"வலைகொண்டான்” டாமாரு கொமாரு!

Posted on Monday, September 29, 2008 by நல்லதந்தி




தெள கீர்த்தனாம்பரத்திலே ,இப்போ ’மும்பை’யன்னு அழைக்கப் படற ஷேத்ரம் அப்போ ’பாம்பே’ன்னு அழைக்கப்பட்டு இருந்த காலம்.ஒரு 100 வருடங்களுக்கு முன்னே கம்ப்யூட்டரன்னு சொல்லப் படற வஸ்து அப்போ ’பாம்பே’லதான் கண்டு பிடிக்கப் பட்டதுன்னு நோக்குத்தெரியுமோ?.அதைக் கண்டுபிடிக்கிறப்போ கடைசியாய் கூட மாட ஒத்தாசை செஞ்சது நம்ப கொமாருன்னாவது தெரியுமோ?. கொமாரு யாருன்னு கேக்கறேளா?.இப்பச் சொல்றேன்!.

நம்ம கொமாருக்கு பொறக்கறச்சே வெச்ச பேரு வேறயாக்கும்.அதத்தான் இப்ப நா சொல்லப் போறேன்.அந்த அம்பி பொறக்கறச்சே பெரும் பிரளயம் வந்தாப்புல ஒரு பெருத்த ஷப்தம் கேட்டது.அதக் கேட்ட அவரோட சொந்தக்காரா ...இது சிவனுடைய லீலைதான்,இதெல்லாம் சிவ கணங்கள் எழுப்புற சப்தமான்னோ!. இவ்ன் பொறந்த நேரத்தில மணியொலிங்க கேட்டதால் மணி குமாருன்னு பேர வச்சிப்பிடுங்க்கோ!ன்னுட்டாள்.

இதைக் கேட்ட உடையவா அந்த அம்பிக்கு அந்தப் பேரயே வச்சிட்டா!.செத்த நேரம் கழிச்சி வெளியே வந்து எட்டிப் பாக்கறச்சேதான் தெரிஞ்சது ஒரு பிரம்மஹத்தி TVS ஃபிஃப்டிக்கார படுவா ஆயிலும் போடாம சைலன்சர கழட்டி வீட்டில வெச்சிண்டுட்டு தலதெறிக்க ஓட்டிண்டு போறது!.ஆனா அப்பவே நம்ப அம்பி ராசி சனி ராசின்னு தெரிஞ்சிடுத்து.

கட்டேலே போற அந்த கம்மினாட்டி கடங்காரனோட வண்டியோட டயர் பஞ்சர் ஆகி டமாருன்னு வெடிச்சிடுத்து.அவன் கீழே வுழுந்து கடலைப் பொறி பொறிக்கினான். அப்போ அம்பியோட ராசியப் பாத்து பயந்து.. க்‌ஷமிக்கணும்.. வியந்து அம்பிக்கு வெச்சச் செல்லப் பேருதான் டமாரு கொமாருன்னு.

இப்படிப்பட்ட ராசியான பையனான டமாரு கொமாரு வளர்ந்து வரச்சே!.............................

இந்த இடத்தில தமிழ் படடைரக்க்டருங்க இறந்த காலத்தைக் குறிக்க ஹீரோவோ அல்லது ஹீரோயின் கண்ணுக்கு மின்னாடி கருப்புக்கலர் ரிப்பனை சுத்திக்காட்டு வாங்க.இல்லேன்னா வருங்காலமா இருக்கறச்சே மாட்டு வண்டியோட சலங்கைச் சத்தத்தோட மாட்டோட கால்ல இருந்து அப்படியே மெல்லப் போயி வண்டியோட சக்கரத்தில கேமராவ நிறுத்தி டில்ட் அப் பண்ணுவாங்க.மாட்டு வண்டி கிடைக்காட்டி காரோட சக்கரம்,அதுவுமில்லேன்னா தையல் மிஷினோட வீல் இதில எதினாச்சிம் ஒண்ண காட்டினாப் போதும் அறிவாளித் தமிழ் ஜனங்க புரிஞ்சிக்கு வாங்க....

இப்படியே காலச்சக்க்ரத்தில ஏறி நீங்களும் நசுங்கிடாம வந்துருங்க.

ஸ்ஸப்பா!.இதுக்கு மேலயும் பிராமணாத்து பாஷை தேவையா?.முயற்ச்சி பண்றேன்!.

நம்ப ஹீரோ ஹீரோயிசப்படி ஏழையா இருக்கணும்ங்கறதாலே..இப்போ ஹீரோ டீக்கடையில டெலிவரி அம்பியா வேலை செஞ்சிக்கிட்டு இருக்காரு!. அப்படி இருக்கறச்சே,கடைக்கு எதித்தாப்புல கம்ப்ப்யூடர் கண்டு பிடிக்கப் போற கம்பனி அவுங்க கச்சேரி நடத்த ஒரு குடிசை போட்டாங்க.அதில வேலை செய்யுற வேலைக்காரவா கூட அம்பிக்கு நல்ல பரிச்சியமாயிடுத்து. எந்த நேரமும் அம்பியை அழைச்சிண்டும் ,கூப்பிட்டுண்டும் டீ கொண்டு வரச்சொல்லிண்டும் இருப்பா!

இப்படி இருக்கையில ஒரு நாள் ஒரு பெரிய உத்யோகஸ்த்தர் நம்ப அம்பியைப் பாத்து ,”டே ! அம்பி நேக்கு ஒரு டீயும் ஒரு வடையும் கொண்டு வாடா .”ன்னு சொல்லவே பதறியடிச்சுண்டு ,ஒரு டீயையும் முந்தினநாள் போட்ட வடையும் தூக்கிண்டு கம்ப்யூட்டர் கம்பனிக்கு அம்பி ஓடினான்.


அந்த பெரிய உத்யோகஸ்தர் சரியான பசி மயக்கத்தில இருந்ததால ஒரு கையில் செங்கல் பொடி கலரில் இருந்த டீயையும் மறு கையில வடையையும் எடுத்துக் கொண்டு பறக்கா வெட்டித்தனமா சாப்பிடத் தொடங்கினார்.

அந்த நேரம் பாத்தா அந்தப் பாழப்போனவரும் இவருக்கு மேலதிகாரியுமான இன்னொரு பறக்கா வெட்டி “ஸ்வாமி உங்க டேபிள் மேலிருக்கிற வால்வைச் சீக்கிரம் எடுத்துண்டு வாரும்”மென்னு அதி அவசரமாய் கூப்பிட்டுத்தொலைக்க முதல் பறக்காவெட்டி ஒரு கையில் டீயும் மறு கையில் வடையும்,இருந்த காரணத்தால்,வாயில் வேறு பாதி வடையை முழுங்கிக் கொண்டிருந்தாலும், பேச முடியாமல் தொண்டை அடைத்துக் கொண்டிருந்ததால் ,கமறும் கண்ணீர் நிரம்பிய கண்ணில் நம்ப அம்பியைப் பார்த்து அந்த வால்வை எடுத்து அங்கே கொடுக்குமாறு ஜாடை செஞ்சாரு.

உலகத்தில் பாஸ்பரஸுக்கு அடுத்து தானாகவே தீப்பற்றக் கூடிய கழக புத்திக்காரனாகிய நம்ப அம்பி,அந்த மேலதிகாரியின் டேபிள் மேல் தனியாகவிருந்த வால்வை தேர்ச்சி பெற்ற நாய் வாயில் கவ்வறப்புல கையில எடுத்துக் கொண்டு சடுதியில் அந்த பெரிய ஆபீஸரண்டை கொண்டு கொடுத்தான்.

அதை கம்ப்யூட்டர் முற்றத்தில் ஒரு ஒரமாய் சொருவிய அவர்,ராகு காலம் முடிஞ்சவுடனே சுவிடசைப் போட்டார்.அடடா...என்னவொரு அற்புதம்,அந்த மூவாயிரம் அடி விஸ்தீரணமாய் இருந்த அந்த கம்ப்யூட்டர் உடனே வேலை செய்ய ஆரம்பிச்சிடுத்து!.நம்ப அம்பியோட கை பட்டதாலத்தான் வேலை செய்ய ஆரம்பிடுத்துன்னு நம்பிய அந்த எமகண்டத்தில பொறந்த அபீஸர்,கொமாருக்கு ”வால்வு தந்த வால் பையன்” அப்படிங்கிற பட்டத்தையும் கொடுத்தாரு!.

அவரு தமாஷாக் குடுத்தப் பட்டத்தை சீரியஸா நினைச்சு அம்பிக்கு பல நாள் தூக்கம் போனது தனிக்கதை!.

மீண்டும் கொஞ்சம் மின்ன போயிரலாமா!.சொல்லும் காட்சி மாதிரி இப்போ செல்லும் காட்சி!

கொஞ்சம் நாளாகி முடியும் போது அதாவது நம்ப அம்பிக்கு வாலிப வயசு .அப்போ தானும் புதுசா எதாவது கண்டு பிடிக்கணூங்கற அதீத வெறி அம்பிக்கு வந்துடுத்து.தன்னை ரொம்பப் புத்திசாலின்னு அந்த டமாரு தெரியாத்தனமா நினைச்சிக் கிட்டாரு! (வாலிபரு ஆய்ட்டதால இந்த மரியாதை.இல்லேன்னா நம்ப அம்பிக்கு எதுக்கு மரியாதை)

அந்த ஆர்வத்தில பாம்பே சரோஜாதேவி மார்கெட்டுக்குப் போயி,எதாவது உருப்படியான புஸ்தகங்கள் இருக்கான்னு பாக்கும் போது அங்க பலான புஸ்தகங்கள் மட்டும் இருக்கவே(அதாகப்பட்டது கொக்கேக சாஸ்திர புஸ்தகங்ககள்)அதில நாலஞ்சி அள்ளிகிட்டு வந்து வீட்டு மேக்கூறையில பதிக்கி வெச்சிக் கிட்டது நமக்கு வேண்டப் படாத விஷயம்.

அப்புறம் வானொலியில் நாம பேசறது எப்படி ஒரு புஸ்தகம் கடைவீதியில வந்து இருக்கிறதா யாரோ சொல்ல அதையும் தேடி அலைஞ்சாரு.அப்புறம் ”நமக்கு நாமே” அப்படிங்கிற திட்டத்தின் பிரகாரம்,ரேடியோவுக்கு சிக்னலோ என்னோமோ ன்னு சொல்லுவாங்களே, அதுக்கு ஒரு வலைமாதிரி ஒண்ணு வீட்டுக்கு வீடு கட்டி வெச்சிண்டு இருப்பாங்க,ஆண்டெனாவோ அண்டோனியோ மொய்னோவோ.அதெ செத்த சுரண்டிணா கொரு கொருண்ணு ஒரு ஷப்தம் வரும் அத தானே பேசற மாதிரி நினச்சி பேசிகிட்டே ஒரு ரெண்டு இழுப்பு இழுப்பாரு,அல்லோன்னு சொல்லறச்சே அல்லு க்கு ஒரு இழுப்பு லோவுக்கு ஒரு இழுப்பு உடனே ரேடியோ பொட்டியில அல்லுக்கு ஒரு டர்ரும் லோவுக்கு இன்னொரு டர்ரும்,மொத்தத்தில ட்ர்ர்டர்ர்ர்ன்னு ஒரு ஷப்தம் வரும்.உடனே தாம் பேசருது ஊருக்கே தெரியுதுன்னு நினைச்சி ரொம்போ சந்தோஷப் படுவாரு நம்ப டமாரு கொமாரு!.

அந்த ஷப்தமே தன்னோட வீட்டில இருக்கிற ரேடியோவில மட்டும்தான் கேக்குமின்னு தெரியாத அப்பாவி கொமாரு,அந்த வலையே இரெண்டு இழுப்பு இழுத்து ரேடியோவில் ஷப்தம் கேட்ட தன்னோட கண்டு பிடிப்பை மெச்சி தனக்கே ”வலை கொண்டான்”ன்னு ஒரு கருமாந்திரப் பட்டத்தையும் குடுத்துக்கிட்டாரு,நம்ப அம்பி!

இப்படியாகத்தானே நம்ப அம்பி டமாரு கொமாருவுக்கு வலைகொண்டான் அப்படீங்கிற பேரு வந்திச்சி!.பேரு வந்திச்சி,புகழு வந்திச்சா?.(பின்னாடி வரப்போற சூப்பர்ஸ்டாருன்னு சொல்லப் படப்போற அம்பி ரஜினி நடிச்ச 16 வயதினிலே!ங்கிற படத்தில வர்ற சீப்புக் கொடுத்தாளே சில்லறை கொடுத்தாளோங்க்கிற ஸ்லோகம் மாதிரி சொல்லிப்பாருங்க!) ஹிஹிஹிஹி

இது 100 வருடத்திற்க்கு முந்தின கதை என்பதை நினைவில் கொள்ளவும்!


பின்குறிப்பு: இது எந்த நபரையும்,குறிப்பிடும் பதிவல்ல!.அப்படி யாராவது நினைத்துக் கொண்டால், வட அமெரிக்காவில் உள்ள பகுத்தறிவு புராணீகரின் மஞ்சள் துண்டை இரவல் வாங்கிப் போட்டுத் தாண்டத் தாயார்!. :)

33 Responses to ""வலைகொண்டான்” டாமாரு கொமாரு!":

நல்லதந்தி says:

என்னடா இரண்டு தடவை இந்த பதிவு வருகிறதே! என்று யாரும் தவறாக நினக்க வேண்டாம்.இந்த இடுகையில் தமிழ் மணக்கருவிப்பட்டை திடீரென்று காணவில்லை.இருந்தாலும் தமிழ்மணத்திலே சென்று இந்த இடுகையை இணத்தேன்.அதில் வேறு ஒரு பிரச்சனை,இடுகையில் வந்த பின்னூட்டங்கள் தமிழ்மணத்தில் வெளிவரவில்லை.அதனால்,இடுகையை புதிதாக எழுதி இரண்டாம் முறையாக தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன்!.மற்றபடி இதில் எந்த அரசியலும் இல்லை! :)
நன்றி!

Anonymous says:

இந்த பதிவு நீங்க எழுதினதா? இல்லை வால்பையன் எழுதி கொடுத்ததா?

இதுக்கெல்லாம் ஒரு நாள் நீங்க பதில் சொல்லியே ஆக வேண்டும்.

Bleachingpowder says:

நேக்கு புரிஞ்சிடுச்சு...நேக்கு புரிஞ்சிடுச்சு... :-).

Bleachingpowder says:

அந்த பின் குறிப்பை எதுக்குன்னா போட்டேள்? இத அந்த அம்பி படிச்சாருனா உங்களுக்கு முதல்ல அர்சணை பண்ணிட்டு தான் மறு வேலை பார்பார்.

Bleachingpowder says:

//இந்த பதிவு நீங்க எழுதினதா? இல்லை வால்பையன் எழுதி கொடுத்ததா? //

இந்த பின்னூட்டத்தை நீங்க எழுதினீர்களா இல்லை பரட்டை எழுதினாரா? அப்படி இருக்கு உங்க கேள்வி :))

நல்லதந்தி says:

//பரட்டை
இந்த பதிவு நீங்க எழுதினதா? இல்லை வால்பையன் எழுதி கொடுத்ததா?

இதுக்கெல்லாம் ஒரு நாள் நீங்க பதில் சொல்லியே ஆக வேண்டும்.//

:))

நல்லதந்தி says:

//Bleachingpowder said...
நேக்கு புரிஞ்சிடுச்சு...நேக்கு புரிஞ்சிடுச்சு... :-).//
ஸ்ஸ்ஷ்...ஷத்தம் போடாதேள்!

அருப்புக்கோட்டை பாஸ்கர் says:

டமாரு டாமரு(நாய் ) ஆகிட்டாரே !!!!

நல்லதந்தி says:

//Aruppukkottai Baskar said...
டமாரு டாமரு(நாய் ) ஆகிட்டாரே !!!!//

முன்பே கவனித்தேன்.அட நாம என்ன கல்வெட்டில காவியமா எழுதுறோம்,போயிட்டு போகுதுன்னு அசால்ட்டா விட்டுட்டேன்.இப்ப அதுக்கு இப்படி வில்லங்கமா ஒரு அர்த்தம் இருக்குங்கறதாலே(எந்த மொழியிலேங்க இந்த அர்த்தம்?!)மாத்திடலாம்ன்னு மாத்திட்டேன்!.நன்றி! :)

யோசிப்பவர் says:

பத்த வச்சுட்டியே பரட்ட!!;-)

Anonymous says:

// யோசிப்பவர் said...
பத்த வச்சுட்டியே பரட்ட!!;-)//

இப்பதான் முழுசா பத்தவச்சிடிங்க.

Anonymous says:

அற்புதமான நகைச்சுவை உணர்வு !!!

எக்ஸலண்ட் பதிவு !!!

விழுந்து விழுந்து சிரித்தேன்...!!!

Anonymous says:

அற்புதமான நகைச்சுவை உணர்வு !!!

எக்ஸலண்ட் பதிவு !!!

விழுந்து விழுந்து சிரித்தேன்...!!!

Anonymous says:

அற்புதமான நகைச்சுவை உணர்வு !!!

எக்ஸலண்ட் பதிவு !!!

விழுந்து விழுந்து சிரித்தேன்...!!!

Anonymous says:

;))

Anonymous says:

;((

நல்லதந்தி says:

//செந்தழல் ரவி said...
அற்புதமான நகைச்சுவை உணர்வு !!!//
??? :(

நல்லதந்தி says:

// செந்தழல் ரவி said...
அற்புதமான நகைச்சுவை உணர்வு !!!

எக்ஸலண்ட் பதிவு !!! //

??? :( :(( ???

நல்லதந்தி says:

//செந்தழல் ரவி said...
அற்புதமான நகைச்சுவை உணர்வு !!!

எக்ஸலண்ட் பதிவு !!!

விழுந்து விழுந்து சிரித்தேன்...!!!//
??? :( :(( :(( ???

நல்லதந்தி says:

//செந்தழல் ரவி said...
அற்புதமான நகைச்சுவை உணர்வு !!!
எக்ஸலண்ட் பதிவு !!!
விழுந்து விழுந்து சிரித்தேன்...!!!//

வெக்கப் படுத்தாதீங்க பாஸூ

Anonymous says:

//ஆண்டெனாவோ அண்டோனியோ மொய்னோவோ.//
இதிலும் அரசியலா? :))

வால்பையன் says:

”வால்வு தந்த வால் பையன்”

ஏன் இந்த கொலைவெறி

வால்பையன் says:

இன்று தான் கவனித்தேன் உங்கள் பிளாக் எனது ரீடரில் அப்டேட் ஆகவில்லை!
நீங்கள் சில நாட்களாக பதிவு எதுவும் எழுதவில்லை என்று நினைத்துவிட்டேன்.
மன்னிக்கவும்

வால்பையன் says:

பதிவு தமாஷா இருந்தது

நல்லதந்தி says:

// வால்பையன்
September 29, 2008 7:28 PM
இன்று தான் கவனித்தேன் உங்கள் பிளாக் எனது ரீடரில் அப்டேட் ஆகவில்லை!
நீங்கள் சில நாட்களாக பதிவு எதுவும் எழுதவில்லை என்று நினைத்துவிட்டேன்.
மன்னிக்கவும்//

அப்பா இப்பயாவது கவனிச்சீங்களே! :)

நல்லதந்தி says:

//வால்பையன்
September 29, 2008 7:34 PM

பதிவு தமாஷா இருந்தது//

பதிவுலகமே ஒரு தமாஷ்தானே!.இதிலெல்லாம் சீரியஸா எதையும் நினைக்கக் கூடாது :)

Anonymous says:

இதுக்கு பெயர் தான்... நீங்களே சொறிஞ்சுகிட்டு... நீங்களே... கைய தட்டி சிரிக்குறதா?

Anonymous says:

அடச்சே, வலைகொண்டான் டமாரு கொமாரா? அத்தப் போயி கொலைகொண்டான்ன்னு படிச்சு ஒரு வேள "அவர"ப் பத்தின நியூஸோன்ன்னு ஆசையா வந்தேன். இப்பிடி ஏமாத்திப்புட்டீங்களே?


த‌ந்திசார், ஒரு கேள்வி கேக்க‌லாமா? ப்ளீச்சிங் பௌட‌ர் அண்ணாச்சியும் நெல்லிக்க‌னிக்கு சொந்த‌மான‌வ‌ரும் ஒரே ஆளுதானா? எல்லாம் ஒரு "விசிய‌"மாத்தான் கேக்குறேன்.

நல்லதந்தி says:

//யோசிப்பவர் said...
பத்த வச்சுட்டியே பரட்ட!!;-)//

தப்பா யோசிக்காதீங்க சார்1 :)

நல்லதந்தி says:

//டக்கிடுக் said...
இதுக்கு பெயர் தான்... நீங்களே சொறிஞ்சுகிட்டு... நீங்களே... கைய தட்டி சிரிக்குறதா?//

என்னங்க இது சொறிஞ்சா எப்படி சிரிப்பு வரும் வேணுன்ணா நாங்க கிச்சுகிச்சு மூட்டிக்கிட்டு சிரிச்சிக்கிறோம் மன்னு சொல்லுங்க. :))

நல்லதந்தி says:

//த‌ந்திசார், ஒரு கேள்வி கேக்க‌லாமா? ப்ளீச்சிங் பௌட‌ர் அண்ணாச்சியும் நெல்லிக்க‌னிக்கு சொந்த‌மான‌வ‌ரும் ஒரே ஆளுதானா? எல்லாம் ஒரு "விசிய‌"மாத்தான் கேக்குறேன்//

அனானி சார்!.இதை நீங்க பிளீச்சிங் பெளடர் கிட்ட இல்லை கேட்கணும் என்னைக் கேட்டா? :)

ஜ்யோவ்ராம் சுந்தர் says:

/அனானி சார்!.இதை நீங்க பிளீச்சிங் பெளடர் கிட்ட இல்லை கேட்கணும் என்னைக் கேட்டா?/

அப்ப நீங்க பிளீச்சிங் பௌடர் இல்லையா? அப்படி நினைச்சுத்தானேயா அன்னைக்கு உங்ககிட்ட பேசினேன் :(

நல்லதந்தி says:

//அப்ப நீங்க பிளீச்சிங் பௌடர் இல்லையா? அப்படி நினைச்சுத்தானேயா அன்னைக்கு உங்ககிட்ட பேசினேன் :(//

அண்ணா ரெண்டு பேரும் தப்பா நினைச்சிக்கிட்டோம் போலிருக்கே!.அப்போ நீங்க ப்ளீச்சிங் பௌடர் இல்லையா?.அய்யய்யோ அப்போ வால் பையன் தான் ப்ளீச்சிங் பௌடரா?.முருகா!,முருகா! :))