விஜயகான்?.இஃப்தார் அரசியலின் இம்சைகள் ஆரம்பம்!

Posted on Tuesday, September 30, 2008 by நல்லதந்தி




அரசியல் தலைவர்கள் இஃப்தார் விருந்து கொடுப்பது.விருந்துக்குச் செல்வது என்பது இராஜாஜி-காமராஜர்-அண்ணா போன்ற தலைவர்கள் காலத்தில் இருந்ததாகத் தெரியவில்லை.டெல்லி அரசியல்வாதிகள், பொதுவாக காங்கிரஸ்காரர்களால் முஸ்லீம்களின் ஓட்டுக்காக ஆரம்பித்து இருப்பார்கள் என்றே நினக்கிறேன்.

தமிழ்நாட்டில் இந்த மாதிரி ஒட்டுக்காக வித்தைக் காட்டத் தெரிந்தவரான கலைஞரால் தான் இம் மாதிரியான வியாதிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்க வேண்டும். எம்.ஜி.ஆர் கூட இந்த விளையாட்டைக் கை கொள்ளவில்லை. எனென்றால் அப்போது முஸ்லீம்களின் ஓட்டுக்கள் முழுமையாக அவருக்கே விழுந்து கொண்டிருந்தது.மேலும் அரசியலில் அவர் மதத்தை கலக்க நினைத்ததில்லை.

இப்போது என்ன நடக்கிறது.இரம்ஜானுக்காக முஸ்லீம்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்களோ இல்லையோ?.இந்த சீசனுக்கு ஓட்டு பொறுக்க இந்த அரசியல் வாதிகள் ரம்ஜானை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

அவர்கள் தத்தம் கட்சிகளில் உள்ள முஸ்லீம் அடிப்பொடிகளுக்கு சமிக்ஞை கொடுத்து விட்டால் போதும் உடனே அரசியல் இஃப்தார் விழாக்கள் ஆரம்பமாகிவிடும்.

கலைஞருடன் ஸ்டாலினும் இன்ன பிற அமைச்சர்களும் பல் வேறு விழாக்களில் பங்கெடுக்க ரம்ஜான் நோன்பு களைக் கட்டத்துவங்கிவிடும்.
ஒரு பக்கம் கலைஞர் முஸ்லீம்களுக்கு தன் வழக்கமான குல்லா போட (!) மறு பக்கம் அவர்கள் அவருக்கு குல்லா போட ,அந்த போட்டோக்கள் அடுத்த நாள் பத்திரிக்கைகளில் பிரசுரமாக அமர்களமாக ஆரம்பமாகி விடும் ஓட்டு பொறுக்கும் அரசியல். மற்றத் தலைவர்களாவது விருந்துக்குப் போனோமா,நோன்புக் கஞ்சி குடிக்கிற போஸ் கொடுத்தோமா,விருந்து சாப்பிட்டோமா?.என்று வீடு திரும்பி விடுவார்கள்.

நம் கலைஞர் அப்படி ஒரு சாதாரணத்தலைவரா?.அங்குப் போய் உட்கார்ந்தவுடன் தான் தமது இந்து மதப் பகுத்தறிவு ஞாபகத்துக்கு வரும்.நான்கு வார்த்தை இந்துக் கடவுள் களைத் திட்டினால் தமக்கு நான்கு ஓட்டு சேர்த்து வருமே!.என்ற எண்ணம் வரும் உடனே அருகில் உள்ள முஸ்லீம் அன்பர்கள் முகம் சுளித்தாலும் இந்துக் கடவுளை ஏளனம் செய்து அர்ச்சகர் கலைஞர் ஒரு லட்சார்ச்சனை செய்வார். சபரிமலைக்கு விரதம் இருந்து செல்வதைக் கிண்டல் செய்யும் வாயால் ,ரம்ஜான் மாதத்திற்க்கு ஒரு மாதம் நோன்பிருப்பதை வாயாரப் புகழ்வார். கிருத்திகை,அமாவசைப் போன்ற நாட்களில் உபவாசம் இருப்பதை கிண்டல் செய்யும் வாயால் நோன்பால் ஏற்படும் உடல் நன்மைகளை முஸ்லீம் அன்பர்களுக்கே விளக்குவார்.தீடீரென ஆவேசம் வந்து விட்டால் தானும் ஒரு முஸ்லீம் தான் என்றுப் பார்ப்பவர்கள் பதறும் அளவிற்க்கு குண்டை வீசுவார்.

மறுபக்கம் முன்னால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் தம் பங்கிற்க்கு ரம்ஜான் நோன்பு ஓட்டுக்களுக்கு முடிந்தவரை அடிபோடுவார்.என்ன, செல்வி ஜெயலலிதா தமக்குத்தான் முக்காடு போட்டுக் கொள்வாரேத் தவிர மற்றவர்களுக்குப் போடமாட்டார்.

அப்புறம் வைகோ,ராமதாஸ் போன்றவர்களும் தத்தமது ரம்ஜான் கடமையைச் செவ்வனே செய்வார்கள்.பின்னே செய்யாமல் இருந்தால் ஓட்டுப் போய்விடாதா?

இப்போது புதுத் தலைவர்களான,விஜயகாந்த்,சரத்குமார்,கார்த்திக்(!),தமது கடமையை ஆற்றத் துவங்கியிருப்பார்கள்.

நேற்று விஜயகாந்த் அதிரடியாக தனது பெயரை ”விஜயகான்” என்று மாற்றி தமிழக அரசியலில் ஒரு புதுத்திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.பாழாய்ப் போன ஓட்டு என்ன பாடுபடுத்துகிறது பாருங்கள்!.

அடுத்து கலைஞரை நினைத்தால் இன்னும் பயமாய் இருக்கிறது.”விஜயகானா”ல் நாலைந்து முஸ்லீம் ஓட்டு தன்னை விட்டுப் போய்விடக்கூடாது என்பதற்க்காக மதம் மாறிவிட்டேன் என்று அறிக்கையை விரைவில் அவரிடமிருந்து வந்தாலும் வரலாம்?

இதெல்லாம் ஓட்டுக்காகத்தான் என்று குழந்தைக்குக் கூடத் தெரியும்.ஒரு வேளை முஸ்லீம்கள் தங்களது ஓட்டுக்கள் எல்லாம் அனைத்து தொகுதிகளிலும் முஸ்லீம் லீக்கட்சிக்கு மட்டும்தான், அந்தக் கட்சியும் எந்தக் கட்சியுடனும் கூட்டு சேரக்கூடாது,என்று அறிவித்துப் பார்க்கட்டும்.அப்போது தெரியும்! இந்த இஃப்தார் விருந்து வேடிக்கைகள் எல்லாம்!.

"வலைகொண்டான்” டாமாரு கொமாரு!

Posted on Monday, September 29, 2008 by நல்லதந்தி




தெள கீர்த்தனாம்பரத்திலே ,இப்போ ’மும்பை’யன்னு அழைக்கப் படற ஷேத்ரம் அப்போ ’பாம்பே’ன்னு அழைக்கப்பட்டு இருந்த காலம்.ஒரு 100 வருடங்களுக்கு முன்னே கம்ப்யூட்டரன்னு சொல்லப் படற வஸ்து அப்போ ’பாம்பே’லதான் கண்டு பிடிக்கப் பட்டதுன்னு நோக்குத்தெரியுமோ?.அதைக் கண்டுபிடிக்கிறப்போ கடைசியாய் கூட மாட ஒத்தாசை செஞ்சது நம்ப கொமாருன்னாவது தெரியுமோ?. கொமாரு யாருன்னு கேக்கறேளா?.இப்பச் சொல்றேன்!.

நம்ம கொமாருக்கு பொறக்கறச்சே வெச்ச பேரு வேறயாக்கும்.அதத்தான் இப்ப நா சொல்லப் போறேன்.அந்த அம்பி பொறக்கறச்சே பெரும் பிரளயம் வந்தாப்புல ஒரு பெருத்த ஷப்தம் கேட்டது.அதக் கேட்ட அவரோட சொந்தக்காரா ...இது சிவனுடைய லீலைதான்,இதெல்லாம் சிவ கணங்கள் எழுப்புற சப்தமான்னோ!. இவ்ன் பொறந்த நேரத்தில மணியொலிங்க கேட்டதால் மணி குமாருன்னு பேர வச்சிப்பிடுங்க்கோ!ன்னுட்டாள்.

இதைக் கேட்ட உடையவா அந்த அம்பிக்கு அந்தப் பேரயே வச்சிட்டா!.செத்த நேரம் கழிச்சி வெளியே வந்து எட்டிப் பாக்கறச்சேதான் தெரிஞ்சது ஒரு பிரம்மஹத்தி TVS ஃபிஃப்டிக்கார படுவா ஆயிலும் போடாம சைலன்சர கழட்டி வீட்டில வெச்சிண்டுட்டு தலதெறிக்க ஓட்டிண்டு போறது!.ஆனா அப்பவே நம்ப அம்பி ராசி சனி ராசின்னு தெரிஞ்சிடுத்து.

கட்டேலே போற அந்த கம்மினாட்டி கடங்காரனோட வண்டியோட டயர் பஞ்சர் ஆகி டமாருன்னு வெடிச்சிடுத்து.அவன் கீழே வுழுந்து கடலைப் பொறி பொறிக்கினான். அப்போ அம்பியோட ராசியப் பாத்து பயந்து.. க்‌ஷமிக்கணும்.. வியந்து அம்பிக்கு வெச்சச் செல்லப் பேருதான் டமாரு கொமாருன்னு.

இப்படிப்பட்ட ராசியான பையனான டமாரு கொமாரு வளர்ந்து வரச்சே!.............................

இந்த இடத்தில தமிழ் படடைரக்க்டருங்க இறந்த காலத்தைக் குறிக்க ஹீரோவோ அல்லது ஹீரோயின் கண்ணுக்கு மின்னாடி கருப்புக்கலர் ரிப்பனை சுத்திக்காட்டு வாங்க.இல்லேன்னா வருங்காலமா இருக்கறச்சே மாட்டு வண்டியோட சலங்கைச் சத்தத்தோட மாட்டோட கால்ல இருந்து அப்படியே மெல்லப் போயி வண்டியோட சக்கரத்தில கேமராவ நிறுத்தி டில்ட் அப் பண்ணுவாங்க.மாட்டு வண்டி கிடைக்காட்டி காரோட சக்கரம்,அதுவுமில்லேன்னா தையல் மிஷினோட வீல் இதில எதினாச்சிம் ஒண்ண காட்டினாப் போதும் அறிவாளித் தமிழ் ஜனங்க புரிஞ்சிக்கு வாங்க....

இப்படியே காலச்சக்க்ரத்தில ஏறி நீங்களும் நசுங்கிடாம வந்துருங்க.

ஸ்ஸப்பா!.இதுக்கு மேலயும் பிராமணாத்து பாஷை தேவையா?.முயற்ச்சி பண்றேன்!.

நம்ப ஹீரோ ஹீரோயிசப்படி ஏழையா இருக்கணும்ங்கறதாலே..இப்போ ஹீரோ டீக்கடையில டெலிவரி அம்பியா வேலை செஞ்சிக்கிட்டு இருக்காரு!. அப்படி இருக்கறச்சே,கடைக்கு எதித்தாப்புல கம்ப்ப்யூடர் கண்டு பிடிக்கப் போற கம்பனி அவுங்க கச்சேரி நடத்த ஒரு குடிசை போட்டாங்க.அதில வேலை செய்யுற வேலைக்காரவா கூட அம்பிக்கு நல்ல பரிச்சியமாயிடுத்து. எந்த நேரமும் அம்பியை அழைச்சிண்டும் ,கூப்பிட்டுண்டும் டீ கொண்டு வரச்சொல்லிண்டும் இருப்பா!

இப்படி இருக்கையில ஒரு நாள் ஒரு பெரிய உத்யோகஸ்த்தர் நம்ப அம்பியைப் பாத்து ,”டே ! அம்பி நேக்கு ஒரு டீயும் ஒரு வடையும் கொண்டு வாடா .”ன்னு சொல்லவே பதறியடிச்சுண்டு ,ஒரு டீயையும் முந்தினநாள் போட்ட வடையும் தூக்கிண்டு கம்ப்யூட்டர் கம்பனிக்கு அம்பி ஓடினான்.


அந்த பெரிய உத்யோகஸ்தர் சரியான பசி மயக்கத்தில இருந்ததால ஒரு கையில் செங்கல் பொடி கலரில் இருந்த டீயையும் மறு கையில வடையையும் எடுத்துக் கொண்டு பறக்கா வெட்டித்தனமா சாப்பிடத் தொடங்கினார்.

அந்த நேரம் பாத்தா அந்தப் பாழப்போனவரும் இவருக்கு மேலதிகாரியுமான இன்னொரு பறக்கா வெட்டி “ஸ்வாமி உங்க டேபிள் மேலிருக்கிற வால்வைச் சீக்கிரம் எடுத்துண்டு வாரும்”மென்னு அதி அவசரமாய் கூப்பிட்டுத்தொலைக்க முதல் பறக்காவெட்டி ஒரு கையில் டீயும் மறு கையில் வடையும்,இருந்த காரணத்தால்,வாயில் வேறு பாதி வடையை முழுங்கிக் கொண்டிருந்தாலும், பேச முடியாமல் தொண்டை அடைத்துக் கொண்டிருந்ததால் ,கமறும் கண்ணீர் நிரம்பிய கண்ணில் நம்ப அம்பியைப் பார்த்து அந்த வால்வை எடுத்து அங்கே கொடுக்குமாறு ஜாடை செஞ்சாரு.

உலகத்தில் பாஸ்பரஸுக்கு அடுத்து தானாகவே தீப்பற்றக் கூடிய கழக புத்திக்காரனாகிய நம்ப அம்பி,அந்த மேலதிகாரியின் டேபிள் மேல் தனியாகவிருந்த வால்வை தேர்ச்சி பெற்ற நாய் வாயில் கவ்வறப்புல கையில எடுத்துக் கொண்டு சடுதியில் அந்த பெரிய ஆபீஸரண்டை கொண்டு கொடுத்தான்.

அதை கம்ப்யூட்டர் முற்றத்தில் ஒரு ஒரமாய் சொருவிய அவர்,ராகு காலம் முடிஞ்சவுடனே சுவிடசைப் போட்டார்.அடடா...என்னவொரு அற்புதம்,அந்த மூவாயிரம் அடி விஸ்தீரணமாய் இருந்த அந்த கம்ப்யூட்டர் உடனே வேலை செய்ய ஆரம்பிச்சிடுத்து!.நம்ப அம்பியோட கை பட்டதாலத்தான் வேலை செய்ய ஆரம்பிடுத்துன்னு நம்பிய அந்த எமகண்டத்தில பொறந்த அபீஸர்,கொமாருக்கு ”வால்வு தந்த வால் பையன்” அப்படிங்கிற பட்டத்தையும் கொடுத்தாரு!.

அவரு தமாஷாக் குடுத்தப் பட்டத்தை சீரியஸா நினைச்சு அம்பிக்கு பல நாள் தூக்கம் போனது தனிக்கதை!.

மீண்டும் கொஞ்சம் மின்ன போயிரலாமா!.சொல்லும் காட்சி மாதிரி இப்போ செல்லும் காட்சி!

கொஞ்சம் நாளாகி முடியும் போது அதாவது நம்ப அம்பிக்கு வாலிப வயசு .அப்போ தானும் புதுசா எதாவது கண்டு பிடிக்கணூங்கற அதீத வெறி அம்பிக்கு வந்துடுத்து.தன்னை ரொம்பப் புத்திசாலின்னு அந்த டமாரு தெரியாத்தனமா நினைச்சிக் கிட்டாரு! (வாலிபரு ஆய்ட்டதால இந்த மரியாதை.இல்லேன்னா நம்ப அம்பிக்கு எதுக்கு மரியாதை)

அந்த ஆர்வத்தில பாம்பே சரோஜாதேவி மார்கெட்டுக்குப் போயி,எதாவது உருப்படியான புஸ்தகங்கள் இருக்கான்னு பாக்கும் போது அங்க பலான புஸ்தகங்கள் மட்டும் இருக்கவே(அதாகப்பட்டது கொக்கேக சாஸ்திர புஸ்தகங்ககள்)அதில நாலஞ்சி அள்ளிகிட்டு வந்து வீட்டு மேக்கூறையில பதிக்கி வெச்சிக் கிட்டது நமக்கு வேண்டப் படாத விஷயம்.

அப்புறம் வானொலியில் நாம பேசறது எப்படி ஒரு புஸ்தகம் கடைவீதியில வந்து இருக்கிறதா யாரோ சொல்ல அதையும் தேடி அலைஞ்சாரு.அப்புறம் ”நமக்கு நாமே” அப்படிங்கிற திட்டத்தின் பிரகாரம்,ரேடியோவுக்கு சிக்னலோ என்னோமோ ன்னு சொல்லுவாங்களே, அதுக்கு ஒரு வலைமாதிரி ஒண்ணு வீட்டுக்கு வீடு கட்டி வெச்சிண்டு இருப்பாங்க,ஆண்டெனாவோ அண்டோனியோ மொய்னோவோ.அதெ செத்த சுரண்டிணா கொரு கொருண்ணு ஒரு ஷப்தம் வரும் அத தானே பேசற மாதிரி நினச்சி பேசிகிட்டே ஒரு ரெண்டு இழுப்பு இழுப்பாரு,அல்லோன்னு சொல்லறச்சே அல்லு க்கு ஒரு இழுப்பு லோவுக்கு ஒரு இழுப்பு உடனே ரேடியோ பொட்டியில அல்லுக்கு ஒரு டர்ரும் லோவுக்கு இன்னொரு டர்ரும்,மொத்தத்தில ட்ர்ர்டர்ர்ர்ன்னு ஒரு ஷப்தம் வரும்.உடனே தாம் பேசருது ஊருக்கே தெரியுதுன்னு நினைச்சி ரொம்போ சந்தோஷப் படுவாரு நம்ப டமாரு கொமாரு!.

அந்த ஷப்தமே தன்னோட வீட்டில இருக்கிற ரேடியோவில மட்டும்தான் கேக்குமின்னு தெரியாத அப்பாவி கொமாரு,அந்த வலையே இரெண்டு இழுப்பு இழுத்து ரேடியோவில் ஷப்தம் கேட்ட தன்னோட கண்டு பிடிப்பை மெச்சி தனக்கே ”வலை கொண்டான்”ன்னு ஒரு கருமாந்திரப் பட்டத்தையும் குடுத்துக்கிட்டாரு,நம்ப அம்பி!

இப்படியாகத்தானே நம்ப அம்பி டமாரு கொமாருவுக்கு வலைகொண்டான் அப்படீங்கிற பேரு வந்திச்சி!.பேரு வந்திச்சி,புகழு வந்திச்சா?.(பின்னாடி வரப்போற சூப்பர்ஸ்டாருன்னு சொல்லப் படப்போற அம்பி ரஜினி நடிச்ச 16 வயதினிலே!ங்கிற படத்தில வர்ற சீப்புக் கொடுத்தாளே சில்லறை கொடுத்தாளோங்க்கிற ஸ்லோகம் மாதிரி சொல்லிப்பாருங்க!) ஹிஹிஹிஹி

இது 100 வருடத்திற்க்கு முந்தின கதை என்பதை நினைவில் கொள்ளவும்!


பின்குறிப்பு: இது எந்த நபரையும்,குறிப்பிடும் பதிவல்ல!.அப்படி யாராவது நினைத்துக் கொண்டால், வட அமெரிக்காவில் உள்ள பகுத்தறிவு புராணீகரின் மஞ்சள் துண்டை இரவல் வாங்கிப் போட்டுத் தாண்டத் தாயார்!. :)

அஞ்சரைக்குள்ள வண்டி!

Posted on Thursday, September 25, 2008 by நல்லதந்தி

அஞ்சரைக்குள்ள வண்டி!

ஆறு மணிக்கும் கவலைப் படாமல் நான்,
ஆறரை மணிக்குத்தானே படம்!.



இந்த கவிதையை நான் நட்டுக் கொண்டு நடு இரவில் எழுதியது.
இதனுடைய உரிமை,காப்பிரைட் என்னிடம் மட்டும் உள்ளது.காப்பியடித்து இணையத்தில் புகழ் பெற நினைப்பவர்கள்,காப்பிரைட் சட்டத்தின் படி தண்டணைக்குள்ளாவார்கள்.

இப்படிக்கு

நல்லதந்தி!.
 இணையத்தில் மக்களால் தினம் ஒன்றரை லட்சம் உதை வாங்குபவன்!.

சொன்னது யார்?.கண்டு பிடிங்க பாக்கலாம்!

Posted on by நல்லதந்தி

இது ஒரு வழக்கம் போல் அரசியல் பதிவுதான்.ஆனாலும் ஒரே வித்தியாசம்,இது எந்த பிரச்சனைக்காகவும் எழுதப் பட்டதல்ல!.ஒரு புதிர் அவ்வளவுதான்.


கீழே உள்ள பத்தியைச் சொன்ன நபர் யார்?.இதைக் கண்டுபிடிப்பவர்களுக்கு வாழ்த்துகள் மட்டும் மனம் போல் அள்ளி வழங்கப் படும்!

ஜெயலலிதா குற்றங்கள் புரிந்திருப்பின் அவர் மீது வழக்குப் போட்டு, வழக்குகளை முறையாக நடத்தி,குற்றங்களைச் சட்டப்படி நிரூபித்த பிறகு எத்த்னை ஆண்டுகள் வேண்டுமானாலும் சிறைச்சாலைக்கு அனுப்பட்ட்டும். ஆனால் கடந்த சில மாதங்களாகத் தமிழகத்தில் நடைபெற்று வரும் நடவடிக்கைகள் அப்பட்டமான பழி வாங்கும் நடவடிக்கைகள்.கொடூரமான அத்துமீறல் செயல்கள் என்ற உணர்வினைத் தான் பரவலாக ஏற்படுத்தியுள்ளது. அதற்கு மகுடம் வைத்தது போன்றதே ஜெயலலிதாவின் மீது எடுக்கப்பட்டுள்ள கைது நடவடிக்கை!.”

இந்த வாசகத்தைச் சொன்னவர் யார்?

சோ
இல.கணேசன்
கி.வீரமணி
தா.பாண்டியன்
அத்வானி
வாஜ்பாய்
சோனியா
நல்லகண்ணு
சுப்ரமணிய சாமி
ராமதாஸ்

கண்டு பிடிங்க மக்கள்ஸ்!



விடையைச் சொல்லி விடும் நேரம் வந்துவிட்டது!.
நண்பர் அருவை பாஸ்கரும்,தமிழிஷில் நண்பர் கொம்பனும் சரியான விடையான “கி.வீரமணி” யைச் சொல்லி என்னிடமிருந்து அளவில்லா வாழ்த்துக்களை “மட்டும்” பெற்றுக்கொள்கிறார்கள்.இன்னொரு நண்பர் பின்னூட்டம் பெரியசாமி சந்தேகத்துடன் வீரமணியின் பெயரைக் குறிப்பிட்டதால் ஆறுதல் வாழ்த்தை மட்டும் பெறுகிறார். :)

பாடாய்ப் படுத்தும் பாலி வினைல் போர்டுகள்!

Posted on Wednesday, September 24, 2008 by நல்லதந்தி



போன நூற்றாண்டின் இறுதியில் இந்த வினைல் விளம்பர போர்டுகளை ,செல் போன் கம்பனிகளும்,மோட்டார் சைகிள் கம்பனிகளும் 100X100,200X200,300X300, என்று பிரமாண்டமாக வைத்தபோதும் சரி,இந்தி படம் வெளியிடும் தியேட்டர்களில், கட் அவுட்டிற்குப் பதிலாக ,இந்த வினைல் போர்டுகளை வைக்கும் போதும் சரி , அடேங்கப்பா இவ்வளவு பெரிய போட்டோவா?. இத்தனைத் துல்லியமா?.இவ்வளவு பிரமாண்டமா?.என்று வாயில் ஈ நுழைவது கூடத் தெரியாமல் பார்த்தோம்.,இதனால் எத்தனை பேனர் ஓவியர்கள்,சிறு போர்டு ஓவியர்கள் காலியாகப் போகிறார்கள் என்பது தெரியாமல் அதை இரசித்தோம்.

இப்படி பெரிய தொழிற்கம்பனிகளின் ஆதிக்கம் மட்டுமே இருந்த வினைல் போர்டு ராஜ்ஜியம்,விரைவில பொது மக்கள் கைக்கும் மாறியது உலகமயமாக்கலின் ஒரு அம்சமே!.பம்பாய் போன்ற நகரங்களில் மட்டும் இருந்த வினைல் போர்டு அச்சகங்கள் தற்போது ஊருக்கு நாலு என்றாகி விட்டபோது ,ஆரம்பித்தது வினைல் போர்டின் வினைகள்.

ஊருக்கு நாலுஎன்று ஆகிவிட்டபோது தொழிற்ப் போட்டியின் காரணமாக தரைமட்டத்திற்கு வந்து விட்டது வினைல் போர்டு செலவுகள்.முன்பு யானை விலையென்றால் இப்போது பூனை விலைதான்.போதாதா..நம்முடைய ஜனங்களுக்கு.எதற்க்கெடுத்தாலும் வைடா வினைல் போர்டை! போடுடா நம்ம படத்தை! என்று விளம்பரப் பிரியர்களானத் தமிழர்கள் எங்குப் பார்த்தாலும் சந்தர்ப்பம் தெரியாமல் வினைல் போர்டுகளில் சிரித்துக் கொண்டு இருகிறார்கள்!. 

இப்போது எங்கே பார்த்தாலும் வினைல்போர்டு மயம்தான்!.கல்யாணமா? வினைல் போர்டு,கருமாதியா வினைல் போர்டு.கல்யாண மண்டபத்தின் வாசல்தோறும் பெரிய சவுக்கு மரங்களை முட்டுக் கொடுத்து நிறுத்தி வைத்திருக்கும் போர்டுகளில் மணமகனும்,மணமகளும் சிரித்தவாறு வரவேற்கிறார்கள்.சில இடங்களில் மண்மகன் மார்பில் வட்டவ்டிவில் மணமகள்,மணமகள் மார்பில் மணமகன்.யோவ்! கல்யாணத்துக்கு முன்னே இந்த மாதிரி செய்வது தப்பு என்றால் கேட்பார்களா?.இந்த விளம்பரப் பிரியர்கள் .. . இரண்டு பக்க ஓரங்களில் வாழ்த்தும் நண்பர்களின் தலைகள்!.ஒரே விளம்பர மோகம்தான்.

கருமாதி வினைல் போர்டுகளில் இன்னும் கொடுமை!.இறந்த நபரின் படத்தைப் போட்டு,காத்தமுத்து கவிராயர் பாணியில் அல்லது கலைஞர் பாணியில் ஒரு இரங்கற்கவிதை!.கவிதை முடிந்தவுடன் கண்ணீர் கடலில் உன் நினைவாகவே வாழும் நண்பர்கள்!.என்று முடித்து வரிசையாக ஒரு தலை,கீழே அந்த தலையின் பெயர் என்ற வாக்கில் வினைல் போர்டு வைக்கப் பட்டிருக்கும். இதில் ஒரு கொடுமையான சந்தர்ப்பப் பிழை என்னவென்றால் அனைவரின் தலைகளும் சிரித்தவாறே “போஸ்” கொடுத்துக் கொண்டிருக்கும்!.இறந்தவரும் சிரித்தவாறே நண்பர்களின் அஞ்சலியை ஏற்றுக்கொண்டிருப்பார்.மொத்ததில் அந்த இறப்பே சிரிப்பாய் சிரித்திருக்கும்.ஒரு சோகத்தைக் கூட சிரிப்பாய் மாற்ற வல்லது இந்த வினைல் போர்டு!.


அரசியல் வினைல் போர்டுகள்,இன்னும் ஒரு ரகம்.இன்று வினைல் போர்டு கம்பனிகளை வாழவைத்துக் கொண்டிருக்கும் தெய்வங்களே அரசியல் கட்சிகள்தான்!.அதுவும் இதில் டி.ஆர்.பி ரேட்டிங்கில் கலைஞர் டி.வி எப்படி முதல் இடத்தில் உள்ளதோ ஹி..ஹி...அதைப் போல இந்த விளம்பர விளையாட்டிலும் முதல் இடம் கலைஞரின் கட்சிக்குத்தான் !..இவர்கள் 100 விளம்பரங்கள் கொடுத்தால் மற்ற கட்சியினர் 1 விளம்பரம்தான் கொடுப்பார்கள்.அந்த அளவிற்க்கு இந்த விளையாட்டில் வல்லவர்கள் கலைஞரின் தொண்டர்கள்.

தமிழகத்தின் எந்த மூலை முடுக்குக்குச் சென்றாலும் சும்மா அப்படியே அசந்து போகவேண்டும்..எங்கெங்கு காணிணும் சக்தியடா என்கிற மாதிரி எங்கெங்கு காணிணும் கலைஞரடா...
10வது வார்டு கவுன்ஸிலரின் இல்லத் திருமணமா?..அந்த ஏரியாவே வினைல் போர்டு காடாகவே மாறிவிடும்.அந்த ஊர் அமைச்சர் சென்னையிலிருந்து முதல் பொண்டாட்டியைப் பார்க்க ஊருக்கு வருகிறாரா?...இரயில்வே நிலையத்திலிருந்து அமைச்சருடைய வீடு வரைக்கும் ஓரே வினைல் போர்டு மயம்!.

சரி அதைதான் விடுங்கள்,சாலையின் இரு மருங்கிலும் ஒரே வினைல் போர்டுகளாக இருந்தாலும்,அதில் என்ன விஷயம் இருக்கிறது என்று பார்த்தால், வள்ளுவமே! வா! ,வாலிபமே வா! வா! என்ற அளவிற்குத்தான் விஷயச்செறிவு இருக்கிறது.

ஒரு போர்டில்,ஒரு வட்டம் சொல்கிறது!,அந்த மாவட்டத்தின் பெயரை அந்த அமைச்சரின் பெயராக மாற்றிச் சொல்லி ஒரு வரவேற்ப்பு!. பன்னீர் செல்வம் மாவட்டம் உங்களை வரவேற்கிறது!.வீரபாண்டியார் மாவட்டம்,பொன்முடியார் மாவட்டம் உங்களை வரவேற்கிறது!. இவர்களே தங்கள் மாவட்டத்திற்க்கு தங்கள் பகுதி அமைச்சரின் பெயரை சாதாரணமாக வைத்துக் கொள்கிறார்கள்.

அடுத்த வினைல் போர்டில் அமைச்சரின் முதல் மனைவி ஒருபுறம்! மறு புறம் இரண்டாவதாக சென்னையில் சேர்த்துக் கொண்ட துணைவி ,இரண்டு பேரும் அமைச்சரைப் பார்த்து ஒருங்கே சிரிக்கிறார்கள்.ஆஹா என்ன ஒரு கண் கொள்ளாக் காட்சி!.என்ன குடும்ப ஒற்றுமை. முதல் மனைவி பக்கத்தில அவ்ருக்கு பிறந்த பிள்ளைகளும், துணைவி பக்கத்தில் அவருக்குப் பிறந்த பிள்ளைகளும் ஒரே போர்டில்,ஒரு குடும்பம்,இரு மனைவி, பல பிள்ளைகள் என்று வாழும் வள்ளுவம் கலைஞர் போல, அமைச்சர்களும் நிற்க்கும் காட்சி எல்லா மாவட்டத்திலும் நிகழும் வழக்கமாக நிகழும் தெய்வீகக் காட்சி!.

அவர்களின் தலைக்கு மேலே நட்சத்திர வடிவிலோ,சூரிய வடிவிலோ ஒரு புறம் க்லைஞரும் ,மற்றொரு புறம் இசுடாலினோ ,தென் மாவட்டமாக இருந்தால் அழகிரியோ இந்தக் கோராமையைப் பார்த்து நம்ம வீட்டில் உள்ள விஷயம்தானே என்று சிரித்தபடி இருப்பார்கள்!.
 தமிழர்களின் பண்பாடு குறித்து ஒரு பதிவர்,சாதாரணப் பதிவர் அல்ல!.உலக நாடுகள் அனைத்திலும் உள்ள த்மிழர் மட்டுமல்ல,இந்தியர் மட்டுமல்ல!...வட அமெரிக்காவில் கனடா முதல் ஆஃப்ரிக்க கண்டம் நைஜீரியா மட்டுமல்ல!...ச்ச்சீ சலிப்பா இருக்குப்பா!..பிரபஞ்சம் முச்சூடும்ன்னு வைத்துக் கொள்ளுங்களேன்.மொத்தத்தில் அவரைத் தெரியாத ஆளே இல்லை போதுமா?.... அப்பேற்ப்பட்ட பதிவர் எழுதிய தமிழ் பண்பாடு, ஒட்டு மொத்தமாக இருக்கிற ஒரே ஒரு கட்சி திமுக என்பதால் ஜனங்களும் எந்தவிதமான கூச்சமும் நாச்சமும் பட்டுக் கொள்வதில்லை!.

ஆனால் ஒரு வார்த்தை மட்டும் குசு குசு வென பேசிக்கொள்வார்கள்.”என்னடா முதல் பொண்டாடிக்கே 60வயசாயிடுச்சி! அப்போ இந்த ஆளுக்கு 60 இல்லே 65 இருக்குமே ,இரண்டாவது இருக்கிற 35 ஐ என்னாதாண்டா பண்ணுவாரு?”..அடுத்த திமுகா பார்ட்டி வேறே என்னத்த சொல்லுவான்...எங்க ஐய்யா! என்ன சாதாரணமானவரா?.எல்லாம் புகுந்து வெளையாடுவாரு!.ஆஹா..எவ்வளவு பெருமை!...

இன்னொரு பெருமையும் இந்த அரசியல் வினைல் போர்டுகளுக்கு உண்டு.மற்ற ,பொது மக்கள் கல்யாணத்திற்க்கோ,கருமாதிக்கோ, செய்யும் வினைல் போர்டுகளை!. எல்லோராலேயும் சத்தியமாக ஒரே ஒரு தடவையாவது படிக்கப் படும் வாய்ப்புண்டு.ஆனால் அரசியல் வினைல் போர்டுகளை வைத்த அவர்களே படிப்பார்களா? என்பது சந்தேகம் தான்!.

ஒரே மாதிரியான சலிப்பூட்டும் வாசகங்கள் ,உள்ளாட்சித்துறை அமைச்சரென்றால் உள்ளாட்சியே! வருக!.பொதுப்பணித்துறை அமைச்சரா! பொதுப்பணியே!வருக!.சட்டத்துறை அமைச்சரா! சட்டமே! வருக!..நல்ல வேளை வடிகால் வாரியத்திற்க்கு தனி அமைச்சர் இல்லை!.இல்லையென்றால் அடிக்கடி சாக்கடையே! வருக! வருக! என்றும் வினைல் போர்டில் பார்த்திருக்க வாய்ப்புண்டு!.

இந்த அமைச்சரையோ அல்லது வருகின்ற VIP ஐ பிடிக்காத வட்டமோ, ஒன்றியமோ, தானைத்தலைவரே! என்பதற்க்கு பதில் தண்டக் கருமாந்திரமே! என்று எழுதினாலும்,பண்பாளனே! என்பதற்குப் பதிலாக பண்ணாடையே! என்று எழுதினாலும்,பார்ப்பவர்களுக்கும்,சம்மந்தப் பட்டவர்களுக்கும் எந்த வித்தியாசமும் தெரியப் போவதில்லை.வ்ருகிறவர்கள் போர்டைத்தான் பார்ப்பார்களே ஓழிய வாசகத்தைப் யாரும் படிக்கப் போவது இல்லையே!.வாழ்க வினைல் போர்டு!

அடுத்து இந்த அரசியல் வினைல் போர்டுகளைப் பார்க்கும் போது ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி படம்தான் ஞாபகம் வரும்.தலைவர் முழு உருவமாக நின்றிருக்க காலடியில் கிடக்கும் அரக்கர் கூட்டத்தைப் போல சிரித்த தலைகளாகக் காட்சிதரும் வட்டம், ஒன்றியம் போன்ற ஆட்கள் முண்டமில்லா முண்டங்களாக காட்சியளிப்பது வினைல் போர்டின் தனி விசேஷம்.
தலைக்கு கீழ் அவர்களின் பட்டங்களோடு பெயரும் உண்டு.காண்டு கஜெந்திரன்,மயிலை கபாலி,டிஞ்சர் தனபாலு,கடா குமாரு போன்று பெரிய லிஸ்ட்ட்டும் போட்டிருபார்கள்.தலைவரும் காளியாத்தாப் போல அவர்களின் தலையை மிதித்துக் கொண்டு சிரித்தபடி காட்சியளிப்பார்.என்னே வினைல் போர்டின் பெருமை!.

இன்னோரு தமாஷ் என்னவென்றால் பகுத்தறிவுக் கட்சியான திமுகவில உள்ள தொண்டர்களின் தலைகள் அனைத்தும் திருநீறும்,மஞ்சளும், குங்குமமும், துலங்க பகுத்தறிவு அஞ்ஞானிகளாகவே காணப்படும். இந்த பகுத்தறிவு சிங்கங்கள் வீட்டில் உள்ள பெண்டுகளைத்தான் மாற்ற முடியவில்லைத் தொண்டர்களையாவது மாற்றலாமே?.ஆனால் மாற்ற முயற்சிக் கூட எடுக்கமாட்டார்கள்.எந்தத் தொண்டனையாவது சாமி இல்லையென்று சொன்னால்தான் திமுக உறுப்பினர் கார்டு என்று சொன்னால் கூட திமுகவே மொத்தமாக காலியாகிவிடும் என்று தலைவருக்குத் தெரியும்.வீட்டில் உள்ள பெண்டுகளிடம் ஜெயிக்கமுடியாதவர்.வீதியில் உள்ளத் தொண்டு களிடமா ஜெயிப்பார்.

இதைப் பார்க்கும் போது நன்னன் என்ற பிரகிருதியின் ஞாபகம் வருகிறது,
அவரைச் சமீபத்தில் கலைஞர் டிவியில் ,ரமேஷ் பிரபா பேட்டி கண்டார்.அப்போதுதான் அவர் திமுக வென்றே எனக்குத்தெரியும்.அப்போது இந்த பிரகிருதி ,ஒரு வார்த்தைச் சொன்னார்,அதாவது இப்போது தமிழ் நாட்டில் இரண்டே இரண்டு திராவிடர் இயக்கம் தான் உள்ளது என்று சொன்னார்.அது எந்த எந்த இயக்கம் என்று,திரு நன்னன் அவர்கள் தான் சார்ந்த கட்சியைச் சொல்லிவிட்டதால் உங்களுக்கேத் தெரியும்.அவரைத் தரதர வென்று இழுத்து வந்து இம் மாதிரியான வினைல் போர்டுகளைக் காட்டவேண்டும்.இதுதான் பகுத்தறிவா?.நெத்தி நிறைய இத்தனைப் பொட்டுக்களை வைத்துக் கொண்டு இருப்பவர்கள்தான் ,பகுத்தறிவு இயக்கத் தொண்டர்களா? என்று முடிந்தால் கேள்வி கேட்க வேண்டும்.மற்றபடி அவர் தமிழாய்ந்த அறிஞர் என்பதில் எனக்கு எந்தவித ஐயமுமில்லை.கிஞ்சித்தும் சந்தேகமும் இல்லை.
இசுடாலினைத் (நன்னன் சொன்னதுதான்)தளபதி தளபதி என்று பேட்டியின் போது அவர் பெருமையுடன் சொன்னபோது தலையில் அடித்துக் கொள்ளத் தோன்றியது.எப்படி இருந்த தமிழறிஞர் இப்படி ஆயிட்டாரே?.

திமுகவைப் பொறுத்தவரை வினைல் போர்டுகளில் உள்ள ஆங்காங்கே சிலதலைகளின் படங்கள் வெட்டியெடுக்கப் பட்டு இருக்கும்.விசாரித்தால் அந்தத்தலைகள் ஏதாவது கொலைக் கேஸிலோ,அரிசி கடத்தலிலோ, சாரயக்கேஸிலோ, அல்லது கற்பழிப்பு கேஸிலோஅதையும்விட்டால் திருட்டு வழக்கிலோமாட்டியதால் தற்காலிகமாக ஜனங்களின் மத்தியில் கட்சிக்குத் தவறான எண்ணம் வரக்கூடாது என்று கட்சி பிரமுகர்களின் அறிவுறுத்தல் பிரகாரம் படத்தை எடுத்து இருக்கிறார்களாம். :)).
இதனால் நன்மையடைவது இந்த வினைல் போர்டு தயாரிப்பாளர்கள்!.அடுத்த வினைல் போர்டுக்கு ஆர்டர்கள் தயார்.ஆகையால் இப்போது வினைல் போர்டு ராஜ்ஜியம் திமுக வினரிடம்தான் உள்ளது. 

அப்பாடா...கட்டுரை முடிந்தது..இதில் முதல் சந்தோஷம் உங்களுக்கு!.அடுத்து எனக்கு! :) 
இதில் இருந்து ஒரு விஷயம் தெரிகிறது.எதைப் பற்றி எழுதினாலும் அரசியல் கலக்காமல் என்னால் எழுதமுடியாது போலிருக்கிறதே?..என்ன செய்வேன்?.....:((

"மானிய விலையில் மட்டையாக்கும் பொருள்"கலைஞர் அதிரடித்திட்டம்!

Posted on Thursday, September 18, 2008 by நல்லதந்தி



டாஸ்மாக் கடைகளில் மானிய விலையில், 50 ரூபாய்க்கு குடி!(மை) பொருட்கள் வழங்கப்படும் என்று, முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார். அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி முதல் இந்த சலுகை விலை திட்டம் அமலுக்கு வருகிறது.

ஏழை, எளிய நடுத்தர பெருங்குடி மக்களை விலைவாசி ஏற்றத்தின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு, பெருங்குடி மக்களுக்குத் தேவையான சரக்கு,தண்ணி,பிளாஸ்டிக் கிளாஸ்,சைட் டிஷ்,சிகரெட் மற்றும் வாந்தி வருகிற மாதிரி இருந்தால் வாயில் போட்டுக் கொள்ள ஆரஞ்சு மிட்டாய், வாந்தி எடுத்து விட்டால் துடைத்துக் கொள்ள 25X25 cm கைக்குட்டை போன்றவைகள் ரூபாய் 50 க்கே டாஸ்மாக் கடைகளில் கிடைக்கும்.

மேல கண்ட 7 பொருள்களையும், நல்ல தரமான நிலையில், சராசரிக் குடிமகனின் ஒரு வேளைத்(!) தேவைக்குப் பயன்படும் வகையில், அவை ஒவ்வொன்றையும் ஒரு சிறிய பாலிதீன் பையில் அடைத்து பின் அந்த பைகள் அனைத்தையும் ``மானிய விலையில் மட்டையாக்கும் பொருள்'' என்ற தலைப்பில் ஒரு பையிலிட்டு, 50 ரூபாய்க்கு டாஸ்மாக் கடைகள் மூலம் விற்பனை செய்திடும் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திட இந்த அரசு முடிவு செய்துள்ளது.

விலைப்பட்டியல்:

180 மில்லி குவார்டர் MC பிராண்ட் 70.00 (டாஸ்மாக் ஊழியர்களின் கமிஷன் 3 ரூபாயைச் சேர்த்து)

தண்ணிபாக்கெட் இரண்டு ரூ.5.00 (பார் எடுத்த கண்மணி கமிஷனையும் சேர்த்து)

பிளாஸ்டிக் கிளாஸ் நிரோத் பலூன் அளவிற்கு மெல்லியது ஒன்று ரூ.2.50 (பார் எடுத்த கண்மணி கமிஷனையும் சேர்த்து)

சைட்டிஷ் நிலக்கடலை பாக்கெட் 15 கொட்டைகள் கொண்டது ஒன்று ரூ.2.50 (பார் எடுத்த கண்மணி கமிஷனையும் சேர்த்து)

சிகரெட் கோல்டு பில்டர் இரண்டு ரூ.8.00 (பார் சந்தை விலை)

ஆரஞ்சு மிட்டாய் ஒன்று ரூ.2.00(பார் சந்தை விலை)

கைக்குட்டை பாலியெஸ்டர் மிக்ஸிங் ஒன்று ரூ.5.00 (பார் சந்தை விலை)


விலையில் மொத்தம் 95 ரூபாய்க்கு வெளிச்சந்தையில் விற்கப்படும் இந்த குடி(மை) பொருள்களும் முதலில் குறிப்பிட்ட அந்த பைகளின் மூலம் 50 ரூபாய்க்கு டாஸ்மாக் கடைகள் வாயிலாக விற்பனை செய்யப்படும். அதாவது 95 ரூபாய் பெறுமானமுள்ள, விலை மதிப்புள்ள பொருட்கள் 50 ரூபாய் விலைக்கு தரப்படும்.


இந்த புதிய திட்டம், உத்தமர் காந்தியடிகள் பிறந்த நன்னாளான வரும் அக்டோபர் 2-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும். ஏழைக் குடிதாங்கிகளின் சிரமங்களை விலக்கிட மனித நேய உணர்வோடு பல்வேறு வகையில் விலைகளை குறைத்து "குஜால்" பொருள்களை வழங்குகின்ற இந்த வாய்ப்பை பாணாக்குடிதமிழர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கருணாநிதி கூறினார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு, முதல்-அமைச்சர் கருணாநிதி பதில் அளித்தார்.

கேள்வி:- இந்த புதிய திட்டத்தின் மூலமாக எத்தனை பேர் பயனடைவார்கள்?
பதில்:- தமிழகத்தில் மொத்தம் உள்ள ஐம்பது கோடி ஆண்கள் பயனடைவார்கள்.

கேள்வி:-இந்தியாவின் ஜனத்தொகையே 110 கோடிதானே?பதில்:-இந்தியாவின் ஜனத்தொகை குறைவாக இருப்பதற்கு தமிழன் என்ன செய்வான்?(லேசாக நமுட்டுச் சிரிப்புச் சிரித்தார்!)

." 'குன்ஸா புள்ளி விபர னெஸ்"ரெக்கார்ட் புத்தகத்தில் மயிலாப்பூர் எடிஷனில் பதினோராயிரத்து நூற்று பதினோராம் பக்கத்தில் தமிழகத்தின் மக்கள் தொகை எவ்வளவு என்று போட்டிருக்கிறது என்று பாருங்கள். விபரமில்லாமல் பேசுவதற்கு நான் என்ன ஆடா? மாடா?

கேள்வி:- தமிழக அரசுக்கு கூடுதலாக எவ்வளவு செலவாகும்?
பதில்:- ஆண்டு ஒன்றுக்கு சுமார் 100000 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும்.

கேள்வி:- இந்த அரசின் "ஒரு ரூபாய்க்கு ஒரு மீட்டர் பூ" திட்டத்தை நீங்கள் அண்ணாவின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அறிவித்திருந்த போதிலும், ஒரு சிலர் இதனை தேர்தல் நோக்கோடு நீங்கள் அறிவித்திருப்பதாக விமர்சனம் செய்கிறார்களே? மேலும் மின்வெட்டை மறைப்பதற்காகத்தான் இந்த திட்டத்தை நீங்கள் அறிவித்திருப்பதாகவும் சொல்கிறார்களே?
பதில்:- இதற்கு முன் "நமக்கு நாமமே!"திட்டத்தில் மக்கள் எல்லோருக்கும் பட்டை நாமம் கொடுத்தைக் கூட இன்னும் சில குடிகேடிகள் குறை சொல்லத்தானே செய்கிறார்கள்.

மின்வெட்டு இருந்தால்தானே மறைக்க வேண்டும். மின்வெட்டை மறைக்க வேண்டிய அவசியத்தில் தற்போது நான் இல்லையே? மின்சாரத்தை பயன்படுத்திக்கொண்டுதான் இந்த விளக்கொளியில் நான் உங்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருக்கிறேன். மின்சார விளக்குகள் எரிவது குருடர்களை தவிர மற்ற எல்லோருக்கும் தெரியும். இவ்வாறு தமிழக முதல்வர் கூறினார்.

மானிய விலையில் மட்டையாக்கும் பொருள் திட்டத்தை அறிவித்தவுடன், செய்தியைக் கேட்ட குடிமக்கள் கும்பலாகக் கூடி ஆனந்தக் கண்ணீரோடு குவார்டர் ஜோதியில் கலந்தனர்.

எப்போதுமே டாஸ்மாக் வாசலிலேயே உழப்பிக் கொண்டு கிடக்கும் "ரம்மு ராஜேந்திரன்" என்பவர் கூறும் போது,''தலைவருன்னா தலைவர்தான், எத்தினியோ ஏழைங்க வீட்டில இதனால அடுப்பு எரியும். எங்களுக்கு மஜாவா வவுறு எரியும்.முன்னெல்லாம் எங்களுக்கு வர்ற வருமானத்தில ஒரு வேளைதான் சரக்கு சாப்பிட முடிஞ்சது.இந்த மகராசன் இரண்டு வேளைக்கு வழி பண்ணிட்டாரு!.என்று போதையிலேயே கண்ணீர் விட்டார்.

மற்றொரு குடிமகனான "குடிகார குமாரு" என்பவர் கூறும் போது,"கலைஞர் தீர்கதரிசிதாங்க!...தவிச்சவாய்க்கு தண்ணிதராத கர்நாடகாகாரனுங்களுக்கும் சரி,ஆந்தராகாரனுங்களுக்கும் சரி,கேரளாகாரனுங்களுக்கும் சரி.இப்போ தண்ணி கொடுக்கப் போறது யாரு?.நம்ப கலைஞர் தானே?.இப்போதான், அவனுங்க கலைஞரோட பெருந்தன்மைய புரிஞ்சுக்கப் போறானுங்க!..."என்று சொல்லிக் கொண்டே கடைசி மிடக்கை 'கப்' என்று வாயில் ஊற்றிக் கொண்டார்.பிறகு "சார் ஒரே ஒரு குவார்டர் வாங்கித்தர்றீங்களா?.அக்டோபர் ரெண்டாம் தேதி மறக்காம திருப்பி கொடுத்திடறேன்" என்றார்.

கவிஞர் "வயித்தில குத்து" அவர்களிடம் கேட்டபோது,"சாதாரணமாகவே "மக்களை"ப் பற்றியே சிந்திப்பார்.இப்பொழுது அவர் சிந்திப்பதே "மக்களை"ப் பற்றியா இருக்கு!.
24 நாலு மணி நேர மின்வெட்டு திட்டமான "ஜொலிக்கும் சூரியன்" திட்டம் காரணமா மக்கள் எப்படா விடியும்! என்று ஆகாயத்தையே பார்க்கும் படி செய்து ஆகாயத்தைக் காட்டினார்."டீ குடிக்க தீக்குளிக்க" திட்டத்தின் படி எரிக்க மண்ணெண்ணெய் வழங்கினார். "வாயில மண்ணு" திட்டத்தின் படி ஆளுக்கு இரண்டு கிலோ மீட்டர் நிலம் வழங்கி பூமியைத் தந்தார்.ஒரு ரூபாய்க்கு ஒரு மீட்டர் பூ திட்டத்தின் படி காதில் வைத்துக் கொள்ள வாசனைப் பூ வழங்கி மக்களுக்கு வாசனைக் காற்றைக் வழங்கினார்.இப்போது "மானிய விலையில் மட்டையாக்கும் பொருள்" திட்டத்தால் மக்களுக்களுடைய தவித்த வாய்க்கு தாகத்துக்கு தண்ணி வழங்கியுள்ளார்.
கடவுளுக்கு அடுத்தபடியாக பஞ்சபூதத்தையும் அடக்கி ஆள்வது கலைஞர் தான்! .இனிமேல் நான் கலைஞரை கலைஞரன்னு கூப்பிட மாட்டேன்.பஞ்ச பூதத்தையும் காட்டியதால் அவரைச் செல்லமாக "பஞ்சர்"அப்படின்னுதான் கூப்பிடப்போறேன் என்றார் உணர்ச்சிப் பெருக்கோடு!.

பார் ஊழியர் கூறும் போது,"இது ரொம்ப நல்லத்திட்டம்,முன்னே விலை அதிகமா இருக்கும்போது எங்களுக்கு டிப்ஸ் ரொம்ப கம்மியா குடுத்தாங்க.இப்ப டிப்ஸும் அதிகமா எதிர்பாக்குறோம். இப்ப நாங்க நிறைய விலையேத்தி சொன்னாக்கூட சரக்கு விலை கம்மியா இருக்கறதாலே கம்மன்னு குடுத்துட்டு போயிடுவாங்க.பாரும் சண்டச்சச்சரவு இல்லாம இருக்கும்."சட்டம் ஒழுங்க" இப்ப காப்பாத்தி, ஒரே கல்லுல ரெண்டு மாங்க அடிச்சிட்டாரு கலைஞரு!.இன்னொரு விஷயமும் சொல்லணும் சரக்கு அதிகமா உள்ளார போறதால மப்பு ஏறி தலை தொங்கிடும், அதிகமா பேசவும் மாட்டாங்க!முடியவும் முடியாது! ".என்றார்.

அதிமுக பிரமுகரிடம் கேட்ட போது,"இதெல்லாம் என்னங்க!.அம்மா ஆட்சியில "நைட்டுக்கு நைன்டி" திட்டத்த மிஞ்ச முடியுமா?.இந்த ஆளு எப்பவுமே இப்பிடிதாங்க.அம்மா எதாவது நல்லத் திட்டத்த கொண்டாந்தா இவரு அப்பிடியே காப்பியடிச்சிடுவாரு!."என்றார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் இதைப் பற்றி கேட்ட போது,"என்னங்க திட்டம் இது!.டாஸ்மாக் வரைக்கும் ஜனங்க எதுக்கு போகணும்.வீட்டுக்கே கொண்டு வந்து தரமுடியாதா?.அப்படி தரமுடியாததற்க்கு காரணம் என்ன?.கட்சிக்காரங்க கொள்ளையடிக்கறதுக்குத்தானே?.அந்த பொருளெல்லாம் டாஸ்மாக்குக்கே வராது!.அப்படியே கேரளாவுக்கும்,ஆந்திராவுக்கும், கர்நாடகாவுக்கும் தான் போகும்.எங்க ஆட்சி வந்தா ஒவ்வொரு வீட்டுக்கும் இந்த குடி(மை) பொருட்கள் தேடித்தேடி வரும்!.அதை எப்படிச் செய்வோம்ங்கிறத எங்க ஆட்சி வரும்போது சொல்வோம்!"


பி.கு:- இது முழுக்க முழுக்க சிரிப்பு லொள்ளிற்கே!. யாருடைய மனதையும் புண்படுத்த அல்ல! :)

இன்னொரு பி.கு:- ஒரு வருத்தமான விஷயம் இது என்னுடைய 50 வது பதிவு!

மற்றோரு பி.கு:- இந்தப் பதிவு நண்பர் வால்பையனுக்கு அர்ப்பணம்!...அடத் தண்ணி காரணம் இல்லீங்க! வேற காரணம்! :)

குண்டு வெடிப்பு சம்பவங்களுக்குப் பிறகு நடப்பது என்ன?

Posted on Monday, September 15, 2008 by நல்லதந்தி



றுபடியும் மற்றொரு குண்டு வெடிப்பு சம்பவம் டெல்லியில் நிகழ்ந்து விட்டது.இருபத்திஐந்து பேர் பலியாயினர்.வழக்கம் போல் உள்துறை அமைச்சர் தீவிரவாதிகளை ஒடுக்கியே தீருவோம் என்று ஒரு அறிக்கை விட்டார்.


ஜனங்கள் ஒற்றுமையாக இதை எதிர்கொள்ள வேண்டும் என்று பிரதமர் வழக்கம் போல் விடும் அறிக்கையைக் கூட விடவில்லை.அவருக்கே சலிப்பாகி விட்டதா அல்லது அந்த அறிக்கை காமெடியாகத் தெரியும் என்பதால் விடவில்லையா? என்று தெரியவில்லை.


வழக்கம் போல குண்டு வெடித்த இடத்தையும்,பிறகு மருத்துவமனைக்கும் சென்று வழக்கம் போல அடிபட்டவர்களைப் பார்த்து வழக்கம் போல போட்டோவிற்கு 'போஸ்' கொடுத்து விட்டு வீடு திரும்பி இருப்பார்கள் சோனியா,உள்பட அரசியல் பிரமுகர்கள்.


வழக்கம் போல் இரண்டு நாட்களுக்கு போலீசார்கள் தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள்.இரண்டு நாட்கள் பேருந்து நிலையம்,ரயில்வே நிலையம் போன்ற இடங்களில் அவர்களுடைய தலைகள் அதிகமாகத் தென்படும். வழக்கம் அந்த சோதனையிடும் போட்டோக்கள் பத்திரிக்கைகளில் அமர்களப் படும்.


வழக்கம் போல் முஸ்லீம் சம்மந்தப்பட்ட ஆனால் மதசார்பற்ற(!) கட்சிகளின் தலைவர் ஒருவர் இதை இஸ்லாமியத் தீவிரவாதம் என்று சொல்லக்கூடாது, இது,இந்துத்வா சக்திகளின் வெறிச்செயலாக இருக்கும். அவர்கள் திசை திருப்புவதற்க்காக செய்த நாடகம். மஹாராஷ்ட்ராவில் மசூதியில் நடந்ததை மறக்கக் கூடாது என்பார்.


வழக்கம் போல் பொடா,தடா போன்ற சட்டங்களைக் கொண்டு வரவேண்டும். தீவிரவாதிகளைக் கண்டிக்க கடுமையான சட்டங்கள் வேண்டும் என்று ப.ஜ.க தலைவர்கள் கத்துவார்கள். வழக்கம் போல் பகுத்தறிவு சிங்கங்கள் அதெல்லாம் கூடாது,இருக்கிற சட்டங்களே போதும்.முஸ்லீம்களின் மனது புண்படும் என்று இவரே முஸ்லீம்கள் அனைவரையும் தீவிரவாதியாக்கி அவர்களது ஓட்டுகளுக்கு 'ரிசர்வ்' செய்து கொள்வார்.


வழக்கம் போல் காங்கிரஸ் தன் பங்குக்கு, பொடா இருந்த போதுதானே பாரளுமன்றத் தாக்குதல் நடந்தது. எனவே சட்டங்களால் எந்த பிரயோசனமும் இல்லை. இருக்கிற சட்டமே போதும். என்று தன் பங்கு முஸ்லீம்களின் ஓட்டுக்கு, அறிக்கை விடும்.


இந்த சமயத்தில் மட்டும் பாரளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளைத் தம் அரசு தூக்கிலிடாத,அந்தச் சாதனையை மறைக்கும்.
தேர்தல் சமயத்தில் அதைச் சொல்வார்கள் முஸ்லீம்களின் ஓட்டு வேண்டுமே?.

வழக்கம் போல் ஜூ.வி,ரிப்போர்ட்டர்,நக்கீரன் போன்ற பத்திரிக்கைகள் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் இரத்தம் சொட்டசொட்ட வெளியிடுவார்கள்.
அடுத்த தாக்குதல்களுக்கு ஆளாகப் போகும் நகரங்களைப் பட்டியலிட்டு அந்த நகரவாசிகளைத் தூங்கவிடாமல் செய்வார்கள்.

நாமும் வழக்கம் போல் குண்டு வெடிப்பு சம்பங்களைப் பற்றிய இரவுச் செய்திகளைப் பார்த்துவிட்டு 'மானாட மயிலாட' பார்க்கலாம்.


பி.கு.:அடுத்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு இந்தக் கட்டுரையை மீண்டும் படிக்கலாம்.


சிம்பு வலையில் சிக்க நினைக்கும் சின்ன மீன் ஸ்னேகா!

Posted on Sunday, September 14, 2008 by நல்லதந்தி




சிம்புவைப் பார்த்து எதற்கு வம்பு என்று ஓடும் நடிகைகளை விட, அவருடன் ஜோடி சேர்ந்து குத்தாட்டம் போட ஆசைப்படும் நடிகைகளே அதிகம்.சீனியர் நடிகைகள், தொடர், புது நடிகைகள் வரை பேட்டி கொடுக்கும்போது, தவறாமல் சிம்புவுடன் நடிக்க ஆசை என்று சொல்லி வைக்கிறார்கள்.

முன்பு ரம்யா கிருஷ்ணன், ஸ்னேகா, நிலா... இப்போது ஸ்னேகா உல்லால்.இவர் லக்கி என்ற இந்தி படத்தில், சல்மான்கான் ஜோடியாக நடித்துப் பிரபலமானவர். இவர், இப்போது என்னை தெரியுமா என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகம் ஆகிறார்.


பார்க்க கிட்டத்தட்ட ஐஸ்வர்யா ராயின் தங்கை போலத் தெரியும் ஸ்னேகா உல்லால், தனது தமிழ்ப் பிரவேசம் குறித்து கூறுகையில்,தமிழ்ப் படங்களில் நடிப்பது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தொடர்ந்து நிறைய படங்களில் நடிக்க விரும்புகிறேன்.

தமிழில் எனக்குப் பிடித்த நடிகர் சிம்புதான். காரணம் எனக்கு அறிமுகமான பிரபலமான தமிழ் கதாநாயகன் அவர்தான். அவருடன் நடிக்க ஆசைப்படுகிறேன்.இப்போது நான் நடிக்கும் என்னைத் தெரியுமா படத்திலேயே கூட மிகுந்த கஷ்டப்பட்டுத்தான் நடித்துள்ளேன். அவர்கள் நினைத்த மாதிரி காட்சி வரவேண்டும் என்பதற்காக என்னை டார்ச்சர் செய்துவிட்டார்கள்.என் பெயரோடு ஒட்டியுள்ள உல்லால் என்ற பெயர் எனது குடும்பப் பெயர். ஏற்கெனவே ஒரு ஸ்னேகா இருப்பதால், உல்லால் என்ற பெயரையும் சேர்த்துக் கொண்டேன் என்றார்.
நன்றி: தட்ஸ்தமிழ்

மின்சாரத்தை சேமிக்கும் வழிமுறைகளும் அது மிச்சமாவதால் ஏற்படும் நன்மைகளும்! படங்களுடன்!

Posted on Saturday, September 13, 2008 by நல்லதந்தி

மின்சாரத்தை பயன்படுத்துவதில் சிக்கனத்தை கடைபிடியுங்கள் என்று பொதுமக்களுக்கு மின்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
அனைத்து மின் நுகர்வோர்களும் மின் உபயோகத்தில் சிக்கனத்தை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் சில வழிமுறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளது.




மின்சிக்கனத்தினால் ஏற்படும் நன்மை - 1


அதன் விவரம் வருமாறு:-ஏ.சி.யை தவிர்க்க...*அத்தியாவசிய தேவைக்கு மேல் உபயோகிக்கும் மின் விளக்குகள், சாதனங்களை நிறுத்திவைக்கவும். *அலங்கார, ஆடம்பர மின் விளக்குகள் உபயோகத்தை தவிர்க்கவும். *குளிர்சாதன உபகரணம் உபயோகத்தை (ஏ.சி.) குறைத்துக்கொள்ளவும். குறிப்பாக மாலை 6மணிமுதல் இரவு 10மணிவரை குளிர்சாதனப்பெட்டி உபயோகத்தை அவசியம் தவிர்க்கவும்.

*தொழிற்சாலைகளில் மாலை 6மணிமுதல் இரவு 10மணிவரை மின் உபயோகத்தை தவிர்க்கவும்.இயற்கை சக்தி*பழுதற்ற மின்சாதனங்களையும் கையடக்க குழல் விளக்குகளையும் உபயோகித்து மின் சிக்கனத்தை கடைபிடிக்கவும்.*இயற்கை சக்திகளை பயன்படுத்தி மின் உபயோகத்தை குறைக்கவும்.

இது தொழிற்சாலைக்கும் விவசாயிகளுக்கும்..
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும்படி அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.



மின்சிக்கனத்தினால் ஏற்படும் நன்மை - 2

அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்கள் படிப்பதற்கும், வீடுகளில் மாலை நேர தேவைக்கும் மின்சாரம் வழங்குவது அரசின் முக்கிய நோக்கம்.

எனவே, வர்த்தக மையம் மற்றும் விழாக்களில் தேவையற்ற ஆடம்பர விளக்குகளை அமைக்க வேண்டாம் என்றும், விவசாயத்துக்கும், தொழிற்சாலைகள் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மின்சாரத்தை பயன்படுத்துவதை தவிர்க்கும்படியும் பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது அரசு அலுவலகங்களுக்கு...

மின்சாரத்தை சிக்கனமாக கடைபிடிப்பதற்கான நிபந்தனைகள் அடங்கிய நோட்டீஸ் அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது.
அதில் உள்ள நிபந்தனைகளை கண்டிப்பாக கடைபிடிக்கவும், தொடர்ந்து கண்காணிக்கவும் அறிவுரை வழங்கி அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.


மின்சிக்கனத்தினால் ஏற்படும் நன்மை - 3

தேவையற்று எரியும் லைட் மற்றும் ஃபேன்களை நிறுத்தி வைக்க வேண்டும். அலுவலக மேஜைக்கு தேவையான லைட் மற்றும் ஃபேன் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். பகலில் அலுவலக அறைக்கு போதுமான அளவு வெளிச்சம் இருக்கும் பட்சத்தில், தாழ்வாரம் மற்றும் நடைபாதையில் இருக்கும் லைட்களை நிறுத்தி வைக்கவும்.

இரண்டு ஏ.ஸி., இருக்கும் அறைகளில் ஒன்றை மட்டுமே இயக்கவும். அலுவலர்கள் இல்லாத சமயங்களில் அதையும் நிறுத்தி வைக்கவும். ஏ.ஸி., அறையில் 22 டிகிரி செல்சியஸ் நிலைக்கு அதிகமான நிலையில் பராமரிக்கும்போது, ஐந்து முதல் ஏழு சதவிகிதம் மின்சாரம் சிக்கனப்படுத்தப்படுகிறது. எனவே, அறையின் வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ்க்கு மேல் பராமரிக்கவும். ஏ.ஸி., செய்யப்பட்ட அறையில் ஃபேன் பயன்படுத்தும்போது, குளிர்ந்த காற்றோட்டம் அறை முழுவதும் பரவுகிறது. அதனால் ஏ.ஸி., குறைந்த மின்சாரத்தை எடுத்துக்கொள்கிறது.



மின்சிக்கனத்தினால் ஏற்படும் நன்மை - 4

கம்ப்யூட்டர் மற்றும் அலுவலக பயன்பாட்டு கருவிகளை பயன்படுத்தாத போது நிறுத்தி வைக்கவும். கம்ப்யூட்டர் ஸ்கீரின் சேவர் திரைகளை பாதுகாக்க மட்டுமே உதவுகிறது. அவற்றால் மின்சக்தி சேமிக்கப்படுவதில்லை. அதனால் தேவைக்கேற்ப இயக்கியும், நிறுத்தியும் பயன்படுத்தினால், மின்சாரம் சிக்கனமாவதுடன், கம்ப்யூட்டருக்கும் ஆயுளை தரும். கம்ப்யூட்டர், மானிட்டர், நகலெடுக்கும் கருவி ஆகியவற்றை "ஸ்லீப் மோடு' நிலையில் வைப்பதால் 40 சதவிகிதம் வரை மின்சாரத்தை சேமிக்க முடியும். நகலெடுக்கும் இயந்திரங்களை தேவையான நேரத்தில் மட்டும் பயன்படுத்தவும்.

அனைத்து தேவைகளையும் ஒருங்கிணைத்து செய்யவும். ஏனெனில் அடிக்கடி இயக்குவதும், நிறுத்துவதும் அல்லது மின் இணைப்பிலேயே வைத்திருப்பதும் மின் தேவையை அதிகரிக்கும். லேப்டாப் மற்றும் மொபைல்ஃபோன்களுக்கு சார்ஜ் ஏறிய பின்பும் மின் இணைப்பிலேயே வைத்திருப்பதை தவிர்க்கவும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் இடம்பிடித்துள்ளன.


எல்லாதரப்பினருக்கும் அறிவுரை சொன்ன மின் துறை, அரசியல் கட்சிகளுக்கு ஏன் அறிவுரை சொல்லவில்லை என கேட்கும் அப்பாவியா நீங்கள்!! அவர்களுக்காகத்தானே இந்த மின்சிக்கனமே!.மேலே உள்ளப் படங்களைப் பாருங்கையா!



(படங்கள்:சம்மந்தப் பட்டவர்களுக்கு நன்றி!)

கருணாவுடன் கொட்டமடித்த பானு!.பள்ளியறை முதல் படுகொலை வரை!

Posted on Friday, September 12, 2008 by நல்லதந்தி


இணைந்த கைகள்! (பள்ளியறை முதல் படுகொலை வரை!)

இப்படியும் நடக்குமா?? என்று சொல்வதே.அபத்தம் இப்படி நடக்காமல் இருந்து இருந்தால்தான் ஆச்சரியம் என்கிற அளவிற்க்கு சமூகத்தில் புரையோடிவிட்ட செயல் இது!பிரபலமானவரின் உறவினர்களால் நடந்து இருப்பதால் அதிக வெளிச்சம் பெறுகிறது.பணவெறி ஒரு குடும்பப் பெண்ணைக் கூட படுக்கை அறைக்கும் படுகொலை வரைக்கும் தள்ள முடியும் என்பதற்கு உதாரணம் இது!


விஜயனைக் கொலை செய்ய கருணாவை சம்மதிக்க வைக்க வேண்டும் என்பதற்காக அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் பானுமதி போயுள்ளார். அவருடன் சேர்ந்து இரவு விருந்து, கிளப்களுக்குப் போவது, நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவது என தடம் புரண்டு போயுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.எம்.ஜி.ஆர். உறவினர் விஜயன் கொலை வழக்கில், அவரது மனைவி சுதாவின் கூடப் பிறந்த தங்கையான பானுமதி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நியமித்த கூலிப் படையின் தலைவனான கருணா என்கிற கருணாகரன் உள்ளிட்ட பலரும் கைதாகியுள்ளனர்.
இந்த நிலையில் போலீஸ் விசாரணையில் பானுமதியின் மறுபக்கம் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது செயல்பாடுகள் எம்.ஜி.ஆரி.ன் புகழுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாதவையாக, அவற்றைக் குலைக்கும் வகையில் இருப்பது போலீஸாரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.புவனா மூலம் கருணாவின் அறிமுகம் பானுமதிக்கு கிடைத்ததும், அவரை வைத்து விஜயனை தீர்த்துக் கட்ட தீர்மானித்தார். ஆனால் ஆரம்பத்தில் கருணா ஒத்து வராதது போல நடித்துள்ளார். பானுமதியின் நிலையைப் பார்த்த அவர், அவர் மூலம் விஜயனை தீர்த்துக் கட்டி விட்டு, பானுமதியின் வசம் இருந்த பள்ளியைக் கைப்பற்றி விட வேண்டும் என்பதுதான்.இதனால் ஆரம்பத்தில் ஒத்து வராதது போல பிகு செய்துள்ளார் கருணா. இதையடுத்து அவரிடம் நைச்சியமாக நடந்து கொண்டால்தான் கருணா ஒத்து வருவார் என புவனா கூறியுள்ளார். இதையடுத்து கருணாவின் விருப்பம் போல நடக்க ஆரம்பித்துள்ளார் பானுமதி.அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்துள்ளார். கருணாவுடன் தினசரி இரவு ஷோ படம் பார்க்கப் போவது, கிளப்களுக்குப் போவது, விருந்துகளில் பங்கேற்பது, நட்சத்திர ஹோட்டல்களில் போய் தங்குவது என அத்தனையையும் செய்துள்ளார். கருணா கேட்ட அனைத்தையும் கொடுத்துள்ளார் பானு.சாதாரண அக்கா - தங்கை சண்டை, கூலிப்படை, கொலை என போயுள்ளது எம்.ஜி.ஆர். பக்தர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நன்றி...thatstamil

1980-ல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!(மீண்டு ஜெயித்த கதை)

Posted on Tuesday, September 9, 2008 by நல்லதந்தி


படம் வெற்றி பெற்றால் தலையில் தூக்கிக் கொண்டாடுவதும் தோல்வியடைந்தால் காலில் போட்டு மிதிப்பது வழக்கம்தான் என்றாலும் ரஜினி விஷயத்தில் குசேலன் தோல்வியைத் திருவிழா அளவிற்க்கு பத்திரிக்கைகள் கொண்டாடி வருகின்றன.அவர் நின்றாலும் செய்தி படுத்தாலும் செய்தி என்பதால் எதையாவது பரபரப்பாக தகவல்களையும் சர்வேக்களையும் வெளியிட்டு காசு அள்ளிவருகின்றன.ஆனால் இவையெல்லாம் அவருடைய புகழை இம்மிகூட மங்கச் செய்யாது என்பது உறுதி.

ரஜினியைப் பொறுத்தவரை தன் வாழ்கையின் மிக மோசமான காலகட்டத்தில்தான் சூப்பஸ்டாராக ஆனார். அந்த விஷயத்தை சொல்கிறது இந்தக் கட்டுரை.ஆனாப்பட்ட எம்.ஜி.ஆரே 20 ஆண்டு காலம்தான் சூப்பர்ஸ்டாராக தமிழ் திரையுலகில் மின்னினார்.ஆனால் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 30 வருடங்களாக தமிழ் திரையுலகில்,மட்டுமல்ல தென்னிந்தியத்
திரையுலகம் முழுவதும் சூப்பர்ஸ்டாராக கோலோச்சிக் கொண்டிருக்கிறார்.இந்த பழைய கட்டுரை மூலமாக சூப்பர்ஸ்டார், அந்தகாலத்திலேயும் அவர் எப்படிப் பட்ட புகழுடன் விளங்கினார் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரியும்.மற்ற சக நடிகர்களைவிடப் பல படிகள் மேலிருந்தார் என்பதும் தெரியும்.


விரைவில் புகழ்பெறுபவர்கள் விரைவிலேயே இருக்கும் இடம் தெரியாமல் போவார்கள் என்று ஒரு கருத்து இருந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன் ரஜினி காந்தின் வாழ்க்கை இப்படித்தான் ஆகிவிட்டதோ என்றுகூட எண்ணும் படியாகிவிட்டிருந்தது.

பிலிம் இன்ஸ்டிடியூட்ட்டில் இரண்டாண்டு காலம் பயிற்சி பெற்று,டைரக்டர் பாலச்சந்தரின் முயற்சியால் மாபெரும் நட்சத்திரமாகி விட்ட ரஜினிகாந்த் தீடீரென வெறி பிடித்தவரைப் போல் விமான நிலையங்களிலும்,ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றிலும்,சபையர் தியேட்டரிலும் கண்மூடித்தனமாக நடந்து கொண்ட போது,ரஜினி தொலைந்தார் என்றே பலர் எண்ணினார்கள். 'இவரை நம்பி இனி எந்தப் புரொடியூஸர் படம் எடுப்பார்?' என்று பேசிக்கொண்டார்கள்.இவருக்கு புக் ஆன படங்கள் பல, மடமடவென்று இரத்தாகிவிட்டதாகவும் வதந்திகள் வந்த்தன. இவர் புகழைக் கெடுக்கப் பெரிய நடிகர்கள் சிலரே முயற்சிகள் எடுத்துக் கொண்டதாகவும் சிலர் பேசிக்கொண்டனர்.ஆனால்.....

இவர் மனநோய் சிகிச்சை பெற்ற பிறகு,சிறிது கால ஓய்வுக்குப் பின் தர்மயுத்தம் என்ற படத்தில் நடித்து முடித்ததும்,அந்தப் படத்தின் வெற்றியால் மீண்டும் பழைய புகழுக்கு மேல் செல்வாக்கைப் பெற்றார்.இவர் நடித்த படங்கள் பூஜை போட்ட அன்றே விற்றுவிட்டன.எம்.ஜி.ஆர். படங்களுக்கு என்ன விலை கொடுத்தார்களோ அதே விலையை இவர் படங்களுக்குக் கொடுத்தார்கள்;கொடுத்து வருகிறார்கள் என்று பேசப்படுகிறது.

ரஜினியும் கமலும் படவுலகில் சரிசமமாகப் போய்க் கொண்டிருந்த போது, ரஜினியின் புகழ் திடீரென்று பாதிக்கப் பட்டதால்,கமலின் கை ஓங்கி நின்றது. ஆனால் இப்போது கமலின் செல்வாக்குக் குறைந்து விட்டது.ரஜினியின் செல்வாக்கு மிக மிக உயர்ந்து வருகின்றது.'முள்ளும் மலரும்',6 லிருந்து 60 வரை','அன்னை ஓர் ஆலயம்','பில்லா', ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்

ஆகி விட்டதாலும், ரஜினியிடம், அவர் ஸ்டைல் மட்டுமல்ல,பவர் புல் ஆக்டிங்கும் இருக்கிறது என்பது தெளிவாகி விட்டதால்,புதிய வார்ப்புப் படங்கள் பல புதிய நட்சத்திரங்களைக் கொண்டு வெற்றிகரமாக வெளிவந்து கொண்டு இருக்கும் இந்த நேரத்திலும் இவர் புகழ் கொடிகட்டிப் பறக்கிறது.' 'ரஜினி ஒரு படத்துக்கு ஐந்து லட்ச ரூபாய்க்கு மேல் வாங்குகிறாராம்!.' இது ஒரு ரெக்கார்ட்' என்கிறார் சினிமா உலகில் தொடர்பு கொண்ட ஒருவர்.

நடிப்பில் தந்தை என்று சிவாஜி கணேசனைச் சொல்லலாம்.இதை யாரும் மறுக்க முடியாது. அப்படிப் பட்ட சிவாஜிகணேசனுடன் ரஜினி நான் வாழவைப்பேன் என்ற படத்தில் நடித்து சிவாஜியை விட ரஜினியின் நடிப்புத்தான் தலைதூக்குகிறது என்ற பெயரை சம்பாதித்து விட்டார்.

ரஜினிகாந்தின் உண்மையான பெயர் சிவாஜிராவ்.பெங்களூரில் படித்து வளர்ந்தவர்.நடுத்தரக் குடும்பத்தில் கடைசிப் பிள்ளையாகப்பிறந்தவர்.கடைசிப் பையன் என்பதால் இவர் குடும்பத்தினர் இவரிடம் அளவுக்கு மேல் அன்பு வைத்து இருந்தனர். இவருடைய தாய் இவருக்கு ஏழு வயதான போது இறந்து விட்டார்.இவருடைய சகோதரர்தான் இவரைப் படிக்க வைத்து முன்னுக்குக் கொண்டுவர பெரு முயற்சி செய்தார்.சுவாமி ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் இவரை இவர் சகோதரர் சேர்த்து படிக்க வைத்தார்.ரஜினி ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் படித்த போது தான் ஆஸ்திகனாகிவிட்டதாகக் கூறுகிறார்.எப்படி என்று விளக்கம் கூறவில்லை..

பள்ளியில் படித்தபோதும்,கல்லூரியில் படித்தபோதும் இவர்தான் முதல் மார்க் வாங்குவார்.படிப்பில் அவ்வளவூ கெட்டிக்காரர் ஆனாலும் ஏதோ ஒரு சங்கடம் இவரைத் துன்புறுத்தியது.வேகமாக முன்னுக்கு வர எண்ணினார். இதன் விளைவாக யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்து இருநூறு ரூபாய் திருடிக்கொண்டு சென்னைக்கு ஓடி வந்து விட்டார்.நான்கைந்து நாட்களில் பணம் காலியாகிவிட்டது.எல்.ஐ.ஸி கட்டிடத்தின் முன்,பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த போது இவ்ரை சந்தேகப் பட்டு போலீசார் பிடித்துப் போய்விட்டார்கள்..ஆனால் காலையில் விட்டுவிட்டார்கள்.கையில் பணமில்லாததால் திருட்டு ரயில் ஏறி பெங்களூருக்கே திரும்பிவிட்டார்.

அதன் பிறகு,இவர் தன் சகோதரர் அனுமதியுடன் சென்னைக்கு வந்து பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து பயிற்சி பெற்றார்.நடிப்புக் கல்லூரியில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தபோது பெரும்பாலும் உட்லாண்ட்ஸ் ட்ரைவின் ரெஸ்டாரண்ட்,யூ.எஸ்.ஐ.எஸ்,ப்ளூ டைமண்ட்,பிரிட்டிஷ் கவுன்ஸில்,சோவியத்
கல்சர் மண்டபம்----இப்படிச் சுற்றிக் கொண்டிருப்பாராம் நண்பர்களுடன்.நடிப்பு
கல்லூரியில் பயிற்சி பெற்ற போதிலும் எதிர்காலம்ஒரு பெரிய சுவரைப் போல் தோன்றியிருக்கிறது.

பெங்களூரில் இருந்து வருவதற்குமுன் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஒர்க் ஷாப்பில் வேலை செய்தார்.தச்சுப் பட்டறையில் வேலை செய்தார். ஆப்ஸில் ப்யூன் வேலை செய்தார்.மூட்டைத் தூக்கும் கூலி வேலை செய்தார். கடைசியாக இவர் உயர்வு பெற்றுக் கண்டக்டர் வேலை பார்த்து வந்தார். 'மாடு மாதிரி வாழ்ந்து கஷ்டப்பட்டேன். எதுக்கு?.. சோற்றுக்கு!..வயிற்றுக்கு!!' என்கிறார் இப்போதும்.

இவர் வாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தைக் கொடுத்தவர் டைரக்டர் பாலசந்தர்.'அபூர்வராகங்கள்' என்ற படத்தில்தான் இவருக்கு சான்ஸ் கொடுத்தார்.சிறிய காரெக்டர்தான் என்றாலும்.,இவர் தோன்றிய நான்கைந்து காட்சிகளில் இரசிகர்களின் மனதைப்பெரிதும் கவர்ந்து விட்டார்.தொடர்ந்து 'மூன்று முடிச்சு' இவருக்க்குப் புகழைக் கொடுத்தது.இரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டுவிட்டார்.'16 வயதினிலே' மூலம் மேலும் புகழைத் தேடிக் கொண்டார்.

புதிதாக இவர் பங்களா கட்டிய போது,அதில் பெரிய அளவில் பாலசந்தரின் புகைப் படத்தை ஹாலில் மாட்டியிருந்தாராம்.இதை கண்டு பாலச்சந்தரே உணர்ச்சி வசப்பட்டுப் போனார்.ஆனால் கொஞ்ச நாட்களிலேயே ரஜினி அந்தப் படத்தைத் தன் கையாலேயே உடைத்து விட்டதாக பாலச்சந்தருக்கு செய்தி எட்டியபோது,அவரால் அதை நம்ப முடியவில்லை.

ஆனால் அடுத்த நாளே ரஜினி பாலச்சந்தரின் வீட்டுக்கு வந்து, ''சார், உங்க படத்தை இந்தக் கையால் உடைத்தேன்!.ஏன் சார் சாதாரண சிவாஜியை ரஜினிகாந்த் ஆக்கினீர்கள்?..ஜனங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.என்னையும் ஜனங்களால் புரிந்து கொள்ள முடிய வில்லை.. புகழ் போதையைத் தாங்கக் கூடிய சக்தி எனக்கில்லை'' என்றுத் தேம்பித்தேம்பி அழுதாராம்.

தீடீரென்று பெரும் பணமும் புகழும் வந்ததும் இவருக்குத் தலைகால் புரியவில்லை.இவரைப் புரிந்து கொள்ளாமல் தலைக்கனம் ஏறிவிட்டதாகப் பலர் பேசிக்கொண்டார்கள்.இடைவிடாத படப் பிடிப்பினால் இவர் மன நிலை ஓய்வு இல்லாமல் பாதிக்கப்பட்டது.வெறி பிடித்தவர் போல் ஆகிவிட்டார். இவருக்கு யோசனை சொல்லவோ,கால்ஷீட்டுக்களை வகுத்துக் கொடுக்கவோ சரியான காரியதரிசி இல்லை.இதனால் இவர் பெரிதும் பாதிக்கப் பட்டார்.

'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் நடித்த போது, ஒரு நாள் பாலச்சந்தரிடம் வந்து, 'என்னால் கான்ஸண்ட்ரேட் பண்ண முடியவில்லை. தலையில் யாரோ சம்மட்டியால் அடிப்பது போல் இருக்கிறது' என்றார்.இவரைப் புரிந்து கொண்டு இவரை மனநோய் நிபுணரிடம் கொண்டு போனவர் பாலச்சந்தர்தான்.

நடிகர்கள் சங்கத்தின் காரியதரிசியாகப் பணிபுரியும் மேஜர் சுந்தர்ராஜனும் ரஜினிக்கு யோசனைகள் கூறி,நேரப்படி அளவுடன் நடிக்க வேண்ட்டும் என்றும் ஓய்வு தேவை என்பதையும் விளக்கிக் கூறி,உதவிகள் செய்தார்.

இப்போதெல்லாம் ரஜினி அளவுடன் நேரப்படி நடிக்கிறார்.தேவையான அளவு ஓய்வு பெறுகிறார்.இவருடைய மார்கெட் மிகவும் ஸ்டெடியாக முன்னேறி வருகிறது.பிரச்சனைகள் இல்லை.

அரசியல் பின்னணி இல்லாமல் சினிமா உலகில் இவர் புகழ் பெற்று விளங்குகிறார்.சிகரெட்டைத் தூக்கிப்போட்டு வாயில் பிடிப்பதும்,ஸ்டைலாக சண்டைப் போடுவதும்,குணச்சித்திர நடிகரைப் போல் வாய்ப்பு வரும் போது நடிப்பதும் எல்லோரையும் கவர்ந்து விட்டது.பெரும் பாலும் மாணவ மாணவிகள் இவர்ப் படங்களைப் பார்க்க கூட்டம் கூட்டமாய்ப் படையெடுக்கிறார்கள்.ரஜினி இன்று ஒரு பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட். எம்.ஜி.ஆர். பல ஆண்டுகளில் பெற்ற புகழை,இவர் ஒரு சில ஆண்டுகளில் பெற்றுவிட முடியும் என பலர் நம்புகின்றனர்.

ரஜினி அளவுடன் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டு ஸ்டெடியாக இருந்தால் நல்ல எதிர்காலம் இவருக்கு காத்திருக்கிறது.

1980-ன் ஆரம்பத்தில் கல்கண்டில் வெளிவந்த தலையங்கம்!

தயாளு அம்மையாரைப் பகுத்தறிவாளராக்கி சாதனை செய்ததால் கலைஞருக்கு பகுத்தறிவு ஸ்வார்டு! மக்கள் மகிழ்ச்சி வெள்ளதில் செத்தனர்!

Posted on Monday, September 8, 2008 by நல்லதந்தி



பெரியார் பன்னாட்டு மையம் சார்பில் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு ``சமூக நீதிக்கான வீரமணி விருது'' வழங்கும் விழா நேற்று பெரியார் திடலில் நடந்தது. மையத்தின் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் இந்த விருதையும், ரூ.1 லட்சம் காசோலையையும் முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் வழங்கினார்.


விழாவில் முதல்-அமைச்சர் கருணாநிதி பேசியதாவது:-இங்கே வீரமணி பேசும் போது இது விருதல்ல, போர்வாள் என்றார். ஆங்கிலத்தில் இந்த சொல்லை மாற்றிச் சொன்னால் இது அவார்டு அல்ல, ஸ்வார்டு. இந்த வாளை நான் பெரியாரிடத்திலே பெற்று பல்லாண்டு காலம் பகுத்தறிவுவாதியாக, சுயமரியாதைக்காரனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அதனால் தான் நீங்களும் எனக்கு இந்த விருதை வழங்கியிருக்கிறீர்கள்.


இவருடைய வயதென்ன, பதவி என்ன, இவர் போய் வீரமணி பெயரால் ஒரு விருது வாங்குவதா? என்று சிண்டு முடிகிறவர்கள் பேசக்கூடும், எழுதக் கூடும். தகுதியானவர் பெயரால் தான் இந்த விருதை வாங்கியிருக்கிறேன்.


சுயமரியாதை, சமூக நீதியில் அக்கரையுள்ளவன் என்பதால் மட்டுமல்ல, இதற்காக தொடர்ந்து போராடுபவன் என்பதற்காக இந்த விருது வழங்கியிருப்பதை நான் மறந்து விடவில்லை. வெளிநாடுகளில் வாழ்கிற நண்பர்கள் என்றாலும் நம்மை இணைக்கிற கொள்கை உள்ளவர்களால் வீரமணி பெயரால் இந்த விருது வழங்கப்படுகிறது.


1920-ம் ஆண்டிலிருந்து நடந்து கொண்டிருக்கிற சமூக நீதிக்கான போரை வேகப்படுத்தி பல வெற்றிகளை பெற்ற பெரியார், அண்ணா ஆகியோரை தலைவர்களாக ஏற்றுக் கொண்டு களத்தில் நின்ற, நின்று கொண்டிருக்கிற எங்களுக்கும் இந்த உரிமை உண்டு. இந்த போராட்டம் முற்று பெற்றுவிட்டதா என்றால் இல்லை. இன்னும் போராடு என்று ஊக்கப்படுத்துகிற விதத்தில் தான் இந்த விருதை தந்திருக்கிறீர்கள்.


பெரியாருக்கு பின்னர் இந்த இயக்கம் அழிந்துவிட்டதா - போய்விட்டதா - போகக் கூடாதா - என்று எண்ணுகிறவர்களுக்கு பெரியாருக்கு பின்னர் வீரமணி - அவருக்கு பின்னரும் ஒரு படையை உருவாக்கி வைத்திருக்கிறார் என்பதை பார்க்கும் போது பெரியாரின் கொள்கைகள் என்றைக்கும் சாயாது, அழியாது என்று பெருமிதத்துடன் கூறிக் கொள்கிறேன்.


மாணவப் பருவத்திலேயே எப்படியோ என் உள்ளத்தில் இந்த சுயமரியாதை ஒட்டிக் கொண்டு என்னை வளர்த்திருக்கிறது. மூட நம்பிக்கைகள் உள்ள சின்ன ஊரில் பிறந்தவன் நான். அங்கிருந்து வந்து பெரியாரால், அண்ணாவால் உருவாக்கப்பட்டு இப்போது உங்கள் முன் உட்கார்ந்திருக்கிறேன் என்றால் இது நான் பெற்ற பேறு அல்ல, பெரியார் தந்த அறிவு, அதன் விளைவு. இவைகளை எல்லாம் நானே தான் சிந்தித்தேன், நானே தான் செய்தேன் என்று சொல்வது சுலபம். ஆனால் எதிர்காலத்தில் வரலாற்றில் ஒரு பொய்யை சொன்னவன் என்ற நிலைக்கு ஆளாக விரும்பவில்லை.நான் தயாரிக்கப்பட்டவன். பெரியாரால் தட்டி தட்டி சீர் செய்யப்பட்டவன். அண்ணாவால் நான் வலுப்பெற்றவன். நீங்கள் தருகிற விருதை பெறுகிற அளவுக்கு வளர்ந்திருக்கிறேன் என்றால் எப்படிப்பட்ட உற்றார், உறவினர்களுக்கு மத்தியில் வளர்ந்தேன் என்று சொன்னால் தான், நாமும் பெரியார் விருது பெறலாம் என்று எண்ண முடியும்.


என் தந்தை முத்துவேலர் பிறக்கும் போதே அவரது தந்தை இறந்துவிட்டார். ஒவ்வொரு வருடமும் அவர் தனது தந்தைக்கு திவசம் புரோகிதரை வைத்து கொடுப்பார். நாம் வைக்கும் உணவை அவர் உண்டு நமக்கு ஆசி வழங்குவதாக ஒரு நம்பிக்கை. இதை நான் பள்ளி சிறுவனாக இருந்த போதே எதிர்த்தவன். இதற்காக சில நேரம் அடியும் வாங்கியிருக்கிறேன்.ஒரு முறை புரோகிதர் வாயில் வெற்றிலை போட்டுக் கொண்டு மந்திரத்தை உளறிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த எனது தந்தை என் மகன் சொல்வது உண்மை தான் போலிருக்கிறது, எழுந்து ஓடிவிடு, இனி என் வீட்டில் திவசம், திதி எல்லாம் இல்லை என்றார்.


திருவாரூரில் ஒரு பயங்கர சடங்கு ஓங்காரம் என்று நடக்கும். நடுநிசியில் 10 பேர் கூடி `ஓம்' என்று கூச்சலோடு வலம் வருவார்கள். இந்த ஓங்காரத்தை மடக்குபவர்கள் ரத்தம் கக்கி சாவார்கள் என்று ஒரு மூடநம்பிக்கையும், பயமுறுத்தலும் உண்டு. ஒரு நாள் இயக்க நண்பர்கள் இதை மறிக்கப் போகிறோம் என்று அறிவித்து மறித்தார்கள். அதோடு கலைந்து சென்றவர்கள், அதன் பின்னர் திருவாரூரில் ஓங்காரமே கிடையாது.எனது உறவினர் சொர்ணத்தின் தந்தை கிருஷ்ணமூர்த்தி பிள்ளை துர்க்கை அம்மனின் பக்தர். அவர் ஒரு மந்திரவாதி எதிர்காலம் பற்றி எல்லாம் சொல்கிறார். அவரிடம் உன்னைப்பற்றி விசாரிக்கலாம் என்றார். நான் மறுத்தும் கேட்காமல் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டு அவர் மந்திரவாதியிடம் பேசிக் கொண்டிருந்தார். மந்திரவாதியுடன் அவரது மனைவியும் வந்திருந்தார்.


கிருஷ்ணமூர்த்தி மந்திரவாதியிடம் எங்களுக்கு எத்தனை வீடுகள் இருக்கிறது என்று சொல்லுங்கள் பார்க்கலாம் என்று கேட்க மந்திரவாதி அவரது மனைவியை பார்க்க, அந்த பெண் என்னைப் பார்க்க, நான் 5 விரலை காட்டினேன். அவரும் மந்திரவாதிக்கு சைகையில் 5 விரலை காட்ட மந்திரவாதி 5 வீடுகள் இருப்பதாக தவறாக கூறினார். அடுத்து எத்தனை மகன்கள் என்ற கேள்விக்கும் அதேமுறையில் ஒரு மகன் என்று தவறாக கூற இவன் சொல்வது சரிதான், எல்லாம் ஏமாற்று வேலை என்று கூறி மந்திரவாதியை விரட்டி விட்டார். அவர் இந்த குளறுபடிக்கு நான் தான் காரணம் என்று தெரிந்து கொண்டு இந்த பையன் 6 மாதத்தில் செத்துவிடுவான் என்று கூறிவிட்டு சென்று விட்டான்.இப்படி சுயமரியாதை ஏற்படக்கூடிய அளவுக்கு என்னிடம் மட்டுமல்ல, என்னை சுற்றியுள்ள பலருக்கும் ஏற்படக் கூடிய பல சம்பவங்கள் நடந்திருக்கிறது.


என்ன முக்கியமான காரணம் - நான் எஸ்.எஸ்.எல்.சி. தான். அதிலும் தோல்வி. இதற்காக யாரும் நாமும் எஸ்.எஸ்.எல்.சி. தேறவில்லை, நாமும் முதல்-அமைச்சர் ஆகிவிடலாம் என்று நினைக்கக் கூடாது. இந்த நிலைக்கு நான் வரக் காரணம் கருத்துக்கள், பகுத்தறிவு, பெரியார் ஏற்றி வைத்த சுடர் ஒளி.ஒரு இசைவாணர் குடும்பத்தில் பிறந்தவன். எனது தந்தை என்னை ஒருவரிடம் நாதசுரம் பயில அனுப்பினார். நான் ஒரு நாள் சென்றுவிட்டு மறுநாள் இனி நான் அங்கு போகமாட்டேன் என்று கூறிவிட்டேன். காரணம் கேட்ட போது அவர் குருநாதர் - ஆனால் அங்கு அய்யர், முதலியார் என்று சிலர் வந்தால் அவர் தன் தோளில் அணிந்திருக்கும் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொள்கிறார். இது குருநாதருக்கு அவமானம் என்றேன்.


அதன் பின்னர் தான் என்னை திருவாரூரில் ஒரு பள்ளிக்கு அனுப்பினார்கள். அங்கு 8-ம் வகுப்பில் சேரவேண்டும் என்ற போது தேர்வு வைத்தனர். அதில் தேர்வாகாமல், 7-ம் வகுப்புக்கு தேர்வு வைக்க அதிலும் தேர்வாகாமல், 6-ம் வகுப்புக்கு தேர்வு வைக்க அதிலும் தேர்வாகாமல், இறுதியாக 5-ம் வகுப்பில் சேர்த்துக் கொண்டனர். அதுவும் இதில் தேர்வாக்கவில்லை என்றால் எதிரில் உள்ள குளத்தில் குதித்து உயிரை விட்டுவிடுவேன் என்று பயமுறுத்தி சேர்ந்தேன்.


துண்டை தோளில் போட்டால் என்ன? இடுப்பில் கட்டினால் என்ன? இதில் என்ன சுயமரியாதை இருக்கிறது என்று நான் அப்போது எண்ணியிருந்தால், நான் இன்று இடுப்பில் துண்டை கட்டிக் கொண்டிருப்பேன். இந்த விருது பெறுவது சாதாரண விஷயமல்ல. அதுவும் திராவிட கழக தலைமைக் கழகத்தில் கொடுத்த இந்த விருது - விருதல்ல - போர்வாள் என்று மீண்டும் கூறிக் கொள்கிறேன்.இவ்வாறு கருணாநிதி கூறினார்.

10மணிக்கு கலைஞர் கவிதை|||10 மணிக்கு கரண்ட் போகணும் பெண்கள் கதறல்!

Posted on Sunday, September 7, 2008 by நல்லதந்தி



கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 10 மணிக்கு தமிழருவி என்ற தலைப்பில் இலக்கிய பாடல்களை எளிய கவிதை நடையில் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கி வருகிறார்.

அதன் ஒருபகுதியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு தாம் படைத்த சங்கத்தமிழிலிருந்து முதல்-அமைச்சர் கருணாநிதி `கள் உண்ட கடுவன்!' என்ற கவிதையை வழங்குகிறார்.

சங்கத்தமிழ்ப் புலவர் கபிலர் பாடிய அகநானூற்றுப் பாடலை, கடுவன் ஒன்று கள் உண்டு மயங்கிக் கண்ணுறங்கிக் கிடந்த காட்சியைக் கண்ட புலவர் கபிலர், அதன் காரணத்தை ஆராய்ந்து தெளிந்த நிகழ்வைத் தன் கற்பனைத் தேரோட்டி அற்புதக் கவிதையாய் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்குகிறார்.

இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் கருணாநிதியின் சங்கத்தமிழிலிருந்து `பாறையில் உருகுது பசு வெண்ணெய்!' என்ற கவிதையை வழங்குகிறார். வணங்காமுடி எனும் சங்க காலத்துப் பெருவீரன் தனக்கு அறிவுரை நல்கிடும் அன்பு நண்பனின் செயலைப் பாறையில் உருகும் பசு வெண்ணெய்க்கு உவமைகாட்டிக் குறுந்தொகையில் புலவர் வெள்ளிவீதியார் பாடிய பாடலை, காதல் துயருற்றக் காளை ஒருவனின் மனநிலையை நெஞ்சம் நெகிழ வைக்கும் கவிதைப் புதையலாய் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்குகிறார்.

மேற்கண்ட தகவலை கலைஞர் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.


அடுத்த செய்தி!


தமிழகத்தில் மின்சார தட்டுப்பாட்டை சமாளிக்க மேலும் கூடுதலாக 200 மெகாவாட் மின்சாரம் வாங்கப்படுகிறது. காலை 10 மணிக்கு முன் மின்தடை செய்யப்படுவதால் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்வது பாதிக்கப்படுகிறது என பெண்கள் கூறி உள்ளனர்.

தமிழ்நாட்டில் பருவமழை பொய்த்தது, காற்று வீசுவது குறைந்தது போன்ற காரணங்களால் மின்சார உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதல் மின்சாரத்தை வாங்க மின்சார வாரியம் பல்வேறு வழிகளில் நடவடிக்கை எடுத்து வருகிறது.மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி டெல்லி சென்று மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு கூடுதலாக 600 மெகாவாட் மின்சாரம் பெற்று வந்துள்ளார். இது மின் தட்டுப்பாட்டை ஓரளவுக்கு சமாளிக்க உதவும்.

காலை 10 மணிக்கு முன்பு மின்தடை செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் பொதுமக்கள் பலரும் புகார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்களுக்கும், வேலைக்கு செல்பவர்களுக்கும் காலையிலேயே சமையல் செய்து உணவு கொடுத்து அனுப்புவது காலை நேர மின்வெட்டால் வெகுவாக பாதிக்கப்படுகிறது என்று பெண்கள் கூறுகிறார்கள்.

குறிப்பாக கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் மிகவும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே காலை 10 மணிக்கு முன்பு மின்வெட்டு அமல்படுத்துவதை தவிர்த்து, 10 மணிக்கு மேல் மட்டுமே மின்வெட்டை அமல்படுத்த வேண்டும் என்று பெண்கள் தெரிவித்துள்ளனர்.

இதா இவிட வரு!

Posted on Saturday, September 6, 2008 by நல்லதந்தி







தாழ நோக்குக!


^^
^
^^^
^
^
^
^
^^^^^^^
^^^
^^^^
^^
^^^
^^^^
^^^^^^
^
^
^^^
^^
^^
^^ பிளீச்சிங் பெளடருக்கு வேண்டியாணு ஈ போட்டோ ஞான் இவிட காணிச்சது!
^^




இவிட வருன்னு ஞான் விளிச்சது கண்டு இவிட வந்ந(ஜொள்ளு விட்டுக் கொண்டு!) அத்தர சோதரன்மாருக்கும்.எண்ட வல்லிய நன்னிகளானு!.

நாங்களும் இந்த மாதிரி செய்வமில்ல!!

உண்மையான மதசார்பின்மை----அரசியலில் உள்ள ஒரே ஆண்பிள்ளை ஜெயலலிதா அறிக்கை!

Posted on Friday, September 5, 2008 by நல்லதந்தி



எனக்கு தெரிந்து போலி மதசார்பின்மை இல்லாத ஒரே அரசியல்வாதி ஜெயலலிதா தான்.

இந்து மதத்தை பற்றி திட்டிப் பேசுவதும்,மற்ற மதங்களைப் புகழ்ந்து பேசுவது மட்டுமே எழுதப் படாத மதசார்பின்மையாகிவிட்டது.

இந்து மதத்தைப் பற்றி உயர்வாகப் பேசிவிட்டால் உடனே அவர்கள் RSS,இந்துத்வா வாதிகள்,அல்லது இந்து தீவிரவாதிகள் என்று பத்திரிக்கைகளும் ஊடகங்களும் உடனே சித்தரித்து விடுகின்றன.

மதசார்பின்மை என்றால் எல்லா மதங்களுக்கும் ஒரே நிறை என்றுதானே அர்த்தம்.அதை விட்டுவிட்டு பெரும்பான்மை மக்களின் மதத்தை இழிவு படுத்துவதும்,சிறு பான்மை மக்கள் மதத்தின் பெயரால் என்ன செய்தாலும் கண்டிக்காமல் இருப்பதும் தான் மதசார்பின்மையா?.


சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்தால், அது கலை!.அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றவர்கள் இந்து வெறியர்கள்.

அதே ஒரு ஓவியக் கண்காட்சியில் முஸ்லீம் மன்னர்களின் கொடுங்கோல் தன்மையைப் பற்றி படம் இருந்தால் அதற்கு அரசாங்கமே எதிர்ப்பு தெரிவிக்கின்றது.அது சிறு பான்மையினர் மனதைப் புண்படுத்துமாம்.என்ன கொடுமை!.

அரசனுடைய கொடுங்கோன்மைக்கும் சிறு பான்மையினருக்கும் என்ன சம்பந்தம்.இது முஸ்லீம்கள் அனைவரையுமே அரசு கேவலப் படுத்தும் செயல் அல்லவா?.சிறுபான்மையினர் அனைவருமே அந்த அரசனைப் போன்றவர்கள் தான் என அரசு நம்புகிறதா?.

முஸ்லீம்கள் இதைக் கண்டிக்காமல், அரசு சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருப்பதாக எண்ணிக்கொள்கிறார்கள்.ஆட்சியாளர்கள் இந்து மதத்தை இழிவுபடுத்துவதால், அவர்கள் தங்களுக்கு ஆதரவானவர்கள் என்று தவறாக கருதிக்கொள்கிறார்கள்.எல்லாம் ஓட்டுக்காகத்தான் என்பதை சிறுபான்மையி னர் மறந்துவிடக்கூடாது.


இந்த நிலையில் தானும் ஒரு அரசியல்வாதியாய் சில தவறு களைச் செய்திருத்தாலும், எல்லா மதங்களும் சமம் என்று உண்மையாய், மனதில் இருப்பதை தைரியமாகச் சொல்லும் ஜெயலலிதா உண்மையிலேயே ஒரு புரட்சிதலைவிதான்!


அவருடைய அறிக்கை கீழே!


ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினருக்கும், வீடுகளை இழந்தவர்களுக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உதவி செய்யப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சுதந்திரம் அடைந்து 60 ஆண்டு காலம் ஆகியும், இன்னும் ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் இந்தியர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வது துரதிஷ்ட வசமாகும். இந்த சம்பவங்களால் பாதிக்கப்படும் அப்பாவிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவவேண்டும்.

அந்த அடிப்படையில் பிரதமர் மன்மோகன்சிங் ஒரிசாவில் மத பிரச்சினையின்போது பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு உதவி செய்வதாக அறிவித்துள்ளார். இது வரவேற்க கூடியது. அதே நேரத்தில் காஷ்மீரில் தீவிரவாதத்தாலும், மதவாதத்தாலும் சுமார் 3 லட்சம் இந்துக்கள் தங்கள் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தையும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். காஷ்மீர் இந்துக்கள் தாங்கள் பிறந்த மண்ணான சொர்க்க பூமியை விட்டு ஜம்மு பகுதியிலும், டெல்லி நகரிலும் சிதறுண்டு பரிதாபமான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

5 ஆயிரம் ஆண்டு கால பூர்வீகம் கொண்ட காஷ்மீர் இந்துக்களின் வீடுகள் தீவிரவாதிகளால் சின்னா பின்னமாக்கப்பட்டன. மத அடிப்படைவாத கலாசாரம் காரணமாக காஷ்மீரில் நிலவிய மதச்சார்பின்மை கலாசாரம் அழிக்கப்பட்டு விட்டது.

காஷ்மீர் பண்டிட்கள் என்று அழைக்கப்படும் அங்குள்ள இந்துக்கள் கல்வியில் இந்தியாவிலேயே சிறந்து விளங்கியவர்கள்.

1990-களில் சொந்த மண்ணிலேயே அவர்கள் அனாதையானார்கள். அவர்களின் சொத்துக்களை தீவிரவாத குழுக்கள் சூறையாடி அள்ளிச்சென்றன. ஆயிரக்கணக்கான பண்டிட்டுகள் கொடூரமாக முறையில் கொல்லப்பட்டார்கள். அங்கிருந்து தப்பிய சுமார் 31/2 லட்சம் பேர் டெல்லி மற்றும் ஜம்முவில் போதிய இருப்பிட, சுகாதார வசதிகள் இன்றி அங்கு வாழ்ந்து வருகிறார்கள்.

தங்களுக்கு வழங்கப்படும் குறைந்த அளவு ரேஷன் பொருட்களை வாங்கி, என்றாவது ஒருநாள் பிறந்த மண்ணுக்கு திரும்புவோம் என்ற நம்பிக்கையுடன் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். காஷ்மீர் இந்துக்களை போல சீக்கியர்களும், தீவிரவாத மற்றும் மத அடிப்படை வாதத்தால் மிகவும் பாதிக்கப்பட்டார்கள்.

ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் பாதிக்கப்பட்டதை போல, காஷ்மீர் இந்துக்களும், சீக்கியர்களும் மதவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். எனவே, ஒரிசாவில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் மேல் காட்டப்படும் அதே அக்கறையை இவர்கள் மீதும் செலுத்த வேண்டும். எனவே, பிரதமர் ஒருகண்ணில் வெண்ணையையும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பையும் வைப்பது எந்த விதத்தில் நியாயம். காஷ்மீரில் பாதிக்கப்பட்டுள்ள இந்துக்கள் மீதும் கரிசனம் காட்டவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

காஷ்மீரில் பாதிக்கப்பட்ட இந்துக்களும், மதவாதத்திற்கு இரையானவர்களே என்று வெளிப்படையாக அறிவிக்கக்கூடிய துணிவு பிரதமருக்கு வேண்டும். ஒரிசாவில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு செய்யப்படும் அனைத்து மறுவாழ்வு பணிகளும், காஷ்மீர் இந்துக்களுக்கும் செய்ய வேண்டும். இதுதான் உண்மையான மதச்சார்பின்மை ஆகும்.

இவ்வாறு அறிக்கையில், ஜெயலலிதா கூறியுள்ளார்.

இந்த ஆளை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே!

Posted on Thursday, September 4, 2008 by நல்லதந்தி

உருப்படியான யோசனை!.

ஒரு கூட்டத்துக்கோ, விருந்துக்கோ புறப்படும் போது,அங்கே சந்திக்கப்போகும் ஒவ்வொருவரிடமும் கவனம் செலுத்துவது என்று தீர்மானத்துக் கொள்ளுங்கள்.

ஒருவர் உங்களுக்கு அறிமுகம் ஆகும் போது,அந்தப் பெயரைச் சரியாகத் தெரிந்து கொள்ளுங்கள்.அநேக தடவைகளில் அறிமுகம் என்பது அவசர அவசரமாக முடிந்துவிடும்.முணுமுணுவென்று ஏதோ சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள்.கூச்சப் படாமல் ஒரு தடவைக்கு இரண்டுதடவையாக அந்தப் புது நண்பரையே,அவர் பெயரைக் கேளுங்கள்.

அறிமுகம் ஆனவருடைய பெயர் அடிக்கடி பேச்சில் வ்ரும்படி உரையாடுங்கள்.அறிமுகம் ஆகும் போது "வணக்கம்" என்று வெறுமே மொட்டையாகச் சொல்வதை விட "வணக்கம் சரவணன்"..என்று சொல்வது நலம்.

முகத்தைக் கூர்ந்து கவனிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.முகத்தின் அமைப்பு,வடிவம் இவற்றை மனதில் பதித்துக் கொள்ளுங்கள்.காது,மூக்கு, முதலியவற்றின் அடையாளங்களில் விசேஷ கவனம் செலுத்துங்கள்.

பெயரைச் சட்டென்று நினைவுக்கு கொண்டு வரக்கூடியபடி அதற்குத் தொடர்பான இன்னொன்றையும் நினைவு படுத்திக் கொள்ளுங்கள். ஒருவர் "வீராசாமி" என்று பெயர் கொண்டிருந்தால்,"அமாவாசை அமைச்சர் ஆற்காடு வீராசாமி" என்று மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.இந்த கற்பனை எவ்வளவுக்கெவ்வளவு பித்துக்குளித்தனமாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு மேல்!.

நீங்கள் சந்திக்கும் மனிதர்களைப் பற்றிய சிறு சிறு குறிப்புகளை அன்றாடம் டைரியில் எழுதி வையுங்கள்.இது முக்கியம்.ஏனென்றால் ஒரு நாளில் நடைபெறும் விஷயங்களில் ஐந்தில் ஒரு பகுதி 24 மணிநேரத்தில் மறந்து விடுகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

முன்பு சந்தித்த நபரையே மீண்டும் பார்க்க நேரிட்டால் அவர் பெயரைச் சொல்ல நினைக்காதீர்கள்.நிதானித்து அவரை எந்தச் சந்தர்ப்பத்தில்,எப்படிச் சந்தித்தீர்கள் என்ற பழைய நிகழ்ச்சியை ஞாபகத்துக்கு கொண்டு வாருங்கள்.

மேல உள்ளவைகள் முகங்களையும்,பெயர்களையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள சில நல்ல வழிகள்.


கண்டதும்,சுட்டதும்.......நல்லதந்தி!.

நாளைக்கு எதற்கு விடுமுறை நாள்---கலைஞர் டிவிக்கு யாராவது சொல்லுங்களேன்!

Posted on Tuesday, September 2, 2008 by நல்லதந்தி



ஊரில் உள்ள தொலைக்காட்சிகளெல்லாம் நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்புத்திரைப் படம்,சிறப்பு குத்தாட்ட நிகழ்சிகள் என்று பணம் அள்ளும் வேலையை ஜருராக செய்து கொண்டிருக்கும் போது பகுத்தறிவு தொல்லைக்காட்சியான கலைஞர் டிவி மட்டும் சும்மா உக்காந்து பேன் பார்த்துக் கொண்டிருக்குமா?.ஆரம்பித்து விட்டது தன் சிறப்புக் கொடுமைகளை!.


ஆனால் தம்முடைய பகுத்தறிவிற்கு விநாயகர் சதுர்த்தி கொண்டாடலாமா?.பகுத்தறிவு படபடவென்று வேலை செய்ய,பணம் சம்பாதிக்கும் குறுக்கறிவு குத்தாட்டம் போட,தான் ஏற்கனவே தமிழ்ப்புத்தாண்டுக்கு கண்டுபிடித்து வைத்திருந்த அதே ஃபார்முலாவை கையில் எடுத்து விட்டது.


மற்ற டிவிக்களில் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் கொண்டாடும் போது பகுத்தறிவு டிவி மட்டும் சித்திரை நன்னாள் சிறப்பு நிகழ்ச்சியைக் கொண்டாடியது.அது என்னங்க சித்திரை நன்னாள்ன்னு நமக்கு மண்டை காய்ந்தது தான் மிச்சம்.தமிழ்ப் புத்தாண்டை மாற்றியதை வரவேற்ற பகுத்தறிவு மாமணிகள் யாரும் அது என்ன சித்திரை முதல் நாள் சிறப்பு நிகழ்ச்சி என்று கேட்கவில்லை.வேறு யாராவது கேட்டிருந்தால் கூட இவர்களே முன் நின்று அதற்கு சப்பைகட்டு கட்டியிருப்பார்கள்!.


இப்போது பகுத்தறிவு கலைஞர் டிவிக்கு நாளை விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகளாம்!.இந்தியாவிலேயே நாளைக்குத்தான் முதன்முறையாக விடுமுறை விடுகிறார்களா?அல்லது வருடத்திற்கு ஒரு முறைதான் விடுமுறை விடுகிறார்களா?.இதற்குமுன் விட்டதில்லையா?.என்று பகுத்தறிவாளர்கள் கேள்வி கேட்கமாட்டார்கள்.எனென்றால் பதில் கிடைக்காத கேள்விகளை கலைஞரிடம் கேட்க கூடாது என்பதுதான் பகுத்தறிவு என்று அவர்களுக்குத் தெரியும்!.


கலைஞர் டிவியிடம் பகுத்தறிவை விட பட்டறிவு அதிகம் இருக்கிறது.இல்லையென்றால் விநாயகர் சதுர்த்தியை,விநாயகரைத் தவிர்த்து விட்டு விடுமுறை நன்னாளாக அறிவித்து விளம்பரத்தில்..............ஸ்..ஸ்ஸ்ஸ்... அப்பா....எத்தனை "வி"...... ..காசு அள்ளும் கலையில் தேறியிருப்பார்களா?

அரிசி கிலோ ஒரு ரூபாய்!!! வைகோ ஆவேசம்!!

Posted on Monday, September 1, 2008 by நல்லதந்தி



மின் வெட்டு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஆகிய பிரச்சினைகளிலிருந்து மக்களை திசை திருப்பும் வகையில்தான் கிலோ அரிசி ஒரு ரூபாய் என்ற அறிவிப்பை திமுக அரசு வெளியிட்டுள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

நியாய‌விலை‌க்கடைக‌ளி‌ல் ஒரு ரூபா‌ய்‌க்கு ஒரு ‌கிலோ அ‌ரி‌சி வழ‌ங்க‌‌ப்படு‌ம் எ‌ன்று த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளது ம‌க்களை ஏமா‌ற்று‌ம் வேலை எ‌‌ன்றும், நியாய விலைக் கடைகளில் விற்கப்படும் அரிசியை பெரும்பாலான மக்கள் வாங்கிப் பயன்படுத்துவதில்லை.இப்போது கிலோ அரிசி ஒரு ரூபாய் என்று அறிவித்திருப்பது, அந்த அரிசியை ஆளுங்கட்சியினர் வெளி மாநிலங்களுக்கு கடத்தவே உதவும் என்று அவர் கூறியுள்ளார்.


இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், தற்போது ‌நியாய‌விலை‌க் கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசி விலையை இரண்டு ரூபாயில் இருந்து ஒரு ரூபாயாக குறைத்திடும் அறிவிப்பு ஒன்றை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாதம் ஒன்றுக்கு ரூ.500-க்கு மளிகைப் பொருட்கள் வாங்கிய ஏழைக் குடும்பத்தினர் இன்றைக்கு அதே பொருட்களை 2500 ரூபாய்க்கு வாங்க வேண்டிய அளவிற்கு விலைவாசி விஷம்போல் ஏறியுள்ளது.


சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை பன் மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது.ஏழை, நடுத்தரக் குடும்பங்களின் வீடு கட்டும் கனவு தகர்க்கப்பட்டு கம்பி, சிமெண்ட் விலை நினைத்துப் பார்க்க முடியாத வண்ணம் உயர்த்தப்பட்டு உள்ளது. எல்.எஸ்.எஸ்., டி.எஸ்.எஸ்., எஸ்.எஸ்.எஸ். என்ற பெயரில் அரசு பேரு‌ந்துக‌ளி‌ன் கட்டணம் முன்னறிவிப்பு இன்றி உயர்த்தப்பட்டு உள்ளது. மின்சார தட்டுப்பாடும் மக்களை பாதிப்படைய செய்துள்ளது.ஏழை- நடுத்தர மக்களை விலைவாசி உயர்வால் ஏங்க வைத்து விட்டு, தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பு ஏமாற்று வேலையாகும். இதனால் மக்களின் கோபத்தில் இருந்து தப்ப முடியாது'' எ‌ன்று வைகோ கூ‌றியு‌ள்ளா‌ர்.