குருவாயூர் கோவிலைக் கொள்ளையடிக்க முயன்ற திப்புசுல்தான்! -- 1

Posted on Sunday, August 17, 2008 by நல்லதந்தி

வரலாறு, அது எழுதுபவரின் பார்வையையும், கலந்தே எழுதப்படுகிறது..ஒரு மன்னன் வாழ்ந்த காலத்தில் எப்படி இருந்து இருப்பான் என்பது பிற்காலத்தில் நமக்கு கிடைக்கும் சில ஆதரங்களைக் கொண்டே புனையப்படுகிறது.கிடைக்கும் ஆதாரங்களெல்லாம் அந்த மன்னனாலேயே உருவாக்கப்பட்ட, கல்வெட்டாகவோ,பட்டையங்களாகவோ இருந்தால் அது அவனைப் புகழமட்டுமே செய்யும், அவனுடைய மறுபக்கத்தை காட்டாது.அவனுடைய மறுபக்கத்தை பார்க்கவேண்டுமென்றால்,
அவன் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்களைத்தான் கேட்க வேண்டும்.



வரலாற்றை நாம் பாடபுத்தகளில் மட்டுமே படித்திருக்கிறோம்.ஒரு குடும்பத்தின் வரலாறு மூலமாக, விஜய நகரப் பேரரசின் வீழ்ச்சியிலிருந்து ஆங்கில ஆட்சிகாலம் வரை நடந்த விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் போது அந்த காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை நாமே நேரில் அனுபவிக்கிற உணர்வு உண்டாகிறது.



கீழே உள்ள கட்டுரை ஓம் சக்தி இதழின் 1998-ம் ஆண்டு தீபாவளி மலரில் வெளியிடப்பட்டது.







இது ஒரு மெனத்கல்ய பிராமணக் குடும்பத்து வரலாறு.விஜய நகர் வீழ்ச்சி தொடங்கி கும்பினி ஆட்சி கொங்கு நாட்டில் கால் கொள்ளும் காலம் வரையிலான நிகழ்வுகள் அடங்கியது.சுவடியின் காலம் 1914.





திப்புசுல்த்தான் பற்றிய கோரச்சித்திரத்தை இந்த ஆவணம் மூலம் பார்க்க முடிகிறது,அதோடு ஆங்கிலேயர் ஆட்சியை வரவேற்று,அவர்களுக்கு இங்குள்ள மக்கள் கோட்டை கொத்தளங்களைத் திறந்து விட்டனர் என்ற வேதனை தரத்தக்க செய்தியையும் இது புலப்படுத்துகிறது.





சேலம் தமிழாசிரியர் புலவர் சீனிராமநாதனிடமிருந்து 1994-ல் சேலம் மாவட்ட வரலாற்று ஆவணக்குழுவிற்குக் கிடைக்கப் பெற்றது,இந்த ஆவணம்.இப்படிப் பட்ட குடும்ப வரலாறு,பொது வரலாற்றை வரைவதற்கு உதவும் என்னும் நோக்கில் "கோவிந்த பட்டரின் குடும்ப சரித்திரம்" இங்கு வெளியிடப்படுகிறது.





கோவிந்த பட்டர் குடும்பசரித்திரம் -- பீடிகை.





நான் கோவிந்த பட்டருக்கு ஜேஷ்ட புத்திர வம்சத்தில் ஏழாம் தலைமுறைப் பேரன்மாரில் ஒருவன். என்னை நம் பந்து வர்கத்தினர் சாமண்ணா என்றும்,அன்னியர்கள் சுப்புராயர் என்றும் அழைப்பார்கள்.இப்போது நான் ஏறக்குறைய 70 வயது சென்ற விருத்தனாகி விட்டேன்.





தற்காலம், நம்ம குடும்ப பூர்வ சரித்திரம் தெரிந்தவர்கள் என்னைத் தவிர யாரும் இல்லை.அது என்னோடு மறைவதாக இருப்பதால்,நம்ம குடும்பத்தின் சந்ததியராகிய நீங்களும் உங்கள் வம்சர்களும் மறவாதிருக்கும்,இச்சிறு புத்தகத்தில் எழுதி வைத்ததும் இல்லாமல்,நம்ம வம்ச விருக்ஷத்தையும் இதனோடு சேர்த்திருக்கிறேன்.


இந்த வம்ச விருக்ஷம் கோவிந்த பட்டருடைய ஜேஷ்ட புத்திர வம்சத்தில் வெங்கடபதி அய்யருக்குப் பேரனான சத்திய மங்கலம் வெங்கிட சுப்பையர் வம்ச பரம்பரையாக பெரியோர்கள் சொல்லக் கேட்டும்,நேரில் தெரிந்தும் எழுதி வைத்தது.1863-ம் வருஷத்தில் அவரால் எனக்குக் கொடுக்கலானது.அவர் 80 வருஷ காலம் பிழைத்திருந்து,1880-ம் வருஷத்தில் காலம் சென்றவர்.


வெங்கிட நாராயண அய்யர்-குடும்பபூர்வ சரித்திரத்தை நான்கு அத்தியாயங்களாக வகுத்து எழுதியிருக்கிறேன்.என்னிலும் வயதில் தாழ்ந்தவர்களைப் பற்றி வயதில் முதிர்ந்தோனாகிய நான், இந்தப் பூர்வ சரித்திரத்தில் பிரஸ்தாபிப்பது தகாது.மேலும்,அவர்களைப் பற்றிய சரித்திரம்,இக்கால சரித்திரமாகையால்,நம் குடும்பத்தின் பிற சந்ததியர் 5-வது அத்தியாயமாக எழுதி இதனோடு சேர்க்க வேண்டியது அவசியம்.





1914-ம் வருஷம்,பிப்ரவரி 22-ம் தேதி.


சாமண்ணா ஆர். சுப்பையர்.








தொடர்ச்சி பிறகு.....

25 Responses to "குருவாயூர் கோவிலைக் கொள்ளையடிக்க முயன்ற திப்புசுல்தான்! -- 1":

கோவி.கண்ணன் says:

//திப்புசுல்த்தான் பற்றிய கோரச்சித்திரத்தை இந்த ஆவணம் மூலம் பார்க்க முடிகிறது,அதோடு ஆங்கிலேயர் ஆட்சியை வரவேற்று,அவர்களுக்கு இங்குள்ள மக்கள் கோட்டை கொத்தளங்களைத் திறந்து விட்டனர் என்ற வேதனை தரத்தக்க செய்தியையும் இது புலப்படுத்துகிறது.//

இதையெல்லாம் தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறோம். ஆங்கிலேயர்களின் கைக்கூலிகளாக இருந்தவர்கள் பற்றியும் எழுதுவீர்களா ?

இன்னும் தீண்டாமை கொடுமை, பிறப்பால் உயர்ந்தவன் என்று கூச்சமில்லாமல் சொல்வதெல்லாம் நடந்துவருகிறதே, அதனைப் பற்றி எழுதினாலும் சமூகம் மாறும்.

திப்பு சுல்தானைப் பற்றி தெரிந்து கொண்டு இந்துவெறியைவளர்த்துக் கொள்ள முடியும் என்பதைத் தவிர்த்து வெறு என்ன பலன் இருக்கிறது ? பதிவின் நோக்கம் அதுவா ?

நல்லதந்தி says:

//திப்பு சுல்தானைப் பற்றி தெரிந்து கொண்டு இந்துவெறியைவளர்த்துக் கொள்ள முடியும் என்பதைத் தவிர்த்து வெறு என்ன பலன் இருக்கிறது ? பதிவின் நோக்கம் அதுவா ?//

பதிவின் அதுவல்ல! அந்த கால அரசியல் ஓட்டத்தில் கலந்து இருந்த ஒரு பரம்பரையின் வரலாற்றைத் தெரிந்து கொள்வதுதான்!.மேலும் நீங்கள் குறிப்பிட்ட வாசகம் என்னால் எழுதப் பெற்றது அல்ல!.அது என் முன்னுரைக்கு பின்னால்,அந்த கட்டுரையாளரால் எழுதப்பெற்றது!.அந்த காலச்சூழ்நிலையைத் தெரிந்து கொள்வது தவறில்லை என்றே நான் நினக்கிறேன்! :)
நன்றி நண்பர் திரு.கோவி.கண்ணன்.

நல்லதந்தி says:

//திப்பு சுல்தானைப் பற்றி தெரிந்து கொண்டு இந்துவெறியைவளர்த்துக் கொள்ள முடியும் என்பதைத் தவிர்த்து வெறு என்ன பலன் இருக்கிறது ? பதிவின் நோக்கம் அதுவா ?//

பதிவின் நோக்கம் அதுவல்ல! அந்த கால அரசியல் ஓட்டத்தில் கலந்து இருந்த ஒரு பரம்பரையின் வரலாற்றைத் தெரிந்து கொள்வதுதான்!.மேலும் நீங்கள் குறிப்பிட்ட வாசகம் என்னால் எழுதப் பெற்றது அல்ல!.அது என் முன்னுரைக்கு பின்னால்,அந்த கட்டுரையாளரால் எழுதப்பெற்றது!.அந்த காலச்சூழ்நிலையைத் தெரிந்து கொள்வது தவறில்லை என்றே நான் நினக்கிறேன்! :)
நன்றி நண்பர் திரு.கோவி.கண்ணன்.

நல்லதந்தி says:

//திப்பு சுல்தானைப் பற்றி தெரிந்து கொண்டு இந்துவெறியைவளர்த்துக் கொள்ள முடியும் என்பதைத் தவிர்த்து வெறு என்ன பலன் இருக்கிறது ? பதிவின் நோக்கம் அதுவா ?//

பதிவின் நோக்கம் அதுவல்ல! அந்த கால அரசியல் ஓட்டத்தில் கலந்து இருந்த ஒரு பரம்பரையின் வரலாற்றைத் தெரிந்து கொள்வதுதான்!.மேலும் நீங்கள் குறிப்பிட்ட வாசகம் என்னால் எழுதப் பெற்றது அல்ல!.அது என் முன்னுரைக்கு பின்னால்,அந்த கட்டுரையாளரால் எழுதப்பெற்றது!.அந்த காலச்சூழ்நிலையைத் தெரிந்து கொள்வது தவறில்லை என்றே நான் நினக்கிறேன்! :)
நன்றி நண்பர் திரு.கோவி.கண்ணன்.

Anonymous says:

//இதையெல்லாம் தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறோம்.//

//திப்பு சுல்தானைப் பற்றி தெரிந்து கொண்டு இந்துவெறியைவளர்த்துக் கொள்ள முடியும் என்பதைத் தவிர்த்து வெறு என்ன பலன் இருக்கிறது ? பதிவின் நோக்கம் அதுவா ?//

அப்போ, ஆச்சா போச்சான்னா, 'மனுஸ்ம்ரிதி', 'பார்ப்பனப் பன்னாடைகள்'-ன்னு எழுதுறவங்க பதிவின் நோக்கமும், வெறியையும் வெறுப்பையும் வளர்ப்பது தானே தவிர வேறில்லைன்னு ஒத்துக்குறீங்க தானே? ஏன்னா, மனுஸ்ம்ரிதியையோ அர்த்தசாஸ்த்திரத்தையோ இப்போதெல்லாம் எந்த ஸோ-கால்டு ப்ராம்மணரும் படிப்பதில்லை; அப்போ "இதையெல்லாம் தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறோம்" என்கிற தங்கள் கேள்வி அதற்கும் தானே பொருந்தும்? அதைப் பற்றியெல்லாம் மட்டும் தோண்டித் துருவி (சமயத்தில், திரித்து மறித்து) பதிவு எழுதுவானேன்? வேண்டாத வேலை மாத்திரமல்ல, வெறுப்பைத் தூண்டி திரி கிள்ளி கொளுத்திப் போடுற வேலையும் தானே அது?

நீங்க "ஆ, அதெப்படி, அது 'சமூக நீதி' இல்லையா?" அப்படீன்னு டகால்டி விடாதவருன்னா, அத்தகைய பதிவுகளிலும் சென்று இதே போன்ற தங்கள் நல்லெண்ண பிரச்சாரத்தையும் அன்பின் செய்தியையும் உரக்கக் கூறவும்! :p

செய்யிறீங்களா பார்ப்போம்! எனக்கென்னமோ நம்பிக்கை இல்ல; இருந்தாலும் பார்க்கலாம்! :p

-கரை ஏறிட்டவங்கள்ல ஒருத்தேன்!

Anonymous says:

//திப்பு சுல்தானைப் பற்றி தெரிந்து கொண்டு இந்துவெறியைவளர்த்துக் கொள்ள முடியும் என்பதைத் தவிர்த்து வெறு என்ன பலன் இருக்கிறது ? பதிவின் நோக்கம் அதுவா ?//

ஆமாங்கோ முழுக்க முழுக்க அதுதான்.. நல்லதந்தி கிட்ட கேட்ட என்ன சொல்லுவார்... ?
"அவங்கள நிறுத்த சொல்லு... நான் நிறுத்துறேன்..."

Anonymous says:

கோவி. கண்ணன் அவர்களே.. ! எத்த்தனயோ இசுலாமிய பதிவர்கள் இந்து மதத்தை தாக்கி இந்து கடவுள்கள் / தலைவர்களை குறைத்து சொல்லி வருகிறார்கள். அங்கெல்லாம் சென்று இது போன்று குரல் கொடுப்பெர்களா... அல்லது குரல் கொடுத்து இருக்குறீர்களா...

Anonymous says:

//நீங்க "ஆ, அதெப்படி, அது 'சமூக நீதி' இல்லையா?" அப்படீன்னு டகால்டி விடாதவருன்னா, அத்தகைய பதிவுகளிலும் சென்று இதே போன்ற தங்கள் நல்லெண்ண பிரச்சாரத்தையும் அன்பின் செய்தியையும் உரக்கக் கூறவும்! :p//

ஏன் நல்லதந்தி... இப்படி அனாநியாவேல்லாம் வந்து உங்க கோபத்தை காட்டுறீங்க... நேராவே சொல்லி இருக்கலாமே :)

Anonymous says:

நல்லதந்தியோட டிரவுசர் கிழிய போகுது [அடிக்கடி என்னை தாக்கி பதிவா போடுற... இன்னைக்கு உன்னை விடுறதா இல்லை ]

குரங்கு says:

தயவுசெய்து மத துவேசத்தை தூண்டாதீங்க...

இதே போல் உள்ள பதிவு கண்டிப்பாக முஸ்லீம் சகோதரர்களேடு மத துவேசத்தைதான் வளர்க்கும்.

மகாத்மா என்று அழைக்கப்பட்ட காந்தியே கேட்சேயின் பார்வையில் தப்பானவரா தெரிந்தார். இந்த கட்டுரை எழுதியவரின் பார்வையில் திப்பு சுல்தான் தீயவர். எதுவும் எப்படியும் இருக்கடும் நல்ல வாழ்ந்து கொண்டுயிருக்கிற மக்களிடையே பிளவு உண்டாக்கதீங்க.

Anonymous says:

எந்த வரலாறு முழுக்க முழுக்க உண்மையை சொன்னதில்லை... நாளைக்கு நல்லதந்தி பெரிய தியாகின்னு கூட வரலாறு சொல்லலாம் :)

Anonymous says:

கலைஞரோட கேள்விக்கு பதில் சொல்லுங்க குரங்கு..
"எத்த்தனயோ இசுலாமிய பதிவர்கள் இந்து மதத்தை தாக்கி இந்து கடவுள்கள் / தலைவர்களை குறைத்து சொல்லி வருகிறார்கள். அங்கெல்லாம் சென்று இது போன்று குரல் கொடுப்பெர்களா... அல்லது குரல் கொடுத்து இருக்குறீர்களா..."
அப்போதெல்லாம் துவேஷம் வளராதா?

குரங்கு says:

====
தொடைநடுங்கி said...
கலைஞரோட கேள்விக்கு பதில் சொல்லுங்க குரங்கு..
"எத்த்தனயோ இசுலாமிய பதிவர்கள் இந்து மதத்தை தாக்கி இந்து கடவுள்கள் / தலைவர்களை குறைத்து சொல்லி வருகிறார்கள். அங்கெல்லாம் சென்று இது போன்று குரல் கொடுப்பெர்களா... அல்லது குரல் கொடுத்து இருக்குறீர்களா..."
அப்போதெல்லாம் துவேஷம் வளராதா?
====

கண்டிப்ப வளரும்...

நானே/கோவி.கண்ணனே செல்லும் இடத்தில் எங்கு தப்பு நடந்தாலும் தட்டி கேட்போம், கேட்டிறிக்கிறேன். எங்களுக்கு மதம் கிடையாது. மதம் பிடிக்கவும் பிடிக்காது.

எங்கெல்லாம் அநீதி நடக்கிறதோ அங்கெல்லாம் நான் தோன்றுவேன்
--கீதை.

Anonymous says:

//இதையெல்லாம் தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறோம்.//

பகுத்தறிவாளன் என்பவன் இரு பக்கங்களையும் அறிந்து தன் சொந்த அறிவால் முடிவெடுப்பவன்.
ஆகவே சரியோ தவறோ அறிந்து கொள்வதில் என்ன தயக்கம்?
சொல்லப்படுவது பொய்யெனில் சவுக்கை சுழற்றுவது தோழர்களுக்கு கடினமா என்ன?
அவன் சொன்னான், இவன் சொன்னான், அதனால் சரியாதனிருக்கும் என எண்ணுவது முறையோ?

நல்லதந்தி says:

//ஏன் நல்லதந்தி... இப்படி அனாநியாவேல்லாம் வந்து உங்க கோபத்தை காட்டுறீங்க... நேராவே சொல்லி இருக்கலாமே :)//

அடப்பாவி...மன்னிக்க அடப்பாவியரே..(அடப்பாவிக்கு மரியாதைபாலுக்கு என்னங்க சொல்லுறது)கலைஞர்ன்னு பேர் வச்சதுக்கே இவ்வளவு கோக்குமாக்குத்தனமா? :)

வேணாம் அழுதுருவேன் :)

நல்லதந்தி says:

//நல்லதந்தியோட டிரவுசர் கிழிய போகுது [அடிக்கடி என்னை தாக்கி பதிவா போடுற... இன்னைக்கு உன்னை விடுறதா இல்லை ]//
என்னோடது கோவணம் தானே?.வேணும்ணா உருவப்போறேன்னு சொல்லுங்க!

நல்லதந்தி says:

//தொடைநடுங்கி said...
எந்த வரலாறு முழுக்க முழுக்க உண்மையை சொன்னதில்லை... நாளைக்கு நல்லதந்தி பெரிய தியாகின்னு கூட வரலாறு சொல்லலாம் :)//

அப்படி போடு அருவாளே! :)

நல்லதந்தி says:

//தயவுசெய்து மத துவேசத்தை தூண்டாதீங்க...//

ஒரே தமாஷு! :).ரொம்பத்தான் கிண்டல் செய்யிறீங்க!

Anonymous says:

என்ன தந்திரம் வச்சிருக்கேங்க கோவணதந்தி!! நீங்க எதை எழுதுனாலும் சூடான இடுகைல வந்துடுது :)

நல்லதந்தி says:

//கலைஞர் said...
என்ன தந்திரம் வச்சிருக்கேங்க கோவணதந்தி!! நீங்க எதை எழுதுனாலும் சூடான இடுகைல வந்துடுது :)//

ஒரு வேளை HOT MAIL லா இருக்குமோ? :)

கோவி.கண்ணன் says:

//-கரை ஏறிட்டவங்கள்ல ஒருத்தேன்!//

தன்னை இந்த சாதிக்காரன் என்று சொல்லிக் கொள்ளும் வரை, என் சாதியைப் பற்றி சொல்லிட்டாங்க என்று ஓடிவரும் வரை ஒருத்தரும் கரையேரல, இன்னும் 'கறை' ஏறித்தான் இருக்கு. முடிந்த அளவு அகற்ற முயலுங்க, நீங்க ஏறி நிற்பது கரையா மணல்திட்டா என்பதை சுயபரிசோதனை செய்து பார்த்துக் கொள்ளவும்.

இதுக்கும் மேல இங்கு பேச எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

Anonymous says:

//என் சாதியைப் பற்றி சொல்லிட்டாங்க என்று ஓடிவரும் வரை//

//நீங்க ஏறி நிற்பது கரையா மணல்திட்டா என்பதை சுயபரிசோதனை செய்து பார்த்துக் கொள்ளவும்//

அது சரிங்க. ஆனாக்க, நீங்க எதுக்குங்க இப்போ ஓடோடி வந்து மொத பின்னூட்டம், அதும் கண்டன பின்னூட்டம், போட்டீங்க? உங்கள எது ஓடி வர வெச்சிச்சி? அது மட்டுமில்லாம, என்னோட பின்னூட்டத்துல இருக்குற நியாயத்தைப் பத்தி ஒரு வார்த்த பேசாம விஷயத்தைத் திருப்பி என் பக்கமே தானே திருப்பி விடுறீங்க! உங்கள எது எல்லாத் தரப்பு நியாயத்தையும் பாக்க விடாம கண்ண மறைக்குது? நான் செய்யிறேன், ஆனா நீங்களும் சுய பரிசோதனை செய்யத் தயாரா? செய்வீங்களா?

-கரை ஏறிட்டவங்கள்ல ஒருத்தேன்!

Anonymous says:

//தன்னை இந்த சாதிக்காரன் என்று சொல்லிக் கொள்ளும் வரை, //

சரியாச் சொன்னீங்க! ஆனா ஒரு சந்தேகமுங்க! தன்னை இந்த சாதின்னு சொல்லிக்காதவைங்களக் கூட, "அடேய், நீ இந்த சாதியச் சேர்ந்தவன் தானே! ஒன்னையெல்லாம் . . . " அப்புடீன்னு சொல்றவைங்கள என்னாங்க செய்யிறது?
இல்ல, ஒருவேளை அப்படி தன் சாதியச் சொல்லிக்காதவைங்களக் கூட சாதியச் சொல்லித் திட்டுறது 'சமூக நீதி'-ங்கிறதால அது குத்தமில்லையோ என்னவோ!

இப்போ, உதாரணத்துக்கு நம்ம ஞாநியையே எடுத்துக்கிடுங்க. அவுரு, பூணோலெல்லாம் கழட்டிப் போட்டு நெம்ப நாளாச்சுதுங்கோவ். தன்னை இந்த சாதின்னு சொல்லிக்கிறதும் கெடையாது. ஆனா பாருங்கோ, அவுரு எதா சொல்லீரக் கூடாது; ஒடனே அடிச்சு புடிச்சு பனியனுக்குள்ளாற போயி பூணோலத் தேடித் திட்டித் தீக்குதுங்கோ. இப்போ உங்கள மாதிரி 'பகுத்தறிவுவாதிங்க' என்ன செய்யோணுமுன்னா, இதையும் தானே கண்டிக்கணும், இல்லீங்களா? என்ன நான் சொல்றது? இல்லையின்னா, நெசமாவே "பகுத்தறிவுவாதிகளா" இல்ல "பிரித்தாளும் வியாதிகளா"-ன்னு ஒரு சந்தேகம் வந்துடுது பாருங்க! நடுநிலையாளன்னா நெசமாவே கண்ணத் தொறந்து ரெண்டு பக்கமும் பாக்கோணும், நியாயத்தைப் பேசோணும், ஆமா! இந்த ஒரு கண்ணுல வெண்ண மறு கண்ணுல சுண்ணாம்புங்கிறதெல்லாம் சுத்தமாச் சரியில்ல!

ஆனானப்பட்ட பெரியாரே கூட "பாப்பானையும் பாம்பையும் ஒண்ணா பாத்தா பாப்பான மொதல்ல அடி"-ன்னு சாதியச் சொல்லித் தானே சொன்னதாச் சொல்றாய்ங்கெ! அதாவது "சாதியை ஒழிப்போம் ஒழிப்போம்"-ன்னு சொல்றதெல்லாம் உண்மையில "ப்ராம்மண சாதியை ஒழிப்போம்" அப்டீன்னு தான் அர்த்தமுங்களா, ஏனுங்க? பரவால்ல, சும்மா சொல்லுங்க, யார் சொல்லாதத நீங்க புதுசாச் சொல்லீரப் போறீங்க!

-கரை ஏறிட்டவங்கள்ல ஒருத்தேன்!

கோவி.கண்ணன் says:

//இப்போ உங்கள மாதிரி 'பகுத்தறிவுவாதிங்க' என்ன செய்யோணுமுன்னா, இதையும் தானே கண்டிக்கணும், இல்லீங்களா? என்ன நான் சொல்றது? //

நீங்க என்ன சொல்றது ?

அதையெல்லாம் கண்டிச்சு சென்ற ஆண்டே பதிவு எழுதியாச்சு. முடிஞ்சா படிச்சு பாருங்க !

http://govikannan.blogspot.com/2007/10/blog-post_25.html

Anonymous says:

//என் சாதியைப் பற்றி சொல்லிட்டாங்க என்று ஓடிவரும் வரை ஒருத்தரும் கரையேரல, இன்னும் 'கறை' ஏறித்தான் இருக்கு.//

புரியுதுங்க. அதாவது, "அவனே, இவனே"-ன்னு ஒருத்தர் சாதியச் சொல்லித் திட்டுறவைங்க திட்டீட்டே இருப்பாய்ங்கெ; ஆனா, அது சாதீயம் கெடையாது; பகுத்தறிவுவாதம், சமூக நீதி! "ஏன்யா திட்டுற?"-ன்னு கேட்டா அது சாதீயம், அப்படித் தானுங்களே? நல்ல தெளிவாத் தான் இருக்கீங்க. வீட்டுல மொகம் பாக்குற கண்ணாடி இருக்குதுங்களா?

-கரை ஏறிட்டவங்கள்ல ஒருத்தேன்!