நாளைக்கு எதற்கு விடுமுறை நாள்---கலைஞர் டிவிக்கு யாராவது சொல்லுங்களேன்!

Posted on Tuesday, September 2, 2008 by நல்லதந்தி



ஊரில் உள்ள தொலைக்காட்சிகளெல்லாம் நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்புத்திரைப் படம்,சிறப்பு குத்தாட்ட நிகழ்சிகள் என்று பணம் அள்ளும் வேலையை ஜருராக செய்து கொண்டிருக்கும் போது பகுத்தறிவு தொல்லைக்காட்சியான கலைஞர் டிவி மட்டும் சும்மா உக்காந்து பேன் பார்த்துக் கொண்டிருக்குமா?.ஆரம்பித்து விட்டது தன் சிறப்புக் கொடுமைகளை!.


ஆனால் தம்முடைய பகுத்தறிவிற்கு விநாயகர் சதுர்த்தி கொண்டாடலாமா?.பகுத்தறிவு படபடவென்று வேலை செய்ய,பணம் சம்பாதிக்கும் குறுக்கறிவு குத்தாட்டம் போட,தான் ஏற்கனவே தமிழ்ப்புத்தாண்டுக்கு கண்டுபிடித்து வைத்திருந்த அதே ஃபார்முலாவை கையில் எடுத்து விட்டது.


மற்ற டிவிக்களில் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் கொண்டாடும் போது பகுத்தறிவு டிவி மட்டும் சித்திரை நன்னாள் சிறப்பு நிகழ்ச்சியைக் கொண்டாடியது.அது என்னங்க சித்திரை நன்னாள்ன்னு நமக்கு மண்டை காய்ந்தது தான் மிச்சம்.தமிழ்ப் புத்தாண்டை மாற்றியதை வரவேற்ற பகுத்தறிவு மாமணிகள் யாரும் அது என்ன சித்திரை முதல் நாள் சிறப்பு நிகழ்ச்சி என்று கேட்கவில்லை.வேறு யாராவது கேட்டிருந்தால் கூட இவர்களே முன் நின்று அதற்கு சப்பைகட்டு கட்டியிருப்பார்கள்!.


இப்போது பகுத்தறிவு கலைஞர் டிவிக்கு நாளை விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகளாம்!.இந்தியாவிலேயே நாளைக்குத்தான் முதன்முறையாக விடுமுறை விடுகிறார்களா?அல்லது வருடத்திற்கு ஒரு முறைதான் விடுமுறை விடுகிறார்களா?.இதற்குமுன் விட்டதில்லையா?.என்று பகுத்தறிவாளர்கள் கேள்வி கேட்கமாட்டார்கள்.எனென்றால் பதில் கிடைக்காத கேள்விகளை கலைஞரிடம் கேட்க கூடாது என்பதுதான் பகுத்தறிவு என்று அவர்களுக்குத் தெரியும்!.


கலைஞர் டிவியிடம் பகுத்தறிவை விட பட்டறிவு அதிகம் இருக்கிறது.இல்லையென்றால் விநாயகர் சதுர்த்தியை,விநாயகரைத் தவிர்த்து விட்டு விடுமுறை நன்னாளாக அறிவித்து விளம்பரத்தில்..............ஸ்..ஸ்ஸ்ஸ்... அப்பா....எத்தனை "வி"...... ..காசு அள்ளும் கலையில் தேறியிருப்பார்களா?

22 Responses to "நாளைக்கு எதற்கு விடுமுறை நாள்---கலைஞர் டிவிக்கு யாராவது சொல்லுங்களேன்!":

Anonymous says:

im here because of few cents for you. just dropping by.

Anonymous says:

its good to know about it? where did you get that information?

Anonymous says:

when will you go online?

Anonymous says:

Baw, kasagad-sagad sa iya ubra blog!

Anonymous says:

ok. I found an information here that i want to look for.

வந்தியத்தேவன் says:

அப்படியே இந்தப் பதிவையும் கொஞ்சம் பாருங்கள். கலைஞர் தொலைக்காட்சி தீபாவளியை தீபாவளி என்றே கொண்டாடினார்கள்.

http://enularalkal.blogspot.com/2008/09/blog-post.html

கிரி says:

ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல :-)

நல்லதந்தி says:

// கிரி
September 2, 2008 10:34 AM
ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல :-)//
பயமுறுத்தாதீங்க! கிரி.உள்ளதச் சொன்னேன் அம்புடுதேன்!:)

வால்பையன் says:

அருமையான பதிவு.

திராவிடர் கழகம் என்ற வேரிலிருந்து வந்தது தான் இந்த கிளைகள்.
எல்லா பிள்ளை கட்சிகளும் திராவிடன் என்ற பெயரையும் சேர்த்து வைத்துள்ளன.
திராவிடர்களுக்கு எது கடவுள்.
ஒருவேளை உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருந்து தி.மு.காவிற்கு இல்லை என்பதால் அதை எதிர்க்கிறீர்களா.
இல்லை அதன் கொள்கை பிடிக்காமலா,
அதன் கொள்கை பிடிக்கவில்லை என்றால் எந்த வகையில் உங்களுக்கு அ,தி,மு,காவின் கொள்கைகள் பிடித்திருக்கிறது,

Anonymous says:

தந்தி அய்யா... அதிமுக இல்லை... RSS குரூப்பு

நல்லதந்தி says:

//திராவிடர்களுக்கு எது கடவுள். //

திராவிடர்களுக்கு கடவுள் இல்லை என்று யார் சொன்னது!.அண்ணா ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொல்லவில்லையா?.அ.தி.மு.க வைப் பொறுத்தவரை போலி பகுத்தறிவை எம்.ஜி.ஆரே ஓரம்கட்டிவிட்டு ஆஸ்திகர் ஆனது தெரியாதா??.மூகாம்பிகைக் கோவிலுக்குச் செல்வதை அவர் வழக்கமாக கொண்டாரே!

நிழலின் குரல் says:

//ஒருவேளை உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருந்து தி.மு.காவிற்கு இல்லை என்பதால் அதை எதிர்க்கிறீர்களா.
இல்லை அதன் கொள்கை பிடிக்காமலா,
அதன் கொள்கை பிடிக்கவில்லை என்றால் எந்த வகையில் உங்களுக்கு அ,தி,மு,காவின் கொள்கைகள் பிடித்திருக்கிறது,
//

அண்ணே , கருநாநிதி செய்வது தவறு என்று சுட்டினால் உடனே நீ என்ன அதிமுகவா என்றால் எப்படி , அல்லது அதிமுககாரன் மட்டுமே தவறை சுட்ட தகுதியுள்ளவன் என நினைக்கிறீர்களா ?

தந்தி , நல்ல பதிவு

நல்லதந்தி says:

//Anonymous said...
தந்தி அய்யா... அதிமுக இல்லை... RSS குரூப்பு//
இதுதாங்கையா இம்சை இந்த பகுத்தறிவுங்களோட... கலைஞர் டிவி வியாபாரம் பண்ற டெக்னிக்கைச் சொன்னாக்கூட உடனே ஆரம்பிச்சுருவீங்களே?:)

pudugaithendral says:

கலைஞர் டீவி துவங்கிய மறுநாளே சன் டீவி சக்திகொடுன்னு ஆரம்பிச்சாங்களே.

அது மாதிரி இங்கையும் நிலமை மாறும், நானும் பார்த்தேன் இந்த விளம்பரத்தை

ஆனாலும் இது டூ மச் :))))))))

Kevin Matthews says:

மூச்சிக்கு 300 தடவை தமிழ் தமிழ் என்று சொல்லும் நம் முதல்வர், தன் பெயரால் இயங்கும் தொலைக்காட்சியில் ஆங்கிலம் ஆக்கிரமிக்க அனுமதித்து இருக்கிறார் (ஊருக்கு தான் உபதேசம். வியாபாரம் என்று வந்தால் கொள்கைகள் காற்றில்) பல நிகழ்ச்சிகளில் வரும் தொகுப்பாலர்கள் ஆங்கிலத்திலேயே பேசுகின்றனர். இவர்கள் தமிழர்களுக்கு பிறந்தவர்கள் தானே. தமிழில் பேசினால் மற்றவர்களுக்கு புரியாதா என்ன?. இது நம்முடைய அடிமை தனத்தை காட்டுகிறது. ஆங்கிலேயர்கள் தான் எப்பொழுதுமே உயர்ந்தவர்கள் என்று நமக்குள் ஒரு எண்ணம். அதணால் தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், சாலையில் செல்லும் ஒன்றிரண்டு மேற்கத்தியர்களை பிடித்து வைத்து கருத்து கேட்பது. அவர்களை சும்மா கை தட்ட சொல்லுவதும் ஒன்றிரண்டு தமிழ் வார்த்தைகளை சொல்லி கொடுத்து, அவர்கள் தப்பு தப்பாக சொல்லும்போது மகிழ்வதும் நடக்கிறது. என்ற்றைக்காவது நம்மவர்களை மேற்க்கத்தியர்கள் அவர்கள் நிகழ்ச்சிகளில் உட்கார வைப்பார்களா? கலைஞர் தேர்தலில் தோற்க்கும் போது சொல்வது நினைவுக்கு வருகிறது “எருமை மாட்டு தோல் தமிழர்கள்”.

Anonymous says:

I have alreaedy posted comment about this in yesterday's dinamalr edition. Why Kalaignar TV is feeling shame to say that tomorrow is holiday becuase of Vinayagar Chathurthi. Karunanidhi is just cheating people by saying he is Madhasarbatra arasiyalvadhi, whereas he is the number one religious person and for want of votes of monorities he is doing this cheap politics. He and his family to be hanged in public.

Gunalan87 says:

Engirundhu ippadiyellam yosikeeringa

நல்லதந்தி says:

நன்றிகளுக்கு உரித்தான நண்பர்கள்!
நிழலின் குரல் ,புதுகைத் தென்றல் , Kevin Matthews ,Anony,dinesh

Anonymous says:

Why Kalaignar is feeling shame to say that tomorrow is Vinayagar Chathurthi holiday ?
Youngster like us –don’t like person having 2nd face like Kalaignar.

All Foreign Countries have been started to follow our Hindu religion. Dear reader, kindly note the fact the new bible has recently included many Hindu religious related points

Professor - Newyork

Tech Shankar says:

திட்டுறவங்க திட்ட!(கெட்ட வார்த்தை இல்லாம!!)

sorry sir. I am not going to scold you.

Thunicchalaana post. congrats

Anniyan says:

Kevin Matthews Tamil Name????? confused, can any body explain?

Anniyan says:

Kevin Matthews Tamil Name????? confused, can any body explain?