ஒரு கூட்டத்துக்கோ, விருந்துக்கோ புறப்படும் போது,அங்கே சந்திக்கப்போகும் ஒவ்வொருவரிடமும் கவனம் செலுத்துவது என்று தீர்மானத்துக் கொள்ளுங்கள்.
ஒருவர் உங்களுக்கு அறிமுகம் ஆகும் போது,அந்தப் பெயரைச் சரியாகத் தெரிந்து கொள்ளுங்கள்.அநேக தடவைகளில் அறிமுகம் என்பது அவசர அவசரமாக முடிந்துவிடும்.முணுமுணுவென்று ஏதோ சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள்.கூச்சப் படாமல் ஒரு தடவைக்கு இரண்டுதடவையாக அந்தப் புது நண்பரையே,அவர் பெயரைக் கேளுங்கள்.
அறிமுகம் ஆனவருடைய பெயர் அடிக்கடி பேச்சில் வ்ரும்படி உரையாடுங்கள்.அறிமுகம் ஆகும் போது "வணக்கம்" என்று வெறுமே மொட்டையாகச் சொல்வதை விட "வணக்கம் சரவணன்"..என்று சொல்வது நலம்.
முகத்தைக் கூர்ந்து கவனிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.முகத்தின் அமைப்பு,வடிவம் இவற்றை மனதில் பதித்துக் கொள்ளுங்கள்.காது,மூக்கு, முதலியவற்றின் அடையாளங்களில் விசேஷ கவனம் செலுத்துங்கள்.
பெயரைச் சட்டென்று நினைவுக்கு கொண்டு வரக்கூடியபடி அதற்குத் தொடர்பான இன்னொன்றையும் நினைவு படுத்திக் கொள்ளுங்கள். ஒருவர் "வீராசாமி" என்று பெயர் கொண்டிருந்தால்,"அமாவாசை அமைச்சர் ஆற்காடு வீராசாமி" என்று மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.இந்த கற்பனை எவ்வளவுக்கெவ்வளவு பித்துக்குளித்தனமாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு மேல்!.
நீங்கள் சந்திக்கும் மனிதர்களைப் பற்றிய சிறு சிறு குறிப்புகளை அன்றாடம் டைரியில் எழுதி வையுங்கள்.இது முக்கியம்.ஏனென்றால் ஒரு நாளில் நடைபெறும் விஷயங்களில் ஐந்தில் ஒரு பகுதி 24 மணிநேரத்தில் மறந்து விடுகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
முன்பு சந்தித்த நபரையே மீண்டும் பார்க்க நேரிட்டால் அவர் பெயரைச் சொல்ல நினைக்காதீர்கள்.நிதானித்து அவரை எந்தச் சந்தர்ப்பத்தில்,எப்படிச் சந்தித்தீர்கள் என்ற பழைய நிகழ்ச்சியை ஞாபகத்துக்கு கொண்டு வாருங்கள்.
மேல உள்ளவைகள் முகங்களையும்,பெயர்களையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள சில நல்ல வழிகள்.
கண்டதும்,சுட்டதும்.......நல்லதந்தி!.
17 Responses to "இந்த ஆளை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே!":
well its nice to know that you have great hits here.
very nice! hahahahaha
நல்லதந்தி பெயரை நியாபகம் வச்சுக்க... என்ன பண்ணலாம்
நேற்று என் பேத்தியை டாக்டரிடம் காட்ட மருமகளுடன் சென்றேன். க்ளினிக்கில் இருந்த ஒரு உதவியாளர் என்னிடம் "நீங்கள் 1961- 62ல் சேவியர் கல்லூரியில் படித்தவர்தானே?" என்றார். எனக்கு ஒரே ஆச்சரியம். எப்படி அடையாளம் கண்டீர்கள் என்றதற்கு அவர், தலைமுடி தான் கொட்டி நரைத்துவிட்டதே தவிர உங்கள் முகம் மறக்க முடியவில்லை. அன்று காலேஜில் நீங்கள் எவ்வளவு பிரபலம் தெரியுமா என்றார். இவ்வளவுக்கும் அவர் எனக்கு ஜூனியர்.
சகாதேவன்
இந்த விஷயங்களில் நான் நிறைய அனுபவபட்டிருக்கிறேன்,
இயற்கையிலேயே நான் பெரிய குழப்பவாதி
சில சமயங்களில் பெயரை மறந்து விடுவேன்.
ராஜாராம் என்ற பெயருக்கு ராமராஜன் என்ற பெயரெல்லாம் வரும்.
ராமலிங்கத்துக்கும், ராமகிரிஷ்ணனுக்குமே பெரிய போராட்டம் நடக்கும் என்றால் பார்த்துகோங்களேன்
:))))
//ஒருவர் "வீராசாமி" என்று பெயர் கொண்டிருந்தால்,"அமாவாசை அமைச்சர் ஆற்காடு வீராசாமி" என்று மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்//
ஹா ஹா ஹா
உங்கள் யோசனைகள் நன்றாக உள்ளது :-)
கிரி, உருப்படியில்லாத பதிவுகள் ஹிட்டாவது தப்பில்லே!.ஆனா ...உருப்படியானது ஹிட்டாகணும்!.
ஒரு குற்றவாளி சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கிறது குற்றமில்ல!.ஆனாஒருநிரபராதி தண்டிக்கப் படக்கூடாது!. என்று மேஜர் சுந்தர்ராஜனே பல படத்தில சொல்லியிருக்காரு(இதை மேஜர் சுந்தர்ராஜன் சொல்வதைப்போல் சொல்லிப்பாருங்கள்.சூப்பரா இருக்கும்!)
இந்தப் பதிவு ஹிட் ஆவாதுன்னு நினைச்சி போட்டு இருக்க்கேன்!!. :)
//இந்த விஷயங்களில் நான் நிறைய அனுபவபட்டிருக்கிறேன்,
இயற்கையிலேயே நான் பெரிய குழப்பவாதி
சில சமயங்களில் பெயரை மறந்து விடுவேன்.
ராஜாராம் என்ற பெயருக்கு ராமராஜன் என்ற பெயரெல்லாம் வரும்.
ராமலிங்கத்துக்கும், ராமகிரிஷ்ணனுக்குமே பெரிய போராட்டம் நடக்கும் என்றால் பார்த்துகோங்களேன்//
எங்கள் வலையுலக சூப்பர்ஸ்டார் வால் பையன் அவர்களுக்கு இதில் ஏதாவது நுண்ணிய உள்குத்து இருக்கா?(நாங்க வெளிக்குத்தத்தான் தாங்கமாட்டோம் உள்குத்து எவ்வளோ வேணுமண்ணாலும் தாங்குவோம். இதில் எந்த உள்குத்தும் இல்லை! :)
//இந்த விஷயங்களில் நான் நிறைய அனுபவபட்டிருக்கிறேன்,
இயற்கையிலேயே நான் பெரிய குழப்பவாதி
சில சமயங்களில் பெயரை மறந்து விடுவேன்.
ராஜாராம் என்ற பெயருக்கு ராமராஜன் என்ற பெயரெல்லாம் வரும்.
ராமலிங்கத்துக்கும், ராமகிரிஷ்ணனுக்குமே பெரிய போராட்டம் நடக்கும் என்றால் பார்த்துகோங்களேன்//
எங்கள் வலையுலக சூப்பர்ஸ்டார் வால் பையன் அவர்களுக்கு இதில் ஏதாவது நுண்ணிய உள்குத்து இருக்கா?(நாங்க வெளிக்குத்தத்தான் தாங்கமாட்டோம் உள்குத்து எவ்வளோ வேணுமண்ணாலும் தாங்குவோம். இதில் எந்த உள்குத்தும் இல்லை! :)
//இதில் எந்த உள்குத்தும் இல்லை//
சீத்தலை சாத்தனார் மாதிரி, நானே குத்திக்கிட்டாதான் ஆச்சு.
/சீத்தலை சாத்தனார் மாதிரி, நானே குத்திக்கிட்டாதான் ஆச்சு.//
பேட்டவாய்த் தலைச்சாத்தனார்....இல்ல .. சீத்தலை சாத்தனார் வாழ்க!
ஆமா!சீத்தலைச் சாத்தனார் என்ன எழுதினார்ங்குறது ஞாபகம் வரலையே?.உமறு புலவர் தானே சீறாப்புராணம் எழுதினார்.அப்போ சீத்தலைச்சாத்தனார் என்ன எழுதினாரெங்கறது எனக்கு ஞாபகம் வரவில்லையே?.உமறுப் புலவரை ஆதரிச்சது சீதக்காதி வள்ளல் தானே?. எதுக்கு குழப்பம்..
வலையுலக சூப்பர்ஸ்டார் வாழ்க! சரிதானே?
//எனக்கு ஞாபகம் வரவில்லையே?.உமறுப் புலவரை ஆதரிச்சது சீதக்காதி வள்ளல் தானே?. எதுக்கு குழப்பம்..
//
இப்பயாவது ஆளை எப்படி ஞாபகம் வச்சிக்கிறது!என்கிற.. .இந்த கட்டுரை அவசியம் தெரிஞ்சா சரி! :)
//இப்பயாவது ஆளை எப்படி ஞாபகம் வச்சிக்கிறது!என்கிற.. .இந்த கட்டுரை அவசியம் தெரிஞ்சா சரி! :) //
கடைசியில கத்தி நம்ம பக்கமே திரும்புறது தானே எல்லா விசயத்துக்கும் வழக்கம்
:)
intha idugayum soodayiduththu...
//Anonymous said...
intha idugayum soodayiduththu...//
ஆமாங்க!...எப்பிடிங்க இது ..ஆச்சரியமாத்தான் இருக்கு!
Post a Comment