2. அதே மதுரையில தினகரன் பத்திரிக்கைய யாரோ அடிச்சி நொறுக்கி தீ வெச்சாங்களே!. அதுலகூட ஒரு மூணு பேரு செத்தாங்களே. அதுக்கப்புறம்... அந்த பத்திரிக்கை ஆபீஸெ ஏன் நொறுக்குனாங்க, ஏன் அந்த மூணு பேரக் கொன்னாங்க அப்படின்னு நம்ம போலீசுகாரங்க கண்டு பிடிக்க ரொம்ப திணறுராங்கன்னு அனுதாபப் பட்டு சிபிஐ இதை விசாரிக்கட்டும்னு சொல்லி சிபிஐ கிட்ட ஒப்படைச்சீங்களே சிபிஐ காரங்க எதாவது கண்டுபிடிச்சி உங்கக்கிட்ட சொன்னாங்களா?
3. ஒகேனக்கல் பிரச்சனையில் முதுகெலும்பை முறிச்சாலும் விடமாட்டோமன்னு சொல்லி சில நடிகர்களோட முதுகையும், சில டைரக்டருங்க முதுகையும் கர்நாடகாப் பக்கம் போக விடாம நீங்க முறிச்சீங்களே!. அதுக்கப்புறம் கர்நாடகாவில எலக்ஷன் முடிஞ்சதும் ஒகேனக்கல் திட்டத்தை முடிப்போமுன்னு சொன்னீங்களே கர்நாடகாவில எலக்ஷன் முடிஞ்சி ஒரு வருஷம் ஆகப்போகுதே, இன்னும் எலக்ஷன் முடிஞ்ச தகவல் இன்னும் உங்களுக்குக் கிடைக்கலையா?
4. ஜனாதிபதி எலக்ஷனப்போ திருமதி.பிரதீபா பாட்டிலை நிறுத்த முடிவு செஞ்சப்போ, தமிழனான திரு.அப்துல் கலாமுக்கு ஆதரவு தராம இருக்க, பிரதீப் பாட்டீல் இன்ன இன்ன செய்வார் அப்படின்னு பட்டியல் போட்டீங்க. அதுல பிரதீப் பாட்டீல் ஜனதிபதியா ஆனா “மகளீர் இட ஒதுக்கீடு” மசோதாவிலதான் முதல் கையெழுத்து போடுவாருன்னு சொன்னீங்க. பிரதீப் பாட்டீல் இன்னும் முதல் கையெழுத்து போடலையா?. அதில எதாவது தகவல் உங்களுக்குத் தெரியுமா?
5. உங்க அமைச்சரவையில அமைச்சரா இருந்தாரே தா.கிருட்டிணன். அவரு கொலையில உங்க மகன் உட்பட பல பேர் குற்றவாளிகளா இருந்தாங்க. என்ன நடந்திச்சின்னு தெரியலைங்க. அதில யாருக்கும் சம்பந்தமில்லையன்னு எல்லோரும் விடுதலையாயிட்டாங்க. அப்போ தா.கிருட்டிணன் நடு ரோட்டில அரிவாளாலாலே தன்னைத் தானே வெட்டிக் கிட்டு தற்கொலை செஞ்சிக்கிட்டாராங்க?
5. ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சனை முடிஞ்சு போன விஷயம் அப்படின்னு நீங்க சொன்னவுடனே பத்திரிக்கைகாரங்களும் நம்பிக்கிட்டு இப்போ அதைப் பத்தியெல்லாம் பேசறதே இல்லை. நிஜமாவே ஸ்பெக்ட்ரம் பிரச்சனை முடிஞ்சு போச்சா?. இவ்வளவு வேகமா பிரச்சனையை தீர்க்கிற நீங்க இலங்கைப் பிரச்சனையும் முடிஞ்சி போச்சு அப்படின்னு சொல்லிட்டா பத்திரிக்கைகாரங்க நம்ப மாட்டாங்களா?. ஏங்க இன்னும் சொல்லாம இருக்கீங்க?
6. அழகிரியும் முரசொலி மாறனுடைய மகன்களும் அடிச்சிக் கிட்டு இருந்தப்போ குடும்ப விஷயத்தைப் பக்கம்பக்கமா பத்திரிக்கையில கவிதையாவும், கட்டுரையாவும் அழுதுகிட்டும் மாறன் கும்பலை திட்டிகிட்டும் எழுதினீங்க, இப்போ அவங்க ரெண்டு பேரும் எந்த விஷயத்தால ஒண்ணு சேந்தாங்கன்னு ஏங்க எழுத மாட்டேங்கிறீங்க?
7. பூங்கோதை அப்படின்னு ஒரு அமைச்சர், வழக்கம் போல அவர் அமைச்சரின் அன்றாட பணியைச் செய்ததால நீக்கினீங்க. அவருடைய செயல் உங்களை மிகவும் அவமானப் படுத்துவதாகவும் சொன்னீங்க. திரும்பவும் உங்க அமைச்சரவையில சேர்த்துக் கிட்டு இருக்கீங்க்களே!. அவர் செஞ்ச செயலால உங்களுக்கு ஏற்பட்ட அவமானம் போயிடுச்சாங்களா?. அந்த அவமானத்தை கழுவ அவர் உபயோகிச்ச “சோப் ”என்னாங்க?
8. தமிழைச் செம்மொழியாக்குவோம் அப்படின்னு அடிக்கடி ஜனங்களை உசுப்பேத்துவீங்களே, இப்போ தமிழ் செம்மொழியாகி ரெண்டு, மூணு வருசமாயிடுச்சீங்களே. அதனால தமிழுக்கு என்ன நன்மை கிடைச்சதுன்னு இன்னிய வரைக்கும் யாருக்கும் தெரியலைங்க?. உங்களுக்கு எதாவது நன்மை கிடைச்சுதாங்களா?
9. முல்லைப் பெரியாறு, பாலாறுன்னு அடிக்கடி பேசுவீங்களே, இப்போ வாயையே நீங்க திறக்கரதில்லையே? ஏங்க!... பாலாற்றில ஆந்திர காங்கிரஸ் அரசு எல்லாத் தடுப்பணையையும் கட்டி முடிச்சப்புறம் தான் பேசுவீங்களா?
10. கடைசியா .. நீங்க சில விஷயத்துக்கு உயிரை கொடுக்கிறேன்னு சொல்லும் போது எனக்கே சிரிப்பாயிடுதுங்க. நீங்க உங்களோட அறிக்கையை எழுதும் போது நீங்க மட்டும் சிரிப்பீங்களா? அல்லது அதை நம்புற தமிழர்களை நினைச்சி உங்க வீடே சிரிப்பாச் சிரிக்குமா?
31 Responses to "கலைஞருக்கு மட்டுமே தெரிந்த இரகசியங்கள்!":
இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைக்காது.
மற்றவைகள் நினைவு கூறப்படும்.
ஐ மீன் சொல்லிக்காட்டப் படும்!
அருமையான கேள்விகள் அவரு பதில் சொல்றாரோ இல்லையோ மக்கள் பதில் சொல்வார்கள் ,
இது எல்லாத்துக்கும் தான் அன்றே பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளாரே...படிக்கலையா தல நீங்க
கிழம் மோசமான ஆசாமி...
யாருடைய உயிரை கொடுத்து?
11)ஈழப் பிரச்சினையை பேசியவர்களை எல்லாம் உள்ளே போடாமல் (குறிப்பாக திருமா ) மற்றவர்களை எல்லாம் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போடுவது ஏன்?
12கேபிள் டி வி கார்போரஷன் அரசு ஆரம்பித்து (தயாநிதி கலாநிதியோடு டூ விட்டபோது )"கண்கள் பணித்து இதயம் இனித்தவுடன் "கை விட்டது ஏன் ?
அருமையான கேள்விகள், பதில் யாராவது கூறுவார்களா???
nalla kelunga naakkai pidingikkattum.....!
நச் கேள்விகள்! படிச்சி பாத்து சிரிக்கத்தான் முடியுது! என்ன பன்ன?
தம்பி நல்லாத்தான் கேட்குறாரு கேள்விய!
இதுக்கு நான் என்னோட அடுத்த மேடையில பதில் சொல்லுறேன்.
இப்போதைக்கு ஜூட் விடவேண்டியதுதான்.
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா! கடைசி பாயின்ட்ல என் மனதை கட்சிதமா பிடிசிடியே ...இதயம் இனித்தது ..கண்கள் பனித்தன ... அப்பால என்ன தனிய வந்து மீட் பண்ணு ...உனக்கு ஒரு தொகுதி ஒதுக்கி வக்கிறேன் ! :-))
நாலு வருஷத்துக்கே இத்தனை கேள்விகள்னா, நாப்பது வருஷத்துக்கும் கேட்டா???
//ஜோதிபாரதி said...
இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைக்காது.
மற்றவைகள் நினைவு கூறப்படும்.
ஐ மீன் சொல்லிக்காட்டப் படும்!//
:-)))))
அவர் சொல்லுவதுபோல அவரது அரசியல் வாழ்க்கையின் ஆரம்பத்திலிருந்து நாம் கேள்வி கேட்டோமானால் 3000 அல்லது 4000 பக்கம் தேவைப்படும் என்று நினைக்கிறேன் !
கேள்விகள் அனைத்தும் சூப்பர் .
வலையுலகத்தின் அடிபொடிகள் ஏதேனும் இவற்றிர்ர்க்கு பதில் தருமா ? .....
Thala, i hav been trying to open your blog for last one week. whenever i opened with IE, it says, "Operation Aborted". ennachu ???
i am able to open ur blog in Firefox, but not able use Tamil Fonts
கேட்டான்லே கேட்டான்லே, பத்து கேள்வியை பளார்னு கேட்டான்லே?
எவனும் பதில் சொல்ல போறதில்ல, உங்க வீட்டுக்கு ஆட்டோ-ல ஆளுங்க வராமே இருந்தா சரி.
வாங்க ஜோதிபாரதி, வாங்க சுரேஷ் மக்கள் இந்தத் தேர்தலில் பதில் சொல்லுவாங்கன்னு நினைக்கிறீங்களா!
நான் ஆதவன்! நல்ல பாயிண்ட் மிஸ் பண்ணிட்டேன்!. :)
ttpain அப்படியெல்லாம் சொல்லப் படாது! :))
அனானி நண்பரே நீங்க சொன்ன பாயிண்ட்டையும் மிஸ் பண்ணிட்டேன். இன்னொன்னையும் சொல்லலாம் ஆளுக்கு 2 ஏக்கர் நிலத்தைக் கொடுக்க தேவையான 50 லட்சம் ஏக்கர் நிலம் எங்கே இருக்குன்னு கண்டு பிடிச்சிட்டீங்களா?. இல்லை எல்லோருக்கும் 2 ஏக்கர் நிலம் கொடுத்து முடிச்சாச்சா? :)
வாங்க பழூர் கார்த்தி!,வாங்க Megha babu , வாங்க krish, இந்தக் கேள்விகெல்லாம் பதில் கிடைக்குமாங்க! ரொம்ப ஆசைத்தான் உங்களுக்கு!
நன்றி அனானி, ilayadhasan !
வாங்க கிரி!,miras உங்களுக்கு அருமை அண்ணன் அரு.பாஸ்கரே பதில் சொல்லிட்டார்! ரொம்ப நன்றி பாஸ்!
வாங்க ப்ளீசிங்! புது டெம்ப்ளெட் மாத்தி இருக்கேன் ஒருவேளை அதுதான் பிரச்சனையா?. ஆனா எனக்கு எந்த ப்ரொவ்ஸரிலும் திறக்க முடியுதே எந்தப் பிரச்சனையும் இல்லையே? எதாவது அயல் நாட்டு சதியா தல! :))
வாங்க ஜோ! அதுக்காண்டிதானே நாங்க உஷாரா அட்ரஸ் கொடுக்காம இருக்கிறது! :))
//நீங்க உங்களோட அறிக்கையை எழுதும் போது நீங்க மட்டும் சிரிப்பீங்களா? அல்லது அதை நம்புற தமிழர்களை நினைச்சி உங்க வீடே சிரிப்பாச் சிரிக்குமா?//
என்னத்த சொல்லி என்னத்த எழுதி...
எல்லா கேள்விக்கும் எதிர்கேள்வி வருமே தவிர நேரடியான பதில்கள் வராதே!
ஆனாலும் உங்களுக்கு நியாபக சக்தி அதிம் ஓய்! உமக்கு தமிழ்நாட்டில் இடம் கிடையாது! ஒரு தமிழனா இருக்க லாய்க்கு இல்லை !!1
தமிழகமக்கள் என்றால் 10 நாளுக்கு ஒரு தடவை மெம்மரி க்லியர் பண்ணனும் அப்ப தான் தமிழ்நாட்டு மக்கள் உங்களை லிஸ்டில் சேர்த்துக்குவாங்க... நீங்க பண்ணறது நல்லாவே இல்லா... ஆமாம்.. திருந்துவோய்!!
:((((((((((
//என்னத்த சொல்லி என்னத்த எழுதி...//
வாங்க ராஜநடராஜன் சார் எனக்கும் இதேதான் தேணிச்சி!
//எல்லா கேள்விக்கும் எதிர்கேள்வி வருமே தவிர நேரடியான பதில்கள் வராதே!//
வாங்க வால்! இதுதானே, இந்திய அரசியலின் ஸ்பெஷாலிட்டி!
//ஆனாலும் உங்களுக்கு நியாபக சக்தி அதிம் ஓய்! உமக்கு தமிழ்நாட்டில் இடம் கிடையாது! ஒரு தமிழனா இருக்க லாய்க்கு இல்லை !//
இந்த குசும்புதான் உங்கக்கிட்டே!
ஆமா! உங்களுக்கெல்லாம் கலைஞர் பற்றிய விஷயங்கள் மட்டும் தானே நினைவிருக்கும், இதை தான் செலக்டிவ் அம்னீஷியா என்று சொல்வார்கள்
கருணாநிதியிடம் கேட்கவேண்டிய கேள்வி...
கேட்ட கேள்விக்கு எப்போதுமே சரியான பதிலை சொல்லாத கருணாநிதிக்கு மக்கள் சரியான பதிலைச் சொல்வார்கள் என்று நம்புகிறேன்...
“இந்தியாவும் இலங்கையும் இறையாண்மை உள்ள நாடு” என்று பிரகடனம் செய்ததன் மூலம் கருணாநிதி தன்னை யார்? என்பதை முழுமையாக அம்பலப்படுத்திவிட்டார்.
கருணாநிதியின் அனுமதியோடுதான் தமிழீழத்தில் தமிழினம் அழிக்கப்படுகிறது என்பதை ஒவ்வொரு தமிழனும் உணரவேண்டும். குறிப்பாக தி.மு.க.வில் உள்ள இனவுணர்வுள்ள உண்மையான தொண்டர்கள் உணரவேண்டும்.
// அப்போ தா.கிருட்டிணன் நடு ரோட்டில அரிவாளாலாலே தன்னைத் தானே வெட்டிக் கிட்டு தற்கொலை செஞ்சிக்கிட்டாராங்க?
வழக்கம் போல அவர் அமைச்சரின் அன்றாட பணியைச் செய்ததால நீக்கினீங்க //
என்னங்க தமிழன் எல்லோரும் யோசிக்க ஆரம்பிச்சிடிங்களா?. அப்போ தமிழ்நாட்டுல இனிமேல் பொழப்பு ஓட்ட முடியாதா?. எப்படியோ தமிழை முதலிடா வச்சி 85000 கோடி செந்துரிசி ....
இதையெல்லாம் தெரிஞ்சும் கொடி பிடிக்கும் "அல்ல கைகள்" நெனைச்சா சிரிப்பா வருது ...
ஈழ பிரச்சனை தேர்தல் ல எதிறோளிழிக்கதாம் அதான் உயுரை கொடுகிரத்தை நிறுத்திட்டார்
கலைஞர் கலைஞர்-ன்னு சொல்றீங்களே, அது பரதநாட்டிய கலைஞரா, இல்லை கரகாட்டக்கார கலைஞரா?
இதேல்லாம் பத்தாது இன்னும் எதிர்பார்கிறேன்.
இதை கலைஞர் படித்தால் என்ன reaction தருவார்,
போங்க தம்பி போயி வேற வேலை இருந்தா பாருங்க, என்னோட experience-ல நாங்க வாங்காத திட்டா, உதையா.
நன்றி! அரியாகுப்பத்தாருக்கும், தீலிபன் அவர்களுக்கும், அனானி நண்பர்களுக்கும்!.
Post a Comment