சிம்பு வலையில் சிக்க நினைக்கும் சின்ன மீன் ஸ்னேகா!

Posted on Sunday, September 14, 2008 by நல்லதந்தி
சிம்புவைப் பார்த்து எதற்கு வம்பு என்று ஓடும் நடிகைகளை விட, அவருடன் ஜோடி சேர்ந்து குத்தாட்டம் போட ஆசைப்படும் நடிகைகளே அதிகம்.சீனியர் நடிகைகள், தொடர், புது நடிகைகள் வரை பேட்டி கொடுக்கும்போது, தவறாமல் சிம்புவுடன் நடிக்க ஆசை என்று சொல்லி வைக்கிறார்கள்.

முன்பு ரம்யா கிருஷ்ணன், ஸ்னேகா, நிலா... இப்போது ஸ்னேகா உல்லால்.இவர் லக்கி என்ற இந்தி படத்தில், சல்மான்கான் ஜோடியாக நடித்துப் பிரபலமானவர். இவர், இப்போது என்னை தெரியுமா என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகம் ஆகிறார்.


பார்க்க கிட்டத்தட்ட ஐஸ்வர்யா ராயின் தங்கை போலத் தெரியும் ஸ்னேகா உல்லால், தனது தமிழ்ப் பிரவேசம் குறித்து கூறுகையில்,தமிழ்ப் படங்களில் நடிப்பது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தொடர்ந்து நிறைய படங்களில் நடிக்க விரும்புகிறேன்.

தமிழில் எனக்குப் பிடித்த நடிகர் சிம்புதான். காரணம் எனக்கு அறிமுகமான பிரபலமான தமிழ் கதாநாயகன் அவர்தான். அவருடன் நடிக்க ஆசைப்படுகிறேன்.இப்போது நான் நடிக்கும் என்னைத் தெரியுமா படத்திலேயே கூட மிகுந்த கஷ்டப்பட்டுத்தான் நடித்துள்ளேன். அவர்கள் நினைத்த மாதிரி காட்சி வரவேண்டும் என்பதற்காக என்னை டார்ச்சர் செய்துவிட்டார்கள்.என் பெயரோடு ஒட்டியுள்ள உல்லால் என்ற பெயர் எனது குடும்பப் பெயர். ஏற்கெனவே ஒரு ஸ்னேகா இருப்பதால், உல்லால் என்ற பெயரையும் சேர்த்துக் கொண்டேன் என்றார்.
நன்றி: தட்ஸ்தமிழ்

2 Responses to "சிம்பு வலையில் சிக்க நினைக்கும் சின்ன மீன் ஸ்னேகா!":

நல்லதந்தி says:

test

நல்லதந்தி says:

test :)