குசேலன்-உருகிய கனிமொழி

Posted on Sunday, August 3, 2008 by நல்லதந்தி

நேற்று காலை குசேலன் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை ஆதரவற்ற குழந்தைகளுடன் பார்த்த கனிமொழி எம்பி ஒரு கட்டத்தில் தன்னையும் மீறி அழுதுவிட்டதாகக் கூறினார்.சூப்பர் ஸ்டார் ரஜினியின் குசேலன் திரைப்படம் இன்று உலகமெங்கும் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியானது.சென்னையிலுள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் வாழும் குழந்தைகளுக்காக இந்தப் படத்தின் சிறப்புக் காட்சியை பிரமிட் சாய்மிரா நிறுவனம் இன்று காலை ஏற்பாடு செய்திருந்தது.சென்னை உட்லண்ட்ஸ் திரையரங்கில் நடந்த இந்த சிறப்பகு காட்சியை குழந்தைகளோடு சேர்ந்து காண வந்திருந்தார் முதல்வர் கருணாநிதியின் மகளும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி.படம் முடிந்த பிறகு நிருபர்களிடம் கூறுகாயில், மிக அற்புதமான திரைப்படம் குசேலன் என்று பாராடினார். படத்தின் இறுதிக் காட்சியில் தான் நெகிழ்ந்துவிட்டதாகவும், ஒருகட்டத்தில் தன்னையும் மீறி கண்ணீர் விட்டதாகவும் தெரிவித்தார்.தமிழில் ஒரு அற்புதமான முயற்சிக்கு வழிகாட்டியிருக்கிறார் ரஜினிகாந்த் அவர்கள். இந்த மாதிரி நல்ல படங்கள்தான் மக்களின் ரசனையை உயர்த்தும் என்றும் அவர் கூறினார். தமிழ் மையம் அமைப்பின் ஜெகத் கஸ்பர் ராஜூம் இந்தப் படத்தைக் குழந்தைகளுடன் பார்த்தார். மிக அருமையான, ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் என்றார் அவர்.இந்த சிறப்புக் காட்சியைப் பார்க்க குசேலன் இயக்குநர் பி.வாசு, பிரமிட் சாய்மிரா நிர்வாக இயக்குநர் பி.எஸ்.சாமிநாதன் ஆகியோரும் வந்திருந்தனர்.

நன்றி: thatstamil

3 Responses to "குசேலன்-உருகிய கனிமொழி":

நானானி says:

நீங்களும் யாரோ எவரோன்னு பாக்க வந்தேன். குசேலன் விவகாரம் பத்தி நல்ல எழூதியிருக்கிறீங்க.
மொத்தத்தில் தமிழ்நாட்டு மக்களை
ஏமாளிகளாகவும் கோமாளிகளாகவும்
அப்பாவிகளாகவும் எண்ணிக்கொண்டிருக்கும் தலைவர்களும் நடிகர்களும் அதை உணர்வதெப்போ? அவர்களின் நாடகங்கள் புரியாமல் கொண்டாடிக் கொண்டிருக்கும் தொண்டர்களும் ரசிகர்களும் விழிப்பதெப்போ?

Anonymous says:

வடிவேலு நயந்தாராவின் காமனெடிக்காட்சிகளையும் கனிமொழி சிறுவர்களுக்கு காண்பித்தாரா? இதெல்லாம் ரொம்ப ஒவர்.

goma says:

உளியின் ஓசையைப் பற்றி என்ன சொன்னார் என்று கேட்டு வெளியிட்டால் படம் பார்க்க தோதாக இருக்கும்