பாராளுமன்றத்தேர்தலில் திமுக-காங் கூட்டணியை வெற்றி பெற வைக்கக் காரணங்கள்!

Posted on Tuesday, March 17, 2009 by நல்லதந்தி



பாராளுமன்றத்தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியை வெற்றி பெறவைத்தாக வேண்டும். அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் கலைஞர் சொல்லும் காரணங்கள் நமக்கும் மிகவும் நியாயமாகப் படுகின்றன.

மாநிலத்திலும், மத்தியிலும் ஒரே கூட்டணி ஆட்சி இருந்தால் பல நன்மைகள் தமிழகத்திற்குக் கிடைக்குமாம். தமிழகத்தின் நலனுக்காக மத்திய அரசை மிரட்டி மிரட்டி பல சலுகைகள் பெறலாமாம். முக்கியமான இலாகாக்களைப் பெற்று தமிழகத்தை முழு மூச்சாக முன்னேறச் செய்யலாமாம்.
எனவே ஒட்டு மொத்த தமிழக நலனுக்குக்காக அரசியல் மாறுபாடு இல்லாமல் இந்தக் கூட்டணிக்கே வாக்களிக்க வேண்டுகிறோம். இந்த வெற்றியால் தமிழகத்திற்கு கிடைக்கும் நன்மைகளாவன. பின் வருமாறு:

முல்லைப் பெரியாற்றுப் பிரச்சனையில் தமிழகத்திற்கு சாதகமாக மத்திய அரசு நடந்து கொள்ளும் இல்லாவிட்டால் மத்திய அரசின் சிண்டையைப் பிடித்து உலுக்கப் படும்.

காவிரிப் பிரச்சனை மத்திய அரசால் தமிழகத்தின் பக்கமாக தீர்க்கப் படும்.

பாலாற்று பிரச்சனையில் மத்திய அரசு தமிழகத்தின் நலனுக்காகப் பாடுபடும்.

ஒகேனக்கல் பிரச்சனையில் தமிழகத்தின் நலன் காக்க தீர்ப்பு கொடுக்கப் படும்.

சேது சமுத்திரத் திட்டம் ஒரே நாளில் முடிக்கப் படும்.

இலங்கைத் தமிழர் பிரச்சனை ஒரு வாரத்தில் தீர்த்து வைக்கப் படும்.

சேலம் இரயில்வே கோட்டத்திற்கு கட்டிடங்கள் கட்ட எப்படியாவது 50 எக்கர் நிலம் கண்டு பிடிக்கப் படும். சேலத்தில் எங்குமே நிலம் இல்லாவிட்டால் கொட நாட்டில் ஜெயலலிதா வளைத்துப் போட்டுள்ள மக்கள் எஸ்டேட்டில் இருந்து 50 ஏக்கர் பறிமுதல் செய்து கோட்டத்துக்காக வழங்கப்படும்.

கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு மத்திய அரசால் நிதி ஒதுக்க வைக்கப்படும்.

என்னையா இது கிண்டல் பண்றீங்களா!, என்கிறீர்களா அப்பாவி மக்களே!.....

2004-ல் பாராளுமன்றத்தேர்தல் பிரச்சாரத்தில் கலைஞரும், அடிப்பொடிகளும் மேற்கண்ட வாக்குறுதிகளை அள்ளி வீசினர். வாக்குறுதிகளின் ஃபார்மெட் கொஞ்சம் முன்னே பின்னே மாறி இருக்கலாம்.

அந்த தேர்தல் முடிந்து 40 தொகுதிகளும் உங்களுக்கே என்று மக்கள் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு அள்ளிக் கொடுத்தனர். மாறக இந்த கூட்டணி கும்பல் மக்களுக்கு, நாற்பது எங்களுக்கு, நாமம் உங்களுக்கு என்று நடத்திய நாடகத்தை எல்லோரும் அறிவார்கள்.

மேற்கண்ட ஆட்சி முடிந்து அடுத்த தேர்தலும் வந்து விட்டது. இந்தத் தடவையும் இந்தக் கும்பல் இதே வாக்குறுதியுடன் ஓட்டுக் கேட்க வருவார்கள் என்பது நிச்சயம்.

கலைஞரைப் பொறுத்தவரை இந்த வாக்குறுதிகளை 2014 பாராளுமன்றத்தேர்தலிலும் உபயோகப் படுத்துவார். சொன்னதைச் செய்வார், செய்வதைச் சொல்வார் எங்கள் சொல்லின் செல்வர் கலைஞர்!.

சொன்னது போலவே திருமங்கலத்தில் அச்சடித்தாற் போல நாற்பதாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தனர். ஸ்பெக்ட்ரம் போல பல ஊழல்களைச் சொல்லாமலேயே செய்தனர்.

 கலைஞர் இந்த ‘பஞ்ச்’ டையலாகைப் பயன் படுத்துவதை விட , ‘என்றைக்கும் “வாக்கு” மாறமாட்டார் எங்கள் கலைஞர்’ என்ற பஞ்ச் டையலாகைப் பயன் படுத்தலாம். கொஞ்சம் பொருத்தமாக இருக்கும். :)

மக்கள் “நலன்” என்று சொல்லிப் பாருங்கள் உதடுகள் ஒட்டாது. மக்களுக்கு “நாமம்” என்று சொல்லுங்கள் உதடுகள் பச்சக்கென்று ஒட்டும். ஒற்றுமையே பலம் என்று விளக்குவதற்காக கூட்டணி கும்பல்களிடம் இந்த பொன்மொழியை வாழும் வள்ளுவம் உபயோகிக்கலாம்.

வாழ்க கலைஞர்!, வளர்க மக்களின் மறதி!

26 Responses to "பாராளுமன்றத்தேர்தலில் திமுக-காங் கூட்டணியை வெற்றி பெற வைக்கக் காரணங்கள்!":

Anonymous says:

:)

அறிவிலி says:

வாக்களித்து விட்டேன். தமிழ்மணம், தமிலிஷ் இரண்டிலும்.

Anonymous says:

கலக்கிறிங்க நல்ல தந்தி!!

என்னோட புது தளத்தை பார்த்தீர்களா?!

நல்லதந்தி says:

ஓட்டுப் போட்டதுக்கு ரொம்ப நன்றி அறிவொளி சார்! (ஸ்பெல்லிங் மிஸ்டேக் தெரிந்தே செய்தது :) )

நல்லதந்தி says:

// veerantamil said...
கலக்கிறிங்க நல்ல தந்தி!!

என்னோட புது தளத்தை பார்த்தீர்களா?!//

நன்றி veeantamil !. தளத்தைப் பார்த்தேன் அட்டகாசமாக இருக்கிறது.அதில் வரும் விஷயங்களும் சாரம் குறையாமல் இருக்கின்றது. Followers மட்டும் காணலை.

Anonymous says:

இன்னுமா என்னை நம்புறாங்க கமெண்டும் அந்த கலைஞரின் பார்வையும் வயிறு வலிக்க சிரிச்சிட்டேன்.

Suresh Kumar says:

கலைஞர் மீண்டும் நாமம் போடலாம் என நினைக்கிறார் . ஆனால் இந்த வாட்டி மக்கள் அவருக்கு நாமம் போட்டு விடுவார்கள் .

நல்லதந்தி says:

வாங்க சுரேஷ்!. கலைஞருக்கு மக்கள் குல்லா போடுவார்கள் என்பது உறுதி.அதில் அவருக்கு சந்தோஷமும் வரக்கூடும் எனென்றால் அவருக்கு நாமம் என்றால் ஆகாதுதானே! :)

Anonymous says:

தமிழ் மொழியிலும் தமிழ் மக்கள் நலத்திலும் உள்ள பற்றினால் திரு.கருணாநிதியும் ஒரு தமிழ் உணர்வாளர் என்று நினைத்து இப்போது மிக ஏமாற்றம் அடைந்துள்ள பல லட்சக்கணகான மக்களில் நானும் ஒருத்தி.தமிழர்களுக்கு அவர் செய்த செய்து கொண்டிருக்கிற துரோகங்கள் வருங்காலத்தில் வரலாற்று ஆசிரியர்களால் இருண்ட வரலாறாகப் பதியப்படும்.
ஈழத்தமிழர் விவகாரத்தை தமிழ் நாட்டில் எப்படி திசை திருப்பி நீர்த்துப் போகச்செய்து விட்டார் என்பதை கண் முன்னால் காணும்போது மனம் ரத்தக் கண்ணீர் வடிக்கிறது.
தமிழ் உணர்வாளர்களை தேசியபாதுகாப்பு சட்டத்தை ஏவி சிறையில் அடித்துள்ளார்.தேர்தலில் ஈழத்தமிழர் பற்றி பேசவே கூடாது என்று தேர்தல் ஆணையம் சர்வாதிக்கற அறிக்கை விட்டுள்ளது.மக்கள் தாம் விரும்பும் விஷயத்தைப் பற்றிப் பேசக்கொடாது என்று தடுப்பது ஜனநாயகமா?தேர்தல் ஆணையத்தின் இந்த அறிக்கைக்குப் பின்னால் 'அன்னை ' சோனியாவின் ஆணையும் 'தமிழ் தலைவர் ' கருணாநிதியின் ஆசியும் உண்டு என்பது எல்லாருக்குமே தெரியும்.
ஈழத்தில் இப்போதும் ஒவ்வொருநாளும் தமிழர்கள் இறந்து கொண்டு இருக்கும் செய்தி ஒவ்வொரு நாளும் ஐம்பது நூறு என்று கிரிக்கெட் ஸ்கோர் மாதிரி வந்து கொண்டுதான் இருக்கிறது.ஆனால் அதை எவ்வளவு சாதுர்யாம்மாக செய்திகளை மறைத்து பெரும் ஊடகங்களில் இருட்டடிப்பு செய்து சோனியாவுக்கும் ராஜபகசாவிற்கும் உதவி செய்து கொண்டு இருக்கிறார்.
தமிழ் மனம் போன்ற வலைத்தளங்களிலாவது ஈழச்செய்திகள் கொஞ்சம் சூடாக வந்து கொண்டிருந்தன ஒருசிலரை மட்டும் இந்தச் செய்திகள் அடைந்தாலும் அவர்கள் மூலம் வேறு பலருக்கு அடையக் கூடியதாக இருந்தது.இப்போது அதுவும் இல்லாமல் போய் விட்டது.
எட்டு கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு இனமாக இருந்தும் உலகெல்லாம் பரந்து வாழும் ஒரு இனமாக இருந்தும் இந்தத் தமிழ் இனம் இன்று ஈழத்தில் தமது சகோதரர்கள் இப்படி அழிந்து கொண்டிருப்பதைத் தடுத்து அவர்களை அரசியல் உரிமைகளுடன் வாழ வைக்க முடியாத இயலாமையில் இருக்கிறார்கள் என்றால் அதற்கான கணிசமான பங்கு கருணாநிதி அவர்களுக்கு உண்டு.
--வானதி

Anonymous says:

எனது பின்னூட்டத்தில் சில எழுத்துப் பிழைகள் வந்திருக்கின்றன.மன்னிக்கவும்.
அது மொழி தெரியாததால் அல்ல.தமிழ் தட்டச்சு கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் பயின்ற காரணத்தால் வேகமாக அடிக்கும்போது எழுத்துப் பிழைகள் வருகின்றன.
மற்றும்படி தமிழ் ,ஆங்கிலம் இரண்டு மொழிகளையும் கண்டிப்பு மிக்க ஆனால் சிறந்த ஆசிரியர்களிடம் கற்றதனால் ,எந்த மொழியானாலும் பிழை இருந்தால் உடனே திருத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்பேன்.
-வானதி.

வால்பையன் says:

//மக்கள் “நலன்” என்று சொல்லிப் பாருங்கள் உதடுகள் ஒட்டாது. மக்களுக்கு “நாமம்” என்று சொல்லுங்கள் உதடுகள் பச்சக்கென்று ஒட்டும். //

ஹா ஹா ஹா
கலக்கலான கமெண்ட்

Senthil says:

hope ppl will teach congress and DMK a lesson in the forthcoming elections for backstabbing tamils.

யூர்கன் க்ருகியர் says:

:)

கானா பிரபா says:

பதிவினை முழுதும் படித்தேன் உங்கள் எள்ளல் பார்வையில் சொன்ன விதம் சிறப்பு நாளை நடப்பதை இன்றைக்கே சொல்லீட்டிங்களே :0

நல்லதந்தி says:

வாங்க வானதி நான் எழுதுவதை விட உங்கள் தமிழ் எந்தப் பிழையும் இல்லாமல் நன்றாகவே உள்ளது. விரைவில் இலங்கையின் அமைதி திரும்பி தமிழர்களும் சம உரிமையும், அனைத்து நலன்களும் பெற ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றேன்.

நல்லதந்தி says:

//ஹா ஹா ஹா
கலக்கலான கமெண்ட்//

வாங்க வால்!.கலைஞர் கவிதை மாதிரின்னு சொல்லுங்க :)

நல்லதந்தி says:

Sen!. நானும் அப்படித்தான் எதிர்பார்க்கிறேன்.

நல்லதந்தி says:

வாங்க கானா பிரபா சார்!. நீங்கதான் கமெண்ட் போட்டிருக்கீங்களா!.சந்தோஷமாக இருக்கிறது.பாராட்டுக்கு நன்றி!.வருகைக்கு அதைவிட நன்றி!

Anonymous says:

it's about time people understood the evil that is karuna and co. but then, what's the alternate we have got? Su Swamy? VJ kanth? or JK Ritesh? or may be Jaya & co?. better yet.. let's not vote.

அருப்புக்கோட்டை பாஸ்கர் says:

//மக்கள் “நலன்” என்று சொல்லிப் பாருங்கள் உதடுகள் ஒட்டாது. மக்களுக்கு “நாமம்” என்று சொல்லுங்கள் உதடுகள் பச்சக்கென்று ஒட்டும்//

SUPER !

மணிகண்டன் says:

When we open your blog in IE, we get a popup error and also some ads. I don't have any issues with ads but can you check up the error.

பதி says:

அருமை....

//மக்கள் “நலன்” என்று சொல்லிப் பாருங்கள் உதடுகள் ஒட்டாது. மக்களுக்கு “நாமம்” என்று சொல்லுங்கள் உதடுகள் பச்சக்கென்று ஒட்டும்.//

இதுல சிறிய மாறுதல்

மக்கள் “நலன்” என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது. மக்களுக்கு “நாமம்” என்று சொன்னால் உதடுகள் கூட ஒட்டும்.

:)

நம்ம ஊர் பஸ்சுல இத படிச்சு கொஞ்ச நாள் ஆயிடுச்சு.. அது தான் நியாபகம் இருக்கான்னு பார்த்தேன் !!!!

நல்லதந்தி says:

வாங்க! ஜுர்கேன் க்ருகேர்! எல்லோரும் பதிலைப் போட்டப்ப உங்களை எப்படி மிஸ் பண்ணினேன்னு தெரியலை.
வாங்க epowerx!
வாங்க பாஸூ! நன்றி ஆனா எனக்கு பிடிச்சது போட்டோவில் உள்ள கமெண்டுதான்! :)
வாங்க மணிகண்டன்! நான் உபயோகிற குரோமிலையும்,ஃப்யர்ஃபாக்ஸிலையும்எந்த பாப் அப்பும் வற்ரதில்லையே ஐ.ஈ லேயும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லையே!
வாங்க பதி அந்த கமெண்டின் அடிப்படையே பேருந்துகளில் எழுதியுள்ள பினாத்தல்தான்! :)

சின்னப் பையன் says:

:-)))))))))))

ராஜ நடராஜன் says:

//அந்த தேர்தல் முடிந்து 40 தொகுதிகளும் உங்களுக்கே என்று மக்கள் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு அள்ளிக் கொடுத்தனர். மாறக இந்த கூட்டணி கும்பல் மக்களுக்கு, நாற்பது எங்களுக்கு, நாமம் உங்களுக்கு என்று நடத்திய நாடகத்தை எல்லோரும் அறிவார்கள்.//

பஞ்ச் நல்லாவே இருக்குது.ஆனா இவங்களுக்கு நாமம் போடனுமின்னா ஜெயலலிதாவை மீண்டும் டான்ஸ் ஆடச்சொல்கிறீர்கள் என்றும் அர்த்தம்.இது ஓ.கே வா தமிழகத்துக்கு?எனக்கென்னெமோ எல்லோரும் ஓட்டுக்களை பங்கு போட்டுக்கப் போறாங்க இந்த முறை.40/40 யாருக்கும் சாத்தியமில்லை.

நல்லதந்தி says:

வாங்க கிரேஸிபையன்! :) நன்றி!

வாங்க ராஜநடராஜன் 40க்கு 40 இந்த முறை சாத்தியமே இல்லை! நன்றி!