ஐஸ்வர்யாவின் ஜாதகம் வேலைசெய்ய ஆரம்பித்து விட்டதா?

Posted on Saturday, June 28, 2008 by நல்லதந்தி

முன்னாள் உலக அழகியும், முன்னணி இந்தி நடிகையுமான ஐஸ்வர்யா ராயும், அமிதாப்பச்சனின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனும் ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்தனர். இதையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்துக்குப் பின் கணவன்- மனைவி இருவரும் விழாக்களில் தம்பதி சமேதராய் ஆஜராகி வருகின்றனர். சினிமா விருது விழாவாக இருந்தாலும் சரி... பத்திரிகையாளர்கள் சந்திப்பாக இருந்தாலும் சரி... இருவரும் சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த நட்சத்திர ஜோடி சமீபத்தில் ஒரு பொது இடத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-
திரைப்பட விழா
தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காங்கில் அண்மையில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெற்றது. இதற்காக நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் மாமனார் அமிதாப்பச்சன் ஆகியோருடன் சென்றிருந்தார்.
ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் ஒரு ஓட்டலில் தங்கி இருந்தார்கள். அங்கிருந்து இருவரும் ஜோடியாக திரைப்பட விழாவுக்கு புறப்பட்டனர். நடிகர் குணால் கபூரும் உடன் இருந்தார்.
கணவருடன் வாக்குவாதம்
அப்போது ஐஸ்வர்யா ராய் உரத்த குரலில் பலமாக பேச ஆரம்பித்தார். உடனே பக்கத்தில் இருந்த அபிஷேக் பச்சன் மனைவியிடம் மெதுவாக பேசு... என்று நாசூக்காக கூறினார். ஆனால் ஐஸ்வர்யா ராய் அதை கண்டுகொள்ளவில்லை. அவர் தொடர்ந்து உரத்த குரலில் பேசிக் கொண்டு இருந்தார்.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த நடிகர் குணால் கபூர் அங்கிருந்து நைசாக நழுவி வேறு இடத்துக்கு சென்று விட்டார்.
உடனே மனைவி ஐஸ்வர்யா ராயை ஓட்டல் வராந்தாவில் உள்ள ஒரு ஒதுக்குப்புறமான இடத்துக்கு அபிஷேக் பச்சன் அழைத்துச் சென்றார். அங்கு அவரை அமர வைத்து, பொறுமையாக பேசினார். ஆனால் ஐஸ்வர்யா ராய் எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல், கணவருடன் உரத்த குரலில் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தார்.
அறைக்கு அழைத்துச் சென்றனர்
ஓட்டலில் வருவோர், போவோர் எல்லாம் இதை வேடிக்கை பார்த்ததால், பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அபிஷேக் பச்சன் தர்மசங்கடத்துக்கு ஆளானார். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த அவர், தனது மெய்க்காப்பாளரை அழைத்து மனைவி ஐஸ்வர்யா ராயை அவரது அறைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார்.
உடனே ஐஸ்வர்யா ராயை அவர்கள் அழைத்துச் சென்று விட்டனர்.

1 comments:

நல்லதந்தி says:

தங்கள் வருகை நன்றி!!