சீமான்,அமீர் கைது! சிலிர்த்தெழுந்த சத்தியராஜ்! ஒரு நேரடி ரிப்போர்ட்!

Posted on Saturday, October 25, 2008 by நல்லதந்தி

சத்தியராஜ் கலந்து கொண்ட மனிதச் சங்கிலி விழாவில் (நிகழ்ச்சி?, கலைஞர் கலந்து கொண்டாலே விழாவாத்தான் நினைக்கத் தொன்றுகிறது அவர்தான் இது விழும் அரசல்ல விழா அரசு! என்று சிலேடையாக ஜெயலலிதாவிற்க்குப் பதில அளித்து இன்று வரை விழாவை விடாமலேயே இருக்கிறார்!) அவரைப்பற்றி எந்தப் பத்திரிக்கைகளும் சரியான படி எந்தத் தகவலும் கொடுக்கவில்லை.மைக் இல்லாததால் வாய்க்கு வந்தபடி பேசி தற்காலிகப் புகழ் பெற முடியாத ஆதங்கம் சத்தியராஜிற்கு இருப்பதால் அவருக்கு ஆறுதல் தரும் வகையில் நேரடி ரிப்போர்ட்த் தர நமது விஷேச நிருபரை அனுப்பியிருந்தோம்.

நமது நிருபரின் நேரடி ரிப்போர்ட்!

ஈழத்தமிழர்களுக்காக மனிதச் சங்கிலியில் கலந்து கொண்டு நின்றிருந்த சத்தியராஜ் கருப்புக் கலர் சட்டை போட்டுக் கொண்டு இருந்ததால் அவர் சோகமாக இருப்பதாக நமது நிருபர் நினைத்துக் கொண்டார்.நீங்களும் நினைத்துக் கொள்ளுங்கள்.

நடுவில் நின்ற நமீதாவின் ஒன்றை சத்தியராஜும் மற்றொன்றை சிபிராஜும் பிடித்துக் கொண்டு இருந்தனர் ---கையை!. வலது கையால் நக்மா வினுடையதைப் பிடித்துக் கொண்டிருந்தார்.அதே போல் சிபிராஜ் தன் இடது கையால் நிலாவினுடையதைப் பிடித்துக் கொண்டு நின்றார்.இருவரும், அந்த வட நாட்டு மங்கைகளிடம் தமிழை வளர்த்துக் கொண்டு இருந்தனர்.வாழ்க தமிழ்!

மழை வேறு வரவே சத்தியராஜ் குளிருக்காக கையை இறுக்கிக் கொண்டார். நமீதா வலிக்கிறது என்று சொன்னது நமது நிருபரின் பாம்புக் காதுக்கு விழுந்தது.

மனித சங்கிலி முடியும் நேரத்தில் அந்த அதிர்ச்சியான தகவல் நிருபருக்கு எட்டியது .அவர் சத்தியராஜிடம் “சீமானையும்,அமீரையும் கைது செஞ்சிட்டாங்க சார்! “என்றவுடன் ஆவேசமடைந்த சத்தியராஜ் ‘அடக் கேனக்கூ.......”என்று தன் வழக்கமான பாணியில் திட்ட எத்தனித்தவுடன்,பக்கத்தில் நின்ற நமது நிருபர் “சார் இந்த அரசு கலைஞர் அரசு “ என்றவுடன் வாயைப் பொத்திக் கொண்டு சின்னதாகக் கேனக்கூ...என்றார் தன் பழக்கதோஷத்தை விட முடியாமல்!.அது பூனை மியாவ் என்று கத்துவதைப் போலிருந்ததால் அருகில் உள்ள போலீசாருக்குக் கேட்கவில்லை.

நிகழ்சி முடித்ததும் கிளம்பிய சத்தியராஜை வழிமறித்த நமது நிருபர் எங்கே சார் சீமானையும்,அமீரையும் காப்பாற்றுவதற்க்கா? என்றார்.அந்தக் கருமத்துக்கெல்லாம் இப்பொ நேரமில்லை,எனக்கு வேற அர்ஜண்ட் வேலை இருக்கிறது என்றார்.நமீதாவைப் பார்த்துக் கொண்டே!

சார் என்னாங்க சார்! அவங்க பின்னாடியே நிப்போமுன்னிங்க இப்போ வீட்டிற்க்கு கிளம்பறிங்களே! என்று நமது நிருபர் கேட்க ,”வீட்டில ஒரு சின்ன வேலை இருக்குங்க” என்றார்.சுற்றி இருந்தவர்கள் சத்தியராஜையே பார்த்துக் கொண்டிருக்கவே வீர இமேஜைக் காப்பாற்ற வேறு வழியின்றி காவல் நிலையம் சென்றார்.

அடுத்து போலீஸ் ஸ்டேசன் சென்ற சத்தியராஜ் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

”யோவ்! தமிழனென்றால் இளிச்சவாயனா?.ஏன் அந்த நடிகனை கைது செய்யவில்லை?” என ஆவேசத்துடன் கேள்வி கேட்க,”சார் நீங்க சொன்னது வாஸ்தவம் தான் ஆனா அவரு இந்த மாதிரி பேசலையே?.வேணும்முன்னா அவரு எதாவது படத்தில இந்த மாதிரி வசனம் பேசியிருந்தா சொல்லுங்க, கலைஞரிடம் ,அந்த நடிகரால தொந்தரவு இருக்கான்னு கேட்டுட்டு அவரோட அறிவுரைப் படி சட்டம் தன் கடமையைச் செய்யுதுன்னு சொல்லிட்டு கைது செஞ்சிடலாம்” என்றார் அந்த உயர் போலீஸ் அதிகாரி.

”யோவ்! தமிழனன்னா இந்த மாதிரி ஆவேசமா பேசத்தான்யா செய்வான்,அதுக்கப்புறம் பொத்திக்கிட்டு சும்மாதானய்யா இருப்பான்!. என்னிக்காவது சொன்னதைச் செஞ்சிருக்கானய்யா! .எங்களைப் பாத்துக் கூட இன்னும் உங்களுக்குத் தெரியலையா?.என்னய்யா போலீஸ் நீங்க தூ...” என்று காரி உழிந்தார்.அந்த காரி உமிழ்தலில் ஸ்டேசன் சுவர்கள் எல்லாம் வார்னீஷ் போட்டது போல பளீச் சென்று ஆனதைப் பார்த்த போலீசார் சத்தியராஜைப் பார்த்து,” சார் கக்கூசையும் கொஞ்சம் சுத்தம் செய்யணும் சார்!” என்றனர்.

பிறகு ஆவேசமான சத்தியராஜ் மைக்கைக் கண்டது போல ஆவேசமாகப் பேசத்தொடங்கினார்.இரண்டு மணிநேரம் ஆனபிறகும் பேச்சை நிறுத்தாததால்,ஒரு போலீஸ்காரர் உயர் அதிகாரியுடம் கேட்டார்”சார்! ”கட்” சொல்லிடலாமா?.வீட்டுக்குப் போகணும் ரொம்பப் பசிக்குது சார்!”

காலில் முள்ளு குத்தியதால் ஈழத்தமிழர்களுக்காக நடந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ள் முடியவில்லை! சத்தியராஜ் அழுகை!

Posted on Friday, October 24, 2008 by நல்லதந்தி


பிரபு சாலமன் டைரக்ட் செய்துள்ள "லாடம்" படத்தின் பாடல்கள்அடங்கிய சி.டி யை நடிகர் சத்தியராஜ் வெளியிட,டைரக்டர் அமீர் பெற்றுக் கொண்டார்.

விழாவில் ,சத்தியராஜ் பேசியதாவது:-
ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக ராமேஸ்வரத்தில் திரையுலகத்தினர் நடத்திய ஊர்வலத்தில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை.என் வீட்டில் முக்கிய நிகழ்ச்சி இருந்ததால்,என்னால் ராமேஸ்வரம் போக இயலவில்லை

வீடு முக்கியமா ஈழத்தமிழர் முக்கியமா என்பதற்க்கு வீடுதான் முக்கியம் என்ற சத்தியராஜின் உண்மையான பதிலுக்கு பாராட்டுக்கள்.ராமேஸ்வரத்திற்கு எதாவது ஆயிடுமோ அப்படிங்கற பயம் போலிருக்கு!.இவரு மட்டும் போயிருந்தாருன்னா,விதை ரெண்டும் வாய்க்கு வர்ற மாதிரி இவரு போடற சத்தத்துக்கு,ஒரு வேளை சிங்களக்காரன் பயந்து சிலோனை விட்டே ஓடிப் போயிருப்பான்.ஒரு நல்ல விஷயம் நடக்காம போயிருச்சே!.வீட்டில உள்ளவங்க எல்லாம் நல்லாயிருக்காங்களா சார்?.எப்பவுமே நாம செஃப்டியா இருக்கணும் சார்!

இலங்கை தமிழர்களுக்காக,சென்னையில் நாளை மனித சங்கிலி நடைபெற இருக்கிறது.அதில் கலந்துகொள்ளாதவர்கள் குறித்து முதல் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சொல்லப் பட்ட கருத்தை நான் வரவேற்கிறேன்.

அவர் சொன்னது போல்,இந்த போராட்டத்தில் பங்கேற்க்காதவர்கள் தமிழ்
நாட்ட்டில் இருக்கத் தகுதி இல்லாதவர்கள்.இதைகட்சிசார்பாகவோ, யாருக்கோ ஜால்ரா அடிக்கவோ நான் பேசவில்லை.தமிழன் என்ற உணர்வோடு பேசுகிறேன்.

இவரு வீட்டுப் பிரச்சனைக்காக இந்த தடவையும்" எஸ்கேப்"ஆகி விடாமல் இருக்க வேண்டும்.இல்லையன்னா இவருக்கும் தமிழ் நாட்டில் இருக்கிற தகுதி போய்விடும்.இது சென்னையில் தானே நடக்குது அதனால் காலையில சாப்பிட்டு விட்டு தெம்பா போய்டுங்க சார்!

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து கட்சி-மொழி-இன பாகுபாடின்றி
அனைவரும் ஒட்டு மொத்த குரல் கொடுக்க வேண்டும்.

குரல் மட்டும் தானே கொடுக்கச் சொல்றாரு. குரல் தானே கொடுத்திடுவோம் காசாப் பணமா?. வழக்கமா சத்தியராஜ் கொடுக்கிறதுதானே!. காசு கேட்டாத்தானே அவரு காணாமப் போவாரு!

டைரக்டர்கள் சீமான் - அமீர் ஆகிய இருவரையும் அரசியல் கட்சிகள் ஓரம் கட்டுகின்றன.அவர்கள் பேசியது சரியா,தவறா? என்று நான் கூற வில்லை. இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் சீமான் அமீர் பின்னால் நின்று அவர்களுக்கு ஆதரவாய் குரல் கொடுக்க வேண்டும்.


சீமான்,அமீர் மீது உங்களுக்கு என்ன சார் கோபம்! உங்கப் பையனை வெச்சிப் படம் எடுக்கலைன்னா?.நீங்க குரல் கொடுத்துக் கிட்டே பின்னாடி போயிருவீங்க,அவங்க ரெண்டு பேரும் உள்ள போய் களி திங்கணும் அதானே உங்க ஆசை?

எனக்குத் தனிப்பட்ட முறையில் இது போன்ற பிரச்சனை ஏற்பட்ட போது,
திரையுலகம் என் பின்னால் நிற்கவில்லை.திராவிடர் கழகமும்,விடுதலைச்
சிறுத்தைகளும் தான் உதவி செய்தார்கள்.

அண்ணா, தனிப்பட்ட முறையில் என்னத் தியாகம் செஞ்சி உங்களுக்குப் பிரச்சனை வந்துச்சிங்க,உங்கத் தியாகத்தால மக்களுக்கு எதாவது நன்மை கிடைச்சுதாங்க,விபரம் புரியாமல்தான் கேக்குறேன்.ஒரு வேளை தனிப்பட்ட பிரச்சனையன்னா உங்க குடும்பப் பிரச்சனை எதுனாச்சுங்களா?.

ஈழத் தமிழர்கள் நலனுக்காகத்தான் சீமானும்,அமீரும் அப்படி பேசியிருக் கிறார்கள்.எனவே அவர்களுக்கு பின்னால் அனைவரும் நிற்கவேண்டும்.

ரொம்ப உஷாராத்தான் இருக்குறீங்க போலிருக்கு!.ரொம்ப பின்னாடியே போய் கடலிலே விழுந்துடாதீங்க!

இவ்வாறு சத்தியராஜ் பேசினார்.

மயக்கமா?கலக்கமா?,மனதிலே குழப்பமா? ஸ்ரீதரின் நினைவுகள்!

Posted on Thursday, October 23, 2008 by நல்லதந்தி


ஸ்ரீதர் தமிழர்களின் வாழ்க்கையில்மறக்கமுடியாத ஒரு பெயர்!.இந்த கவர்ச்சிகரமான பெயர் அந்தக் கால எத்தனை இளைஞர்களுக்கும், இளைஞிகளுக்கும் வெறித்தனமான வேகத்தைத் தந்தது!.சொல்லப் போனால் மிகுந்த மோகத்தையும் தந்தது!.
1933-ல் பிறந்த இவர் 1954 முதல் 1991 வரை உள்ள 35 ஆண்டுக் காலம் திரையுலகில் இருந்தார்.இவர் கோலச்சிய காலம் சுமார் 35 ஆண்டுகள்.இப்படி 35 ஆண்டு காலம் கோலோச்சிய இயக்குனர்கள் தமிழ் திரையுலகில் வெகு குறைவு. தன் திரையுல வாழ்க்கையில் எத்தனையோ ஏற்றத் தாழ்வுகளைக் கண்டாலும்,தமிழ்த் திரையுலகை பல பரிமாணங்களுக்கு இட்டுச் சென்றவர்!.
திரு.இளங்கோவன் என்றால் யாருக்கும் தெரியாது,இரத்தக் கண்ணீர் வசனகர்த்தா என்றால் எல்லாருக்கும் பளீச் சென்று தெரியும்.ஸ்ரீதருடைய சொந்த ஊரைச் சேர்ந்தவர்.இவருடைய தாக்கத்தாலேயே ஸ்ரீதர் திரையுலகில் நுழைந்தார். ஆனால் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால்,இளங்கோவனுடைய வசனங்கள் தீவிர தமிழ் வீச்சு உடையவை,அது போன்ற வசனங்களை ஸ்ரீதர் என்றுமே தன் பாணியாகக் கொண்டதில்லை.

இளங்ககோவனின் வசனங்களின் பாணியைப் பின் பற்றி அண்ணாவும், அவரது சீடரான கருணாநிதியும் பெரு வளர்ச்சி கண்டிருந்த நேரத்தில், அதற்க்கு நேர் மாறாக இயல்பான வசனங்களை எழுதி அதனால் தன்னை தமிழகமே திரும்பிப் பார்க்கும் படி செய்தவர் ஸ்ரீதர்!.

இரத்தபாசம் என்ற திரைப் படத்தின் மூலமாக 1954-ல் ஸ்ரீதர் தமிழ்த் திரையுலகில் நுழைந்த போது அவருக்கு வயது வெறும் இருபத்தி ஒன்றுதான்!.அந்த நேரத்தில் எம்ஜிஆரின் ம்லைக்கள்ளனும்,சிவாஜியின் மனோகராவும் வெளி வந்தன.இந்த இரண்டு படங்களுக்கு இடையேயும் T.K.சண்முகம் நடித்த இரத்த பாசம் பெரு வெற்றி பெற்றது.பிறகு அடுத்து வந்த வருடங்களில் எதிர் பாராதது,அமரதீபம் ,மகேஸ்வரி,எங்க வீட்டு மகாலட்சுமி,மஞ்சள் மகிமை,உத்தமபுத்திரன் போன்ற படங்களுக்கு வசனம் எழுதினார்.

இதில் எல்லாப் படங்கள் பெரு வெற்றி பெற்றன.ஸ்ரீதர் புகழ் பெற்ற வசனகர்த்தாக் களின் வரிசைப் பட்டியலில் இடம் பிடித்தார்.இதற்க்கடுத்து கல்யாணப் பரிசு படத்தை இயக்கியதும்,அதை இயக்கும் போது முதலில் ஏற்ப்பட்ட பிரச்சனை களும் அனைவரும் அறிந்ததே,அதனால் அதைப் பற்றி விஸ்தாரமாகப் பேச ஓன்றும் இல்லை!.

ஸ்ரீதருடை சினிமா கிராஃப் பல முறை மேலேறி கீழறங்கும் வித்தை கொண்டது. இவர் கல்யாணப் பரிசு போன்ற படங்களை கொடுத்த காலத்தில் சிவாஜி சொந்தப் படமான விடிவெள்ளி ஊற்றிக் கொண்டது,தேன்நிலவு போன்ற படங்கள் அப்போது தேல்வியைத் தழுவினாலும் இன்றும் பார்க்கும் போது ஆர்ச்சரியப் படவைக்கும் தன்மை கொண்டது.

அடுத்து சிலிர்த்தெழுந்த ஸ்ரீதர் சுமைதாங்கி போன்ற படங்களில் எழுந்தார்.பிறகு கொடிமலர் போன்ற படங்கள் அவரது சுமையை ஏற்றின.ஆனால் நெஞ்சில் ஓர் ஆலயம் போன்ற படங்கள் ,அவரது திறமைக்குச் சான்றாக அமைந்தன. வெற்றியும் கண்டன.நெஞ்சம் மறப்பதில்லை ஒரு சராசரிப்படமாக இருந்தாலும் இன்றும் மக்களின் மனதில் நின்றபடம்!.

அடுத்த ஆட்டத்தை கலரில் ஆரம்பித்தார் காதலிக்க நேரமில்லை!.இதுவரைத் தமிழ்த் திரையுலகம் கண்டிராத காண்முடியாத அரும் பெரும் நகைச்சுவைப் படத்தை மக்களுக்கு அளித்தார்.அதுவரையில் பம்பாய் சென்றே கலர்ப் படங்களை பிரதியெடுத்தார்கள்.ஜெமினி நிறுவனம் தன்னுடைய கலர் லேப்பை ஆரம்பித்தவுடன் அதில் பிரதி எடுக்கப் பட்ட முதல் படம் இதுதான்!.

பிறகு ஊட்டிவரை உறவு,போன்ற படங்களையும் அவர் தந்தார்.வெண்ணிற ஆடையில் அவருக்கு அடி விழுந்தாலும் அதில் நடித்த கலைஞர்கள் மிகவும் புகழ் பெற்றனர்.

அடுத்த கட்டமும் அவருக்கு மிகவும் சோர்வைத் தந்தது , நெஞ்சிருக்கும் வரை,போன்ற படங்கள் வரிசையாக அடி வாங்கின!.அவளுக்கென்று ஒரு மனம்,சிவந்த மண் போன்ற படங்கள் வண்ணத்தில் எடுக்கப் பட்டாலும் பெரு வெற்றியைப் பெற்றுத் தரவில்லை.இன்னமும் அவளுக்கென்று ஒரு மனம் படப் பாடல்கள் அழியாப் புகழ் பெற்றவையாகவே இருக்கின்றன.

70 களில் சிவாஜியை வைத்து வைரநெஞ்சம் என்றப் படத்தை உருவாக்கினார்.இது இவரது வாழ்க்கையிலேயே சிரமான கட்டம்தான் என்று சொல்ல வேண்டும்.இந்தப் படம் மகாத் தோல்வியைத் தழுவியது.மிகவும் சிரமத்திற்குள்ளான ஸ்ரீதர் அன்றைய சூப்ப்ர்ஸ்டார் திரு.எம்.ஜிஆரிடம் உதவியை நாடினார்.இவர் படம் எடுக்க ஆரம்பித்த காலத்தில் இருந்து ஒருமுறை கூட எம்ஜிஆரை வைத்து எடுத்ததில்லை.(ஒரு முறை அன்று சிந்திய ரத்தம் என்றப் படத்தை எம்ஜிஆரை வைத்து எடுக்க முயற்ச்சி செய்தார்..கைகூடி வரவில்லை) அதற்க்குக் காரணம் பல இருந்தன.ஸ்ரீதரைப் பொறுத்தவரை குறைந்த சம்பளம் உள்ள நடிகர்கள்,நல்ல தொழில் நுட்பக் கலைஞர்கள் ,நல்ல படம் ,நல்ல லாபம் என்ற அடிப்படைக் கொள்கையிலேயே இயங்கி வந்தார்.

இதனால் இவரது படங்கள் இயக்குனர் படம் என்றும் புகழ் பெற்றன.தம் தகுதியை அவர் அப்போது விட்டுக் கொடுக்காமலேயே இயங்கினார்.சிவாஜியை வைத்து இயக்கினாலும் அவர் இயக்குனர்களின் நடிகர் என்பதை மறக்கக் கூடாது.

தம்முடைய தொடர் தோல்வியினால் மனம் நொந்த நிலையில் எம்ஜிஆரை அணுகியதும் எம்ஜிஆர் தன்னுடைய பெருந்தன்மையை நிரூபித்தார்.அடுத்தது ஆரம்பமானது ஸ்ரீதருடைய அடுத்த பரிமாணம் .உரிமைக்குரல் முழுக்க முழுக்க எம்ஜிஆர் படமாக வெளிவந்தாலும் “விழியே கதையெழுது” என்ற பாடல் ஸ்ரீதருடைய “டச்”சிலேயே இருந்தது என்பது ஸ்ரீதர் ஆளுமைக்கு காரணமா?எம்ஜிஆருடைய பெருந்தன்மையா?.அல்லது வியாபார நோக்கில் இருவருடைய “காம்ரமைஸா” என்பது கடவுளுக்குத் தான் வெளிச்சம்.

படம் சூப்பர் டூப்ப்ர் வெற்றி!.தமிழகத்தில் அன்றுள்ள திரையுலக மந்தமான சூழ்நிலையில் பல விநியோகஸ்தர்களும்,திரைஅரங்கு உரிமையாளகளும் பிழைத்தனர்(அந்த சூழ்நிலைக்குக் காரணம் அரசியல் காரணமாக எம்ஜிஆரின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட கலைஞர்தான் என்பது வேறு விஷயம்....இதைப் பற்றிப் பேசப் போய் கட்டுரை வேறு பக்கம் போய் விடப் போகிறது..எனவே இதை இத்தோடு ஏறக்கட்டிவிடலாம்!)

பிறகு, எம்ஜிஆரை முதலமைச்சராக்க வந்தது மீனவ நண்பன்.இதுவும் சூப்ப்ர் டூப்பர் ஹிட்!.இந்த கால கட்டத்திலேயே ஸ்ரீதர் இயக்கத்தில் பூஜை போட்டு சில காட்சிகளும்,பாடல்களும் “அண்ணா நீ என் தெய்வம்” என்ற படம் எடுக்கப் பட்டது .எம்ஜிஆர் முதல்வர் ஆனதால் அது கைவிடப் பட்டது.இந்தப் படத்திலும் சில காட்சிகளை நாம் கண்டிருப்போம். எனென்றால் இது தான் பிற்பாடு பாக்கியராஜ் இயக்கத்தில் வெளி வ்ந்த “அவரச போலீஸ்”என்ற படத்தில் எம்ஜிஆர் வரும் காட்சிகளுக்காக உபயோகப்ப்டுத்தப் பட்டது !.


இந்தக் காலக்கட்டத்தில் ஸ்ரீதரின் அலைகள்,ஓ..மஞ்சு போன்ற படங்கள் வெளிவந்து தோல்வியைத் தழுவின.


அடுத்து எம்ஜிஆர் அரசியலுக்குச் சென்ற பிறகு தனது அடுத்த பரிமாணத்திற்கு செல்ல அன்றைய இளம் நடிகர்களான ரஜினியையும் கமலையும் வைத்து இளமை ஊஞ்சலாடுகிறது என்ற படத்தைக் கொடுத்தார்.அவரது வழக்கமான முக்கோணக் காதல் கதைதான் என்றாலும் தன் பழைய பாணியில் இருந்து மாறி 78 வருடத்திற்க்கேற்ப இளமையாகத் தந்தார்.படம் மெகா ஹிட் ஆனது.அடுத்து மீண்டும் விஜயகுமார்,ஜெய்கணேஷ் போன்றவர்களை வைத்து மீண்டும் ஒரு வித்தியாசமான காதல் கதையாக அழகே உன்னை ஆராதிக்கிறேன் வெளி வந்தது.இதுவும் மெகா ஹிட் ஆனது.இரண்டு படங்களிலும் இளையராஜா ஒரு ராக ரகளையே செய்து அசத்தியிருந்தார்.


மீண்டும் ஸ்ரீதருக்கு இறங்கு முகம்.இந்தக் காலக் கட்டத்தில் ஒரு ஓடை நதியாகிறது போன்ற படங்கள் வெளிவந்தன.ஆனால் எந்த படங்களும் வெற்றியைத் தொடவில்லை.


1985 வாக்கில் மைக் மோகனை வைத்து தென்றலே என்னைத் தொடு என்ற காமெடி கலந்த காதல் கதையை இயக்கினார்.இதில் தேங்காய் சீனிவாசன் தான் ஹீரோவோ என்ற அளவிற்கு கலக்கியிருந்தார்.படம் சூப்பர் ஹிட்!.இதற்கு பிறகு திரைக்கு வந்த ஆலயதீபத்துடன் ஸ்ரீதருடைய திரையுல வெற்றிகள் முடிந்து போயின.


ரஜினியுடம் துடிக்கும் கரங்கள்(இதில்தான் தமிழில் S.P.பாலசுப்ரமணியம் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆனார்).கமலுடன் நானும் ஒரு தொழிலாளி போன்ற படங்கள் ஸ்ரீதருக்கும் ரஜினி,கமலுக்கும் பெருமை சேர்க்கவில்லை.ஆர்ஜூன்,சதனா போன்ற அந்த காலத்தில் கடைநிலை ஹீரோ ஹீரோயின் களோடு இணைந்து ”குளிர் மேகங்கள்” போன்ற யாராலும் அறியப் படாத படங்களையும் எடுத்து தன்னயும்,மற்றவர்களையும் சிரமப்படுத்தினார்.என்னுடய படங்கள் ஏன் தோல்வியைத் தழுவுகின்றன என்றே தெரியவில்லை எனப் பத்திரிக்கைகளில் புலம்பும் அளவிற்க்கு தள்ளப் பட்டார்.திரையுலகை ஸ்டெடி செய்து மீண்டும் வெற்றி பெருவேன் என்றார்.
நீண்ட இடை வேளைக்குப் பின் 91-ல் விக்ரம்,ரோகிணியை வைத்து “தந்து விட்டேன் என்னை”என்ற படத்தைக் கொடுத்தார்.இதில்தான் விக்ரம் அறிமுகமானர்.இந்தப் படமும் பப்படம் ஆகவே, தன் நீண்ட திரையுலக வாழ்க்கையைத் துறந்து ஒரு தோல் பதனிடும் தொழிற்ச்சாலையை வெற்றிகரமாக நடத்தினார்.திரையுலகில் இருந்தவர் அதிலிருந்து வெளிவந்து வெற்றிகரமான தொழில் அதிபர் ஆனதிலும் நம் ஸ்ரீதர் புதுமை படைத்தார்.


பாரதிராஜாவுக்கு முன்பே டைரக்டர்களின் டைரக்டர் என்று பெருமை பெற்றவர் ஸ்ரீதர்.இவரால் பட்டறையில் இருந்து வெளிவந்த பல இயக்குனர்கள் பெரும் புகழ் பெற்றனர்.


P.மாதவன் போன்றோர் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றனர்.பீம்சிங்கிற்குப் பின் சிவாஜியின் ஆஸ்தான டைரக்டர் ஆனார்,P.மாதவன்.


C.V.ராஜேந்திரனும் மிகப் பெரிய வெற்றியடைந்தார்.(இவர் ஸ்ரீதரின் (உறவினர்) தம்பி!)இவரும் சிவாஜியை வைத்து பல படங்கள் இயக்கினார்.ஸ்டாலினை வைத்து குறிஞ்சி மலர் என்ற தொலைக்காட்சித் தொடரை இயக்கினார்,என்பது கழகத் தோழர்களுக்கு ஒரு கூடுதல் தகவல்.


சக்ரவர்த்தி இவரும் பல படங்களை இயக்கினார்.உத்தரவின்றி உள்ளே வா, திக்குத் தெரியாத காட்டில் போன்றவை,குறிப்பிடத்தக்கவை(இவர் செல்வி ஜெயலலிதாவின் உறவினர் என்பது கூடுதல் தகவல்)


தற்காலத்தில் புகழ் பெற்ற டைரக்டர்களாக விளங்கும் P.வாசு,சந்தான பாரதி போன்றவர்களும் ஸ்ரீதரின் தாயாரிப்புகளே.


ஸ்ரீதர் அறிமுகம் செய்த நடிக,நடிகையரில் பட்டியல் மிக நீளமானது.தேன் நிலவில் புது நடிகையை அறிமுகம் செய்தார்.பெயர் தெரியவில்லை. பட்டதாரியான அந்தப் பெண் அதிகப் படங்களில் நடித்ததாகத் தெரியவில்லை. 71-ல் திமுகாவில் இருந்த காமராஜரைத் தோற்கடித்த சீனிவாசனை மணந்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார்.என்று நினைக்கிறேன்.அதன் பின் படத்தயாரிப்பாளராக மாறினார்.


சுமைதாங்கியில் விஜயலட்சுமி,காதலிக்க நேரமில்லை படத்தில் ரவிச்சந்திரன்,காஞ்சனா,ராஜஸ்ரீ.நாகேஷும் இவர் படங்களில் நடித்துத்தான் ஆரம்பகாலத்தில் புகழ் பெற்றார்.வெண்ணிற ஆடையில்,ஸ்ரீகாந்த்,ஜெயலலிதா, வெண்ணிற ஆடை மூர்த்தி,வெண்ணிற ஆடை நிர்மலா,ஆஷா(பிற்பாடு சைலஸ்ரீ என்று பெயர் மாற்றிக் கொண்டார்).நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் மாலி,அலைகள் படத்தின் மூலமாக தமிழுக்கு இன்று கன்னடத்தில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் விஷ்ணுவர்தன், ஓ...மஞ்சு படத்தில் கவிதா...இன்னும் எத்தனையோ பெயர்கள் விடுபட்டுப் போயிருக்கலாம்.


வசனத்தில் மாற்றம் கொண்டு வந்தது(அடேய் பழி! போன்ற அந்தக் கால கல்லூரி மாணவர்களின் சொல்லாடலைப் பயன் படுத்தினார்,இந்த வார்த்தை சக மாணவனை மச்சி,மாம்ஸ் என்று அழைப்பது போன்றது),தமிழ் சினிமாவை ஸ்டூடியோவில் இருந்து வெளி உலகத்திற்க்கு கொண்டு வந்தது.வசன சினிமாவை காட்சி சினிமாவாக மாற்றியது,அழகிய வண்ணப் படங்களுக்கு தமிழ் சினிமா மாறக் காரணமாக இருந்தது,தமிழ் தொழில் நுட்பக் கலைஞர்களை வட நாட்டு சினிமா உலகம் ஆச்சரியமாகப் பார்க்கும் படி செய்தது, இன்னும் இது போன்ற எத்தனையோ சாதனைகளைச் செய்தவர் ஸ்ரீதர். வாழ்க வளர்க ஸ்ரீதரின் புகழ்!


வால் பையன் சினிமா தொடர்பான தொடருக்கு என்னை அழைத்திருந்தார்.இந்த மாதிரி செயின் விளையாட்டெல்லாம் பிரபல பதிவர்கள் செய்வது என்று ப்ளீச்சிங் பௌடர் எழுதியிந்ததாலும்,நான் பிரபல பதிவர் இல்லை என்பதாலும்,அதை விட முக்கியமான விஷயம் அடுத்தது நான் யாரை அழைப்பது என்பது எனக்குத் தெரியாததாலும்,இணையத்தில் எனக்குத் தெரிந்த ப்ளீச்சிங் பௌடரை கூப்பிட முடியாததாலும் (அவர்தானே இந்த செயின் விளையாட்டை கிண்டல் செய்த்து) இன்ன பிற காரணங் களாலும், வால் பையன் அழைத்த செயின் விளையாட்டு விளையாட முடியவில்லை.
எனவே வால்பையன் கூப்பிட்ட மரியாதைக்காக இந்தக் கட்டுரை.
நன்றாக இருந்தால் வால் பையனைப் பாராட்டவும்,நன்றாக இல்லையென்றால் அவரையே திட்டவும்!. :))




















ஈழத்தமிழர்களுக்காக மனிதச்சங்கிலியும்! பந்த்களும்!

Posted on Tuesday, October 21, 2008 by நல்லதந்தி

ஈழத்தமிழர்களுக்காக மீண்டும் ஒரு அரசியல் விளையாட்டு நடக்கப் போகிறது.இன்று நடப்பதாக இருந்த மனிதச் சங்கிலி வருகிற 24-ம் தேதி தள்ளி வைக்கப் பட்டு இருக்கிறது.நான் இதில் எதுவும் எழுத விரும்பவில்லை.எப்படியோ நம் இனத்தவரின் துயர் தீர்க்கப்பட்டால் சரி!.

பதினோரு ஆண்டுகளுக்கு முன் இதே போன்று ஒரு சடங்கு நடந்த போது ஆனந்த விகடன் எழுதிய தலையங்கத்தை கீழே படியுங்கள்.அது நடந்து இத்தனை ஆண்டுகள் கழித்தும் எந்த வித மாற்றமும் இல்லாத ஈழத்தமிழர்களின் வாழ்க்கையை நினைத்துப் பாருங்கள்.இதிலிருந்து இம்மாதிரியான பந்த்,மனித சங்கிலி போன்றவைகள் தமிழ்நாட்டு அரசியல் வாதிகளால் நடத்தப் படும் சம்பிரதாயமான சடங்குகள் என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது.


இனி தலையங்கம்- 08-06-1997 இதழில் வெளிவந்தது!.

பந்த் என்கிற சடங்கு!


பதினைந்து ஆண்டுகளாக ஈழத்தமிழர் பிரச்சனை தொடர்பாகத் தமிழ்நாட்டில் இது வரை நடந்த ‘பந்த்’ எத்தனை என்பது கணக்கிடுவது கஷ்டம்!.அதனால் என்ன பலன் ஏற்பட்டது என்று கணிப்பதும் கஷ்டம்!. இப்போது மீண்டும் ஜூன் 6-ம் தேதி ஈழத்தமிழர்களுக்காக ‘பந்த்’ நடத்த திராவிடர் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

ஈழத்தமிழர் பிரச்சனையில் சிங்கள அரசியல்வாதிகள் ஒரு தலைப்பட்சமாக நடக்கும் அநீதி ஒரு புறம்.அதே நேரத்தில் ஈழத் தமிழர்களுக்காகப் போராடும் ஓரே இயக்கமாகக் காட்சிதரும் விடுதலைப் புலிகள் அமைப்பும்,’விரோதிகள் யார்...சகோதரர்கள் யார்....நண்பர்கள் யார்’ என்று புரியாமல் வெறித்தனமாகச் செயல் படும் இயக்கமாக மாறிவிட்டது.
ஈழத்தமிழர் வேதனை பின்னுக்குத் தள்ளப் பட்டு விட்டது.அதோடு,ஈழத் தமிழர் பிரச்சனையில் தமிழ்நாட்டின் ஆதரவும்,இந்தியாவின் ஆதரவும் தேவையில்லாதது போல விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் அமைந்து விட்டது!.

தமிழ்நாட்டின் குரலை சிங்கள அரசும் லட்சியம் செய்யாது.விடுதலைப் புலிகளும் காதில் போட்டுக்கொள்ளப் போவதில்லை.

இந்நிலையில்’பந்த்’ நம் கையாலாகாத நிலையை உணர்த்தும்! வெறும் சடங்காக நடந்து முடியும்!

ஹோய்! ஹோய்! ஹோய்! சும்மா ஒரு தமாஷூக்கு!

Posted on Monday, October 20, 2008 by நல்லதந்தி




பல நாட்களாக பதிவெழுத முடியவில்லை என்றில்லை, பதிவெழுத பிடிக்கவில்லை!.இது நிஜம் தான் என்று நான் இத்தனை நாள் பதிவு எழுதாத போதே உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

ஆனால் இப்போ ஏண்டா எல்லாரையும் இம்சை பண்றாய் என்று கேட்டால்,அதற்க்கு காரணம் உலகப்புகழ் பெற்ற பதிவர்தான்.

அவரு பல வருடங்கள் கழித்து இப்போ திரும்ப பதிவு எழுதியிருக்காராம்.என்னக் கொடுமை வடிவேலா!.சிரங்கு புடிச்ச கை சொறியாம இருக்குமா!.நாலுநாள் பினாத்தெலயாம் .நாலாவது நாள் எல்லோருக்கும் எழுத்துக் கொடுமை பண்ணும் போது இந்த டயலாக்!.

அவரு பதிவு எழுதினாரா போனாரா அப்படின்னு இல்லாம எங்களை நோண்டியதால இந்த பதிவு.இல்லேன்னா இந்தக் கொடுமையை எவன் எழுதுவான்!.

நான் எங்கேயோ படிச்சது!

”இந்த ஒருவாரமாக தொடர்ச்சியாக பதிவெழுதாததால் என்னென்ன மாற்றங்கள் விளைந்திருக்கிறது என்று பார்த்தோமானால்...
 - உலகம் வழக்கம் போலவே சூரியனை சுற்றி வருகிறது. ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
 
- ரேஷன் கடையில் அரிசி ஒரு ரூபாய்க்கு தான் இன்னமும் கிடைக்கிறது.
 
- பங்குச்சந்தை தொடர்ந்து வீழ்ந்து வருகிறது.
 
- ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருக்கும் கடிகாரம் சரியான நேரத்தையே காட்டுகிறது.
 
- ராஜபக்‌ஷே திருந்திவிடவில்லை.
 
- அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது.
 
- பருவமழை தீவிரமடைந்திருக்கிறது.
 
- தமிழ்மணத்தில் 'பெருசு' பதிவரால் வழக்கம்போல உயர்சாதியுணர்வு ஊட்டி வளர்க்கப்படுகிறது.
 
- நந்தனம் சிக்னலில் டிராபிக் ஜாம் குறைந்தபாடில்லை.
 
- ரங்கநாதன் தெருவில் வழக்கத்தை விட அதிகமாக தீபாவளிக்கூட்டம்.
 
எல்லாமே வழக்கப்படிதான் நடந்து வருகிறது. 'நான் அசைந்தால் அசையும் உலகமெல்லாம்' ரேஞ்சுக்கு எதுவும் நடந்துவிடவில்லை என்பதால் நான் எழுதாவிட்டால் யாருக்கும் நஷ்டமுமில்லை, லாபமுமில்லை. ”

ஒரு புண்ணாக்கும் உங்களாலேயும் சரி எங்களாலையும் சரி எதுவும் நடக்கப் போறதில்லைன்னுதான் எல்லாருக்கும் தெரியுமே! .அப்புறம் எதுக்கு இந்த ஈர வெங்காயம்!. 

”முன்பு என்னை நண்பர் என்று சொல்லிக்கொண்ட வால்பையன் என்பவரும், அவரது உருப்படாத 'மூல' வியாதி நண்பர்கள் சிலரும் சேர்ந்து எனக்கு ஒரு போலி ஐடி உருவாக்கி ஏதோ எழுதிவருவதாக சில நண்பர்கள் சுட்டிக் காட்டியிருந்தார்கள்.”

என்னய்யா இது !.உங்களுக்குப் புடிக்கலைனா இது தான் மரியாதையா?.இவரது கக்கூஸில் இவர் இடம் கொடுக்கலையாம்.அதுக்காக எங்களுக்கு மூல வியாதியா?.அதுவும் உருப்படாத ஆளுங்களாம் ! சாமி நாங்க இந்த இணையத்தில எழுதி எந்த கோட்டையையும் கட்டப் போறதில்லை.அத நல்லத் தெரிஞ்சிக்கிட்டதால் தான் இந்த பீலாவை விடாம உருப்பட வழியைப் பாத்துகிட்டு இருக்கோம்!.நீங்க நல்ல எழுதி எதோ நோபல் பரிசு அப்படிம்பாங்களே அதை வாங்குங்க!.கலைஞர் அடிப்பொடியா இருக்கறதாலே கூட்டத்தோட கும்பலா கலைமாமணியாவது வாங்கிக்கிங்க!.நாங்க இதுக்கு ஏன் வருத்தப் படப் போறோம்!.

அடுத்தது போலி ID யாம் !.இந்தக் கொடுமைய என்னான்னு சொல்ல!.
இப்போ ஒரு உண்மையைச் சொல்றேன்!.நீங்க நினைக்கிற மாதிரி வால்பையன்,நல்லதந்தி,ப்ளீச்சிங் பௌடர், எல்லாமே தனித்தனி பதிவர்கள்தான்.எல்லாம் ஒரே ஆள் அல்ல!.வால்பையனுக்கும் எனக்கும் பழக்கம் உண்டு.ஆனால் நண்பர் ப்ளீச்சிங் பௌடர் இணையதின் மூலம் மட்டுமே பழக்கம்!.அதே போலத்தான் நண்பர் பக்கிலுக்கும்!

நாங்கள் இந்த ஆட்டத்தை ஆரம்பிக்கவில்லை!.
முதலில் வால்பையனை , அவர்தான்,ப்ளீச்சிங் பௌடர் என்று ஆரம்பித்து புரளியைக் கிளப்பியது உங்கள் கும்பல்தான் அன்றி நாங்களல்ல!.எவ்வளவோ மறுத்துப் பார்த்து சரி விட்டுத்தொலைப்போம் அப்படின்னு விட்டுடோம்.பிறகு உங்களைப் போன்றவர்களை வெறுப்பேத்தத்தான் இந்த விளையாட்டைத் தொடர்ந்தோம்.மற்றபடி வேறு ID யில் எழுதுவதோ, அனானியில வந்து திட்டுவதோ ஒரு பிரபல பழைய பிராமணப் பதிவரை வேறுப்பேற்றவும் ,திட்டவும் நீங்கள் உபயோகித்த வழிகளை நாங்கள் சத்தியமாக உபயோகிக்க வில்லை. உபயோகிக்கவும் மாட்டோம்.

//கொஞ்ச நாட்களாக வலையில் மேய ஆர்வம் இல்லாமல் இருப்பதால் எனக்கு ஒரு இழவும் புரியவில்லை.
 
அந்த எதிர்ப்பதிவுகள் சிலவற்றை பார்த்தேன்//

அடடா என்னவொரு அடக்கமான பொய்!.
மந்திரி மாசம் மும்மாரி பெய்கிறதா?....இணையத்தைப் பற்றி அலட்டிக்காத நாங்களே நாங்க போட்ட பின்னூட்டம் வந்து இருக்கான்னு எட்டிப் பாப்போம்.இணையத்தில வெறிபிடிச்சி அலையிர ஒரு ஆளு,எப்பவோ சலிப்பா வந்து பாப்பாராம்.அப்புறம் எதுக்கு சாமி உக்காந்தா ஒரு பதிவு, நின்னா ஒரு பதிவு அப்படின்னு போடணும்!.

//அந்த எதிர்ப்பதிவுகள் சிலவற்றை பார்த்தேன். நகைச்சுவையாக எழுதுவதாக சொல்லி ஆக்‌ஷா ப்ளேடு போட்டு படிப்பவனின் கழுத்தை சுப்பிரமணியபுரம் பாணியில் கதற கதற அறுத்திருக்கிறார்கள். எப்போது ஒருவன் தான் நகைச்சுவையாக எழுதப்போகிறேன் என்ற முன்முடிவுடன் எழுத உட்காருகிறானோ அப்போதே அவனும் (ஆசிரியனும்) செத்து, அவன் எழுதப்போகும் பிரதியும் மரணக்குழிக்குள் மண்போட்டு மூடப்படுகிறது என்று மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த பின்நவீனத்துவ சிந்தனையாளர் வெறித்தா போய்க்கோ சொல்லியிருக்கிறார். *****கை நக்கலடித்து அசத்தலாக எழுத *****காலேயே கூட முடியும். என்னிடம் கேட்டிருந்தால் நானே சில பதிவுகளை எழுதி மின்னஞ்சலில் அனுப்பியிருப்பேன்.//

ஐய்யா!,நாங்க எழுதியது நகைச்சுவை அப்படின்னு உங்க கிட்ட சொன்னோமா?.
இதைப் படிச்சவுடனே எனக்கு ஒரு சம்பவம் ஞாபகம் வருது.நாங்க பள்ளிக்கூடத்தில படிச்ச காலத்தில,ஒரு தடவை நானும் என் ஃப்ரண்டும் ஸ்கூலுக்குப் போகும் தடத்தில ஒரு கடை இருந்திச்சி!.(நிறைய கடைகள் இருந்திச்சிங்க நாங்க எப்பவுமே மிட்டாய் வாங்கற கடைங்க ஸ்ஸ் அப்பாடா போதுமா! )
ஒரு நாளு நாங்க ரெண்டு பேரும் மிட்டாய் வாங்க அந்த கடை வாசலில நின்னோம்.கடையில யாருமில்ல.கொஞ்ச நேரம் வெயிட் பண்ணிட்டு அதுக்கப்புறமும் யாரும் வரலேன்னுட்டு கடைக்குள்ளார எட்டிப் பாத்தோம்.ஒரு கோணத்தில கடையைத் தாண்டி கடைக்காரரோட வீட்டு ஹால் தெரியும், நாங்க எட்டிப் பாத்த்ப்ப அங்க கடைக்கார சில்மிஷ பாண்டி செவுத்தோரமா ஒரு சிட்டுக்கிளியை உருட்டிக்கிட்டிருந்தாரு!.அது அவரோட பொண்டாட்டியான்னு எங்களுக்குத் தெரியாது.இருந்தாலும் பட்டப் பகலுன்னு சொல்லக் கூடாது,காலங்காத்தாலே ,செவுத்தில முட்டுக்கொடுத்து அவரு ஜக ஜகா பண்ணுனதை நாங்க ரெண்டு பேரும் பாத்துட்டோம்.


இங்க காமெடி எங்க வருதுன்னா?..அதுக்கப்புறம் அந்தக் கடைக்காரரைப் பாக்கும் போதெல்லாம் நாங்க ரெண்டு பேரும் விழுந்து விழுந்து சிரிப்போம்.இது எங்க ரெண்டு பேருக்கும் இடையில் உள்ள சிரிப்பு!.இதில யாராவது மூணாவது ஆள் வந்து அர்த்தம் கண்டுபிடிக்க முடியுமா?.புடிக்கத்தான் முடியுமா?.யாராவது எங்களைப் பார்த்தால் மெண்டல் அப்படின்னுதான் நினைக்கனும்!.ஆனா அந்த கடைக்காரரே வந்து எங்களை லூசுன்னு சொன்னால் சிரிப்பு கூடுமா?.குறையுமா?.அப்படித்தான் இருக்கு உங்க இந்த பத்தி!(*******கை நக்கலடித்து அசத்தலாக எழுத *******க்காலேயே கூட முடியும். என்னிடம் கேட்டிருந்தால் நானே சில பதிவுகளை எழுதி மின்னஞ்சலில் அனுப்பியிருப்பேன்.)

நாங்க எழுதிக்கிட்டது எங்களுக்காக!,இப்ப நீங்க வேற யாரோ எழுத வற்புறுத்தி (ஹி ..ஹி..ஹி..ஹி) அதனாலெ இப்ப எழுதிறீங்களே அப்படி!.எங்க தமாஷை ஏன் நீங்க படிக்கிறீங்க!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
பின் நவீனத்துவத்தைப் பற்றி எழுதனுன்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை!.எழுத்துகளின் கட்டற்ற ஒழுங்கற்ற வரையறையற்ற ஒழுங்கு தான் பின்நவீனத்துவம் என்பது என் எண்ணம்.பிரேசிலின் பிரபல எழுத்தாளர் வென்கோ டிஸௌஸோ சொன்னது போல கட்டிய தளைகள் விடுபடும் போது அதனிடையே உள்ள மெல்லிய மின் முடிச்சுத்தான் பின்நவீனத்த்துவம்.இந்த போஸ்ட் மார்டனிசம் தமிழ் எழுத்தாளர்கள் சில பேரால் மிகத்துல்லியமாக கையாளப் பட்டுள்ளது.ஆதவன்,சுப்பிரமணியராஜூ போன்றவர்களை இதில் கை தேர்ந்தவர்கள் என்று சொல்லலாம்.
1978-ல் ஒரு முறை ஸ்ரீ வேணுகோபலன் என்கின்ற புஷ்பா தங்கதுரை சொன்னது ஞாபகம் வருகிறது. ”பின் வழிப் புணர்தல் மிக வலிய எழுத்தில் உள்ளதை மிகச் சுலபமாக மண்டி போட்டாள் என்று எழுதினால் அதுதான் பின்நவீனத்துவம்.”

பின்குறிப்பு: பின்நவீனத்துவத்தைப் பற்றி எங்களாலும் உளறமுடியும் என்பதற்குத் தான் இதை எழுதினேன்.மேலே உள்ளதைப் படித்துவிட்டு யாருக்காவது ஜன்னி வந்தால் நான் பொறுப்பல்ல!..கொஞ்சம் கிட்ட வாங்க,பின்நவீனம் அப்படின்னா என்னங்கண்ணா?.......... 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

நண்பர் கண்ணன்.S ஒரு முறை எழுதினார்.”
நாம்பதான் அவரை நோண்டுறோம்.அவர் நம்மை கண்டுக்கவில்லையே” என்று அதற்க்கப்புறம் நான் அந்தப் பக்கமே போகவில்லை!.இப்போ அவர் நம்மை நோண்டி இருப்பதால் தான் இந்த பதில்!.இல்லேன்னா நாம ஏன் இந்தக் கொடுமையை எழுதுறோம்!
(மேல உள்ளது எல்லாம் நேத்து எழுதினது!.கீழே உள்ளது மட்டும் இப்ப எழுதியது)

கடைசியா பதிவு அரசியல் இதோட முடிஞ்சிருச்சி!.அதான் பரிசல்க்கார அண்ணன் பிளீச்சிங் பௌடர் யாரன்னுதான் போட்டுட்டாரே!.
so, வாங்க எல்லோரும் ஃப்ரண்ட்ஸா இருப்போம்!.வாங்க பழகலாம்! :))

பிட்டுக்கு மண்சுமந்த போலி பெருமான்!-ராகுல்காந்தி!

Posted on Friday, October 3, 2008 by நல்லதந்தி



ரசியல் செய்வதில் இரண்டு வகை உண்டு ஒன்று ஜனங்களைக் கவர நிஜமாகவே அவர்களுக்கு நன்மை செய்து, அவர்களைக் கவர்வது மற்றொன்று வெறும் ஸ்டண்ட் அடித்து அவர்களைக் கவர்வது.

இதில் இரண்டாவது வகை அரசியல் செய்கிறார். நேரு பரம்பரையின் அடுத்த இளவரசர் ராகுல் காந்தி. இந்த ஸ்டைல் நேரு குடும்பத்தின் காப்பிரைட் ஸ்டைல் என்றாலும், நேரு,இந்திராவிற்க்குப் பின் வந்த ராஜீவ் காந்தி இந்த ஸ்டைலை ஜனங்களைக் கவர பயன் படுத்தி தோல்வியே கண்டார்.

தந்தையைப் போலவே தனயனும் தங்களது இந்த குடும்ப காப்பிரைட் ஸ்டைலைப் பயன் படுத்தினாலும்,தந்தையை விட மிக மட்டமான தோல்வியே இவருக்கு இது வரை மிஞ்சியிருக்கிறது.

பீகாரில் முயற்சி செய்தார் தோல்வி.பிறகு உத்திரப் பிரதேசத்தில் தேர்தல் நேரத்தில் இதைப் பிரமாதமாகப் பயன் படுத்தினார்.அதில் படு தோல்வி!.போதாக் குறைக்கு மாயாவதி வேறு, ராகுல்காந்தி, தலித் மற்றும் ஏழைகளைத் தொட்ட கைகளின் அழுக்கு நீங்க அவர் ஸ்பெஷல் சோப்பு போட்டுக் குளிக்கிறார் என்று குண்டைத் தூக்கிப் போட்டு ராகுல் காந்தியின் மொத்த விளையாட்டுக்கும் ஆப்பு வைத்தார்.

அடுத்து கர்நாடகத் தேர்தலின் போதும் இதே ஸ்டண்ட் செய்தார் மக்கள் அவருக்குப் போட்டது பட்டை நாமம்.இப்போது இராஜஸ்தானில் தேர்தல் நெருங்குவதால் இந்த ஸ்டண்டைக் கையில எடுத்துள்ளார்.மக்கள் மீண்டும் பட்டை நாமம் போடுவது உறுதி என்று நம் எல்லோருக்கும் தெரியும்.அது நெத்தியில் மட்டும்தானா? அல்லது உடல் முழுக்கப் போட்டு டெல்லிக்கு அனுப்புவார்களா?. என்பதை கவனித்து இருந்துப் பார்ப்போம். ராகுல் காந்தியின் ராசி அப்படி!

வந்த செய்தி!

அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல் காந்தி எம்.பி. ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவர் பாரன் மாவட்டம் அம்ரோலி கிராமத்துக்கு சென்றார். அந்த கிராமம் மலைப்பகுதியில் இருக்கிறது. அங்கு ஏழை மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

அங்குள்ள ஏரியில், கிராம புற வேலைவாய்ப்பு திட்டத்தின் படி, கிராம மக்கள், மண் அள்ளிக்கொண்டு இருந்தனர். உடனே ராகுல் காந்தி, காரில் இருந்து இறங்கிச்சென்று, அந்த பணியை ஆய்வு செய்தார். மக்களிடம் குறைகளையும் கேட்டார்.

பின்னர் அவர், ஏழை தொழிலாளர்களுடன் சேர்ந்து, தொழிலாளி போல சிறிது நேரம் மண் சுமந்தார். அவருடன் சேர்ந்து, காங்கிரஸ் தொண்டர்கள் 40 பேரும் மண் சுமந்தார்கள். பின்னர் ராகுல் காந்தி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இதைத்தொடர்ந்து, அந்த கிராமத்தில் உள்ள ஏழை ஒருவரின் வீட்டுக்கு, இரவில் சென்றார். அங்கு கொடுக்கப்பட்ட உணவை அவர் சாப்பிட்டார். கிராம மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். இரவில் கயிற்று கட்டிலில் தூங்கினார்.

பின்னர் அவர் காலையில் எழுந்து தன்னுடைய காரில் ஏறி, கோடா நகருக்கு சென்றார். அதன்பின் விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

நல்லதந்திக்கு உதவியது தினத்தந்தி!

அகர்தலாவில் அன்புவாதிகளின் அன்புப் பரிசு

Posted on Thursday, October 2, 2008 by நல்லதந்தி




திங்கட்கிழமைக்கு அடுத்து செவ்வாய் கிழமை என்பது போல் வழக்கம் போல மீண்டும் குண்டு வெடிப்பு.
திரிபுராவின் தலைநகரான அகர்தலாவில் குண்டு வெடித்தது.இது அன்புவாதிகளின் வழக்கத்துக்குரிய செயல் என்றாலும் இப்போது புதிதாக ஏன் திரிபுராவில் வெடித்தது என்று விசாரித்தோம்.

ஒரு பத்திரிக்கை நிருபரிடம் கேட்டபோது,இதில் என்ன இருக்கிறது,அன்புவாதிகளிடம் அகர்தலாவில் உள்ள சிலர் தாங்கள் சாக வேண்டும் என்றும் ஆனால் பூச்சி மருந்து வாங்கக் கூட கையில் காசு இல்லை என்று கதறி அழுததாகத்தெரிகிறது.எப்போதுமே இரக்க மனம் கொண்ட நமது அன்புவாதிகள் சிலர் தம் கைக் காசைச் செலவு செய்து அன்பு வெடிகுண்டைத் தயார் செய்து,எங்கிருந்து மேல் ஊர் போக வேண்டும் என்று அகர்தலாவாசிகளிடம் அன்புடன் வினவியதாகத் தெரிகிறது.

அந்த அகர்தலாவாசிகளும் ,அவர்களது வீடு இருக்கும் பகுதியில் இருந்தே போய்ச் சேர வேண்டும்,அப்பதான் பாடியை வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போகும் செலவு குறையும் என்று கூறியதாகத் தெரிகிறது.உடனே அன்புவாதிகளும் தம் கைக் காசு செலவு செய்து ஆட்டோ பிடித்து அகர்தலாவின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று குண்டு வைத்ததாகத் தெரிகிறது.

இதில் நெஞ்சை நெகிழவைக்கும் விசயம் என்னவென்றால் குண்டு வைத்தவுடன் அகர்தலாவாசிகளைப் பார்த்து நீங்கள் மேல்லோகம் போவதை எங்களால் கண்கொண்டு பார்க்கமுடியாது,எங்கள் மனம் தாங்காது என்று கூறி அழுதவாறே அந்த இடத்தை விட்டு வேகமாக ஓடிச் சென்றார்களாம். என்று அந்த அன்புவாதிகளின் கைக் காசு செலவு செய்து அகர்தலாவாசி மீது அவர்கள் காட்டிய கருணை ஈடு இணையில்லாதது என்றார்.

போலீசாரிடம் விசாரித்த போது அதெல்லாம் இல்லீங்க!.இந்த திரிபுராவில் எல்லோரும் ஏழையாகவும் கல்வியறிவு இல்லாமலும் முன்னே இருந்தாங்க,கிருஸ்துமத பாதிரிகளின் கருணையாலும்,வெளிநாட்டுக்கார புண்ணியவானுங்க நிறைய பணம் அனுப்பி படிக்க வைச்சதாலும்,கிருஸ்துவ மதம் மாறினாத்தான் படிப்பு வரும் அப்படிங்கறதாலே முக்கால்வாசிப் பேர் கிருஸ்வராக மாறிட்டாங்க.அதனால திரிபுரா இந்தியாவிலேயே பணக்கார மாநிலமா ஆயிடுச்சி!.

இப்போ உள்ளுரில் இருக்கிற கொஞ்ச நஞ்ச இந்துக்களுக்கு இந்து மத பண்டிகையெல்லாம் எப்படி கொண்டாடரதுன்னு மறந்து போச்சி!.இப்போ தீபாவளி கிட்ட வர்றதாலே பட்டாசு எப்படி வெடிக்கிறதுன்னு கத்துக் கொடுக்க அன்புவாதிகளிடன் கேட்டு இருக்காங்க போலிருக்கு.அவங்களும் வந்து பட்டாசு வெடிச்சி காமிச்சி இருக்காங்க! அவ்வளவுதான்!.என்றார்.

பின்குறிப்பு: இணையத்தில் தீவிரவாதிகளை தீவிரவாதிகன்னு எழுதறத்துக்கு இப்போ ரொம்பப்பேர் எதிர்க்கிறாங்க.இவங்களுக்கு அவ்வளவு அன்பு அவங்க மேலே.நானும் எதுக்கு வம்புன்னுட்டு அவங்க பேர மாத்திட்டேன். என்ன கொடுமை சார் இது!


வந்த செய்தி!

திரிபுராவில் 7 இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 2 பேர் பலியானார்கள். 100 பேர் படுகாயம் அடைந்தனர்.

நாடு முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்களில், தீவிரவாதிகள் குண்டு வெடிப்பு தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள்.


வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவிலும் நேற்று தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. திரிபுரா தலைநகர் அகர்தலாவில் நேற்று இரவு 7.30 மணி அளவில் அடுத்தடுத்து 5 இடங்களில் குண்டுகள் வெடித்தன.

மகாராஜாகஞ்ச் பகுதியில் உள்ள முக்கிய மார்க்கெட், ராதாநகர் பஸ் நிலையம், ஜி.பி.பஜார், கிரிஷ்நகர், மற்றும் பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் புறநகர் பகுதியான அபயநகர் ஆகிய இடங்களில் குண்டுகள் வெடித்தன. இரவு 10 மணிக்கு மேலும் இரு இடங்களில் குண்டுகள் வெடித்தன. அதில் ஒரு இடத்தில் வெடிக்காத குண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டது.


முதல் குண்டு ராதாநகர் பஸ் நிலையத்தில் வெடித்தது. இதில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உடல் சிதறி பலியானார். மற்றொருவர், சிகிச்சை பலனின்றி ஆஸ்பத்திரியில் இறந்தார். 7 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 100க்கு மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

ராதாநகர் பஸ் நிலையம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் இரு மர்ம மனிதர்கள் சந்தேகப்படும்படி சுற்றிக் கொண்டு இருந்ததாகவும் அவர்கள் அங்கிருந்து சென்ற இரண்டு மூன்று நிமிடங்களில் குண்டு வெடித்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

குறைந்த சக்தி கொண்ட வெடிபொருட்கள் இந்த குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்டு இருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


தகவல் அறிந்ததும் போலீசார் குண்டு வெடிப்பு பகுதிகளுக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக இந்திராகாந்தி நினைவு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மார்க்கெட் குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்தவர்களில் 5 பேரின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

வட கிழக்கு மாநிலங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று கடந்த மாதம் 25-ந்தேதி மத்திய புலனாய்வு துறை எச்சரித்து இருந்தது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற, தொடர் குண்டு வெடிப்பை நடத்தியது யார் என்று இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை.

இதற்கிடையில் அகர்தலாவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த போலீஸ் டி.ஐ.ஜி. நேபாள்தாஸ், `ஹர்கத்-உல்-ஜிகாதி-இஸ்லாமி (ஹுஜி) இயக்க தீவிரவாதிகள் இந்த குண்டு வெடிப்பு சதியின் பின்னணியில் செயல்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக தெரிவித்தார். சதிகாரர்களை பிடிக்க மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

வெடிகுண்டு புரளி!-இஸ்லாமியத் தீவிரவாதிகளின் இன்னுமொரு கொலைக்கருவி!

Posted on Wednesday, October 1, 2008 by நல்லதந்தி




யாரும் எதிர்ப்பார்க்காத அளவிற்கு இப்போது கோவில்களில், கூட்ட நெரிசல் காரணமாக நூற்றுக்கணக்கான பேர்கள்,நெரிசல்களில் சிக்கிக்கொண்டு இறப்பதாக செய்திகள் அடிக்கடி வருகின்றன.எப்போதும் இல்லாமல் இப்போது மட்டும் ஏன் இவைநிகழ்கின்றன என்றுப் பார்த்தால் அதன் பின்னால் இஸ்லாமிய தீவிரவாதத்தின் கோரப்பல் இளித்துக் கொண்டிருப்பது தெரிகிறது.

முதலில் மராட்டிய மாநிலத்தில் உள்ள சதாரா என்ற இடத்தில் உள்ள கோவிலில் கடந்த 2005-ம் ஆண்டு நெரிசல் ஏற்பட்டு 300 பேர் உயிரிழந்தனர்,அதன் பின்னர் இமாச்சல பிரதேசத்தில் உள்ள நைனோ தேவி மலைக்கோவிலில் கடந்த ஆகஸ்டு 3-ந் தேதி அன்று நெரிசல் ஏற்பட்டு 162 பக்தர்கள் பலியாகினர்.

இந்த இரு சம்பவங்களின் போதே இஸ்லாமிய தீவிரவாதம் இருப்பதாகக் கருதப் பட்டது.இரண்டு சம்பவங்களிலும் குண்டு வைத்திருப்பதாக வந்த புரளியே காரணம் என்று சொல்லப்பட்டது.
மூன்றாவதாக இப்போது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மலைக் கோவிலில் நேற்று அதிகாலையில் நடந்த சம்பவம்.


ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மலைக் கோவிலில் நேற்று அதிகாலை நவராத்திரி விழா நடந்தபோது வெடிகுண்டு புரளி ஏற்பட்டு பக்தர்கள் சிதறி ஓடினார்கள். அப்போது நெரிசலில் சிக்கி 180 பக்தர்கள் உயிர் இழந்தனர்.

பொதுவாக வெடிகுண்டு சம்பவங்களை இந்த இஸ்லாமிய தீவிரவாதிகள் நிகழ்த்துவதன் நோக்கம் சம்பவ இடங்களில் இறக்கும் மனித உயிர்கள மட்டுமல்ல நாட்டில் இந்து-முஸ்லீம், கலவரங்களைத் துண்டுவதும்,நாட்டில் எப்போதும் ஒரு பயம் நிறைந்த சூழ்நிலை மக்களிடையே நிலவவேண்டும் என்பதும்,நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்க வேண்டும் என்பதும் தான்.

எத்தனை வெடிகுண்டு சம்பவங்கள் நிகழ்த்தினாலும் இந்துக்கள் பொறுமையாக இருப்பது அவர்களுக்கு (பாகிஸ்த்தான் அரசுக்கு!) வெறுப்பைத் தோன்று வித்திருக்கக்கூடும்.கோவிலில் இம்மாதிரியான துர்சம்பவங்களை நிகழ்த்தும் போது குண்டு வைப்பதற்க்கான தொந்திரவும் இல்லை,அதற்கான பழியையும் ஏற்கவேண்டியிராது.மற்ற நாடுகளின் கண்டனத்திற்கும் ஆளாகவேண்டியிராது. எல்லாவற்றை விட முக்கியமாக இந்துக்களின் பொறுமையும், பெருந்தன்மையும் இதனால் சிதைந்து போய்விடும்.எனவே இந்த ஆயுதத்தை அவர்கள் கையில் எடுத்திருக்கிறார்கள்.

இந்தியத் திருநாட்டில் மதக் கலவரத்தை நிகழ்த்தி அதன் மூலம் இந்த நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை முடக்கி விடலாம் என்று பாகிஸ்த்தான் அரசு நினைக்கிறது.அதனால்தான் இம்மாதிரியான சம்பவங்கள் இப்போது அடிக்கடி நிகழத்துவங்கியுள்ளன.

மேலும் இணையத்தில் உள்ள சில வலைப் பக்கங்களில் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு ஆதரவாகச் சிலர் எழுதிவரும் கட்டுரைகள்,மத நெறியைச் சீர்குலைக்கும் நோக்கிலும்,முஸ்லீம்கள் இடையே இந்துத் துவேசத்தை பரப்ப நினக்கும் நோக்கிலும் இருப்பது, வெளிநாட்டுச் சதி, பெரும் அளவில் நம் மக்களைப் பின்னியுள்ளது,என்பதையே உணர்த்துகிறது.

நாட்டு மக்கள்,இந்துக்களானாலும்,சரி முஸ்லீம்களானாலும் சரி தங்களைச் சுற்றியுள்ளவர்களை கூர்ந்து கவனிக்க வேண்டிய தருணம் இது.மதத்தின் பேரால் அன்னிய சக்திகளிடம் அடிமையாகாமல் முஸ்லீம் அன்பர்கள் கவனத்துடன் இருக்க வேண்டிய தருணம் இது!.


வந்த செய்தி!


ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே மெக்ரன்கார் என்ற பழங்கால கோட்டை உள்ளது. இது ஒரு சுற்றுலா தலம் ஆகும்.

15-ம் நூற்றாண்டில் ஜோத்பூரை ஆண்ட ராவ் ஜோதா என்ற மன்னர், இந்த கோட்டையில் சாமுண்டா தேவி சிலையை நிர்மாணித்து ஒரு அம்மன் கோவிலை அமைத்தார். பழமை வாய்ந்த அந்த மலைக்கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

சக்தி வாய்ந்த அம்மன் என்று கருதுவதால் ராஜஸ்தான் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டு, நவராத்திரியின் முதல் நாள் நேற்று தொடங்கியது. எனவே நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்தே சாமுண்டா தேவி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக நவராத்திரி முதல்நாள் பூஜை நேற்று அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கியது.


நவராத்திரி பூஜையில் பங்கேற்று தேவியை தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் கூடி இருந்தனர். ஆண்களுக்காக தனி வரிசையும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக தனி வரிசையும் அமைக்கப்பட்டு இருந்தது. சாமி கும்பிடும் ஆர்வத்தில் பக்தர்கள் அனைவரும் முண்டியடித்துக் கொண்டு இருந்தனர்.

நேற்று அதிகாலை 5.30 மணி அளவில், கோவிலின் முகப்பு பகுதியில் நின்ற ஆண்கள் வரிசையில் இருந்து கீழே சரிவான பகுதியை நோக்கி சில பக்தர்கள் சறுக்கி விழுந்தனர். அந்த சரிவு பகுதி, 75 மீட்டர் நீளம் கொண்டது ஆகும். இதனால், அந்த சரிவில் நின்ற பக்தர்களும் வழுக்கி விழுந்தனர். இதையடுத்து அந்த பகுதியில் கடும் பீதி ஏற்பட்டது.


சுவர் இடிந்து விழுந்து விட்டதாக ஒரு வதந்தியும், கோவிலில் குண்டு வெடித்ததாக ஒரு புரளியும் கிளம்பின. எனவே, ஆண்கள் வரிசையில் நின்று கொண்டு இருந்த பக்தர்கள் அனைவரும் அலறி அடித்தபடி சிதறி ஓடினர். சுமார் 2 கி.மீ., தொலைவுக்கு குறுகலான பாதையாக இருந்ததால், கடும் நெரிசல் ஏற்பட்டது.

சம்பவம் நடந்தபோது, சுமார் 20 ஆயிரம் பக்தர்கள் அங்கு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிர் பிழைப்பதற்காக ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டு ஓடினர். அதில் சிலர் தடுமாறி கீழே விழுந்தனர். அவர்களை மிதித்துக் கொண்டு மற்றவர்கள் ஓடியதால், காலில் மிதி பட்டு உயிரிழந்தனர். இதனால் ஒரே கூச்சலும், குழப்பமுமாக கேட்டது.

சுமார் 15 நிமிடங்கள் இந்த நெரிசல் நீடித்தது. அதற்குள் 20 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டனர். தனது தந்தையுடன் வந்த 5 வயது குழந்தை ஒன்று, அவர் இறந்தது அறியாமல், `அப்பா, எழுந்திருங்கள்' என்று கதறியது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

இதற்கிடையே சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. உயிர் பிழைத்த பக்தர்களும் போலீசாருக்கு உதவினர். நெரிசலில் சிக்கி காயங்களுடனும் மூச்சுத் திணறியபடியும் கிடந்தவர்களை மருத்துவமனைகளில் சேர்த்தனர். மகாத்மா காந்தி மருத்துவமனை, மதுரா தாஸ் மருத்துவமனை, சன் சிட்டி மருத்துவமனை உள்பட பல்வேறு மருத்துவமனைகளிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். நேற்று மாலை வரை 180 பேர் பலியாகி விட்டனர். மேலும் 60 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலர் கவலைக்கிடமாக உள்ளனர். எனினும், அனைத்து மருத்துவமனைகளில் இருந்தும் வரும் பட்டியலை சரிபார்த்த பிறகே பலியானவர்களின் சரியான எண்ணிக்கை தெரியும். இந்த தகவலை, ஜோத்பூர் மண்டல ஆணையர் கிரண் சோனி தெரிவித்தார்.


சாமுண்டா தேவி கோவிலில் நடந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாநில பேரிடர் நிர்வாக துறை மந்திரி லட்சுமி நாராயண், மாநில உள்துறை செயலாளர் தன்வி ஆகியோர் உயர் அதிகாரிகளுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். நெரிசல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக இருந்த தனி வரிசையில் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கோவிலுக்கு செல்லவும், திரும்பி வரவும் ஒரே வழி மட்டுமே இருந்ததால் பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கோவில் நிர்வாகத்தினர், முன் ஏற்பாடுகளை செய்து இருக்க வேண்டும் என்று பக்தர்கள் கூறினர்.