கொட்டாவி விடுவதற்காகவாவது வாயைத் திறந்திருக்கலாம்!

Posted on Friday, March 27, 2009 by நல்லதந்தி





பாராளுமன்றத்தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. புதிதாக எம்.பி ஆகும் ஆசையுள்ளவர்கள் பணத்தைக் காட்டி சீட்டு வாங்க பறப்பதும், ஏற்கனவே எம்.பி ஆக உள்ள பழம் பெருச்சாளிகள் பணம் + தாங்கள் தொகுதிக்குச் செய்த சாதனைகளையும்(?) சொல்லி சீட்டு வாங்கத் துடிக்கிறார்கள்.

ஆனால் நமது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திரு. தங்கபாலு செய்த சாதனை என்னத் தெரியுமா? 

பாராளுமன்ற இணையதளம் தருகிற தகவல்களின்படி, இரு தமிழக எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் எந்தக் கேள்வியையும் எழுப்பவில்லையாம். அவர்களில் ஒருவர் தமிழக காங்கிரஸ் தலைவரும், சேலம் தொகுதி எம்.பியும், இரண்டு முறை இணை அமைச்சராக இருந்த திரு.தங்கபாலு!. 

ஒருவேளை இந்தச் சாதனையைச் சொல்லித்தான் இந்த முறை ஓட்டு கேட்கப் போகிறாரோ?. அட பேச வேணாம், ஒரு கொட்டாவி விடுகிறதுக்காகவாவது வாயைத் திறந்திருந்தால் இந்த பேச்சு வந்து இருக்குமா?. 

11 Responses to "கொட்டாவி விடுவதற்காகவாவது வாயைத் திறந்திருக்கலாம்!":

வால்பையன் says:

me the first

வால்பையன் says:

மீதி படிச்சிட்டு

வால்பையன் says:

//பேச வேணாம், ஒரு கொட்டாவி விடுகிறதுக்காகவாவது வாயைத் திறந்திருந்தால் இந்த பேச்சு வந்து இருக்குமா?. //

தூங்கும் போது கொட்டாவி விடும் பழக்கம் அவருகில்லையாம்!

Rajaraman says:

தொங்கபாலு போன்ற டம்மிகளை தேசியக்கட்சி என்று சொல்லிக்கொள்ளும் காங்கிரஸ் அதன் மாநில தலைவராக வைத்திருப்பது வெட்க்ககேடு. அதை விட வெட்க்ககேடு அவரையும் தேர்ந்தெடுக்கும் மக்கள்.

நல்லதந்தி says:

வாங்க வால்! மீ த அஞ்சாவது!
//தூங்கும் போது கொட்டாவி விடும் பழக்கம் அவருகில்லையாம்!//

ஆனால் முழுங்கி ஏப்பம் விடுவதில கில்லாடி கிரி கிரி!

நல்லதந்தி says:

// Rajaraman said...
தொங்கபாலு போன்ற டம்மிகளை தேசியக்கட்சி என்று சொல்லிக்கொள்ளும் காங்கிரஸ் அதன் மாநில தலைவராக வைத்திருப்பது வெட்க்ககேடு. அதை விட வெட்க்ககேடு அவரையும் தேர்ந்தெடுக்கும் மக்கள்.//

இவர் தனியாக நின்னால் ஆயிரம் ஓட்டு கூட வாங்குவாரா என்பது சந்தேகம். எனென்றால் இவரது சொந்த ஊர் கள்ளக்குறிச்சி தொகுதியில் வருகிறது. அதனால் சொந்தக்காரங்க ஓட்டு கூட கிடைக்காது. ஓட்டு விழுவது எல்லாமே கூட்டணி செய்கிற வித்தைதான்!

திலீபன் says:

என்ன ஜென்மம் இந்த ஆளு?இந்த மாதிரி ஆளுக்கெல்லாம் அரசியல் ஒரு கேடா?

//ஓட்டு விழுவது எல்லாமே கூட்டணி செய்கிற வித்தைதான்!//அதென்னவோ உண்மைதா.

Tech Shankar says:

-வாத்தியார் மெச்சின பிள்ளை.
இப்போதெல்லாம் பள்ளிகளில் குழந்தைகளைப் பேசாதே!.. பேசாதேன்னுதானே சொல்லி டீச்சர்ஸ் வளர்க்கிராங்க. ஆசிரியரிடம் வாங்கிய பெயரைக் காப்பாற்றுகிறார். வேறேதும் தப்பாத் தெரியவில்லை

//
பாராளுமன்ற இணையதளம் தருகிற தகவல்களின்படி, இரு தமிழக எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் எந்தக் கேள்வியையும் எழுப்பவில்லையாம்.

Tech Shankar says:

அந்த எண்ணம் எனக்கில்லை!

//கேவலமான கமெண்டுகள்(போட மாட்டீங்க,இருந்தாலும்) கண்ணுக்தெரிந்தவுடன் தூக்கப்படும்! :).

Tech Shankar says:

மேலே போட்ட கமெண்ட் கேவலமா இருந்தால் தூக்கிருங்க (:-

நல்லதந்தி says:

// தமிழ்நெஞ்சம் said...
மேலே போட்ட கமெண்ட் கேவலமா இருந்தால் தூக்கிருங்க (:-//
இன்னா வாத்தியாரே! இப்டி சொல்லிபூட்ட. நெஞ்செல்லாம் சும்மா பீடிய வலிச்ச கணக்கா கப்புன்னு ஆய்டுச்சிபா!.. இந்த பேச்செ கண்டி வேற எவினாச்சும் சொல்லிருந்தா!.. வோணாம்பா!. என்னாத்தல! சொல்ற நீ!. நீ எப்பேற்கெத்த ஆளி நீ வுடு தேடி வந்து இருக்க சொல்ல ஆரு தல அது! கமெண்டெ துக்கற கம்மினாட்டி! .வா! தல வந்து எதினாச்சும் சொல்லு, நமக்கும் அப்பாலீக்காதா பிரியும்!. உன்னியப் போயி எவினாச்சும் எதாவது சொல்லுவானா தல!. நீ சும்மா சோக்கா பூந்து விளாடு தல!. எதினிச்சும் தப்பு இருந்தா மன்னிச்சிகப்பா!.