குண்டு வெடிப்பு சம்பவங்களுக்குப் பிறகு நடப்பது என்ன?

Posted on Monday, September 15, 2008 by நல்லதந்தி

றுபடியும் மற்றொரு குண்டு வெடிப்பு சம்பவம் டெல்லியில் நிகழ்ந்து விட்டது.இருபத்திஐந்து பேர் பலியாயினர்.வழக்கம் போல் உள்துறை அமைச்சர் தீவிரவாதிகளை ஒடுக்கியே தீருவோம் என்று ஒரு அறிக்கை விட்டார்.

ஜனங்கள் ஒற்றுமையாக இதை எதிர்கொள்ள வேண்டும் என்று பிரதமர் வழக்கம் போல் விடும் அறிக்கையைக் கூட விடவில்லை.அவருக்கே சலிப்பாகி விட்டதா அல்லது அந்த அறிக்கை காமெடியாகத் தெரியும் என்பதால் விடவில்லையா? என்று தெரியவில்லை.

வழக்கம் போல குண்டு வெடித்த இடத்தையும்,பிறகு மருத்துவமனைக்கும் சென்று வழக்கம் போல அடிபட்டவர்களைப் பார்த்து வழக்கம் போல போட்டோவிற்கு 'போஸ்' கொடுத்து விட்டு வீடு திரும்பி இருப்பார்கள் சோனியா,உள்பட அரசியல் பிரமுகர்கள்.

வழக்கம் போல் இரண்டு நாட்களுக்கு போலீசார்கள் தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள்.இரண்டு நாட்கள் பேருந்து நிலையம்,ரயில்வே நிலையம் போன்ற இடங்களில் அவர்களுடைய தலைகள் அதிகமாகத் தென்படும். வழக்கம் அந்த சோதனையிடும் போட்டோக்கள் பத்திரிக்கைகளில் அமர்களப் படும்.

வழக்கம் போல் முஸ்லீம் சம்மந்தப்பட்ட ஆனால் மதசார்பற்ற(!) கட்சிகளின் தலைவர் ஒருவர் இதை இஸ்லாமியத் தீவிரவாதம் என்று சொல்லக்கூடாது, இது,இந்துத்வா சக்திகளின் வெறிச்செயலாக இருக்கும். அவர்கள் திசை திருப்புவதற்க்காக செய்த நாடகம். மஹாராஷ்ட்ராவில் மசூதியில் நடந்ததை மறக்கக் கூடாது என்பார்.

வழக்கம் போல் பொடா,தடா போன்ற சட்டங்களைக் கொண்டு வரவேண்டும். தீவிரவாதிகளைக் கண்டிக்க கடுமையான சட்டங்கள் வேண்டும் என்று ப.ஜ.க தலைவர்கள் கத்துவார்கள். வழக்கம் போல் பகுத்தறிவு சிங்கங்கள் அதெல்லாம் கூடாது,இருக்கிற சட்டங்களே போதும்.முஸ்லீம்களின் மனது புண்படும் என்று இவரே முஸ்லீம்கள் அனைவரையும் தீவிரவாதியாக்கி அவர்களது ஓட்டுகளுக்கு 'ரிசர்வ்' செய்து கொள்வார்.

வழக்கம் போல் காங்கிரஸ் தன் பங்குக்கு, பொடா இருந்த போதுதானே பாரளுமன்றத் தாக்குதல் நடந்தது. எனவே சட்டங்களால் எந்த பிரயோசனமும் இல்லை. இருக்கிற சட்டமே போதும். என்று தன் பங்கு முஸ்லீம்களின் ஓட்டுக்கு, அறிக்கை விடும்.

இந்த சமயத்தில் மட்டும் பாரளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளைத் தம் அரசு தூக்கிலிடாத,அந்தச் சாதனையை மறைக்கும்.
தேர்தல் சமயத்தில் அதைச் சொல்வார்கள் முஸ்லீம்களின் ஓட்டு வேண்டுமே?.

வழக்கம் போல் ஜூ.வி,ரிப்போர்ட்டர்,நக்கீரன் போன்ற பத்திரிக்கைகள் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் இரத்தம் சொட்டசொட்ட வெளியிடுவார்கள்.
அடுத்த தாக்குதல்களுக்கு ஆளாகப் போகும் நகரங்களைப் பட்டியலிட்டு அந்த நகரவாசிகளைத் தூங்கவிடாமல் செய்வார்கள்.

நாமும் வழக்கம் போல் குண்டு வெடிப்பு சம்பங்களைப் பற்றிய இரவுச் செய்திகளைப் பார்த்துவிட்டு 'மானாட மயிலாட' பார்க்கலாம்.

பி.கு.:அடுத்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு இந்தக் கட்டுரையை மீண்டும் படிக்கலாம்.

19 Responses to "குண்டு வெடிப்பு சம்பவங்களுக்குப் பிறகு நடப்பது என்ன?":

Unknown says:

100% I agree with u.
உண்மைதான்

யூர்கன் க்ருகியர் says:

//பி.கு.:அடுத்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு இந்தக் கட்டுரையை மீண்டும் படிக்கலாம்.//

அடுத்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் நாம் பலியாகாமல் இருந்தால் கண்டிப்பாக மீண்டும் படிக்கலாம்.

நல்லதந்தி says:

//அடுத்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் நாம் பலியாகாமல் இருந்தால் கண்டிப்பாக மீண்டும் படிக்கலாம்.//
உண்மையான வார்த்தை!!.கொஞ்சம் பயமாத்தான் இருக்கு!

நல்லதந்தி says:

//Dom said...
100% I agree with u.
உண்மைதான்//
நீங்களாவது ஒத்துக் கொண்ட்டீர்களே!.நன்றி Dom!

Anonymous says:

:((

Anonymous says:

//அடுத்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் நாம் பலியாகாமல் இருந்தால் கண்டிப்பாக மீண்டும் படிக்கலாம்.//
:));))உண்மையான வார்த்தை.

Anonymous says:

//100% I agree with u.
உண்மைதான்//
:)

Bleachingpowder says:

//ஜனங்கள் ஒற்றுமையாக இதை எதிர்கொள்ள வேண்டும் என்று பிரதமர் வழக்கம் போல் விடும் அறிக்கையைக் கூட விடவில்லை.அவருக்கே சலிப்பாகி விட்டதா அல்லது அந்த அறிக்கை காமெடியாகத் தெரியும் என்பதால் விடவில்லையா? என்று தெரியவில்லை.//

அடப்பாவமே, எப்போதுமே நம்ம பிரதமர் இந்த மாதிரி குண்டு வெடிப்பின் போதும், I Strongly condemn this barbaric act னு ஒரு ஸ்டேட்மெண்ட் வுடுவாறே, அத கூட சொல்லலையா.

போற போக்க பாத்தீங்கனா, வானிலை அறிக்கை மாதிரி, குண்டு வெடிப்பு செய்திகளை அறிவிக்க வேண்டியிருக்க்கும்.

பாபர் மசூதியை இடித்தது இந்து வெறியன்னு சொல்ல இங்கே எந்த நாயிக்கும் தயக்கமில்லை, ஆனால் நம் நாட்டில் கிட்டதட்ட தினமும் நிகழும் இந்த குண்டுவெடிப்பை யார் செய்தார்கள் என தெரிந்தும் மத்திய, மாநில அரசுக்கு அவர்களை நோக்கி விரலை கூட நீட்ட வக்கில்லை.

இப்படி அவர்கள் முன்னால் கைகட்டி இருப்பதற்க்கு, பேசாமல் அரசாங்கமே இவர்களுக்கு மானிய விலையில் ஆயுதங்களை வழங்கலாம்.

அப்புறம் இந்த குண்டு வெடிப்பு காரணம் நிச்சயமா இஸ்லாம் தீவிரவாதிகளாக இருக்காது. அவர்கள் பாவம் அப்பாவிகள் அப்படின்னு கருணாநீதி கிட்ட இருந்து இந்நேரம் ஒரு அறிக்கை வந்திருக்கனுமே, வந்திருச்சா??

//பாபர் மசூதியை இடித்தது இந்து வெறியன்னு சொல்ல இங்கே எந்த நாயிக்கும் தயக்கமில்லை, ஆனால் நம் நாட்டில் கிட்டதட்ட தினமும் நிகழும் இந்த குண்டுவெடிப்பை யார் செய்தார்கள் என தெரிந்தும் மத்திய, மாநில அரசுக்கு அவர்களை நோக்கி விரலை கூட நீட்ட வக்கில்லை.//
பிளீச்சிங் பெளடர் அவர்களே!!.மதச்சார்பின்மை என்கிற வீணாய்ப் போன ஜல்லியடித்து இந்து மதத்தினரை ஏமாற்றலாம்!.ஆனால் மற்ற மத்தினரை அப்படி ஏமாற்றமுடியுமா?.அவர்களுக்கு அவர்கள் மதம்தான் முக்கியம்.அவர்கள் இந்து மதத்தினரைப் போல இளிச்சவாயர்களா?.இந்த மாதிரி எத்தனை வெடிகுண்டு வெடிச்சாலும்..இன்னும் ரெண்டு வச்சிட்டுப்போங்கன்னு சொன்னால்தான் இஸ்லாமியர்கள் தங்களுடைய கட்சிக்கு ஓட்டு போடுவார்கள் என்று நம்புகிறார்கள் போலிருக்கிறது!.

Anonymous says:

//இந்த மாதிரி எத்தனை வெடிகுண்டு வெடிச்சாலும்..இன்னும் ரெண்டு வச்சிட்டுப்போங்கன்னு சொன்னால்தான் இஸ்லாமியர்கள் தங்களுடைய கட்சிக்கு ஓட்டு போடுவார்கள் என்று நம்புகிறார்கள் போலிருக்கிறது!.//
:((

பனிமலர் says:

நண்பரே, ஒரு வழக்கு சொல்வர்கள் பட்டினிணத்தை பார்த்து. அடுத்தவன்ப் வீட்டில் தீ எரியும் போது கொடம் கொடமாக தண்ணீர் மொகந்து வைத்திருப்பானாம் தன் வீட்டில் தீ பரவும் வரை. அது தான் நீங்கள் எழுதிய பதிவின் முழு பொருள். அழக்காக சொல்லியுள்ளீர் வாழ்த்துக்கள்.

பனிமலர்.

நல்லதந்தி says:

//அழக்காக சொல்லியுள்ளீர் வாழ்த்துக்கள்.//
நன்றி திரு(!) திருமதி.(?).செல்வி..(?) பனிமலர்!

Anonymous says:

;)):):))

Krish says:

அடுத்த குறி சென்னை தானமே! பதிவர்கள் எல்லாம் ஜாக்கிரதை!

நல்லதந்தி says:

//krish said...
அடுத்த குறி சென்னை தானமே! பதிவர்கள் எல்லாம் ஜாக்கிரதை!//
அப்போ பிரதமரின் அடுத்த ஆறுதல் விசிட் சென்னைதானா? :((

Anonymous says:

அடுத்த குண்டு வெடிப்பு அதே டெல்லியில் நிகழ்ந்து விட்டது.இந்த கட்டுரையை மீள் பதிவு செய்யலாமே?

Anonymous says:

:(

Shankar says:

இப்படி பயமுறுத்துறீங்களே...முன்ன எல்லாம், வெளிநாட்டில் இருக்கும் மகன்களுக்கு , பெற்றோர்கள் சொல்வது “பார்த்து வெளில போப்பா..அங்கங்க குண்டு வெடிக்குதாமே..இங்க நாங்க எல்லாம் வயித்துல நெருப்ப கட்டிகிட்டு இருக்கோம்டா” என்று. இப்போ...நிலைமை தலைகீழ். நான் அப்பா/அம்மாவிடம் சொன்னேன் இதே வார்த்தைகளை....என்ன கொடுமை பார்த்தீங்களா?
--ஷங்கர்---