மீண்டும் இஸ்லாமிய தீவிரவாதிகளின் அட்டூழியம்

Posted on Saturday, July 26, 2008 by நல்லதந்தி

மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் கூறுகையில், ""சம்பவங்களுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. எனினும், தடைச் செய்யப்பட்ட "சிமி' அமைப்பினர் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்,'' என்றார்.

கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரில் வெவ்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்திற்குள் எட்டு இடங்களில் தொடர்ந்து குண்டு வெடித்தது. ஐ.டி., நிறுவனங்களைக் குறி வைத்து பயங்கரவாதிகள் நடத்திய இந்தத் தாக்குதலுக்கு இரண்டு பேர் பலியாயினர்; 15 பேர் படுகாயமடைந்தனர்.பெங்களூரு நகரில் ஐ.டி., கம்பெனிகள் நிறைந்த ஓசூர் ரோடு பகுதியில் மடிவாளாவில் முதல் வெடிகுண்டு மதியம் 1.20 மணிக்கு வெடித்தது. ஆட்டோ ஒன்றில் சென்று கொண்டிருந்தவர் வெடிகுண்டு வெடித்ததை உணர்ந்தார்.
ஆட்டோவை நிறுத்திப் பார்த்த போது பெண் ஒருவர் ரத்தவெள்ளத்தில் மயங்கிக் கிடந்தார். அருகில் சென்று பார்த்த போது இறந்து கிடந்தார். அதற்குள் அப்பகுதியில் பெரும் கூட்டம் கூடியது. இறந்தப் பெண்ணின் பெயர் லட்சுமி எனத் தெரிந்தது. அவரது கணவர் ரவி, குண்டு வெடிப்பில் படுகாயமடைந்தார். அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இரண்டாவது வெடிகுண்டு மதியம் 1.25 மணிக்கு மைசூரு ரோடு பகுதியில் பெங்களூருப் பல்கலை அருகில் உள்ள நாயண்டஹள்ளி பந்தர்பாளையா பகுதியில் நடந்தது.
மூன்றாவது வெடிகுண்டு மதியம் 1.40 மணிக்கு ஆடுகோடி செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனை அருகிலும், நான்காவது வெடிகுண்டு மதியம் 1.42 மணிக்கு ஆடுகோடியின் மற்றொரு பகுதியிலும் வெடித்தது.ஐந்தாவது வெடிகுண்டு கோரமங்களா போலீஸ் நிலையம் அருகிலும், ஆறாவது வெடிகுண்டு அதே பகுதியிலும், ஏழாவது வெடிகுண்டு பரபரப்பு மிகுந்த விட்டல் மல்லையா மருத்துவமனை அருகிலுள்ள பூங்கா ஒன்றிலும், எட்டாவது வெடிகுண்டு லாங்க் போர்டு டவுன் ரிச்மண்ட் சர்க்கிள் அருகிலும் வெடித்தது.
பெரும் பீதியும், பரபரப்பும் : தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடங்களில் குவிக்கப்பட்டனர். ஆடுகோடியில் நடந்த சோதனையில், வெடிக்காத குண்டு ஒன்று கைப்பற்றப்பட்டது. தொடர் குண்டுவெடிப்பால் பெங்களூரு நகர மக்களிடையே பெரும் பீதியும், பரபரப்பும் ஏற்பட்டது. எங்கு பார்த்தாலும் மக்கள் அலறலுடன் சென்றனர். குண்டு வெடித்தப் பகுதிகளில் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.சம்பவம் நடந்த இடத்திற்கு வெடிகுண்டு நிபுணர்கள் சென்றனர். போலீஸ் மோப்ப நாய் கொண்டு செல்லப்பட்டது.
குண்டுவெடிப்பு நடந்த பகுதிகளில் நிபுணர்கள் கைப்பற்றிய வெடிகுண்டு சிதறல்கள், ஒயர்கள், இரும்புப் போல்ட்கள் போன்றவற்றைச் சோதனைக்கு அனுப்பி வைத்தனர். மொபைல் போன் மூலம் டைம் பாம் வைத்து வெடிக்கச் செய்துள்ளனர். பெங்களூருவிலிருந்து வெளியூர் செல்லும் அனைத்து வழிகளும் மூடப்பட்டன. குற்றவாளிகள் தப்பிச் செல்லாதபடி போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். வாகனங்கள் அனைத்தும் கடுமையான சோதனைக்குப் பின்னரே செல்ல அனுமதிக்கப்பட்டன.போலீஸ் முதற்கட்ட விசாரணையில், ஆந்திர மாநிலம், மசூதியில் நடந்த வெடிகுண்டு சம்பவம் போன்று இந்தச் சம்பவமும் நடத்தப்பட்டுள்ளது தெரிந்தது. ஒரே கும்பல் தான் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
பெங்களூரு நகரப் போலீஸ் கமிஷனர் சங்கர் பிதரி கூறுகையில், ""ஆந்திர மாநிலம் மசூதியில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் போன்றே நடந்துள்ளது. அதிக சக்தி இல்லாத வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதால், பெரிய அசம்பாவிதம் நடக்கவில்லை. சிமி இயக்கத்தினர், அல்கொய்தா அமைப்பினர் இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம்,'' என்றார்.கர்நாடக உள்துறை அமைச்சர் ஆச்சார்யா கூறுகையில், ""மக்கள் கூடும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. குண்டுவெடிப்புச் சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்கின்றனர் என்பதைக் கண்டறிய விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது,'' என்றார்.

12 Responses to "மீண்டும் இஸ்லாமிய தீவிரவாதிகளின் அட்டூழியம்":

Surya says:

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

நல்லதந்தி says:

முஸ்லீம்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்று கருதி, தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுத்தால் முஸ்லீம் ஓட்டுக்களை எங்கே இழந்து விடுவோமோ என்று,முஸ்லீம்களைக் கேவலப் படுத்தும் வகையில், பயப்படுகிற இந்த காங்கிரஸ் ஆட்சி மத்தியில் இருக்கும் வரை தீவிரவாதிகளின் கொட்டம் அடங்காது.

Suryavukku Therinthavan says:
This comment has been removed by a blog administrator.
Voice on Wings says:

பதிவின் தலைப்புக்கு எனது கண்டனங்கள்.

நல்லதந்தி says:

//தாய்லாந்து: இஸ்லாமிய பயங்கரவாதிகள் சுட்டதில் பல பௌத்தர்கள் படுகொலை
தாய்லாந்து: இஸ்லாமிய பயங்கரவாதிகள் சுட்டதில் பல பௌத்தர்கள் படுகொலைShootings kill seven in restive Thai southJul 4, 2008YALA, ...

பிலிப்பைன்ஸ்: பஸ்களில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் குண்டு வெடித்ததில் மூன்று பேர் பலி
பஸ்களில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் குண்டு வெடித்ததில் மூன்று பேர் பலியானார்கள்.நடந்தது பிலிப்பைன்ஸில்.At least 3 dead in explosion aboard ...

பாகிஸ்தான்: இஸ்லாமிய பயங்கரவாதிகள் பெண்கள் பள்ளிக்கூடத்தை குண்டு வைத்து தகர்த்தனர்
இஸ்லாமிய பயங்கரவாதிகள் பெண்கள் பள்ளிக்கூடத்தை குண்டு வைத்து தகர்த்தனர்நடந்திருப்பது பாகிஸ்தானில்Police: Militants blow up girls school in Pakistan19 ...

இந்தியா: இஸ்லாமிய பயங்கரவாதிகள் குண்டுகளோடு தாக்கியதில் 9 இந்துக்கள் பலி
இஸ்லாமிய பயங்கரவாதிகள் குண்டுகளோடு தாக்கியதில் 9 இந்துக்கள் பலியானார்கள்நடந்திருப்பது காஷ்மீரில்Nine dead in fresh Kashmir violence: officials1 day ... //

voice of wings நீங்கள் எதற்கு கண்டனம் தெரிவிக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது.மேலுள்ள தலைப்புகளைப் பாருங்கள்.திரட்டியில் இன்றைய இடுகைகளில் உள்ளவை.(ஒரே நாளில் இவ்வளவு தாக்குதல்களா? அடப் பாவமே!.)இதில் இஸ்லாமிய தீவிரவாதிகள் என்பது அடையாளத்திற்கு மட்டுமே.

Anonymous says:

டாலர் செல்வன் அசத்துறேள்!

வடிவேலு says:

டாலர் செல்வன் சார்,

பதிவு சூப்பர்

Mãstän says:

why are you blaming all islamic people? How do come to know its done by muslims? We are also strongly condemn for bomb blast, innocent people were died in the bomb blast. So sad. Really this is war against humans, not only hindus, if its bomb blast happened, muslim also were killed. please stop to blame muslims. Do you know? What Islam says? "Don’t hurt other even by words", this is said by Islam. Whoever did this, the bad name comes to muslim only. See, if a muslim did like this, they are not muslim, just they are keeping the muslim name. Islam is peaceful religion.

இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் "ஸலாம்" (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள். (Quran 25:63)

(மேலும்,) பூமியில் (அமைதி உண்டாகி) சீர்திருத்தம் ஏற்பட்ட பின்னர் அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள்; அச்சத்தோடும் ஆசையோடும் அவனை பிரார்த்தியுங்கள் - நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு மிக சமீபத்தில் இருக்கிறது. (Quran 7:56)

நபி (ஸல்) கூறினார்கள்

தன் பக்கத்திலிருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க, தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறை நம்பிக்கையாளராக இருப்பதில்லை

மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.

அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழிகெட்டவர்களாய் இறை நிராகரிப்பாளர்களாய் மாறி விடாதீர்கள்

அறியாமைக்கால இரத்தப் பழிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. இனி, பழைய கொலைக்குப் பழிவாங்கும் உரிமை எவருக்கும் இல்லை. இதில் முதலாவதாக என் குடும்பத்தைச் சேர்ந்த ரபீஆ இப்னு அல்ஹாரிஸ் இப்னு அப்துல் முத்தலிப் கொல்லப்பட்டதற்கான பழிவாங்கலை ரத்துச் செய்கிறேன். அறியாமைக் கால கொலை குற்றத்தில் இதை நான் முதலாவதாக தள்ளுபடி செய்கிறேன்


உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.’ (அல்-குர்ஆன் 109:6)

--Mastan

நல்லதந்தி says:

அன்புள்ள நண்பர் மஸ்தானுக்கு,
மேலே உள்ள செய்தியை செய்திக் கண்ணோட்டத்தில் மட்டுமே அணுகுங்கள்.இதில் இஸ்லாமிய தீவிரவாதிகள் என்பது அடையாளத்திற்க்கு மட்டுமே.மற்றபடி இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்று யாரும் குறிப்பிடவில்லை.அதை என்னுடைய பின்னூட்டங்களை படித்தாலே புரியும்.மற்றபடி கடவுளை நம்புபவர்கள் அனைவருமே எனக்கு பிடித்தமானவர்களே,அவர்கள் எந்த மதத்தினராயினும் சரி.அனைவரும் அன்புக்குரியவர்களே!.
மற்றபடி இதில் உள்நோக்கம் ஏதுமில்லை.
நட்புடன்,

நல்லதந்தி says:

//டாலர் செல்வன் அசத்துறேள்!//


//டாலர் செல்வன் சார்,


பதிவு சூப்பர்//

இந்த நண்பர்கள் யாரையோ நினைத்து உரலை இடிக்கிறார்கள் என்று தெரிகிறது.
'நான் அவன் இல்லை'

Surya says:

தலைவா நல்லதந்தி... என்னை தாக்கிய அந்த கமெண்ட் ஐ அழிச்சிடுங்க. பக்கத்து seat ல வேலை பாக்குற வயித்தெரிச்சல் நாயீ , இங்க வாந்தி எடுத்துட்டு போய் இருக்கு.

நல்லதந்தி says:

///தலைவா நல்லதந்தி... என்னை தாக்கிய அந்த கமெண்ட் ஐ அழிச்சிடுங்க. பக்கத்து seat ல வேலை பாக்குற வயித்தெரிச்சல் நாயீ , இங்க வாந்தி எடுத்துட்டு போய் இருக்கு.///

ஆமாம். நானும் கேக்கனும் நினைச்சேன்.மறந்துட்டேன்.இப்ப அந்த கமெண்டை எடுத்திடறேன்.