இவனை என்ன செய்தால் தகும்?

Posted on Thursday, December 11, 2008 by நல்லதந்திதிருவண்ணாமலை மாவட்டம் வெள்ளாமலை கிராமத்தை சேர்ந்தவர் செல்லன் (வயது 32), விவசாயி. இவருக்கும் கன்னியம்மாள் (25) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர் களுக்கு ரோகிணி (3) என்ற மகளும், இளங்கோ (1) என்ற மகனும் உள்ளனர். செல்லன் அவருக்கு சொந்தமான குடிசை வீட்டின் முன்பு காலியாக உள்ள இடத்தில் மாடி வீடு ஒன்று கட்டி வருகிறார். நேற்று காலை 10 மணியளவில் கன்னியம்மாள் அருகே உள்ள குளத்திற்கு துணி துவைக்க சென்றார்.

சிறிது நேரத்தில் செல்லன் குடிசை வீட்டுக்குள் சென்று தூங்கிக் கொண்டிருந்த மகன் இளங்கோ மற்றும் மகள் ரோகிணி ஆகிய இருவரின் கழுத்தை அறுத்தார். இதில் 2 குழந்தைகளும் துடிதுடித்து இறந்தனர்.
இந்த நிலையில் வெளியில் சென்று இருந்த செல்லனின் தாய் முனியம்மாள் வீட்டிற்கு வந்தபோது குடிசை வீட்டில் இருந்து செல்லன் ரத்தம் சொட்டிய கத்தியுடன் வெளியே வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது அங்கு 2 குழந்தைகளும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பது கண்டு கதறி அழுதார். அதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு உடனடியாக அங்கு வந்தனர். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக செல்லனை கைது செய்து விசாரணை நடத்தினர்.
`தான்கட்டிவரும் புதிய வீட்டில் நன்றாக வாழவேண்டும் என்றால் குழந்தைகளை பலி கொடுக்க வேண்டும் என்று காளி தன் மீது இறங்கி கூறியதன் பேரில் குழந்தைகள் இருவரையும் பலி கொடுத்தேன்' என்று செல்லன் கூறுவதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி செய்தி!

9 Responses to "இவனை என்ன செய்தால் தகும்?":

அருப்புக்கோட்டை பாஸ்கர் says:

படிக்கும் போதே பகீர் என்று உள்ளது .
இரக்கமற்ற இதுபோன்ற அரக்கர்களை என்ன செய்தாலும் தகும் !

Anonymous says:

கண்டம் துண்டமாக வெட்ட வேண்டும்.

Anonymous says:

:(

கிரி says:

இவனுகளை எல்லாம் ..........

நான் ஆதவன் says:

அதே மாதிரி செய்து அவனையும் காளியிடம் சேர்க்கலாம் :-(

Chuttiarun says:

வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் / தளத்தில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தை பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.
http://www.thamizhstudio.com/
Add a Gadget - ல் இதை பயன்படுத்துக
வழி --> Add a Gadget --> select HTML/JavaScript
Title : தமிழ் ஸ்டுடியோ.காம்
Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>

ஆட்காட்டி says:

காளி அம்மா சொன்னா சரியாத் தான் இருக்கும்.

வால்பையன் says:

பெயரிலியை பற்றிய ஆபாச பின்னூட்டத்தை எடுத்து விடவும்.

நல்லதந்தி says:

// வால்பையன் said...
பெயரிலியை பற்றிய ஆபாச பின்னூட்டத்தை எடுத்து விடவும்.//

எடுத்தாச்சி வால்!.ஆபாச கமெண்ட் வந்துள்ளதை கவனித்துச் சொன்னதற்கு நன்றி!..