்று மக்கள் சந்தேகப் படமாட்டார்களா என்று சொன்னவுடன் தன்னுடைய தில்லுமுல்லு தனக்கே ஆப்பு வைப்பதைக் கண்டு உண்ணாவிரத தமாஷை அப்படியே அடக்கி வாசித்து வீடு திரும்பினார். இப்படி காரிய முட்டாளான கலைஞர் டாக்டர்களைக் காரணமில்லாமல் முட்டாள்கள் ஆக்கினார்.

இப்போதைய வாக்கிங் உண்ணாவிரதம் லஞ்ச் பிரேக்குக்கு முன்னால் பிரேக் ஆகிவிட்டது. உண்ணாவிரதத்தால் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என்று ப.சிதம்பரம் ஒப்புக் கொண்டாரே ஒழிய இன்னும் அம்மா முதல் ஐ.நா.சபை செயலாளர் வரை போர் நிறுத்தத்திற்காக இந்த நிமிடம் குரல் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். மன்மோகன் சிங்கைக் கேட்டால் ஒருத்தருக்கு எவ்வளவுதான் தொல்லை கொடுப்பது விட்டு விடுங்கள். ஆஸ்பத்திரியில் ரெஸ்ட் எடுக்கட்டும் என்பார். மக்கள் நம்புவதாய்த் தெரியவில்லை. வேறு என்ன செய்வது என்றால் இதைப் பயன் படுத்திக் கொள்ளலாம்.

இராஜபக்‌ஷே போரை நிறுத்த ஒப்புக் கொண்டதாய் தெரியவில்லை.அவ்ரை ஒப்புக் கொள்ள வைக்க கலைஞர் வீட்டில் அவருக்கு பலமான விருந்து வைத்து அவர் சாப்பிட முடியாமல் ”போதும் நிறுத்துங்கள்” என்று சொல்லும் போது கொல்றாங்களே டப்பிங் வாய்ஸ் புகழ் தயாநிதி மாறனை விட்டு “போரை நிறுத்துங்கள்” என்று மாற்றிக் குரல் கொடுத்து சன்,கலைஞர் T.V யில் ஒளிபரப்பலாம்.

இதெல்லாம் நமக்குச் சரிப்படாது. வழக்கம் போல், மனித சங்கிலி, தந்தி, உண்ணாவிரதம், பந்த் போன்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகள் மூலமாகவே இலங்கைப் பிரச்சனையை அணுகலாம் என்றால்....

விடுமுறைக் கொண்டாட்ட உண்ணாவிரதம்: இந்த உண்ணாவிரதத்தில் உள்ள விஷேசம் என்னவென்றால் உண்ணாவிரதத்தை நாம் இருக்க வேண்டியது இல்லை. கலைஞர் T.V, Sun T.V போன்றவைகளில் இதுவரை தமிழ் படங்களில் இடம் பெற்ற உண்ணவிரதக் காட்சிகளை ஒன்றினைத்து ஒளி பரப்பலாம். நாமெல்லாம் T.V.யைப் பார்த்து, சாப்பிட்டுக் கொண்டே, உண்ணாவிரதக் காட்சிகளைப் பார்ப்பதனால் உண்ணாவிரதம் இருக்கின்ற உணர்வைப் பெறலாம். பெரும்பான்மையான படங்களில் வரும் உண்ணாவிரதக்காட்சிகள் நகைச்சுவை காட்சியாகவே அமைக்கப் பட்டு இருக்கும். எனவே கலைஞர் உண்ணாவிரதம் இருந்த அளவிற்கு நகைச்சுவையாக இல்லாவிட்டாலும், ஒரளவிற்கு நகைச்சுவையாகவே இருக்கும் படியால் கொண்டாடத்திற்கு குறைவு இருக்காது.

தந்தி உண்ணாவிரதம்: இந்த உண்ணாவிரதம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் திட்டத்துடன் புதுமை கலந்தது. தந்திக்குத் தந்தி! உண்ணாவிரதத்திற்கு உண்ணாவிரதம்.சுருக்கமாகச் சொல்லப் போனால் மாறன் பிரதர்ஸ் அழகிரி பிரச்சனையையும் ஸ்பெக்ட்ரம் பிரச்சனையையும் பணம் என்கிற ஒரே கல்லில் கலைஞர் தீர்த்ததைப் போல!. இதில் இன்னொரு புதுமையும் உண்டு இந்தத் தந்தியை நீங்கள் பிரதமருக்கு அனுப்பத் தேவையில்லை. அவர் சாதாரணமாகவே இதை கவனிக்கப் போவதில்லை, அதிலும் இப்போது தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதால் அவருக்கு தந்தி வந்த விஷயமே தெரியாமல் போய் விடலாம். எனவே இந்தத் தந்தியை நம் விலாசத்திற்கே அனுப்பிக் கொள்ளலாம். இதனால் டெல்லி வரை தந்தி அனுப்புகின்ற செலவு மிச்சம். தந்தியில் உயிர் கொடுப்போம், உண்ணாவிரதம் இருப்போம் என்று வாசகம் அனுப்புவதில் அதை நமக்கே அனுப்பிக் கொள்வதால் சுருக்கமாக உ.கொ.உ.இ என்று அனுப்பிக் கொள்ளலாம். தந்தி வீட்டிற்கு வந்தவுடன் தந்தியை உயிர் கொடுப்போம், உண்ணாவிரதம் இருப்போம் என்று ஆவேசமாக படித்து ஆறுதல் அடைந்து இலங்கைப் பிரச்சனையை யாரும் அறியாமல் தீர்க்கலாம்.

மனிதசங்கிலி உண்ணாவிரதம்: இந்த உண்ணாவிரதம் கூடி வாழ்ந்தால் கேடிகளுக்கு நன்மை என்ற திட்டத்தில் பால் வகுக்கப் பட்டது. இதில் மேடையில் இருக்கின்ற தலைவர்கள் ஜனக்களுக்கு தரிசனம் தரும் போது எந்தத் தலைவனும் வேறு அணிக்குத் தாவக்கூடாது என்று தடுப்பதைப் போல ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொள்வார்கள். அதைப் போல தொண்டர்கள் ஒருவரை ஒருவர் தத்தமது ஒரு கையால் பிடித்திக் கொள்ளவேண்டும் மறு கையால் மற்றவருக்கு அவருக்கு வேண்டுமானவற்றை ஊட்டிக் கொள்ளலாம். உண்ணாவிரதக் கொள்கைப் படி அவர்கையால் அவர் சாப்பிடக்கூடாது. போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் போது மாடு போல அசை போட்டுக் கொண்டிருக்காமல் இருக்க கொஞ்சம் கவனம் தேவை.

ரிலே ரேஸ் உண்ணாவிரதம்: இது கொஞ்சம் old style உண்ணாவிரதம். வழக்கமாக தொழிற்ச்சங்கங்கள் சாகும் வரை உண்ணாவிரதம் மேற் கொள்ளும் பாணியிலான உண்ணாவிரதம் இது. காலை 6 மணிக்கு 100 பேர் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் என்றால் சரியாக 8 மணிக்கு மேலும் 10 நண்பர்கள் உண்ணாவிரதப் பந்தலுக்கு வர வேண்டும். இவர்கள் வந்தவுடன் உட்கார்ந்து இருக்கும் 10 பேர் வெளியே எழுந்து போய் தத்தமது கடமையை ஆற்றிக் கொண்டு வரலாம். இவர்கள் வந்த்தவுடன் அடுத்த 10 பேர் வெளியே சென்று காலை போஜனத்தை முடித்துக் கொண்டு வரலாம். இப்படியே ஒரு சுற்று முடிவதற்குள் மதிய சாப்பாட்டு வேளை வந்துவிடும். அடுத்த சுழற்சியை இப்படியே தொடரலாம். ஒருத்தர் கூட சாக முடியாது. இம்மாதிரி ஆயிரம் வருடங்கள் கூட உண்ணாவிரதம் இருக்கலாம் என்பது இதன் சிறப்பு அம்சம்.

மிட் நைட் உண்ணாவிரதம்: இது முழுக்க முழுக்க கலைஞர் பாணியிலான உண்ணாவிரதம். எல்லா மனிதர்களும் தான் ஒரு சாப்பாட்டு வேளைக்கு மறு சாப்பாட்டு வேளைக்கும் இடையே உண்ணாவிரதம் இருக்கிறார்கள். ஆனால் கலைஞர் இம்மாதிரி உண்ணாவிரதம் இருந்ததினால் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டது போல் வேறு யாராவது இருந்ததால் போர் நிறுத்தம் ஏற்பட்டதா?. கலைஞர் முதல் நாள் கூட இப்படித்தான் சாப்பிட்டு இருப்பார். ஆனால் இரண்டு சாப்பாட்டு வேளைக்கு நடுவில் உண்ணாவிரதம் இருக்க முடியும் என்று கலைஞர் சிந்தித்துக் கண்டு பிடித்து அறிவித்ததால் தானே நமக்கும் தெரிந்தது. அதே போல் இரவு சாப்பாட்டுக்குப் பின் காலை வரைக்கும் நீண்ட நேரம் உண்ணாவிரதம் இருப்பதால் இது மிட் நைட் உண்ணாவிரதம். இந்த உண்ணாவிரதத்தில் தூங்குபவர்கள் தூங்கலாம். ஆனால் உட்கார்ந்தபடி தான் தூங்க வேண்டும் இழுத்துப் போர்த்திக் கொள்ள போர்வை தரப்பட மாட்டாது. Sun T.V. யில் சூர்யா T.V. யில் ஒளிபரப்பான மிட் நைட் மசாலாவையும், கலைஞர் T.V. யில் மானாட மயிலாடவையும் ஒளிபரப்பலாம்.

34 Responses to "கலைஞருக்கு சில TIPS!":

Krish says:

//ரிலே ரேஸ் உண்ணாவிரதம்: ////


I like this relay race fasting... :-) Welcome back Thanthi

Suresh says:

சும்மா அதிருதுல்ல போஸ்ட் அருமை

Suresh says:

வோட்டும் போட்டாச்சு

வால்பையன் says:

//வாழும் வள்ளுவம் வாக்கிங் உண்ணாவிரதம் இருந்தது நம்மை சிரிப்புக் கடலில் ஆழ்த்தி மகிழ்ந்தது தெரிந்ததே!.//

இப்படி தலைவா இப்படி ஆரம்பத்துலேயே சிரிக்க வைக்கிறிங்க!

வால்பையன் says:

அருமையா வந்துருக்கு!

கழக கண்மணிகள் படிச்சா பேதி பிடிங்கிறுமே!

ramalingam says:

இரவு உண்ணாவிரதம்தான் இலக்கணப்படி சரி. அதனால்தான் காலையில் பிரேக் ஃபாஸ்ட் என்கிறோம்.

Anonymous says:

Hellow normaly after the major operation,keeping the pation fasting for 6-24 hours!due to aneshthesia complication.so karunanithi may be announced that fasting as a political stunt!! hahaha what a
funny man!!

Kripa says:

You are posting really great blogs... Keep it up...

We have just launched a website called Nam Kural.

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
http://www.namkural.com.

We want your valuable articles to be posted in our website...

நன்றிகள் பல...

நல்லதந்தி says:

// Welcome back Thanthi //

நன்றி! krish!. நான் செய்த ஒரு தவற்றால் தமிழ்மணக் கருவிப் பட்டை வேலை செய்யவில்லை!. அதனால் தான் கொஞ்சம் லேட்!.

நல்லதந்தி says:

நன்றி சுரேஷ்! உங்களைப் போன்ற நண்பர்களால்தான் என் பொழப்பு கொஞ்சம் ஓடுது! மிக்க நன்றி!

நல்லதந்தி says:

//இப்படி தலைவா இப்படி ஆரம்பத்துலேயே சிரிக்க வைக்கிறிங்க!//

வாங்க வால்! கலைஞரை நினைச்சாலே போதும் இந்த மாதிரி விஷயங்கள் தானாகவே வந்துக் கொட்டும்! :)) நன்றி வால்!

நல்லதந்தி says:

வருகைக்கு நன்றி இராமலிங்கம். இந்தப் பேர் எனக்கு ரொம்பப் பிடிக்குது!

அனானி நண்பரே கலைஞரைப் பொறுத்தவரை அவர் கக்கூஸுக்கு போவது கூட தமிழர்களின் நல்வாழ்வுக்காகத்தான் என்பார்! :)

நன்றி க்ருபா! நம்குரலில் என் குரலும் சேரட்டும். அழைப்புக்கு நன்றி!

வான்முகிலன் says:

நண்பரே, யாரக் கேட்டு கலைஞருக்கு டிப்ஸ் கொடுத்தீங்க? கொஞ்ச நாள் நாங்க கலைஞரோட அறிக்கை எதுவும் இல்லாம நிம்மதியா இருந்தோம். அதக் கெடுத்துப்புட்டீங்களே... நாளைக்கு பாருங்க... சும்மா பக்கம் பக்கமா அறிக்கை விடப்போராரு. ஏற்கெனவே இங்க வெயில் தாங்க முடியல. இதுல இது வேறயா?

நான் ஆதவன் says:

எப்பவாவது வரவேண்டியது....வந்தா பட்டைய கிளப்பவேண்டியது.

நடத்துங்க நடத்துங்க

அருப்புக்கோட்டை பாஸ்கர் says:

அன்பு நண்பரே !
உங்கள் பதிவினை கலைனர் காலை சாப்பாட்டிற்கும் மதிய சாப்பாட்டிற்கும் கேப் விட்ட நாளில் இருந்து எதிர்ப்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து போனேன் .
இவ்வளவு நாள் ஏமாற்றத்திற்கும் சேர்த்து விருந்து வைத்தது போல இருக்கிறது உங்கள் பதிவு !

Anonymous says:

ரயில்வே டிராக் உண்ணாவிரதம் : ஓடாத ரயில்வே டிராக்ல தலை வச்சு படுத்துக்கிட்டே உண்ணாவிரதம் இருத்தல்

Rajaraman says:

தல, நடு நடுவுல அடிக்கடி இருக்கிற ஒரு உயிரை தியாகம் செய்து ஒரு பன்ச் டயலாக் உடுவாரெ ( அதாவது உடான்ஸ்) அதை விட்டு விட்டு விட்டீர்களே.

நல்லதந்தி says:

// வான்முகிலன் said...
நண்பரே, யாரக் கேட்டு கலைஞருக்கு டிப்ஸ் கொடுத்தீங்க? கொஞ்ச நாள் நாங்க கலைஞரோட அறிக்கை எதுவும் இல்லாம நிம்மதியா இருந்தோம். அதக் கெடுத்துப்புட்டீங்களே... நாளைக்கு பாருங்க... சும்மா பக்கம் பக்கமா அறிக்கை விடப்போராரு. ஏற்கெனவே இங்க வெயில் தாங்க முடியல. இதுல இது வேறயா?//

வாங்க வான் முகிலன்! கலைஞர் தமாஷ் அறிக்கை வந்து நாளாயிடுச்சே அதான்! :)

நல்லதந்தி says:

// நான் ஆதவன் said...
எப்பவாவது வரவேண்டியது....வந்தா பட்டைய கிளப்பவேண்டியது.

நடத்துங்க நடத்துங்க//

ரொம்ப நன்றிங்க ஆதவன்! கூச்சமாயிருக்கு!. தமாஷ் பண்ணலீயே! :))

நல்லதந்தி says:

//அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
அன்பு நண்பரே !
உங்கள் பதிவினை கலைனர் காலை சாப்பாட்டிற்கும் மதிய சாப்பாட்டிற்கும் கேப் விட்ட நாளில் இருந்து எதிர்ப்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து போனேன் .
இவ்வளவு நாள் ஏமாற்றத்திற்கும் சேர்த்து விருந்து வைத்தது போல இருக்கிறது உங்கள் பதிவு !//

வாங்க பாஸ்! கொஞ்சநாளா தமிழ்மண கருவிப்பட்டையில பிரச்சனை. அதான் அதெல்லாம் மிஸ்ஸாயிடுச்சி!

நல்லதந்தி says:

//Anonymous said...
ரயில்வே டிராக் உண்ணாவிரதம் : ஓடாத ரயில்வே டிராக்ல தலை வச்சு படுத்துக்கிட்டே உண்ணாவிரதம் இருத்தல்//

இந்த ஐடியா சூப்பரா இருக்கே!

// Rajaraman said...
தல, நடு நடுவுல அடிக்கடி இருக்கிற ஒரு உயிரை தியாகம் செய்து ஒரு பன்ச் டயலாக் உடுவாரெ ( அதாவது உடான்ஸ்) அதை விட்டு விட்டு விட்டீர்களே.//

வாங்க தல!. அடுத்ததில பாத்துக்கலாம். :))

Suresh Kumar says:

கலைஞருக்கு சரியான டிப்ஸ் கொடுத்திருக்கீங்க நண்பரே

Anonymous says:

இரண்டு சாப்பாட்டு வேளைக்கு நடுவில் உண்ணாவிரதம் இருக்க முடியும் என்று கலைஞர் சிந்தித்துக் கண்டு பிடித்து அறிவித்ததால் தானே நமக்கும் தெரிந்தது.

Bleachingpowder says:

தல, இத எப்ப எழுதுனீங்க? அவரெல்லாம், தண்டாவாளத்தில் தலை வச்சு படுத்தவராமாம். அப்படி படுக்கும் போது டிரெயினை விட வேண்டாம், தூரத்துல இருந்து ஹாரன் அடிச்சாலே போதும், கோபாலபுரம் வரைக்கும் ஓட்டத்தை நிறுத்த மாட்டார். அடுத்த நாள் அதையும் சமாளித்து, ஈழ மக்களின் விடுதலை விழிப்புணர்விற்காக நான் நடத்திய மாரத்தன் ஓட்டப்பந்தையத்தை நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள்னு முரசொலியில் கடிதம் எழுதிடுவார்.

அப்புறம் கடலில் போட்டாலும் கட்டுமரமாக மிதப்பாரம், விட்டா சிலோன் வரைக்கும் நீந்தீயே போயிடுவார் போல.

உலக தொலைகாட்சி வரலாற்றிலேயே பந்திற்கு சிறப்பு திரைப்படம் ஒளிபரப்பிய சேனல் இவர்களோடது தான். கருமம் புடிச்சவனுங்க இலங்கை தமிழனுக்கும் திருடா திருடி, முரட்டு காளை படத்துக்கும் என்னங்கடா சம்பந்தம். இதுல துக்கத்தை அடிக்க முடியாத கழக கண்மணிகளுக்காக டாஸ்மாக் கடையை மட்டும் திறந்து வயித்துல பீரை வார்த்தாங்க.

ஈழ பிரச்சணையை ஒரே நாளில் தீர்க்க என்கிட்ட ஒரு வழி இருக்கு தல. அது என்னன்னா பிராபகரனும் மற்ற ஈழ மக்களும் கிருத்திவ மதத்திற்க்கோ இல்லை இஸ்லாம் மதத்திற்கோ மாறிடனும், அப்படியே தமிழீலம் பேரை அல் தமிழ் ஜிகாத்னு மாத்தீட்ட போதும். உடனே ஐய்யோகோ மைனாரிட்டு மக்களுக்காக காங்கிரஸ் கட்சி அமெரிக்காவை எதிர்த்தும் போர் தொடுக்க தயங்காதுன்னு பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்துட்டு, IPKF மாதிரி India Minority peace keeping forceன்னு ஒரு படையை இலங்கைக்கு அனுப்பி தனி ஈழத்தை சாரி அல் தமிழ் ஜிகாத்தை வாங்கி கொடுத்திடுவார்கள்.

இந்த ஐடியாவிற்கு copyright உரிமை என்கிட்ட மட்டும் இருக்கு, இதை யாராவது தேர்தல் பிரச்சாரத்திலோ அல்லது பாராளுமன்றத்திலேயோ தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமானால் என்னிடம் உரிய அனுமதி வாங்கி விட்டு பயன் படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நல்லதந்தி says:

வாங்க சுரேஷ் குமார்!. இணைந்ததற்கு நன்றி!.

வாங்க அனானி! நன்றி!

வாங்க ப்ளீச்சிங்!. தலை! வழக்கம் போல சவுக்கால விளாசிட்டீங்க!. இதை அப்படியே ஒரு பதிவாய் போடலாமில்லை!. நீங்களும் எழுதி எம்மா நாளாச்சி!.

காங்கிரஸ் பத்தியும், கலைஞர் பத்தியும் இதை விட நல்லா யாருக்கும் புரிஞ்சிருக்காது!. :))
இது பிரபாகரன் கண்ணுல பட்டுடப் போவுது. ஓஹோ இப்பிடி ஒண்ணு இருக்கோன்னு முயற்சி செஞ்சாலும் செஞ்சிடுவார். நீங்க சொன்ன மாதிரி பண்ணிட்டா காங்கிரஸ் அரசும் பிரபாகரனை ராஜீவைக் கொன்ன கொலைக்குற்றவாளியா நினைக்காது. அப்சல்,அஜ்மல் கசாப் ரேஞ்சுக்கு குல தெய்வமாவே கொண்டாடு வாங்க!. :))

கிரி says:

//அப்சல்,அஜ்மல் கசாப் ரேஞ்சுக்கு குல தெய்வமாவே கொண்டாடு வாங்க!. :))//

:-)))))

Ram Ravishankar says:

I havent read such a hilarious (yet practical tips) in the recent past.. such an outstanding thinking. You should really attempt to write comedy track to our floundering comedians!!

great stuff.

..ram

நல்லதந்தி says:

வாங்க கிரி நன்றி! :)

வாங்க இராம்ரவிசங்கர் போர்டில கடை பேரு எழுதறவரும் ஆர்டிஸ்ட் தான் நல்ல ஓவியம் வரையரவரும் ஆர்டிஸ்ட் தான்!. நான் எல்லாம் போர்டில எழுதறவன், (அதில கூட சுமாரா எழுதறவன்) அவ்வளவுதான். என்னையல்லாம் இவ்வளவு தூக்கக் கூடாது. எனக்கே சிரிப்பு வருது. உங்க நல்ல மனதுக்கு நன்றி!.

இது நம்ம ஆளு says:

அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.

விஜயராஜா says:

வந்துட்டாருய்யா விளக்க டிக்ஷ்னரி. அந்த முட்டாக் கோமளவள்ளி போட்டாளே ஒரு உண்ணாவிரத ட்ராமா. அது அய்யாக் கண்ணுக்கு தெரியலையோ....

நேத்துவரைக்கும் ஈழ்ம், ஈழம் மக்கள்ன்னா கிலோ எவ்வள்வுன்னு கேட்டாளா இல்லையா? மறந்தா ஞாபகப்படுத்துறோம்.

எல்லாத்தயும் கவனிக்கனும் ராசா.

தமிழ்நெஞ்சம் says:


தன் மகனை நனைய விடாமல் தடுத்து தான் நனையும் தாய் - அன்னையர் தின வாழ்த்துகள் - 2009

மங்களூர் சிவா says:

:))))))))))

Anonymous says:

தமிழகத்தில் ஸ்டார் நியூஸ் சேனல் நடத்திய 'எக்ஸிட் போல்' கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணிக்கு 25 இடங்கள் கிடைக்கும் என்றும், அதிமுக கூட்டணிக்கு 14 இடங்களே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்:

திமுகவும் காங்கிரசும் இணைந்து தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 25 இடங்களைக் கைப்பற்றுவார்கள்.

அதிமுகவுக்கு 9 இடங்களே கிடைக்கும். பாமக-மதிமுக இரண்டுக்கும் சேர்த்தே 3 இடங்களே கிடைக்கும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-இந்திய கம்யூனிஸ்ட் இரண்டுக்கும் சேர்த்து 2 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் பாமக, மதிமுக, இடதுசாரிகளுக்கு தமிழகத்தில் பெரும் சரிவு ஏற்படும் என்றும், கடந்த முறை ஒரு இடத்தில் கூட வெல்லாத அதிமுகவுக்கு மட்டுமே 9 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்றும் அந்த எக்ஸிட் போல் கூறுகிறது.

ரெட்டை எலைக்கு கோயிந்தா கோயிந்தா

பார்சா குமார‌ன் says:

super