அரிசித் திருட்டைக் கண்டு பிடித்த டி.எஸ்.பாலையா!

Posted on Sunday, December 7, 2008 by நல்லதந்தி




கோல்டன் ஸ்டூடியோவில் ‘சந்திரகாந்தா’படப்பிடிப்பு  நடந்து கொண்டிருந்த  சமயம்அது.காவி உடைகளும்,திரு நீர்ப்பூச்சும் நீண்ட தாடியும் துலங்க, ‘போலிச்சாமியார் வேடத்திலிருந்தார்.டி.எஸ்.பாலையா.

அன்றைய காட்சியில் சாமியாரின் காதலியாய் நடித்த வனஜா, ‘நீங்க இப்படியே போனீர்களானால் உங்களைப் பார்த்து ஜனங்களெல்லாம் உங்கள் காலில் விழுந்து கும்பிடுவார்கள்’ என்று பாராட்டினார்.

அதற்கு பாலையா,’ நன்றாய்ச் சொன்னீர்கள்!.என் மேல் விழுந்து எலும்பை எண்ணி விடுவார்கள்.கால்ம் மாறிவிட்டதம்மா!.போலிகள் பிழைக்க முடியாது என்றார்.

-------------------------------------------------------------------------------------------------


புத்தா பிச்சர்ஸ் படத்தில் நடிக்க வந்திருந்த டி.எஸ்.பாலையா வெற்றிலை போடவென வெளியே வந்த போது அருகில் இருந்த நண்பர் ஒருவரின் கையில் இருந்த தினசரியை வாங்கிப் பார்த்தார்.

அதில் நடிகர் சிவதாணு ஒரு திருடனைப் பிடித்துக் கொடுத்ததற்கு,போலீஸ் இலாகா அவருக்குச் சன்மானம், அளித்த செய்தி வெளி வந்து இருந்தது.


‘இந்தச் செய்தியைப் படித்ததும் எனக்குப் ப்ழைய சம்பவம் நினைவுக்கு வருகிறது’ எனக்கூறி அதைச் சொன்னார் பாலையா.

‘அப்போது அது அரிசி ரேஷன் இருந்த சமயம்.நான் நிறையப் படங்களில் போலீஸ்காரனாக நடித்து வந்த சீசன். சேலத்திலிருந்து திருச்சிக்குக் காரில் வந்து கொண்டிருந்தேன்.

‘இரவு நேரம்.கார் திம்மாச்சி புரம் அருகே வந்ததும்,ஆட்கள் பலர் தலையில் மூட்டையைச் சுமந்து பதுங்கி பதுங்கிப் போவதைப் பார்த்தேன்.எனக்குச் சந்தேகம் ஏற்ப்பட்டதும்,காரை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கினேன்.போலீஸ் உடுப்பு வேறு போட்டிருந்தேன்.மேக்கப்பைக் கலைக்காமல் அப்படியே வந்துக் கொண்டிருந்த்தேன்.என்னைக் கண்டத்தும் அவர்கள் மூட்டையைக் கீழேப் போட்டு விட்டு ஓடி விட்டார்கள்.அவ்வளவும் கறுப்புச் சந்தை வியாபாரத்துக்காக கடத்தப் படும் அரிசி! மூட்டைகள்.

‘கையில் இருந்த டார்ச் லைட்டைப் போட்டேன்.ஒரு பெரிய மரத்தின் மறைவில் கைகால்கள் தந்தி அடிக்க ஒருவன் நின்று கொண்டிருந்தான்.நான் அருகே போனதும்,ஐயா,இதை நீங்களே எடுத்துக்கிட்டுப் போங்க.என்னை விட்டுடுங்க’, என்று கெஞ்சினான்.

‘இனிமேல் இந்த மாதிரிச் செய்யாதீங்க ‘ என்று எச்சரித்து விட்டு போலீஸ் முறுக்கோடு மூட்டைகளை விட்டு விட்டு என பயணத்தை மேல தொடர்ந்தேன் என்று கூறினார் பாலையா!.


26 Responses to "அரிசித் திருட்டைக் கண்டு பிடித்த டி.எஸ்.பாலையா!":

Anonymous says:

mee த முதலு!

Anonymous says:

2

Anonymous says:

3

Anonymous says:

4

Anonymous says:

5

Anonymous says:

6

Anonymous says:

7

Anonymous says:

8

Anonymous says:

9

Anonymous says:

10

Anonymous says:

11

Anonymous says:

யப்போவ் யாருங்க அது பதினொன்னு நான் குத்திலயே.

Anonymous says:

யோவ் மம்டி.குத்தல அனுபவிக்கணும் ஆராயக்கூடாது.13

Anonymous says:

14

Anonymous says:

15

Anonymous says:

16

Anonymous says:

17

Anonymous says:

18

Anonymous says:

19

Anonymous says:

20

Anonymous says:

21:))

Anonymous says:

22:)

கிரி says:

நல்ல தந்தி இந்த அரிசி மேட்டர்ல ஏதாவது உள் குத்து இருக்கா ;-)

நல்லதந்தி says:

//கிரி
December 7, 2008 11:13 PM
நல்ல தந்தி இந்த அரிசி மேட்டர்ல ஏதாவது உள் குத்து இருக்கா ;-)//
:)) இல்லை கிரி இது முழுக்க முழுக்க சினிமாதான்!

வால்பையன் says:

//போலிகள் பிழைக்க முடியாது என்றார்.//

யார சொல்லுதீக
:)

வால்பையன் says:

//அப்போது அது அரிசி ரேஷன் இருந்த சமயம்.//

இப்போதும் இருக்குதே
அரிசியும் கூடவே அதேபோல் கடத்தலும்
ஆனால் பாலைய்யா தான் இல்லை
:(