பாடாய்ப் படுத்தும் பாலி வினைல் போர்டுகள்!

Posted on Wednesday, September 24, 2008 by நல்லதந்தி



போன நூற்றாண்டின் இறுதியில் இந்த வினைல் விளம்பர போர்டுகளை ,செல் போன் கம்பனிகளும்,மோட்டார் சைகிள் கம்பனிகளும் 100X100,200X200,300X300, என்று பிரமாண்டமாக வைத்தபோதும் சரி,இந்தி படம் வெளியிடும் தியேட்டர்களில், கட் அவுட்டிற்குப் பதிலாக ,இந்த வினைல் போர்டுகளை வைக்கும் போதும் சரி , அடேங்கப்பா இவ்வளவு பெரிய போட்டோவா?. இத்தனைத் துல்லியமா?.இவ்வளவு பிரமாண்டமா?.என்று வாயில் ஈ நுழைவது கூடத் தெரியாமல் பார்த்தோம்.,இதனால் எத்தனை பேனர் ஓவியர்கள்,சிறு போர்டு ஓவியர்கள் காலியாகப் போகிறார்கள் என்பது தெரியாமல் அதை இரசித்தோம்.

இப்படி பெரிய தொழிற்கம்பனிகளின் ஆதிக்கம் மட்டுமே இருந்த வினைல் போர்டு ராஜ்ஜியம்,விரைவில பொது மக்கள் கைக்கும் மாறியது உலகமயமாக்கலின் ஒரு அம்சமே!.பம்பாய் போன்ற நகரங்களில் மட்டும் இருந்த வினைல் போர்டு அச்சகங்கள் தற்போது ஊருக்கு நாலு என்றாகி விட்டபோது ,ஆரம்பித்தது வினைல் போர்டின் வினைகள்.

ஊருக்கு நாலுஎன்று ஆகிவிட்டபோது தொழிற்ப் போட்டியின் காரணமாக தரைமட்டத்திற்கு வந்து விட்டது வினைல் போர்டு செலவுகள்.முன்பு யானை விலையென்றால் இப்போது பூனை விலைதான்.போதாதா..நம்முடைய ஜனங்களுக்கு.எதற்க்கெடுத்தாலும் வைடா வினைல் போர்டை! போடுடா நம்ம படத்தை! என்று விளம்பரப் பிரியர்களானத் தமிழர்கள் எங்குப் பார்த்தாலும் சந்தர்ப்பம் தெரியாமல் வினைல் போர்டுகளில் சிரித்துக் கொண்டு இருகிறார்கள்!. 

இப்போது எங்கே பார்த்தாலும் வினைல்போர்டு மயம்தான்!.கல்யாணமா? வினைல் போர்டு,கருமாதியா வினைல் போர்டு.கல்யாண மண்டபத்தின் வாசல்தோறும் பெரிய சவுக்கு மரங்களை முட்டுக் கொடுத்து நிறுத்தி வைத்திருக்கும் போர்டுகளில் மணமகனும்,மணமகளும் சிரித்தவாறு வரவேற்கிறார்கள்.சில இடங்களில் மண்மகன் மார்பில் வட்டவ்டிவில் மணமகள்,மணமகள் மார்பில் மணமகன்.யோவ்! கல்யாணத்துக்கு முன்னே இந்த மாதிரி செய்வது தப்பு என்றால் கேட்பார்களா?.இந்த விளம்பரப் பிரியர்கள் .. . இரண்டு பக்க ஓரங்களில் வாழ்த்தும் நண்பர்களின் தலைகள்!.ஒரே விளம்பர மோகம்தான்.

கருமாதி வினைல் போர்டுகளில் இன்னும் கொடுமை!.இறந்த நபரின் படத்தைப் போட்டு,காத்தமுத்து கவிராயர் பாணியில் அல்லது கலைஞர் பாணியில் ஒரு இரங்கற்கவிதை!.கவிதை முடிந்தவுடன் கண்ணீர் கடலில் உன் நினைவாகவே வாழும் நண்பர்கள்!.என்று முடித்து வரிசையாக ஒரு தலை,கீழே அந்த தலையின் பெயர் என்ற வாக்கில் வினைல் போர்டு வைக்கப் பட்டிருக்கும். இதில் ஒரு கொடுமையான சந்தர்ப்பப் பிழை என்னவென்றால் அனைவரின் தலைகளும் சிரித்தவாறே “போஸ்” கொடுத்துக் கொண்டிருக்கும்!.இறந்தவரும் சிரித்தவாறே நண்பர்களின் அஞ்சலியை ஏற்றுக்கொண்டிருப்பார்.மொத்ததில் அந்த இறப்பே சிரிப்பாய் சிரித்திருக்கும்.ஒரு சோகத்தைக் கூட சிரிப்பாய் மாற்ற வல்லது இந்த வினைல் போர்டு!.


அரசியல் வினைல் போர்டுகள்,இன்னும் ஒரு ரகம்.இன்று வினைல் போர்டு கம்பனிகளை வாழவைத்துக் கொண்டிருக்கும் தெய்வங்களே அரசியல் கட்சிகள்தான்!.அதுவும் இதில் டி.ஆர்.பி ரேட்டிங்கில் கலைஞர் டி.வி எப்படி முதல் இடத்தில் உள்ளதோ ஹி..ஹி...அதைப் போல இந்த விளம்பர விளையாட்டிலும் முதல் இடம் கலைஞரின் கட்சிக்குத்தான் !..இவர்கள் 100 விளம்பரங்கள் கொடுத்தால் மற்ற கட்சியினர் 1 விளம்பரம்தான் கொடுப்பார்கள்.அந்த அளவிற்க்கு இந்த விளையாட்டில் வல்லவர்கள் கலைஞரின் தொண்டர்கள்.

தமிழகத்தின் எந்த மூலை முடுக்குக்குச் சென்றாலும் சும்மா அப்படியே அசந்து போகவேண்டும்..எங்கெங்கு காணிணும் சக்தியடா என்கிற மாதிரி எங்கெங்கு காணிணும் கலைஞரடா...
10வது வார்டு கவுன்ஸிலரின் இல்லத் திருமணமா?..அந்த ஏரியாவே வினைல் போர்டு காடாகவே மாறிவிடும்.அந்த ஊர் அமைச்சர் சென்னையிலிருந்து முதல் பொண்டாட்டியைப் பார்க்க ஊருக்கு வருகிறாரா?...இரயில்வே நிலையத்திலிருந்து அமைச்சருடைய வீடு வரைக்கும் ஓரே வினைல் போர்டு மயம்!.

சரி அதைதான் விடுங்கள்,சாலையின் இரு மருங்கிலும் ஒரே வினைல் போர்டுகளாக இருந்தாலும்,அதில் என்ன விஷயம் இருக்கிறது என்று பார்த்தால், வள்ளுவமே! வா! ,வாலிபமே வா! வா! என்ற அளவிற்குத்தான் விஷயச்செறிவு இருக்கிறது.

ஒரு போர்டில்,ஒரு வட்டம் சொல்கிறது!,அந்த மாவட்டத்தின் பெயரை அந்த அமைச்சரின் பெயராக மாற்றிச் சொல்லி ஒரு வரவேற்ப்பு!. பன்னீர் செல்வம் மாவட்டம் உங்களை வரவேற்கிறது!.வீரபாண்டியார் மாவட்டம்,பொன்முடியார் மாவட்டம் உங்களை வரவேற்கிறது!. இவர்களே தங்கள் மாவட்டத்திற்க்கு தங்கள் பகுதி அமைச்சரின் பெயரை சாதாரணமாக வைத்துக் கொள்கிறார்கள்.

அடுத்த வினைல் போர்டில் அமைச்சரின் முதல் மனைவி ஒருபுறம்! மறு புறம் இரண்டாவதாக சென்னையில் சேர்த்துக் கொண்ட துணைவி ,இரண்டு பேரும் அமைச்சரைப் பார்த்து ஒருங்கே சிரிக்கிறார்கள்.ஆஹா என்ன ஒரு கண் கொள்ளாக் காட்சி!.என்ன குடும்ப ஒற்றுமை. முதல் மனைவி பக்கத்தில அவ்ருக்கு பிறந்த பிள்ளைகளும், துணைவி பக்கத்தில் அவருக்குப் பிறந்த பிள்ளைகளும் ஒரே போர்டில்,ஒரு குடும்பம்,இரு மனைவி, பல பிள்ளைகள் என்று வாழும் வள்ளுவம் கலைஞர் போல, அமைச்சர்களும் நிற்க்கும் காட்சி எல்லா மாவட்டத்திலும் நிகழும் வழக்கமாக நிகழும் தெய்வீகக் காட்சி!.

அவர்களின் தலைக்கு மேலே நட்சத்திர வடிவிலோ,சூரிய வடிவிலோ ஒரு புறம் க்லைஞரும் ,மற்றொரு புறம் இசுடாலினோ ,தென் மாவட்டமாக இருந்தால் அழகிரியோ இந்தக் கோராமையைப் பார்த்து நம்ம வீட்டில் உள்ள விஷயம்தானே என்று சிரித்தபடி இருப்பார்கள்!.
 தமிழர்களின் பண்பாடு குறித்து ஒரு பதிவர்,சாதாரணப் பதிவர் அல்ல!.உலக நாடுகள் அனைத்திலும் உள்ள த்மிழர் மட்டுமல்ல,இந்தியர் மட்டுமல்ல!...வட அமெரிக்காவில் கனடா முதல் ஆஃப்ரிக்க கண்டம் நைஜீரியா மட்டுமல்ல!...ச்ச்சீ சலிப்பா இருக்குப்பா!..பிரபஞ்சம் முச்சூடும்ன்னு வைத்துக் கொள்ளுங்களேன்.மொத்தத்தில் அவரைத் தெரியாத ஆளே இல்லை போதுமா?.... அப்பேற்ப்பட்ட பதிவர் எழுதிய தமிழ் பண்பாடு, ஒட்டு மொத்தமாக இருக்கிற ஒரே ஒரு கட்சி திமுக என்பதால் ஜனங்களும் எந்தவிதமான கூச்சமும் நாச்சமும் பட்டுக் கொள்வதில்லை!.

ஆனால் ஒரு வார்த்தை மட்டும் குசு குசு வென பேசிக்கொள்வார்கள்.”என்னடா முதல் பொண்டாடிக்கே 60வயசாயிடுச்சி! அப்போ இந்த ஆளுக்கு 60 இல்லே 65 இருக்குமே ,இரண்டாவது இருக்கிற 35 ஐ என்னாதாண்டா பண்ணுவாரு?”..அடுத்த திமுகா பார்ட்டி வேறே என்னத்த சொல்லுவான்...எங்க ஐய்யா! என்ன சாதாரணமானவரா?.எல்லாம் புகுந்து வெளையாடுவாரு!.ஆஹா..எவ்வளவு பெருமை!...

இன்னொரு பெருமையும் இந்த அரசியல் வினைல் போர்டுகளுக்கு உண்டு.மற்ற ,பொது மக்கள் கல்யாணத்திற்க்கோ,கருமாதிக்கோ, செய்யும் வினைல் போர்டுகளை!. எல்லோராலேயும் சத்தியமாக ஒரே ஒரு தடவையாவது படிக்கப் படும் வாய்ப்புண்டு.ஆனால் அரசியல் வினைல் போர்டுகளை வைத்த அவர்களே படிப்பார்களா? என்பது சந்தேகம் தான்!.

ஒரே மாதிரியான சலிப்பூட்டும் வாசகங்கள் ,உள்ளாட்சித்துறை அமைச்சரென்றால் உள்ளாட்சியே! வருக!.பொதுப்பணித்துறை அமைச்சரா! பொதுப்பணியே!வருக!.சட்டத்துறை அமைச்சரா! சட்டமே! வருக!..நல்ல வேளை வடிகால் வாரியத்திற்க்கு தனி அமைச்சர் இல்லை!.இல்லையென்றால் அடிக்கடி சாக்கடையே! வருக! வருக! என்றும் வினைல் போர்டில் பார்த்திருக்க வாய்ப்புண்டு!.

இந்த அமைச்சரையோ அல்லது வருகின்ற VIP ஐ பிடிக்காத வட்டமோ, ஒன்றியமோ, தானைத்தலைவரே! என்பதற்க்கு பதில் தண்டக் கருமாந்திரமே! என்று எழுதினாலும்,பண்பாளனே! என்பதற்குப் பதிலாக பண்ணாடையே! என்று எழுதினாலும்,பார்ப்பவர்களுக்கும்,சம்மந்தப் பட்டவர்களுக்கும் எந்த வித்தியாசமும் தெரியப் போவதில்லை.வ்ருகிறவர்கள் போர்டைத்தான் பார்ப்பார்களே ஓழிய வாசகத்தைப் யாரும் படிக்கப் போவது இல்லையே!.வாழ்க வினைல் போர்டு!

அடுத்து இந்த அரசியல் வினைல் போர்டுகளைப் பார்க்கும் போது ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி படம்தான் ஞாபகம் வரும்.தலைவர் முழு உருவமாக நின்றிருக்க காலடியில் கிடக்கும் அரக்கர் கூட்டத்தைப் போல சிரித்த தலைகளாகக் காட்சிதரும் வட்டம், ஒன்றியம் போன்ற ஆட்கள் முண்டமில்லா முண்டங்களாக காட்சியளிப்பது வினைல் போர்டின் தனி விசேஷம்.
தலைக்கு கீழ் அவர்களின் பட்டங்களோடு பெயரும் உண்டு.காண்டு கஜெந்திரன்,மயிலை கபாலி,டிஞ்சர் தனபாலு,கடா குமாரு போன்று பெரிய லிஸ்ட்ட்டும் போட்டிருபார்கள்.தலைவரும் காளியாத்தாப் போல அவர்களின் தலையை மிதித்துக் கொண்டு சிரித்தபடி காட்சியளிப்பார்.என்னே வினைல் போர்டின் பெருமை!.

இன்னோரு தமாஷ் என்னவென்றால் பகுத்தறிவுக் கட்சியான திமுகவில உள்ள தொண்டர்களின் தலைகள் அனைத்தும் திருநீறும்,மஞ்சளும், குங்குமமும், துலங்க பகுத்தறிவு அஞ்ஞானிகளாகவே காணப்படும். இந்த பகுத்தறிவு சிங்கங்கள் வீட்டில் உள்ள பெண்டுகளைத்தான் மாற்ற முடியவில்லைத் தொண்டர்களையாவது மாற்றலாமே?.ஆனால் மாற்ற முயற்சிக் கூட எடுக்கமாட்டார்கள்.எந்தத் தொண்டனையாவது சாமி இல்லையென்று சொன்னால்தான் திமுக உறுப்பினர் கார்டு என்று சொன்னால் கூட திமுகவே மொத்தமாக காலியாகிவிடும் என்று தலைவருக்குத் தெரியும்.வீட்டில் உள்ள பெண்டுகளிடம் ஜெயிக்கமுடியாதவர்.வீதியில் உள்ளத் தொண்டு களிடமா ஜெயிப்பார்.

இதைப் பார்க்கும் போது நன்னன் என்ற பிரகிருதியின் ஞாபகம் வருகிறது,
அவரைச் சமீபத்தில் கலைஞர் டிவியில் ,ரமேஷ் பிரபா பேட்டி கண்டார்.அப்போதுதான் அவர் திமுக வென்றே எனக்குத்தெரியும்.அப்போது இந்த பிரகிருதி ,ஒரு வார்த்தைச் சொன்னார்,அதாவது இப்போது தமிழ் நாட்டில் இரண்டே இரண்டு திராவிடர் இயக்கம் தான் உள்ளது என்று சொன்னார்.அது எந்த எந்த இயக்கம் என்று,திரு நன்னன் அவர்கள் தான் சார்ந்த கட்சியைச் சொல்லிவிட்டதால் உங்களுக்கேத் தெரியும்.அவரைத் தரதர வென்று இழுத்து வந்து இம் மாதிரியான வினைல் போர்டுகளைக் காட்டவேண்டும்.இதுதான் பகுத்தறிவா?.நெத்தி நிறைய இத்தனைப் பொட்டுக்களை வைத்துக் கொண்டு இருப்பவர்கள்தான் ,பகுத்தறிவு இயக்கத் தொண்டர்களா? என்று முடிந்தால் கேள்வி கேட்க வேண்டும்.மற்றபடி அவர் தமிழாய்ந்த அறிஞர் என்பதில் எனக்கு எந்தவித ஐயமுமில்லை.கிஞ்சித்தும் சந்தேகமும் இல்லை.
இசுடாலினைத் (நன்னன் சொன்னதுதான்)தளபதி தளபதி என்று பேட்டியின் போது அவர் பெருமையுடன் சொன்னபோது தலையில் அடித்துக் கொள்ளத் தோன்றியது.எப்படி இருந்த தமிழறிஞர் இப்படி ஆயிட்டாரே?.

திமுகவைப் பொறுத்தவரை வினைல் போர்டுகளில் உள்ள ஆங்காங்கே சிலதலைகளின் படங்கள் வெட்டியெடுக்கப் பட்டு இருக்கும்.விசாரித்தால் அந்தத்தலைகள் ஏதாவது கொலைக் கேஸிலோ,அரிசி கடத்தலிலோ, சாரயக்கேஸிலோ, அல்லது கற்பழிப்பு கேஸிலோஅதையும்விட்டால் திருட்டு வழக்கிலோமாட்டியதால் தற்காலிகமாக ஜனங்களின் மத்தியில் கட்சிக்குத் தவறான எண்ணம் வரக்கூடாது என்று கட்சி பிரமுகர்களின் அறிவுறுத்தல் பிரகாரம் படத்தை எடுத்து இருக்கிறார்களாம். :)).
இதனால் நன்மையடைவது இந்த வினைல் போர்டு தயாரிப்பாளர்கள்!.அடுத்த வினைல் போர்டுக்கு ஆர்டர்கள் தயார்.ஆகையால் இப்போது வினைல் போர்டு ராஜ்ஜியம் திமுக வினரிடம்தான் உள்ளது. 

அப்பாடா...கட்டுரை முடிந்தது..இதில் முதல் சந்தோஷம் உங்களுக்கு!.அடுத்து எனக்கு! :) 
இதில் இருந்து ஒரு விஷயம் தெரிகிறது.எதைப் பற்றி எழுதினாலும் அரசியல் கலக்காமல் என்னால் எழுதமுடியாது போலிருக்கிறதே?..என்ன செய்வேன்?.....:((

29 Responses to "பாடாய்ப் படுத்தும் பாலி வினைல் போர்டுகள்!":

நாமக்கல் சிபி says:

:))

Udhayakumar says:

காமெடி!!! ரொம்ப அருமை... 60-35 மேட்டர்...நல்லா உக்கார்ந்து யோசிக்கிறீங்க....

யூர்கன் க்ருகியர் says:

அரசியல்வாதிகள் அனைவரும் விளம்பர பிரியர்கள்.இந்த வினைல் டெக்னாலஜி விட இன்னொன்னு புது வந்தாலும் இவங்க இப்படித்தான் சுய பெருமை அடிச்சிக்குவாங்க.

முடிஞ்சா எல்லா அரசியல்வாதிகளுக்கும் உங்க கட்டுரைய அனுப்பி படிக்க வைங்க.
மக்களுக்கு சேவை செஞ்சா மாதிரி இருக்கும்.

கட்டுரை சூப்பர் டூப்பர்!

Anonymous says:

கட்டுரை சூப்பர் டூப்பர்!:)):))

Anonymous says:

//முடிஞ்சா எல்லா அரசியல்வாதிகளுக்கும் உங்க கட்டுரைய அனுப்பி படிக்க வைங்க.
மக்களுக்கு சேவை செஞ்சா மாதிரி இருக்கும்.//

:)) :)) :))

நல்லதந்தி says:

வாங்க நாமக்கல் சிபி அய்யா!

நல்லதந்தி says:

// udhayakumar said...
காமெடி!!! ரொம்ப அருமை... 60-35 மேட்டர்...நல்லா உக்கார்ந்து யோசிக்கிறீங்க....//
ரொம்ப நன்றி உதயகுமார்.சும்மா..உளு உளுவலாவுக்குத்தானே சொல்றீங்க! :)

நல்லதந்தி says:

//ஜுர்கேன் க்ருகேர் said...
அரசியல்வாதிகள் அனைவரும் விளம்பர பிரியர்கள்.இந்த வினைல் டெக்னாலஜி விட இன்னொன்னு புது வந்தாலும் இவங்க இப்படித்தான் சுய பெருமை அடிச்சிக்குவாங்க. //
ரொம்ப நன்றி.ஜுர்கேன் க்ருகேர்...ஆமா இந்தப் பேரு நிசந்தானுங்களா?..நான் கேள்விப் பட்டதே இல்லையே?...இதுக்கு என்னங்க அர்த்தம்!. :)

உண்மைத்தமிழன் says:

நல்லதந்தியாரே..

சிறந்த பதிவு. நான் இனி தப்பித்துக் கொள்ளலாம் "நிறைய எழுதுகிறேன்" என்ற குற்றச்சாட்டிலிருந்து.. துணைக்கு இந்தப் பதிவை எடுத்துக் கொள்கிறேன்.

தி.மு.க. என்றில்லை அனைத்துக் கட்சிகளிலுமே இது மாதிரியான விளம்பரங்கள் வரத்தான் செய்கின்றன. தி.மு.க.வை மட்டும் குற்றம் சொல்லிப் புண்ணியமில்லை. தி.மு.க., அ.இதி.மு.க. இரண்டும் அதிகமாக இது போன்ற அரிப்புகளை வெளிப்படுத்திக் கொள்கின்றன. காரணம் அவர்களிடமிருக்கும் பணம்..

மற்றக் கட்சிகள் தங்கள் கையிருப்பை வைத்து ஏதோ தங்களுக்கு தோன்றியதைப் போல் எழுதிக் கொள்கிறார்கள். வரைந்து கொள்கிறார்கள்.

போர்டுகளை மக்கள் அதிகம் கூடும் பொதுவிடங்களில் வைக்காமல் நிகழ்ச்சி நடைபெறுமிடங்களில் மட்டும் பொதுநலனுக்கு இடையூறாக இல்லாத பட்சத்தில் வைத்துக் கொண்டு போகட்டும். ஆனால் இவர்கள் விடுவதில்லை.. நடுரோட்டில் ஒரு டிரம் வைத்து அதனுள் மணலைக் கொட்டி அதற்கு நடுவில் கம்பை நட்டு அலங்கார வளைவை அமைக்கிறார்கள். எத்தனை ரோடுகளை கழகத்தினரும், பிற கட்சியினரும் தங்களது கட்சியின் பெயரைப் பரப்புவதற்காக சீர்குலைத்திருப்பது கண்கூடு.

இதில் இன்னொரு விஷயம்.. இந்த வினைல் போர்டில் வரையும் ஓவியர்கள், மற்றும்இ இது தொடர்புடைய தொழில்களில் பணியாற்றும் தொழிலாளர்களும் இந்த ஒரு தொழிலை வைத்துத்தான் பிழைத்து வருகிறார்கள். அந்த வகை ஓவியம் வரையும் கலைஞர்களின் திறமையை இதைவிட்டால் நாம் எங்கே போய் பார்ப்பது..? சொல்லுங்கள்..

Anonymous says:

உர் திருவிழா, காது குத்து, மஞ்சள் நீர் இதே மறந்துடிங்கள அதுக்கப்புறம் நன்றி இக்கு ஒரு போர்டு !

நல்லதந்தி says:

//சிறந்த பதிவு. நான் இனி தப்பித்துக் கொள்ளலாம் "நிறைய எழுதுகிறேன்" என்ற குற்றச்சாட்டிலிருந்து.. துணைக்கு இந்தப் பதிவை எடுத்துக் கொள்கிறேன்.//
அண்ணா இது நியாயமா?

நல்லதந்தி says:

//தி.மு.க. என்றில்லை அனைத்துக் கட்சிகளிலுமே இது மாதிரியான விளம்பரங்கள் வரத்தான் செய்கின்றன. தி.மு.க.வை மட்டும் குற்றம் சொல்லிப் புண்ணியமில்லை. தி.மு.க., அ.இதி.மு.க. இரண்டும் அதிகமாக இது போன்ற அரிப்புகளை வெளிப்படுத்திக் கொள்கின்றன. காரணம் அவர்களிடமிருக்கும் பணம்..//

இந்த விஷயத்தில் திமுகவை யாராலும் மிஞ்ச முடியாது.மேலும் இப்போது அதிமுகவினரை இந்த மாதிரி வினைல் போர்டுகளை வைக்க திமுகவினர் விடுவதில்லை.கொஞ்ச நாட்களுக்கு முன்பு இந்த வினைல் போர்டு வைப்பது பற்றி கலைஞரின் அறிக்கையைப் பார்திருப்பீர்களே.
அதெல்லாம் அதிமுகவினருக்குத்தான் திமுகவினருக்கு இல்லை.

நல்லதந்தி says:

வங்க பலஜி! :)

Anonymous says:

ஒரு கொடுமையான சந்தர்ப்பப் பிழை என்னவென்றால் அனைவரின் தலைகளும் சிரித்தவாறே “போஸ்” கொடுத்துக் கொண்டிருக்கும்!.இறந்தவரும் சிரித்தவாறே நண்பர்களின் அஞ்சலியை ஏற்றுக்கொண்டிருப்பார்.மொத்ததில் அந்த இறப்பே சிரிப்பாய் சிரித்திருக்கும்.ஒரு சோகத்தைக் கூட சிரிப்பாய் மாற்ற வல்லது இந்த வினைல் போர்டு!.

Naanum sirikkiREn. :)) :)) :))

நல்லதந்தி says:

///இதில் இன்னொரு விஷயம்.. இந்த வினைல் போர்டில் வரையும் ஓவியர்கள், மற்றும்இ இது தொடர்புடைய தொழில்களில் பணியாற்றும் தொழிலாளர்களும் இந்த ஒரு தொழிலை வைத்துத்தான் பிழைத்து வருகிறார்கள். அந்த வகை ஓவியம் வரையும் கலைஞர்களின் திறமையை இதைவிட்டால் நாம் எங்கே போய் பார்ப்பது..? சொல்லுங்கள்..///

இந்த வினைல் போர்டுகள் வரும் முன்னே தியேட்டர்களுக்கு சினிமா பேனர்கள் வரைந்த ஓவியர்கள் என்ன ஆனார்கள்,பெரிய பெரிய படங்களை வரைந்த விளம்பர ஓவியர் என்ன ஆனார்கள்,கடைகளுக்கு பெயர்ப் பலகை வரைந்து தரும் சிறு ஓவியர்கள் என்ன ஆனார்கள்.அவர்கள் எல்லாம் இப்போது என்ன செய்கிறார்கள்,என்பதை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது.சமூகத்தில் புதியதொரு வளர்ச்சி வரும் போது இந்த மாதிரி ஒவ்வொரு தொழில்களும் அழிந்து விடுவது பரிதாபத்துக்குறியது! :((

Anonymous says:

//நல்ல வேளை வடிகால் வாரியத்திற்க்கு தனி அமைச்சர் இல்லை!.இல்லையென்றால் அடிக்கடி சாக்கடையே! வருக! வருக! என்றும் வினைல் போர்டில் பார்த்திருக்க வாய்ப்புண்டு!.//
:((

Bleachingpowder says:

நான் கூட மெரினாவில் அடுத்து நடைபெற உள்ள பதிவர் கூட்டத்தில் இந்தியா, இலங்கை,மலேஷியா, சிங்கப்பூர், நைஜிரியா போன்ற இடங்களில் நம்பர் டூ வாக இருக்கும் (அவர் சொன்னதுதான், நீங்க அசிங்கமா நினைச்சா நான் பொறுப்பில்லை) பதிவருக்கு ஒரு வினைல் போர்டு வைக்கலாம்னு இருக்கேன். திமுக காரர் ஆச்சே புகழுக்கு மயங்காம இருப்பாரா? அதுக்கப்பறம் பாருங்க நம்ம பின்னூட்டத்த கேட்டு வாங்கி போடுவார்.

அப்புறம் தலைவர் படத்திற்கு கீழே வரும் அல்லகைகளின் படிப்பு விபரங்களை போடுவார்களே, அதை பற்றியும் ஒரு நாலு வரி எழுதுங்க தமாஷா இருக்கும்

நல்லதந்தி says:

//நான் கூட மெரினாவில் அடுத்து நடைபெற உள்ள பதிவர் கூட்டத்தில் இந்தியா, இலங்கை,மலேஷியா, சிங்கப்பூர், நைஜிரியா போன்ற இடங்களில் ”””நம்பர் டூ””” வாக இருக்கும் (அவர் சொன்னதுதான், நீங்க அசிங்கமா நினைச்சா நான் பொறுப்பில்லை) பதிவருக்கு ஒரு வினைல் போர்டு வைக்கலாம்னு இருக்கேன். திமுக காரர் ஆச்சே புகழுக்கு மயங்காம இருப்பாரா? அதுக்கப்பறம் பாருங்க நம்ம பின்னூட்டத்த கேட்டு வாங்கி போடுவார். //
அவருக்கு என்டா கழிஞ்சிட்டு போறதப் பத்தி எழுதினோம்முன்னு நினைச்சி நினைச்சி கழிச்சல் கண்டுடப் போவுதுங்க..விட்டுடுங்க. :))

நல்லதந்தி says:

//அப்புறம் தலைவர் படத்திற்கு கீழே வரும் அல்லகைகளின் படிப்பு விபரங்களை போடுவார்களே, அதை பற்றியும் ஒரு நாலு வரி எழுதுங்க தமாஷா இருக்கும்//

இதில பெரும்பான்மையாப் பாத்தா குண்டர்கள்... மன்னிக்க ...தொண்டர்கள் பொதுவாக வக்கீலுக்குப் படிச்சிருப்பதா போட்டிருப்பாங்க.புரொபசனல் ரவுடிகள் எல்லோருமே வக்கீலுக்கு படிக்க (படிச்சதா போடக்)காரணம் என்ன?

Anonymous says:

//திமுகவைப் பொறுத்தவரை வினைல் போர்டுகளில் உள்ள ஆங்காங்கே சிலதலைகளின் படங்கள் வெட்டியெடுக்கப் பட்டு இருக்கும்.விசாரித்தால் அந்தத்தலைகள் ஏதாவது கொலைக் கேஸிலோ,அரிசி கடத்தலிலோ, சாரயக்கேஸிலோ, அல்லது கற்பழிப்பு கேஸிலோஅதையும்விட்டால் திருட்டு வழக்கிலோமாட்டியதால் தற்காலிகமாக ஜனங்களின் மத்தியில் கட்சிக்குத் தவறான எண்ணம் வரக்கூடாது என்று கட்சி பிரமுகர்களின் அறிவுறுத்தல் பிரகாரம் படத்தை எடுத்து இருக்கிறார்களாம்//

உள்ளதை சொல்லியிருக்கிறீர்கள்

Anonymous says:

:)):)

Anonymous says:

:));));)

Anonymous says:

யோவ்.நல்லப் பதிவைப் போடுறீரு.எங்கப் பொழப்பைக் கெடுக்கறத்துக்குன்னுட்டு.

Anonymous says:

:))

வால்பையன் says:

சூப்பர் பதிவு!
இந்த மாதிரி எழுதுறதுக்கு உங்களுக்கு நிகர் நீங்க தான்

நல்லதந்தி says:

//வால்பையன் said...
சூப்பர் பதிவு!
இந்த மாதிரி எழுதுறதுக்கு உங்களுக்கு நிகர் நீங்க தான்//

இப்பத்தாங்க எனக்கே கொஞ்சம் சந்தோஷமா இருக்கு! :)

Kannan.S says:

// தமிழர்களின் பண்பாடு குறித்து ஒரு பதிவர்,சாதாரணப் பதிவர் அல்ல!.உலக நாடுகள் அனைத்திலும் உள்ள த்மிழர் மட்டுமல்ல,இந்தியர் மட்டுமல்ல!...வட அமெரிக்காவில் கனடா முதல் ஆஃப்ரிக்க கண்டம் நைஜீரியா மட்டுமல்ல!...ச்ச்சீ சலிப்பா இருக்குப்பா!..பிரபஞ்சம் முச்சூடும்ன்னு வைத்துக் கொள்ளுங்களேன்.மொத்தத்தில் அவரைத் தெரியாத ஆளே இல்லை போதுமா?....

அப்பேற்ப்பட்ட பதிவர் எழுதிய தமிழ் பண்பாடு, ஒட்டு மொத்தமாக இருக்கிற ஒரே ஒரு கட்சி திமுக என்பதால் ஜனங்களும் எந்தவிதமான கூச்சமும் நாச்சமும் பட்டுக் கொள்வதில்லை! //

என்ன தான் சொன்னாலும், நம்மளால அவரை தவிர்க்க முடிவதில்லை.. ஆனா அவரால ? - சேம் சைடு கோல் -மன்னிக்க...

butterfly Surya says:

நக்கல் + கலக்கல் = சூப்பர்...

Anonymous says:

innikkuththaan padichchen super.