ஜெயலலிதா இந்த முறையும் தேர்தலில் வெற்றி பெறுவது சாத்தியம் இல்லையா?

Posted on Wednesday, August 27, 2008 by நல்லதந்தி


அ.தி.மு.க வை அழிப்பதற்கு கலைஞர் சிறு துரும்பையும் கிள்ளிப் போடத்தேவையில்லை,என்கிற அளவிற்கு அதை அழிப்பதற்கு,கலைஞரிடம் காசு வாங்காத அடியாளாய், அரும்பாடு பட்டு வருகிறார் செல்வி ஜெயலலிதா!.


எம்.ஜி.ஆர் காலத்தில் எம்.ஜி.ஆரைத்தவிர,நெடுஞ்செழியன்,ராசாராம்,கே.வி.கிருஷ்ணசாமி,முத்துசாமி,சேலம் கண்ணன்,பொன்னையன்,சுப்புலட்சுமி ஜெகதீசன்,விஜயலட்சுமி,சாமிநாதன் போன்ற, பொது மக்களுக்குப் பரிச்சயமான பல புள்ளிகள் அ.தி.மு.க வில் இருந்தார்கள்.ஏன் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றத்தலைவரான முசிறி புத்தனைக் கூட பொது மக்களுக்குத் தெரியும்.


ஆனால் செல்வி ஜெயலலிதாவின் அ.தி.மு.க வில் ஜெயலலிதாவைத் தவிர,மற்றவர்கள் யாரையும் அ.தி.மு.க வினருக்கேக் கூடத் தெரியாது.

தெரிந்த சிலரில் செல்வகணபதியும் ஒருவர்.1991-ம் ஆட்சியின் போது அ.தி.மு.க வின் ஆதி முதல் அந்தம் வரை ஊழல் புகார்களில் சிக்குண்ட போது செல்வகணபதியும் சுடுகாட்டு கொட்டகைப் போன்ற புகார்களில் மாட்டினார்.


அதன் பின் கட்சிப் பணியிலிருந்து ஓரம் கட்டப் பட்ட அவர்,பிறகு நாடாளுமன்றத் தேர்தலின் போது வாழப்பாடி இராமமூர்த்தி சேலம் தொகுதியில் நிற்க, அவரை வெற்றிபெறவைக்க,வீரபாண்டி ஆறுமுகத்தின் அதிரடி அரசியலுக்கு தக்க பதிலடி கொடுக்க தகுந்தவர் செல்வகணபதிதான் என்று மீண்டும் செல்வி ஜெயலலிதாவால் அரசியல் வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட்டார்.அவர் நினைத்தது போலவே,வீரபாண்டி ஆறுமுகத்தின் அதிரடிக்குத் தக்க பதிலடி கொடுத்து, வாழப்பாடியை செல்வகணபதி வெற்றி பெறச் செய்தார்.பிறகு மீண்டும் செல்வி ஜெயலலிதாவால் ஓரம் கட்டப் பட்டார்.


காட்சிகள் மாறின கட்சிகளும் இடம் மாறின.அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வாழப்பாடி சேலம் தொகுதியில் போட்டியிட்ட போது தன் எதிரியாகிப் போன வாழப்பாடியைத் தோற்கடிக்க முடிவு செய்து செல்வி ஜெயலலிதா மீண்டும் ஒரங்கட்டப்பட்டிருந்தசெல்வகணபதியை,வாழப்பாடிக்கு எதிராக அ.தி.மு.க வேட்ப்பாளராகவே நிறுத்தினார்.


அந்த தேர்தலில் தன் தனித்திறமைக் காட்டி செல்வகணபதி வெற்றி பெற்றார்.அதோடு அவ்வளவுதான் மீண்டும் கட்சியில் ஓரம் கட்டப் பட்டார். அவர் நாடாளுமன்ற உறுப்பினராஇருந்தும்எல்லா நிகழ்ச்சிகளிலும் புறக்கணிக்கப் பட்டார்.காலம் ஓடியது.

மீண்டும் சேலம்கிழக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப் பட்டார்.இப்போது அடுத்த ஓரம் கட்டல் நடந்துள்ளது.அவர் கட்சியைவிட்டே நீக்கப் பட்டுள்ளார்.இந்த முறை செல்வகணபதி பொறுமையாக இருப்பாரா? அல்லது தி.மு.க.வில் சேருவாரா என்று தெரியவில்லை!.


அவர் தி.மு.க.வில் இணைவதை வீரபாண்டி ஆறுமுகம் ஏற்றுக் கொள்வாரா என்று தெரியவில்லை?.தன் குகையில் இன்னொரு சிங்கத்தை இருக்கவிடுமா, மற்றொன்று?


இப்படி துடிப்பும் செல்வாக்குமுள்ள ஒவ்வொரு,திறமைசாலிகளையும் நீக்கிவிட்டு அ.தி.மு.க தேர்தலில் கரையேறுமா?.செல்வி ஜெயலலிதாவிற்கே வெளிச்சம்!


வந்தசெய்தி!


அ.தி.மு.க., சேலம் கிழக்கு மாவட்ட செயலர் செல்வகணபதியை, கட்சியின் அடிப் படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி கட்சித் தலைமை உத்தரவிட்டதால் அ.தி. மு.க., வில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.கடந்த 1991ம் ஆண்டு ஜெயலலிதா தலைமை யில் அ.தி.மு.க., ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது.


அந்த தேர்தலின்போது கட்சியின் மாவட்ட இளைஞரணி செயலராக இருந்த செல்கணபதி, திருச்செங்கோடு தொகுதியில் வெற்றி பெற்று, கட்சித் தலைமையின் நம்பிக்கைக்கு உரியவர்களில் ஒருவரானார். அவருக்கு ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட செயலர் பதவியும், அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டன.ஒரு சில ஆண்டுகளில், அவரிடம் இருந்த மாவட்ட செயலர் பதவி பறிக்கப்பட்டது. 1996க்கு பின் தமிழகத்தில் தி.மு.க., தலைமை யிலான அரசு பொறுப்புக்கு வந்தது. அ.தி.மு.க., ஆட்சியின் போது நடந்த ஊழல் களை தூசு தட்டத் துவங்கியது.


அதில் முதல்கட்டமாக, செல்வகணபதி மீது சுடுகாட்டுக் கூரை ஊழல் வழக்கு பதிவு செய் யப்பட்டது.கடந்த 1999-2000 நாடாளுமன்ற தேர்தலில் காங்., கட்சி சார்பில் வாழப்பாடி ராம மூர்த்திக்கு சேலம் எம்.பி., சீட் வழங்கப்பட்டது. அவருக்கு சரியான போட்டியை ஏற்படுத்த, செல்வகணபதியை அ.தி.மு.க., தலைமை வேட்பாளராக அறிவித்தது. செல்வகணபதி வெற்றி பெற்றார். எம்.பி.,யாக இருந்தபோதும், அவரை கட்சித் தலைமை ஒதுக்கியே வைத்திருந்தது. கடந்த 2001ல் அ.தி.மு.க., ஆட்சிப்பொறுப்புக்கு வந்தபோதும், செல்வ கணபதிக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை.
13 ஆண்டு இடைவெளிக்கு பின் கடந்த சட்டசபைத் தேர்தலின்போது செல்வகணபதி யை, சேலம் கிழக்கு மாவட்டச்செயலராக கட்சித்தலைமை அறிவித்தது.அப்படியிருந்தும், அவரது பொறுப்பில் இருந்த சட்டசபை தொகுதிகளில் ஒன்றில் கூட அ.தி.மு.க., வெற்றி பெற முடியவில்லை. அடுத்து நடந்த உள்ளாட்சி தேர்தல் களிலும், அதே நிலை தான் ஏற்பட்டது.இந்நிலையில்,செல்வகணபதியின் எதிர்கோஷ்டியாக செயல்பட்ட அ.தி. மு.க., வினர், பல்வேறு புகார் மனுக்களை தலைமைக்கு அனுப்பி வைத்தனர்.


ஜாதி அடிப்படையில் கட்சியினரை நடத்துவது, எதிர் கோஷ்டியினரை பழிவாங்கும் வகை யில் செயல்படுவது,போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தில் தி.மு.க., ஆதரவாளர்களை நியமனம் செய்தது என புகார்கள் தெரிவிக்கப்பட்டன.மேலும், "சுடுகாட்டு கூரை வழக்கில் இருந்து விடுவிக்க செய்தால், அ.தி.மு.க.,வில் இருந்து விலகி தி.மு.க.,வில் இணைவேன்' என செல்வகணபதி, தி.மு.க., முக்கிய பிரமுகருக்கு உறுதியளித்ததாகவும், தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இந்த புகார்களை பெற்றுக்கொண்ட கட்சி தலைமை, வழக்கம்போல், எந்த விதமான நேரடி விசாரணையும் நடத்தாமல், செல்வகணபதியை கட்சியில் இருந்து நீக்கி விட்டது.


அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது, ஆதரவாளர்கள் மத்தியில் முணுமுணுப்பை ஏற் படுத்தியுள்ளது. இந்த நீக்கத்தை எதிர் கோஷ்டியினர் பெரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். ஏனெனில், சேலம் மாவட்டத்தில் வேறு எந்த அ.தி.மு.க., பிரமுகரை விடவும், செல்வகணபதிக்கு செல்வாக்கு அதிகம்."தங்களை விட செல்வாக்கான ஒருவர் இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில் புகார் மனு அனுப்பியவர்களின் நோக்கத்துக்கு கட்சி தலைமை பலியாகி விட்டது' என்கின்றனர் செல்வகணபதி ஆதரவாளர்கள்.

14 Responses to "ஜெயலலிதா இந்த முறையும் தேர்தலில் வெற்றி பெறுவது சாத்தியம் இல்லையா?":

வால்பையன் says:

நல்ல செய்தி, அரசியல் நிலவரங்களை தெரிந்து கொள்ள உங்கள் பிளாக் படித்தாலே போதும் போலிருக்குதே

Anonymous says:

//வால்பையன் said...
நல்ல செய்தி, அரசியல் நிலவரங்களை தெரிந்து கொள்ள உங்கள் பிளாக் படித்தாலே போதும் போலிருக்குதே//
அப்பா... இன்னிக்குத்தான் வால்பையனாரின் கருணை என் மேல் விழுந்து இருக்கு! :)

வால்பையன் says:

எப்போதுமே இருக்கு!
ஆனால் சில நேரங்களில் உங்கள் பின்னூட்ட பெட்டி திறக்க மறுக்கிறது!
உங்களுடைய பதிவுகள் தான் எப்போதுமே சூடான இடுக்கையில் வருகிறதே!
பிறகு ஏன் பின்னூட்டங்கள் சரியாக வருவதில்லை என்று யோசிக்கவும்!

Anonymous says:

அதை எப்படி சரி செய்வது,எனக்கு அந்த அளவிற்க்கு தொழில் நுட்பவிவரம் இல்லையே??.யாரவது உதவிசெய்தால்தான் உண்டு!.

Anonymous says:

மீ த அஞ்சாவது!.
பாவம் நல்லதந்தி நாமாவது கமெண்ட் போடலாமே!
:)

Anonymous says:

தமிழக அரசியல் குறித்து தொடர்ந்து எழுதுங்கள்.. ஆனால் ஒருதலை பட்சமாக வேண்டாம். :)

நல்லதந்தி says:

//தமிழக அரசியல் குறித்து தொடர்ந்து எழுதுங்கள்.. ஆனால் ஒருதலை பட்சமாக வேண்டாம். :)//

எங்கண்ணா ஒருதலைப் பட்சமா எழுதினேன்.அப்படித் தெரியக்கூடாதுன்னுதானே இன்னிக்கு அ.தி.மு.க. மேட்டரைப் போட்டேன்.இன்னிக்குப் பாத்து இப்படி சொல்லிப்புட்டீங்களே! :)

கோவி.கண்ணன் says:

ஜெ அப்பாவி என்று சசியின் கட்டுப்பாட்டில் அதிமுக வழிதவறுவதாக சொல்லப்படுவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள், ஜெ அப்பாவி என்றெல்லாம் நான் நினைக்கவில்லை.

நல்லதந்தி says:

//கோவி.கண்ணன் said...
ஜெ அப்பாவி என்று சசியின் கட்டுப்பாட்டில் அதிமுக வழிதவறுவதாக சொல்லப்படுவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள், ஜெ அப்பாவி என்றெல்லாம் நான் நினைக்கவில்லை.//


ஜெ அப்பாவி என்று சொல்லமுடியாது.ஆனால் சசி குடும்பத்தின் கட்டுப் பாட்டில் இருக்கிறார் என்பதையும் மறுக்க முடியாது!.அதிமுக வில் ஏற்படும் குழறுபடிகளுக்கு சசி குடும்பத்தினரே முக்கிய காரணம்.

Anonymous says:

உங்கள் பின்னூட்ட பெட்டியை இப்படி பாக்ஸுக்குள் இல்லாமல் இடது புறம் திறப்பது போல் வைக்கவும். அது தான் உங்களுக்கு பின்னூட்டம் வராமைக்கு காரணம்

நல்லதந்தி says:

// செந்தழல் ரவி said...
உங்கள் பின்னூட்ட பெட்டியை இப்படி பாக்ஸுக்குள் இல்லாமல் இடது புறம் திறப்பது போல் வைக்கவும். அது தான் உங்களுக்கு பின்னூட்டம் வராமைக்கு காரணம்//
நன்றி நண்பர் செந்தழல் ரவி.உங்க புண்ணியத்தில சைட்டு கொஞ்சம் சூட்டாச்ச்சு!.:)
பின்னூட்டப் பெட்டியை எப்படி மாற்றுவது என்று தெரியவில்லை.டெம்ளேட் மாற்றினால் சரியாகிவிடுமா?.டெம்ளேட் மாற்றினால் ஏதாவது பிரச்சனை வருமா?.... முயற்சி செய்கிறேன்.
மீண்டும் உங்களுக்கு நன்றி!

Anonymous says:

டேம்ளேட்ட மாத்துங்க என்ன ஒரே கிரே கலரா இருக்கு.சலிக்க வைக்குது

Anonymous says:

எப்படியோ

இடுகை சூடானா சரி...!!!

டெம்ப்ளேட்டை மாற்றுவதால் எந்த பிரச்சினையும் வராது என்று நினைக்கிறேன்...

பின்னூட்ட பெட்டிக்கான கமெண்ட் செட்டிங்ஸையாவது மாற்றவும்...

எதிர்க்கட்சியாக இருந்தாலும் பரவாயில்லை, லக்கிலூக்காரிடமே ஐடியா கேட்கலாம் :))))

நல்லதந்தி says:

//எதிர்க்கட்சியாக இருந்தாலும் பரவாயில்லை, லக்கிலூக்காரிடமே ஐடியா கேட்கலாம் :))))//

அ.தி.மு.க ன்னே முத்திரை குத்தியாச்சா? :)


செட்டிங்ஸை மாற்றப் பார்க்கிறேன்!.நன்றி