இது ஒரு வழக்கம் போல் அரசியல் பதிவுதான்.ஆனாலும் ஒரே வித்தியாசம்,இது எந்த பிரச்சனைக்காகவும் எழுதப் பட்டதல்ல!.ஒரு புதிர் அவ்வளவுதான்.
கீழே உள்ள பத்தியைச் சொன்ன நபர் யார்?.இதைக் கண்டுபிடிப்பவர்களுக்கு வாழ்த்துகள் மட்டும் மனம் போல் அள்ளி வழங்கப் படும்!
”ஜெயலலிதா குற்றங்கள் புரிந்திருப்பின் அவர் மீது வழக்குப் போட்டு, வழக்குகளை முறையாக நடத்தி,குற்றங்களைச் சட்டப்படி நிரூபித்த பிறகு எத்த்னை ஆண்டுகள் வேண்டுமானாலும் சிறைச்சாலைக்கு அனுப்பட்ட்டும். ஆனால் கடந்த சில மாதங்களாகத் தமிழகத்தில் நடைபெற்று வரும் நடவடிக்கைகள் அப்பட்டமான பழி வாங்கும் நடவடிக்கைகள்.கொடூரமான அத்துமீறல் செயல்கள் என்ற உணர்வினைத் தான் பரவலாக ஏற்படுத்தியுள்ளது. அதற்கு மகுடம் வைத்தது போன்றதே ஜெயலலிதாவின் மீது எடுக்கப்பட்டுள்ள கைது நடவடிக்கை!.”
இந்த வாசகத்தைச் சொன்னவர் யார்?
சோ
இல.கணேசன்
கி.வீரமணி
தா.பாண்டியன்
அத்வானி
வாஜ்பாய்
சோனியா
நல்லகண்ணு
சுப்ரமணிய சாமி
ராமதாஸ்
கண்டு பிடிங்க மக்கள்ஸ்!
விடையைச் சொல்லி விடும் நேரம் வந்துவிட்டது!.
நண்பர் அருவை பாஸ்கரும்,தமிழிஷில் நண்பர் கொம்பனும் சரியான விடையான “கி.வீரமணி” யைச் சொல்லி என்னிடமிருந்து அளவில்லா வாழ்த்துக்களை “மட்டும்” பெற்றுக்கொள்கிறார்கள்.இன்னொரு நண்பர் பின்னூட்டம் பெரியசாமி சந்தேகத்துடன் வீரமணியின் பெயரைக் குறிப்பிட்டதால் ஆறுதல் வாழ்த்தை மட்டும் பெறுகிறார். :)
8 Responses to "சொன்னது யார்?.கண்டு பிடிங்க பாக்கலாம்!":
சோ ???
கி.வீரமணி??? :)
ராமதாஸ் ??
கி.வீரமணி
சீக்கிரம் சொல்லுங்க சார்?.என்னமோ இது கோன் பனேன் கா குராட்பதி மாதிரியும் கோடி ரூபாய் தரப்போற மாதிரியும் பில்டப் கொடுக்குறீங்களே?
விடையைச் சொல்லி விடும் நேரம் வந்துவிட்டது!.
நண்பர் அருவை பாஸ்கரும்,தமிழிஷில் நண்பர் கொம்பனும் சரியான விடையான “கி.வீரமணி” யைச் சொல்லி என்னிடமிருந்து அளவில்லா வாழ்த்துக்களை “மட்டும்” பெற்றுக்கொள்கிறார்கள்.இன்னொரு நண்பர் பின்னூட்டம் பெரியசாமி சந்தேகத்துடன் வீரமணியின் பெயரைக் குறிப்பிட்டதால் ஆறுதல் வாழ்த்தை மட்டும் பெறுகிறார். :)
வாழ்த்துக்களுக்கு நன்றி. நீங்க பதிவு போட்ட விடிய யூகிக்க முடியாதவங்க உங்கள் வலைப்பூவிற்கு புதியவர்கள இருப்பாங்க. உங்களோட பதிவுகளை தொடர்ந்து படிச்சு வந்த சின்ன குழந்தை கூட விடய சொல்லும். அது வீர மணின்னு
//கொம்பன் said...
வாழ்த்துக்களுக்கு நன்றி. நீங்க பதிவு போட்ட விடிய யூகிக்க முடியாதவங்க உங்கள் வலைப்பூவிற்கு புதியவர்கள இருப்பாங்க. உங்களோட பதிவுகளை தொடர்ந்து படிச்சு வந்த சின்ன குழந்தை கூட விடய சொல்லும். அது வீர மணின்னு//
இதுக்கு நான் என்னா சொல்றது.மொத்ததில எனக்கு அறிவு கம்மீன்னுத் தெரியுது.:)
Post a Comment