தேவரின் திருமுகமும், கொடு முகமும்!

Posted on Sunday, July 12, 2009 by நல்லதந்தி




நண்பர் RV எழுதிய இடுகையைப் பார்த்ததும் வந்த நினைவுகளால் எழுதியது!. முன்பே தேவரைப் பற்றி என்னுடைய இடுகை.

இயக்குனர் Sp.முத்துராமனின் வாழ்க்கையில் தேவரைப் பற்றிய அனுபவத்தைச் சொன்னது இது!.

ஒரு முறை முத்துராமன் ஸ்டியோவிற்குள் நுழையும் போது தேவரின் கார் வெளியேறிக்கொண்டிருந்தது. முன் இருக்கையில் தேவர் அமர்ந்து கொண்டு இருப்பதைப் பார்த்த SPM தேவரைப்பார்த்து வணக்கம் சொன்னார்.அதை தேவர் கவனிக்கவில்லை. கார் கிளம்பிவிட்டது. ஆனால் SPM, தேவர் கவனிக்கவில்லை என்பதை கவனித்து விட்டதால் அவர் பதிலுக்கு வணக்கம் செலுத்தாததை பெரிதாக எண்ணாமல் செட்டில் தனது வேலையைக் கவனிக்க சென்று விட்டார்.

ஒரு பத்து நிமிடம் கழித்து மீண்டும் அந்த கார் அதே ஸ்டியோவில் நுழைந்தது. அதில் இருந்து இறங்கிய தேவர் நேராக முத்துராமன் இயக்கிக் கொண்டிருந்த படத்தளத்திற்குச் சென்று, முத்துராமனிடம், “தம்பி, மன்னிச்சிக்கோங்க!. நான் காரில் இருந்த போது நீங்கள் கும்பிட்டதை கவனிக்க வில்லை. டிரைவர் தம்பி சொன்னவுடம் ஓடி வருகிறேன்!. வணக்கம்! தம்பி!. “ என்றாராம்.

முத்துராமன் இதைச் சொல்லும் போதே அவருக்கு கொஞ்சம் வார்த்தைகள் தடுமாறின. எப்பேர்ப்பட்ட தயாரிப்பாளர், இந்தச் சம்பவம் நடக்கும் போது முத்துராமன் ஒரு சாதாரண இயக்குனராக மட்டுமே இருந்தார். பின்னர்தான் இரஜினியை வைத்து பல வெற்றிப் படங்களை இயக்கிய நட்சத்திர இயக்குனர் ஆனார். ஆனால் ஒரு சிறிய இயக்குனர் வணக்கம் சொன்னதற்கு, பதில் வணக்கம் தான் செலுத்தாததை ( தான் கவனிக்காமல் இருந்தால் கூட ) எண்ணி திரும்ப வந்து வணக்கம் சொன்னதை நினைத்தாலே, தேவரின் பண்பு வியக்க வைக்கிறது.

இன்னொன்றையும் Sp.முத்துராமன் குறிப்பிட்டார். பொதுவாக, வினியோகஸ்தர்களுக்கு படத்திற்கு ஐந்தாண்டு உரிமை. அதற்க்குப் பின்னால் மீண்டும் அந்த உரிமையை தயாரிப்பாளர்கள், வேறு ஒரு வினியோகஸ்த்தருக்கு விற்பனை செய்வார்கள். இந்த முறையில் தயாரிப்பாளர்களுக்கு, மீண்டும் ஒரு வசூல் பார்க்க வாய்ப்பு. ஆனால் தேவர் அம்மாதிரி செய்வதில்லை. ஒரு முறை ஒரு வினியோகஸ்தருக்கு ஒரு படத்தை கொடுத்து விட்டால் அதோடு வெளியிடுவதற்கு உண்டான எல்லா உரிமையும் அந்தந்த வினியோகஸ்தர்களுக்கே!.

இதற்கு தேவரின் வியாக்கியானம் என்னவென்றால் ‘ படத்தை வித்தாச்சி!. நடிகருங்க பணம் வாங்கியாச்சி!, எனக்கொரு லாபம் கிடைச்சாச்சி!, முருகனுக்கும் அவனுக்கு வேண்டிய லாபம் வந்தாச்சி!, அப்புறம் என்ன!’ என்பாராம். இதைச் சொல்லிய பிறகு SPM சொன்னது, இந்த மாதிரி அவர் செய்யாமல் இருந்தால் இன்றைக்கு தேவர் ஃபிலிம்ஸ் நஷ்டமடைந்து இருக்காது. அதை இந்த வருமானம் ஈடு கட்டி இருகும். தேவர் ஃபிலிம்ஸும் நொடித்திருக்காது!.
நிஜம்தானே! எம்.ஜி.ஆர், இரஜினி படங்களின் ரீ கலக்‌ஷனே இன்றைய புதுப் படங்களின் வருமானத்தை மிஞ்சுமே!.



ஹிந்திப் படம் எடுக்க ஆசைப் பட்ட தேவர், பாம்பே சென்று அன்றைக்கு வடக்கில் புகழ் பெற்று விளங்கிய ஒரு கதாநாயகனைப் பார்த்தார். தேவரின் சட்டை கூட போடாத open பாடியைப் பார்த்த அந்த ஹீரோ இவரா படம் எடுக்கப்போகிறவர், என்று அலட்சியமான பார்வை பார்த்து விட்டு திரும்பிக் கொண்டார்.
தேவர் அவரிடம் ஐயா நான் உங்களை வைத்து ஒரு படம் எடுக்க ஆசைப்படுகிறேன். உங்களுடைய ஒரு படத்திற்கான தொகை என்ன என்று கேட்க, அந்த ஹீரோவோ இந்த பண்டாரப்புரடியூஸரைப் பயமுறுத்தி வேடிக்கைப் பார்க்கலாம் என்று நினைத்து அவர் அன்றைக்கு வாங்கிக் கொண்டிருந்த தொகையைவிட அதிகமாகச் சொன்னார். தேவர் ஏற்கனவே அந்த ஹீரோவின் வழக்கமான விலையைத் தெரிந்து கொண்டு அவர் வாங்கும் முழுத்தொகையையும் தனது மடியில் கட்டிக் கொண்டே வந்து இருந்தார். ஹீரோ வழக்கமான தொகையை விட அதிகம் சொன்னவுடன் கொஞ்சமும் கலங்காமல், தன் மடியில் வைத்திருந்த தொகையை ஹீரோவின் கையில் கொடுத்து விட்டு, மிச்சம் உள்ள தொகையை சென்னைக்கு வந்தவுடன் கொடுப்பதாகச் சொன்னர். அதைக் கேட்டு, முழுத்தொகையையும், ஒரே மூச்சில் கொடுத்த தயாரிப்பாளரை இதுவரைப் பார்த்திராத அந்த ஹீரோ அசந்துவிட்டார். தேவருக்கு உடனே கால்ஷீட் கொடுப்பதாக ஒத்துக் கொண்டார்.

படம் தொடங்கியது. முதலில் ஒழுங்காக படப் பிடிப்பிற்கு வந்து கொண்டிருந்த ஹீரோ கொஞ்சம் கொஞ்சமாக, வழக்கம் போல பாம்பே ஸ்டைல் பாணிக்கு மாறிவிட்டார். படப்பிடிப்பு மத்தியானத்திற்கு மேல் துவங்கியது. சில சமயம் ஹீரோ மொத்தமாக வராமல் படப் பிடிப்பு நின்றும் போவதுண்டு.

பொதுவாகவே பாம்பே பட உலகிற்கும்,தென்னிந்திய பட உலகிற்கும் பெரிய வித்தியாசமுண்டு, சாதாரண பஸ்ஸிற்கும், விரைவு பஸ்ஸிற்கும் உள்ள வேறுபாடு அது!. இதுவே தேவருக்கு பிடிக்காத விஷயம். பிறகு ஹீரோ வேறு பிரச்சனை செய்தால்!. ஆனானப்பட்ட எம்.ஜி.ஆரை வைத்தே இட்லி அவிப்பதைப் போல மூன்று மாதத்திற்கு ஒரு படம் கொடுத்தவர் தேவர். அவருக்கு ஹீரோவின் நடவடிக்கைகள் மிகவும் கோபமூட்டின.

ஹீரோவிற்கும் தேவரின் கோபம் தெரிய வந்தது. தேவரிடமும் ஹீரோவும் கோபமாக இருக்கிறார் என்று வைத்தனர் சிலர். சில நாட்கள் பொறுமைக் காத்தபின் எந்த மாற்றமும் ஹீரோவிடம் தெரியாமல் போகவே, கடுங்கோபமுடம் ஹீரோவைப் பார்க்க அவரது அறைக்கு தேவர் சென்றார். ஹீரோ அங்கு இல்லை. எனவே அவர் வரும் வரை காத்திருக்க முடிவு செய்து அவரது அறையிலேயே தேவர் காத்திருந்தார்.

கொஞ்ச நேரம் கழித்து ஹீரோ அறைக்கு வரும் போது, தயாரிப்பாளர் தேவர், தனது அறையில் காத்திருப்பதைப் பார்த்தார். கொஞ்சம், தயங்கிய அவர், சின்ன யோசனைக்குப் பிறகு தன் காலில் அணிந்து இருந்த செருப்பைக் கையில் எடுத்துக் கொண்டார். அறையில் உள்ளிருந்து ஹீரோவை கவனித்து கறுவிக்கொண்டிருந்த தேவர், ஹீரோ தன் கையில் செருப்பை எடுத்தவுடன் பழைய சாண்டோ சின்னப்ப தேவர் ஆனார். கோபத்தில் அவரது சாண்டோ தேகம் சிலிர்த்து சிவந்தது.

இன்னைக்கு அவனுக்காச்சு! எனக்காச்சு! என்று தன்னைத் தயார்படுத்திக் கொண்டார். அந்த ஹீரோ அறைக்குள் நுழைந்தவுடன் கையில் எடுத்த செருப்புடன் நேராக சின்னப்ப தேவரின் அருகே சென்று, அவரது கையில் தனது செருப்பைக் கொடுத்து விட்டு, அவரது காலில் விழுந்தார். தேவர்ஜீ! என்னை மன்னித்து விடுங்கள். நான் செய்தது தவறுதான். அந்தத் தவற்றுக்கு நீங்கள் இந்த செருப்பாலேயே என்னை அடியுங்கள், இனி இன்னொரு முறை நான் இந்தத் தவற்றைச் செய்ய மாட்டேன்!. என்று ஹிந்தியில் கதறினார். இதைக் கண்டு தேவர் மனம் நெகிழ்ந்து அவரைக் கட்டி அணைத்துக் கொண்டார்.

என்னாங்க! இப்படியும் ஒரு தயாரிப்பாளரா? அப்படின்னு நினைக்கிறீங்களா?. இல்லை!..., இதென்ன இப்படி ஒரு டுபாக்கூர் சம்பவத்தை கதை கட்டுறானேன்னு நினைக்கிறீங்களா?.

இது நிஜமாகவே நடந்த உண்மை, நடிகர் சிவகுமார் சொன்ன, உண்மைச் சம்பவம்.

நான் யோசிக்கிறது என்னன்னா அந்த ஹீரோ இராஜேஷ்கன்னாவா? இல்லை தர்மேந்திராவா அப்படிங்கிறதைத்தான்!!!!!!!!!!!!!!!!!

இரட்டை இலையால் விளையும் நன்மை!

Posted on Tuesday, May 12, 2009 by நல்லதந்தி




இது பழைய விஷயம் தான், இருந்தாலும் இப்போ தீடீரென்னு நினைவுக்கு வந்தது. ஒரு சின்ன விஷயத்துக்கே இவ்வளவு நன்மை இந்த இரட்டை இலையால் இருக்கான்னு நான் வியக்கிறேன்., பெரிய விஷயத்துக்கு ஜனங்களுக்கு எவ்வளவு உபயோகமாய் இருக்குமோ!.


அப்புறம் நாளைக்கு தேர்தல் . ஹய்யா ஒரு நாள் லீவுன்னு ஜாலியா இருக்கிறதுக்காக நேத்தே சரக்கு வாங்கி வெச்சிருந்தாலும், எந்த வேலையா இருந்தாலும் முதலிலே ஓட்டைப் போட்டுட்டு அப்புறம் உங்க ஜாலியையும், ஜோலியையும் பாருங்க!. இதுக்கும், மேலே உள்ள இரட்டை இலைக்கும்,  நீங்க  சம்பந்தப் படுத்திக்கிட்டா நான் தான் பொறுப்பு!.. ஹி..ஹி...ஹீ....

ஆகவே ஜனங்களே நாளைக்கு மறக்காம ஒட்டுப் போட்டுடுங்க...

இரட்டை இலையாலே செல் போனுக்கே “சார்ஜ்” ஏத்தமுடியும் போது நாட்டுக்கும், நமக்கும் “சார்ஜ்” ஏத்தமுடியாதா?.......




கலைஞருக்கு சில TIPS!

Posted on Friday, May 8, 2009 by நல்லதந்தி

வாழும் வள்ளுவம் வாக்கிங் உண்ணாவிரதம் இருந்தது நம்மை சிரிப்புக் கடலில் ஆழ்த்தி மகிழ்ந்தது தெரிந்ததே!. இரண்டு மாதங்களுக்கு முன் அறுவை சிகிச்சை முடிந்த கையோடு ஆஸ்பத்திரி உண்ணாவிரதம் அறிவித்தார். இதனால் நமக்குத் தெரியாமல் ஆஸ்பத்திரியில் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறாரா? என்று அதிர்ச்சியடைந்த டாக்டர்கள் ஆப்பரேஷன் முடிந்த கையோடு நீங்கள் இப்படி அறிவித்தால் மக்கள் நீங்கள் உண்மையிலேயே ஆபரேஷன் செய்து கொண்டிருக்கிறீர்களா? அல்லது ஐகோர்ட் பிரச்சனையில் இருந்து தப்பிக்க ஆஸ்பத்திரி டிராமாவை நடத்துகிறாரா? என்று மக்கள் சந்தேகப் படமாட்டார்களா என்று சொன்னவுடன் தன்னுடைய தில்லுமுல்லு தனக்கே ஆப்பு வைப்பதைக் கண்டு உண்ணாவிரத தமாஷை அப்படியே அடக்கி வாசித்து வீடு திரும்பினார். இப்படி காரிய முட்டாளான கலைஞர் டாக்டர்களைக் காரணமில்லாமல் முட்டாள்கள் ஆக்கினார்.

இப்போதைய வாக்கிங் உண்ணாவிரதம் லஞ்ச் பிரேக்குக்கு முன்னால் பிரேக் ஆகிவிட்டது. உண்ணாவிரதத்தால் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என்று ப.சிதம்பரம் ஒப்புக் கொண்டாரே ஒழிய இன்னும் அம்மா முதல் ஐ.நா.சபை செயலாளர் வரை போர் நிறுத்தத்திற்காக இந்த நிமிடம் குரல் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். மன்மோகன் சிங்கைக் கேட்டால் ஒருத்தருக்கு எவ்வளவுதான் தொல்லை கொடுப்பது விட்டு விடுங்கள். ஆஸ்பத்திரியில் ரெஸ்ட் எடுக்கட்டும் என்பார். மக்கள் நம்புவதாய்த் தெரியவில்லை. வேறு என்ன செய்வது என்றால் இதைப் பயன் படுத்திக் கொள்ளலாம்.

இராஜபக்‌ஷே போரை நிறுத்த ஒப்புக் கொண்டதாய் தெரியவில்லை.அவ்ரை ஒப்புக் கொள்ள வைக்க கலைஞர் வீட்டில் அவருக்கு பலமான விருந்து வைத்து அவர் சாப்பிட முடியாமல் ”போதும் நிறுத்துங்கள்” என்று சொல்லும் போது கொல்றாங்களே டப்பிங் வாய்ஸ் புகழ் தயாநிதி மாறனை விட்டு “போரை நிறுத்துங்கள்” என்று மாற்றிக் குரல் கொடுத்து சன்,கலைஞர் T.V யில் ஒளிபரப்பலாம்.

இதெல்லாம் நமக்குச் சரிப்படாது. வழக்கம் போல், மனித சங்கிலி, தந்தி, உண்ணாவிரதம், பந்த் போன்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகள் மூலமாகவே இலங்கைப் பிரச்சனையை அணுகலாம் என்றால்....

விடுமுறைக் கொண்டாட்ட உண்ணாவிரதம்: இந்த உண்ணாவிரதத்தில் உள்ள விஷேசம் என்னவென்றால் உண்ணாவிரதத்தை நாம் இருக்க வேண்டியது இல்லை. கலைஞர் T.V, Sun T.V போன்றவைகளில் இதுவரை தமிழ் படங்களில் இடம் பெற்ற உண்ணவிரதக் காட்சிகளை ஒன்றினைத்து ஒளி பரப்பலாம். நாமெல்லாம் T.V.யைப் பார்த்து, சாப்பிட்டுக் கொண்டே, உண்ணாவிரதக் காட்சிகளைப் பார்ப்பதனால் உண்ணாவிரதம் இருக்கின்ற உணர்வைப் பெறலாம். பெரும்பான்மையான படங்களில் வரும் உண்ணாவிரதக்காட்சிகள் நகைச்சுவை காட்சியாகவே அமைக்கப் பட்டு இருக்கும். எனவே கலைஞர் உண்ணாவிரதம் இருந்த அளவிற்கு நகைச்சுவையாக இல்லாவிட்டாலும், ஒரளவிற்கு நகைச்சுவையாகவே இருக்கும் படியால் கொண்டாடத்திற்கு குறைவு இருக்காது.

தந்தி உண்ணாவிரதம்: இந்த உண்ணாவிரதம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் திட்டத்துடன் புதுமை கலந்தது. தந்திக்குத் தந்தி! உண்ணாவிரதத்திற்கு உண்ணாவிரதம்.சுருக்கமாகச் சொல்லப் போனால் மாறன் பிரதர்ஸ் அழகிரி பிரச்சனையையும் ஸ்பெக்ட்ரம் பிரச்சனையையும் பணம் என்கிற ஒரே கல்லில் கலைஞர் தீர்த்ததைப் போல!. இதில் இன்னொரு புதுமையும் உண்டு இந்தத் தந்தியை நீங்கள் பிரதமருக்கு அனுப்பத் தேவையில்லை. அவர் சாதாரணமாகவே இதை கவனிக்கப் போவதில்லை, அதிலும் இப்போது தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதால் அவருக்கு தந்தி வந்த விஷயமே தெரியாமல் போய் விடலாம். எனவே இந்தத் தந்தியை நம் விலாசத்திற்கே அனுப்பிக் கொள்ளலாம். இதனால் டெல்லி வரை தந்தி அனுப்புகின்ற செலவு மிச்சம். தந்தியில் உயிர் கொடுப்போம், உண்ணாவிரதம் இருப்போம் என்று வாசகம் அனுப்புவதில் அதை நமக்கே அனுப்பிக் கொள்வதால் சுருக்கமாக உ.கொ.உ.இ என்று அனுப்பிக் கொள்ளலாம். தந்தி வீட்டிற்கு வந்தவுடன் தந்தியை உயிர் கொடுப்போம், உண்ணாவிரதம் இருப்போம் என்று ஆவேசமாக படித்து ஆறுதல் அடைந்து இலங்கைப் பிரச்சனையை யாரும் அறியாமல் தீர்க்கலாம்.

மனிதசங்கிலி உண்ணாவிரதம்: இந்த உண்ணாவிரதம் கூடி வாழ்ந்தால் கேடிகளுக்கு நன்மை என்ற திட்டத்தில் பால் வகுக்கப் பட்டது. இதில் மேடையில் இருக்கின்ற தலைவர்கள் ஜனக்களுக்கு தரிசனம் தரும் போது எந்தத் தலைவனும் வேறு அணிக்குத் தாவக்கூடாது என்று தடுப்பதைப் போல ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொள்வார்கள். அதைப் போல தொண்டர்கள் ஒருவரை ஒருவர் தத்தமது ஒரு கையால் பிடித்திக் கொள்ளவேண்டும் மறு கையால் மற்றவருக்கு அவருக்கு வேண்டுமானவற்றை ஊட்டிக் கொள்ளலாம். உண்ணாவிரதக் கொள்கைப் படி அவர்கையால் அவர் சாப்பிடக்கூடாது. போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் போது மாடு போல அசை போட்டுக் கொண்டிருக்காமல் இருக்க கொஞ்சம் கவனம் தேவை.

ரிலே ரேஸ் உண்ணாவிரதம்: இது கொஞ்சம் old style உண்ணாவிரதம். வழக்கமாக தொழிற்ச்சங்கங்கள் சாகும் வரை உண்ணாவிரதம் மேற் கொள்ளும் பாணியிலான உண்ணாவிரதம் இது. காலை 6 மணிக்கு 100 பேர் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் என்றால் சரியாக 8 மணிக்கு மேலும் 10 நண்பர்கள் உண்ணாவிரதப் பந்தலுக்கு வர வேண்டும். இவர்கள் வந்தவுடன் உட்கார்ந்து இருக்கும் 10 பேர் வெளியே எழுந்து போய் தத்தமது கடமையை ஆற்றிக் கொண்டு வரலாம். இவர்கள் வந்த்தவுடன் அடுத்த 10 பேர் வெளியே சென்று காலை போஜனத்தை முடித்துக் கொண்டு வரலாம். இப்படியே ஒரு சுற்று முடிவதற்குள் மதிய சாப்பாட்டு வேளை வந்துவிடும். அடுத்த சுழற்சியை இப்படியே தொடரலாம். ஒருத்தர் கூட சாக முடியாது. இம்மாதிரி ஆயிரம் வருடங்கள் கூட உண்ணாவிரதம் இருக்கலாம் என்பது இதன் சிறப்பு அம்சம்.

மிட் நைட் உண்ணாவிரதம்: இது முழுக்க முழுக்க கலைஞர் பாணியிலான உண்ணாவிரதம். எல்லா மனிதர்களும் தான் ஒரு சாப்பாட்டு வேளைக்கு மறு சாப்பாட்டு வேளைக்கும் இடையே உண்ணாவிரதம் இருக்கிறார்கள். ஆனால் கலைஞர் இம்மாதிரி உண்ணாவிரதம் இருந்ததினால் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டது போல் வேறு யாராவது இருந்ததால் போர் நிறுத்தம் ஏற்பட்டதா?. கலைஞர் முதல் நாள் கூட இப்படித்தான் சாப்பிட்டு இருப்பார். ஆனால் இரண்டு சாப்பாட்டு வேளைக்கு நடுவில் உண்ணாவிரதம் இருக்க முடியும் என்று கலைஞர் சிந்தித்துக் கண்டு பிடித்து அறிவித்ததால் தானே நமக்கும் தெரிந்தது. அதே போல் இரவு சாப்பாட்டுக்குப் பின் காலை வரைக்கும் நீண்ட நேரம் உண்ணாவிரதம் இருப்பதால் இது மிட் நைட் உண்ணாவிரதம். இந்த உண்ணாவிரதத்தில் தூங்குபவர்கள் தூங்கலாம். ஆனால் உட்கார்ந்தபடி தான் தூங்க வேண்டும் இழுத்துப் போர்த்திக் கொள்ள போர்வை தரப்பட மாட்டாது. Sun T.V. யில் சூர்யா T.V. யில் ஒளிபரப்பான மிட் நைட் மசாலாவையும், கலைஞர் T.V. யில் மானாட மயிலாடவையும் ஒளிபரப்பலாம்.

கொலவெறி! மயிருக்கு யாரால் ஆபத்து?

Posted on Thursday, April 16, 2009 by நல்லதந்தி

தமிழக மழிஞரைப் பேட்டி காண்பது உற்சாகமான அனுபவம். சக பன்னாடை கிட்ட பேசறாப்புல சகஜமா, சல்லீசா பேசலாம், குறுக்கால கேள்வி கேக்கலாம். ஆனா ஓண்ணு அந்த காஜி புடிச்சவர் “நுங்கொம்மால, உங்கோயால, வர்றியா ஒண்ணா சேந்து நாண்டுக்கலாம்” அப்டின்னு கன்னா பின்னான்னு பேசறதை கேக்க காது இல்லாம இருக்கணும்!.

கவிச்சிபுரம் ஊட்டுக்கு நானு காலையில போனப்போ, மழிஞரோட அல்லகைங்க, மழிஞரு அன்னிக்கு பண்ணப்போற அத்தனை கருமாந்தரக் கொடுமைங்களையும் தயாரு பண்ணிட்டிருந்தாங்க. மேல ரூமில ஜனங்களுக்கு எப்பிடி கட்டிங் பண்ணமா மொத்தமா மொட்டையடிக்கலாமுன்னு ஒரு ஐடியா பண்ணி, அதுக்கு தயார் பண்ற பரபரப்பு பயங்கரமா இருந்திச்சி. ஊரில இருக்கிற அத்தினி ஜடாதாரி, கேப்மாரி, மொள்ளமாறிகளும் வந்து அவரைக் கண்டுக்க உக்காந்து இருந்தாங்க.

மழிஞரைப் பொருத்தவரைக்கும் ஜனங்களுக்கு இம்சையும், கொடுமையும் பண்றதுக்காக வெறிபிடிச்சாப்பில விடியக்காத்தாலயே எந்திரிச்சி ரொம்ப சுறுசுறுப்பா இருப்பாருன்னு அவருக்கு டீ போட்டு குடுக்க வந்தவரு சொல்றாரு.

கை வலிக்க வலிக்க ஜனங்களுக்கு மொட்டை அடிக்கிறதிலதான் இன்பமுன்னு அவரு அடிக்கடி சொல்லுவாராம். அந்த சமயத்தில என்னோட உயிர் போனாக்கூட பிரச்சனைய்யில்லெ, இதுக்காவ உயிரையே கொடுப்பேன்னு சொல்றது, அவரோட ஃபேவரைட் பஞ்ச் டையலாக்.அவரேதான் மொத்த ஜனங்களுக்கும் மொட்டையையும் அடிக்க வேணுங்கறதுக்காக சாமி கிட்ட இந்த மாதிரி அடிக்கடி நேர்ந்துக்குவாராம்.

உள்ளே அல்லகைங்க கிட்ட பேசனதும், நம்பளே அன்போட கூப்பிட்டாரு. அடடா என்ன ஒரு கை வேலை 40 வருஷமா ஜனங்களுக்கு மொட்டை அடிக்கிறதுன்னா சும்மாவா!. அத்தினி நேர்த்தி. இந்தினி வருஷ அனுபவத்தில அவரோட கை அத்தினி பக்குவமாயிருச்சி!. ஒரு இழுப்பு. இந்த ஓரமா இருந்த இலங்கை சைடு பர்னரு காலி!. இந்த இப்ப்டி ஒரு இழுப்பு. அந்த ஓரமா இருந்த காவிரி சைடு பர்னரு காலி!. அதுகப்புறம் மோவாகட்டையில ஒரே ஒரு வீச்சு முல்லைப் பெரியாரிலிருந்து, பாலாறு வரைக்கும் அத்தனை தாடியும் காலி!. அப்புறம் தலைமேல ஒரே ஒரு சீவு தமிழனோட முடியிலிருந்து அடி வரைக்கும் காலி!. ஃபர்பெக்ட் “மழிஞர்” மழிஞர். அத்தினியும் காலி பண்ணப்புறம்தான் அவரு முகத்தில சிரிப்பையே பாக்க முடிஞ்சது!

முடிஞ்சதும் வெளிய வரும் போது ஒரு விஷயம் தெளிவாச்சி! அவரு மழிஞர் அல்ல இளைஞர்.

இத்த முடிச்சி கிட்டு அவரு கிளம்பினது பெருங்கவிச்சிபுரம்!. அவருக்கு அங்கேயும் கடை இருக்கு!. இதைவிட ஒரு விஷயம் அவருக்கு முன்னே ஊருக்கு ஊரு கடை இருந்ததா பல வருஷத்துக்கு முன்ன இருந்த பெருசுங்க பெருமையா பேசுவாங்க!. நமக்கெதுக்கு இப்ப அது!.

பெருங்கவிச்சிபுரத்துக்கு போறதுக்கு மழிஞரை ஒரு நாலுருளியில ஏத்திக்கிட்டு போனாங்க.
போவ சொல்லதான் நாலு வார்த்தை பேச முடிஞ்சது.

நல்லாயிருக்கீங்களான்னு நானு கேட்டு வாய மூடல. ஒரே அழுவாச்சி!. எங்கப்பா நல்லாயிருக்கிறது. தீவுக்குப்பத்தில இருக்கிறவங்களுக்கு முன்னெயெல்லாம் நான் மொட்டை அடிச்சிகிட்டுஇருந்தேன். இப்போ ஆளுக்க்கு ஆள் புதுசு புதுசா கிளம்பி அத்தினி பேரும் அவங்களுக்கு மொட்டையடிக்க கிளம்பிட்டாங்க. நீயே சொல்லு பாப்பம்மாவிலிருந்தது, தாசப்பா வரைக்கும் அவங்க தொல்லை தாங்க முடியிலப்பா.
அவங்களுக்கு நான் 1956 லிருந்தே காதுகுத்தி மொட்டையடிக்கிற வேலை நாந்தான் செஞ்சிகிட்டு இருந்தேன்.நன்றி கெட்டவங்க, எக்கேடோ கெட்டு போகட்டும்,அப்படின்னு நான் ஊட்டுல பேசிகிட்டு இருந்ததை எவனோ போட்டுக் கொடுத்துட்டான் போலிருக்கு. அது எல்லாம் உண்மையில்லைபா!. நான் அவங்களை மட்டுமா சொன்னேன் நான் மொட்டை அடிச்ச அத்தினி பேரையுந்தாம்பா சொன்னேன்.

எப்பயுமே வழிச்சிக்கிட்டே இருக்கிறது சிரமமா இல்லையான்னு நானு கேட்டதுக்கு, வாயெல்லாம் ஒரே சிரிப்பா சொன்னாரு. எனக்கென்னப்பா சிரமம்!. எங்கிட்ட மாட்டினவங்களுக்குத்தானே அத்தனை சிரமமும்!.

அதுக்கப்பறம் பேட்டியோட டைட்டில் கேள்விய கேட்கலாமுன்னு கொலவெறி மயிருக்கு எதோ பிரச்சனைன்னு சொன்னீங்களே அப்படின்னேன். அவரு கமுக்கமா அடுத்த வாரம் வர்ற்றீயா இதுக்கு பதில் சொல்றேன்னு சொன்னார்.உடனே நான் அடுத்த வாரம் எங்க வர்றது அதான் வந்து உட்காந்தவுடனே மொட்டையடிச்சிட்டீங்க. அப்புறம் எதுக்கு அடுத்தவாரம் வர்றது இப்பயே சொல்லித்தொலைங்கன்னேன்.

அப்புறம், அவரு சொன்னாரு அவரு மவன் கொலவெறி கடையில பூட்டு காணாம போயிடுச்சாம்!. அதனால கதவை வெறுமனே சாத்திக்கிட்டு மவங்காரரு வீட்டு வந்துட்டாராம் காலையில கடையத் திறந்தா கூடையில கொட்டி வெச்சிருந்த மயித்தை காணோம். நேத்தைக்கும் இந்தமாதிரியே திரும்பவும் ஆயிடுச்சாம். அதான் அதை யாரு எடுத்திருப்பாங்கன்னு யோசனை பண்ணிகிட்டு இருக்கேன், அப்படீன்னாரு.

த்தூன்னு துப்பிட்டு வீட்டுக்கு கிளம்பினேன். இப்போ அதையேத்தானே நீங்களும் செஞ்சிகிட்டு இருக்கீங்க!.

பி.கு: இந்த வாரக் குமுதம் நான் இன்னமும் படிக்கலை

தமிழ்ப்புத்தாண்டை கலைஞர் டிவியின் சிறப்பு நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டாடுங்கள்!

Posted on Tuesday, April 14, 2009 by நல்லதந்தி

sun raising


தமிழ்ப்புத்தாண்டை தை ஒண்ணாம் தேதி கொண்டாட வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்து, எராளமான திராவிட தமிழ்காக்கும் அடிப்பொடிகளின் ஏகோபித்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் பெற்ற தலைவர் கலைஞரின் டிவியில் இன்னிக்கு சித்திரை நன்நாள் சிறப்புக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளாம்.

தலைவரின் கொள்கையே தனிதான். வீட்டுக்கு ஒரு கொள்கை, நாட்டுக்கு ஒரு கொள்கை. தலைவர் மேடையில் கடவுள் இல்லை (இந்து மதக் கடவுள்) என்று கடவுள் நிந்தனை செய்வார்.மனைவியும், துணைவியும் கோவில் கோவிலாக பூஜை செய்து அதற்க்குப் பரிகாரம் செய்து கொண்டிருப்பார்கள். ஊருக்கெல்லாம் தமிழ் புத்தாண்டை மாற்றிக் காட்டினார். கலைஞர் டிவியில் அதற்கு சிறப்பு நிகழ்ச்சிகள். 

அதென்ன சித்திரை நன்நாள் பார்பனர்கள் கண்டு பிடித்த (!)தமிழ் வருடமே மாறிவிட்ட போது அந்த வருடம் உள்ளடக்கிய பார்பன மாதங்கள் ஏன் மாற்றப் படவில்லை. போய்த்தொலையட்டும்.

ஏற்கன்வே வினாயகர் சதுர்த்தி அன்று பிற டிவிக்களெல்லாம் கொண்டாத்தில் ஈடு பட்டு பணம் பார்த்த போது கலைஞர் டிவியும் சும்மா உட்கார்ந்து இருக்கவில்லை, அவர்களும் “விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள்” என்று ஒரு என்னவோ உளறி தேவையான அளவிற்க்கு பணம் பார்த்தார்கள்.

இந்த முறையும் சித்திரை நன்நாள் சிறப்பு நிகழ்ச்சிகளை என்று பினாத்தி காசு பார்க்கப் போகிறார்கள். கொளுகையே எங்கள் கோவணம் என்று ஜனங்களிடம் கதறும் கலைஞர், காசு விஷயத்தில் மட்டும், காசைத்தான் இறுக்கமாக முடிந்து கொள்வாரே தவிர கோவணத்தை யார் உருவினாலும் கண்டு கொள்ள மாட்டார், என்பது மக்களுக்கு நன்றாகத் தெரிந்த விஷயம் என்றாலும், நமக்குத்தான் பார்க்க கண்கூசுகிறது!.

அனைவருக்கும் உளம் நிறைந்த தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்!



இந்திராகாந்தி குடும்பத்து சம்பந்திகளின் தற்கொலைகள்?

Posted on Thursday, April 9, 2009 by நல்லதந்தி


பிரியங்காவின் மாமனார் இராஜேந்திர வதேரா நேற்று தீடீரென்று மரணம் அடைந்தார். அவரது உடல் தூக்கில் பிணமாகத் தொங்கியது. இவ்வளவு தான் செய்தி மேலதிக விவரம் பெரிதாக ஒன்றுமில்லை.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே போல் ஒரு செய்தி சஞ்சைகாந்தியின் மாமனாரும், மேனகா காந்தியின் தந்தையுமான திரு. ஆனந்த் மரணம். இது எப்படி நடந்ததென்றால் அவர் வீட்டில் இருந்து பல கிலோ மீட்டர்கள் தள்ளி ஒரு நெடுஞ்சாலையில் பிணமாகக் கிடந்தார். அவரைக் காணாமல் தேடி இரண்டு நாட்களுக்கு பிறகு நெடுஞ்சாலையில் பிணமாகக் கண்டு எடுக்கப் பட்டார். துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்ததாகச் சொல்லப் பட்டது. அவர் ஏன் தற்கொலை செய்துகொண்டார். எப்படி பல் கிலோ மீட்டர் தொலைவுக்கு, தள்ளி அந்த நெடுஞ்சாலைக்கு வந்தார். என்பதெல்லாம் அப்போது மர்மமாகப் பேசப்பட்டது. 

அன்று சஞ்சைக்கும் அவரது மாமனாருக்கும் சுமுக உறவு இல்லை அதே போல் இப்போதும் பிரியங்கா தம்பதியினருக்கும் செத்தவருக்கும் உறவு சரியில்லை போலிருக்கிறது.

பொதுவாக அரசியல்வாதிகளின் குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை என்றால் பத்திரிக்கைகளும் ஊடகங்களும் வரிந்து கட்டிக்கொண்டு, களம் இறங்குவது வாடிக்கை. ஆனால் ஒரு பெரிய குடும்பத்து சம்பந்தி ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார். இருந்தும் எந்தவிதமான பரபரப்பும் இல்லாமல் ஒரு சாதாரண செய்தியாய் வெளியானது ஆச்சரியாக இருக்கிறது.

நமக்கேன் வம்பு!. இந்தத் தற்கொலை செய்தியை கண்டதும், அந்தத் தற்கொலை சம்பவம் நினைவுக்கு வந்தது!. அவ்வளவுதான்!.


இலங்கைப் பிரச்சனைக்காக மட்டும் வாக்களித்தால்! .....என்னாகும்!

Posted on Sunday, March 29, 2009 by நல்லதந்தி



ஊடகங்களிலும், இணையத்திலும் தமிழகமக்கள் இலங்கைப் பிரச்சனைக்காகவே இந்தப் பாராளுமன்றத்தேர்தலில் வாக்களிக்கப் போவதாக பரபரப்பை ஊட்டிக் கொண்டு இருக்கின்றன. இதனால் இலங்கைப் பிரச்சனையில் தங்களுக்கு பெரும் அக்கறை உள்ளதாகக் காட்டிக் கொள்ள அனைத்துக் கட்சிகளும் தத்தம் சடங்குகளைக் செய்து முடித்து விட்டன. 

இதற்குமுன் பொதுவாக எந்தத் தேர்தலிலும் இலங்கைப் பிரச்சனையை அரசியல் கட்சிகள் முன்நிறுத்தியதில்லை. இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் என்ன செய்யப் போகின்றன என்பது இன்னும் தெரியவில்லை.

ஒரு வேளை தமிழக மக்கள் இலங்கைப் பிரச்சனைக்காகவே வாக்களிக்கப் போவதாக இருந்தால் என்ன நடக்கும்!. அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் சிந்தித்தால் என்ன் ஆகும்!.

திமுக தொண்டர்: இலங்கைப் பிரச்சனையை நினைத்தால் நெஞ்சே பதறுது. வழக்கமாக, தமிழுக்கும், தலைவனுக்கும் தான் உயிர் கொடுத்துகிட்டு இருந்தோம். இப்போ இதுக்கும் சேர்த்தி உயிரைக் கொடுத்துகிட்டு இருக்கிறதைப் பாத்தா நிஜமாகவே எதாவது செய்யணும் போல இருக்கு. பிரச்சனை பெருசானதுக்கு காரணமே காங்கிரஸ்தான் அதனால அதுக்கு ஓட்டுப் போடக் கூடாது. திமுகாவுக்கு ஓட்டு போடலாமுன்னு பாத்தா ஒரு வேளை பி.ஜே.பி ஜெயிச்சி தலைவர் வழக்கம் போல இந்தியாவை மொத்தமா காலி பண்ணலாமுன்னு மந்திரிப் பதவிக்காக தாவ நினைச்சாருன்னா இங்க ஆட்சி போயிடும். திமுக ஜெயிச்சாதானே இந்தப் பிரச்சனை. தலைவரோட ஆட்சியை காப்பாத்த வேறகட்சிக்குத்தான் ஓட்டு போடணும். 

அதிமுகாவுக்கு போடக் கூடாது. தேமுதிகவுக்குப் போடலாமா? வேணாம் அப்புறம் அவங்க வளந்துட்டா, நம்ம ஸ்டாலின், ஸ்டாலினோட மகன்,அழகிரி, அழகிரியோட மகன்,மகள், க்லாநிதி, கனிமொழி, அவுங்க மகன், மு.க.முத்து, அவுங்க மகன், தயாநிதி, அன்புநிதி, அறிவுநிதி,உதயநிதி, இம்சைநிதின்னு இன்னும் எத்தனை நிதி இருக்காங்களோத் தெரியிலை. அத்தனை பேரும் வசதியில்லாம நடுத்தெருவுக்கு வந்து கஷ்டப் படுவாங்க. விஜயகாந்தோட மாமன் மச்சானுங்கதான் நல்லா இருப்பாங்க. 

தமிழனை தமிழந்தான் அழிக்கணுங்கற கொள்கை என்னாகும். அப்போ மிச்சம் இருக்கிறது பி.ஜே.பி தான் அவுங்களும் இலங்கைப் பிரச்சனையில ஆர்வமாத்தான் இருக்காங்க. போனாப் போயிட்டு போவுது இந்த தடவை அவங்களை ஜெயிக்கவெச்சு இலங்கை பிரச்சனையை தீர்த்து புடலாம்.

அதிமுக தொண்டர்: இலங்கைப் பிரச்சனையைத் தீர்க்க என்ன பண்றது. நம்ம கட்சிக்கு ஓட்டு போட்டா ஒரு அம்மா மூணாவது அணி நாலாவது அணின்னு போயிட்டாங்கன்னா?. அதுக்கப்புறம் அந்த அணிப்பிரச்சனையைத் தீர்க்கவே நேரம் போயிடும். இலங்கைப் பிரச்சனைக்கு அம்மாவால நேரத்தை ஒதுக்கவே முடியாதே!. 

இந்த மூணாவது அணியச் சேர்க்கிற தேவகவுடா கும்பல் நல்ல காலத்திலேயே தமிழனுக்கு நல்லது செய்ய மாட்டாங்க. மூணாவது அணியை நம்புறது வேஸ்ட். காங்கிரஸுக்கு எப்படி போடறது இலங்கைப் பிரச்சனையில எதிரியே இவங்கதானே, அப்புறம் தானே இராஜபக்‌ஷே. திமுகவுக்கு நான் சுடுகாடு போனாலும் ஓட்டு போடமாட்டேன். 

விஜயகாந்து, ச்ச்சீ வேணாம். இந்த ஆளுக்கு என்னமோ நம்ம அம்மான்னு நினைப்பு. நான் கையை நீட்டறவனுக்கு ஓட்டு போடுன்னு சொல்றாரு. அம்மா டயலாகை அம்மா மட்டும் தானே பேசணும். அப்புறம் மிச்சம் இருக்கிறது. பி.ஜே.பி தான்!. சரி ஓட்டு ஏன் வேஸ்டா போவுணும் நான் போடாட்டாஅப்புறம் அழகிரி கும்பல் எப்படியும் போட்டும். அதனால பி.ஜே.பிக்கே போட்டு வைக்கலாம். 

ஒருவேளை எலக்‌ஷன் முடிஞ்சி அவங்க ஆட்சிக்கு வந்தா கருணாநிதி கவர்மெண்ட்டை டிஸ்மிஸ் செய்ய வைக்க அம்மா. பி.ஜே.பி யோட சேர்ந்தாலும் சேரலாம்.  அதனால இலங்கைப் பிரச்சனையும் போனாப்போவுதுன்னு தீர்ந்தாலும் தீரலாம்.

காங்கிரஸ் தொண்டர்: என்னய்யா இது!  எவனைக் கேட்டாலும் காங்கிரஸ் தான் இலங்கைப் பிரச்சனைக்குக் காரணமுன்னு சொல்றானுங்க். நம்ம ஆளு ஒருத்தன் தீக்குளிச்சி செத்தபுறம் விட்டுடிவானுங்கன்னு நினைச்சா!, அது இன்னும் வேகத்தை கிளப்பிடுச்சி!. அந்தாளு தீக்குளிச்ச மாதிரி நானும் தமிழந்தான்னு நிரூபிக்க காங்கிரசுக்கு ஓட்டு போடாம இருந்தாத்தான் ஆவும் போலிருக்கு!. 

யாருக்குப் போடலாம் திமுகவுக்கு போட முடியாது. மொத்தப் பிரச்சனையும் அந்தாளாலேதான். அவரு நல்லவராகாட்டிக்க மொத்தப் பழியையும் காங்கிரஸ் மேல தானே போடறாரு!. இல்லேன்னா இந்த திருமாவளவன் காங்கிரஸ் ஆபிஸிலையே நம்மளை அந்தக் குத்து குத்துவாரா?. இதுக்கா வேண்டியே திமுக வுக்கு வோட்டு கிடையாது. 

அம்மாவுக்குப் போடலாமா?. அது நல்லாத்தான் இருக்கும் ஆனா அவரு சோனியாவைப் பத்தி பல உண்மைகளை ஜனங்ககிட்டயே சொல்லிடறாரு. காங்கிரஸ் கொள்கையேஅவருக்குத் தெரியிலை. நாம ஆபிஸூக்குள்ளாறதானே அடிச்சுக்குவோம். 

தேமுதிக வுக்கு போடலாமுன்னா அந்தாளு நம்ப வெச்சி கழுத்தறுக்கிற பாலிஸியே நம்ப கிட்டயே காட்டுறாரே!. அது காங்கிரஸுக்குத் தானே சொந்தம். சிறுத்தைகளுக்கு எப்படி போடறது. அவனுங்க குத்தின குத்து இன்னும் வலிக்குதே!. பா.ம.க வேணாம், நம்ப குணம் அப்பிடியே இருக்கு!. 

மீதி... பி.ஜே.பி தான் ...அதான் நல்லது நாம பண்ணின குழறுபடியை அஞ்சி வருஷம் உக்காந்து கஷ்டபட்டு சரி செஞ்சி அதனால ஜனங்ககிட்ட கெட்ட பேரு எடுத்திகிட்டு வரட்டும். அப்புறம் நாம ஜாலியா உக்காந்துகிலாம். அதனால பி.ஜே.பிக்கே ஓட்டு போடலாம். நாட்டுப் பிரச்சனையோட, இலங்கைப் பிரச்சனையும் சேத்தி வெச்சிகிட்டு திண்டாடட்டும்.

தேமுதிக தொண்டர்:  இவரு கை காட்ற இடத்தில குத்தலாமுன்னா அங்கே என்னா இராஜபக்‌ஷே மூக்கா இருக்கு?.... ஆங்!..போன சட்டசபை எலச்ஷனிலேயே ஒரேஒரு தொகுதி தானே கெலிச்சாரு?. மேலே இருவுரு போனாலும் ஒண்ணியும் நடக்காதுன்னு தெரியுது. ஆங்!...அப்புறம் போய் மேல இருக்கிறவுங்களைக் கெஞ்சணும்.  அங்க காங்கிரஸ் தான் பிரச்சனையன்னா அடுத்தாப்புல வர்றது பி.ஜே.பி தானே. நமக்கு இலங்கை பிரச்சனைய தீக்கிறத்துக்கு அடுத்தாப்புல யாரு மேல வர்றாங்களோ அவிங்கதானே? ஆங்....

நாம எப்படியும் தமில் நாட்டில தானே ஆச்சி பன்ன போறொம் . அண்ணனும் இந்தத் தேருதல்ல நிக்க மாட்டேன்னுதானே சொன்னாரு!.அப்ப இந்த ஓட்டு அண்ணனுக்கு எதுக்கு போட்டுகிட்டு, நாம்பளே,  அது வேணாம், இதுவேணாமுன்னுட்ட்டு தானே இவருக்கு ஓட்டு போடறோம். அதானால சும்மா போற உடம்புல பம்பரம் விட்டாக்க தப்பு இல்லன்னு தலைவர் சொன்னா மாதிரி வீணாப் போற ஓட்டை வீணாப் போற பி.ஜே.பிக்கே போட்டுறலாம் ஆங்...... 

பா.ம.க. தொண்டர்: ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா! என்னால தாவ முடியில!. ஒரு தடவை தாவினா....சரி போவட்டும்ன்னு விட்டிடலாம். இத்தினி தாவுக்கு ஒடம்பு தாங்கிலயே!. அன்பு மணி அண்ணணாவது மல்டி ஸ்பெஸாலிடி ஆசுபத்திரிக்கு வந்து நம்பளை விசாரிச்சி இருக்கலாம்.  நம்ப கொள்கையே இ.காங்கிரஸின் வாரிசு கொள்கையைத்தானே எதித்து இருந்திச்சி!. மோதிலாலாம், சவகருலாலாம், அப்புறம் இந்திராவாம், சன்சையாம், பின்னே இராசிவாம். இதை எதிர்த்துதானே அரசியலைத் தொடங்கினோம். இதே வாரிசு அரசியல் என் கட்சியில் நடந்தால் சவுக்கால அடிப்போம், முச்சந்தியில் உதைப்போம் முன்னு சொன்னீங்க!. 

இப்ப உங்க வூட்டாளுங்களைத் தவிர யாரும் வரமுடியிலையே!. சவுக்க எங்கே ஒளிச்சி வெச்சிருகீங்கன்னே தெரியலை. நீங்களே மொத்த காங்கிரஸ் கொள்கையையும் குத்தகைக்கு எடுத்து இருக்கீங்க!.சரி விடுங்க. இலங்கைப் பிரச்சனைக்காக நீங்க இந்த காங்கிரஸ் அரசை விட்டுட்டு முன்னாடி வந்து இருக்கலாம், அதையும் நீங்க பண்ணலை. பண்ணவும் மாட்டீங்க!. வேற எதுக்கு ஓட்டு போடலாமுன்னு பாத்தா காடு வெட்டிய கண்டம் பண்ணதால திமுக வேணாம். 

அம்மா இப்பத்தான் இலங்கைப் பிரச்சனையில் நுழைஞ்சதாலே அதிமுகவும் வேணாம். தேமுதிக நம்ப பரம்பரை எதிரி அதனால அதுவும் வேணாம். மிச்சமிருக்கிறது, பி.ஜே.பி தான். அதுக்கே போட்டுத் தொலையுறேன். இதிலையும் நம்ப கொள்கைதான் நீங்க காங்கிரஸை எப்பவுமே கன்னா பின்னான்னு திட்டி இருக்கீங்க!. இது வரைக்கும் பி.ஜே.பி யை திட்டி நான் பாத்ததே இல்லை. நீங்க பிற்பாடு ஒட்டறதுக்கு வசதியாயிருக்குமுன்னு அதுக்கே ஓட்டு போடப்போறேன்.

திருமாவளவன் தொண்டர்: அண்ணன் சொல்லறது காங்கிரஸை அழிக்கணுமுன்னு, அப்போ காங்கிரஸசுக்கு ஓட்டு போடக்கூடாது. அதனால காங்கிரஸ் கட்டிக் காப்பத்திற அரசுக்கும் ஓட்டு போடக்கூடாது. அப்படியன்னா அது திமுக அரசு!. ..சரி திமுகவுக்கும் ஒட்டு கிடையாது. மிச்சம் இருக்கிறது நம்ப அண்ணன், அவர் திமுக சப்போர்ட் அதனால அண்ணன் சொன்னபடி அவ்ருக்கே கூட ஓட்டு போடகூடாது. வேற யாருக்குப் போடலாம். 

அம்மாவுக்குப் போடலாமுன்னா அண்ணனுக்குத் தெரிஞ்சா பிரச்சனையாயிடும்.  தேமுதிகவுக்கு போடலாமா? .. வேணாம். அவரு பா.ம.கா வுக்கே பிரச்சனையாவும் போது நமக்கும் பிரச்சனையாவலாம். சரி... இருக்கவே இருக்கு பி.ஜே.பி. அவங்களுக்கு ஓட்டு போட்ட நாளைக்கு நமக்கு எந்தப் பிரச்சனையும் வராது. அப்படியே தெரிஞ்சதுன்னாலும், ஒரு வேளை அவுங்க மேலஆட்சி புடிச்சிட்டா நம்மளை அண்ணணே பாரட்டுவாரு!. காங்கிரஸ் எதிரின்னா பி.ஜே.பி நண்பன் தானே!

பி.ஜே.பி தொண்டர்: அப்போ இலங்கையில எதோ பிரச்சனை இருக்கத்தான் செய்யும் போலிருக்கு!. இல்லையன்னா நம்ம தலைவருங்க அறிக்கை விடுவாங்களா?. எதா இருந்தாலும், நாம பி.ஜே.பிக்குதான் ஓட்டு போடணும். 

அவுங்களுக்கு நம்மை உட்டா வேற யாரும் கதி இல்லையே!. நமக்கும் தமிழ் இரத்தம் தானே ஓடுது!. இலங்கைப் பிரச்சனையை நாம தீர்த்தே ஆகணும். நாம ஆட்சிக்கு வந்தா இந்தப் பிரச்சனையைத் தீர்க்காட்டியும் அடுத்த ஆட்சி வர்ற வரைக்கும் பிரச்சனையில்லாம மெயிண்டைன் பண்ணா பத்தாதா?. அப்புறம் அவங்களாச்சி பிரச்சினையாச்சி!.

எலக்‌ஷன் முடிஞ்சி ரிசல்ட் அன்னிக்கு “ அண்மைச் செய்தி” .

40 தொகுதிகளில் நிற்க ஆளில்லாமல் தடுமாறித்தவித்து பிறகு பி.ஜே.பி பல கட்சிகளைத் தயாரித்து கெளரவத்திற்கு கூட்டணி அமைத்துக் கொண்டது தெரிந்ததே!. தற்போது நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அக்கட்சியும் அதனுடைய கூட்டணி கட்சிகளும் அமோக வெற்றி பெற்றுள்ளன. 

ப.ஜ.க - 20 ( பாரதீய ஜனதா கட்சி)

அ.இ.ச.ம.க (?) ( ஸ்ஸ்ஸப்பா)-  அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி  சரத்குமார் பிராண்ட் - 10

அ.இ.ந.க(?) (ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா)- அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி  கார்த்திக் பிராண்ட் - 10

மொத்தம் நாற்பதிற்கு நாற்பது வென்றுள்ளன!

கொட்டாவி விடுவதற்காகவாவது வாயைத் திறந்திருக்கலாம்!

Posted on Friday, March 27, 2009 by நல்லதந்தி





பாராளுமன்றத்தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. புதிதாக எம்.பி ஆகும் ஆசையுள்ளவர்கள் பணத்தைக் காட்டி சீட்டு வாங்க பறப்பதும், ஏற்கனவே எம்.பி ஆக உள்ள பழம் பெருச்சாளிகள் பணம் + தாங்கள் தொகுதிக்குச் செய்த சாதனைகளையும்(?) சொல்லி சீட்டு வாங்கத் துடிக்கிறார்கள்.

ஆனால் நமது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திரு. தங்கபாலு செய்த சாதனை என்னத் தெரியுமா? 

பாராளுமன்ற இணையதளம் தருகிற தகவல்களின்படி, இரு தமிழக எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் எந்தக் கேள்வியையும் எழுப்பவில்லையாம். அவர்களில் ஒருவர் தமிழக காங்கிரஸ் தலைவரும், சேலம் தொகுதி எம்.பியும், இரண்டு முறை இணை அமைச்சராக இருந்த திரு.தங்கபாலு!. 

ஒருவேளை இந்தச் சாதனையைச் சொல்லித்தான் இந்த முறை ஓட்டு கேட்கப் போகிறாரோ?. அட பேச வேணாம், ஒரு கொட்டாவி விடுகிறதுக்காகவாவது வாயைத் திறந்திருந்தால் இந்த பேச்சு வந்து இருக்குமா?. 

கலைஞருக்கு மட்டுமே தெரிந்த இரகசியங்கள்!

Posted on Sunday, March 22, 2009 by நல்லதந்தி




1. கலைஞர் அய்யா ஸ்டாலினை மதுரை ஒருவர் கொல்லப் பாய்ந்தார், அதுனால ஸ்டாலின் அவர்களோட பாதுகாப்பு பூனைப்படை, ஆனைப்படையெல்லாம் போட்டீங்க சரி... அப்புறம் அந்த ஒருவரு என்ன ஆனாருங்க!. அவரைக் கண்டு பிடிக்கப் போட்ட போலீஸ் அதிகாரி என்ன ஆனாருங்க?.

2. அதே மதுரையில தினகரன் பத்திரிக்கைய யாரோ அடிச்சி நொறுக்கி தீ வெச்சாங்களே!. அதுலகூட ஒரு மூணு பேரு செத்தாங்களே. அதுக்கப்புறம்... அந்த பத்திரிக்கை ஆபீஸெ ஏன் நொறுக்குனாங்க, ஏன் அந்த மூணு பேரக் கொன்னாங்க அப்படின்னு நம்ம போலீசுகாரங்க கண்டு பிடிக்க ரொம்ப திணறுராங்கன்னு அனுதாபப் பட்டு சிபிஐ இதை விசாரிக்கட்டும்னு சொல்லி சிபிஐ கிட்ட ஒப்படைச்சீங்களே சிபிஐ காரங்க எதாவது கண்டுபிடிச்சி உங்கக்கிட்ட சொன்னாங்களா?

3. ஒகேனக்கல் பிரச்சனையில் முதுகெலும்பை முறிச்சாலும் விடமாட்டோமன்னு சொல்லி சில நடிகர்களோட முதுகையும், சில டைரக்டருங்க முதுகையும் கர்நாடகாப் பக்கம் போக விடாம நீங்க முறிச்சீங்களே!. அதுக்கப்புறம் கர்நாடகாவில எலக்‌ஷன் முடிஞ்சதும் ஒகேனக்கல் திட்டத்தை முடிப்போமுன்னு சொன்னீங்களே கர்நாடகாவில எலக்‌ஷன் முடிஞ்சி ஒரு வருஷம் ஆகப்போகுதே, இன்னும் எலக்‌ஷன் முடிஞ்ச தகவல் இன்னும் உங்களுக்குக் கிடைக்கலையா?

4. ஜனாதிபதி எலக்‌ஷனப்போ திருமதி.பிரதீபா பாட்டிலை நிறுத்த முடிவு செஞ்சப்போ, தமிழனான திரு.அப்துல் கலாமுக்கு ஆதரவு தராம இருக்க, பிரதீப் பாட்டீல் இன்ன இன்ன செய்வார் அப்படின்னு பட்டியல் போட்டீங்க. அதுல பிரதீப் பாட்டீல் ஜனதிபதியா ஆனா “மகளீர் இட ஒதுக்கீடு” மசோதாவிலதான் முதல் கையெழுத்து போடுவாருன்னு சொன்னீங்க. பிரதீப் பாட்டீல் இன்னும் முதல் கையெழுத்து போடலையா?. அதில எதாவது தகவல் உங்களுக்குத் தெரியுமா?

5. உங்க அமைச்சரவையில அமைச்சரா இருந்தாரே தா.கிருட்டிணன். அவரு கொலையில உங்க மகன் உட்பட பல பேர் குற்றவாளிகளா இருந்தாங்க. என்ன நடந்திச்சின்னு தெரியலைங்க. அதில யாருக்கும் சம்பந்தமில்லையன்னு எல்லோரும் விடுதலையாயிட்டாங்க. அப்போ தா.கிருட்டிணன் நடு ரோட்டில அரிவாளாலாலே தன்னைத் தானே வெட்டிக் கிட்டு தற்கொலை செஞ்சிக்கிட்டாராங்க?

5. ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சனை முடிஞ்சு போன விஷயம் அப்படின்னு நீங்க சொன்னவுடனே பத்திரிக்கைகாரங்களும் நம்பிக்கிட்டு இப்போ அதைப் பத்தியெல்லாம் பேசறதே இல்லை. நிஜமாவே ஸ்பெக்ட்ரம் பிரச்சனை முடிஞ்சு போச்சா?. இவ்வளவு வேகமா பிரச்சனையை தீர்க்கிற நீங்க இலங்கைப் பிரச்சனையும் முடிஞ்சி போச்சு அப்படின்னு சொல்லிட்டா பத்திரிக்கைகாரங்க நம்ப மாட்டாங்களா?. ஏங்க இன்னும் சொல்லாம இருக்கீங்க?

6. அழகிரியும் முரசொலி மாறனுடைய மகன்களும் அடிச்சிக் கிட்டு இருந்தப்போ குடும்ப விஷயத்தைப் பக்கம்பக்கமா பத்திரிக்கையில கவிதையாவும், கட்டுரையாவும் அழுதுகிட்டும் மாறன் கும்பலை திட்டிகிட்டும் எழுதினீங்க, இப்போ அவங்க ரெண்டு பேரும் எந்த விஷயத்தால ஒண்ணு சேந்தாங்கன்னு ஏங்க எழுத மாட்டேங்கிறீங்க?

7. பூங்கோதை அப்படின்னு ஒரு அமைச்சர், வழக்கம் போல அவர் அமைச்சரின் அன்றாட பணியைச் செய்ததால நீக்கினீங்க. அவருடைய செயல் உங்களை மிகவும் அவமானப் படுத்துவதாகவும் சொன்னீங்க. திரும்பவும் உங்க அமைச்சரவையில சேர்த்துக் கிட்டு இருக்கீங்க்களே!. அவர் செஞ்ச செயலால உங்களுக்கு ஏற்பட்ட அவமானம் போயிடுச்சாங்களா?. அந்த அவமானத்தை கழுவ அவர் உபயோகிச்ச “சோப் ”என்னாங்க?

8. தமிழைச் செம்மொழியாக்குவோம் அப்படின்னு அடிக்கடி ஜனங்களை உசுப்பேத்துவீங்களே, இப்போ தமிழ் செம்மொழியாகி ரெண்டு, மூணு வருசமாயிடுச்சீங்களே. அதனால தமிழுக்கு என்ன நன்மை கிடைச்சதுன்னு இன்னிய வரைக்கும் யாருக்கும் தெரியலைங்க?. உங்களுக்கு எதாவது நன்மை கிடைச்சுதாங்களா?

9. முல்லைப் பெரியாறு, பாலாறுன்னு அடிக்கடி பேசுவீங்களே, இப்போ வாயையே நீங்க திறக்கரதில்லையே? ஏங்க!... பாலாற்றில ஆந்திர காங்கிரஸ் அரசு எல்லாத் தடுப்பணையையும் கட்டி முடிச்சப்புறம் தான் பேசுவீங்களா?

10. கடைசியா .. நீங்க சில விஷயத்துக்கு உயிரை கொடுக்கிறேன்னு சொல்லும் போது எனக்கே சிரிப்பாயிடுதுங்க. நீங்க உங்களோட அறிக்கையை எழுதும் போது நீங்க மட்டும் சிரிப்பீங்களா? அல்லது அதை நம்புற தமிழர்களை நினைச்சி உங்க வீடே சிரிப்பாச் சிரிக்குமா?

பாராளுமன்றத்தேர்தலில் திமுக-காங் கூட்டணியை வெற்றி பெற வைக்கக் காரணங்கள்!

Posted on Tuesday, March 17, 2009 by நல்லதந்தி



பாராளுமன்றத்தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியை வெற்றி பெறவைத்தாக வேண்டும். அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் கலைஞர் சொல்லும் காரணங்கள் நமக்கும் மிகவும் நியாயமாகப் படுகின்றன.

மாநிலத்திலும், மத்தியிலும் ஒரே கூட்டணி ஆட்சி இருந்தால் பல நன்மைகள் தமிழகத்திற்குக் கிடைக்குமாம். தமிழகத்தின் நலனுக்காக மத்திய அரசை மிரட்டி மிரட்டி பல சலுகைகள் பெறலாமாம். முக்கியமான இலாகாக்களைப் பெற்று தமிழகத்தை முழு மூச்சாக முன்னேறச் செய்யலாமாம்.
எனவே ஒட்டு மொத்த தமிழக நலனுக்குக்காக அரசியல் மாறுபாடு இல்லாமல் இந்தக் கூட்டணிக்கே வாக்களிக்க வேண்டுகிறோம். இந்த வெற்றியால் தமிழகத்திற்கு கிடைக்கும் நன்மைகளாவன. பின் வருமாறு:

முல்லைப் பெரியாற்றுப் பிரச்சனையில் தமிழகத்திற்கு சாதகமாக மத்திய அரசு நடந்து கொள்ளும் இல்லாவிட்டால் மத்திய அரசின் சிண்டையைப் பிடித்து உலுக்கப் படும்.

காவிரிப் பிரச்சனை மத்திய அரசால் தமிழகத்தின் பக்கமாக தீர்க்கப் படும்.

பாலாற்று பிரச்சனையில் மத்திய அரசு தமிழகத்தின் நலனுக்காகப் பாடுபடும்.

ஒகேனக்கல் பிரச்சனையில் தமிழகத்தின் நலன் காக்க தீர்ப்பு கொடுக்கப் படும்.

சேது சமுத்திரத் திட்டம் ஒரே நாளில் முடிக்கப் படும்.

இலங்கைத் தமிழர் பிரச்சனை ஒரு வாரத்தில் தீர்த்து வைக்கப் படும்.

சேலம் இரயில்வே கோட்டத்திற்கு கட்டிடங்கள் கட்ட எப்படியாவது 50 எக்கர் நிலம் கண்டு பிடிக்கப் படும். சேலத்தில் எங்குமே நிலம் இல்லாவிட்டால் கொட நாட்டில் ஜெயலலிதா வளைத்துப் போட்டுள்ள மக்கள் எஸ்டேட்டில் இருந்து 50 ஏக்கர் பறிமுதல் செய்து கோட்டத்துக்காக வழங்கப்படும்.

கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு மத்திய அரசால் நிதி ஒதுக்க வைக்கப்படும்.

என்னையா இது கிண்டல் பண்றீங்களா!, என்கிறீர்களா அப்பாவி மக்களே!.....

2004-ல் பாராளுமன்றத்தேர்தல் பிரச்சாரத்தில் கலைஞரும், அடிப்பொடிகளும் மேற்கண்ட வாக்குறுதிகளை அள்ளி வீசினர். வாக்குறுதிகளின் ஃபார்மெட் கொஞ்சம் முன்னே பின்னே மாறி இருக்கலாம்.

அந்த தேர்தல் முடிந்து 40 தொகுதிகளும் உங்களுக்கே என்று மக்கள் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு அள்ளிக் கொடுத்தனர். மாறக இந்த கூட்டணி கும்பல் மக்களுக்கு, நாற்பது எங்களுக்கு, நாமம் உங்களுக்கு என்று நடத்திய நாடகத்தை எல்லோரும் அறிவார்கள்.

மேற்கண்ட ஆட்சி முடிந்து அடுத்த தேர்தலும் வந்து விட்டது. இந்தத் தடவையும் இந்தக் கும்பல் இதே வாக்குறுதியுடன் ஓட்டுக் கேட்க வருவார்கள் என்பது நிச்சயம்.

கலைஞரைப் பொறுத்தவரை இந்த வாக்குறுதிகளை 2014 பாராளுமன்றத்தேர்தலிலும் உபயோகப் படுத்துவார். சொன்னதைச் செய்வார், செய்வதைச் சொல்வார் எங்கள் சொல்லின் செல்வர் கலைஞர்!.

சொன்னது போலவே திருமங்கலத்தில் அச்சடித்தாற் போல நாற்பதாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தனர். ஸ்பெக்ட்ரம் போல பல ஊழல்களைச் சொல்லாமலேயே செய்தனர்.

 கலைஞர் இந்த ‘பஞ்ச்’ டையலாகைப் பயன் படுத்துவதை விட , ‘என்றைக்கும் “வாக்கு” மாறமாட்டார் எங்கள் கலைஞர்’ என்ற பஞ்ச் டையலாகைப் பயன் படுத்தலாம். கொஞ்சம் பொருத்தமாக இருக்கும். :)

மக்கள் “நலன்” என்று சொல்லிப் பாருங்கள் உதடுகள் ஒட்டாது. மக்களுக்கு “நாமம்” என்று சொல்லுங்கள் உதடுகள் பச்சக்கென்று ஒட்டும். ஒற்றுமையே பலம் என்று விளக்குவதற்காக கூட்டணி கும்பல்களிடம் இந்த பொன்மொழியை வாழும் வள்ளுவம் உபயோகிக்கலாம்.

வாழ்க கலைஞர்!, வளர்க மக்களின் மறதி!

துக்ளக் சோ இராமசாமியும் அவருடைய ஆய்ந்த ஆண்மையும்!

Posted on Sunday, March 15, 2009 by நல்லதந்தி



இந்த வாரம் ஜெயா டிவியில் திரும்பிப்பார்க்கிறேன் என்கின்ற நிகழ்ச்சியில் “சோ” வின் மலரும் நினைவுகளைக் காட்டினார்கள்.
திங்கள் முதல் வெள்ளி வரை என்றாலும் அந்த நிகழ்ச்சி நிமிடத்தில் முடிந்தது போல் ஒரு உணர்வு. சோவின் நகைச்சுவை உணர்வும், தைரியமும்,  நமக்கு தெரிந்ததுதான் என்றாலும், அதை அவர் வாயாலேயே சில சம்பவங்களைச் சொல்லக் கேட்கும் போது நமக்கு எற்பட்ட மகிழ்ச்சியே தனிதான்!.

காமராஜருடன் அவருக்கு ஏற்பட்ட மோதலை அவர் விவரித்தார். அவருடைய நாடகத்திற்கு அரசு அனுமதி தராத சூழ்நிலையையும் (அப்போதெல்லாம் போலீஸ்தான் அனுமதி தர வேண்டுமாம்), பிறகு அவர் அதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தவுடன், அரசு வழக்கறிஞர் போன்றவர்களே அரசு பக்கம் நியாயம் இல்லை. அதனால் சோ பக்கம்தான் தீர்ப்பு ஆகும் எனவே, அவ்ருடைய நாடகத்திற்கு அனுமதி தந்துவிடுவதுதான் உத்தமம், என்று கூற, பிறகு அனுமதி வழங்கியிருக்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில், ...அப்போது நிச்சயமாக தமிழகத்தில் காங்கிரஸ் அரசுதான் இருந்து இருக்கும். ஆனால் முதல்வர் காமராஜரா..பக்தவச்சலமா.. தெரியவில்லை. நிகழ்ச்சி நடந்த சமயம் சோ புகழ் பெறுவதற்கு முந்தைய காலமென்றால் (அதாவது திரைப் படங்களில் ,..நாடகத்தைப் பொறுத்தவரை அவர் அப்போதே புகழ் பெற்றுதான் இருந்தார்)நிச்சயமாக அப்போதைய முதல்வர் காமராஜராகத் தான் இருக்க வேண்டும்.

அன்றைய நாடகத்திற்கு சிறப்புவிருந்தாளி திரு. காமராஜர். அருகில் வந்தமர்ந்த சோ வும் காமராஜரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நாடகத்திற்கு அரசாங்கம் அனுமதி வழங்க வில்லை, ஆனால் சோ போராடிபெற்று இருக்கிறார் என்று அப்போது பேசிக்கொண்டிருந்த திரு.ஜெமினி கணேசன் சொன்ன போது காமராஜர் சோ விடம் கேட்கிறார், இதுநிஜமா? என்று சோவும் ஆமாமென ஆமோதிக்க ஆரம்பிக்கிறது பிரச்சனை.

காமராஜர் சோவிடம் நீ அதிகப் பிரசங்கித்தனமாக எதோ எழுதியிருப்பாய் அதனால்தான் அதிகாரிகள் அனுமதிவழங்க மறுத்திருப்பார்கள் என்று சொன்னார். நான் இந்த நாடகத்தில் இதுவரை எந்த மாற்றமும் செய்யவில்லை, அப்படியிருக்க எதனால் அதிகாரிகள் அனுமதி வழங்கினார்கள் என்று கேட்க,இருவருக்கும் நடந்த வாக்குவாதத்தில் காமராஜர் சோ விடம் கோபித்துக் கொள்ள, அந்த நிறைந்த அரங்கத்தில் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே காமராஜர் அரங்கை விட்டு எழுந்து போய்விட்டார்.

மறுநாளில் இருந்து சோவிற்கு அலுவலகத்திலும்,அவருடைய வீட்டிலும் பல பிரச்சனைகள். (இன்றைய முதல்வர் ஏற்படுத்துவது போல் அல்ல! :)காமராஜருக்கும் அந்தப் பிரச்ச்னைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.) ஆனாலும் தான்செய்த்தது சரியே என்ற நிலையிலேயே சோ நின்றார். அந்த அளவிற்கு மாபெரும் ஆண்மையாளர் திரு.சோ. விஷயம் என்ன ஆனது என்கிறீர்களா!. இந்தப் பிரச்சனையில் திரு.காமராஜரே தலையிட்டு சோ வின் மீது குற்றமில்லை என்று சொன்ன பிறகு தீர்ந்தது.

இன்னொரு சம்பவம் இயக்குனர் திரு.நீலகண்டன் ஒரு முறை சோவிடம் உன்னுடைய பத்திரிக்கை எப்படி போகிறது என்று கேட்க, சோவும் நல்லமுறையில் போகிறது என்றுசொன்னார். கலைமகள் பத்திரிக்கை எப்படிப்போகின்றதென அவர் கேட்க சோவும் சுமாராகப் போகிறது என்று சொன்னார். அடுத்து மஞ்சரி எப்படிப் போகிறதென்று அவர் கேட்கசோவும் அதுவும் சுமாராகப் போகிறது என்று சொன்னார்.

அத்தோடு நீலகண்டனுடைய வாய் சும்மாஇருந்து இருக்கலாம்.  வாயைக் கொடுத்து வேறெதையோ புண்ணாக்கிக் கொள்வதைப் போல, துக்ளக் போன்ற பத்திரிக்கையெல்லாம் நன்றாகப்போகின்றன. ஆனால் கலைமகள் போன்ற நல்லப் பத்திரிக்கையெல்லாம் சரியாகப் போவதில்லைப் போலிருக்கிறது என்றார்.

அப்போது, திரு.எம்.ஜி.ஆர் பக்கத்தில் இருக்கும் போதே சோ சொன்னது பல நல்லப் படங்கள் எல்லாம் ஓடாமல் போகும் போது “என் அண்ணன்” எப்படி ஓடுகிறதோ அதைப் போலத்தான். எம்.ஜி.ஆர் பக்கத்தில் இருக்கும் போது இப்படி சொல்ல என்ன’தில்’ வேண்டும். சோ இப்படிச் சொன்னவுடன் என்.ஜி.ஆரே சிரித்து விட்டு நீலகண்டனிடம், இவரிடம் வாயைக் கொடுத்து உங்களால் மீளமுடியுமா? என்றுக் கேட்டாராம்.

இதையெல்லாம் எதுக்கு சொல்றே அப்படின்னு கேட்கறீங்களா?. சமீபத்தில் ஆண்மையைப் பற்றி ஒரு பேச்சு வந்த போது இது தேவையில்லாமல் நினைவுக்கு வந்தது.
திமுக தலைவர்களைப் போல் ஒண்ணுக்கு மூணு கட்டுறதுதான்...மன்னிக்க .. சேர்த்துகிறது ஆண்மையோ என்னவோ தெரியிலையே. அல்லது உயிரைக் கொடுப்பேன் அப்படின்னு சொல்லறதுதான் ஆண்மையோன்னு தெரியிலை (அம்மா! கொல்றாங்களே இதிலெ சேர்த்தியில்லை! :) )

1975-ல் இந்திராகாந்தி நெருக்கடி நிலையைக் கொண்டு வந்த போது கூட வாய் திற்க்கப் பயப்பட்டவர்கள்,ஆட்சியைக் கலைத்து விடுவார்களோ என்று பயப்பட்டவர்கள்.இத்தனைக்கும் அன்றைய திமுக அரசுமுடிய ஒரிரு மாதங்களே இருந்த நிலையில், (ஒரு நாள் கூட பதவியில்லாமல் இருக்க முடியாதில்ல)  ஆட்சியை கலைத்தவுடன் மிசா,கிசா என்று பட்டம் போட்டு புலம்பிய ஆண்மையாளர்களுக்கு மத்தியில் நெருக்கடி நிலையை எதிர்த்த (குமுதம், ஆனந்த விகடன் போன்ற பத்திரிக்கைகள் இதை ஆதரித்துத்தான் பிழைப்பை ஓட்டின) ஆண்மையில்லாத சோ போன்றவர்கள் நாட்டுக்குத் தேவை.

எதாவது பொழுது போகாத பெருசைக் கேட்டுப் பாருங்க. சும்மா இந்தப் பொழப்பு பொழைக்கிறதுக்கு உசிரை விட்ருலாங்க, அப்படிம்பார் அந்த மாதிரி சும்மா பெனாத்துரதுதான் ஆண்மையின்னா..... (கலைஞருன்னா உயிரை நமக்காகத் தருவதாகச் சொல்வார், அதை வெச்சிக்கிட்டு என்னாங்க பண்றது! :) ) .........என்னத்த சொல்றதுங்க!.

(துக்ளக்கில் சிட்டுக்குருவி லேகிய விளம்பரங்கள் வருவதற்குக் காரணம் ஒரு வேளை திமுகவினர் விடாமல் படிப்பதால் இருக்குமோ? :)

பி.கு.: இது எதிர் பதிவல்ல! 

இறுதிச் சங்கிலி!. உபயம் கலைஞர்.மு.க.!

Posted on Sunday, February 22, 2009 by நல்லதந்தி

இலங்கைப் பிரச்சனையில் பல்வேறு சடங்குகள் இதுவரையிலும் நடத்தப் பட்டாலும்.,அது எப்பொதுமே கலைஞர் கையால் நடத்தப்படும் சடங்காகுமா?. அவர் இந்த மாதிரி சடங்குகளை நடத்துவதில் ஈடு இணையற்ற புரோகிதர் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

ஏற்கனவே அவர் சட்டசபையில் நடத்திய “இறுதி வேண்டுகோள்” சடங்கின் ஈரம் 
இன்னும் காயாமல் இருக்கும் போதே மீண்டும் ஒரு வழமையான சங்கிலிச் சடங்கை தமது குடும்பத்தாரால் நடத்தியுள்ளார் ...சாரி ,.....கழகத்தாரால் நடத்தியுள்ளார்.

அய்யோ! அய்யய்யோ!. இலங்கைத் தமிழர்களின் மீது அவ்வளவு அன்பா? என்று நீங்கள் நினைக்க மாட்டீர்கள். ஒரு வேளை அந்த அளவிற்க்கு அப்புராணி தமிழனாக இருந்தால் கவலைப் பட வேண்டாம்.அதெல்லாம் ஒன்றுமில்லை . 
தமிழினத் தலைவர் என்றப் பட்டத்தால் வருகிற வழக்கமான ஜன்னி தான் பய்ப்
பட ஒன்று மில்லை, என்று குடும்ப டாக்டர்கள் ஆறுதல் தருகிறார்கள்!.

 
இந்த படத்தில் உள்ள வருங்கால முதல்வர், மற்றொரு வருங்கால முதல்வர்,இன்னுமொரு வருங்கால முதல்வர் இவர்கள் “நான் கடவுள்” படத்துக்கு டிக்கெட் வாங்க நிற்க வில்லை!. 
ஏதோ சங்கிலியாம் சிவாஜி நடித்தப் படமல்ல!. மீண்டும் ..மீண்டும் சங்கிலியாம்...அதனால் இது கழகம் சம்பந்தப் பட்ட வழக்கம் போல் ஒரு இலங்ககைத் தமிழர்களுக்கான மனிதசங்கிலிதான்!.
இந்தச் சிரித்த முகங்களைப் பார்த்தால், இன்னும் இலங்கையில் தமிழர்கள் துன்பப்படுவதாய்த் தெரியவில்லை!. இதையும் மீறி அவர்கள் துன்பப் பட்டால் அதற்க்கு கழகம் பொறுப்பாக முடியுமா?. 

பி.கு: கழகத்தின் போராட்டங்கள் எப்போதுமே ஒரு வழக்கமாகச் சுற்றி வரும் வட்டம் என்பதால், இதற்க்குப் பிறகு வரும் போராட்டம் உண்ணாவிரதப் போராட்டமாக இருந்து இருக்கக் கூடும். ஆனால் திருமா வளவன் போன்ற கழக அல்லக்கைகள் அதை நடத்தி ஒரு மாதம் மட்டுமே ஆனதால் அதை அடுத்த்ப் போராட்டமாக வைத்துக் கொள்ளக் கூடும். அதனால் அடுத்த கழகப் போராட்டம் “தமிழர் தந்தி” போராட்டமாக இருக்கக் கூடும். எனவே தமிழர்கள் இன்று சரக்கடித்தது போக மிச்சக் காசை பத்திரமாக வைத்துக் கொள்ளவும். நாளைக் காலை மத்திய அரசுக்கு தந்தி கொடுக்க உபயோகப் படும்!.

உலகம் சுற்றும் வாலிபனும் நாகேஷும்!

Posted on Sunday, February 1, 2009 by நல்லதந்தி



தமிழ் திரையுலகில் நகைச்சுவையில் தனக்கேன ஒரு தனி இடம் பிடித்தவர் திரு.நாகேஷ் .தமிழ் நகைச்சுவைச் சக்ரவர்த்தியாக இருந்த நாகேஷ் சில காலமாகவே உடல் நலக்கோளாறால் அவதியுற்று வந்தவர் நேற்று காலை மரணமடைந்தார். அவரது நினைவாக அவர் அளித்த பழைய பேட்டி!. 1974-ல் வந்தது!

”உலகம் சுற்றும் வாலிபன்” படத்திற்காக அயல் நாடுகளுக்கு நாங்கள் புறப்பட்ட நேரத்தில் எங்களுக்கு அது என்ன கதை.. நமக்கென்ன பாத்திரம் என்று எதுவும் தெரியாது. எம்ஜிஆர் விளக்கமாக கதையைச் சொல்வார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவரும் ஏதும் சொல்லவில்லை.

நமெக்கேன் கவலை அவர் சொல்கிறபடி நடித்துக் கொடுப்போம் என்று எண்ணிக் கொண்டு என் குழுவினரோடு அரட்டை அடிக்க ஆரம்பித்தேன்,
ஜப்பான் நாட்டை அடைந்ததும் நாகேஷ் இன்னின்ன காட்சிகளை இப்படி இப்படி படமாக்கிக் கொள்ளுங்கள் என பூரண சுதந்திரம் கொடுத்தார்.காமிராமேனுடன் என் சம்பந்தப்பட்ட தனிக் காட்சிகளை இஷ்டப்படி படமாக்கினேன். முக்கியமாக நாங்கள் கருதிய இடங்களில் படமெடுத்த பிறகு அந்த விவரத்தை எம்ஜிஆரிடம் கூறிவிடுவேன்.
எம்ஜிஆர்,தன் சம்பந்தப் பட்ட காட்சிகளையும்,பாடல் காட்சிகளையும் படமாக்கினார். ஒரு பாடல் காட்சியில் தாடியுடனும், மற்றொரு படல் காட்சியில் தாடியில்லாமலும் நடித்துப் படமாக்கினார்.எனக்கு அது புரியவில்லை....என்ன சார் மாறுவேட ‘காதல் பாட்டா’ என்றேன்.அவர் சிரித்துக் கொண்டாரே தவிர விளக்கம் தரவில்லை.

மாலையில் படப்பிடிப்பு முடிந்ததும் அப்பாடி என்று ஹோட்டலுக்கு திரும்புவோம். அறைக்குள் வந்ததும் முதல் காரியமாக அயல் நாட்டு விஸ்கி பாட்டிலை எடுத்துக் கொண்டு விடுவேன். அப்புறமென்ன ஒரே குடிதான் ..தமாஷ்தான் (எம்ஜிஆருக்குத் இது தெரியாதபடி நடந்து கொள்வோம்!)
நாங்கள் இப்படி தமாஷாக் கூத்தடிப்போம், ஆனால் எம்ஜிஆர் ஹோட்டலில் தங்காமல் ஊரைச்சுற்றிப் பார்க்கக் கிளம்பிவிடுவார்.. தீடீரென்று இரவு பத்து மணீக்கு  வருவார்... புறப்படுங்கள் ஒரு அருமையான லொகேஷனைப் பார்த்து விட்டு வந்திருக்கிறேன்..அங்கு படமெடுக்க வேண்டும் என்று துரிதப் படுத்துவார்...

விஸ்கி வாடையை பாடுபட்டு மறைத்து விட்டு படப்பிடிப்புக்கு புறப்படுவோம். தெருக்களில் எங்களைக் கண்டபடி சுற்ற்ச் சொல்லி படம் எடுப்பார். எதற்கென்று எங்களுக்குப் புரியாது.வில்லன் தேடுகிறான் அவனிடமிருந்து தப்பிக்க ஓடு என்பார் சந்திரகலாவிடம். அவர் அப்ப்டி மறைந்து மறைந்து வீதிகளில் செல்வதை படமாக்குவார்.
என்ன கதை,இங்கு ஏன் வில்லன் வந்தான், கதாநாயகியை ஏன் துரத்துகிறான், அவளிடம் உள்ள இரகசியம் என்ன....எதுவும் எங்களுக்குத் புரியாது. ‘ஏன் சார் உங்களுக்கு இரட்டை வேடமா? என்று ஒரு நாள் கேட்டேன்....அதற்கும் சிரிப்புதான் பதில்.

பிறகு.................... 

உயிர் கொடுப்பேன்,உண்ணாவிரதம் இருப்பேன் திகில் திரை விமர்சனங்கள்

Posted on Monday, January 19, 2009 by நல்லதந்தி

சமீபத்தில் வெளி வந்த இரண்டு படங்கள் நம் எல்லோருடைய நெஞ்சைக் கண்ணீரால் நனைய வைத்தன.இப்படியும் நடக்குமா என்று திகிலால் உறைய வைத்தன .

கலைஞர் கதை,வசனம்,திரைக்கதை எழுதி இயக்கி,நடித்த “சாகும் வரை உயிரைக் கொடுப்பேன்” திருமாவளவன் நடித்து,தயாரித்து இயக்கிய “உண்ணாமல் உண்ணாவிரதம்” ,இந்த இரண்டு படங்களும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும்,மக்களின் இரண்டு நாள் கவலையை திசைதிருப்பின என்றால் அதில் குற்றம் இல்லை.ஒரு கவலைக்கு பதில் இரண்டு கவலையாக மக்கள் படும்படிச் செய்து அதில் இருவரும் வெற்றி கண்டனர்.இரண்டிலும் வெளிக்கதையில் இலங்கைப் பிரச்சனையையே கதைக்களமாகக் கொண்டிருந்தாலும் உள்ளே வழக்கம் போல சொந்தக் கதைகளே பிரதானமாக இருந்தது.அதை இருவரும் வெளிக்காட்டாமல் தங்களை இலங்கைத்தியாகிகளாக சித்தரித்துக் காட்டியது இருவரின் டைரக்‌ஷன் திறமைக்கு நல்ல உதாரணம்.

கலைஞரின் “சாகும் வரை உயிர் கொடுப்பேன்” வழக்கமான கதைதான் என்றாலும் கலைஞர் பிக்சர்ஸ் என்ற கார்பரேட் கம்பனி தயாரிப்பாதலால் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கப் பட்டிருந்தது. வழக்கம் போல் படத்தின் திரைக்கதை காமெடியாக அமைக்கப் பட்டிருந்தது,ஜனங்களை எடை போடும் கலைஞரின் திறமையைக் காட்டியது.

மேடை ஏறும் போதெல்லாம் உயிரைக் கொடுப்பேன் என்கிற வசனத்தைக் கலைஞர் பேசுகிறார்.ஜனங்கள் சிறிது தொய்வடையும் போது,வசனகர்த்தா கலைஞர் வசனத்தை மாற்றிப்போட்டு கடலில் கட்டு மரமாவேன் என்று சொல்லும் போதிலும்,சில இடங்களில் விலா எலும்பை முறித்தாலும் ”ஒகேனக்கல்” ஆவேன் என்று பஞ்ச் டையலாக் அடிக்கும் போதும் நடிகர் கலைஞர் ஜொலிப்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.சும்மாவா எத்தனை வருட நடிப்பு அனுபவம்.

வசனமா நடிப்பா எதைப் பாராட்டுவது என்று திகைக்க வைத்து விடுகிறார் மனிதர். அதிலும் ”இலங்கைத் தமிழர்களுக்காக உயிர் கொடுப்பேன்” என்கின்ற வசனத்தை வழக்கம் போல் சொல்லாமல் ”கொடுப்பேன் உயிர் தமிழர்களுக்காக இலங்கை” என்று ஜூனூன் தமிழில் வசனம் பேசிவிட்டு எல்லாம் அன்னை சோனியாவின் ஆசியால் வருவது என நமுட்டு சிரிப்பு சிரிப்பது திரை அரங்கை அதிர வைக்கிறது.

ப்ரணாப் முகர்ஜியுடன் “போவீயா! போமாட்டாயா! போலேன்னா உன் பேச்சுக்கா!” என்ற பாடலில் கலைஞரும்,ப்ரணாப் முகர்ஜியும் டப்பாங்குத்து டான்ஸ் ஆடிஅசத்துகின்றனர்.நடன இயக்கத்தை மன்மோகன் சிங் கையாண்டு இருக்கிறார்.சில இடங்களில் நம்புகிறார்ப்போல அமைத்திருக்கிறார்.சில இடங்களில் சற்று சோடையாகும் போது கலைஞர் தன் அனுபவத்தால் அதைச் சமாளிக்கிறார்.

”இலங்கைத் தமிழன் சாகிறான்.அவனைக் காப்பாற்ற வழியில்லை வா!தமிழனே அனைவரும் சேர்த்து சாவோம்” என்று சங்கமம் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டே கவலைப் படும் காட்சி ஏற்கனவே கலைஞர் புரெடெக்‌ஷாரின் ”இலங்கைத் தமிழருக்கு இன்னுயிரைத் தருவோம் Part 3 யில் கலைஞர் இலங்கைத் தமிழர்களுக்காக பிறந்தநாளைக் கொண்டாட மாட்டேன் என பிறந்தநாள் கொண்டாட்ட பொதுக்கூட்டத்தின் போது சொன்னதை நினைவு படுத்துகிறது.டைரக்டர் கவனிக்கவில்லையா?.அதே போல் அந்தக் காட்சியில் அவர் அனைவரும் சாவோம் என்று கூறிக் கொண்டு அழுதவாறு வானத்தைப் பார்க்கும் போது ஆயுதமேற்றிக் கொண்டு இலங்கை செல்லும் இந்திய விமானம் கண்ணில் படுகிறது.இது டைரக்டரின் உத்தியா?அல்லது தெரியாமல் நடந்த தவறா? என்று தெரியவில்லை.கலைஞருக்குத்தான் வெளிச்சம்.

க்ளைமாக்ஸ் காட்சி திருமங்கலம் இடைத்தேர்தலில் அமைக்கப்பட்டு இருப்பது ஏனென்று புரியவில்லை.இப்போது கலைஞர் இயக்கத்தில் தயாராகிவரும் “பாரப்பா! பார்லிமெண்டப்பா!” என்கிற படத்தின் முதல் காட்சியாக இருக்குமோ என்னவோ?.ஆனாலும் கலைஞரின் இயக்கத்தில் ஒரு காட்சிகூட வீணாகாது என்று நிரூபிக்கும் வகையில் கடைசி காட்சி சூப்பர்!.

அழகிரிக்கு “ நீ தென்மண்டல திமுக செயல் அமைப்பாளராக இரு!” என்று கலைஞர் சாபம் விடும் காட்சி அற்புதம்.அதைக் கேட்டு எத்தனை பாரத்தை நான் தாங்குவேன் என்று அழுது பிறகு அதை வீரமுடன் ஏற்கும் காட்சியில் அழகிரி சோபிக்கிறார்.
இந்த மாதிரிக் காட்சிகள் கலைஞரின் இயக்கத்தில் வழக்கமாக பார்க்கும் ஒன்று என்றாலும் ஒவ்வொரு முறையும் நம்புமளவிற்கு இருப்பது கலைஞரின் திரைக்கதை அமைக்கும் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி!.

திருமாவளவனின் ”லோ” பட்ஜெட் படமான “உண்ணாமல் உண்ணாவிரதம்” இரண்டு நாள் கூட ஓடாதது,முதலில் திருமாவளவனுக்குத்தான் மகிழ்சி அளித்திருக்கும்.

கதை என்னவோ வழக்கமான பங்காளிச் சண்டைக்கதைதான் அதை இலங்கைத் தமிழர் பிரச்சனையில் ஏற்றிக் காட்டும் விதத்தில் இயக்குனர் வெற்றி பெறுகிறார்.இதற்கு முன்னரே தமிழக நடிக இயக்குனர்களின் பாரம்பரியப் படி இலங்கைப் பிரச்சனைக் கதையில் இவரும் பலமுறை நடித்திருக்கிறார் என்றாலும் இந்த தடவை இவரது நடிப்பு எடுபடவில்லை.

தம்பி செல்வப் பெருந்தகை வீட்டிலுள்ள நகை நட்டுக்களை அபேஸ் செய்து விட்டு மாயாவதி பஸ்ஸில் ஏறிக்கொண்டு திருமாவளவனுக்கு டாட்டா காட்டி சிரிக்கும் காட்சியில் இருவருமே தங்களுடைய அதி அற்புத நடிப்பை வெளிக்காட்டி இருந்தனர்.திருமாவளவன் அழ,செல்வப் பெருந்தகைச் சிரிக்க,கேமரா சுழன்று இருவரையும் சுத்தி வருவது டைரக்டரின் திறமை வெளிப்படுத்துகிறது.

செல்வப் பெருந்தகை மாயாவதி பஸ் கம்பனியில் கிளீனர் வேலையில் சேருமாறு திருமாவளவனுக்கு வேண்டுகோள் விடுக்கும் காட்சி செமை நக்கல்.பதிலுக்கு திருமாவளவன் பஸ்ஸைப் பஞ்சர் ஆக்குவேன் என்று ஆவேசமாக முள்ளை எடுத்துக் காண்பிக்கும் போது தியேட்டரே திகிலால் உறைகிறது.

ஸ்கூல் ஹெட்மாஸ்டர் கலைஞரிடம்,செல்வப் பெருந்தகை ஸ்கூலுக்கு வரமாட்டான் அவனுக்கு டி.ஸி கொடுத்து விடுங்கள் என திருமாவள்வன் கேட்கும் போது “வெயிட் அண்ட் ஸீ” என கலைஞர் புன்னகைக்கும் மர்மம் நமக்குப் புரிவதால் அவருடைய சிரிப்பு நமக்கும் தொற்றிக் கொள்கிறது.

தயாரிப்பாளர் திருமாவளவனுக்கு தன்னுடைய தயாரிப்பு கடலூர் ஏரியாவைத் தவிர வேறங்கும் ஓடாமல் இருப்பது பெருங்கவலையாக இருக்கும் போலிருக்கிறது.அதனால் தெற்குப் பக்கமும் ஓடுவதற்காக சில சண்டைக் காட்சிகளை மதுரையில் எடுத்து இருக்கிறார்.ப்ஸ் எரிக்கிறவரைக்கும் பல்லுக் குத்திக் கொண்டு வேடிக்கைப் பார்த்து விட்டு “ஆச்சா! சரி ஓடுங்கப்பா” என்று எரித்தவர்களைக் கேட்டுக் கொண்டு “பஸ் எரித்தவர்கள் யாராக இருந்தாலும் சுட்டுப் பிடிப்பேன்” என்று வானத்தை நோக்கி சுடும் காட்சி சிரிப்பை வரவழைக்கிறது.போலீஸ் கலைஞர்களைக் காமெடியனாக மட்டும் காட்டுவது கலைஞரின் பாணி என்றாலும்,கலைஞரிடம் சிஷ்யனாக இருந்தவர் என்று நிருபிக்கிறார் இயக்குனர் திருமாவளவன்.

க்ளைமாக்ஸ்தான் சப்பென்று போய்விட்டது.இலங்கை பிரச்சனை கட்டுரையை பேச்சுப் போட்டிக்காக படித்துக் கொண்டு வந்த திருமாவளவனை பேசக் கூடாது நீ பேசினால் அந்தச் சத்தத்தில் கூரை இடிந்து விடும், எனக்கு ஆபத்து என்கிறார் கலைஞர்.பேச முடியாததால் தொண்டைக் கட்டிப் போன திருமாவளவன் சாப்பிட முடியாமல் தவிக்கிறார்.தம்பி ஓடிப்போக,ஸ்கூல் எல்லாம் கிண்டல் செய்யகிறது வேறு வழியில்லாமல் உண்ணாவிரதத்தை அறிவிக்கிறார்.மாணவர்கள் கிண்டலை நிறுத்தியவுடன் உண்ணாவிரதம் க்ளோஸ்.பத்து நாளைக்காவது ஓடும் என்று கட்டு சோற்றைக் கட்டிக் கொண்டு படம் பார்க்க வந்தவர்கள் கதி பரிதாபம்.மம்தா பானர்ஜி நடித்த உண்ணாவிரதப் படம் போல 30 நாளைக்கு மேல் ஓடும் என எதிர்பார்த்தால் நீங்கள் இந்த ஊரில் இருப்பதற்கு இலயக்கில்லை என்று அர்த்தம்.

திரை முன்னோட்டம்

இராமதாஸ் அளிக்கும் “பத்துக்கு பத்து” குடும்பச்சித்திரத்தின் ஒரு காட்சி மறைமலை நகரில் படமாக்கப்பட்டது.கலைஞர்,இராமதாஸ் நடிக்கும் இப்படத்தில் காமெடிக்குப் பஞ்சமில்லை.மத்திய அரசின் ”பத்துக்குப் பத்து” வீட்டை சோனியா பெரியம்மா,மன்மோகன் சிங் மாமாவுடன் சேர்ந்து பங்காளிகளான கலைஞரும்,இராமதாஸும் கட்டுகிறார்கள்.இந்த வீட்டினால் அந்தத் தெருவே நாறுகிறது.இதனால் ஏற்படும் பிரச்சனைகளை நகைச்சுவையாக கொண்டு போயிருக்கிறாராம் டைரக்டர்.

தெருவில் உள்ளவர்கள் இந்த வீட்டில் வசிப்பவர்களை, இலங்கையில் குப்பை போட்டதற்கு திட்டும் போது தங்களுக்கும் அந்த வீட்டிற்கும் சம்பந்தமில்லாததைப் போல கலைஞரும்,இராமதாஸும் நிற்க்கும் காட்சி சூப்பர்.சில சமயங்களில் நல்லாயிருப்பார்களா இந்த வீட்டுக்காரர்கள்,நாசமாகப் போகட்டும்,கட்டையில போகட்டும் இந்த வீட்டில் உள்ள தங்களையே தாங்களே திட்டிக் கொள்ளும் ஸ்பிலிட்டிங் மல்டி பர்சனாலிட்டிக் காட்சிகளில் முதலிடம் தருவது கலைஞருக்கா இராமதாஸுக்கா என்று தமக்கு நிலைதடுமாறுகிறது,என்கிறார் நமது திரை நிருபர்.ஹாட்ஸ் ஹாஃப்.

தீபாவளிக்கு இரயில் பட்டாசு விடும் போதும்,மணலில் மல்டி ஸ்பெஸாலிட்டி ஆஸ்பத்திரி கட்டும் சீன்களிலும் வேடிக்கைப் பார்க்க தெருவே கூடும் போது, தான் வீட்டைச் சேர்ந்தவன் என்று காட்டிக் கொள்ள இராமதாஸ் முண்டியடித்துக் கொண்டு தலையைக் காட்டும் காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டு இருக்கின்றனவாம்.தமிழன் என்றால் இந்த மத்திய அரசு வீட்டுக்காரர்களுக்கு கிள்ளுக்கீரையாக இருக்கிறது என்ற வசனத்தை இராமதாஸ்,கண்ணாடியின் முன் நின்று தனக்குத்தானே ஆவேசமாகப் பேசும் காட்சி நேற்று படமாக்கும் போது படப்பிடிப்புக் குழுவினரே துக்கம் தாங்காமல் அழுதார்களாம்.

மொத்தத்தில் வீட்டில் இருக்கும் இராமதாஸ் வெளியேறும் காட்சி இன்னும் படமாக்க வில்லை என்பதால் ரிலீஸ் ஆக இன்னும் இரண்டு மூன்று மாதம் ஆகலாம்.