பல்டியடிக்கும் சோம்நாத் சட்டர்ஜி!

Posted on Thursday, July 17, 2008 by நல்லதந்தி
மக்களவை சபாநாயகர் பதவியில் இருந்து விலக சோம்நாத் சட்டர்ஜி மறுத்துள்ளதால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் கருத்து வேறுபாடு தோன்றியுள்ளது.மக்களவை சபாநாயகராகப் பதவி வகித்து வரும் சோம்நாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு இடதுசாரிகள் தமது ஆதரவை விலக்கிக் கொண்டதை அடுத்து, சபாநாயகர் பதவியில் இருந்து விலகுமாறு, அக்கட்சியினர் சோம்நாத்தை வலியுறுத்தினர். ஆனால், பாஜகவுடன் சேர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசுக்கு எதிராக வாக்களிக்க தமக்கு விருப்பம் இல்லை என்றும், எனவே, சபாநாயகர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என்றும் சோம்நாத் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, குடியரசுத் தலைவரிடம் இடதுசாரிக்கட்சிகள் அளித்த ஆதரவு வாபஸ் கடிதத்தில், சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜியின் பெயரையும் சேர்த்துள்ளதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

9 Responses to "பல்டியடிக்கும் சோம்நாத் சட்டர்ஜி!":

Art by Colugnatti says:

nice shots!!!

Surya says:

கொன்னுட்டீங்க தலைவா... கலக்கல் படம்! இன்னும் சிரிப்பு அடங்கவில்லை.

நல்லதந்தி says:

நன்றி! art by colugnatti.

நல்லதந்தி says:

நன்றி சூர்யா. எங்க வீட்டுக்கே வந்த மாதிரி இருக்கு! :)

Anonymous says:

படம் சூப்பர். சோம்நாத் சாட்டர்ஜியே கவுந்து கிடக்கிற மாதிரி இருக்கு!

Anonymous says:

யானைக்கு மூணு காலா? :)

Priya says:

இது கொஞ்சம் ஓவரா தெரியல! பாவம்யா அந்த மனுஷன்!

நல்லதந்தி says:

எங்க இன்னும் நண்பர் கிரியைக் காணோமே?

நல்லதந்தி says:

//இது கொஞ்சம் ஓவரா தெரியல! பாவம்யா அந்த மனுஷன்!//

வாங்க பிரியா!.எல்லாமே ஒரு தமாஷு தான்!