"மானிய விலையில் மட்டையாக்கும் பொருள்"கலைஞர் அதிரடித்திட்டம்!

Posted on Thursday, September 18, 2008 by நல்லதந்திடாஸ்மாக் கடைகளில் மானிய விலையில், 50 ரூபாய்க்கு குடி!(மை) பொருட்கள் வழங்கப்படும் என்று, முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார். அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி முதல் இந்த சலுகை விலை திட்டம் அமலுக்கு வருகிறது.

ஏழை, எளிய நடுத்தர பெருங்குடி மக்களை விலைவாசி ஏற்றத்தின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு, பெருங்குடி மக்களுக்குத் தேவையான சரக்கு,தண்ணி,பிளாஸ்டிக் கிளாஸ்,சைட் டிஷ்,சிகரெட் மற்றும் வாந்தி வருகிற மாதிரி இருந்தால் வாயில் போட்டுக் கொள்ள ஆரஞ்சு மிட்டாய், வாந்தி எடுத்து விட்டால் துடைத்துக் கொள்ள 25X25 cm கைக்குட்டை போன்றவைகள் ரூபாய் 50 க்கே டாஸ்மாக் கடைகளில் கிடைக்கும்.

மேல கண்ட 7 பொருள்களையும், நல்ல தரமான நிலையில், சராசரிக் குடிமகனின் ஒரு வேளைத்(!) தேவைக்குப் பயன்படும் வகையில், அவை ஒவ்வொன்றையும் ஒரு சிறிய பாலிதீன் பையில் அடைத்து பின் அந்த பைகள் அனைத்தையும் ``மானிய விலையில் மட்டையாக்கும் பொருள்'' என்ற தலைப்பில் ஒரு பையிலிட்டு, 50 ரூபாய்க்கு டாஸ்மாக் கடைகள் மூலம் விற்பனை செய்திடும் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திட இந்த அரசு முடிவு செய்துள்ளது.

விலைப்பட்டியல்:

180 மில்லி குவார்டர் MC பிராண்ட் 70.00 (டாஸ்மாக் ஊழியர்களின் கமிஷன் 3 ரூபாயைச் சேர்த்து)

தண்ணிபாக்கெட் இரண்டு ரூ.5.00 (பார் எடுத்த கண்மணி கமிஷனையும் சேர்த்து)

பிளாஸ்டிக் கிளாஸ் நிரோத் பலூன் அளவிற்கு மெல்லியது ஒன்று ரூ.2.50 (பார் எடுத்த கண்மணி கமிஷனையும் சேர்த்து)

சைட்டிஷ் நிலக்கடலை பாக்கெட் 15 கொட்டைகள் கொண்டது ஒன்று ரூ.2.50 (பார் எடுத்த கண்மணி கமிஷனையும் சேர்த்து)

சிகரெட் கோல்டு பில்டர் இரண்டு ரூ.8.00 (பார் சந்தை விலை)

ஆரஞ்சு மிட்டாய் ஒன்று ரூ.2.00(பார் சந்தை விலை)

கைக்குட்டை பாலியெஸ்டர் மிக்ஸிங் ஒன்று ரூ.5.00 (பார் சந்தை விலை)


விலையில் மொத்தம் 95 ரூபாய்க்கு வெளிச்சந்தையில் விற்கப்படும் இந்த குடி(மை) பொருள்களும் முதலில் குறிப்பிட்ட அந்த பைகளின் மூலம் 50 ரூபாய்க்கு டாஸ்மாக் கடைகள் வாயிலாக விற்பனை செய்யப்படும். அதாவது 95 ரூபாய் பெறுமானமுள்ள, விலை மதிப்புள்ள பொருட்கள் 50 ரூபாய் விலைக்கு தரப்படும்.


இந்த புதிய திட்டம், உத்தமர் காந்தியடிகள் பிறந்த நன்னாளான வரும் அக்டோபர் 2-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும். ஏழைக் குடிதாங்கிகளின் சிரமங்களை விலக்கிட மனித நேய உணர்வோடு பல்வேறு வகையில் விலைகளை குறைத்து "குஜால்" பொருள்களை வழங்குகின்ற இந்த வாய்ப்பை பாணாக்குடிதமிழர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கருணாநிதி கூறினார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு, முதல்-அமைச்சர் கருணாநிதி பதில் அளித்தார்.

கேள்வி:- இந்த புதிய திட்டத்தின் மூலமாக எத்தனை பேர் பயனடைவார்கள்?
பதில்:- தமிழகத்தில் மொத்தம் உள்ள ஐம்பது கோடி ஆண்கள் பயனடைவார்கள்.

கேள்வி:-இந்தியாவின் ஜனத்தொகையே 110 கோடிதானே?பதில்:-இந்தியாவின் ஜனத்தொகை குறைவாக இருப்பதற்கு தமிழன் என்ன செய்வான்?(லேசாக நமுட்டுச் சிரிப்புச் சிரித்தார்!)

." 'குன்ஸா புள்ளி விபர னெஸ்"ரெக்கார்ட் புத்தகத்தில் மயிலாப்பூர் எடிஷனில் பதினோராயிரத்து நூற்று பதினோராம் பக்கத்தில் தமிழகத்தின் மக்கள் தொகை எவ்வளவு என்று போட்டிருக்கிறது என்று பாருங்கள். விபரமில்லாமல் பேசுவதற்கு நான் என்ன ஆடா? மாடா?

கேள்வி:- தமிழக அரசுக்கு கூடுதலாக எவ்வளவு செலவாகும்?
பதில்:- ஆண்டு ஒன்றுக்கு சுமார் 100000 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும்.

கேள்வி:- இந்த அரசின் "ஒரு ரூபாய்க்கு ஒரு மீட்டர் பூ" திட்டத்தை நீங்கள் அண்ணாவின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அறிவித்திருந்த போதிலும், ஒரு சிலர் இதனை தேர்தல் நோக்கோடு நீங்கள் அறிவித்திருப்பதாக விமர்சனம் செய்கிறார்களே? மேலும் மின்வெட்டை மறைப்பதற்காகத்தான் இந்த திட்டத்தை நீங்கள் அறிவித்திருப்பதாகவும் சொல்கிறார்களே?
பதில்:- இதற்கு முன் "நமக்கு நாமமே!"திட்டத்தில் மக்கள் எல்லோருக்கும் பட்டை நாமம் கொடுத்தைக் கூட இன்னும் சில குடிகேடிகள் குறை சொல்லத்தானே செய்கிறார்கள்.

மின்வெட்டு இருந்தால்தானே மறைக்க வேண்டும். மின்வெட்டை மறைக்க வேண்டிய அவசியத்தில் தற்போது நான் இல்லையே? மின்சாரத்தை பயன்படுத்திக்கொண்டுதான் இந்த விளக்கொளியில் நான் உங்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருக்கிறேன். மின்சார விளக்குகள் எரிவது குருடர்களை தவிர மற்ற எல்லோருக்கும் தெரியும். இவ்வாறு தமிழக முதல்வர் கூறினார்.

மானிய விலையில் மட்டையாக்கும் பொருள் திட்டத்தை அறிவித்தவுடன், செய்தியைக் கேட்ட குடிமக்கள் கும்பலாகக் கூடி ஆனந்தக் கண்ணீரோடு குவார்டர் ஜோதியில் கலந்தனர்.

எப்போதுமே டாஸ்மாக் வாசலிலேயே உழப்பிக் கொண்டு கிடக்கும் "ரம்மு ராஜேந்திரன்" என்பவர் கூறும் போது,''தலைவருன்னா தலைவர்தான், எத்தினியோ ஏழைங்க வீட்டில இதனால அடுப்பு எரியும். எங்களுக்கு மஜாவா வவுறு எரியும்.முன்னெல்லாம் எங்களுக்கு வர்ற வருமானத்தில ஒரு வேளைதான் சரக்கு சாப்பிட முடிஞ்சது.இந்த மகராசன் இரண்டு வேளைக்கு வழி பண்ணிட்டாரு!.என்று போதையிலேயே கண்ணீர் விட்டார்.

மற்றொரு குடிமகனான "குடிகார குமாரு" என்பவர் கூறும் போது,"கலைஞர் தீர்கதரிசிதாங்க!...தவிச்சவாய்க்கு தண்ணிதராத கர்நாடகாகாரனுங்களுக்கும் சரி,ஆந்தராகாரனுங்களுக்கும் சரி,கேரளாகாரனுங்களுக்கும் சரி.இப்போ தண்ணி கொடுக்கப் போறது யாரு?.நம்ப கலைஞர் தானே?.இப்போதான், அவனுங்க கலைஞரோட பெருந்தன்மைய புரிஞ்சுக்கப் போறானுங்க!..."என்று சொல்லிக் கொண்டே கடைசி மிடக்கை 'கப்' என்று வாயில் ஊற்றிக் கொண்டார்.பிறகு "சார் ஒரே ஒரு குவார்டர் வாங்கித்தர்றீங்களா?.அக்டோபர் ரெண்டாம் தேதி மறக்காம திருப்பி கொடுத்திடறேன்" என்றார்.

கவிஞர் "வயித்தில குத்து" அவர்களிடம் கேட்டபோது,"சாதாரணமாகவே "மக்களை"ப் பற்றியே சிந்திப்பார்.இப்பொழுது அவர் சிந்திப்பதே "மக்களை"ப் பற்றியா இருக்கு!.
24 நாலு மணி நேர மின்வெட்டு திட்டமான "ஜொலிக்கும் சூரியன்" திட்டம் காரணமா மக்கள் எப்படா விடியும்! என்று ஆகாயத்தையே பார்க்கும் படி செய்து ஆகாயத்தைக் காட்டினார்."டீ குடிக்க தீக்குளிக்க" திட்டத்தின் படி எரிக்க மண்ணெண்ணெய் வழங்கினார். "வாயில மண்ணு" திட்டத்தின் படி ஆளுக்கு இரண்டு கிலோ மீட்டர் நிலம் வழங்கி பூமியைத் தந்தார்.ஒரு ரூபாய்க்கு ஒரு மீட்டர் பூ திட்டத்தின் படி காதில் வைத்துக் கொள்ள வாசனைப் பூ வழங்கி மக்களுக்கு வாசனைக் காற்றைக் வழங்கினார்.இப்போது "மானிய விலையில் மட்டையாக்கும் பொருள்" திட்டத்தால் மக்களுக்களுடைய தவித்த வாய்க்கு தாகத்துக்கு தண்ணி வழங்கியுள்ளார்.
கடவுளுக்கு அடுத்தபடியாக பஞ்சபூதத்தையும் அடக்கி ஆள்வது கலைஞர் தான்! .இனிமேல் நான் கலைஞரை கலைஞரன்னு கூப்பிட மாட்டேன்.பஞ்ச பூதத்தையும் காட்டியதால் அவரைச் செல்லமாக "பஞ்சர்"அப்படின்னுதான் கூப்பிடப்போறேன் என்றார் உணர்ச்சிப் பெருக்கோடு!.

பார் ஊழியர் கூறும் போது,"இது ரொம்ப நல்லத்திட்டம்,முன்னே விலை அதிகமா இருக்கும்போது எங்களுக்கு டிப்ஸ் ரொம்ப கம்மியா குடுத்தாங்க.இப்ப டிப்ஸும் அதிகமா எதிர்பாக்குறோம். இப்ப நாங்க நிறைய விலையேத்தி சொன்னாக்கூட சரக்கு விலை கம்மியா இருக்கறதாலே கம்மன்னு குடுத்துட்டு போயிடுவாங்க.பாரும் சண்டச்சச்சரவு இல்லாம இருக்கும்."சட்டம் ஒழுங்க" இப்ப காப்பாத்தி, ஒரே கல்லுல ரெண்டு மாங்க அடிச்சிட்டாரு கலைஞரு!.இன்னொரு விஷயமும் சொல்லணும் சரக்கு அதிகமா உள்ளார போறதால மப்பு ஏறி தலை தொங்கிடும், அதிகமா பேசவும் மாட்டாங்க!முடியவும் முடியாது! ".என்றார்.

அதிமுக பிரமுகரிடம் கேட்ட போது,"இதெல்லாம் என்னங்க!.அம்மா ஆட்சியில "நைட்டுக்கு நைன்டி" திட்டத்த மிஞ்ச முடியுமா?.இந்த ஆளு எப்பவுமே இப்பிடிதாங்க.அம்மா எதாவது நல்லத் திட்டத்த கொண்டாந்தா இவரு அப்பிடியே காப்பியடிச்சிடுவாரு!."என்றார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் இதைப் பற்றி கேட்ட போது,"என்னங்க திட்டம் இது!.டாஸ்மாக் வரைக்கும் ஜனங்க எதுக்கு போகணும்.வீட்டுக்கே கொண்டு வந்து தரமுடியாதா?.அப்படி தரமுடியாததற்க்கு காரணம் என்ன?.கட்சிக்காரங்க கொள்ளையடிக்கறதுக்குத்தானே?.அந்த பொருளெல்லாம் டாஸ்மாக்குக்கே வராது!.அப்படியே கேரளாவுக்கும்,ஆந்திராவுக்கும், கர்நாடகாவுக்கும் தான் போகும்.எங்க ஆட்சி வந்தா ஒவ்வொரு வீட்டுக்கும் இந்த குடி(மை) பொருட்கள் தேடித்தேடி வரும்!.அதை எப்படிச் செய்வோம்ங்கிறத எங்க ஆட்சி வரும்போது சொல்வோம்!"


பி.கு:- இது முழுக்க முழுக்க சிரிப்பு லொள்ளிற்கே!. யாருடைய மனதையும் புண்படுத்த அல்ல! :)

இன்னொரு பி.கு:- ஒரு வருத்தமான விஷயம் இது என்னுடைய 50 வது பதிவு!

மற்றோரு பி.கு:- இந்தப் பதிவு நண்பர் வால்பையனுக்கு அர்ப்பணம்!...அடத் தண்ணி காரணம் இல்லீங்க! வேற காரணம்! :)

56 Responses to ""மானிய விலையில் மட்டையாக்கும் பொருள்"கலைஞர் அதிரடித்திட்டம்!":

பினாத்தல் சுரேஷ் says:

நல்லதந்தி..

நன்றாகச் சிரிக்க முடிந்தது. துன்பத்தையும் சிரிப்பு மூட்டையில் கட்டி இருக்கிறீர்களே!

கவியரங்கக் கவிதை? ஒரு சாம்பிள் :

பார்..
தலைவனைப் பார்..
அவனால் இன்று தமிழகமே Bar!

அன்று கண்ணனுக்குச் சூடிக்கொடுத்தாள் கோதை..
இன்று குடிமகனுக்குக் கொடுத்தான் இவன் போதை!
அதனாலே இவனும் ஒரு மேதை!

மின்னணு பாயாமல் வந்திடும் ஏக்கம்..
ஆல்கஹால் பாய்ந்தால் வரும் தூக்கம்..

இந்த சாம்பிள் போதுமா?

panaiyeri says:

நல்ல பதிவு ...
நாளைய தமிழகத்தின் உண்மை நிலை இதுதான் ...

சிறு திருத்தம் ...
//பி.கு:- இது முழுக்க முழுக்க சிரிப்பு லொள்ளிற்கே!. யாருடைய மனதையும் புண்படுத்த அல்ல!//

இது சிரிப்பதற்கு அல்ல ..சிந்திப்பதற்கு

Anonymous says:

இது சிரிப்பதற்கு அல்ல ..சிந்திப்பதற்கு:)

bar man says:

//தலைவனைப் பார்..
அவனால் இன்று தமிழகமே Bar!

அன்று கண்ணனுக்குச் சூடிக்கொடுத்தாள் கோதை..
இன்று குடிமகனுக்குக் கொடுத்தான் இவன் போதை!
அதனாலே இவனும் ஒரு மேதை!

மின்னணு பாயாமல் வந்திடும் ஏக்கம்..
ஆல்கஹால் பாய்ந்தால் வரும் தூக்கம்..//

super :)

கொம்பன் says:

ஐம்பதுக்கு வாழ்த்துக்கள்.

கலைஞர் வாழ்க! கலைஞர் வாழ்க!! கலைஞர் வாழ்க!!

மற்றபடி வேறொன்னும் சொல்லுறதுக்கு இல்லை.

Anonymous says:

Super.

ARUVAI BASKAR says:

தலைவரின் நாடித்துடிப்பை அறிந்து அவரின் அடுத்த திட்டத்தை அம்பலப்படுத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன் .!!!!
:-)

ச.சங்கர் says:

படிக்கும் போது உண்மையிலேயே வாய் விட்டு சிரித்து விட்டேன். :)

r.selvakkumar says:

நல்ல spoof

ஜெயலலிதாவின் கொடநாட்டுக் குறட்டை
ஆற்காட்டாரின் மின்வெட்டு சாதனை
கமலின் மர்மயோகி
ரஜினியின் ரோபோ
சிம்புவின் கார்
சன் டிவியின் திடீர் நடு(ஜெயலலிதா) நிலை
மானாட மயிலாட கெமிஸ்ட்ரி

இவை எல்லாமே spoof செய்ய உகந்த ஹாட் டாப்பிக்குகள்.

Anonymous says:

:)):))

இலவசக்கொத்தனார் says:

:))

நல்லதந்தி says:

நன்றி! பினாத்தல் சார்!.உங்க கவிதை அற்புதம்!.இது முன்னயே தெரிஞ்சிருந்தா..கவிஞர் வயித்துல குத்து கவிதையை உங்க கிட்ட இருந்தே வாங்கியிருப்பேன்!

நல்லதந்தி says:

//இது சிரிப்பதற்கு அல்ல ..சிந்திப்பதற்கு//
வாங்க பனையேரி!.நம்மாளுங்க சிந்திக்கிறதை மறந்து ரொம்ப நாளாச்சி!.சிரிப்பைத்தான் இன்னும் கொஞ்சம் வச்சிருக்காங்க!!

நல்லதந்தி says:

கொம்பன் எந்த ஐம்பதுக்கு வாழ்த்து சொல்லறீங்க!.எனக்கா?.கலைஞருக்கா?.எதாவது வருத்தமா எதும் சொல்லறத்துக்கு இல்லேன்னுட்டீங்களே! :)

நல்லதந்தி says:

வாங்க அருவை பாஸ்கர் சார்!.அடுத்த திட்டம் இதுதான்னா..அடுத்த தேர்தலில் நம்ம ஓட்டு கலைஞருக்கே! :)

நல்லதந்தி says:

//ச.சங்கர் said...
படிக்கும் போது உண்மையிலேயே வாய் விட்டு சிரித்து விட்டேன். :)//
இதுக்குத்தான் எழுதினேன்.அப்பா... இப்பத்தான் நிம்மதியாச்சி!.நீங்க சிரிக்கலேன்னா நான் அழுதிருப்பேன்!. :))

நல்லதந்தி says:

/// r.selvakkumar

நல்ல spoof//
நீங்க சொன்னமாதிரி எழுதினா நல்லத்தான் இருக்கும்..

நல்லதந்தி says:

வாங்க இலவசக் கொத்தனார் சார்!.உங்க வருகைக்கு நன்றி!

Anonymous says:

நீங்க இடுகையைச் சமர்பணம் செஞ்ச வால்பையன் எவிட?

Anonymous says:

:))

அது சரி says:

இந்த பட்டியல்ல ஊறுகா இல்லியா? தமிழ்னாட்டின் 26 கோடி ஏழைக்குடும்பங்ளை வாழ வைக்கும் ஊறுகாய் வழங்காத, கலைஞர் அரசின் குடிமக்கள் விரோத போக்கை எதிர்த்து என் கடும் கண்டனங்களை பதிவு செய்கிறேன்!

Anonymous says:

/இந்த பட்டியல்ல ஊறுகா இல்லியா? தமிழ்னாட்டின் 26 கோடி ஏழைக்குடும்பங்ளை வாழ வைக்கும் ஊறுகாய் வழங்காத, கலைஞர் அரசின் குடிமக்கள் விரோத போக்கை எதிர்த்து என் கடும் கண்டனங்களை பதிவு செய்கிறேன்!/
எலுமிச்சை ஊறுகாய்தான் சரக்குக்கு சரியான ஜோடி!எனவே எலுமிச்சை ஊறுகாய் வழங்காத, கலைஞர் அரசின் குடிமக்கள் விரோத போக்கை எதிர்த்து என் கடும் கண்டனங்களை பதிவு செய்கிறேன்!

நல்லதந்தி says:

//அது சரி said...
இந்த பட்டியல்ல ஊறுகா இல்லியா? தமிழ்னாட்டின் 26 கோடி ஏழைக்குடும்பங்ளை வாழ வைக்கும் ஊறுகாய் வழங்காத, கலைஞர் அரசின் குடிமக்கள் விரோத போக்கை எதிர்த்து என் கடும் கண்டனங்களை பதிவு செய்கிறேன்!//
வாங்க அதுசரி ஊறுகாய மிஸ் பண்ணிட்டேனோ?.கலைஞருக்கு ஓரு கடிதம் எழுதிடலாம்! :)

BAR MAN says:

//180 மில்லி குவார்டர் MC பிராண்ட் 70.00 (டாஸ்மாக் ஊழியர்களின் கமிஷன் 3 ரூபாயைச் சேர்த்து)

தண்ணிபாக்கெட் இரண்டு ரூ.5.00 (பார் எடுத்த கண்மணி கமிஷனையும் சேர்த்து)

பிளாஸ்டிக் கிளாஸ் நிரோத் பலூன் அளவிற்கு மெல்லியது ஒன்று ரூ.2.50 (பார் எடுத்த கண்மணி கமிஷனையும் சேர்த்து)

சைட்டிஷ் நிலக்கடலை பாக்கெட் 15 கொட்டைகள் கொண்டது ஒன்று ரூ.2.50 (பார் எடுத்த கண்மணி கமிஷனையும் சேர்த்து)

சிகரெட் கோல்டு பில்டர் இரண்டு ரூ.8.00 (பார் சந்தை விலை)

ஆரஞ்சு மிட்டாய் ஒன்று ரூ.2.00(பார் சந்தை விலை)

கைக்குட்டை பாலியெஸ்டர் மிக்ஸிங் ஒன்று ரூ.5.00 (பார் சந்தை விலை)//
BAR ல போய் உட்கார்ந்து எழுதினீங்களா சார்? :))

Bleachingpowder says:

என்ன நல்லதந்தி இப்படி பண்ணிட்டீங்க! என்ன தான் திமுக மேல காண்டா இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர். இத மட்டும் கருணாநீதி படிச்சாருனா அப்புறம் டென்சனாய் உங்களுக்கு எதிரா முரசொலியில் கவிதையெல்லாம் எழுதிடுவாரு.

பின்ன என்னங்க திமுக வோட அடுத்த தேர்தல் அறிக்கையை எப்படியோ ரகசியமா அண்ணா அறிவாலையத்தில் இருந்து எடுத்து இப்படி பகிரங்கமா வெளியிட்டு விட்டீர்களே. இது உங்களுக்குகே நியாமா :))

இந்த வார குட்டு நல்லதந்திக்கு.
திமுகா தலைமையிடம் அனுமதி
பெறாமல், அவர்களுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

இந்த வார பாராட்டு நல்லதந்திக்கு.
என்ன தான் அனுமதி வாங்காமல் வெளியிட்டாலும், இதை படித்த கழக கண்மணிகள் வயிற்றில் பீரை வார்த்தத்றக்காக.


இந்த வார கேள்வி அதுவும் நல்லதந்திக்கே.
யாருங்க அந்த குடிகார குமாரு :))

Bleachingpowder says:

என்ன நல்லதந்தி இப்படி பண்ணிட்டீங்க! என்ன தான் திமுக மேல காண்டா இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர். இத மட்டும் கருணாநீதி படிச்சாருனா அப்புறம் டென்சனாய் உங்களுக்கு எதிரா முரசொலியில் கவிதையெல்லாம் எழுதிடுவாரு.

பின்ன என்னங்க திமுக வோட அடுத்த தேர்தல் அறிக்கையை எப்படியோ ரகசியமா அண்ணா அறிவாலையத்தில் இருந்து எடுத்து இப்படி பகிரங்கமா வெளியிட்டு விட்டீர்களே. இது உங்களுக்குகே நியாமா :))

இந்த வார குட்டு நல்லதந்திக்கு.
திமுகா தலைமையிடம் அனுமதி
பெறாமல், அவர்களுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

இந்த வார பாராட்டு நல்லதந்திக்கு.
என்ன தான் அனுமதி வாங்காமல் வெளியிட்டாலும், இதை படித்த கழக கண்மணிகள் வயிற்றில் பீரை வார்த்தத்றக்காக.


இந்த வார கேள்வி அதுவும் நல்லதந்திக்கே.
யாருங்க அந்த குடிகார குமாரு :))

நல்லதந்தி says:

//bleachingpowder said...
என்ன நல்லதந்தி இப்படி பண்ணிட்டீங்க! என்ன தான் திமுக மேல காண்டா இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர். இத மட்டும் கருணாநீதி படிச்சாருனா அப்புறம் டென்சனாய் உங்களுக்கு எதிரா முரசொலியில் கவிதையெல்லாம் எழுதிடுவாரு.//

வாங்க பினாயில் சார்!..மன்னிக்க ப்ளீச்சிங் சார்.லக்கிலுக்கோட பதிவைப் படிச்சீங்களா?..நான் கோவி சாரோட பதிவில் பின்னூட்டம் போட்டிருக்கேன். போய்ப் பாருங்க!.:)

Bleachingpowder says:

//வாங்க பினாயில் சார்!..மன்னிக்க ப்ளீச்சிங் சார்.லக்கிலுக்கோட பதிவைப் படிச்சீங்களா?..நான் கோவி சாரோட பதிவில் பின்னூட்டம் போட்டிருக்கேன். போய்ப் பாருங்க!.
//

ஐய்யோ ராமா அதை ஏன் கேட்குறீங்க, அத படிச்சுட்டு நானும் நாலு கேள்வி கேட்டு வச்சேன் இப்படிக்கு பினாயில் பதிவர்னு, வழக்கம் போல அந்த பின்னூட்டம் வெளியாகவில்லை :-)

//அவருடைய பதிவு என்ன கக்கூஸா?.,அவருடைய பதிவில் பின்னூட்டமிட அதாவது கழிக்க கலைஞர் என்ற ஒரு ரூபாய் பணமோ அல்லது சூப்பர் என்ற சொல் ஒரு ரூபாய் பணமோ கொடுக்க வேண்டுமா?.பதிவு உலகத்தில் உள்ளப் பதிவகர்களே இந்த அளவுக்கு தாம் புகழ் பெற்றதாக நினக்கும் போது பத்திரிக்கைகளில் எழுதும் எழுத்தாளார்கள்.எவ்வள்வோ அலட்டிக் கொள்ள வேண்டும்?.//

சாட்டையடி நல்லதந்தி ! பரவாயில்லை நம்ம பதிவ படிச்சுட்டு மனுசன் ரொம்பவே சூடாயிருக்கிறார். என்னுடைய நோக்கமும் அதுவே :-) அவர் கருணாநிதிக்கு சொம்பு தூக்குறதை பத்தி எனக்கு எந்த அக்கறையும் இல்லை ஆனா பெரிய உத்தமன் மாதிரி பேசிட்டு, பதிவிக்கு சம்மந்தமான ஒரு சின்ன எதிர் பின்னூட்டதை கூட போட நடுங்குற இவரே, தன்னுடைய எழுத்தை கக்கூஸ்னு மறைமுகமாக ஒத்துகிட்டாரே, அந்த வகையில் எனக்கு சந்தோசமே.


இத பத்தி நானே திரும்ப ஒரு பதிவ போடலாம்னு இருந்தேன் அப்புறம், என் பேர பயன்படுத்தி பினாயில் பவுடர் ரேசன் கடையில் ஒரு ருபாய்க்கு அரிசி வாங்கிட்டான்னு சொல்லிட்டு முக்கீட்டு இருப்பார்.

நல்லதந்தி says:

//ஐய்யோ ராமா அதை ஏன் கேட்குறீங்க//
பாத்துங்க நீங்க பாட்டுக்கு ராமான்னு சொல்றீங்க.எதாவது பகுத்தறிவு பதிவர் பார்த்தால் என்னாவது? :)

நல்லதந்தி says:

// அத படிச்சுட்டு நானும் நாலு கேள்வி கேட்டு வச்சேன் இப்படிக்கு பினாயில் பதிவர்னு, வழக்கம் போல அந்த பின்னூட்டம் வெளியாகவில்லை :-)//
உங்களுக்கு மனம் தளரா மனசு :)

நல்லதந்தி says:

//கருணாநிதிக்கு சொம்பு தூக்குறதை பத்தி எனக்கு எந்த அக்கறையும் இல்லை ஆனா பெரிய உத்தமன் மாதிரி பேசிட்டு, பதிவிக்கு சம்மந்தமான ஒரு சின்ன எதிர் பின்னூட்டதை கூட போட நடுங்குற இவரே, தன்னுடைய எழுத்தை கக்கூஸ்னு மறைமுகமாக ஒத்துகிட்டாரே, அந்த வகையில் எனக்கு சந்தோசமே.//
நல்ல எழுத்து ஆளுமையுள்ள பதிவர்தான்.ஆனா ஆணவம் தலைவித்தாடுதே?..இப்பத்தான் சுஜாதா போன்ற பெரிய எழுத்தாளர்களையும்,அவர்களுடைய அடக்கமான பண்புகளையும் நினைக்கத்தோணுது!

Bleachingpowder says:

அட நீங்க வேற நான் கூப்பிட்டது ஈரோடு ராமசாமி நாய்க்கரை தான் சொல்லி எஸ்கேப் ஆயிடுவேன் :)

அப்புறம் இந்த பகுத்தறிவுனா என்னங்க நல்லதந்தி, வீட்டுல பொண்டாட்டி புள்ளையை சாமி கும்பிட சொல்லீட்டு ஊருல இருக்கற எவனும் சாமி கும்பிட கூடாது சொல்லுவாங்களே அவங்களா??

நல்லதந்தி says:

//அட நீங்க வேற நான் கூப்பிட்டது ஈரோடு ராமசாமி நாய்க்கரை தான் சொல்லி எஸ்கேப் ஆயிடுவேன் //

ஹஹ்ஹா :))

//அப்புறம் இந்த பகுத்தறிவுனா என்னங்க நல்லதந்தி, வீட்டுல பொண்டாட்டி புள்ளையை சாமி கும்பிட சொல்லீட்டு ஊருல இருக்கற எவனும் சாமி கும்பிட கூடாது சொல்லுவாங்களே அவங்களா??//

ஆமாம் அதேதான்!.இன்னிக்கு போட்ட பதிவில் அதை எழுதியிருக்கேன் :)

Bleachingpowder says:

//நல்ல எழுத்து ஆளுமையுள்ள பதிவர்தான்.ஆனா ஆணவம் தலைவித்தாடுதே?..//

தமிழ்மணத்திற்கு வெளியே நம்முடைய நிலை என்ன என்பதை அவர் வெளியே போய் பார்க்க வேண்டும்.

இப்பத்தான் சுஜாதா போன்ற பெரிய எழுத்தாளர்களையும்,அவர்களுடைய அடக்கமான பண்புகளையும் நினைக்கத்தோணுது!

சத்தியமான வார்த்தைகள்.

நல்லதந்தி says:

//தமிழ்மணத்திற்கு வெளியே நம்முடைய நிலை என்ன என்பதை அவர் வெளியே போய் பார்க்க வேண்டும். //

ஒரு விஷயம் தெரியுங்களா!.எனக்கு தமிழ் மணம் என்று ஒன்று இணையத்தில் இருப்பதே 6 மாசத்திற்கு முன்புதான் தெரியும்.இத்தனைக்கும் எனக்கு இணையத்தை 97-ல் இருந்தே உபயோகிக்கிறேன்.மெயிலுக்காக.இந்த லட்சணத்தில் இந்தப் பதிவர் உலகம் பூரா தெரிந்த பதிவர் என்று பினாத்துவது ரொம்ப காமெடி.

Anonymous says:

//அவருடைய பதிவு என்ன கக்கூஸா?.//

யாருங்க அந்த கக்கூசு ??

Bleachingpowder says:

//ஒரு விஷயம் தெரியுங்களா!.எனக்கு தமிழ் மணம் என்று ஒன்று இணையத்தில் இருப்பதே 6 மாசத்திற்கு முன்புதான் தெரியும்.//

நீங்களாச்சும் பரவாயில்லை நல்லதந்தி, ஆனந்த விகடன்ல இட்லி வடையை பத்தி எழுதியிருந்தாங்க, அத பாத்து உள்ள வந்த போது தான் இந்த மாதிரி ஒரு கும்பல் இருக்காங்கனு தெரிஞ்சுது.

//இந்த லட்சணத்தில் இந்தப் பதிவர் உலகம் பூரா தெரிந்த பதிவர் என்று பினாத்துவது ரொம்ப காமெடி.//

இந்தியா, இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர், நைஜிரியானு கோபால் பல்பொடி விக்கிறவர் மாதிரி :))

கிரி says:

நல்லதந்தி உங்கள் 50 வது பதிவிற்கு என் வாழ்த்துக்கள்

Krish says:

நீங்கதாங்கோ தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர்! இந்த திட்டத்தை கொண்டு வந்தா 'குடிமக்களின்' ஓட்டு எல்ல்லாம் ஒங்களுக்குத்தான்!

நல்லதந்தி says:

// கிரி said...
நல்லதந்தி உங்கள் 50 வது பதிவிற்கு என் வாழ்த்துக்கள்//

நன்றி கிரி!.வாழ்த்துச் சொன்ன நல்ல மனசிற்கு நன்றி!

நல்லதந்தி says:

//krish said...
நீங்கதாங்கோ தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர்! இந்த திட்டத்தை கொண்டு வந்தா 'குடிமக்களின்' ஓட்டு எல்ல்லாம் ஒங்களுக்குத்தான்!//
நாம் முதலமைச்சரா ஆனா எல்லொருக்கும் இலவச சரக்குதான்!.
இலவச டிவி,இலவச கேபிள்,இலவச அடுப்பு,இலவச கேஸ்,இலவச அரிசி,இலவச மளிகை சாமான்,இலவச சரக்கு மொத்தத்தில மக்கள் ஓட்டுப் போட மட்டும் வெளியே வந்தாப் போதும்(எனக்குப் போட) :))

Krish says:

/// மிடில்கிளாஸ் கேனயர்களை அடையாளம் காண ஒரு டஜன் வழிகள் ///

10. 50 கட்டுரை எழுதியதற்கு எல்லாம் புளகாங்கிதம் அடைந்து பதிவு போடுபவன்

11. அதற்கு உருகி உருகி பின்னூட்டம் இடுபவன் ////

இப்படிக்கு,
மிடில் கிளாஸ் கேனயன்

Shankar says:

உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. இது தான் எனது முதல் வருகை.
கலைஞரின் திட்டத்தை அம்பலப் படுத்தியதற்காக உங்களுக்கு “உளியின் ஓசை” 10 முறை இலவசமாக காண்பிக்கப் படும்.

--ஷங்கர்--

நல்லதந்தி says:

// shankar said...
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. இது தான் எனது முதல் வருகை.
கலைஞரின் திட்டத்தை அம்பலப் படுத்தியதற்காக உங்களுக்கு “உளியின் ஓசை” 10 முறை இலவசமாக காண்பிக்கப் படும்.//
சபாஷ்! சரியான தண்டணை,யாரங்கே ! நல்லதந்தியைத் தண்டிக்க சரியான வழங்க ஆலோசனை தந்த ஷங்கருக்கு பரிசாக அளிக்க,பாசப்பறவகள்,
பாசக்கிளிகள்,உட்பட நான் கதைவசனம் அனைத்து எழுதிய CD க்களின் தொகுப்பை கொண்டு வாருங்கள்!

Shankar says:

ஐயோ தந்தி சார்...நான் சாதா தண்டனை கொடுத்தால் , நீங்க எனக்கு ஆயுள் தண்டனை கொடுக்கிறீங்களே....உங்களுக்கு அவர விட்டு “கவிதை” எழுதச் சொன்னாத்தான் சரி. இதோ இப்போதே அவருக்கு ”தந்தி” அடிக்கிறேன் (!!)

--ஷங்கர்--

வால்பையன் says:

ஒரு அருமையான பதிவ இத்தன நாளா மிஸ் பண்ணிடனே

வால்பையன் says:

//வாந்தி எடுத்து விட்டால் துடைத்துக் கொள்ள 25X25 cm கைக்குட்டை//

இது தேவைப்படாதே! நமக்கெல்லாம் ரவுண்டு கட்டி அடித்தாலும் வாந்தி வராதே

வால்பையன் says:

//இந்தியாவின் ஜனத்தொகை குறைவாக இருப்பதற்கு தமிழன் என்ன செய்வான்?(லேசாக நமுட்டுச் சிரிப்புச் சிரித்தார்!)//

உண்மைதான் ஆளுக்கு நாலு பெற கட்டிக்கிட்டு பெத்து போட்டா தமிழன் ஜனத்தொகை நூறு கோடியாகும், ஆனால் அத்தனை பெண்கள் இல்லையே

வால்பையன் says:

//இந்தப் பதிவு நண்பர் வால்பையனுக்கு அர்ப்பணம்!..//

இதற்கு நான் பெருமை அடைகிறேன்

நல்லதந்தி says:

//வால்பையன் said...
ஒரு அருமையான பதிவ இத்தன நாளா மிஸ் பண்ணிடனே//
:((

Anonymous says:

சூப்பர்
பதிவு
இனிமேலாவது
புடவைக்காரன்
வலயல்கரன்
கிக்க்லூக்
ஆளுங்க எல்லாம் கொஞ்சம் அடக்கி வாசிக்கட்டும்

Anonymous says:

:)) innikkuththan patichean

menaka says:

குமட்டல் கற்பனை
கற்பனைக்கும் ஒரு அளவுள்ளது.. காழ்ப்பு அதிகமோ???

Anonymous says:

//menaka said...
குமட்டல் கற்பனை
கற்பனைக்கும் ஒரு அளவுள்ளது.. காழ்ப்பு அதிகமோ???//

அம்மணிக்கு பார் அனுபவம் அதிகமோ?

menaka says:

ஏனிந்த கேள்வி அனானி., கற்பனை மட்டுமே குமட்டல் என்று சொன்னேனே தவிர, பார் சம்பந்தப்பட்ட ஏதாவது தகவல் சொன்னேனா??? அப்புறம் ஏன் இந்த வக்கிரம் பிடித்த குயுக்தி பிடித்த கேள்வி..

நானும் இதற்கு வேறு விதமான பதில் அளித்திருக்கலாம்.. நாகரீகம் கருதிகேட்ட்கவில்லை..

உண்மையிலேயே, இது அனானியா ?? சங்தேகமாக உள்ளது

Madhusudhanan Ramanujam says:

எப்படிங்க இதெல்லாம்? அதுவா வற்றது தான் இல்ல....? சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. இன்னொரு பக்கம் அழுது அழுது கண்ணெல்லாம் வீங்கிப் போச்சு.... வேறென்ன... நம்ம மக்கள் நிலைய நினைச்சுத் தான்.