அரிசி கிலோ ஒரு ரூபாய்!!! வைகோ ஆவேசம்!!

Posted on Monday, September 1, 2008 by நல்லதந்தி



மின் வெட்டு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஆகிய பிரச்சினைகளிலிருந்து மக்களை திசை திருப்பும் வகையில்தான் கிலோ அரிசி ஒரு ரூபாய் என்ற அறிவிப்பை திமுக அரசு வெளியிட்டுள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

நியாய‌விலை‌க்கடைக‌ளி‌ல் ஒரு ரூபா‌ய்‌க்கு ஒரு ‌கிலோ அ‌ரி‌சி வழ‌ங்க‌‌ப்படு‌ம் எ‌ன்று த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளது ம‌க்களை ஏமா‌ற்று‌ம் வேலை எ‌‌ன்றும், நியாய விலைக் கடைகளில் விற்கப்படும் அரிசியை பெரும்பாலான மக்கள் வாங்கிப் பயன்படுத்துவதில்லை.இப்போது கிலோ அரிசி ஒரு ரூபாய் என்று அறிவித்திருப்பது, அந்த அரிசியை ஆளுங்கட்சியினர் வெளி மாநிலங்களுக்கு கடத்தவே உதவும் என்று அவர் கூறியுள்ளார்.


இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், தற்போது ‌நியாய‌விலை‌க் கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசி விலையை இரண்டு ரூபாயில் இருந்து ஒரு ரூபாயாக குறைத்திடும் அறிவிப்பு ஒன்றை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாதம் ஒன்றுக்கு ரூ.500-க்கு மளிகைப் பொருட்கள் வாங்கிய ஏழைக் குடும்பத்தினர் இன்றைக்கு அதே பொருட்களை 2500 ரூபாய்க்கு வாங்க வேண்டிய அளவிற்கு விலைவாசி விஷம்போல் ஏறியுள்ளது.


சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை பன் மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது.ஏழை, நடுத்தரக் குடும்பங்களின் வீடு கட்டும் கனவு தகர்க்கப்பட்டு கம்பி, சிமெண்ட் விலை நினைத்துப் பார்க்க முடியாத வண்ணம் உயர்த்தப்பட்டு உள்ளது. எல்.எஸ்.எஸ்., டி.எஸ்.எஸ்., எஸ்.எஸ்.எஸ். என்ற பெயரில் அரசு பேரு‌ந்துக‌ளி‌ன் கட்டணம் முன்னறிவிப்பு இன்றி உயர்த்தப்பட்டு உள்ளது. மின்சார தட்டுப்பாடும் மக்களை பாதிப்படைய செய்துள்ளது.ஏழை- நடுத்தர மக்களை விலைவாசி உயர்வால் ஏங்க வைத்து விட்டு, தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பு ஏமாற்று வேலையாகும். இதனால் மக்களின் கோபத்தில் இருந்து தப்ப முடியாது'' எ‌ன்று வைகோ கூ‌றியு‌ள்ளா‌ர்.


40 Responses to "அரிசி கிலோ ஒரு ரூபாய்!!! வைகோ ஆவேசம்!!":

கோவி.கண்ணன் says:

சிதம்பரத்தின் பண வீக்கத்துக்கு கட்டுப்போட்டு மறைத்து, பாரளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தவே, கலைஞரின் இந்த 1 ரூபாய் அரிசி வைத்தியம்.

வைகோ சொல்வது சரிதான்.

Anonymous says:

மின்தடை, விலைவாசி என்று மக்கள் அனுபவித்து வரும் கொடுமைகள் அதிகம். இந்த மாதிரி ஒரு ருபாய் நாடகம் எல்லாம் மக்களிடம் எடுபடாது என்றே நினைக்கிறேன்.

Anonymous says:

என்னதான் ஜனங்களை ஏமாற்ற இந்த கண்கட்டி வித்தையை கருணாநிதி காட்டினாலும்,தேர்தலில் மக்கள் டவுசரை அவுக்காம விடமாட்டாங்க...

ஜ்யோவ்ராம் சுந்தர் says:

ஒரு நல்ல, ஏழைகளுக்கு உதவும் திட்டத்தை அரசியலாக்க வேண்டாமே (இன்னும் சொல்லப்போனால் மற்ற பொருட்களையும் மலிவு விலையில் ரேஷன் கடைகளில் கொடுக்கவேண்டும்!).

Bleachingpowder says:

அடப்பாவிங்களா, மக்களை உழைக்கவே விட மாட்டீங்களா.இதைவிட லூசுதனமான திட்டத்தை வேற யாரும் கொண்டு வர முடியாது. எதுக்கு ஒரு ருபாய், சும்மா கொடுக்க வேண்டியதுதானே. திங்கற சோறில் இருந்து பார்க்குற டிவி வரைக்கும் இலவசமா கொடுத்தா இனி எவன் வேலைக்கு போவான்?

இனி உங்க கட்சி மாநாட்டுக்கு ஆள் வேனும்னா பிரியானியும் க்வட்டரும் குடுத்தா போதும் உங்க பின்னாடி வால ஆட்டிட்டே வந்திடுவான். அதுதானே உங்களுக்கும் வேனும்.

தமிழர்களை கொஞ்சம் கொஞ்சமா பிச்சைகாரர்களாய் ஆக்கிட்டு வருது இந்த அரசாங்கம்.

Bleachingpowder says:

அடப்பாவிங்களா, மக்களை உழைக்கவே விட மாட்டீங்களா.இதைவிட லூசுதனமான திட்டத்தை வேற யாரும் கொண்டு வர முடியாது. எதுக்கு ஒரு ருபாய், சும்மா கொடுக்க வேண்டியதுதானே. திங்கற சோறில் இருந்து பார்க்குற டிவி வரைக்கும் இலவசமா கொடுத்தா இனி எவன் வேலைக்கு போவான்?

இனி உங்க கட்சி மாநாட்டுக்கு ஆள் வேனும்னா பிரியானியும் க்வட்டரும் குடுத்தா போதும் உங்க பின்னாடி வால ஆட்டிட்டே வந்திடுவான். அதுதானே உங்களுக்கும் வேனும்.

தமிழர்களை கொஞ்சம் கொஞ்சமா பிச்சைகாரர்களாய் ஆக்கிட்டு வருது இந்த அரசாங்கம்.

Bleachingpowder says:

//ஒரு நல்ல, ஏழைகளுக்கு உதவும் திட்டத்தை அரசியலாக்க வேண்டாமே //

மண்ணிக்கவும் சுந்தர். இதற்கு பேர் உதவி இல்லை. பிச்சை. இரண்டு ருபாய் கூட சம்பாதிக்க வழியில்லாத ஏழைகள் நம் நாட்டில் இருக்கிறார்கள் என்று எனக்கு தோன்றவில்லை

ஜ்யோவ்ராம் சுந்தர் says:

/இரண்டு ருபாய் கூட சம்பாதிக்க வழியில்லாத ஏழைகள் நம் நாட்டில் இருக்கிறார்கள் என்று எனக்கு தோன்றவில்லை/

இல்லைங்க. முழு விலை கொடுத்து வாங்க முடியாதவங்க நிறையபேர் இருக்காங்க :(

இன்னொரு விஷயம்ங்க. இந்த மாதிரி கம்மி விலையில ஏழைங்களுக்கு ஏதாவது கொடுத்தா கோபப்படற பல மிடில்கிளாஸ் ஆட்கள், stp / ehtp நிறுவனங்களுக்குக் கொடுக்கும் வரிச்சலுகைகள் பத்தி மூச்சே விடறதில்லைங்க :(

Anonymous says:

Again and again Mr. Karunanithi is showing how to do votebank politics.

வால்பையன் says:

இது தேவையா! தேவையில்லையா என்ற சர்ச்சையை விட,
இந்த நேரத்தில் அதன் அவசியமென்ன என்ற கேள்வியே அதிக பங்கு வகிக்கிறது.

சுந்தரின் வாதத்துக்கு நான் உடன்படுகிறேன்,
அதே நேரம் கீழ்தட்டு மக்களுக்குக்காக கொண்ட வந்த திட்டம் முழுவதுமாக அவர்களை போய் சேருகிறதா?

இலவச டீவீ ரூபாய்க்கு கனஜோராக விற்பனை ஆகிகொண்டிருக்கிறது!

மற்ற பொருள்களின் விலை நடுத்தர வர்க்கம் கூட எட்டி பிடிக்க முடியாத அளவில் உள்ளது. சரியாக நிர்வாகிக்க தெரியாத அரசு, மேடை கோணலாக இருக்கிறது அதனால் ஆட முடியவில்லை என்று இவ்வளவு நாட்கள் பதிலளித்து வந்தது, இப்போது புது முயற்சியாக திசைதிருப்பும் படலம்.

ஆனால் அநியாயத்துக்கு ஞாபகமறதி உள்ள தமிழக மக்களுக்கு இது தேவையில்லை என்றே நினைக்கிறேன்.

காலை ஒடித்தாலும்
நொண்டி அடிப்பேன்
கழுத்தை திருகினாலும்
கவிதை படிப்பேன்


என்று ஒரு கவிதை சொன்னாலே போதுமே!
உடன்பிறப்புகளுக்கு நாலு நாள் சோறு தேவைப்படாதே

Bleachingpowder says:

//ஏழைங்களுக்கு ஏதாவது கொடுத்தா கோபப்படற பல மிடில்கிளாஸ் ஆட்கள், stp / ehtp நிறுவனங்களுக்குக் கொடுக்கும் வரிச்சலுகைகள் பத்தி மூச்சே விடறதில்லைங்க//

தொழில்நுட்ப பூங்காவிற்கு அரசாங்கம் தரும் சலுகை எதற்கென்றால் அது ஆயிரக்கனக்கான பேருக்கு நேரடியாகவும்,மறைமுகமாவும் வேலை வாய்ப்பு கிடைப்பதால் தான். இன்னும் சொல்லப்போனால்,தனியார் நிறுவனங்களிலும், ஐடியில் பணி புரிபவர்களே ஒரளவிற்கு முறையான வரி கட்டுகிறார்கள் என்பது என் கருத்து.

இதற்கும் ஒரு ருபாய் அரிசிக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இருப்பதாக தெரியவில்லை. நியாமான விலையில் அரிசியை விற்றாலே போதும். ஐந்து ருபாய்க்கு வாங்கி ஒரு ருபாய்க்கு விற்பது தேவையற்றது மட்டுமல்ல மக்கள் பணத்தை விரயமாக்கும் செயல்.

அரிசி விலையை மேலும் மேலும் குறைக்கும் இவர்கள், தினம் தோறும் ஏறும் பருப்பு, எண்ணை விலையை குறைக்காவிட்டாலும், குறைந்த பட்சம் விலையை ஏறாமலாவது பார்த்து கொள்ளாமே

எந்த நகை கடையிலாவது முறையான பில் தந்து பார்திருக்கிறீர்களா, எத்தனை அரசியல்வாதிகள் வருமான வரி கட்டுகிறார்கள், மளிகை கடை வைத்திருப்பவர்களுக்கு வருமான வரி என்றால் என்னவென்றே தெரியாது.

ஜ்யோவ்ராம் சுந்தர் says:

/ஐடியில் பணி புரிபவர்களே ஒரளவிற்கு முறையான வரி கட்டுகிறார்கள்/

even brick and mortar business employees pay these taxes! கேள்வி வேலைசெய்பவர்களைப் பற்றி அல்ல, நிறுவனங்கள் கட்டவேண்டிய வரியைப் பற்றித்தான் பேச்சு!

ஏங்க தொழில்நுட்பப் பூங்கா நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்குது அப்படின்னா மத்த நிறுவனங்கள் என்ன செய்யுது??

எந்தப் பொருளின் விலைவாசியும் ஏறக்கூடாது என்பது wishful thinking. ஆனால் நான் சொல்வது ஏழைகளின் வாழ்வாதாரப் பிரச்சனையின் அரசு பங்குபெற்று அவர்கள் சுமையைக் குறைக்க உதவுவது. பல நாடுகளிலும் அரசு-அமைப்புகள் வெவ்வேறு விதங்களில் செய்வதுதான் இது.

Bleachingpowder says:

//ஆனால் நான் சொல்வது ஏழைகளின் வாழ்வாதாரப் பிரச்சனையின் அரசு பங்குபெற்று அவர்கள் சுமையைக் குறைக்க உதவுவது. //

Fine Sundar, so do you mean to say, there are people still in tamil nadu who can't afford to buy rice for 2rs.

Bleachingpowder says:

//ஏங்க தொழில்நுட்பப் பூங்கா நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்குது அப்படின்னா மத்த நிறுவனங்கள் என்ன செய்யுது??//

மற்ற நிறுவனங்களுக்கு இவ்வளவு போட்டியில்லையே.

பன்னாட்டு நிறுவனங்கள் மற்ற மாநிலங்களுக்கு போகாமல் இருக்க எல்லா மாநிலங்களுமே அவர்களுக்கு சில சலுகைகளை தருகின்றது. பத்து ருபாய்க்கு சலுகை கொடுத்தால் நூறு ருபாய் வருமானம் வரும் என்பதாலே இவர்களுக்கு இந்த சலுகை.

Bleachingpowder says:

ஐயோராம் சுந்தர் said,

///ஐடியில் பணி புரிபவர்களே ஒரளவிற்கு முறையான வரி கட்டுகிறார்கள்/

even brick and mortar business employees pay these taxes! //

நானும் இதைதானே சொல்லியிருகிறேன்.
bleaching powder said
//இன்னும் சொல்லப்போனால்,தனியார் நிறுவனங்களிலும், ஐடியில் பணி புரிபவர்களே ஒரளவிற்கு முறையான வரி கட்டுகிறார்கள் என்பது என் கருத்து.//

ஜ்யோவ்ராம் சுந்தர் says:

Stp / ehtp companies don't have to pay any tax - this includes income tax for 10 years, customs duty, central excise duty etc. These are sops extended by Central Government. Remember, these are the companies run by Premjis, Ramalinga Rajus, Narayana Murthys etc.

அவர்களுக்குக் கொடுக்கும் சலுகைகளைப் பற்றிப் பேசாமல் ஏழைகளுக்குச் சகாய விலையில் தரும் அரிசியைப் பற்றிப் பேசுவது தவறில்லையா?

தமிழ்நாட்டில் 2 ரூபாய் கொடுத்து வாங்கும் சக்தியில்லாதவர்கள் இருக்கிறார்களா என்றால், ஆம் என்பதே பதிலாயிருக்கும். நான் முதலில் சொல்லியதுபோல், மற்று அத்தியாவசிய பொருட்களையும் மலிவு விலையில் ரேஷன் கடைகளில் தரவேண்டுமென்பதே என் அவா.

Anonymous says:

இது போன்ற உங்கள் பதிவுகள் கூட சூடான இடுகையில் வருவதன் ரகசியம் என்ன... சொல்லுங்கோ நல்ல தந்தி!

Bleachingpowder says:

//Stp / ehtp companies don't have to pay any tax - this includes income tax for 10 years, customs duty, central excise duty etc. These are sops extended by Central Government. Remember, these are the companies run by Premjis, Ramalinga Rajus, Narayana Murthys etc.

அவர்களுக்குக் கொடுக்கும் சலுகைகளைப் பற்றிப் பேசாமல் ஏழைகளுக்குச் சகாய விலையில் தரும் அரிசியைப் பற்றிப் பேசுவது தவறில்லையா?//

வரி சலுகையை வழங்கியது மத்திய அரசு, தமிழக அரசல்ல

அதை பற்றி நீங்கள் ஒரு பதிவு போடுங்கள் சுந்தர். நாம் இதை அங்கே விவாதிக்கலாம்.

இங்கே ஒரு ருபாய்க்கு அரிசியை கொடுப்பது சரியா தவறா என்பதை பற்றி தான் விவாதித்து கொண்டிருக்கிறோம்.

//தமிழ்நாட்டில் 2 ரூபாய் கொடுத்து வாங்கும் சக்தியில்லாதவர்கள் இருக்கிறார்களா என்றால், ஆம் என்பதே பதிலாயிருக்கும்//

புதிய தகவலுக்கு நன்றி சுந்தர் ;))

ஜ்யோவ்ராம் சுந்தர் says:

ok, c u :)

வெண்பூ says:

ஜ்யோவ்ராம் சுந்தர்,

கண்டிப்பாக நான் உங்களுடன் உடன்பட மறுக்கிறேன்.

மற்ற துறைகளின் தொழிலாளர்கள் சம்பாதிப்பதற்கும், ஐ.டி. துறை சம்பாதியத்திற்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் என்று உங்களுக்கு தெரியாதா?

சராசரியாக ஒரு ஐ.டி நிறுவன ஊழியனின் சம்பளம் 20,000 ரூபாயாவது இருக்கும் என்பது உங்களுக்கு தெரியாதா? அதனால் என்னென்ன பயன்கள் என்று பார்ப்போமா?

1. அவன் தனது வருவாயின் 50% சதவீதமாவது (குறைந்தது) தான் பணியாற்றும் ஊரில் செலவு செய்வான். சென்னையில் 1 லட்சம் ஐ.டி மக்கள் என்று கணக்கெடுத்தாலும் 200 கோடி ஒரு மாதத்திற்கு ஐ.டி. பணம் புழங்குகிறது.
2. வருமான வரி. 5,000 பேர் ஒரு கார் தொழிற்சாலையில் பணிபுரிவதாக வைத்துக் கொண்டாலும் அவர்களில் எத்தனைப் பேர் வருமான வரி கட்டும் அளவுக்கு சம்பாதிக்கிறார்கள்? ஐ.டி.ல் ஏறத்தாழ அத்தனை பேருமே வருமான வரி கட்டுபவர்கள்தான்.
3. பெரும்பாலான ஐ.டி. துறை ஏற்றுமதியைச் சார்ந்தது. அதனால் கிடைக்கும் அபரிமிதமான அந்நிய செலாவணி.

இதெயெல்லாம் நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். அதே போல் ரேசன் அரிசி பற்றி,

* ஒரு மாதத்திற்கு ஒரு குடும்பத்துக்கு 20 கிலோதான் அரிசி வழங்கப்படுகிறது. இந்த விலை குறைப்பால் பயன் மாதத்திற்கு 20 ரூபாய்தான், அதுவும் ஒருவருக்கல்ல, ஒரு குடும்பத்திற்கே.
* மீன் பிடித்துத் தருவதை விட மீன் பிடிக்க கற்றுத் தருவதே சிறந்தது. ரெட்டணை விவகாரம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை, அந்த வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஒரு நாள் சம்பளம் (கூலி) 80 ரூபாய். ஒரு மாதத்திற்கு ஒரு நாள் வேலையை அதிகமாக கொடுப்பதன் மூலம் அந்த குடும்பம் சம்பாதிக்கும் 80 ரூபாய் பரவாயில்லையா? இல்லை 20 ரூபாய் விலை குறைப்பு பரவாயில்லையா?

இது வெறுமனே ஓட்டுக்காக செய்யப்பட்ட அறிவிப்பு என்பது உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும், முதல்வருக்கும் தெரியும் அதனால் பயனடைய (?) போகும் ஏழை விவசாய கூலிக்கும் தெரியும் :(

Anonymous says:

இந்த இலவசங்களால் மக்கள் சோம்பேறி ஆகிறார்கள் என்பதை திமுக அமைச்சர் ஒத்து கொண்டுள்ளார். இந்த லிங்க்-இல் படியுங்க

Bleachingpowder says:

//இது போன்ற உங்கள் பதிவுகள் கூட சூடான இடுகையில் வருவதன் ரகசியம் என்ன... சொல்லுங்கோ நல்ல தந்தி!//

the reason is very simple Anony. மூத்த பதிவர்கள் பலருக்கும் தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகளை பற்றி எழுத வக்கில்லை. அவர்கள் எல்லோரும் குமுதம்,விகடன் போல வெறும் சினிமா விமர்சணமும் அதை சார்ந்த விவாதமாக மட்டுமே இருக்கும். பொது பிரச்சனைகளை பற்றி எழுதினால் எங்கே நண்பர்களையும், தளத்திற்கு வருபவர்களையும் பகைத்துக் கொள்ள வேண்டி இருக்குமோ என்ற பயம் அவர்களுக்கு.

அதனால் அவர்கள் அவர்களுக்குள்ளேயே ஒரு குழு மாதிரி செயல்படுவார்கள். There will be a set of people who will come and leave their comments(jalra), no matter what crap they wrote.

manikandan says:

இரண்டு ரூபாய் அரிசி ஒரு ரூபாய் ஆயிருக்கு. இலவசமா தந்தா திட்டுவாங்க. அது தான் கலைஞர் இப்படி தருகிறார்.

சுந்தர் :- இரண்டு ரூபாய் afford பண்ண முடியாதவர்கள் நிச்சயமாக ஒரு ரூபாய் கொடுக்கமுடியும் என்று எனக்கு தோன்றவில்லை.

ஆதலால், இலவசமாக கொடுத்து இருந்தால் சிறு உதவி ஆக இருந்து இருக்கும்.

bleaching powder :- எந்த ஒரு ஏழையும் இந்த அரிசியை தின்று, தொலைகாட்சியில் காலம் கழிப்பது இல்லை.

வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர முடியாத அரசு / விலை வாசியை கட்டு படுத்த முடியாத அரசு தனது குறையை மறைக்க செய்யும் திட்டங்கள் இவை. அவற்றால் நன்மை ஏற்பட்டால் நல்லதே.

manikandan says:

இரண்டு ரூபாய் அரிசி ஒரு ரூபாய் ஆயிருக்கு. இலவசமா தந்தா திட்டுவாங்க. அது தான் கலைஞர் இப்படி தருகிறார்.

சுந்தர் :- இரண்டு ரூபாய் afford பண்ண முடியாதவர்கள் நிச்சயமாக ஒரு ரூபாய் கொடுக்கமுடியும் என்று எனக்கு தோன்றவில்லை.

ஆதலால், இலவசமாக கொடுத்து இருந்தால் சிறு உதவி ஆக இருந்து இருக்கும்.

bleaching powder :- எந்த ஒரு ஏழையும் இந்த அரிசியை தின்று, தொலைகாட்சியில் காலம் கழிப்பது இல்லை.

வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர முடியாத அரசு / விலை வாசியை கட்டு படுத்த முடியாத அரசு தனது குறையை மறைக்க செய்யும் திட்டங்கள் இவை. அவற்றால் நன்மை ஏற்பட்டால் நல்லதே.

ஜ்யோவ்ராம் சுந்தர் says:

அன்புள்ள வெண்பூ,

நீங்கள் சொல்லியிருக்கும் ஐடி தொழிலாளர்கள் உதாரணம் சரியாகவே இருக்கலாம். ஆனால் நான் சொல்லவரும் பிரச்சனை அதுவல்ல (மற்ற துறைகளில் குறைவான ஊதியமென்பது அவர்கள் குற்றமல்ல - சம்பாதிக்கும் பணத்திற்குத்தான் வரி). நிறுவனங்களுக்குத் தரப்படும் சலுகைகளே நான் முன்வைத்த பிரச்சனை.

வேலைவாய்ப்புகளைப் பெருக்குவது போன்ற விஷயங்களில் நான் உடன்படுகிறேன். ஆனாலும் பாருங்கள், till such time, they have to be supported. உலகத்தில் பல நாடுகளில் கடைபிடிக்கப்படும் வழிமுறைதான் இது.

இது தேர்தலுக்காகவே என வைத்துக் கொண்டாலும், வரவேற்கத்தக்க அறிவிப்பு என்பதே என் எண்ணம்.

நன்றி. வேறு ஒரு நண்பர் சொன்னதுபோல் பிறகொருசமயம் இதுகுறித்துப் பேசுவோம் :)

வெண்பூ says:

சுந்தர்,

ஒரு சிறு விளக்கம் மட்டும். என் விளக்கம் வரி கட்டுவதைப் பற்றி அல்ல. இவ்வளவு நன்மைகள் (நேரடி வரியாகவும் மறைமுகமாக‌ பணப்புழக்கம் மற்றும் அந்நிய செலவாணி) இருப்பதால் ஐ.டி நிறுவனங்களுக்கு சலுகைகள் தருவதில் தவறில்லை (வரிச்சலுகை உட்பட)

இதை போன பின்னூட்டத்தில் கொடுக்க மறந்து விட்டேன். அதனால் இங்கே கொடுத்துள்ளேன்.

கண்டிப்பாக பிறிதொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம். நன்றி.

நல்லதந்தி says:

//ஜ்யோவ்ராம் சுந்தர்
September 1, 2008 11:06 AM

ஒரு நல்ல, ஏழைகளுக்கு உதவும் திட்டத்தை அரசியலாக்க வேண்டாமே (இன்னும் சொல்லப்போனால் மற்ற பொருட்களையும் மலிவு விலையில் ரேஷன் கடைகளில் கொடுக்கவேண்டும்!).//
எனக்கு கூட எல்லாமே இலவசமாகத் தந்தால் நன்றாகத்தான் இருக்கும்.ஆனால் அரசு திவாலாகிவிடுமே?.
அமாவாசை அமைச்சர் வீராசாமி பேசியதைப் பாருங்கள்.பிறகு இலவசம் கொடுக்கலாமா என்று யோசியுங்கள்..
இலவச கலர் டிவி, ரூ.2-க்கு ஒரு கிலோ அருசி வழங்கும் திட்டத்தால் ௬லி வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை என மின் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி ஒப்புதல் அளித்துள்ளார்.

நாமக்கல்லில் திங்கள்கிழமை நடந்த ெநல்லி மென்பானம் அறிமுக விழாவில் அவர் பேசியது:

தற்போதைய சூழலில் நாடு முமுவதும் வேலையில்லை என ஒரு தரப்பினர் புலம்பி வருவதும், வேலைக்கு ஆட்கள் இல்லை என தொழிற்சாலைகள் ௬றி வருவதும் வாடிக்கையாக உள்ளது. தமிழகத்திலும் இந்நிைல உள்ளது. வேலையில்லை என்று ௬றுபவர்கள் எந்த வேலைக்கும் செல்லாதவர்களே.

குறிப்பாக, ஒரு கிலோ அருசி ரூ.2-க்கு வழங்கிய பிறகு வேலைக்குச் செல்வதில் அக்கறை செலுத்துவதில்லை. ஒரு நாள் மட்டும் ௬லி வேலைக்குச் சென்றால் ரூ.100 ௬லி கிடைக்கிறது. அதில், ரூ.40-க்கு 20 கிலோ அருசி பெற்று ஒரு மாதம் முமுவதும் சாப்பாட்டுக்கு வைத்துக் கொள்கின்றனர். மீதமுள்ள 60 ரூபாயை குடித்துவிட்டு வேலைக்குச் செல்லாமலேயே பொமுதைக் கழிக்கின்றனர்.

இதேபோல், பெண்களும் முன்புபோல விவசாய ௬லி வேலைக்கு வருவதில்லை. ஏனெனில், வீடுதோறும் இலவச கலர் டிவி வழங்கப்பட்டு வருகிறது. சமையல் குறிப்பு, அழகு குறிப்பு, உடற்பயிற்சி, நாடகம், சினிமா, செய்திகள் என அதிகாலை துவங்கி இரவு வரை டிவியைப் பார்த்தே பொமுதை கழிக்கின்றனர். இதனால், ெபண்கள் பலரும் விவசாயக் ௬லி வேலைக்கு செல்வதில்லை.

இருந்தாலும் தொலைக்காட்சி மூலம் உலக நடப்புகைள அறிந்து பொது அறிவை வளர்த்துக் ெகாள்கின்றனர் என்றார் அவர்.

நல்லதந்தி says:

//காலை ஒடித்தாலும்
நொண்டி அடிப்பேன்
கழுத்தை திருகினாலும்
கவிதை படிப்பேன்


என்று ஒரு கவிதை சொன்னாலே போதுமே!
உடன்பிறப்புகளுக்கு நாலு நாள் சோறு தேவைப்படாதே//

இருந்தாலும் வால் பையன் கலைஞர் அளவிற்கே கவிதை எழுதுறீங்க! :)

நல்லதந்தி says:

கோவி.கண்ணன், டிரவுசர் பாண்டி
ஜ்யோவ்ராம் சுந்தர் ,Bleachingpowder
வெண்பூ,அவனும் அவளும்
வால்பையன், Anonymous
நண்பர்களுக்கு மிகுந்த நன்றிகள்!!
Bleachingpowder நண்பருக்கு ஒருசிறப்பு நன்றி!

நல்லதந்தி says:

/// Anonymous
September 1, 2008 3:29 PM

இது போன்ற உங்கள் பதிவுகள் கூட சூடான இடுகையில் வருவதன் ரகசியம் என்ன... சொல்லுங்கோ நல்ல தந்தி!//

ஏன்!இந்த கொலைவெறி! :)

Anonymous says:

வைகோ சொல்வது 100% உண்மை...

Anonymous says:

இவ்வளவு பின்னூட்டமா...

ஹ்ம்ம் இனிமே நமக்கு இங்கே வேலை இல்ல... பெரிய மனுசங்க எல்லாம் வந்துட்டாங்க

நல்லதந்தி says:

//டிரவுசர் பாண்டி
September 1, 2008 7:37 PM

இவ்வளவு பின்னூட்டமா...

ஹ்ம்ம் இனிமே நமக்கு இங்கே வேலை இல்ல... பெரிய மனுசங்க எல்லாம் வந்துட்டாங்க//
அப்படியெல்லாம் சொல்லப்படாது!.அழுதுருவேன்!! :)

நல்லதந்தி says:

//டிரவுசர் பாண்டி
September 1, 2008 7:37 PM

இவ்வளவு பின்னூட்டமா...

ஹ்ம்ம் இனிமே நமக்கு இங்கே வேலை இல்ல... பெரிய மனுசங்க எல்லாம் வந்துட்டாங்க//
அப்படியெல்லாம் சொல்லப்படாது!.அழுதுருவேன்!! :)

Krish says:

அமைச்சர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துட்டார். அப்பறம் என்ன?
//// இருந்தாலும் தொலைக்காட்சி மூலம் உலக நடப்புகைள அறிந்து பொது அறிவை வளர்த்துக் ெகாள்கின்றனர் என்றார் அவர்///////
ஆஹா! எந்த ஊர்ல தொலைக்காட்சியை பார்த்து பொது அறிவை வளர்த்துக் கொள்கிறார்கள்? எந்த தமிழ் சேனல் அப்படி ஒரு நிகழ்ச்சியை கொடுக்குது? அப்படி மக்கள் உலக நடப்புகளை அறிந்து கொள்வர்கலேயனால், தி.மு.க கட்சியை கலைத்து விட்டு போகவேண்டியது தன்! :-)

Anonymous says:

கண்டிப்பாக இது மக்களை குழப்புவதற்காக வெளியிடப்பட்ட திட்டம். அரிசி ஒரு ரூபா, ஆனா உப்பு கிலோ 7 ரூபா... இந்த நாடு எங்கே போகுது? மறுபடியும் உப்பு சத்தியாகிரகம் நடத்தனும்போல... இந்த நாட்டை யார் காப்பாத்த போறாங்களோ..??????

Anonymous says:

அரிசி ஒரு ரூபாயா..? எங்கள் மக்களுக்கும் கொஞ்சம் அனுப்பி வைக்கலாமே

நல்லதந்தி says:

// parasuraman
September 1, 2008 10:54 PM


கண்டிப்பாக இது மக்களை குழப்புவதற்காக வெளியிடப்பட்ட திட்டம். அரிசி ஒரு ரூபா, ஆனா உப்பு கிலோ 7 ரூபா... இந்த நாடு எங்கே போகுது? மறுபடியும் உப்பு சத்தியாகிரகம் நடத்தனும்போல... இந்த நாட்டை யார் காப்பாத்த போறாங்களோ..??????//
உப்பை விடுங்க இப்போ ஒரு வாரமாக ஒரு தீப்பெட்டியின் விலை ஒரு ரூபாய்...இந்த அநியாயத்தை என்ன சொல்ல!.

நல்லதந்தி says:

//ஈழத்தமிழன் said...
அரிசி ஒரு ரூபாயா..? எங்கள் மக்களுக்கும் கொஞ்சம் அனுப்பி வைக்கலாமே//
அனுப்பலாம் தான் ஆனா உங்களுக்கு தமிழ்நாட்டில் ஓட்டு இல்லையே ஒட்டு இல்லாதவங்களுக்கு உதவி செய்ய கலைஞருக்கு பைத்தியமா?

நல்லதந்தி says:

//ஆஹா! எந்த ஊர்ல தொலைக்காட்சியை பார்த்து பொது அறிவை வளர்த்துக் கொள்கிறார்கள்? எந்த தமிழ் சேனல் அப்படி ஒரு நிகழ்ச்சியை கொடுக்குது?//

வாங்க கிருஷ் நீங்க மானாட மயிலாட நிகழ்ச்சியைப் பார்த்ததில்லைப் போலிருக்கு?.கலைஞர் டி.வியில் இல்லாத அறிவு நிகழ்ச்சிகளே கிடையாது! :)