சூப்பர்ஸ்டாரின் குசேலன் வெளியிடுவதில் சிக்கலா?

Posted on Wednesday, July 30, 2008 by நல்லதந்தி



தலைவர் படத்துக்கு நியூஸ் போடலேன்னு எனக்கு ரொம்ப நாளா வருத்தம் இருந்தது.இப்போ போட ஒரு சந்தர்ப்பம்.ஆனா நெகடிவ் நியூஸாப் போச்சேன்னுதான் வருத்தம்.சீக்கிரம் பிரச்சனைய முடிங்க தலைவா!



சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த "குசேலன்' படத்தை, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில், வினியோகஸ்தர்கள் நிர்ணயம் செய்யும் தொகையைக் கொடுத்து, படம் ரிலீஸ் செய்வர். லாபம் என்றாலும், நஷ்டம் என்றாலும் குறிப்பிட்டத் தொகை தியேட்டர் உரிமையாளர்களுக்குப் போய் சேரும்; இந்த முறைக்கு "மினிமம் கியாரன்டி' என்று பெயர். நட்சத்திர அந்தஸ்து பெற்ற சில நடிகர்களின் படங்கள் பெரிய அளவில் தியேட்டர் உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தி விடுகின்றன. இந்நிலையைப் போக்க, கடந்தாண்டு முதல், "சதவீத அடிப்படையில் முக்கிய நடிகர் படங்களை திரையிடுவது' என முடிவு செய்தனர்.
ரஜினி நடிக்கும் "குசேலன்' படம் 31ம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. அதன் தமிழக வினியோக உரிமையை பிரமிட் சாய்மீரா நிறுவனம் பெற்றுள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஒன்று முதல் நான்கு தியேட்டர்கள் வரையில் குத்தகை ஒப்பந்தம் எடுத்துள்ளது. "மற்ற தியேட்டர் உரிமையாளர்கள், "குசேலன்' படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்றால், தாங்கள் நிர்ணயம் செய்துள்ள தொகையைக் கொடுத்தால் மட்டுமே படப்பெட்டி வழங்கப்படும்' என அறிவித்துள்ளது.
" சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் சாய்மீராவின் கட்டுப்பாட்டில் எட்டு தியேட்டர்கள் உள்ளன. அவற்றில் "குசேலனை' ரிலீஸ் செய்ய முடிவு செய்து, அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால், தியேட்டர் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சதவீத அடிப்படையில் "குசேலனை' திரையிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்தப் பிரச்னையால், மற்ற தியேட்டர்களில் படம் வெளியாகுமா? ஆகாதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பிரச்னைக்குத் தீர்வு காண, தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினரும், வினியோகஸ்தர்களும், பிரமிட் சாய்மீரா நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

தசாவதாரம் இரண்டு -- கமலின் மேக்கப் டெஸ்ட்!

Posted on Monday, July 28, 2008 by நல்லதந்தி

கமல் ரசிகர்கள் மன்னிக்கவும்!






தசாவதாரத்திற்கு மேக்கப் டெஸ்ட் செய்யவே சில கோடிகள் செலவு ஆனதாம். எனவே கமலுக்கு அடுத்தப் படத்திற்கான மேக்கப் செலவைக் குறைக்கும் வண்ணம் ,மேக்கப் டெஸ்ட் செய்யப் பட்டுள்ளது. கமல் இதை தாராளமாக உபயோகித்துக் கொள்ளலாம்!.இரண்டு தசாவதாரம் எடுக்கும் அளவிற்கு மட்டுமே டெஸ்ட் செய்யப் பட்டுள்ளது.தயாரிப்பாளர்கள் சற்று,நிம்மதியாக,ஆசுவாச படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.













































































































இந்தியாவை அழிக்க இஸ்லாமிய தீவிரவாதிகளின் இறுதிப் போரா?அல்லது அணுசக்தி ஒப்பந்தத்திற்கு பாகிஸ்தான் தெரிவிக்கும் எதிர்ப்பின் விளைவா?

Posted on Sunday, July 27, 2008 by நல்லதந்தி

பெங்களூரு குண்டுவெடிப்பு நடந்த அடுத்த நாளான நேற்று, குஜராத் தலைநகர் ஆமதாபாத்தில், தொடர்ச்சியாக 16 இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 20 பேர் பலியாயினர்; 100 பேர் படுகாயமடைந்தனர். ஒவ்வொரு மாநிலமாக பயங்கரவாதிகளின் தாக்குதல் தொடர்வதைக் கண்டு, "இவர்களின் அடுத்த இலக்கு எங்கே?' என்ற பீதி, நாடு முழுவதும் உள்ள மக்களிடையே எழுந்துள்ளது. "அமைதியாக இருக்கும்படி' பிரதமர் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நேற்று முன்தினம் மதியம் தொடர்ச்சியாக எட்டு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில், இரண்டு பேர் பலியாயினர்; 15 பேர் படுகாயமடைந்தனர்.
முதல்வர் மோடியின் தொகுதி: இத்தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தாக்குதல் நடந்த மறுநாளே மக்களிடையே பீதி மறையாத நிலையில், குஜராத் தலைநகர் ஆமதாபாத்தில் நேற்று தொடர்ச்சியாக 16 இடங்களில் குண்டுகள் வெடித்தன.ஆமதாபாத்திலுள்ள முதல்வர் மோடியின் தொகுதியான மணி நகர், இசான்பூர், நரோல் சர்க்கிள், பாபு நகர், ஹட்கேஷ்வர், சர்கேஜ், சாரங்பூர் பிரிட்ஜ், சக்லா பகுதி, கோவிந்த்வாடி, கிஷன்பூர், நரோதா பிட்டியா மற்றும் அம்ரைவாடி உட்பட 16 இடங்களில், நேற்று மாலை 6.45 மணியளவில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.
சர்கேஜ் பகுதியில் ஒரு பஸ்சில் குண்டு வெடித்தது. வெடிகுண்டுகள் சைக்கிள்கள் மற்றும் டிபன் பாக்ஸ்களில் வைக்கப்பட்டிருந்தன. குண்டு வெடிப்பு நடந்த பகுதிகள் பெரும்பாலானவை மார்க்கெட் பகுதிகள். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.ஒவ்வொரு மாநிலமாக பயங்கரவாதிகள் குறி வைத்துத் தாக்குதல் நடத்துவது கண்டு, நாடு முழுவதும் பொதுமக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர்.வெடிகுண்டு தாக்குதலுக்கு ஜனாதிபதி, பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் அத்வானி, பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மத்திய உள்துறை இணை அமைச்சர் சகீல் அகமது கூறுகையில், "பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து, மாநில தலைநகரங்களிலும் பாதுகாப்பை தீவிரப்படுத்துமாறு, அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கையை மத்திய அரசு அனுப்பியது. இதில் ஆமதாபாத் நகரும் அடங்கும்' என்றார். அனைத்து மக்களும் அமைதி காக்கும்படி பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜராத்தில் அனைத்து ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கர்நாடகாவைத் தொடர்ந்து பா.ஜ., ஆளும் குஜராத்தை குறிவைத்து, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளில் குண்டுவெடிப்புகள் தொடர்கதையாகி வருகின்றன. தனி குண்டுவெடிப்புகளை விட தற்போது தொடர் குண்டுவெடிப்புகள் நாட்டை அதிகமாக உலுக்கி வருகின்றன.2005 - டில்லி மார்க்கெட் குண்டு வெடிப்புகள்அக்டோபர் 29ம் தேதி டில்லியில் வெடித்த மூன்று குண்டுகளால் டில்லி அதிர்ந்தது. இந்த சம்பவத்தில் 62 பேர் கொல்லப்பட்டனர்; 210 பேர் படுகாயமடைந்தனர். இந்துக்கள் விமரிசையாகக் கொண்டாடும் தீபாவளி பண்டிகைக்கு இரு நாட்கள் முன், மக்கள் அதிகமாகக் கூடும் பகுதிகளான மத்திய மற்றும் தெற்கு டில்லி மார்க்கெட்டுகளில் இரு குண்டுகளும் கோவிந்தபுரியில் பஸ்சில் ஒரு குண்டும் வெடித்தன.இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு காரணம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். பாகிஸ்தான் தொடர்புடைய இஸ்லாமிய அமைப்புகளான இஸ்லாமிக் புரட்சிகர முன்னணி மற்றும் இஸ்லாமிக் இன்குலாப் மகஸ் ஆகிய அமைப்புகளுக்கும் இச்சம்பவத்தில் தொடர்பிருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
2006 - வாரணாசி குண்டு வெடிப்புகள்
இந்துக்களின் புனித நகரமான உ.பி.,யில் உள்ள வாரணாசியில் மார்ச் 7ம் தேதி மூன்று குண்டுகள் வெடித்தன. இதில் 28 பேர் கொல்லப்பட்டனர்; 101 பேர் காயமடைந்தனர்.சங்கத் மோச்சன் அனுமன் கோவில், வாரணாசி கன்டோன்மென்ட் ரயில்வே ஸ்டேஷன், டில்லி செல்லவிருந்த சிவகங்கா எக்ஸ்பிரஸ் ஆகிய மூன்று இடங்களில் குண்டுகள் வெடித்தன.இந்த குண்டு வெடிப்புக்கு காஷ்மீர் தீவிரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பா காரணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். வாரணாசியில் வெடித்த குண்டுகள் அனைத்தும் பீகாரில் தயார் செய்யப்பட்டவை என்று போலீசார் தெரிவித்தனர்.
2006 - மும்பை ரயில் குண்டு வெடிப்புகள்: மும்பையில் ஜூலை 11ம் தேதி தொடர்ச்சியாக வெடித்த ஏழு குண்டு வெடிப்புகளில் 209 பேர் கொல்லப்பட்டனர்; 700 பேர் காயமடைந்தனர்.சாந்தகுரூஸ், பந்த்ரா, ஜோகேஸ்வரி, மாஹிம், மீரா ரோடு, மாதுங்கா, பொரிவிலி ஆகிய ஏழு இடங்களில் ரயில்களில் குண்டுகள் வெடித்தன. மும்பை மக்கள் போக்குவரத்துக்கு அதிகம் நம்பியிருக்கும் ரயில்களில் வெடித்ததால் மரணமடைந்தோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.இந்த சம்பவத்துக்கு லஷ்கர்-இ-தொய்பா மற்றும் சிமி இஸ்லாமிய மாணவர் அமைப்பு காரணம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
2006 - மாலேகான் தொடர் குண்டு வெடிப்புகள்: மகாராஷ்டிராவில் நாசிக் அருகே மாலேகானில் செப்டம்பர் 8ம் தேதி நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில், 37 பேர் கொல்லப்பட்டனர்; 125 பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பில் பலியானோர் இஸ்லாமியர்களே. குண்டுகள் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்தன. மசூதி அருகே குண்டுகள் வெடித்ததால் அங்கு தப்பியோடுவதற்காக மக்களிடையே நெரிசல் ஏற்பட்டது. இந்த குண்டுவெடிப்புக்கு சிமி அமைப்பு காரணம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
2007 - ஐதராபாத் பொழுதுபோக்கு பூங்கா குண்டுவெடிப்பு: ஐதராபாத்தில் பொழுதுபோக்குப் பூங்கா மற்றும் சாலையோர உணவுக்கடையில் நடந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் 42 பேர் பலியானார்கள்; 54 பேர் காயமடைந்தனர். மூன்றாவது குண்டுவெடிப்புச் சம்பவம் நடக்கும் முன் போலீசார் நாட்டு வெடிகுண்டுகளைக் கைப்பற்றி அழித்தனர். சம்பவம் நடந்த மறுநாளும் 19 குண்டுகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.இச்சம்பவத்துக்கு வங்கதேசத்தைச் சேர்ந்த ஹர்கத் உல் ஜிகாத் அல் இஸ்லாமி எனும் அமைப்பு காரணம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
2008 - ஜெய்ப்பூர் சைக்கிள் குண்டுகள்: ஜெய்ப்பூரில் மே மாதம் 13ம் தேதி 15 நிமிடங்களுக்குள் ஒன்பது குண்டுவெடிப்புகள் நடந்தன. இதில் 63 பேர் கொல்லப்பட்டனர்; 210 பேர் காயமடைந்தனர். சைக்கிள்களில் வைக்கப்பட்டிருந்த இந்த குண்டுவெடிப்புக்கு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு இ-மெயில் வழியாக தகவல் அனுப்பி பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு இருப்பது இந்த சம்பவத்தில் தான் வெளியுலகுக்குத் தெரிந்தது. ராஜஸ்தானில் உள்ள வங்கதேசத்தவர்களை நாடு திருப்பி அனுப்பும் திட்டத்தால் வங்கதேச தீவிரவாத அமைப்புக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்று உள்துறை அமைச்சகம் சந்தேகிக்கிறது.
2008 - பெங்களூரு குண்டுவெடிப்புகள்: நேற்று முன்தினம் நடந்த குறைந்த சக்தி கொண்ட தொடர் குண்டுவெடிப்புகளில் பெரிய அளவில் உயிர்ச் சேதம் இல்லை. இச்சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்; 15 பேர் காயமடைந்தனர். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகமாக இருப்பதால் பெங்களூருவில் பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு லஷ்கர்-இ-தொய்பா மற்றும் சிமி அமைப்புகள் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

நன்றி: தினமலர்

மீண்டும் இஸ்லாமிய தீவிரவாதிகளின் அட்டூழியம்

Posted on Saturday, July 26, 2008 by நல்லதந்தி

மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் கூறுகையில், ""சம்பவங்களுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. எனினும், தடைச் செய்யப்பட்ட "சிமி' அமைப்பினர் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்,'' என்றார்.

கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரில் வெவ்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்திற்குள் எட்டு இடங்களில் தொடர்ந்து குண்டு வெடித்தது. ஐ.டி., நிறுவனங்களைக் குறி வைத்து பயங்கரவாதிகள் நடத்திய இந்தத் தாக்குதலுக்கு இரண்டு பேர் பலியாயினர்; 15 பேர் படுகாயமடைந்தனர்.பெங்களூரு நகரில் ஐ.டி., கம்பெனிகள் நிறைந்த ஓசூர் ரோடு பகுதியில் மடிவாளாவில் முதல் வெடிகுண்டு மதியம் 1.20 மணிக்கு வெடித்தது. ஆட்டோ ஒன்றில் சென்று கொண்டிருந்தவர் வெடிகுண்டு வெடித்ததை உணர்ந்தார்.
ஆட்டோவை நிறுத்திப் பார்த்த போது பெண் ஒருவர் ரத்தவெள்ளத்தில் மயங்கிக் கிடந்தார். அருகில் சென்று பார்த்த போது இறந்து கிடந்தார். அதற்குள் அப்பகுதியில் பெரும் கூட்டம் கூடியது. இறந்தப் பெண்ணின் பெயர் லட்சுமி எனத் தெரிந்தது. அவரது கணவர் ரவி, குண்டு வெடிப்பில் படுகாயமடைந்தார். அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இரண்டாவது வெடிகுண்டு மதியம் 1.25 மணிக்கு மைசூரு ரோடு பகுதியில் பெங்களூருப் பல்கலை அருகில் உள்ள நாயண்டஹள்ளி பந்தர்பாளையா பகுதியில் நடந்தது.
மூன்றாவது வெடிகுண்டு மதியம் 1.40 மணிக்கு ஆடுகோடி செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனை அருகிலும், நான்காவது வெடிகுண்டு மதியம் 1.42 மணிக்கு ஆடுகோடியின் மற்றொரு பகுதியிலும் வெடித்தது.ஐந்தாவது வெடிகுண்டு கோரமங்களா போலீஸ் நிலையம் அருகிலும், ஆறாவது வெடிகுண்டு அதே பகுதியிலும், ஏழாவது வெடிகுண்டு பரபரப்பு மிகுந்த விட்டல் மல்லையா மருத்துவமனை அருகிலுள்ள பூங்கா ஒன்றிலும், எட்டாவது வெடிகுண்டு லாங்க் போர்டு டவுன் ரிச்மண்ட் சர்க்கிள் அருகிலும் வெடித்தது.
பெரும் பீதியும், பரபரப்பும் : தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடங்களில் குவிக்கப்பட்டனர். ஆடுகோடியில் நடந்த சோதனையில், வெடிக்காத குண்டு ஒன்று கைப்பற்றப்பட்டது. தொடர் குண்டுவெடிப்பால் பெங்களூரு நகர மக்களிடையே பெரும் பீதியும், பரபரப்பும் ஏற்பட்டது. எங்கு பார்த்தாலும் மக்கள் அலறலுடன் சென்றனர். குண்டு வெடித்தப் பகுதிகளில் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.சம்பவம் நடந்த இடத்திற்கு வெடிகுண்டு நிபுணர்கள் சென்றனர். போலீஸ் மோப்ப நாய் கொண்டு செல்லப்பட்டது.
குண்டுவெடிப்பு நடந்த பகுதிகளில் நிபுணர்கள் கைப்பற்றிய வெடிகுண்டு சிதறல்கள், ஒயர்கள், இரும்புப் போல்ட்கள் போன்றவற்றைச் சோதனைக்கு அனுப்பி வைத்தனர். மொபைல் போன் மூலம் டைம் பாம் வைத்து வெடிக்கச் செய்துள்ளனர். பெங்களூருவிலிருந்து வெளியூர் செல்லும் அனைத்து வழிகளும் மூடப்பட்டன. குற்றவாளிகள் தப்பிச் செல்லாதபடி போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். வாகனங்கள் அனைத்தும் கடுமையான சோதனைக்குப் பின்னரே செல்ல அனுமதிக்கப்பட்டன.போலீஸ் முதற்கட்ட விசாரணையில், ஆந்திர மாநிலம், மசூதியில் நடந்த வெடிகுண்டு சம்பவம் போன்று இந்தச் சம்பவமும் நடத்தப்பட்டுள்ளது தெரிந்தது. ஒரே கும்பல் தான் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
பெங்களூரு நகரப் போலீஸ் கமிஷனர் சங்கர் பிதரி கூறுகையில், ""ஆந்திர மாநிலம் மசூதியில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் போன்றே நடந்துள்ளது. அதிக சக்தி இல்லாத வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதால், பெரிய அசம்பாவிதம் நடக்கவில்லை. சிமி இயக்கத்தினர், அல்கொய்தா அமைப்பினர் இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம்,'' என்றார்.கர்நாடக உள்துறை அமைச்சர் ஆச்சார்யா கூறுகையில், ""மக்கள் கூடும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. குண்டுவெடிப்புச் சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்கின்றனர் என்பதைக் கண்டறிய விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது,'' என்றார்.

கச்சத்தீவும்,கலைஞரின் நீலிக் கண்ணீர் கபடநாடகமும்!

Posted on Tuesday, July 22, 2008 by நல்லதந்தி

நடந்த சம்பவங்களில் இருந்து தனக்கு சாதகமானவைகளை மட்டும் தேர்ந்தெடுத்து அந்தந்த நேரத்திற்க்கு தகுந்தாற்ப் போல சமயம் பார்த்து வெளியிட்டு மக்களைத் திசைத்திருப்பும் கலையில்
டாக்டர் பட்டம் வாங்கியவர் கலைஞர் கருணாநிதி(ஒரு இதனால்தான் கலைஞர் என்று அழைக்கப் படுகிறாரா?).காமராஜரைப் பெரியாரே பச்சைத் தமிழன் என்று கூறினார் என்பார்கள்.ஆனால் பெரியார் காமராஜரை பச்சைத் தமிழன் என்றழைத்துப் பலகாலம் கழித்து, இவர்கள் "காக்கா" என்று கிண்டலடித்ததை மறைத்து,கடைசிகாலத்தில் காமராஜர் ,என்னிடத்தில் தமிழ்நாட்டை,தமிழ் மக்களை, நீங்கள்தான் காப்பற்ற வேண்டும் என்று சொன்னார் என்பார்.மறுப்பதற்க்குத்தான் காமராஜர் உயிரோடு இல்லையே!

எம்ஜியாரை வாயில் வந்தபடி கோமாளி,மலையாளி,வெஜிடபுள் என்று கண்டபடி திட்டிவிட்டு,நாற்பதாண்டு கால நண்பர் என்று தேர்தல் நேரத்தில் அதிமுக தொண்டர்களின் ஓட்டுக்களைப் பிடுங்க,அதிமுகவினரை, ஏமாற்ற சொல்லவில்லையா?.

அந்த வரிசையில் கச்சத்தீவை தன் ஆட்சிக்காலத்தில் மத்திய அரசு தாரை வார்த்துக் கொடுத்து விட்டு, அப்போதே கண்டனம் தெரிவித்தேன் என்று மக்களை ஏமாற்ற,கதை விடுவதை தோலுரித்துக் காட்டியுள்ளார்.முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.

கச்சத்தீவை தாரை வார்த்த காலத்தில் அன்று அமைச்சராக இருந்த, திரு.சி.பா.ஆதித்தனாரின் வாரப் பத்திரிக்கையான ராணி முழுக்க,முழுக்க அப்போது திமுக சார்பு நிலையில் இருந்தது.அப் பத்திரிக்கை அப்போது எழுதிய தலையங்கத்தின் ஒரு பகுதியைப் பார்ப்போம்.

" கச்சத்தீவு பறி போய் விட்டது! கருணாநிதி ராஜினாமா செய்ய வேண்டும்!" என்கிறார் எம்.ஜி.ஆர்!.
கச்சத்தீவை தானம் கொடுத்தவர்,இந்திரா.அவரை ராஜினாமா செய்யச்சொல்ல எம்.ஜி..ஆரால் முடியாஇல்லை.ஆனால், கருணாநிதியை ராஜினாமா செய்யச் சொல்லுகிறார்!.
"கருணாநிதி ஏன் தடுக்கவில்லை? "என்று எம்.ஜி.ஆர் கேட்கிறார்.தடுக்கவோ-அந்த முயற்சியைமுடக்கவோ கருணாநிதிக்கு ஏது அதிகாரம்!.
பீகாரில் சட்டசபையைக் கலைக்க வேண்டும் என்று ஜெயப்ப்பிரகாசர் போரட்டம் நடத்துகிறார்.அதற்க்கு முன்னோடியாக அவரை ஆதரிக்கும் எம்.எல்.ஏ க்கள் எல்லோரும் ராஜினாமா செய்து விட்டார்கள்!.அதே போல, தமிழ்நாடு சட்டசபையைக் கலைத்தால்தான் கச்சத்தீவு பிரச்சனை தீரும் என்று எம்.ஜி.ஆர் நினைத்தால்,முதலில் அவர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யலாமே!.அவரது கட்சி எம்.எல்.ஏ, எம்.பிக்களை விலகச்சொல்லலாமே!.

இதிலிருந்து கருணாநிதி அந்த நேரத்தில் கச்சத்தீவிற்காக எந்த துரும்பையும் நகர்த்தவில்லை என்பதும்.அது பறி போவதை தடுக்கச் சொன்னதற்காக எம்.ஜி.ஆர் மீது அரசியல் தாக்குதல் நடத்தியதையும் உணர முடிகிறது.

இப்போதாவது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறுவதில் உள்ள உண்மையை புரிந்து கொள்வோம்!.




"கச்சத் தீவை தாரை வார்ப்பதற்கு தான் தான் காரணம் என்ற குற்றம் வந்து விடும் என்பதால், உண்ணாவிரதம் என்ற நாடகத்தை நடத்தி, காதில் பூ சுற்றும் வேலையில் கருணாநிதி இறங்கியிருக்கிறார்' என அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: கச்சத் தீவு தொடர்பாக இந்திய-இலங்கை ஒப்பந்தம், கையெழுத்தாகி கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கழித்து, தமிழக சட்டசபையில் தீர்மானத்தை கருணாநிதி நிறைவேற்றியுள்ளார். இதன் மூலம் தமிழகத்தின் மீதும், தமிழர்கள் மீதும் அவருக் குள்ள பற்று தெளிவாகிறது.கச்சத் தீவை தாரை வார்க்க இந்தியா தயாராகி விட்டது என்பது கருணாநிதிக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கிறது. ஆனால், இதைப் பற்றி எதுவும் தெரியாதது போல் நாடகமாடி, உடன்பாடு கையெழுத்தான பிறகு பிரதமருக்கு கடிதம் எழுதியும், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியும் ஒரு கண் துடைப்பு நாடகத்தை 1974ம் ஆண்டிலேயே கருணாநிதி அரங்கேற்றியிருக்கிறார்.உண்மையிலேயே, கருணாநிதிக்கு மீனவ மக்களின் மீது அக்கறை இருந்திருந்தால், தீர்மானத்தை நிறைவேற்றி, மிகப் பெரிய போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும்.
ஆனால், அதை செய்யத் தவறிவிட்டார். சட்டசபை தீர்மானத்தில் கூட மத்திய அரசு செய்து கொண்ட ஒப்பந்தம் "வருத்தம் அளிக்கிறது' என்று தான் குறிப்பிட்டிருக்கிறாரே தவிர, "எதிர்க்கிறோம்' என்ற சொல் எங்கேயும் இடம் பெறவில்லை.கச்சத் தீவை தாரை வார்ப்பதற்கு தான் தான் காரணம் என்ற குற்றம் வந்து விடும் என்பதால், உண்ணாவிரதம் என்ற நாடகத்தை நடத்தி, காதில் பூ சுற்றும் வேலையில் கருணாநிதி இறங்கியிருக்கிறார்.

நாகேஷின் உடல் நலம் குறித்து பரவிய வதந்தி!

Posted on Monday, July 21, 2008 by நல்லதந்தி

தமிழ்த் திரையுலகின் ஜாம்பவான்களில் ஒருவரும், நகைச்சுவை நடிப்புக்கு தனி இலக்கணம் வகுத்தவருமான நடிகர் நாகேஷ் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக செய்தி பரவியதையடுத்து அவரது ரசிகர்களும் திரையுலகமும் அதிர்ச்சியடைந்தது.தமிழ்த் திரையுலகம் கண்ட மிகப் பெரும் நடிகர்களில் ஒருவர் நாகேஷ். நகைச்சுவை நடிகராக மட்டும் இல்லாமல், நாயகன், குணச்சித்திரம், வில்லன் என பல தரப்பட்ட கேரக்டர்களில் கலக்கியவர்.நேற்று பிற்பகலில் நாகேஷ் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் பரவியது. நாகேஷ் உடல்நிலை சரியில்லாமல் இருப்பது உண்மைதான். ஆனால் மற்றவர்கள் சொல்வது போல் எதுவும் இல்லை. விரைவில் அவர் தேறி விடுவார் என்று அவரது வீட்டினர் தெரிவித்தனர்.இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் எனப் புகழப்படும் நாகேஷூக்கு இப்போது 75 வயதாகிறது. ஆனாலும் நடிப்புக்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் தசாவதாரம் படத்தில் கமலுக்கு தந்தையாக நடித்திருந்தார்.இன்னும் சில படங்களில் நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் நடித்து வருகிறார். சமீப நாட்களாக உடல்நலக் கோளாறுகளால் அவதியுற்று வந்தார்.



அவது உடல்நலம் மிக விரைவாகத் தேற இறைவனைப் பிரார்த்திப்போம்.கூட்டுப் பிரார்த்தனை சக்தி வாய்ந்தது!

சொன்னதைச் செய்யும் கழக அரசு ||| மின்வெட்டுத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி!

Posted on Saturday, July 19, 2008 by நல்லதந்தி

கடந்த ஒன்பது மாதங்களுக்கும் மேலாகவே மின்வெட்டு தமிழகமெங்கும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது.சென்னையைத்தவிர!.
மின் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியைத் தவிர தமிழக மக்கள் அனைவருக்கும் மின் வெட்டு இருப்பது அவர்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்ததால் தெரிந்தது.ஆற்காடு வீராசாமி மட்டும் மயக்கத்திலேயே இருந்ததால் மின்வெட்டு இருப்பது அவருக்கு மட்டும் தெரியாமல் போனது!.
ஒரு கட்டத்தில் நெருக்க்கடி அதிகரிக்கவே மின்வெட்டு இல்லை ஆங்காங்கே மின் தடை மட்டும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்று உளற ஆரம்பித்தார்.போராட்டம் எல்லை மீறவே மின்வெட்டிற்க்கு சப்பைகட்டு கட்ட ஆரம்பித்தார்.


அப்போது உளறியதை கீழே பார்க்கவும்! .

இன்று உளறியதை அதற்கும் கீழே பார்கவும்!.

சொன்னதை செய்யும் அரசு வாழ்க!

மே மாதம் சொன்னது!


வரும் 15ம் தேதி முதல் தொழிற் சாலைகளுக்கான மின்சார விடுமுறை ரத்தாகிறது. அடுத்த 15 நாட்களில் தமிழகம் முழுவதும் மின்சார தட்டுப்பாடே இருக்காது,'' என்று தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார். திருச்சியில், மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த மாதம் 27ம் தேதி தொடங்கி காற்றாலை மூலம் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்குக் கிடைக்கிறது. மின் தேவையைப் பூர்த்தி செய்ய வெளிமாநிலத்திலிருந்து மின்சாரம் வாங்குவது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
காற்றாலை மின்சாரம் தற்போது கிடைப்பதால், வரும் 15க்குப் பிறகு தொழிற்சாலைகளுக்கான மின் வார விடுமுறை ரத்து செய்யப்படும். தமிழகத்தில் தற்போது மின்வெட்டு இல்லை. சில பகுதிகளிலுள்ள சிறிய அளவிலான மின்வெட்டு பாதிப்பும் வரும் 30ம் தேதிக்குப் பின் முற்றிலும் இருக்காது. தடையின்றி சப்ளை இருக்கும்.
தமிழகத்தில் மே மாதம் 30ம் தேதிக்குப் பிறகு காற்றாலை மூலம் மேலும் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கூடுதலாகக் கிடைக்கும். அதை மத்திய அரசின் பவர் டிரேடிங் கார்ப்பரேஷனுக்கு யூனிட் ஒன்றுக்கு ஏழு ரூபாய் என விற்கப்படும். அதன் மூலம் இரண்டாயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.

(மிச்சம் இருக்கும் மின்சாரத்தை விற்பார்களாம்! இது எப்படி இருக்கு! :) )


தற்போது சொல்வது!


"சென்னை மாநகரில் தினமும் ஒரு மணி நேரமும், மற்ற மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் தினமும் இரண்டு மணி நேரமும் மின் வெட்டு அமல்படுத்தப்படும். தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும். தென்மேற்கு பருவமழை பெய்து, நீர் நிலைகளில் போதுமான அளவு இருப்பு வரும் வரை இந்த நிலை நீடிக்கும்' என்று மின்துறை அமைச் சர் ஆற்காடு வீராசாமி அறிவித்தார்.தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை சமாளிப்பது குறித்து, தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு தொழில் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, நிதித்துறைச் செயலர், தொழில் துறைச் செயலர், எரிசக்தித்துறைச் செயலர், மின்வாரிய அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பின், அமைச்சர் ஆற்காடு வீராசாமி நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்துக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரம் மெகா வாட் மின்சாரம் பற்றாக்குறை உள்ளது. நாம் எதிர் பார்த்த அளவுக்கு காற்றாலையில் இருந்து மின்சாரம் உற்பத்தி ஆகவில்லை.காற்று சரியான அளவு வீசாததால், எதிர்பார்க்கப்பட்ட இரண் டாயிரத்து 700 மெகா வாட் மின்சாரத்துக்குப் பதிலாக ஆயிரத்து 800 மெகா வாட் மின்சாரம் தான் கிடைக்கிறது.
மழை பெய்யாததால் நீர் மின் சாரம் அதிகமாக கிடைக்கவில்லை. மத்திய தொகுப்பில் இருந்து நமக்கு வர வேண்டிய மின்சாரத்தில் 60 சதவீதம் தான் கிடைத்துக் கொண்டிருக்கிறது.அண்டை மாநிலங்களிலும் இதே நிலைமை தான் உள்ளது. கர்நாடகாவில் உள்ள அணைகளில் தண்ணீர் இல்லை. கேரளா நம்மிடம் நான்கு டி.எம்.சி., தண்ணீர் கேட்டுக் கொண்டுள்ளது. எனவே, தொழிற்சாலைகளுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட வாரம் ஒரு நாள் விடுமுறை திட் டம் பற்றி விவாதிக்கப் பட்டது
.
இதன்படி, தமிழகத்தை ஆறு பகுதிகளாகப் பிரித்து, வாரத்துக்கு ஒரு நாள் ஒவ்வொரு பகுதியிலும் தொழிற்சாலைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்.கடந்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே 15 வரை இந்த திட்டத்தை அமல்படுத்திய போது அளிக்கப் பட்ட வரிச்சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று தொழிலதிபர்கள் கேட்டனர். அந்த வரி விலக்கு மேலும் தொடர்ந்து அளிக்கப்படும்.
இது தவிர, பர்னேஸ் ஆயிலை பயன்படுத்தி மின் உற்பத்தி செய் யும் தொழிற்சாலைகளுக்கு, "வாட்' வரி விலக்கு அளிக்கப் படும்.மேலும், டீசலை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு, "வாட்' வரி விலக்கு அளிக்க வேண்டுமென்ற புதிய கோரிக்கையை வைத்தனர்.
இது பற்றி விவாதித்து இறுதியில், இதனால் தொழிற்சாலைகளுக்கு ஏற்படும் இழப்பை, 60 சதவீதத்தை அரசும், 40 சதவீதத்தை தொழிற்சாலைகளும் ஈடு செய்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.இந்த முடிவுகள் அனைத்தும் முதல்வர் கருணாநிதி மற்றும் நிதியமைச்சருடன் கலந்து பேசி, உடனடியாக அறிவிப்பாக வெளியிடப்படும். தமிழகத்தில் அறிவிக் கப்படாத மின் வெட்டு இருக் காது. (மீண்டும் பயமுறுத்துகிறார்!)
மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் குறிப் பிட்ட நேரம் மட்டும் மின் தடை செய்வதன் மூலம் 300 மெகா வாட் மின்சாரம் மிச்சமாகும். சென்னையை எட்டு பகுதிகளாகப் பிரித்து, காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை, எட்டு மணி நேரத்தில் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு மணி நேரம் மின் நிறுத்தம் செய்யப்படும். இதேபோல, மற்ற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் தினமும் இரண்டு மணி நேரம் மின் தடை இருக்கும்.
கிராமப்புறங்களில் ஏற்படும் அதிக மின் தடையை சரி செய்யத் தான் இந்த முறை அமல்படுத்தப் படுகிறது. அதிகபட்சம் வாரத் துக்கு நான்கு நாட்கள் தினமும் 4 முதல் 5 மணி நேரமும், இரண்டு நாட்கள் மட்டும் 6 மணி நேரமும் விவசாயத்துக்கு மின்சாரம் வழங்கப் படும்.தென்மேற்கு பருவமழை நன் றாக பெய்து, நீர்த்தேக்கங்களில் ஆயிரம் மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய அளவுக்கு இருப்பு வரும் வரை இந்த நிலைமை இருக்கும்.
இரவு நேரங்களில் மாணவர்கள் படிப்புக்கு தடை ஏற்படக்கூடாது என்பதற்காக, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கண்டிப்பாக மின் தடை கூடாது என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல, குடிநீர் வினியோகம் அனைவருக்கும் கிடைக்கும் வகையில், அதற்கான மின் வெட்டு இருக்காது. மருத்துவமனைகளுக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பால் உற் பத்திப் பிரிவுகளுக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மின் உற்பத்தித் திறனை அதிகரிக்க, ஐந்தாயிரம் மெகா வாட் மின் உற்பத்திக்கு திட்டங்கள் தீட்டி, டெண்டர் விடப்பட்டு, பணிகள் துவக்கப்பட உள்ளன. அடுத்த ஆண்டில் பணிகள் முடிவடைந்து நான்காயிரத்து 500 மெகா வாட் மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.என்று அமைச்சர் கூறினார்.

மீனவர் பிரச்சனை- - -நொடியில் தீர்வு கண்ட தமிழகமுதல்வர் கலைஞர்!

Posted on Friday, July 18, 2008 by நல்லதந்தி

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கப்பற்படையினரால் அடிக்கடி துப்பாக்கி சூடு நடத்தப்படுகிறது.இதனால் தினம் தினம் செத்துப் பிழைக்கின்ற மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் சில நாட்களுக்கு முன்பு இராமேஸ்வரத்தில் போராட்டம் நடத்தினார்கள்.விஜயகாந்தும் கலந்து கொண்டு தமிழக அரசின் கையலாகாதனத்தை சாடினார்.இதனால் அதிருப்தி அடைந்த தமிழக முதல்வர் மீனவர்களை அழைத்து வரும் 19ம் தேதி மீனவர் பிரச்சனையை தீர்த்துவைக்கப் போவதாக உறுதி கூறி பிரச்சனையை உடனடியாக தீர்த்து வைத்தார்!. அவர் எடுத்த உடனடி நடவடிக்கை பின் வருமாறு!.


தமிழக மீனவர்கள் பிரச்னையை "மத்திய அரசின் கவனத்திற்கு" கொண்டு வர, தி.மு.க., சார்பில், தமிழகம் முழுவதும் நாளை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:தமிழக மீனவர்கள், இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடிக்கும் போது இலங்கை கடற்படையால் அடிக்கடி கண்மூடித்தனமாக கொல்லப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. மனித உரிமை மீறல்களையும், கடல் எல்லைக்குள் மீன் பிடிக்கும் உரிமைகளையும் சட்ட விரோதமாக தடுத்து, நாள்தோறும் தமிழக மீனவர்களுக்கு பல்வேறு இன்னல்களை இலங்கை கடற்படை ஏற்படுத்தி வருகிறது.
இப்பிரச்னையை "மத்திய அரசின் கவனத்திற்க்கு" முதல்வர் கருணாநிதி பல முறை எடுத்துச் சென்றுள்ளார்.அமைச்சர் ஆற்காடு வீராசாமி, ஸ்டாலின் தலைமையிலான குழு கடந்தாண்டு இலங்கை துணைத் தூதரை சந்தித்து இச்செயல்களை உடனடியாக தடுக்க வலியுறுத்தியும், மீனவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதும், கைது செய்வதும் தொடர்ந்து நடக்கிறது. இந்திய அரசு உடனே இலங்கை தூதரை அழைத்து, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்படுவதைக் கண்டிப்பான முறையில் குறிப்பிட்டு, கண்டனத்தையும் வருத்தத்தையும் தெரிவிக்க வேண்டும்.
இது போன்ற செயல்கள் எதிர்காலத்தில் தொடராமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்திய கடற்படையும் கடலோர பாதுகாப்புப் படையும் இணைந்து பன்னாட்டு கடல் எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும் உடைமை சேதங்களையும் தடுத்து நிறுத்த வேண்டும். "சார்க்' மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ளும் போது இந்தியாவின் கவலையை இலங்கை அதிபரிடம் தெரிவித்து இதுபோன்ற தாக்குதல் நடைபெறாமல் தடுக்க வேண்டும்.
இந்த தீர்மானங்களை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் தி.மு.க., சார்பில் வரும் 19ம் தேதி (நாளை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மாநிலம் முழுவதும் கடலோர நகரங்களிலும், ஊர்களிலும், மாவட்ட தலைமையிடங்களிலும் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க முடிவெடுக்கப்படுகிறது.இவ்வாறு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


வெளிவராத செய்திகள்: -

பிறகு பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த கலைஞரை,நிருபர்கள் விஜயகாந்தின் ஆவேசப்பேச்சைப்பற்றி,கேட்டபோது,காந்தி,இராஜாஜி போன்ற தலைவர்களுடன் அரசியல் நடத்திய நான் இப்போது இம்மாதிரியான விலாசம் தெரியாதவர்களோடு அரசியல் நடத்த நேரிட்டதே என்றென்னும் போது நெஞ்சமே வெடித்து விடும் போல் உள்ளது என்றார்.காந்தி,இராஜாஜி போன்றவர்களோடு நீங்கள் அரசியல் நடத்திய போது அவர்களும் இதே போல வருத்தப்பட்டார்களா?.என்று விபரம் புரியாத ஒரு நிருபர் கேட்டபோது ஆவேசம் அடைந்த கலைஞர், நீ யாருன்னு எனக்குத்தெரியும் வர்ரியா!.இராமேஸ்வரத்திலிருந்து "போட்"ல இரண்டு பேரும் மீன் பிடிக்க சிலோன் வரைக்கும் போகலாமா? என்றார்.அருகில் இருந்த அமைச்சர் வீராசாமி அந்த நிருபரை அன்போடு கழுத்தில் மன்னிக்க தோளில் கை போட்டு அறையை விட்டு அழைத்துச் சென்றார்.

தான் மீனவர்களுக்காக இதுவரை ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்ட கடிதங்களை பிரதமருக்கு அனுப்பியுள்ளதாக கூறிய கலைஞர்,தான் தற்போது தமிழகமுதல்வராக ஆனபிறகு மட்டும் இருநூறு கடிதம் எழுதியாக விபரம் தந்தார்.இப்படி மீனவர்களுக்காக, கூட்ட்ணிக்கட்சி பிரதமர் என்றும் பாராமல் கடிதம் எழுதி தான் பிரதமரைத் துன்புறுத்தியதை சுட்டிக்காட்டினார்.சென்ற முறை தான் கடிதம் எழுதிய போது இலாகா அமைச்சராக இருந்த தாயாநிதி மாறன் தன் அதிகாரத்தைப் பயன் படுத்தி,பிரதமரிடம் கடிதத்தை 10 நாட்கள் தாமதமாகத்தர தபால் ஊழியர்களை மிரட்டிய செய்தி, தனக்கு, அழகிரிக்கும் தயாநிதி மாறனுக்கும் பிரச்சனை எற்பட்ட பிறகுதான் தெரிந்ததென்றும்,அதனால் இம்முறை தாமதத்தை தவிர்க்க கடிதம் இ-மெயில் மூலமாகவே அனுப்பப்படும் என்றார்.மேலும் பிரதமர் இ-மெயிலைத் திறந்து பார்க்காவிட்டால் ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்க அமைச்சர் வீராசாமி மடிக்கணினி எடுத்துக் கொண்டு இப்போதே டெல்லி விரைவார் என்றும் அவர் பிரதமரைச் சந்தித்து கடிதத்தை காட்டிவிட்டுத்தான் சென்னை திரும்புவார்.என்றார்.

நீங்களும் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வீர்களா? என்ற கேள்விக்கு,தொண்டனை மட்டும் போர்களத்திற்க்கு அனுப்பிவிட்டு கோடைவாசஸ்தலத்தில் உல்லாசமாக இருக்கும் தலைமை ,அண்ணா வழியில் வந்த எனக்குத் தெரியாது,அண்ணா எங்களை அப்படி வளர்க்க வில்லை!.என்றார்.

சமீபத்தில் கடலூரில் மகளிர் மாநாடு அணிவகுப்பை ஐந்து மணிநேரம் தொடர்ச்சியாக பார்வையிட்டு பரவசத்துடன்,மக்களுக்காக உழைத்ததை ஆற்க்காட்டாரே பாரட்டியுள்ளார்.தமிழர்களுக்காக பாடுபடும் பத்திரிக்கைகளும் பாரட்டியுள்ளன.ஐந்து மணிநேரம் உழைத்த எனக்கு ஒன்பது மணிநேரம் உழைக்கத்தெரியாதா? என்றார்.

அடுத்த முறை இலங்கை கப்பற்படையினர் தமிழகமீனவர்களைத் தாக்கினால் மீண்டும் பிரதமருக்கு அன்றைய அரசியல் சூழ்நிலையைப் பொறுத்து ஆவேசமாகவோ, அன்பாகவோ கடிதம் எழுதப்படும் என்று கலைஞர் எச்சரித்துள்ளார்.மேலும் அடுத்த முறை உண்ணாவிரதப்போராட்டம் காலை 8 மணியிலிருந்து 5 மணி வரை எனபது 6 மணியிலிருந்து 5 மணி வரை என்று கடுமையாக்கப்படும் என்றும் ஆவேசப்பட்டார்.



சென்ற முறை நடந்த சேது சமுத்திர பந்த்(?!?) உண்ணாவிரதப் போராட்டம் போல் பாதியில் முடியாது என்பதால் தொண்டர்கள் வயிறார சாப்பிட்டு விட்டே உண்ணாவிரதப் பந்தலை அடையுமாறு தொண்டர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.

பல்டியடிக்கும் சோம்நாத் சட்டர்ஜி!

Posted on Thursday, July 17, 2008 by நல்லதந்தி




மக்களவை சபாநாயகர் பதவியில் இருந்து விலக சோம்நாத் சட்டர்ஜி மறுத்துள்ளதால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் கருத்து வேறுபாடு தோன்றியுள்ளது.மக்களவை சபாநாயகராகப் பதவி வகித்து வரும் சோம்நாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு இடதுசாரிகள் தமது ஆதரவை விலக்கிக் கொண்டதை அடுத்து, சபாநாயகர் பதவியில் இருந்து விலகுமாறு, அக்கட்சியினர் சோம்நாத்தை வலியுறுத்தினர். ஆனால், பாஜகவுடன் சேர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசுக்கு எதிராக வாக்களிக்க தமக்கு விருப்பம் இல்லை என்றும், எனவே, சபாநாயகர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என்றும் சோம்நாத் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, குடியரசுத் தலைவரிடம் இடதுசாரிக்கட்சிகள் அளித்த ஆதரவு வாபஸ் கடிதத்தில், சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜியின் பெயரையும் சேர்த்துள்ளதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாலாவிற்க்கு பணமே குறியா?

Posted on Wednesday, July 16, 2008 by நல்லதந்தி

அஜித்திடம் "நான் கடவுள்" படத்தின் ஆரம்பக்கட்டத்தில் தகராறு செய்த பாலா,தற்போது தயாரிப்பாளரிடம் தகராறு செய்யத்தொடங்கியுள்ளார்.இரண்டும் பணத்தைக் குறித்தே!.
அஜித்திடம் அடாவடியாக பணத்தை பிடுங்கினார்.இப்போது என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!.


ஆர்யா, பூஜா நடிப்பில் பாலா இயக்கும் படம் ‘நான் கடவுள்’. இந்தப் படத்தை முதலில் ராஜலட்சுமி பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்தது. இதற்கு பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் ரூ.3.5 கோடி பட்ஜெட் பேசப்பட்டது. படப்பிடிப்பு தொடங்கிய சில மாதங்களில் ரூ.7 கோடி ஆகும் என்று பாலா தெரிவித்தாராம். இதையடுத்து இந்தப் படத்தை பிரமிட் சாய்மீரா நிறுவனம் ரூ. 7 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க முன் வந்து ஒப்பந்தம் போடப்பட்டது. படப்பிடிப்பு முடிந்த நிலையில், இப்போது பட்ஜெட் ரூ.15 கோடியை தொட்டுவிட்டதாகவும் பாக்கி பணத்தை தந்தால் மட்டுமே பிரமிட் சாய்மீரா நிறுவனத்துக்கு படத்தை கொடுக்க முடியும் என்றும் பாலா கூறியதாகத் தெரிகிறது. இதுகுறித்து அவர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கூறியுள்ளார். சாய்மீரா நிறுவனம், அவ்வளவு தொகை கொடுக்க முடியாது என்றும் முதலில் பேசிய தொகைக்கே படத்தை கொடுக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்துள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம், இருதரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

சொந்த செலவில் சூனியம்!

Posted on Wednesday, July 9, 2008 by நல்லதந்தி

தமிழ் சினிமா ஹீரோக்களின் கேரியரில் கடைசிக்கட்டம் எதுவாக இருக்கும்


1.இராமநாரயணன் படத்தில் நடிப்பது


2.V.சேகர் படத்தில் நடிப்பது


3.கலைஞர் கருணாநிதி கதை வசனத்தில் நடிப்பது


இந்த மூன்று முடிவுகளில் எந்த முடிவை ஒரு ஹீரோ எடுத்தாலும் அவருக்கு சனி உச்சக்கட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.பாவம் பிரசாந்த் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் படுகின்ற பாட்டை சொல்லிமாளாது. கலை வாழ்விலும் அவரது சரிவு அதளபதாளத்தில் உள்ளது.

அடுத்து தனது கலைப் பயணத்தையும்,கூடவே தன் சொத்தையும் முடிவிற்க்கு கொண்டு வர தந்தையின் துணையோடு எடுக்கும் முயற்சிதான் கலைஞரின் கதை வசனத்தில் தன் சொந்த தயாரிப்பாக எடுக்கப் போகும் படம்.

பாவம் பிரசாந்த்!.

கலைஞர் எழுதிய பொன்னர் சங்கர் என்ற சரித்திர நாவல் திரைப்படமாகிறது. இதில் பொன்னராகவும், சங்கராகவும் பிரசாந்த் நடிக்கிறார். படத்தை இயக்கப் போவது பிரசாந்தின் அப்பா தியாகராஜன். இரண்டு வேடத்திலும் பிரசாந்த் நடிக்கட்டுமே என்று விரும்பியதும் கலைஞர்தானாம். "தமிழ் திரைப்பட வரலாற்றில் இத்தனை பொருட் செலவில் எடுக்கப்பட்ட முதல் சரித்திரப்படம் இதுவாகதான் இருக்க வேண்டும். ஆஸ்கார் விருதுக்கு ஆசைப்படுகிற தமிழன் அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம். (யப்பா கொசுத் தொல்லைதாங்க முடியலையே நாராயணா!-நல்லதந்தி)இந்த படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்புவேன்" என்கிறார் தியாகராஜன். உலகம் முழுவதும் அலசி, சிறந்த கிராபிக்ஸ் நிறுவனத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார்களாம். அதே மாதிரி முக்கிய காட்சிகளும் வெளிநாட்டில் படமாகவிருக்கிறது. "கதையில் கலைஞர் எழுதியிருக்கும் ஒவ்வொரு வரியையும் அப்படியே திரையில் பதிவு செய்ய விரும்புகிறேன். போர்க் காட்சிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களை பங்கு பெற செய்வேன். அதே போல் கணக்கில் அடங்காத குதிரைகள் யானைகள் என்று பிரமாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது" என்கிறார் தியாகராஜன். சரி, இவ்வளவு செலவை தாங்குகிற தயாரிப்பாளர் வேண்டுமே? "அதனால்தான் என் அப்பாவையே பொன்னர் சங்கரை தயாரிக்க சொன்னேன்" என்கிறார் பிரசாந்த்.(இதுக்குப் பேர்தான் சொந்தமா சூனியம் வெச்சிக்கிறதோ-நல்லதந்தி) ஒன்றரை வருடத்திற்கு முன்பே முழு ஸ்கிரிப்டையும் கொடுத்துவிட்டாராம் கலைஞர். அதை திரைக்கேற்ப வடிவமைக்கவே இத்தனை மாதங்கள் ஆகிவிட்டதாம். "என் கல்லூரி நாட்களில் இந்த கதையை படித்துவிட்டு இதை படமாக்கி அதில் நடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால், இப்போதுதான் அது கனிந்திருக்கிறது. நான் ஆசைப்பட்டதை என் பிள்ளை செய்கிறார்" என்றார் தியாகராஜன்.

நன்றி: தமிழ் சினிமா:-

பஞ்ச் டயலாக்குகள் பதினொன்னு!

Posted on by நல்லதந்தி

விஜயகாந்த் : உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு, பணம் மட்டும் எப்பவுமே வீட்டுக்கு!. ஆங்!




கார்த்திக் : ஹேய்! நா..நா...நான்! . இண்டர் நெட்லீயே மக்களை வாட்ச் பண்ணிக்கிட்டே இருக்கேன்.இண்டர் நெட்டிலீயே ஓட்டு கேட்டு,இண்டர் நெட்டிலீயே முதலமைச்சர் ஆயிடுவேன்!.



டி.ஆர்.பாலு : கோவிந்தராஜ பெருமாள் சிலைய கடலில கொண்டுபோய் போட்டது.எங்க கம்பனி Boat கள் தான். இதுக்கு ஆதாரம் அய்யன் கலைஞர் கையிலெ இருக்கு.



ரஜினிகாந்த் : ஹே ஹே ஹே..... ஆண்டவன் தசாவதாரத்திற்க்கு ஒரு மாச கலைக்சனை அள்ளி கொடுப்பான்.அப்புறம் கை விட்டுவிடுவான்.ஆனா ரோபோ விற்க்கு சோதனைய நிறைய கொடுப்பான்.ஆனா கை விடமாட்டான்.



கமலஹாசன்: ம்ம்ம்ம்... நான் மைதா மாவு இல்லன்னா சொல்றேன். இருந்து இருந்தா நல்லா இருக்கும்ன்னு தானே சொல்றேன்.



கலைஞர் : நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது, நாங்கள் என்று சொன்னாலும் உதடுகள் ஒட்டாது.ஆனா தமிழ் மக்களுக்கு நாமம் என்று சொன்னால் உதடுகள் ஒட்டுவது மட்டுமல்ல, நம் நெஞ்சும் மகிழ்ச்சியில் முட்டும்.



தயாநிதி மாறன்: இந்தியாவில் உள்ள சேனல் மட்டுமல்ல உலகத்திலுள்ள எல்லா சேனலும் ஒரு ரூபாய்க்கு விரைவில் வழங்கப்படும்..........ஒரு நிமிடத்திற்க்கு ஒரு ரூபாய் மட்டுமே . பாருங்க பாருங்க பாத்துக்கிட்டே இருங்க.



புரட்சித்தலைவி: அம்மா என்றால் அன்பு.அய்யா என்றால் வம்பு.


அஞ்சாநெஞ்சன் அழகிரி: நான் தாயாநிதி மாறனுக்கு மட்டும் கெட்டவனா? இல்ல தம்பிக்கும் சேர்த்தி கெட்டவனா? புரியிலியே.


கவிஞர் கனிமொழி: மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்.இதுதாங்க நான் எழுதிய ஒரே கவிதை. மண்டபத்தில எழுதிக் கொடுத்து ,வாங்கிட்டு வந்து படிக்கலைங்க



இளையதிலகம் பிரபு: நான் சும்மா வீட்டில உட்காந்து பல்லு குத்திக்கிட்டிருந்தேங்க. அப்போ தமிழ் மக்கள் ஞாபகம் வந்துடிச்சி.இனிமே வீட்டில உட்காந்து பல்லு குத்தமாட்டேங்க. தமிழ் மக்களுக்காகவே உழைச்சி உயிர் கொடுப்பேங்க. அப்பாவுக்கு விழுந்த ஓட்டில பாதி விழுந்தா கூட போதும் இந்தியாவின் ஜனாதிபதி ஆயிடுவேங்க.

ஆப்பை பிடுங்கிய மார்க்சிஸ்டா? ஆப்படித்த மார்க்சிஸ்டா?

Posted on Tuesday, July 8, 2008 by நல்லதந்தி

அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது என பிரதமர் மன்மோகன் சிங் நேற்று பேட்டியளித்ததை தொடர்ந்து அரசுக்கு அளித்து வரும் ஆதரவை இடதுசாரிகள் வாபஸ் பெற்றுள்ளன. டெல்லியில் இன்று அவசரமாக கூடி ஆலோசித்த இடதுசாரி தலைவர்கள், இந்த முடிவை அறிவித்தனர். ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை நாளை காலை சந்தித்து ஆதரவு வாபஸ் கடிதத்தை அளிக்கின்றனர்.அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிடாவிட்டால் ஆதரவை விலக்கிக் கொள்வோம் என கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசை இடதுசாரிகள் மிரட்டி வந்தன. இதனால் ஒப்பந்தத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதில் மத்திய அரசு தயக்கம் காட்டி வந்தது. இடதுசாரிகளை சமாதானப்படுத்தும் வகையில் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் ஒருங்கிணைப்பு கமிட்டி ஒன்றும் அமைக்கப்பட்டது. இது பல முறை கூடி விவாதித்தும் இடதுசாரிகள் தங்கள் நிலையிலிருந்து சற்றும் இறங்கவில்லை. ஒப்பந்தம் குறித்து மத்திய அரசு தனது நிலையை இன்று மாலைக்குள் தெரிவிக்க வேண்டும் என இறுதி கெடு வைத்தனர். இந்நிலையில், ஜி-8 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று தனி விமானத்தில் ஜப்பான் புறப்பட்ட பிரதமர் மன்மோகன் சிங், விமானத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், Ôஅணுசக்தி ஒப்பந்தத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில் சர்வதேச அணுசக்தி கழகத்துடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்Õ என்றார். மேலும் இது தொடர்பாக ஜப்பான் மாநாட்டில் அமெரிக்க அதிபர் புஷ் உள்பட உலக தலைவர்களுடன் பேசவிருப்பதாகவும் அறிவித்தார். இதனால் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக இருப்பது மறைமுகமாக இடதுசாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வது குறித்து முடிவு எடுப்பதற்காக இன்று மாலை 4 மணிக்கு நடப்பதாக இருந்த இடதுசாரி தலைவர்கள் கூட்டம், காலை 11.30 மணிக்கு டெல்லியில் அவசரமாக கூடியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத், இந்திய கம்யூனிஸ்ட் ஏ.பி.பரதன், டி.ராஜா, பார்வர்டு பிளாக் மற்றும் ஆர்எஸ்பி உள்ளிட்ட இடதுசாரி கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பிரதமரின் அறிவிப்பை மத்திய அரசின் நிலையாக எடுத்துக் கொள்வது என்றும், மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்வது என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களிடம் பேசிய பிரகாஷ் கரத், 'மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறுவது என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான கடிததத்தை நாளை காலை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவும் முடிவு செய்யப்பட்டது' என அறிவித்தார்.

புரட்சித்தலைவியின் விளாசல் ---- புத்தி வருமா?

Posted on by நல்லதந்தி

'ஒரு மாநிலத்தின் முதல்வர் என்பதை மறந்து திரைப் படம், நாடகம், ஆட்டம் போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் முதல்வர் கருணாநிதி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு திரைப்படத்துறைக்கே சென் றால், நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும்'என அ।தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, "திருமண நாள், பிறந்த நாள் போன்றவற்றின்போது, கருணாநிதியை தொந்தரவு செய்வதை தவிர்த்தால், மக்கள் நலத்திட் டங்களில் அவர் அதிக கவனம் செலுத்த முடியும்' என தொண்டர்களை கேட்டுக் கொண்டிருக்கிறார்। நாடு அசாதாரண சூழ் நிலையை சந்தித்துக் கொண்டிருப்பதாலும், பொதுத்தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதாலும், தனக்கு உருவாகி உள்ள தவறான தோற்றத்தை மாற்றிக் கொள்ள, நாட்டுப்பணிகள் மற்றும் வளர்ச்சிப்பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, தமிழகத்தை முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் செல்வது போல் பாவனை காட்டுவதற்காக இதுபோன்ற முடிவை எடுத்திருக்கிறார் என்று நினைத்தேன்.நான் என்ன நினைத்தேனோ, அதைத் தான் கருணாநிதி செய்திருக்கிறார்.

கருணாநிதி கதை, வசனம் எழுதிய " உளியின் ஓசை' படத்தின் சிறப்புக்காட்சிக்கு யார் யாரை அழைப்பது என்ற தீவிர சிந்தனையில் மூன்று நாட்கள் ஈடுபட்டிருந்தது தற்போது அம்பலமாகிவிட்டது. கடைசியாக தன் குடும்ப உறுப்பினர் உள்பட 150 பேரை திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு கருணாநிதி அழைத்திருக்கிறார். வந்தவர்கள் கருணாநிதியை புகழ அவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்திருக்கிறார்.ஆனால், அன்று இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகமே பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால் திண்டாடிக்கொண்டிருந்தது. மறுநாள் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் மேற் கொண்டனர். மக்கள் வேதனையில் நோகையில், குடும்ப உறுப்பினர்களுடன் அமர்ந்து "உல்லாச உலகம் எனக்கே சொந்தம்' என்ற பாணியில், திரைப்படத்தைக் கண்டுகளித்திருக்கிறார் கருணாநிதி.
அவருக்கு உண்மையிலேயே நாட்டு மக்களின் மீது அக்கறை இருந்திருக்குமானால், உளியின் ஓசை சிறப்பு காட்சியை பார்ப்பதை நிறுத்திவிட்டு மத்திய அரசுடன் பேசி, லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அன்றைக்கே முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும். தான் ஒரு மாநிலத்தின் முதல்வர் என்பதை மறந்து திரைப்படம், நாடகம், ஆட்டம் போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் முதல்வர் கருணாநிதி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு திரைப்படத் துறைக்கே சென்றால், அது நாட்டு மக்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சிட்டுக்குருவி லேகியம்VSதர்ப்பூசணி

Posted on Sunday, July 6, 2008 by நல்லதந்தி

இந்தியாவில் எளிதாகக் கிடைப்பது தர்ப்பூசணி। வெயில் காலத்தில் மக்கள் தேடித் தேடிப் பார்த்து வாங்கி இந்தப் பழத்தை உண்பார்கள்। தாகத்தை மட்டுமே தணிக்கும் ஆற்றல் உள்ள தர்ப்பூசணிக்கு தற்போத ஆண்மையின் ஆற்றலை அதிகரிக்கும் சக்தி உண்டு என்று ஓரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள இந்திய டாக்டர் தலைமையிலான மருத்துவக்குழு ஒன்று மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது. தர்ப்பூசணியில் வயாகரா மாத்திரைக்கு இணையான மகத்துவம் இருப்பதாக அந்த மருத்துவக்குழு ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளது. தர்ப்பூசணி பழத்தில் உள்ள சிட்லின் என்ற சத்துப்பொருள், ரத்த நாளங்களை விரிவடையச் செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் என்றும், ரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புக்களை அந்தச் சத்துப்பொருள் ஊக்குவிப்பதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: தர்ப்பூசணியின் சதையை அடுத்த வெள்ளைத்தோலில் தான் இந்த சமாச்சாரம் அதிகம் உள்ளதாம்.பச்சைத்தோலையும் சாப்பிட்டு விட்டு வாய் கசக்கிறது என்று சொல்லாதீர்கள்!

கலைஞர் பாணியில் இராமதாஸ் சமிக்ஞையா?

Posted on Friday, July 4, 2008 by நல்லதந்தி

வன்னியர் சங்க தலைவர் குரு கைது செய்யப்பட்டிருப்பதும், அது தொடர்பான நிகழ்வுகளும் மினி எமர்ஜென்சியை நினைவுபடுத்துகிறது, என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
"காவல் துறையினர் நேற்று அதிகாலை நேரத்தில் வீடு புகுந்து, தூங்கிக்கொண்டிருந்த குருவை கைது செய்திருக்கிறார்கள். ஊரில் அவர் இல்லாத நேரத்தில் நடந்ததாக ஒரு சம்பவத்தை சித்தரித்து, அதில் அவரை இணைத்து பொய் புகார் கொடுக்கச் செய்து, கைது செய்துள்ளனர். திமுக அரசின் இந்த பழிவாங்கும் நடவடிக்கையை பாமக வன்மையாக கண்டிக்கிறது.உடனடியாக ஜாமீனில் விடக் கூடிய பிரிவின் கீழ் முதலில் புகார் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அதில் கொலை முயற்சி பிரிவு சேர்க்கப்பட்டிருக்கிறது. தலைமறைவாக இருக்கிறார் என்று சொல்லி கைது ஆணை பெற்றிருக்கிறார்கள். மேலிட நிர்பந்தம் பேரில்தான் இதெல்லாம் சேர்க்கப்பட்டிருக்கிறது.சம்பவம் நடந்ததாக சொல்லப்படும் நாளில் குரு ஊரில் இல்லை. வன்னியர் சங்க தலைவர் என்ற முறையிலும் பாமக முக்கிய நிர்வாகி என்ற முறையிலும் பல நிகழ்ச்சிகளில் குரு கலந்து கொள்கிறார். நேற்றுகூட திருவிழா, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார். ஆனாலும், தலைமறைவாக இருக்கிறார் என்ற பொய்யான தகவலை தெரிவித்து, அவரை கைது செய்ய ஆணை பெறும்படி உள்ளூர் காவல் துறையினரை மாவட்ட காவல் துறை நிர்வாகம் நிர்ப்பந்தம் செய்திருக்கிறது.திமுக தலைவர் கருணாநிதி எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறாரோ, அப்போதெல்லாம் குரு மீது பொய் புகார்களை பெற்று, வழக்கு போட்டு பழி வாங்குவது தொடர்ந்து நடக்கிறது.நள்ளிரவில் என்னை கைது செய்துவிட்டார்கள் என்று முன்பு துடித்தவர் கருணாநிதி. அப்போது அரசியலில் வேறு அணியில் இருந்தாலும், ஓடோடிச் சென்று சிறையில் அவரைச் சந்தித்து ஆறுதல் சொல்லியிருக்கிறேன். அதற்கெல்லாம் கைமாறாகத்தான், 2 கோடி வன்னிய மக்களின் தளபதியாக விளங்கும் குருவை நள்ளிரவு பொழுதில் கைது செய்துள்ளனர். வீட்டின் கதவை உடைத்து சோதனை என்ற பெயரில் அராஜகம் நிகழ்த்தியிருக்கிறார்கள்.பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை எல்லாம் கைது செய்து, அவர்களது வீடுகளிலும் சோதனை என்ற பெயரில் வெறியாட்டம் போட்டிருக்கின்றனர். திமுக ஆட்சியின் இந்த அராஜக பழிவாங்கும் நடவடிக்கைகள், மினி எமர்ஜென்சியை நினைவுபடுத்துகிறது.எதிர்வரிசையில் இருந்தபொதெல்லாம், காவல்துறையில் அடக்குமுறை என்றும் ஜனநாயக படுகொலை என்று எதையெல்லாம் சொல்லி வந்தார்களோ அவற்றையெல்லாம் ஆட்சிக்கு வந்ததும் திமுக அரங்கேற்றி வந்திருப்பதை தமிழகம் கண்டு வந்திருக்கிறது. ஜனநாயக விரோதமான இந்த நடவடிக்கைகளை ஜனநாயக சக்திகள் அனைத்தும் கண்டிக்க வேண்டும். திமுக அரசின் இந்த வரலாறு காணாத அடக்குமுறையை கண்டு பாமகவினரின் உள்ளம் கொதிக்கத்தான் செய்யும். அதன் விளைவாக தங்களது எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளிப்படுத்த அவர்கள் துடிப்பது இயற்கை. எந்த சூழ்நிலையிலும் வன்முறைக்கு அவர்கள் இடம் கொடுத்து விடக்கூடாது. பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது. உண்ணா விரதம், தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் போன்ற வழிகளில் எதிர்ப்பை வெளிப்படுத்தலாம்." இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.