கலைஞர் பாணியில் இராமதாஸ் சமிக்ஞையா?

Posted on Friday, July 4, 2008 by நல்லதந்தி

வன்னியர் சங்க தலைவர் குரு கைது செய்யப்பட்டிருப்பதும், அது தொடர்பான நிகழ்வுகளும் மினி எமர்ஜென்சியை நினைவுபடுத்துகிறது, என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
"காவல் துறையினர் நேற்று அதிகாலை நேரத்தில் வீடு புகுந்து, தூங்கிக்கொண்டிருந்த குருவை கைது செய்திருக்கிறார்கள். ஊரில் அவர் இல்லாத நேரத்தில் நடந்ததாக ஒரு சம்பவத்தை சித்தரித்து, அதில் அவரை இணைத்து பொய் புகார் கொடுக்கச் செய்து, கைது செய்துள்ளனர். திமுக அரசின் இந்த பழிவாங்கும் நடவடிக்கையை பாமக வன்மையாக கண்டிக்கிறது.உடனடியாக ஜாமீனில் விடக் கூடிய பிரிவின் கீழ் முதலில் புகார் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அதில் கொலை முயற்சி பிரிவு சேர்க்கப்பட்டிருக்கிறது. தலைமறைவாக இருக்கிறார் என்று சொல்லி கைது ஆணை பெற்றிருக்கிறார்கள். மேலிட நிர்பந்தம் பேரில்தான் இதெல்லாம் சேர்க்கப்பட்டிருக்கிறது.சம்பவம் நடந்ததாக சொல்லப்படும் நாளில் குரு ஊரில் இல்லை. வன்னியர் சங்க தலைவர் என்ற முறையிலும் பாமக முக்கிய நிர்வாகி என்ற முறையிலும் பல நிகழ்ச்சிகளில் குரு கலந்து கொள்கிறார். நேற்றுகூட திருவிழா, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார். ஆனாலும், தலைமறைவாக இருக்கிறார் என்ற பொய்யான தகவலை தெரிவித்து, அவரை கைது செய்ய ஆணை பெறும்படி உள்ளூர் காவல் துறையினரை மாவட்ட காவல் துறை நிர்வாகம் நிர்ப்பந்தம் செய்திருக்கிறது.திமுக தலைவர் கருணாநிதி எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறாரோ, அப்போதெல்லாம் குரு மீது பொய் புகார்களை பெற்று, வழக்கு போட்டு பழி வாங்குவது தொடர்ந்து நடக்கிறது.நள்ளிரவில் என்னை கைது செய்துவிட்டார்கள் என்று முன்பு துடித்தவர் கருணாநிதி. அப்போது அரசியலில் வேறு அணியில் இருந்தாலும், ஓடோடிச் சென்று சிறையில் அவரைச் சந்தித்து ஆறுதல் சொல்லியிருக்கிறேன். அதற்கெல்லாம் கைமாறாகத்தான், 2 கோடி வன்னிய மக்களின் தளபதியாக விளங்கும் குருவை நள்ளிரவு பொழுதில் கைது செய்துள்ளனர். வீட்டின் கதவை உடைத்து சோதனை என்ற பெயரில் அராஜகம் நிகழ்த்தியிருக்கிறார்கள்.பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை எல்லாம் கைது செய்து, அவர்களது வீடுகளிலும் சோதனை என்ற பெயரில் வெறியாட்டம் போட்டிருக்கின்றனர். திமுக ஆட்சியின் இந்த அராஜக பழிவாங்கும் நடவடிக்கைகள், மினி எமர்ஜென்சியை நினைவுபடுத்துகிறது.எதிர்வரிசையில் இருந்தபொதெல்லாம், காவல்துறையில் அடக்குமுறை என்றும் ஜனநாயக படுகொலை என்று எதையெல்லாம் சொல்லி வந்தார்களோ அவற்றையெல்லாம் ஆட்சிக்கு வந்ததும் திமுக அரங்கேற்றி வந்திருப்பதை தமிழகம் கண்டு வந்திருக்கிறது. ஜனநாயக விரோதமான இந்த நடவடிக்கைகளை ஜனநாயக சக்திகள் அனைத்தும் கண்டிக்க வேண்டும். திமுக அரசின் இந்த வரலாறு காணாத அடக்குமுறையை கண்டு பாமகவினரின் உள்ளம் கொதிக்கத்தான் செய்யும். அதன் விளைவாக தங்களது எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளிப்படுத்த அவர்கள் துடிப்பது இயற்கை. எந்த சூழ்நிலையிலும் வன்முறைக்கு அவர்கள் இடம் கொடுத்து விடக்கூடாது. பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது. உண்ணா விரதம், தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் போன்ற வழிகளில் எதிர்ப்பை வெளிப்படுத்தலாம்." இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

3 Responses to "கலைஞர் பாணியில் இராமதாஸ் சமிக்ஞையா?":

Anonymous says:

பசுமைத்தாயக மரத்தையும்சேர்த்து வெட்டப்போகிறார்கள்.அடையாளம்
வைத்து வெட்டச்சொல்லவும்.

ARUVAI BASKAR says:

சிக்னல் கொடுப்பது போல் தான் தெரிகிறது !!!
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்

நல்லதந்தி says:

//சிக்னல் கொடுப்பது போல் தான் தெரிகிறது !!!
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்//
யாரை சொல்லுறீங்க நண்பரே!:)என்னை இல்லியல்ல!