குந்தா அணைக்கட்டு வேலையை நிறுத்திய தேவர்!!

Posted on Friday, December 12, 2008 by நல்லதந்தி



ஊட்டி,குன்னூர் போன்ற இடங்களில் உள்ள காடுகளில் வெளிப்புறப் படப்பிடிப்பு காட்சிகளைப் படமாக்க அதிகாரிகளின் அனுமதி தேவை.அனுமதியை வாங்க தேவர் கையாளும் முறை மிகுந்த ரசமாக இருக்கும்.

முதலில் தேவர் அதிகாரியிடம் போவார்.(தொடர்ந்து தேவர் அப்பகுதிகளிலேயே படங்கள் தயாரித்து வருவதால் அனேகமாக அதிகாரிகள் அனைவரும் அவருக்குத் தெரிந்தவர்களே.

“முருகா” என்று பெரிய கும்பிடு போட்டு விட்டு,அதிகாரியினுடைய காலடியில் கீழே உட்கார்ந்து விடுவார்.”என்னங்க இது,எழுந்திருந்து மேலே உட்காருங்க!” என்று அவர் கேட்டுக் கொண்டாலும் தேவர் எழுந்திரிக்க மாட்டார்.”இருக்கட்டும் முருகா!’ என்று கூறித் த்ம்மை தாம் யார்,வந்த விஷயம் என்ன என்ற விவரங்களைச் சொல்லி அனுமதி வாங்கிக் கொண்டுதான் வெளியேறுவார்.

ஒருக்கால் அதிகாரி,”அது மிகவும் ஆபத்தான இடம் அனுமதி அளிக்க இயலாது” என்று மறுத்து விட்டால்,தேவர் விட்டு விடமாட்டார்.

மறுநாள் நேரே அதிகாரியின் வீட்டிற்குப் போய்விடுவார்.அதிகாரியின் மனைவியைப் போய் பார்ப்பார்.”முருகா!” என்று அந்த அம்மாளுக்கு கும்பிடு போட்டு விட்டு ,”தாயே கதாநாயகி ஒரு சின்னப் பெண்.காட்டிலே போய்க்கிட்டே இருக்கா; அவளுக்கு வலது பக்கமாக ஒரு புலி அவள் மேல் பாய வருகிறது. அவளுக்கு இடது புறமோ கிடுகிடு பள்ளம் அப்போ அந்தப் பெண்ணிற்க்கு எப்படி இருக்கும்?” என்று பாவத்துடன் சொல்வார்.அதிகாரியின் மனைவி சுவாரஸ்யமாகக் கேட்டு, “ச்சூ...ச்சூ..” என்று சூள் கொட்டுவார்.அந்த நேரம் பார்த்து, “இந்த மாதிரியான கட்டத்தைப் படமாக்க அந்தக் காடுதான் சரியான இடம்.உங்க வீட்டுக்காரர் அனுமதி மறுக்கிறாரே” என்று முடிப்பார்.

அவ்வளவுதான் அந்த அம்மாள் சிபாரிசில் அதிகாரியின் அனுமதியுடன் தம்பதிகளுக்கு ஒரு “முருகா” போட்டு விட்டு வெற்றியுடன் திரும்புவார்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஒரு படத்துக்கு குந்தா அணைக்கட்டுக்கருகில் வெளிப்புறப் படப்பிடிப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.கதாநாயகன் கோஷ்டியுடன்,எதிரிகளின் நூற்றுக் கணக்கான வாள் வீரர்கள் மோதும் காட்சி அது.சிப்பாய்களுக்கான உடைகளையெல்லாம் தயார் படுத்தி விட்டனர்.ஆனால் சிப்பாய்களாக வேஷம் போட ஆட்களைத்தான் காணோம்.

தேவர் என்ன செய்யப் போகிறார் என்பதும் தெரியாமலேயே இருந்தது.ஆனால் கூட வந்த நடிகர்கள் அனைவரும் ஆர்ச்சரியப் படும் படி சிப்பாய்களாக நடிக்க ஆட்களைக் கொண்டு வந்து அக்காட்சியைப் படமாக்கி விட்டார்.

அவர் எங்கிருந்து,எப்படி ஆட்களைத் தேடிப்பிடித்தார் என்பது பிறகு தெரிய வந்தது.குந்தா அணைக் கட்டு வேலையையே ஒரு நாள் நிறுத்தி விட்டார்.அங்கு வேலை செய்து வந்த தொழிலாளர்களை எல்லாம் ஒரு நாள் லீவு போட வைத்து ,அவர்களுக்குச் சிப்பாய் உடைகளை மாட்டி,கையில் கத்தியையும் கொடுத்து விட்டார்.

வெளிப்புறக் காட்சிகளை முடித்துக் கொண்டு அங்கிருந்து விடை பெறும் போது தமது நன்றி உணர்ச்சியை தேவர் வெளிப்படுத்தத் தவறிய்தில்லை.தம்முடன் ஒத்துழைத்த அப்பகுதியில் உள்ள தோட்டத்தொழிலாளர்கள் அனைவருக்கும் அருமையான விருந்து வைத்து,கலைநிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்து மகிழ்விப்பார்.

4 Responses to "குந்தா அணைக்கட்டு வேலையை நிறுத்திய தேவர்!!":

Anonymous says:

super:)

Anonymous says:

//வெளிப்புறக் காட்சிகளை முடித்துக் கொண்டு அங்கிருந்து விடை பெறும் போது தமது நன்றி உணர்ச்சியை தேவர் வெளிப்படுத்தத் தவறிய்தில்லை.தம்முடன் ஒத்துழைத்த அப்பகுதியில் உள்ள தோட்டத்தொழிலாளர்கள் அனைவருக்கும் அருமையான விருந்து வைத்து,கலைநிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்து மகிழ்விப்பார்.//

:)

வால்பையன் says:

இதிலிருந்து என்ன தெரிகிறது,முருகன் அவருக்கு பெயருக்கு தான் கடவுள். உண்மையான கடவுள் அவரது தொழில் தான்

நல்லதந்தி says:

// வால்பையன்
December 11, 2008 7:24 PM
இதிலிருந்து என்ன தெரிகிறது,முருகன் அவருக்கு பெயருக்கு தான் கடவுள். உண்மையான கடவுள் அவரது தொழில் தான்//

ஆனால் அந்தத் தொழில் பக்தியை அவருக்குள் ஏற்படுத்தியது முருகன் அல்லவா!