தமிழை வளர்க்கும் தமிழர்கள்!

Posted on Saturday, June 28, 2008 by நல்லதந்தி

நேற்று அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பேசியது....

மத்திய அமைச்சர் அன்புமணி, என்னை "அங்கிள்' என்று தான் கூப்பிடுவார்। தேர்தல் சமயத்தில் என்னிடம் வந்த அன்புமணி, பா.ம.க., தொகுதிகளில் வந்து பிரச்சாரம் செய்யும்படி அழைத்தார். தாரமங்கலம், இடைப்பாடி, ஓமலூர், மேட்டூர் ஆகிய தொகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். தற்போது அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் என்னை விமர்சித்து பத்திரிகைகளில் பேட்டி அளிக்கின்றனர். அதுபற்றி கேட்டால் கட்சி தலைமை உத்தரவு என்கின்றனர். வன்னியர் என்று சொன்னால் அவர் மட்டும் தான் என்ற மனோபக்குவத்தை கொண்டுள்ளார். மற்றவர்கள் அவர்களுடைய கண்ணுக்கு தெரியாது. அமைச்சர் அன்புமணிக்கு எனது பரிந்துரையின் பேரில் தான் ராஜ்ய சபா சீட் கிடைத்தது. இதுபோன்ற உதவிகளை செய்து கொடுத்த போதிலும் வீரபாண்டி ஆறுமுகம் வளரவிடக்கூடாது என்ற குரோத மனப்பான்மையுடன் ராமதாஸ் பேசியுள்ளார். அதை ஏற்றுக் கொள்ளும் மனோபக்குவம் எங்களுக்கு உள்ளது.

2 Responses to "தமிழை வளர்க்கும் தமிழர்கள்!":

Anonymous says:

தமிழ் வாழ்க! தமிழர்கள் வாழ்க!

Anonymous says:

:)