1980-ல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!(மீண்டு ஜெயித்த கதை)

Posted on Tuesday, September 9, 2008 by நல்லதந்தி


படம் வெற்றி பெற்றால் தலையில் தூக்கிக் கொண்டாடுவதும் தோல்வியடைந்தால் காலில் போட்டு மிதிப்பது வழக்கம்தான் என்றாலும் ரஜினி விஷயத்தில் குசேலன் தோல்வியைத் திருவிழா அளவிற்க்கு பத்திரிக்கைகள் கொண்டாடி வருகின்றன.அவர் நின்றாலும் செய்தி படுத்தாலும் செய்தி என்பதால் எதையாவது பரபரப்பாக தகவல்களையும் சர்வேக்களையும் வெளியிட்டு காசு அள்ளிவருகின்றன.ஆனால் இவையெல்லாம் அவருடைய புகழை இம்மிகூட மங்கச் செய்யாது என்பது உறுதி.

ரஜினியைப் பொறுத்தவரை தன் வாழ்கையின் மிக மோசமான காலகட்டத்தில்தான் சூப்பஸ்டாராக ஆனார். அந்த விஷயத்தை சொல்கிறது இந்தக் கட்டுரை.ஆனாப்பட்ட எம்.ஜி.ஆரே 20 ஆண்டு காலம்தான் சூப்பர்ஸ்டாராக தமிழ் திரையுலகில் மின்னினார்.ஆனால் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 30 வருடங்களாக தமிழ் திரையுலகில்,மட்டுமல்ல தென்னிந்தியத்
திரையுலகம் முழுவதும் சூப்பர்ஸ்டாராக கோலோச்சிக் கொண்டிருக்கிறார்.இந்த பழைய கட்டுரை மூலமாக சூப்பர்ஸ்டார், அந்தகாலத்திலேயும் அவர் எப்படிப் பட்ட புகழுடன் விளங்கினார் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரியும்.மற்ற சக நடிகர்களைவிடப் பல படிகள் மேலிருந்தார் என்பதும் தெரியும்.


விரைவில் புகழ்பெறுபவர்கள் விரைவிலேயே இருக்கும் இடம் தெரியாமல் போவார்கள் என்று ஒரு கருத்து இருந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன் ரஜினி காந்தின் வாழ்க்கை இப்படித்தான் ஆகிவிட்டதோ என்றுகூட எண்ணும் படியாகிவிட்டிருந்தது.

பிலிம் இன்ஸ்டிடியூட்ட்டில் இரண்டாண்டு காலம் பயிற்சி பெற்று,டைரக்டர் பாலச்சந்தரின் முயற்சியால் மாபெரும் நட்சத்திரமாகி விட்ட ரஜினிகாந்த் தீடீரென வெறி பிடித்தவரைப் போல் விமான நிலையங்களிலும்,ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றிலும்,சபையர் தியேட்டரிலும் கண்மூடித்தனமாக நடந்து கொண்ட போது,ரஜினி தொலைந்தார் என்றே பலர் எண்ணினார்கள். 'இவரை நம்பி இனி எந்தப் புரொடியூஸர் படம் எடுப்பார்?' என்று பேசிக்கொண்டார்கள்.இவருக்கு புக் ஆன படங்கள் பல, மடமடவென்று இரத்தாகிவிட்டதாகவும் வதந்திகள் வந்த்தன. இவர் புகழைக் கெடுக்கப் பெரிய நடிகர்கள் சிலரே முயற்சிகள் எடுத்துக் கொண்டதாகவும் சிலர் பேசிக்கொண்டனர்.ஆனால்.....

இவர் மனநோய் சிகிச்சை பெற்ற பிறகு,சிறிது கால ஓய்வுக்குப் பின் தர்மயுத்தம் என்ற படத்தில் நடித்து முடித்ததும்,அந்தப் படத்தின் வெற்றியால் மீண்டும் பழைய புகழுக்கு மேல் செல்வாக்கைப் பெற்றார்.இவர் நடித்த படங்கள் பூஜை போட்ட அன்றே விற்றுவிட்டன.எம்.ஜி.ஆர். படங்களுக்கு என்ன விலை கொடுத்தார்களோ அதே விலையை இவர் படங்களுக்குக் கொடுத்தார்கள்;கொடுத்து வருகிறார்கள் என்று பேசப்படுகிறது.

ரஜினியும் கமலும் படவுலகில் சரிசமமாகப் போய்க் கொண்டிருந்த போது, ரஜினியின் புகழ் திடீரென்று பாதிக்கப் பட்டதால்,கமலின் கை ஓங்கி நின்றது. ஆனால் இப்போது கமலின் செல்வாக்குக் குறைந்து விட்டது.ரஜினியின் செல்வாக்கு மிக மிக உயர்ந்து வருகின்றது.'முள்ளும் மலரும்',6 லிருந்து 60 வரை','அன்னை ஓர் ஆலயம்','பில்லா', ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்

ஆகி விட்டதாலும், ரஜினியிடம், அவர் ஸ்டைல் மட்டுமல்ல,பவர் புல் ஆக்டிங்கும் இருக்கிறது என்பது தெளிவாகி விட்டதால்,புதிய வார்ப்புப் படங்கள் பல புதிய நட்சத்திரங்களைக் கொண்டு வெற்றிகரமாக வெளிவந்து கொண்டு இருக்கும் இந்த நேரத்திலும் இவர் புகழ் கொடிகட்டிப் பறக்கிறது.' 'ரஜினி ஒரு படத்துக்கு ஐந்து லட்ச ரூபாய்க்கு மேல் வாங்குகிறாராம்!.' இது ஒரு ரெக்கார்ட்' என்கிறார் சினிமா உலகில் தொடர்பு கொண்ட ஒருவர்.

நடிப்பில் தந்தை என்று சிவாஜி கணேசனைச் சொல்லலாம்.இதை யாரும் மறுக்க முடியாது. அப்படிப் பட்ட சிவாஜிகணேசனுடன் ரஜினி நான் வாழவைப்பேன் என்ற படத்தில் நடித்து சிவாஜியை விட ரஜினியின் நடிப்புத்தான் தலைதூக்குகிறது என்ற பெயரை சம்பாதித்து விட்டார்.

ரஜினிகாந்தின் உண்மையான பெயர் சிவாஜிராவ்.பெங்களூரில் படித்து வளர்ந்தவர்.நடுத்தரக் குடும்பத்தில் கடைசிப் பிள்ளையாகப்பிறந்தவர்.கடைசிப் பையன் என்பதால் இவர் குடும்பத்தினர் இவரிடம் அளவுக்கு மேல் அன்பு வைத்து இருந்தனர். இவருடைய தாய் இவருக்கு ஏழு வயதான போது இறந்து விட்டார்.இவருடைய சகோதரர்தான் இவரைப் படிக்க வைத்து முன்னுக்குக் கொண்டுவர பெரு முயற்சி செய்தார்.சுவாமி ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் இவரை இவர் சகோதரர் சேர்த்து படிக்க வைத்தார்.ரஜினி ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் படித்த போது தான் ஆஸ்திகனாகிவிட்டதாகக் கூறுகிறார்.எப்படி என்று விளக்கம் கூறவில்லை..

பள்ளியில் படித்தபோதும்,கல்லூரியில் படித்தபோதும் இவர்தான் முதல் மார்க் வாங்குவார்.படிப்பில் அவ்வளவூ கெட்டிக்காரர் ஆனாலும் ஏதோ ஒரு சங்கடம் இவரைத் துன்புறுத்தியது.வேகமாக முன்னுக்கு வர எண்ணினார். இதன் விளைவாக யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்து இருநூறு ரூபாய் திருடிக்கொண்டு சென்னைக்கு ஓடி வந்து விட்டார்.நான்கைந்து நாட்களில் பணம் காலியாகிவிட்டது.எல்.ஐ.ஸி கட்டிடத்தின் முன்,பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த போது இவ்ரை சந்தேகப் பட்டு போலீசார் பிடித்துப் போய்விட்டார்கள்..ஆனால் காலையில் விட்டுவிட்டார்கள்.கையில் பணமில்லாததால் திருட்டு ரயில் ஏறி பெங்களூருக்கே திரும்பிவிட்டார்.

அதன் பிறகு,இவர் தன் சகோதரர் அனுமதியுடன் சென்னைக்கு வந்து பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து பயிற்சி பெற்றார்.நடிப்புக் கல்லூரியில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தபோது பெரும்பாலும் உட்லாண்ட்ஸ் ட்ரைவின் ரெஸ்டாரண்ட்,யூ.எஸ்.ஐ.எஸ்,ப்ளூ டைமண்ட்,பிரிட்டிஷ் கவுன்ஸில்,சோவியத்
கல்சர் மண்டபம்----இப்படிச் சுற்றிக் கொண்டிருப்பாராம் நண்பர்களுடன்.நடிப்பு
கல்லூரியில் பயிற்சி பெற்ற போதிலும் எதிர்காலம்ஒரு பெரிய சுவரைப் போல் தோன்றியிருக்கிறது.

பெங்களூரில் இருந்து வருவதற்குமுன் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஒர்க் ஷாப்பில் வேலை செய்தார்.தச்சுப் பட்டறையில் வேலை செய்தார். ஆப்ஸில் ப்யூன் வேலை செய்தார்.மூட்டைத் தூக்கும் கூலி வேலை செய்தார். கடைசியாக இவர் உயர்வு பெற்றுக் கண்டக்டர் வேலை பார்த்து வந்தார். 'மாடு மாதிரி வாழ்ந்து கஷ்டப்பட்டேன். எதுக்கு?.. சோற்றுக்கு!..வயிற்றுக்கு!!' என்கிறார் இப்போதும்.

இவர் வாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தைக் கொடுத்தவர் டைரக்டர் பாலசந்தர்.'அபூர்வராகங்கள்' என்ற படத்தில்தான் இவருக்கு சான்ஸ் கொடுத்தார்.சிறிய காரெக்டர்தான் என்றாலும்.,இவர் தோன்றிய நான்கைந்து காட்சிகளில் இரசிகர்களின் மனதைப்பெரிதும் கவர்ந்து விட்டார்.தொடர்ந்து 'மூன்று முடிச்சு' இவருக்க்குப் புகழைக் கொடுத்தது.இரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டுவிட்டார்.'16 வயதினிலே' மூலம் மேலும் புகழைத் தேடிக் கொண்டார்.

புதிதாக இவர் பங்களா கட்டிய போது,அதில் பெரிய அளவில் பாலசந்தரின் புகைப் படத்தை ஹாலில் மாட்டியிருந்தாராம்.இதை கண்டு பாலச்சந்தரே உணர்ச்சி வசப்பட்டுப் போனார்.ஆனால் கொஞ்ச நாட்களிலேயே ரஜினி அந்தப் படத்தைத் தன் கையாலேயே உடைத்து விட்டதாக பாலச்சந்தருக்கு செய்தி எட்டியபோது,அவரால் அதை நம்ப முடியவில்லை.

ஆனால் அடுத்த நாளே ரஜினி பாலச்சந்தரின் வீட்டுக்கு வந்து, ''சார், உங்க படத்தை இந்தக் கையால் உடைத்தேன்!.ஏன் சார் சாதாரண சிவாஜியை ரஜினிகாந்த் ஆக்கினீர்கள்?..ஜனங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.என்னையும் ஜனங்களால் புரிந்து கொள்ள முடிய வில்லை.. புகழ் போதையைத் தாங்கக் கூடிய சக்தி எனக்கில்லை'' என்றுத் தேம்பித்தேம்பி அழுதாராம்.

தீடீரென்று பெரும் பணமும் புகழும் வந்ததும் இவருக்குத் தலைகால் புரியவில்லை.இவரைப் புரிந்து கொள்ளாமல் தலைக்கனம் ஏறிவிட்டதாகப் பலர் பேசிக்கொண்டார்கள்.இடைவிடாத படப் பிடிப்பினால் இவர் மன நிலை ஓய்வு இல்லாமல் பாதிக்கப்பட்டது.வெறி பிடித்தவர் போல் ஆகிவிட்டார். இவருக்கு யோசனை சொல்லவோ,கால்ஷீட்டுக்களை வகுத்துக் கொடுக்கவோ சரியான காரியதரிசி இல்லை.இதனால் இவர் பெரிதும் பாதிக்கப் பட்டார்.

'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் நடித்த போது, ஒரு நாள் பாலச்சந்தரிடம் வந்து, 'என்னால் கான்ஸண்ட்ரேட் பண்ண முடியவில்லை. தலையில் யாரோ சம்மட்டியால் அடிப்பது போல் இருக்கிறது' என்றார்.இவரைப் புரிந்து கொண்டு இவரை மனநோய் நிபுணரிடம் கொண்டு போனவர் பாலச்சந்தர்தான்.

நடிகர்கள் சங்கத்தின் காரியதரிசியாகப் பணிபுரியும் மேஜர் சுந்தர்ராஜனும் ரஜினிக்கு யோசனைகள் கூறி,நேரப்படி அளவுடன் நடிக்க வேண்ட்டும் என்றும் ஓய்வு தேவை என்பதையும் விளக்கிக் கூறி,உதவிகள் செய்தார்.

இப்போதெல்லாம் ரஜினி அளவுடன் நேரப்படி நடிக்கிறார்.தேவையான அளவு ஓய்வு பெறுகிறார்.இவருடைய மார்கெட் மிகவும் ஸ்டெடியாக முன்னேறி வருகிறது.பிரச்சனைகள் இல்லை.

அரசியல் பின்னணி இல்லாமல் சினிமா உலகில் இவர் புகழ் பெற்று விளங்குகிறார்.சிகரெட்டைத் தூக்கிப்போட்டு வாயில் பிடிப்பதும்,ஸ்டைலாக சண்டைப் போடுவதும்,குணச்சித்திர நடிகரைப் போல் வாய்ப்பு வரும் போது நடிப்பதும் எல்லோரையும் கவர்ந்து விட்டது.பெரும் பாலும் மாணவ மாணவிகள் இவர்ப் படங்களைப் பார்க்க கூட்டம் கூட்டமாய்ப் படையெடுக்கிறார்கள்.ரஜினி இன்று ஒரு பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட். எம்.ஜி.ஆர். பல ஆண்டுகளில் பெற்ற புகழை,இவர் ஒரு சில ஆண்டுகளில் பெற்றுவிட முடியும் என பலர் நம்புகின்றனர்.

ரஜினி அளவுடன் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டு ஸ்டெடியாக இருந்தால் நல்ல எதிர்காலம் இவருக்கு காத்திருக்கிறது.

1980-ன் ஆரம்பத்தில் கல்கண்டில் வெளிவந்த தலையங்கம்!

13 Responses to "1980-ல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!(மீண்டு ஜெயித்த கதை)":

வால்பையன் says:

ரொம்ப லேட்
மக்கள் குசேலனை விட்டு ரோபோ பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு!

ரஜினியின் மனவியாதிக்கு காரணம் இடைவிடாத உழைப்பு அல்ல!
நேரம் காலம் பார்க்காத குடி.

பாலசந்தர் படத்துக்கே குடித்துவிட்டு வந்திருந்தார் என்று கூட தகவகள் உண்டு.

நீங்கள் சொல்வதில் ஒரு விஷயத்தை மட்டும் ஒத்து கொள்கிறேன்.
ரஜினியின் புகழ் என்றும் மங்காது


முட்டாள் ஜனங்கள் உள்ளவரை!

Anonymous says:

//முட்டாள் ஜனங்கள் உள்ளவரை!//

முட்டாள் ஜனங்கள் என்று ஏன் கூறுகிறீர்கள். ஜனங்கள் முட்டாள்களாக இருந்தால் குசேலன் வெற்றிகரமாக ஓடியிருக்கும். ரஜினி தமிழகத்தின் பொழுதுபோக்கு. மற்றவர்கள் கொடுக்க முடியாத பொழுதுபோக்கினை அவர் அளிக்கிறார். இப்பொழுதும் அவர் படங்கள் குடும்பத்துடன் தமிழர்களால் ரசியக்க படுகின்றன. இவ்வாறு மக்களை ரசிக்க வைப்பது சாதரண விஷயம் அல்ல. அது ஒரு வரம் என்றே கருதுகிறேன். ரஜினி படங்கள் வெள்ளி விழா காண்பது அவரது வெறி பிடித்த ரசிகர்கள் கூட்டத்தால் அல்ல. அவரை ரசிக்கும் தமிழ் குடும்பங்களால் தான்

நல்லதந்தி says:

//ரொம்ப லேட்
மக்கள் குசேலனை விட்டு ரோபோ பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு!//
இந்தப் பதிவு குசேலனுக்காக இல்லை!.சர்வே என்கிற போர்வையில் விஷத்தைக் கக்கிய ஜூ.வி.க்காக!

நல்லதந்தி says:

//இப்பொழுதும் அவர் படங்கள் குடும்பத்துடன் தமிழர்களால் ரசியக்க படுகின்றன. இவ்வாறு மக்களை ரசிக்க வைப்பது சாதரண விஷயம் அல்ல. அது ஒரு வரம் என்றே கருதுகிறேன். ரஜினி படங்கள் வெள்ளி விழா காண்பது அவரது வெறி பிடித்த ரசிகர்கள் கூட்டத்தால் அல்ல. அவரை ரசிக்கும் தமிழ் குடும்பங்களால் தான்//

சத்தியமான வார்தை! :)

Unknown says:

Agmark suthamana poi seithi punaindhadarkku evalo panam vaangineenga?

நல்லதந்தி says:

// K
Agmark suthamana poi seithi punaindhadarkku evalo panam vaangineenga?//
இதில் எது பொய் செய்தின்னு சொல்றீங்கன்னு தெரியல்லை :) அப்புறம் கொஞ்சம் காதைக் கொண்டாங்க....எங்கே பணம் கொடுக்கிறாங்க?.ரகசியமாய் சொல்லுங்கள்! :)

Anonymous says:

Repeat:

SIVAJI THE BOSS!
KUSELAN THE KUBERAN!!
SULTAN THE WARRIOR!!!
YENDIRAN THE ROBO!!!!
RAJINI THE LIONKING!!!!
RAJINI THE HUMAN!!!!!!
THE NAME IS RAJINIKANT!!!!!!
Winning or loosing A LION IS ALWAYS A LION! The LION WILL ROAR MUCH MORE FERROCIOUS THAN EVER BEFORE!!!! OUR SINCERE THANKS TO MR.RAJINIKANT FOR GIVING US A CLEAN FAMILY ENTERTAINMENT FOR 30 YEARS... A RAJINIKANT MOVIE IS WORTH EVERY SINGLE PENNY/PAISE AND EVERY SECOND... MR.RAJINIKANT IS THE BEST FAMILY ENTERTAINER IN INDIA! WELCOME TO 2008!!!! IGNORE/DONT GIVE A DAMN ABOUT THOSE WHO LIVE IN STONE AGE! ---------- WHAT IS RAJINI MAGIC???----------- Ever since 15 August 1947, the people were divided in the name of RELIGION, LANGUAGE, CASTE, ECONOMIC STATUS, EDUCATION, YOU NAME IT by the EVIL PEOPLE for their own good------CAN ANY ONE SHOW ONE PERSON IN INDIA ( Other than our DEAREST uncle DR ABDUL KALAM who inspired every single Indian but we must remember there were evil souls who criticized our Uncle kalam himself. I am not comparing Uncle Kalam with Rajinikant AT ALL)--------In todays world THE EVIL SATANS ARE DIVIDING PEOPLE WITH EVERY IMMAGINARY REASON POSSIBLE!! LOOK AT MR.RAJINI. **** THIS IS WHAT RAJINI MAGIC MEANS **** MR.RAJINIKANT CAN MAKE THE INDIANS AND PEOPLE FROM OTHER COUNTRIES AS WELL TO FORGET ALL THE DIFFERENCES AND SIT TOGETHER IN ONE PLACE ATLEAST FOR 3 HOURS!!!! THIS IS SOMETHING NO OTHER INDIAN CAN DO IN MY OPINION AND THATS THE DEFINITION OF RAJINI MAGIC! AND I AM PROUD OF BEING A RAJINI FAN WHO IS A UNITING FACTOR... I DONT CARE ABOUT THE MONEY INVOLVED, HYPE, WHATEVER IT IS... MR.RAJINIKANT IS A LAW ABIDING CITIZEN WHO PAYS HIS TAXES PROMPTLY, NEVER HURTS , NEVER CHEATS, NEVER LIES, NEVER BULLSHITS FOR HIS OWN BENFFITS,A CLEAN FAMILY ENTERTAINER A KING IN HIS PROFESSION. ......WELCOME TO 2008 AND GET READY FOR 2009!!!! OTHERS BE WHERE YOU ARE (STONE AGE)!! I AM PROUD OF BEING A RAJINI FAN WHO IS A UNITING FACTOR...

நல்லதந்தி says:

அடேங்கப்பா! =)

Anonymous says:

//அடேங்கப்பா! =)/

புரியலயுன்னா இப்படியெல்லாம் சமாளிக்க கூடாது

அப்பாட உங்க பதிவுலையும் பின்னூட்டம் போட்டாச்சு

நல்லதந்தி says:

கொம்பன்
September 9, 2008 10:52 PM


//அடேங்கப்பா! =)/

புரியலயுன்னா இப்படியெல்லாம் சமாளிக்க கூடாது

அப்பாட உங்க பதிவுலையும் பின்னூட்டம் போட்டாச்சு//

ஹய்யா...கொம்பன் அண்ணாச்சி வந்துட்டாரு! :)) ;) :d

Anonymous says:

These sort of interesting articles are still coming in kalkandu magazine. Online: http://www.tamilvanan.com

Anonymous says:

//These sort of interesting articles are still coming in kalkandu magazine. Online://
கல்கண்டு இன்னும் வருகிறதா?

Anonymous says:

//These sort of interesting articles are still coming in kalkandu magazine. Online: //
இந்த கட்டுரை அங்கே எங்கே இருக்கு கண்டுபிடிக்க முடியலியே?:((