கச்சத்தீவும்,கலைஞரின் நீலிக் கண்ணீர் கபடநாடகமும்!

Posted on Tuesday, July 22, 2008 by நல்லதந்தி

நடந்த சம்பவங்களில் இருந்து தனக்கு சாதகமானவைகளை மட்டும் தேர்ந்தெடுத்து அந்தந்த நேரத்திற்க்கு தகுந்தாற்ப் போல சமயம் பார்த்து வெளியிட்டு மக்களைத் திசைத்திருப்பும் கலையில்
டாக்டர் பட்டம் வாங்கியவர் கலைஞர் கருணாநிதி(ஒரு இதனால்தான் கலைஞர் என்று அழைக்கப் படுகிறாரா?).காமராஜரைப் பெரியாரே பச்சைத் தமிழன் என்று கூறினார் என்பார்கள்.ஆனால் பெரியார் காமராஜரை பச்சைத் தமிழன் என்றழைத்துப் பலகாலம் கழித்து, இவர்கள் "காக்கா" என்று கிண்டலடித்ததை மறைத்து,கடைசிகாலத்தில் காமராஜர் ,என்னிடத்தில் தமிழ்நாட்டை,தமிழ் மக்களை, நீங்கள்தான் காப்பற்ற வேண்டும் என்று சொன்னார் என்பார்.மறுப்பதற்க்குத்தான் காமராஜர் உயிரோடு இல்லையே!

எம்ஜியாரை வாயில் வந்தபடி கோமாளி,மலையாளி,வெஜிடபுள் என்று கண்டபடி திட்டிவிட்டு,நாற்பதாண்டு கால நண்பர் என்று தேர்தல் நேரத்தில் அதிமுக தொண்டர்களின் ஓட்டுக்களைப் பிடுங்க,அதிமுகவினரை, ஏமாற்ற சொல்லவில்லையா?.

அந்த வரிசையில் கச்சத்தீவை தன் ஆட்சிக்காலத்தில் மத்திய அரசு தாரை வார்த்துக் கொடுத்து விட்டு, அப்போதே கண்டனம் தெரிவித்தேன் என்று மக்களை ஏமாற்ற,கதை விடுவதை தோலுரித்துக் காட்டியுள்ளார்.முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.

கச்சத்தீவை தாரை வார்த்த காலத்தில் அன்று அமைச்சராக இருந்த, திரு.சி.பா.ஆதித்தனாரின் வாரப் பத்திரிக்கையான ராணி முழுக்க,முழுக்க அப்போது திமுக சார்பு நிலையில் இருந்தது.அப் பத்திரிக்கை அப்போது எழுதிய தலையங்கத்தின் ஒரு பகுதியைப் பார்ப்போம்.

" கச்சத்தீவு பறி போய் விட்டது! கருணாநிதி ராஜினாமா செய்ய வேண்டும்!" என்கிறார் எம்.ஜி.ஆர்!.
கச்சத்தீவை தானம் கொடுத்தவர்,இந்திரா.அவரை ராஜினாமா செய்யச்சொல்ல எம்.ஜி..ஆரால் முடியாஇல்லை.ஆனால், கருணாநிதியை ராஜினாமா செய்யச் சொல்லுகிறார்!.
"கருணாநிதி ஏன் தடுக்கவில்லை? "என்று எம்.ஜி.ஆர் கேட்கிறார்.தடுக்கவோ-அந்த முயற்சியைமுடக்கவோ கருணாநிதிக்கு ஏது அதிகாரம்!.
பீகாரில் சட்டசபையைக் கலைக்க வேண்டும் என்று ஜெயப்ப்பிரகாசர் போரட்டம் நடத்துகிறார்.அதற்க்கு முன்னோடியாக அவரை ஆதரிக்கும் எம்.எல்.ஏ க்கள் எல்லோரும் ராஜினாமா செய்து விட்டார்கள்!.அதே போல, தமிழ்நாடு சட்டசபையைக் கலைத்தால்தான் கச்சத்தீவு பிரச்சனை தீரும் என்று எம்.ஜி.ஆர் நினைத்தால்,முதலில் அவர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யலாமே!.அவரது கட்சி எம்.எல்.ஏ, எம்.பிக்களை விலகச்சொல்லலாமே!.

இதிலிருந்து கருணாநிதி அந்த நேரத்தில் கச்சத்தீவிற்காக எந்த துரும்பையும் நகர்த்தவில்லை என்பதும்.அது பறி போவதை தடுக்கச் சொன்னதற்காக எம்.ஜி.ஆர் மீது அரசியல் தாக்குதல் நடத்தியதையும் உணர முடிகிறது.

இப்போதாவது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறுவதில் உள்ள உண்மையை புரிந்து கொள்வோம்!.
"கச்சத் தீவை தாரை வார்ப்பதற்கு தான் தான் காரணம் என்ற குற்றம் வந்து விடும் என்பதால், உண்ணாவிரதம் என்ற நாடகத்தை நடத்தி, காதில் பூ சுற்றும் வேலையில் கருணாநிதி இறங்கியிருக்கிறார்' என அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: கச்சத் தீவு தொடர்பாக இந்திய-இலங்கை ஒப்பந்தம், கையெழுத்தாகி கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கழித்து, தமிழக சட்டசபையில் தீர்மானத்தை கருணாநிதி நிறைவேற்றியுள்ளார். இதன் மூலம் தமிழகத்தின் மீதும், தமிழர்கள் மீதும் அவருக் குள்ள பற்று தெளிவாகிறது.கச்சத் தீவை தாரை வார்க்க இந்தியா தயாராகி விட்டது என்பது கருணாநிதிக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கிறது. ஆனால், இதைப் பற்றி எதுவும் தெரியாதது போல் நாடகமாடி, உடன்பாடு கையெழுத்தான பிறகு பிரதமருக்கு கடிதம் எழுதியும், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியும் ஒரு கண் துடைப்பு நாடகத்தை 1974ம் ஆண்டிலேயே கருணாநிதி அரங்கேற்றியிருக்கிறார்.உண்மையிலேயே, கருணாநிதிக்கு மீனவ மக்களின் மீது அக்கறை இருந்திருந்தால், தீர்மானத்தை நிறைவேற்றி, மிகப் பெரிய போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும்.
ஆனால், அதை செய்யத் தவறிவிட்டார். சட்டசபை தீர்மானத்தில் கூட மத்திய அரசு செய்து கொண்ட ஒப்பந்தம் "வருத்தம் அளிக்கிறது' என்று தான் குறிப்பிட்டிருக்கிறாரே தவிர, "எதிர்க்கிறோம்' என்ற சொல் எங்கேயும் இடம் பெறவில்லை.கச்சத் தீவை தாரை வார்ப்பதற்கு தான் தான் காரணம் என்ற குற்றம் வந்து விடும் என்பதால், உண்ணாவிரதம் என்ற நாடகத்தை நடத்தி, காதில் பூ சுற்றும் வேலையில் கருணாநிதி இறங்கியிருக்கிறார்.

24 Responses to "கச்சத்தீவும்,கலைஞரின் நீலிக் கண்ணீர் கபடநாடகமும்!":

Anonymous says:

இப்பவாவது கருணாநிதியை மீனவர்கள் புரிந்து கொள்வார்களா?

Bleachingpowder says:

எல்லாம் சரிங்க. ஆளுங்கட்சி மட்டும் தான் போராடனுமா? அப்போ எதிர்கட்சியாக இருந்த அதிமுக என்ன பண்ணிட்டு இருந்தாங்க? அவங்களும் மக்களை திரட்டி போராட்டம் பண்ணி டெல்லிக்கு பெரிய எதிர்ப்பை காட்டியிருக்கலாமே.

அவங்களும் இந்த விசியத்தில ரொம்ப அலட்டிகிட்ட மாதிரி தெரியல.

எல்லாத்தும் காரணம் அப்போது ஈழ பிரச்சனை இல்லை, விடுதலை புலிகள் இல்லை அதனால் இந்தியா இலங்கை எல்லையில் இவ்வளவு கடுமையும் இல்லை. அதனால் கச்சத்தீவை தாரை வார்த்தால் பெரிய இழப்பு ஏதும் இல்லை என்று எல்லா கட்சியினரும் எண்ணியிருக்கலாம்

1983ற்கு பிறகுதான் இலங்கை தனது எல்லையை மிக உன்னிப்பாக கண்காணிக்க துவங்கியது. இதற்கு பின் தான் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு சம்பவங்களும் நிகழ துவங்கின

மதிபாலா says:

மேற்கூறியவை முட்டாள் தனமான வாதங்கள்..........நிகழ்வை கூர்ந்து நோக்கினாலே உண்மைகள் தெரிய வரும்.....கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கப்படுவதென்பது இந்தியாவின் கொள்கை...அதில் குறிப்பிட்டுற்றவற்றை சரியாக பின்பற்றுகிறோமா என்று பார்ப்பதும் இந்திய அரசின் கொள்கையே....இதில் கலைஞரின் மேல் சாற்றப்படும் குற்றச்சாட்டுக்கள் எல்லாமே அரசியல் காழ்ப்புணர்வால் சொல்லப்படுபவை.....!!!

Bleachingpowder says:

//கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கப்படுவதென்பது இந்தியாவின் கொள்கை...அதில் குறிப்பிட்டுற்றவற்றை சரியாக பின்பற்றுகிறோமா என்று பார்ப்பதும் இந்திய அரசின் கொள்கையே....///

அப்படி பார்த்தால் இலங்கைக்கு ராணுவ உதவி செய்வது கூடதான் இந்தியாவின் கொள்கை. இதையும் கையை கட்டி கொண்டு சட்டமன்றத்தில் ஒரு தீர்மாணம் கொண்டு வந்ததோடு நம் கடமை முடிந்து விட்டது என்று இருந்துவிடலாமா?

பொது பிரச்சனைனு வந்துட்டா எந்த கட்சிகாகவும் வக்காலத்து வாங்கமல் நடு நிலையோடு கருத்து சொல்ல வேண்டும். அதை தவிர்த்து நம் கருத்திற்கு மாறாக யாரேனும் எதாவது சொல்லிவிட்டால் அது முட்டாள் தனமான வாதங்கள் ஆகாது

நல்லதந்தி says:

//எல்லாத்தும் காரணம் அப்போது ஈழ பிரச்சனை இல்லை, விடுதலை புலிகள் இல்லை அதனால் இந்தியா இலங்கை எல்லையில் இவ்வளவு கடுமையும் இல்லை. அதனால் கச்சத்தீவை தாரை வார்த்தால் பெரிய இழப்பு ஏதும் இல்லை என்று எல்லா கட்சியினரும் எண்ணியிருக்கலாம்//

நீங்கள் சொல்வது ஒரு வகையில் உண்மைதான் நண்பர் பிளீச்சிங் பௌடர்!.
அந்த ராணியின் தலையங்கத்திலேயே சில தலைவர் கச்சத்தீவு தானம் பற்றிய கருத்துக்கள் கூறியவை என்று சொல்லியிருப்பவை.
அன்றைய இ.காங் தலைவராக இருந்த திரு.இராமையா என்பவர்"பிரதமர் முடிவு செய்து விட்டார் எனவே நாம் ஒப்புக்க்கொள்ள வேண்டும்" என்று கூறுகிறார்.
இ.கம்யூ.தலைவர் திரு.இராமமூர்த்தி என்பவர்"கச்சத்தீவு வெறும் பொட்டல் காடு,அதை இலங்கைக்கு கொடுத்தால் என்ன?"என்று கூறுகிறார்
வ.கம்யூ.தலைவர் திரு.கல்யாணசுந்தரம் என்பவர் "இது அகில இந்திய பிரச்சனை அகில இந்திய தலைவர்கள்தான் இதைப் பற்றி கருத்து சொல்ல வேண்டும் "என்கிறார் எனக் குறிப்பிட்டுள்ளது.ஆனால் எதிர்ப்பு தெரிவித்த தலைவர் திரு.எம்.ஜி.ஆர் மட்டுமே.
நான் என் கட்டுரையில் கலைஞர்,கச்சத்தீவை தாரை வார்க்கும் போது சும்மா இருந்து விட்டு இன்று புதிதாக நீலிக்கண்ணீர் வடிப்பதை,சந்தர்ப்பத்திற்க்கு தகுந்தாற் போல், மாற்றிப்பேசுவதையே குறிப்பிடுகிறேன்!

நல்லதந்தி says:

//கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கப்படுவதென்பது இந்தியாவின் கொள்கை...அதில் குறிப்பிட்டுற்றவற்றை சரியாக பின்பற்றுகிறோமா என்று பார்ப்பதும் இந்திய அரசின் கொள்கையே....இதில் கலைஞரின் மேல் சாற்றப்படும் குற்றச்சாட்டுக்கள் எல்லாமே அரசியல் காழ்ப்புணர்வால் சொல்லப்படுபவை.....!!!//

இந்த கட்டுரையின் மூலகருத்தே சந்தர்ப்பத்திற்கு தகுந்தார் மாற்றிமாற்றி பேசுகிறார் என்பது மட்டுமே அன்று கச்சத்தீவை தானம் கொடுத்தபோது சும்மா இருந்து விட்டு இப்போது கச்சத்தீவை மீட்போம் எனக்கூறி,அதற்கு உண்ணாவிரதப்போரட்டத்தை நடத்து வதையே எதிர்த்து எழுதி இருக்கிறேன்.இதில் என்ன அரசியல் காழ்ப்புணர்ச்சி இருக்கிறது.நடந்த உண்மைக் கூறுவது அரசியல் காழ்ப்புணர்ச்சியா?.
//கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கப்படுவதென்பது இந்தியாவின் கொள்கை...அதில் குறிப்பிட்டுற்றவற்றை சரியாக பின்பற்றுகிறோமா என்று பார்ப்பதும் இந்திய அரசின் கொள்கையே//

இந்திய அரசின் எல்லாக் கொள்கையையும் கலைஞர் பின் பற்றுவதாக இருந்தால் முன்பு முதலமைச்சராக இருந்தபோது இலங்கையில் இருந்து இந்தியா திரும்பிய இந்திய அமைதிப்படையை மரியாதை நிமித்தம் வரவேற்கப்போகாதது ஏன்?

இந்திய அரசாங்கத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட, சமீபத்தில்,இறந்த திரு.தமிழ்ச்செல்வனுக்கு இரங்கற்பா பாடி துக்கம் கொண்டாடியது ஏன்?
சொல்லுங்கள் நண்பர் மதிபாலா?

Anonymous says:

பினாத்தல் & இல்வசம்!

உங்க புது கொண்டை சூப்பரோ சூப்பர்!

நல்லதந்தி says:

//பினாத்தல் & இல்வசம்!

உங்க புது கொண்டை சூப்பரோ சூப்பர்!//


? :) ?

Anonymous says:

nalla thagaval.

மதிபாலா says:

ந்த கட்டுரையின் மூலகருத்தே சந்தர்ப்பத்திற்கு தகுந்தார் மாற்றிமாற்றி பேசுகிறார் என்பது மட்டுமே அன்று கச்சத்தீவை தானம் கொடுத்தபோது சும்மா இருந்து விட்டு இப்போது கச்சத்தீவை மீட்போம் எனக்கூறி,அதற்கு உண்ணாவிரதப்போரட்டத்தை நடத்து வதையே எதிர்த்து எழுதி இருக்கிறேன்.///////////////


இதற்கான பதிலை கலைஞரே சொல்லியிருக்கிறார்..இதோ கீழே..

////////////

1974 ஆம் ஆண்டே, ஜூன் மாதம் 29 ஆம் நாள் சென்னை கோட்டையில் அனைத்து கட்சித் தலைவர்களை அழைத்து அவர்களோடு பேசி, அவர்கள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் அன்றைய பிரதமருக்கு அன்றைய தலைமை அமைச்சருக்கு நான் எழுதிய கடிதத்தைப் படித்துக்காட்ட விரும்புகின்றேன்.

கச்சதீவின் மீது சிறிலங்கா கொண்டாடி வரும் உரிமையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு இரு நாடுகளுக்குமிடையே சமீபத்தில் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தம், மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக அமைந்துள்ளது என்று தமிழக அரசின் சார்பாகவும் தமிழக மக்களின் சார்பாகவும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

நாம் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பியுள்ள தீர்மானத்தை கருத்திலே எடுத்துக்கொண்டு உரிய நடவடிக்கையினை மேற்கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். என்று அன்றே, 1974 ஆம் ஆண்டே அன்றைய பிரதமருக்கு கடிதம் எழுதிய அரசு தான் திராவிட முன்னேற்றக் கழக அரசு. பேரவையிலேயே அப்போது நான் பேசியிருக்கின்றேன். அது என்ன தெரியுமா?

1974 - ஜூன் 27 ஆம் நாள் திடீரென்று அறிவிப்பு வந்தது. இப்போதும் சொல்கின்றேன். இது பற்றி எந்தவிதமான சூசகமான தகவலையும் இந்த அரசுக்கு அவர்கள் அறிவிக்கவில்லை. 27 ஆம் நாள் பத்திரிகையில் பார்த்தவுடன் பதறிப் போய் எல்லாக் கட்சித் தலைவர்களுக்கும் நான் தந்தி கொடுத்தேன். சில பேருக்குத் தொலைபேசி மூலம் தெரிவித்தேன். சில தலைவர்களுக்கு அதிகாரிகளையே அனுப்பினேன். அவ்வளவு அக்கறையோடு இந்தக் காரியத்தில் நாம் செயற்பட்டிருக்கின்றோமே அல்லாமல் இதில் தமிழக அரசு கச்சதீவை சிறிலங்காவுக்கு அளிப்பதில் எந்தவிதத்திலும் உடந்தையாக இல்லை என்பதை நான் மனப்பூர்வமாகச் சொல்லிக் கொள்கிறேன்.

இவ்வாறு, இன்றல்ல அன்று முதல் ஈடுபட்டு செயல்பட்டிருக்கின்றோம். இப்போதும் அவ்வாறே செயல்படுகின்றோம். இதில் கட்சி வேறுபாடுகளுக்கு இடம் இல்லை. இதில் அரசியல் வேறுபாடுகளுக்கு இடமில்லை. நாம் அனைவரும் தமிழர். தமிழர்களுக்குச் சொந்தமான தமிழ் நிலத்தின் ஒரு பகுதியை விட்டுக் கொடுத்த காரணத்தால் தமிழர்களின் வாழ்வே இன்றைய நாள் கேள்விக்குறிக்கு ஆளாகியிருக்கின்றது. ///////

மதிபாலா says:

இந்த கட்டுரையின் மூலகருத்தே சந்தர்ப்பத்திற்கு தகுந்தார் மாற்றிமாற்றி பேசுகிறார் என்பது மட்டுமே அன்று கச்சத்தீவை தானம் கொடுத்தபோது சும்மா இருந்து விட்டு இப்போது கச்சத்தீவை மீட்போம் எனக்கூறி,அதற்கு உண்ணாவிரதப்போரட்டத்தை நடத்து வதையே எதிர்த்து எழுதி இருக்கிறேன்.இதில் என்ன அரசியல் காழ்ப்புணர்ச்சி இருக்கிறது.நடந்த உண்மைக் கூறுவது அரசியல் காழ்ப்புணர்ச்சியா?.////////////

நடந்ததை கூறுவதென்பதை நான் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று எப்போதுமே கூறுவதில்லை.......

ஆனால் சொல்லும் நேரமும் சொல்லும் விசயமுமே காழ்ப்புணர்ச்சியா இல்லையா என்பதை தீர்மானிக்கிறது......

இப்போதைக்கு கலைஞரின் கபட நாடகத்தை ஆராய்வது உங்களுக்கு முக்கியமா இல்லை மீனவர் பிரச்சினை முக்கியமா என்று பார்த்தோமானால் எவ்வகையிலும் மீனவர் பிரச்சினையே முன் நிற்கும்...அத்தகையதொரு சூழலில் மத்தியிலும் , மாநிலத்திலும் வலுவான ஆளுங்கட்சியாய் இருக்கும் திமுக வின் போராட்டமானது நடுவண் அரசுக்கு ஒரு பெரும் அழுத்தத்தைக்கொடுக்க வல்லது...

அத்தகைய முயற்சியில் அவர்கள் ஈடுபடுகையில் கலைஞரின் அன்றைய நிலையையும் , இன்றைய நிலையையும ஆராய்ந்து கொண்டிருப்பதன் நோக்கம் மீனவர் பிரச்சினையை தீர்ப்பதா அல்லது கலைஞரின் நிலையை பலவீனப்படுத்துவதா என்று ஆராய்ந்தோமானால் நான் சொன்ன அரசியல் காழ்ப்புணர்ச்சி என்ற வாக்கியத்தின் உட்பொருள் விளங்கும்!!

மதிபாலா says:

அப்படி பார்த்தால் இலங்கைக்கு ராணுவ உதவி செய்வது கூடதான் இந்தியாவின் கொள்கை. இதையும் கையை கட்டி கொண்டு சட்டமன்றத்தில் ஒரு தீர்மாணம் கொண்டு வந்ததோடு நம் கடமை முடிந்து விட்டது என்று இருந்துவிடலாமா?

பொது பிரச்சனைனு வந்துட்டா எந்த கட்சிகாகவும் வக்காலத்து வாங்கமல் நடு நிலையோடு கருத்து சொல்ல வேண்டும். அதை தவிர்த்து நம் கருத்திற்கு மாறாக யாரேனும் எதாவது சொல்லிவிட்டால் அது முட்டாள் தனமான வாதங்கள் ஆகாது///////////

கண்டிப்பாக நண்பரே..........அவை முட்டாள்தனமான வாதங்கள் என்பதில் இன்னும் நான் உறுதியாகவே இருக்கிறேன்...அதற்கான பதில்களை என் முந்தைய மறுமொழிகளிலேயே சொல்லியிருக்கிறேன்.....ஆனால் எம் கருத்துக்கு எதிரானவை என்பதால் மட்டும் அவ்வாறு கூறவில்லை !! அதனால் நான் உங்கள் குற்றச்சாட்டை நிராகரிக்கிறேன்......!!!!இன்னும் விரிவாக வேண்டுமானாலும் விவாதிக்க நான் தயார்!

நல்லதந்தி says:

//1974 - ஜூன் 27 ஆம் நாள் திடீரென்று அறிவிப்பு வந்தது. இப்போதும் சொல்கின்றேன். இது பற்றி எந்தவிதமான சூசகமான தகவலையும் இந்த அரசுக்கு அவர்கள் அறிவிக்கவில்லை. 27 ஆம் நாள் பத்திரிகையில் பார்த்தவுடன் பதறிப் போய் எல்லாக் கட்சித் தலைவர்களுக்கும் நான் தந்தி கொடுத்தேன். சில பேருக்குத் தொலைபேசி மூலம் தெரிவித்தேன். சில தலைவர்களுக்கு அதிகாரிகளையே அனுப்பினேன்.//

அவர் எந்த எந்த தலைவர்களுக்கு தந்தி கொடுத்தார்.கச்சத்தீவை தானம் கொடுத்த போது எம்.ஜி.ஆர்தான் அதிக பட்சமாக எதிர்த்துள்ளார்.அவருக்கு திமுகாவினர் கொடுத்த பதிலடி இது.
( கச்சத்தீவு பறி போய் விட்டது! கருணாநிதி ராஜினாமா செய்ய வேண்டும்!" என்கிறார் எம்.ஜி.ஆர்!.
கச்சத்தீவை தானம் கொடுத்தவர்,இந்திரா.அவரை ராஜினாமா செய்யச்சொல்ல எம்.ஜி..ஆரால் முடியாஇல்லை.ஆனால், கருணாநிதியை ராஜினாமா செய்யச் சொல்லுகிறார்!.
"கருணாநிதி ஏன் தடுக்கவில்லை? "என்று எம்.ஜி.ஆர் கேட்கிறார்.தடுக்கவோ-அந்த முயற்சியைமுடக்கவோ கருணாநிதிக்கு ஏது அதிகாரம்!.
பீகாரில் சட்டசபையைக் கலைக்க வேண்டும் என்று ஜெயப்ப்பிரகாசர் போரட்டம் நடத்துகிறார்.அதற்க்கு முன்னோடியாக அவரை ஆதரிக்கும் எம்.எல்.ஏ க்கள் எல்லோரும் ராஜினாமா செய்து விட்டார்கள்!.அதே போல, தமிழ்நாடு சட்டசபையைக் கலைத்தால்தான் கச்சத்தீவு பிரச்சனை தீரும் என்று எம்.ஜி.ஆர் நினைத்தால்,முதலில் அவர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யலாமே!.அவரது கட்சி எம்.எல்.ஏ, எம்.பிக்களை விலகச்சொல்லலாமே!.)இதுதான் பதறிப்போனதன் விளைவா?
இது போகட்டும் மற்றத் தலைவர்களுக்கு தந்தி கொடுத்தேன் என்கிறாரே அன்றைக்கு கச்சத்தீவு தானம் அளிக்கப்பட்டதில் மற்ற முக்கிய கட்சித்தலைவர்களின் நிலைப்பாடு என்ன?
(அந்த ராணியின் தலையங்கத்திலேயே சில தலைவர் கச்சத்தீவு தானம் பற்றிய கருத்துக்கள் கூறியவை என்று சொல்லியிருப்பவை.
அன்றைய இ.காங் தலைவராக இருந்த திரு.இராமையா என்பவர்"பிரதமர் முடிவு செய்து விட்டார் எனவே நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்" என்று கூறுகிறார்.
இ.கம்யூ.தலைவர் திரு.இராமமூர்த்தி என்பவர்"கச்சத்தீவு வெறும் பொட்டல் காடு,அதை இலங்கைக்கு கொடுத்தால் என்ன?"என்று கூறுகிறார்
வ.கம்யூ.தலைவர் திரு.கல்யாணசுந்தரம் என்பவர் "இது அகில இந்திய பிரச்சனை அகில இந்திய தலைவர்கள்தான் இதைப் பற்றி கருத்து சொல்ல வேண்டும் "என்கிறார் எனக் குறிப்பிட்டுள்ளது) ஆக கச்சத்தீவைத் தானம் கொடுப்பதை எதிர்த்த எம்.ஜி.ஆருக்கு பதிலடி.ஆனால் அதைப் பற்றி சிறிதும் அக்கறைக் காட்டாத,தந்தால் தவறில்லை என்கிற தலைவர்களுக்குத் தந்தியா? சிரிப்புத்தான் வருகிறது.

Anonymous says:

/////இப்போதைக்கு கலைஞரின் கபட நாடகத்தை ஆராய்வது உங்களுக்கு முக்கியமா இல்லை மீனவர் பிரச்சினை முக்கியமா என்று பார்த்தோமானால் எவ்வகையிலும் மீனவர் பிரச்சினையே முன் நிற்கும்...///

இப்போதைக்கு கனிமொழிக்கு எம் பி பதவியா அல்லது ஹொகனேகல் குடி நீர் திட்டப் பிரச்சினையா என்றால் எது முன் நிற்கும் என்று பார்த்தோமேயானால் .....

////அத்தகையதொரு சூழலில் மத்தியிலும் , மாநிலத்திலும் வலுவான ஆளுங்கட்சியாய் இருக்கும் திமுக வின் போராட்டமானது நடுவண் அரசுக்கு ஒரு பெரும் அழுத்தத்தைக்கொடுக்க வல்லது...///

காமெடி பண்ணுறதுக்கு ஓர் அளவே இல்லியா? மீனவர் பிரச்சினையை கருணாநிதி பேச ஆரம்பித்ததே ராமேஸ்வரத்தில் நடந்த கண்டனக் கூட்டத்தில் விஜயகாந்திற்கு கிடைத்த ஆதரவைப் பார்த்த பின்தான் என்பது கண்கூடு. அதுவும் இன்றைய சூழ்நிலையில் 3 எம் பிக்கள் கொண்ட அஜித் சிங் போன்றோறே ஆளும் கட்சியிடம் காரியம் சாதித்துக் கொண்டிருக்கும் போது உண்ணாவிரதம் இருந்து அழுத்தம் கொடுக்கிறார்களாம் :)) பாத்து...ரொம்ப அழுத்திடப் போறீங்க.

நல்லதந்தி says:

//திமுக வின் போராட்டமானது நடுவண் அரசுக்கு ஒரு பெரும் அழுத்தத்தைக்கொடுக்க வல்லது...//

:)

நல்லதந்தி says:

//1974 ஆம் ஆண்டே அன்றைய பிரதமருக்கு கடிதம் எழுதிய அரசு தான் திராவிட முன்னேற்றக் கழக அரசு.//

இன்றும் மீனவர்களுக்காக,காவிரிக்காக,பாலாறுக்காக,முல்லைப்பெரியாருக்காக,இலங்கைத்தமிழருக்காக,அணுசக்தி ஒப்பந்தத்திற்க்காக,இன்னும் எண்ணற்ற பல விஷயங்களுக்கும்,கடிதம் மட்டுமே பல வருடங்களாக எழுதும் தலைவர் கலைஞரை ஏன் கடிதர் என்று அழைக்ககூடாது! :)
பி.கு.உண்ணாவிரதம்,பந்த் எல்லாம் மக்களுக்கு அடிஷனல் போனஸ்!

Anonymous says:

//இப்போதைக்கு கலைஞரின் கபட நாடகத்தை ஆராய்வது உங்களுக்கு முக்கியமா இல்லை மீனவர் பிரச்சினை முக்கியமா என்று பார்த்தோமானால் எவ்வகையிலும் மீனவர் பிரச்சினையே முன் நிற்கும்...அத்தகையதொரு சூழலில் மத்தியிலும் , மாநிலத்திலும் வலுவான ஆளுங்கட்சியாய் இருக்கும் திமுக வின் போராட்டமானது நடுவண் அரசுக்கு ஒரு பெரும் அழுத்தத்தைக்கொடுக்க வல்லது...

அத்தகைய முயற்சியில் அவர்கள் ஈடுபடுகையில் கலைஞரின் அன்றைய நிலையையும் , இன்றைய நிலையையும ஆராய்ந்து கொண்டிருப்பதன் நோக்கம் மீனவர் பிரச்சினையை தீர்ப்பதா அல்லது கலைஞரின் நிலையை பலவீனப்படுத்துவதா என்று ஆராய்ந்தோமானால் நான் சொன்ன அரசியல் காழ்ப்புணர்ச்சி என்ற வாக்கியத்தின் உட்பொருள் விளங்கும்!!//
ஒரே தமாசு!. எப்பிடிங்க இப்படி சிரிக்காம சீரியஸா எழுதிறீங்க!

மதிபாலா says:

ஆக கச்சத்தீவைத் தானம் கொடுப்பதை எதிர்த்த எம்.ஜி.ஆருக்கு பதிலடி.ஆனால் அதைப் பற்றி சிறிதும் அக்கறைக் காட்டாத,தந்தால் தவறில்லை என்கிற தலைவர்களுக்குத் தந்தியா? சிரிப்புத்தான் வருகிறது./////

விஷயங்களுக்கும்,கடிதம் மட்டுமே பல வருடங்களாக எழுதும் தலைவர் கலைஞரை ஏன் கடிதர் என்று அழைக்ககூடாது! :)
பி.கு.உண்ணாவிரதம்,பந்த் எல்லாம் மக்களுக்கு அடிஷனல் போனஸ்!////////////

இப்படி முற்றிலுமாக வெறுப்பை அள்ளி உமிழும் உம்மை பற்றிய என் கருத்து அரசியல் காழ்ப்புணர்ச்சியோடே பேசுகிறார் என்று சொன்னது எவ்வளவு உண்மை என்று படிப்பவர்கள் புரிந்துகொள்வார்கள்......!!!! என் கூற்றினை மெய்ப்படுத்தும் விதமாக பின்னூட்டங்களை இட்ட உங்களுக்கு என் நன்றிகள்!!

மதிபாலா says:

ஒரே தமாசு!. எப்பிடிங்க இப்படி சிரிக்காம சீரியஸா எழுதிறீங்க!/////////

நான் ஏன் சிரிக்க வேண்டும் நண்பரே..முகங் காட்ட மறந்து அடுத்தவர் இட்ட கருத்துக்களை குறை கூறும் அல்லது நையாண்டி செய்யும் உம் போன்ற போலிகளை கண்டுதான் நாடே சிரிக்கிறது....!!!!

முதலில் உம்மை வெளிப்படுத்திக்கொண்டு கருத்துக்களை கூறுங்கள்...பிறகு அடுத்தவன் தமாசு பண்ணுகிறானா இல்லையா என்று பார்க்கலாம்!!

நல்லதந்தி says:

//ஆக கச்சத்தீவைத் தானம் கொடுப்பதை எதிர்த்த எம்.ஜி.ஆருக்கு பதிலடி.ஆனால் அதைப் பற்றி சிறிதும் அக்கறைக் காட்டாத,தந்தால் தவறில்லை என்கிற தலைவர்களுக்குத் தந்தியா? சிரிப்புத்தான் வருகிறது./////
இப்படி முற்றிலுமாக வெறுப்பை அள்ளி உமிழும் உம்மை பற்றிய என் கருத்து அரசியல் காழ்ப்புணர்ச்சியோடே பேசுகிறார் என்று சொன்னது எவ்வளவு உண்மை என்று படிப்பவர்கள் புரிந்துகொள்வார்கள்......!!!! என் கூற்றினை மெய்ப்படுத்தும் விதமாக பின்னூட்டங்களை இட்ட உங்களுக்கு என் நன்றிகள்!!//

இதில் வெறுப்பை உமிழும் விசயம் எது என்று எனக்குப் புரியவில்லை.புரியாத உங்களுக்கு புரியவைக்க சில விவரங்கள் கொடுத்தால் அதற்கு பதில் சொல்லாமல் வெறுப்பை உமிழ்வதாகச் சொல்கிறீர்கள் நண்பரே! :)
பதில் சொல்லமுடியாத விஷயங்களைக் கேட்டால் கலைஞர் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று அடக்கிவிடுவார்.அதைப்ப் போன்றே இருக்கிறது உங்கள் பின்னூட்டம்.

//விஷயங்களுக்கும்,கடிதம் மட்டுமே பல வருடங்களாக எழுதும் தலைவர் கலைஞரை ஏன் கடிதர் என்று அழைக்ககூடாது! :)//
இந்த நையாண்டியைக் கூட நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளாவிட்டால் எப்படி நண்பரே! :)

Anonymous says:

யாருய்யா சொன்னது இது பினாத்தல் கொண்டைன்னு?

இது பக்கா டாலர் கொண்டை :-)

Anonymous says:

ப்ளீச்சிங் பவுடர் என்பது வீ தி ப்யூப்பிளின் பூ வெச்ச கொண்டை

Anonymous says:

//விஷயங்களுக்கும்,கடிதம் மட்டுமே பல வருடங்களாக எழுதும் தலைவர் கலைஞரை ஏன் கடிதர் என்று அழைக்ககூடாது! :)//

இதுவே இவரோட குடும்ப பிரச்சினை என்றால் டெல்லிக்கு பறந்து இருப்பால!!! மக்கள் பிரச்சினைதானே அதான் கொக்கு தலைல வெண்ணய வச்சிடாரு.....

Anonymous says:

Bleachingpowder + மதிபாலாவின் கருத்துக்கள் நியாயமானவை.