ஆப்பை பிடுங்கிய மார்க்சிஸ்டா? ஆப்படித்த மார்க்சிஸ்டா?

Posted on Tuesday, July 8, 2008 by நல்லதந்தி

அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது என பிரதமர் மன்மோகன் சிங் நேற்று பேட்டியளித்ததை தொடர்ந்து அரசுக்கு அளித்து வரும் ஆதரவை இடதுசாரிகள் வாபஸ் பெற்றுள்ளன. டெல்லியில் இன்று அவசரமாக கூடி ஆலோசித்த இடதுசாரி தலைவர்கள், இந்த முடிவை அறிவித்தனர். ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை நாளை காலை சந்தித்து ஆதரவு வாபஸ் கடிதத்தை அளிக்கின்றனர்.அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிடாவிட்டால் ஆதரவை விலக்கிக் கொள்வோம் என கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசை இடதுசாரிகள் மிரட்டி வந்தன. இதனால் ஒப்பந்தத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதில் மத்திய அரசு தயக்கம் காட்டி வந்தது. இடதுசாரிகளை சமாதானப்படுத்தும் வகையில் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் ஒருங்கிணைப்பு கமிட்டி ஒன்றும் அமைக்கப்பட்டது. இது பல முறை கூடி விவாதித்தும் இடதுசாரிகள் தங்கள் நிலையிலிருந்து சற்றும் இறங்கவில்லை. ஒப்பந்தம் குறித்து மத்திய அரசு தனது நிலையை இன்று மாலைக்குள் தெரிவிக்க வேண்டும் என இறுதி கெடு வைத்தனர். இந்நிலையில், ஜி-8 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று தனி விமானத்தில் ஜப்பான் புறப்பட்ட பிரதமர் மன்மோகன் சிங், விமானத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், Ôஅணுசக்தி ஒப்பந்தத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில் சர்வதேச அணுசக்தி கழகத்துடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்Õ என்றார். மேலும் இது தொடர்பாக ஜப்பான் மாநாட்டில் அமெரிக்க அதிபர் புஷ் உள்பட உலக தலைவர்களுடன் பேசவிருப்பதாகவும் அறிவித்தார். இதனால் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக இருப்பது மறைமுகமாக இடதுசாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வது குறித்து முடிவு எடுப்பதற்காக இன்று மாலை 4 மணிக்கு நடப்பதாக இருந்த இடதுசாரி தலைவர்கள் கூட்டம், காலை 11.30 மணிக்கு டெல்லியில் அவசரமாக கூடியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத், இந்திய கம்யூனிஸ்ட் ஏ.பி.பரதன், டி.ராஜா, பார்வர்டு பிளாக் மற்றும் ஆர்எஸ்பி உள்ளிட்ட இடதுசாரி கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பிரதமரின் அறிவிப்பை மத்திய அரசின் நிலையாக எடுத்துக் கொள்வது என்றும், மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்வது என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களிடம் பேசிய பிரகாஷ் கரத், 'மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறுவது என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான கடிததத்தை நாளை காலை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவும் முடிவு செய்யப்பட்டது' என அறிவித்தார்.

2 Responses to "ஆப்பை பிடுங்கிய மார்க்சிஸ்டா? ஆப்படித்த மார்க்சிஸ்டா?":

நாமக்கல் சிபி says:

ஆனா இது நல்ல போங்கு ஆட்டம்!
இவர்கலுடைய ஆதரவு வாபஸ் வங்கப்பட்டு விட்டாலும் கூட ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளக்கூடிய அளவில் காங்கிரஸ் கட்சி ஆதரவைச் சேர்த்துக் கொள்ளும் கால அவகாசத்தை(2 வருஷம் போதாதா) கொடுத்து விட்டு, இப்போது பிரதமரே இனி கவலை இல்லை என்று மறைமுகமாகச் சொன்னபிறகு ஆதரவை வாபஸ் வாங்கி மக்களிடம் நல்ல பேர் வாங்கிக் கொள்கிறார்கள்!

நல்லதந்தி says:

எலக்சன் வரட்டும் அப்போ நாம ஆடலாம் நாமக்கல் சிபி அவர்களே!.வருகைக்கு நன்றி!