உண்மையான மதசார்பின்மை----அரசியலில் உள்ள ஒரே ஆண்பிள்ளை ஜெயலலிதா அறிக்கை!

Posted on Friday, September 5, 2008 by நல்லதந்தி



எனக்கு தெரிந்து போலி மதசார்பின்மை இல்லாத ஒரே அரசியல்வாதி ஜெயலலிதா தான்.

இந்து மதத்தை பற்றி திட்டிப் பேசுவதும்,மற்ற மதங்களைப் புகழ்ந்து பேசுவது மட்டுமே எழுதப் படாத மதசார்பின்மையாகிவிட்டது.

இந்து மதத்தைப் பற்றி உயர்வாகப் பேசிவிட்டால் உடனே அவர்கள் RSS,இந்துத்வா வாதிகள்,அல்லது இந்து தீவிரவாதிகள் என்று பத்திரிக்கைகளும் ஊடகங்களும் உடனே சித்தரித்து விடுகின்றன.

மதசார்பின்மை என்றால் எல்லா மதங்களுக்கும் ஒரே நிறை என்றுதானே அர்த்தம்.அதை விட்டுவிட்டு பெரும்பான்மை மக்களின் மதத்தை இழிவு படுத்துவதும்,சிறு பான்மை மக்கள் மதத்தின் பெயரால் என்ன செய்தாலும் கண்டிக்காமல் இருப்பதும் தான் மதசார்பின்மையா?.


சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்தால், அது கலை!.அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றவர்கள் இந்து வெறியர்கள்.

அதே ஒரு ஓவியக் கண்காட்சியில் முஸ்லீம் மன்னர்களின் கொடுங்கோல் தன்மையைப் பற்றி படம் இருந்தால் அதற்கு அரசாங்கமே எதிர்ப்பு தெரிவிக்கின்றது.அது சிறு பான்மையினர் மனதைப் புண்படுத்துமாம்.என்ன கொடுமை!.

அரசனுடைய கொடுங்கோன்மைக்கும் சிறு பான்மையினருக்கும் என்ன சம்பந்தம்.இது முஸ்லீம்கள் அனைவரையுமே அரசு கேவலப் படுத்தும் செயல் அல்லவா?.சிறுபான்மையினர் அனைவருமே அந்த அரசனைப் போன்றவர்கள் தான் என அரசு நம்புகிறதா?.

முஸ்லீம்கள் இதைக் கண்டிக்காமல், அரசு சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருப்பதாக எண்ணிக்கொள்கிறார்கள்.ஆட்சியாளர்கள் இந்து மதத்தை இழிவுபடுத்துவதால், அவர்கள் தங்களுக்கு ஆதரவானவர்கள் என்று தவறாக கருதிக்கொள்கிறார்கள்.எல்லாம் ஓட்டுக்காகத்தான் என்பதை சிறுபான்மையி னர் மறந்துவிடக்கூடாது.


இந்த நிலையில் தானும் ஒரு அரசியல்வாதியாய் சில தவறு களைச் செய்திருத்தாலும், எல்லா மதங்களும் சமம் என்று உண்மையாய், மனதில் இருப்பதை தைரியமாகச் சொல்லும் ஜெயலலிதா உண்மையிலேயே ஒரு புரட்சிதலைவிதான்!


அவருடைய அறிக்கை கீழே!


ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினருக்கும், வீடுகளை இழந்தவர்களுக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உதவி செய்யப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சுதந்திரம் அடைந்து 60 ஆண்டு காலம் ஆகியும், இன்னும் ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் இந்தியர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வது துரதிஷ்ட வசமாகும். இந்த சம்பவங்களால் பாதிக்கப்படும் அப்பாவிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவவேண்டும்.

அந்த அடிப்படையில் பிரதமர் மன்மோகன்சிங் ஒரிசாவில் மத பிரச்சினையின்போது பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு உதவி செய்வதாக அறிவித்துள்ளார். இது வரவேற்க கூடியது. அதே நேரத்தில் காஷ்மீரில் தீவிரவாதத்தாலும், மதவாதத்தாலும் சுமார் 3 லட்சம் இந்துக்கள் தங்கள் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தையும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். காஷ்மீர் இந்துக்கள் தாங்கள் பிறந்த மண்ணான சொர்க்க பூமியை விட்டு ஜம்மு பகுதியிலும், டெல்லி நகரிலும் சிதறுண்டு பரிதாபமான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

5 ஆயிரம் ஆண்டு கால பூர்வீகம் கொண்ட காஷ்மீர் இந்துக்களின் வீடுகள் தீவிரவாதிகளால் சின்னா பின்னமாக்கப்பட்டன. மத அடிப்படைவாத கலாசாரம் காரணமாக காஷ்மீரில் நிலவிய மதச்சார்பின்மை கலாசாரம் அழிக்கப்பட்டு விட்டது.

காஷ்மீர் பண்டிட்கள் என்று அழைக்கப்படும் அங்குள்ள இந்துக்கள் கல்வியில் இந்தியாவிலேயே சிறந்து விளங்கியவர்கள்.

1990-களில் சொந்த மண்ணிலேயே அவர்கள் அனாதையானார்கள். அவர்களின் சொத்துக்களை தீவிரவாத குழுக்கள் சூறையாடி அள்ளிச்சென்றன. ஆயிரக்கணக்கான பண்டிட்டுகள் கொடூரமாக முறையில் கொல்லப்பட்டார்கள். அங்கிருந்து தப்பிய சுமார் 31/2 லட்சம் பேர் டெல்லி மற்றும் ஜம்முவில் போதிய இருப்பிட, சுகாதார வசதிகள் இன்றி அங்கு வாழ்ந்து வருகிறார்கள்.

தங்களுக்கு வழங்கப்படும் குறைந்த அளவு ரேஷன் பொருட்களை வாங்கி, என்றாவது ஒருநாள் பிறந்த மண்ணுக்கு திரும்புவோம் என்ற நம்பிக்கையுடன் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். காஷ்மீர் இந்துக்களை போல சீக்கியர்களும், தீவிரவாத மற்றும் மத அடிப்படை வாதத்தால் மிகவும் பாதிக்கப்பட்டார்கள்.

ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் பாதிக்கப்பட்டதை போல, காஷ்மீர் இந்துக்களும், சீக்கியர்களும் மதவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். எனவே, ஒரிசாவில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் மேல் காட்டப்படும் அதே அக்கறையை இவர்கள் மீதும் செலுத்த வேண்டும். எனவே, பிரதமர் ஒருகண்ணில் வெண்ணையையும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பையும் வைப்பது எந்த விதத்தில் நியாயம். காஷ்மீரில் பாதிக்கப்பட்டுள்ள இந்துக்கள் மீதும் கரிசனம் காட்டவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

காஷ்மீரில் பாதிக்கப்பட்ட இந்துக்களும், மதவாதத்திற்கு இரையானவர்களே என்று வெளிப்படையாக அறிவிக்கக்கூடிய துணிவு பிரதமருக்கு வேண்டும். ஒரிசாவில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு செய்யப்படும் அனைத்து மறுவாழ்வு பணிகளும், காஷ்மீர் இந்துக்களுக்கும் செய்ய வேண்டும். இதுதான் உண்மையான மதச்சார்பின்மை ஆகும்.

இவ்வாறு அறிக்கையில், ஜெயலலிதா கூறியுள்ளார்.

32 Responses to "உண்மையான மதசார்பின்மை----அரசியலில் உள்ள ஒரே ஆண்பிள்ளை ஜெயலலிதா அறிக்கை!":

Anonymous says:

really she is a iron day.

வால்பையன் says:

எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை

ஹீ ஹீ ஹீ

Robin says:

ஒரிசாவில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு என்ன பாதுகாப்பு கிடைத்துள்ளது? தொடர்ந்து தாக்கப்பட்டுக்கொண்டுதானே உள்ளனர்? கரசேவையை ஆதரித்த போதே ஜெயலலிதாவின் சாயம் வெளுத்து விட்டது. சீக்கியர்களுக்கும் இந்துக்களுக்கும் உடவவேண்டாம் என்று யார் சொன்னது. இந்த நேரத்தில் இதை சொல்ல வேண்டிய அவசியம் என்ன? இவரைப் போன்ற மதவெறிபிடித்த அநாகரிகமான அரசியல்வாதி இதுவரை தமிழ்நாட்டில் இருந்த்ததில்லை. இனிமேலும் வரப்போவதில்லை

Unknown says:

அம்மான்னா சும்மாவா :))

Bleachingpowder says:

இந்த விசியத்தில் உன்மையிலே அவரை பாராட்ட வேண்டும். ஓட்டு போயிவிடுமே என்று கவலை படமால் தனக்கு எது சரி எது நியாயம்னு பட்டதை எவனுக்கும் பயப்படாமல் சொல்லும் அருகதை ஜெயலலித்தாவிற்கு மட்டுமே உண்டு.

இந்தியாவில் மதக்கலவரங்கள் நடந்த போது கருத்து சொன்ன போப் ஆண்டவரை... it's none of his businessன, இது எங்கள் உள்நாட்டு பிரச்சனைனு சொன்ன தைரியம் இங்கே எத்தனை பேருக்கு இருக்கு

நல்லதந்தி says:

//ஒரிசாவில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு என்ன பாதுகாப்பு கிடைத்துள்ளது? தொடர்ந்து தாக்கப்பட்டுக்கொண்டுதானே உள்ளனர்? கரசேவையை ஆதரித்த போதே ஜெயலலிதாவின் சாயம் வெளுத்து விட்டது. சீக்கியர்களுக்கும் இந்துக்களுக்கும் உடவவேண்டாம் என்று யார் சொன்னது. இந்த நேரத்தில் இதை சொல்ல வேண்டிய அவசியம் என்ன? இவரைப் போன்ற மதவெறிபிடித்த அநாகரிகமான அரசியல்வாதி இதுவரை தமிழ்நாட்டில் இருந்த்ததில்லை. இனிமேலும் வரப்போவதில்லை//

\\ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் பாதிக்கப்பட்டதை போல, காஷ்மீர் இந்துக்களும், சீக்கியர்களும் மதவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். எனவே, ஒரிசாவில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் மேல் காட்டப்படும் அதே அக்கறையை இவர்கள் மீதும் செலுத்த வேண்டும். எனவே, பிரதமர் ஒருகண்ணில் வெண்ணையையும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பையும் வைப்பது எந்த விதத்தில் நியாயம். காஷ்மீரில் பாதிக்கப்பட்டுள்ள இந்துக்கள் மீதும் கரிசனம் காட்டவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.\\
இதை ஜெயலலிதா முன்பே கூடச் சொல்லியிருக்கிறார்.ஆனாலும் இதுவரை அரசு அவர்களுக்கு உதவவில்லையே?.அரசாங்கம் என்பது எல்லாதரப்பு மக்களுக்கும் தான் இதில் மதபாரபட்சம் காட்டாதீர்கள் என்றுதானே சொல்கிறார்.இந்த தைரியம் வேறு அரசியல்வாதிகளுக்கு உள்ளதா?

நல்லதந்தி says:

//வால்பையன் said...
எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை

ஹீ ஹீ ஹீ//
:))))

Unknown says:

அய்யா ராபின்!!!! இவர் அந்த தாக்குதலையும் தான் கண்டித்துள்ளார்!!!!!
சும்மா ஓட்டுக்காக இந்துக்களை திட்டியும் பழித்தும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுடன் கூட்டு வைத்து மதசார்பின்மை பேசி அனைவரையும் ஏமாற்றும் திறமை இவரிடம் இல்லை தான்....என்ன செய்ய உங்களை போல படித்தவர்கள் கூட அவரை நம்புகிறீர்கள்!!!! நியாயம் பேசினால் உங்களுக்கு கசக்கிறது :(((

Unknown says:

அய்யா ராபின்!!!! இவர் அந்த தாக்குதலையும் தான் கண்டித்துள்ளார்!!!!!
சும்மா ஓட்டுக்காக இந்துக்களை திட்டியும் பழித்தும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுடன் கூட்டு வைத்து மதசார்பின்மை பேசி அனைவரையும் ஏமாற்றும் திறமை இவரிடம் இல்லை தான்....என்ன செய்ய உங்களை போல படித்தவர்கள் கூட அவரை நம்புகிறீர்கள்!!!! நியாயம் பேசினால் உங்களுக்கு கசக்கிறது :(((

நல்லதந்தி says:

//Bleachingpowder said...
இந்த விசியத்தில் உன்மையிலே அவரை பாராட்ட வேண்டும். ஓட்டு போயிவிடுமே என்று கவலை படமால் தனக்கு எது சரி எது நியாயம்னு பட்டதை எவனுக்கும் பயப்படாமல் சொல்லும் அருகதை ஜெயலலித்தாவிற்கு மட்டுமே உண்டு.

இந்தியாவில் மதக்கலவரங்கள் நடந்த போது கருத்து சொன்ன போப் ஆண்டவரை... it's none of his businessன, இது எங்கள் உள்நாட்டு பிரச்சனைனு சொன்ன தைரியம் இங்கே எத்தனை பேருக்கு இருக்கு//
இதுக்காகத்தான் இந்த டைட்டில்! :)

நல்லதந்தி says:

//Kamal said...
அய்யா ராபின்!!!! இவர் அந்த தாக்குதலையும் தான் கண்டித்துள்ளார்!!!!!
சும்மா ஓட்டுக்காக இந்துக்களை திட்டியும் பழித்தும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுடன் கூட்டு வைத்து மதசார்பின்மை பேசி அனைவரையும் ஏமாற்றும் திறமை இவரிடம் இல்லை தான்....என்ன செய்ய உங்களை போல படித்தவர்கள் கூட அவரை நம்புகிறீர்கள்!!!! நியாயம் பேசினால் உங்களுக்கு கசக்கிறது :(((//
போலி மதசார்பின்மை இல்லாத அம்மான்னா சும்மாவா? :))

நல்லதந்தி says:

//Kamal said...
அய்யா ராபின்!!!! இவர் அந்த தாக்குதலையும் தான் கண்டித்துள்ளார்!!!!!
சும்மா ஓட்டுக்காக இந்துக்களை திட்டியும் பழித்தும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுடன் கூட்டு வைத்து மதசார்பின்மை பேசி அனைவரையும் ஏமாற்றும் திறமை இவரிடம் இல்லை தான்....என்ன செய்ய உங்களை போல படித்தவர்கள் கூட அவரை நம்புகிறீர்கள்!!!! நியாயம் பேசினால் உங்களுக்கு கசக்கிறது :(((//
போலி மதசார்பின்மை இல்லாத அம்மான்னா சும்மாவா? :))

Anonymous says:

//இந்தியாவில் மதக்கலவரங்கள் நடந்த போது கருத்து சொன்ன போப் ஆண்டவரை... it's none of his businessன, இது எங்கள் உள்நாட்டு பிரச்சனைனு சொன்ன தைரியம் இங்கே எத்தனை பேருக்கு இருக்கு//

itha ketta pop aandavar dressulaye uchcha poyttaaraam

Anonymous says:

//இந்தியாவில் மதக்கலவரங்கள் நடந்த போது கருத்து சொன்ன போப் ஆண்டவரை... it's none of his businessன, இது எங்கள் உள்நாட்டு பிரச்சனைனு சொன்ன தைரியம் இங்கே எத்தனை பேருக்கு இருக்கு//

itha ketta pop aandavar dressulaye uchcha poyttaaraam//

:))

Anonymous says:

:)):)):)))) :(

Robin says:

ஒரிசா காவி மிருகங்களால் பற்றி எரியும்போது வேறு பிரச்சனைகளை கிளப்புவது இந்தப் பிரச்னையை நீர்த்துப் போகச் செய்யும் தந்திரம். ஜெயலலிதா இதில் கை தேர்ந்தவர். போப் ஆண்டவரை எதிர்த்துப் பேச என்ன தைரியம் வேண்டும்? அவர் என்ன தீவிரவாதத் தலைவரா? அல்லது அவரை எதிர்த்துப் பேசியவர்களின் தலையை எடுக்க யாராவது விலை வைக்கப் போகிறார்களா? கிறிஸ்தவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அதை கண்டிப்பதற்கு போப்-ஐத் தவிர யாருக்கு அதிக உரிமை இருக்கிறது? இந்த அடிப்படை உண்மை கூட தெரியாத அடி முட்டாள் ஜெயலலிதா திமிர் பிடித்து பேசிய பேச்சுக்கு ஜால்ரா போட ஒரு கூட்டம் வேறு.

Unknown says:

அய்யா...இதில் ஜெயலலிதா என்ன பிரச்சனையை கிளப்புகிறார்?
அரசாங்கம் என்பது கிருச்துவர்களுக்காக மட்டும் இல்லை அனைத்து மக்களிக்கும் தான் என்று சொல்கிறார். இதில் என்ன தவறு?
மேலும் ஜெயலலிதா கொண்டுவந்தது மதமாற்ற தடை சட்டம் அல்ல "கட்டாய மதமாற்ற தடை சட்டம்". ஒரு நாட்டின் ஒரு மாநில உள்விவகாரத்தில் போப் எப்படி தலையிட முடியும்.இப்படி உண்மையை சொல்வதால் நாங்கள் ஜால்ரா கூட்டம் என்றால் அதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி :))))) ஜிங் ஜக் ஜிங் ஜக்

Unknown says:

I write one blog reg Online Advertising...Please read that and post ur sugesstions.

http://kamalkanth.blogspot.com

Krish says:
This comment has been removed by the author.
Anonymous says:

//கிறிஸ்தவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அதை கண்டிப்பதற்கு போப்-ஐத் தவிர யாருக்கு அதிக உரிமை இருக்கிறது? இந்த அடிப்படை உண்மை கூட தெரியாத அடி முட்டாள் ஜெயலலிதா திமிர் பிடித்து பேசிய பேச்சுக்கு ஜால்ரா போட ஒரு கூட்டம் வேறு.//
கிருத்துவர்களுக்கு பிரச்சனை என்றால் போப் வருவார்,கிருத்துவ நாடுகள்வரும்.முஸ்லீம்களுக்கு பிரச்சனையென்றால் முஸ்லீம் நாடுகள் வரும் என்றால் இந்தியா என்ற தேசம் எதற்கு?..இந்திய இறையாண்மையில் தலையிட இவர்கள் யார்??.அல்லது இவர்களெல்லாம் இந்தியர்கள் இல்லையா?.மதம் இந்த அளவிற்க்கா கண்ணை மறைக்க்கும்?

Krish says:

ஜெயலலிதா சொல்வது சரிதான். தனது சொந்த நாட்டிலே, விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய மாணவர்களை ஒரு கிறிஸ்துவப் பள்ளி நீக்குகிறது. இங்கு யார் சிறு பான்மையினர் எனபது தெரியவில்லை. உலகிலேயே முஸ்லிம்கள் பாதுகாப்பாக வாழ்வது இந்தியாவில் தான். இந்து மதத்தை தூற்றி பேசும் முதல்வர் மாற்ற மதங்களை பற்றி வாய் திறப்பதே இல்லை. ஆட்சி செய்பவர்கள் எந்தவித விருப்பு வெறுப்புமின்றி நடுநிலையாக நடந்து கொள்வதுதான் முறை. அதைத்தான் ஜெயலலிதா சொல்கிறார். கிருத்துவர்களின் மீது நடந்த தாக்குதல்களை கண்டித்த அவர், மாற்ற மதங்களிலும் இதே போல் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்கின்றார். இதிலென்ன தவறு?

ஜெயலலிதா மாதிரி சில பேராவது வேண்டும். இல்லையென்றால் நமது நாட்டில் உள்ள பெரும்பான்மையான இந்துக்களை கிருத்துவர்களாக மாற்றி விடுவார்கள். அப்புறம் இந்தியா கிருத்துவ நாடக மாறி, இந்துக்கள் சிறுபான்மையினர் ஆகிவிடுவார்கள்

Anonymous says:

//ஜெயலலிதா மாதிரி சில பேராவது வேண்டும். இல்லையென்றால் நமது நாட்டில் உள்ள பெரும்பான்மையான இந்துக்களை கிருத்துவர்களாக மாற்றி விடுவார்கள். அப்புறம் இந்தியா கிருத்துவ நாடக மாறி, இந்துக்கள் சிறுபான்மையினர் ஆகிவிடுவார்கள்///
இதற்குத்தான் இவ்வளவு போராட்டமும் krish!

Bleachingpowder says:

//கிறிஸ்தவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அதை கண்டிப்பதற்கு போப்-ஐத் தவிர யாருக்கு அதிக உரிமை இருக்கிறது?//

இதே மாதிரி இந்து மததிற்க்கு ஓரு பிரச்சனை என்றால் அதை கேட்கவும் ஆள் இருக்கிறது ஆனால் அவர்களை நீங்கள் காவி மிருகங்கள், இந்து வெறியன் என்கீறீர்கள்.

உங்கள் மததிற்கு ஆதரவா ஒருத்தர் இருந்தா அவர் தேவ தூதர், அதே இந்து மதத்திற்கு ஒருத்தர் இருந்தா அவர்கள் இந்து தீவரவாதி.

போப் ஆண்டவர் என்பவர் யார்? just ஒரு மதவாதி. இல்லை உங்கள் மொழியில் சொன்னால் கிறித்துவ வெறியன் அவ்வளவுதான்.

கட்டாய மதமாற்றத்தை தானே ஜெயலலிதா தடை செய்தார். நீங்கள் அதை செய்யவில்லை என்றால் பின்னே நீங்கள் எதற்கு பின்னாடி சூடு வச்ச மாதிரி புலம்புரீங்க.

Anonymous says:

ராபின் என்னவோ கிறித்துவர்கள் ரொம்ப நல்லவர்கள் போலவும் ஒரிஸ்ஸாவில் இந்துக்கள் காட்டுமிராண்டிதனம் மட்டும் செய்வது போல புரஜக்ட் செய்கிறார்.

ஒரிஸ்ஸாவில் நடப்பது எவ்வளவு காட்டுமிராண்டிதனமோ அதை விட பல மடங்கு காட்டுமிராண்டிதனத்தை கிறித்துவர்கள் நடத்தி காட்டியிருக்கின்றனர், அதுவும் இந்தியாவில்.கோவாவில் கிறுத்துவராக மதம் மாறாத 121 இந்துக்களை எரித்து கொன்றது ஒரு உதாரணம். கபாலீஸ்வரர் கோயிலை இடித்து சாந்தோம் சர்ச் கட்டியது இன்னொரு உதாரணம்.

ரவி says:

வாழ்க மம்மிகள். வீழ்க திம்மிகள்...

ரவி says:

மைனாரிட்டி தி.மு.க அரசு வீழும் நாளே தமிழகத்துக்கு பொன்னாளாம்.

ரவி says:

விரைவில் தேர்தல் வரும். அதில் அம்மாவின் பொற்கால ஆட்சி மீண்டும் மலரும்.

ரவி says:

அண்ணா நாமம் வாழ்க, புரட்சித்தலைவர் நாமம் வாழ்க...

ரவி says:

தோழரே உங்கள் பார்வையில் தான் குற்றம் உள்ளது...

பெண்கள் ஆடும்போது அவர்கள் மார்புகள் குலுங்குவது மட்டும்தானா உங்கள் கண்ணுக்கு தெரிந்தது ? வெற்றிபெறவேண்டும் என்ற வெறியும், போராடும் குணமும், அடுத்த தலைமுறையை வென்றெடுக்கப்போகும் தன்னம்பிகையும் ஏன் தெரியாமல் போனது ?

///அடுத்த அப்துல் கலாம் யார், அடுத்த கல்பனா சாவ்லா யார், அடுத்த சுனிதா வில்லியம்ஸ் யார், அடுத்த பில்கேட்ஸ் யார் என்றெல்லாம் யாருக்கும் யோசிக்க நேரமில்லை. அதற்கான நேரத்தையும் பணத்தையும் செலவழிக்க இங்கே யாரும் தயாராக இல்லை.////

அப்துல் கலாம் சரி, அடுத்ததா சொன்னீங்களே கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் ? யார் அவர்கள் ?

இந்தியர்களா ?????

அமெரிக்கர்களை திருமணம் செய்து அமெரிக்காவிலேயே வாழும் அமெரிக்க பிரஜைகள்.

அவர்களை பார்த்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியது என்ன ?

அமெரிக்காவில் போய் செட்டில் ஆகி அமெரிக்கர்களோடு படுக்கவேண்டும் என்பதா ?

பில்கேட்ஸ் யார் ? ஆப்பிள் நிறுவனத்தில் டெக்னாலஜியை திருடி ஊர் உலகமெல்லாம் விற்று பணம் பார்த்த ஒருவர். அவர் என்ன போராளியா ?? சமூக சேவகரா ? ஆங் சான் சூகியா ? சே குவாராவா ?? பிரபாகரனா ?? நம்மாழ்வாரா ?? எம்.எஸ் உதயமூர்த்தியா ?? கோடிக்கணக்கான மரக்கன்றுகளை ஆப்ரிக்காவில் நட்டு அமைதிக்கான நோபல் பரிசு பென்ற வான்காரி மாத்தாயா (Wangari Maathai)?

தனிப்பட்ட கேள்வி என்று கோபிக்கவேண்டாம், கே.எஸ் ரவிக்குமார் என்ன வரலாற்றுப்பட இயக்குனரா ? நாட்டாமை உட்பட அவர் எடுத்த படங்கள் என்ன மாற்றங்களை ஏற்படுத்தியது ? தூய பணியான ஆசிரியப்பணியில் ராணி என்ற ஐட்டம் கேரக்டரை வைத்ததிலாகட்டும், அவரது படங்களில் எல்லாம் முதிர்ந்த நடிகைகள் நடிப்பதாகட்டும்...

அப்போது உங்கள் பார்வையை அவரிடம் நேரடியாக தெரிவித்துள்ளீர்களா ?

கமர்ஷியல் இயக்குனராக என்ன செய்யவேண்டுமோ அதை அவர் செய்கிறார், நீங்களும் பணிபுரிகிறீர்.

விஜய் டி.வி உட்பட எந்த மீடியாவும் தருமத்துக்கு நடத்தவில்லை, பணம் செய்ய தெரிந்தவன் புத்தியாக பிழைக்கிறான்...

Thats all dude....!!!


இந்த பின்னூட்டம் எங்கே போட்டேன் என்று கண்டுபிடித்து அந்த பதிவை படிக்கவும்.

Anonymous says:

ஒரிசாவின் கலவரத்திற்கு மூல காரணம் பழங்குடியினர் மத்தியில் சேவை புரிந்து வந்த சுவாமி லக்ஷ்மணனாந்தா கிருஷண ஜெயந்தி விழாவன்று சுட்டுக் கொல்லப்பட்டதுதான். அதைப் பற்றி ஏன் யாரும் வாயைத் திறப்பதில்லை?

Anonymous says:

செந்தழல் ரவி என்பவர் தனக்கு விளம்பரம் தேடுவதற்காக, தன்னை புத்திசாலியாகக் காட்டுவதற்காக, தனது (கிருத்துவ)மதத்தைத் தவிர பிற மதங்களை இகழ்வதற்காக, அவர் விரும்பியவாறு விளம்பரம் செய்ய அவருக்கு உரிமை உண்டு....

.... நீங்கள் ***, செந்தழல் ரவி போன்ற கிருத்துவர்களோடு நட்பு பாராட்டுவதற்கான காரணம் என்னவென்று எங்களுக்குத் தெரியும். செந்தழல் ரவி நாத்திகன் எனச் சொல்லிக்கொண்டு மற்ற மதங்களை இழிவு செய்வது ஏன் என்றும் எங்களுக்குத் தெரியும்.

இந்த பின்னூட்டம் எங்கே என்று கண்டுபிடித்து படிக்கவும்.

இங்கு வந்து செந்தழலார் குமுறிவிட்டு போனதன் காரணம் புரியும்!!!

RAJARISHI says:

நம் நாட்டில் இருக்கும் கிருத்துவர்கள் எல்லாம் வாட்கனிலிருந்தும் , இத்தாலியில் இருந்தும் குதித்தவர்கள் அல்ல...அனைவருமே கன்வர்டர்ட் கிருஸ்டியன்ஸ் தான்..இவர்களுக்கு தாதாவுக்கு தாத்தா முனுசாமி, மாடசாமி தான்..ஆனால் இவர்கள் தான் சர்ச், பைபிள், அல்லலூயா என்று குதிகுதி யென்று குதிக்கிறார்கள்.
வெளிநாடுகளில்- பாரிஸ் உட்பட- சர்ச் கேளிக்கை விடுதி ஆகிவிட்டது..இதை நான் சொல்லவில்லை..அயல் நாட்டு தொலைக்காட்சி கூறியது..எனக்குத் தெரிந்த க்ரைம் மர்ம கதை எழுத்தாளர் ஒரு சமயம் வேதனையுடன் சொன்னார்: அவர்கள் வீட்டுப் பின் புறம் வசிக்கும் ஓர் கிருத்துவக் குடும்பம் தாங்கள் வளர்க்கும் செல்ல நாய்க்கு வைத்திருந்த பெயர் என்ன தெரியுமா? ‘லட்சுமி’..வருத்தத்துடன் அவர் அன்று சொன்னது மறக்கமுடியாதது..