விஜயகான்?.இஃப்தார் அரசியலின் இம்சைகள் ஆரம்பம்!

Posted on Tuesday, September 30, 2008 by நல்லதந்தி
அரசியல் தலைவர்கள் இஃப்தார் விருந்து கொடுப்பது.விருந்துக்குச் செல்வது என்பது இராஜாஜி-காமராஜர்-அண்ணா போன்ற தலைவர்கள் காலத்தில் இருந்ததாகத் தெரியவில்லை.டெல்லி அரசியல்வாதிகள், பொதுவாக காங்கிரஸ்காரர்களால் முஸ்லீம்களின் ஓட்டுக்காக ஆரம்பித்து இருப்பார்கள் என்றே நினக்கிறேன்.

தமிழ்நாட்டில் இந்த மாதிரி ஒட்டுக்காக வித்தைக் காட்டத் தெரிந்தவரான கலைஞரால் தான் இம் மாதிரியான வியாதிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்க வேண்டும். எம்.ஜி.ஆர் கூட இந்த விளையாட்டைக் கை கொள்ளவில்லை. எனென்றால் அப்போது முஸ்லீம்களின் ஓட்டுக்கள் முழுமையாக அவருக்கே விழுந்து கொண்டிருந்தது.மேலும் அரசியலில் அவர் மதத்தை கலக்க நினைத்ததில்லை.

இப்போது என்ன நடக்கிறது.இரம்ஜானுக்காக முஸ்லீம்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்களோ இல்லையோ?.இந்த சீசனுக்கு ஓட்டு பொறுக்க இந்த அரசியல் வாதிகள் ரம்ஜானை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

அவர்கள் தத்தம் கட்சிகளில் உள்ள முஸ்லீம் அடிப்பொடிகளுக்கு சமிக்ஞை கொடுத்து விட்டால் போதும் உடனே அரசியல் இஃப்தார் விழாக்கள் ஆரம்பமாகிவிடும்.

கலைஞருடன் ஸ்டாலினும் இன்ன பிற அமைச்சர்களும் பல் வேறு விழாக்களில் பங்கெடுக்க ரம்ஜான் நோன்பு களைக் கட்டத்துவங்கிவிடும்.
ஒரு பக்கம் கலைஞர் முஸ்லீம்களுக்கு தன் வழக்கமான குல்லா போட (!) மறு பக்கம் அவர்கள் அவருக்கு குல்லா போட ,அந்த போட்டோக்கள் அடுத்த நாள் பத்திரிக்கைகளில் பிரசுரமாக அமர்களமாக ஆரம்பமாகி விடும் ஓட்டு பொறுக்கும் அரசியல். மற்றத் தலைவர்களாவது விருந்துக்குப் போனோமா,நோன்புக் கஞ்சி குடிக்கிற போஸ் கொடுத்தோமா,விருந்து சாப்பிட்டோமா?.என்று வீடு திரும்பி விடுவார்கள்.

நம் கலைஞர் அப்படி ஒரு சாதாரணத்தலைவரா?.அங்குப் போய் உட்கார்ந்தவுடன் தான் தமது இந்து மதப் பகுத்தறிவு ஞாபகத்துக்கு வரும்.நான்கு வார்த்தை இந்துக் கடவுள் களைத் திட்டினால் தமக்கு நான்கு ஓட்டு சேர்த்து வருமே!.என்ற எண்ணம் வரும் உடனே அருகில் உள்ள முஸ்லீம் அன்பர்கள் முகம் சுளித்தாலும் இந்துக் கடவுளை ஏளனம் செய்து அர்ச்சகர் கலைஞர் ஒரு லட்சார்ச்சனை செய்வார். சபரிமலைக்கு விரதம் இருந்து செல்வதைக் கிண்டல் செய்யும் வாயால் ,ரம்ஜான் மாதத்திற்க்கு ஒரு மாதம் நோன்பிருப்பதை வாயாரப் புகழ்வார். கிருத்திகை,அமாவசைப் போன்ற நாட்களில் உபவாசம் இருப்பதை கிண்டல் செய்யும் வாயால் நோன்பால் ஏற்படும் உடல் நன்மைகளை முஸ்லீம் அன்பர்களுக்கே விளக்குவார்.தீடீரென ஆவேசம் வந்து விட்டால் தானும் ஒரு முஸ்லீம் தான் என்றுப் பார்ப்பவர்கள் பதறும் அளவிற்க்கு குண்டை வீசுவார்.

மறுபக்கம் முன்னால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் தம் பங்கிற்க்கு ரம்ஜான் நோன்பு ஓட்டுக்களுக்கு முடிந்தவரை அடிபோடுவார்.என்ன, செல்வி ஜெயலலிதா தமக்குத்தான் முக்காடு போட்டுக் கொள்வாரேத் தவிர மற்றவர்களுக்குப் போடமாட்டார்.

அப்புறம் வைகோ,ராமதாஸ் போன்றவர்களும் தத்தமது ரம்ஜான் கடமையைச் செவ்வனே செய்வார்கள்.பின்னே செய்யாமல் இருந்தால் ஓட்டுப் போய்விடாதா?

இப்போது புதுத் தலைவர்களான,விஜயகாந்த்,சரத்குமார்,கார்த்திக்(!),தமது கடமையை ஆற்றத் துவங்கியிருப்பார்கள்.

நேற்று விஜயகாந்த் அதிரடியாக தனது பெயரை ”விஜயகான்” என்று மாற்றி தமிழக அரசியலில் ஒரு புதுத்திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.பாழாய்ப் போன ஓட்டு என்ன பாடுபடுத்துகிறது பாருங்கள்!.

அடுத்து கலைஞரை நினைத்தால் இன்னும் பயமாய் இருக்கிறது.”விஜயகானா”ல் நாலைந்து முஸ்லீம் ஓட்டு தன்னை விட்டுப் போய்விடக்கூடாது என்பதற்க்காக மதம் மாறிவிட்டேன் என்று அறிக்கையை விரைவில் அவரிடமிருந்து வந்தாலும் வரலாம்?

இதெல்லாம் ஓட்டுக்காகத்தான் என்று குழந்தைக்குக் கூடத் தெரியும்.ஒரு வேளை முஸ்லீம்கள் தங்களது ஓட்டுக்கள் எல்லாம் அனைத்து தொகுதிகளிலும் முஸ்லீம் லீக்கட்சிக்கு மட்டும்தான், அந்தக் கட்சியும் எந்தக் கட்சியுடனும் கூட்டு சேரக்கூடாது,என்று அறிவித்துப் பார்க்கட்டும்.அப்போது தெரியும்! இந்த இஃப்தார் விருந்து வேடிக்கைகள் எல்லாம்!.

27 Responses to "விஜயகான்?.இஃப்தார் அரசியலின் இம்சைகள் ஆரம்பம்!":

Mãstän says:

/
தீடீரென ஆவேசம் வந்து விட்டால் தானும் ஒரு முஸ்லீம் தான் என்றுப் பார்ப்பவர்கள் பதறும் அளவிற்க்கு குண்டை வீசுவார்


அடுத்து கலைஞரை நினைத்தால் இன்னும் பயமாய் இருக்கிறது.”விஜயகானா”ல் நாலைந்து முஸ்லீம் ஓட்டு தன்னை விட்டுப் போய்விடக்கூடாது என்பதற்க்காக மதம் மாறிவிட்டேன் என்று அறிக்கையை விரைவில் அவரிடமிருந்து வந்தாலும் வரலாம்?
/

:)

ha ha ha

ஜுர்கேன் க்ருகேர் says:

கிறிஸ்துமஸ் வந்ததும் குல்லாவை தூக்கிட்டு சிலுவையை மாட்டி, விஜய் கானை
விஜய் ஜோசப்-ஆ மாத்துவார். பொங்கலுக்கு மறுபடியும் பழைய விஜய் காந்தா மாறிடுவார்.

சீசனுக்கு சீசன் பெயரை மாத்தும் வித்தைய ஆரம்பிச்சு வச்ச விஜய் கானுக்கு ஓஓ !!

Anonymous says:

//ஒரு பக்கம் கலைஞர் முஸ்லீம்களுக்கு தன் வழக்கமான குல்லா போட (!) மறு பக்கம் அவர்கள் அவருக்கு குல்லா போட//

SUPER :))

Anonymous says:

:)):);));)

மணிகண்டன் says:

:)-

நல்லதந்தி says:

வாங்க மஸ்தான்! :)

நல்லதந்தி says:

//ஜுர்கேன் க்ருகேர் said...
கிறிஸ்துமஸ் வந்ததும் குல்லாவை தூக்கிட்டு சிலுவையை மாட்டி, விஜய் கானை
விஜய் ஜோசப்-ஆ மாத்துவார். பொங்கலுக்கு மறுபடியும் பழைய விஜய் காந்தா மாறிடுவார்.//

நல்லவேளை இங்கே சீக்கியர்களின் ஓட்டு இல்லை.இருந்து இருந்தால்,அவர்களின் பண்டிகைக்கு போகும்,நம்ம அரசியல் தலைகள் டர்பனை கட்டிக்கிட்டு தாடியை வச்சிக்கிட்டு போறதை எண்ணிப்பாருங்கள்!.அதுவும் கலைஞரை அந்தக் கோலத்தில் நினைத்தாலே ஏ..அப்பா!..குலை நடுங்குகிறது! :))

Anonymous says:

Nethi Adi! Namba tamizh nattu jananga thirundhu vanungannu nenaikreenga??? No Chance! Indha Arasial & Cinema Naadhaarigal irrukkum varai, tamizh nadu urupadavaey urupadaadhu.

Anonymous says:

/இந்த சீசனுக்கு ஓட்டு பொறுக்க இந்த அரசியல் வாதிகள் ரம்ஜானை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்./
ஆனால் பட்டினி மட்டும் இருக்க மாட்டார்கள்

பதற்றமடைபவன் says:

//தீடீரென ஆவேசம் வந்து விட்டால் தானும் ஒரு முஸ்லீம் தான் என்றுப் பார்ப்பவர்கள் பதறும் அளவிற்க்கு குண்டை வீசுவார்//

:)) :))

Anonymous says:

:));)

Anonymous says:

தீடீரென ஆவேசம் வந்து விட்டால் தானும் ஒரு முஸ்லீம் தான் என்றுப் பார்ப்பவர்கள் பதறும் அளவிற்க்கு குண்டை வீசுவார்//


:))

ச்சின்னப் பையன் says:

மார்கழி மாசத்து விடியற்காலையிலே, இந்த அரசியல்வாதிங்க எல்லோரும் பார்த்தசாரதி கோயில் பொங்கலுக்காக வேட்டி கட்டிக்கிட்டு வருவாங்களா?.....

நல்லதந்தி says:

வாங்க சின்னப்பையன் உங்க வீட்டுக்கு வந்துட்டீங்க போல இருக்கு! :)

Shankar says:

உங்கள் பதிவிலிருந்து ஒன்று தெரிகிறது. இளிச்சவாய் மதம் -- இந்து மதம். அதனால் தான் கண்ட நாய்கள் எல்லாம் குரைத்து விட்டு போகிறது.

வால்பையன் says:

//விருந்துக்குச் செல்வது என்பது இராஜாஜி-காமராஜர்-அண்ணா போன்ற தலைவர்கள் காலத்தில் இருந்ததாகத் தெரியவில்லை.//

அவர்களுக்கு ஓட்டு பிட்சை எடுக்க வேண்டிய நிலை இருந்திருக்காது

வால்பையன் says:

//சபரிமலைக்கு விரதம் இருந்து செல்வதைக் கிண்டல் செய்யும் வாயால் ,ரம்ஜான் மாதத்திற்க்கு ஒரு மாதம் நோன்பிருப்பதை வாயாரப் புகழ்வார்.//

இதனால் இந்துக்களின் ஓட்டு கிடைக்காமல் போகுமே!

வால்பையன் says:

நல்ல பதிவு,

ஆனால் முதல்வர் கருணாநிதி, இந்து மக்களை சாடுவதை தான் முரண்பாடாக பார்க்கிறேன், கடவுள் மறுப்பாளர் எல்லா கடவுளக்குமே அல்லவா மறுப்பாளராக இருக்க வேண்டும், ரம்ஜானுக்கு இங்கே குல்லா போடுவதும், கிரிஸ்துமஸ்ஸுக்கு அங்கே வாழ்த்து சொல்வதும் ஓட்டுக்காக என்றாலும் இந்துக்களின் ஓட்டுகளை பெறுவதற்கு என்ன செய்கிறார் என்று கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்.

நல்லதந்தி says:

// SHANKAR
October 1, 2008 10:14 AM
உங்கள் பதிவிலிருந்து ஒன்று தெரிகிறது. இளிச்சவாய் மதம் -- இந்து மதம். அதனால் தான் கண்ட நாய்கள் எல்லாம் குரைத்து விட்டு போகிறது.//
:))

நல்லதந்தி says:

//இதனால் இந்துக்களின் ஓட்டு கிடைக்காமல் போகுமே!//
ரொம்பப் பாவங்க நீங்க எவ்வளவு திட்டினாலும் ரோஷம் வராத ஜென்மங்க இந்துக்கள்ன்னு அவங்களுக்கு இத்தனை வருஷ அரசியல் சர்வீஸில் தெரியாதா?.

நல்லதந்தி says:

//நல்ல பதிவு,

ஆனால் முதல்வர் கருணாநிதி, இந்து மக்களை சாடுவதை தான் முரண்பாடாக பார்க்கிறேன், கடவுள் மறுப்பாளர் எல்லா கடவுளக்குமே அல்லவா மறுப்பாளராக இருக்க வேண்டும், ரம்ஜானுக்கு இங்கே குல்லா போடுவதும், கிரிஸ்துமஸ்ஸுக்கு அங்கே வாழ்த்து சொல்வதும் ஓட்டுக்காக என்றாலும் இந்துக்களின் ஓட்டுகளை பெறுவதற்கு என்ன செய்கிறார் என்று கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்.//
மேலே சொன்ன பதில் தான் இதுக்கும்!

நல்லதந்தி says:

அப்புறம் பகுத்தறிவுங்குற பேரில் ஜாதி வெறியை வளர்க்கணும்,ஜாதியை அழிக்கிறோமன்னு சொல்லிட்டு எந்த ஜாதியையும் அழியவுடம பாத்துக்கணும்! :))

அல்லா பிச்சை says:

அண்ணாச்சி,
கலைஞர் இஃப்தார் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டு - குல்லா அணிவிக்கப்பட்டு - நோன்புக்கஞ்சி கொடுக்கப்படுவதால் குடிக்கிறார்..
அதுக்கு ஏன் இப்படி குதிக்கிறீங்க..

நீங்க வேண்டுமானால், இராம் கோபலனை விட்டு, புள்ளையார் சதுர்த்திக்கு அழைக்கச்செய்து - பூநூல் அணிவித்து - கொழுக்கட்டை கொடுத்துப்பாருங்களேன்..

siva sinnapodi says:

http://sivasinnapodi1955.blogspot.com/

Anonymous says:

//அல்லா பிச்சை
October 1, 2008 1:44 PM
அண்ணாச்சி,
கலைஞர் இஃப்தார் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டு - குல்லா அணிவிக்கப்பட்டு - நோன்புக்கஞ்சி கொடுக்கப்படுவதால் குடிக்கிறார்..
அதுக்கு ஏன் இப்படி குதிக்கிறீங்க..

நீங்க வேண்டுமானால், இராம் கோபலனை விட்டு, புள்ளையார் சதுர்த்திக்கு அழைக்கச்செய்து - பூநூல் அணிவித்து - கொழுக்கட்டை கொடுத்துப்பாருங்களேன்..//

செஞ்சிடலாம்.அங்க வந்து அவர் இந்துக்களின் ஓட்டுக்காக நபிகள் பெருமானையும்,ஏசு பிரானையும் திட்டுவாரா?.டங்குவார அறுத்திட மாட்டீங்க. :))

Anonymous says:

//அங்க வந்து அவர் இந்துக்களின் ஓட்டுக்காக நபிகள் பெருமானையும்,ஏசு பிரானையும் திட்டுவாரா?//

இப்போ மட்டும் இராமகோபாலன் என்ன பண்ணிட்டு இருக்கார் அதை தானே செய்துட்டு இருக்கார். ஆனா இன்னும் டங்குவாரோட தான் சுத்திண்டு இருக்கார்

அல்லா பிச்சை says:

செஞ்சிடலாம்.அங்க வந்து அவர் இந்துக்களின் ஓட்டுக்காக நபிகள் பெருமானையும்,ஏசு பிரானையும் திட்டுவாரா?.டங்குவார அறுத்திட மாட்டீங்க. -நல்ல தந்தி

’வார்’ போடாதவங்களுக்கு மேடையிலேயே இடம் தர மாட்டீங்களே..கொழுக்கட்டையா தரப்போறீங்க.. :))