Showing posts with label கலைஞர். Show all posts
Showing posts with label கலைஞர். Show all posts

கலைஞருக்கு சில TIPS!

Posted on Friday, May 8, 2009 by நல்லதந்தி

வாழும் வள்ளுவம் வாக்கிங் உண்ணாவிரதம் இருந்தது நம்மை சிரிப்புக் கடலில் ஆழ்த்தி மகிழ்ந்தது தெரிந்ததே!. இரண்டு மாதங்களுக்கு முன் அறுவை சிகிச்சை முடிந்த கையோடு ஆஸ்பத்திரி உண்ணாவிரதம் அறிவித்தார். இதனால் நமக்குத் தெரியாமல் ஆஸ்பத்திரியில் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறாரா? என்று அதிர்ச்சியடைந்த டாக்டர்கள் ஆப்பரேஷன் முடிந்த கையோடு நீங்கள் இப்படி அறிவித்தால் மக்கள் நீங்கள் உண்மையிலேயே ஆபரேஷன் செய்து கொண்டிருக்கிறீர்களா? அல்லது ஐகோர்ட் பிரச்சனையில் இருந்து தப்பிக்க ஆஸ்பத்திரி டிராமாவை நடத்துகிறாரா? என்று மக்கள் சந்தேகப் படமாட்டார்களா என்று சொன்னவுடன் தன்னுடைய தில்லுமுல்லு தனக்கே ஆப்பு வைப்பதைக் கண்டு உண்ணாவிரத தமாஷை அப்படியே அடக்கி வாசித்து வீடு திரும்பினார். இப்படி காரிய முட்டாளான கலைஞர் டாக்டர்களைக் காரணமில்லாமல் முட்டாள்கள் ஆக்கினார்.

இப்போதைய வாக்கிங் உண்ணாவிரதம் லஞ்ச் பிரேக்குக்கு முன்னால் பிரேக் ஆகிவிட்டது. உண்ணாவிரதத்தால் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என்று ப.சிதம்பரம் ஒப்புக் கொண்டாரே ஒழிய இன்னும் அம்மா முதல் ஐ.நா.சபை செயலாளர் வரை போர் நிறுத்தத்திற்காக இந்த நிமிடம் குரல் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். மன்மோகன் சிங்கைக் கேட்டால் ஒருத்தருக்கு எவ்வளவுதான் தொல்லை கொடுப்பது விட்டு விடுங்கள். ஆஸ்பத்திரியில் ரெஸ்ட் எடுக்கட்டும் என்பார். மக்கள் நம்புவதாய்த் தெரியவில்லை. வேறு என்ன செய்வது என்றால் இதைப் பயன் படுத்திக் கொள்ளலாம்.

இராஜபக்‌ஷே போரை நிறுத்த ஒப்புக் கொண்டதாய் தெரியவில்லை.அவ்ரை ஒப்புக் கொள்ள வைக்க கலைஞர் வீட்டில் அவருக்கு பலமான விருந்து வைத்து அவர் சாப்பிட முடியாமல் ”போதும் நிறுத்துங்கள்” என்று சொல்லும் போது கொல்றாங்களே டப்பிங் வாய்ஸ் புகழ் தயாநிதி மாறனை விட்டு “போரை நிறுத்துங்கள்” என்று மாற்றிக் குரல் கொடுத்து சன்,கலைஞர் T.V யில் ஒளிபரப்பலாம்.

இதெல்லாம் நமக்குச் சரிப்படாது. வழக்கம் போல், மனித சங்கிலி, தந்தி, உண்ணாவிரதம், பந்த் போன்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகள் மூலமாகவே இலங்கைப் பிரச்சனையை அணுகலாம் என்றால்....

விடுமுறைக் கொண்டாட்ட உண்ணாவிரதம்: இந்த உண்ணாவிரதத்தில் உள்ள விஷேசம் என்னவென்றால் உண்ணாவிரதத்தை நாம் இருக்க வேண்டியது இல்லை. கலைஞர் T.V, Sun T.V போன்றவைகளில் இதுவரை தமிழ் படங்களில் இடம் பெற்ற உண்ணவிரதக் காட்சிகளை ஒன்றினைத்து ஒளி பரப்பலாம். நாமெல்லாம் T.V.யைப் பார்த்து, சாப்பிட்டுக் கொண்டே, உண்ணாவிரதக் காட்சிகளைப் பார்ப்பதனால் உண்ணாவிரதம் இருக்கின்ற உணர்வைப் பெறலாம். பெரும்பான்மையான படங்களில் வரும் உண்ணாவிரதக்காட்சிகள் நகைச்சுவை காட்சியாகவே அமைக்கப் பட்டு இருக்கும். எனவே கலைஞர் உண்ணாவிரதம் இருந்த அளவிற்கு நகைச்சுவையாக இல்லாவிட்டாலும், ஒரளவிற்கு நகைச்சுவையாகவே இருக்கும் படியால் கொண்டாடத்திற்கு குறைவு இருக்காது.

தந்தி உண்ணாவிரதம்: இந்த உண்ணாவிரதம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் திட்டத்துடன் புதுமை கலந்தது. தந்திக்குத் தந்தி! உண்ணாவிரதத்திற்கு உண்ணாவிரதம்.சுருக்கமாகச் சொல்லப் போனால் மாறன் பிரதர்ஸ் அழகிரி பிரச்சனையையும் ஸ்பெக்ட்ரம் பிரச்சனையையும் பணம் என்கிற ஒரே கல்லில் கலைஞர் தீர்த்ததைப் போல!. இதில் இன்னொரு புதுமையும் உண்டு இந்தத் தந்தியை நீங்கள் பிரதமருக்கு அனுப்பத் தேவையில்லை. அவர் சாதாரணமாகவே இதை கவனிக்கப் போவதில்லை, அதிலும் இப்போது தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதால் அவருக்கு தந்தி வந்த விஷயமே தெரியாமல் போய் விடலாம். எனவே இந்தத் தந்தியை நம் விலாசத்திற்கே அனுப்பிக் கொள்ளலாம். இதனால் டெல்லி வரை தந்தி அனுப்புகின்ற செலவு மிச்சம். தந்தியில் உயிர் கொடுப்போம், உண்ணாவிரதம் இருப்போம் என்று வாசகம் அனுப்புவதில் அதை நமக்கே அனுப்பிக் கொள்வதால் சுருக்கமாக உ.கொ.உ.இ என்று அனுப்பிக் கொள்ளலாம். தந்தி வீட்டிற்கு வந்தவுடன் தந்தியை உயிர் கொடுப்போம், உண்ணாவிரதம் இருப்போம் என்று ஆவேசமாக படித்து ஆறுதல் அடைந்து இலங்கைப் பிரச்சனையை யாரும் அறியாமல் தீர்க்கலாம்.

மனிதசங்கிலி உண்ணாவிரதம்: இந்த உண்ணாவிரதம் கூடி வாழ்ந்தால் கேடிகளுக்கு நன்மை என்ற திட்டத்தில் பால் வகுக்கப் பட்டது. இதில் மேடையில் இருக்கின்ற தலைவர்கள் ஜனக்களுக்கு தரிசனம் தரும் போது எந்தத் தலைவனும் வேறு அணிக்குத் தாவக்கூடாது என்று தடுப்பதைப் போல ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொள்வார்கள். அதைப் போல தொண்டர்கள் ஒருவரை ஒருவர் தத்தமது ஒரு கையால் பிடித்திக் கொள்ளவேண்டும் மறு கையால் மற்றவருக்கு அவருக்கு வேண்டுமானவற்றை ஊட்டிக் கொள்ளலாம். உண்ணாவிரதக் கொள்கைப் படி அவர்கையால் அவர் சாப்பிடக்கூடாது. போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் போது மாடு போல அசை போட்டுக் கொண்டிருக்காமல் இருக்க கொஞ்சம் கவனம் தேவை.

ரிலே ரேஸ் உண்ணாவிரதம்: இது கொஞ்சம் old style உண்ணாவிரதம். வழக்கமாக தொழிற்ச்சங்கங்கள் சாகும் வரை உண்ணாவிரதம் மேற் கொள்ளும் பாணியிலான உண்ணாவிரதம் இது. காலை 6 மணிக்கு 100 பேர் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் என்றால் சரியாக 8 மணிக்கு மேலும் 10 நண்பர்கள் உண்ணாவிரதப் பந்தலுக்கு வர வேண்டும். இவர்கள் வந்தவுடன் உட்கார்ந்து இருக்கும் 10 பேர் வெளியே எழுந்து போய் தத்தமது கடமையை ஆற்றிக் கொண்டு வரலாம். இவர்கள் வந்த்தவுடன் அடுத்த 10 பேர் வெளியே சென்று காலை போஜனத்தை முடித்துக் கொண்டு வரலாம். இப்படியே ஒரு சுற்று முடிவதற்குள் மதிய சாப்பாட்டு வேளை வந்துவிடும். அடுத்த சுழற்சியை இப்படியே தொடரலாம். ஒருத்தர் கூட சாக முடியாது. இம்மாதிரி ஆயிரம் வருடங்கள் கூட உண்ணாவிரதம் இருக்கலாம் என்பது இதன் சிறப்பு அம்சம்.

மிட் நைட் உண்ணாவிரதம்: இது முழுக்க முழுக்க கலைஞர் பாணியிலான உண்ணாவிரதம். எல்லா மனிதர்களும் தான் ஒரு சாப்பாட்டு வேளைக்கு மறு சாப்பாட்டு வேளைக்கும் இடையே உண்ணாவிரதம் இருக்கிறார்கள். ஆனால் கலைஞர் இம்மாதிரி உண்ணாவிரதம் இருந்ததினால் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டது போல் வேறு யாராவது இருந்ததால் போர் நிறுத்தம் ஏற்பட்டதா?. கலைஞர் முதல் நாள் கூட இப்படித்தான் சாப்பிட்டு இருப்பார். ஆனால் இரண்டு சாப்பாட்டு வேளைக்கு நடுவில் உண்ணாவிரதம் இருக்க முடியும் என்று கலைஞர் சிந்தித்துக் கண்டு பிடித்து அறிவித்ததால் தானே நமக்கும் தெரிந்தது. அதே போல் இரவு சாப்பாட்டுக்குப் பின் காலை வரைக்கும் நீண்ட நேரம் உண்ணாவிரதம் இருப்பதால் இது மிட் நைட் உண்ணாவிரதம். இந்த உண்ணாவிரதத்தில் தூங்குபவர்கள் தூங்கலாம். ஆனால் உட்கார்ந்தபடி தான் தூங்க வேண்டும் இழுத்துப் போர்த்திக் கொள்ள போர்வை தரப்பட மாட்டாது. Sun T.V. யில் சூர்யா T.V. யில் ஒளிபரப்பான மிட் நைட் மசாலாவையும், கலைஞர் T.V. யில் மானாட மயிலாடவையும் ஒளிபரப்பலாம்.

தமிழ்ப்புத்தாண்டை கலைஞர் டிவியின் சிறப்பு நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டாடுங்கள்!

Posted on Tuesday, April 14, 2009 by நல்லதந்தி

sun raising


தமிழ்ப்புத்தாண்டை தை ஒண்ணாம் தேதி கொண்டாட வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்து, எராளமான திராவிட தமிழ்காக்கும் அடிப்பொடிகளின் ஏகோபித்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் பெற்ற தலைவர் கலைஞரின் டிவியில் இன்னிக்கு சித்திரை நன்நாள் சிறப்புக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளாம்.

தலைவரின் கொள்கையே தனிதான். வீட்டுக்கு ஒரு கொள்கை, நாட்டுக்கு ஒரு கொள்கை. தலைவர் மேடையில் கடவுள் இல்லை (இந்து மதக் கடவுள்) என்று கடவுள் நிந்தனை செய்வார்.மனைவியும், துணைவியும் கோவில் கோவிலாக பூஜை செய்து அதற்க்குப் பரிகாரம் செய்து கொண்டிருப்பார்கள். ஊருக்கெல்லாம் தமிழ் புத்தாண்டை மாற்றிக் காட்டினார். கலைஞர் டிவியில் அதற்கு சிறப்பு நிகழ்ச்சிகள். 

அதென்ன சித்திரை நன்நாள் பார்பனர்கள் கண்டு பிடித்த (!)தமிழ் வருடமே மாறிவிட்ட போது அந்த வருடம் உள்ளடக்கிய பார்பன மாதங்கள் ஏன் மாற்றப் படவில்லை. போய்த்தொலையட்டும்.

ஏற்கன்வே வினாயகர் சதுர்த்தி அன்று பிற டிவிக்களெல்லாம் கொண்டாத்தில் ஈடு பட்டு பணம் பார்த்த போது கலைஞர் டிவியும் சும்மா உட்கார்ந்து இருக்கவில்லை, அவர்களும் “விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள்” என்று ஒரு என்னவோ உளறி தேவையான அளவிற்க்கு பணம் பார்த்தார்கள்.

இந்த முறையும் சித்திரை நன்நாள் சிறப்பு நிகழ்ச்சிகளை என்று பினாத்தி காசு பார்க்கப் போகிறார்கள். கொளுகையே எங்கள் கோவணம் என்று ஜனங்களிடம் கதறும் கலைஞர், காசு விஷயத்தில் மட்டும், காசைத்தான் இறுக்கமாக முடிந்து கொள்வாரே தவிர கோவணத்தை யார் உருவினாலும் கண்டு கொள்ள மாட்டார், என்பது மக்களுக்கு நன்றாகத் தெரிந்த விஷயம் என்றாலும், நமக்குத்தான் பார்க்க கண்கூசுகிறது!.

அனைவருக்கும் உளம் நிறைந்த தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்!



கலைஞருக்கு மட்டுமே தெரிந்த இரகசியங்கள்!

Posted on Sunday, March 22, 2009 by நல்லதந்தி




1. கலைஞர் அய்யா ஸ்டாலினை மதுரை ஒருவர் கொல்லப் பாய்ந்தார், அதுனால ஸ்டாலின் அவர்களோட பாதுகாப்பு பூனைப்படை, ஆனைப்படையெல்லாம் போட்டீங்க சரி... அப்புறம் அந்த ஒருவரு என்ன ஆனாருங்க!. அவரைக் கண்டு பிடிக்கப் போட்ட போலீஸ் அதிகாரி என்ன ஆனாருங்க?.

2. அதே மதுரையில தினகரன் பத்திரிக்கைய யாரோ அடிச்சி நொறுக்கி தீ வெச்சாங்களே!. அதுலகூட ஒரு மூணு பேரு செத்தாங்களே. அதுக்கப்புறம்... அந்த பத்திரிக்கை ஆபீஸெ ஏன் நொறுக்குனாங்க, ஏன் அந்த மூணு பேரக் கொன்னாங்க அப்படின்னு நம்ம போலீசுகாரங்க கண்டு பிடிக்க ரொம்ப திணறுராங்கன்னு அனுதாபப் பட்டு சிபிஐ இதை விசாரிக்கட்டும்னு சொல்லி சிபிஐ கிட்ட ஒப்படைச்சீங்களே சிபிஐ காரங்க எதாவது கண்டுபிடிச்சி உங்கக்கிட்ட சொன்னாங்களா?

3. ஒகேனக்கல் பிரச்சனையில் முதுகெலும்பை முறிச்சாலும் விடமாட்டோமன்னு சொல்லி சில நடிகர்களோட முதுகையும், சில டைரக்டருங்க முதுகையும் கர்நாடகாப் பக்கம் போக விடாம நீங்க முறிச்சீங்களே!. அதுக்கப்புறம் கர்நாடகாவில எலக்‌ஷன் முடிஞ்சதும் ஒகேனக்கல் திட்டத்தை முடிப்போமுன்னு சொன்னீங்களே கர்நாடகாவில எலக்‌ஷன் முடிஞ்சி ஒரு வருஷம் ஆகப்போகுதே, இன்னும் எலக்‌ஷன் முடிஞ்ச தகவல் இன்னும் உங்களுக்குக் கிடைக்கலையா?

4. ஜனாதிபதி எலக்‌ஷனப்போ திருமதி.பிரதீபா பாட்டிலை நிறுத்த முடிவு செஞ்சப்போ, தமிழனான திரு.அப்துல் கலாமுக்கு ஆதரவு தராம இருக்க, பிரதீப் பாட்டீல் இன்ன இன்ன செய்வார் அப்படின்னு பட்டியல் போட்டீங்க. அதுல பிரதீப் பாட்டீல் ஜனதிபதியா ஆனா “மகளீர் இட ஒதுக்கீடு” மசோதாவிலதான் முதல் கையெழுத்து போடுவாருன்னு சொன்னீங்க. பிரதீப் பாட்டீல் இன்னும் முதல் கையெழுத்து போடலையா?. அதில எதாவது தகவல் உங்களுக்குத் தெரியுமா?

5. உங்க அமைச்சரவையில அமைச்சரா இருந்தாரே தா.கிருட்டிணன். அவரு கொலையில உங்க மகன் உட்பட பல பேர் குற்றவாளிகளா இருந்தாங்க. என்ன நடந்திச்சின்னு தெரியலைங்க. அதில யாருக்கும் சம்பந்தமில்லையன்னு எல்லோரும் விடுதலையாயிட்டாங்க. அப்போ தா.கிருட்டிணன் நடு ரோட்டில அரிவாளாலாலே தன்னைத் தானே வெட்டிக் கிட்டு தற்கொலை செஞ்சிக்கிட்டாராங்க?

5. ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சனை முடிஞ்சு போன விஷயம் அப்படின்னு நீங்க சொன்னவுடனே பத்திரிக்கைகாரங்களும் நம்பிக்கிட்டு இப்போ அதைப் பத்தியெல்லாம் பேசறதே இல்லை. நிஜமாவே ஸ்பெக்ட்ரம் பிரச்சனை முடிஞ்சு போச்சா?. இவ்வளவு வேகமா பிரச்சனையை தீர்க்கிற நீங்க இலங்கைப் பிரச்சனையும் முடிஞ்சி போச்சு அப்படின்னு சொல்லிட்டா பத்திரிக்கைகாரங்க நம்ப மாட்டாங்களா?. ஏங்க இன்னும் சொல்லாம இருக்கீங்க?

6. அழகிரியும் முரசொலி மாறனுடைய மகன்களும் அடிச்சிக் கிட்டு இருந்தப்போ குடும்ப விஷயத்தைப் பக்கம்பக்கமா பத்திரிக்கையில கவிதையாவும், கட்டுரையாவும் அழுதுகிட்டும் மாறன் கும்பலை திட்டிகிட்டும் எழுதினீங்க, இப்போ அவங்க ரெண்டு பேரும் எந்த விஷயத்தால ஒண்ணு சேந்தாங்கன்னு ஏங்க எழுத மாட்டேங்கிறீங்க?

7. பூங்கோதை அப்படின்னு ஒரு அமைச்சர், வழக்கம் போல அவர் அமைச்சரின் அன்றாட பணியைச் செய்ததால நீக்கினீங்க. அவருடைய செயல் உங்களை மிகவும் அவமானப் படுத்துவதாகவும் சொன்னீங்க. திரும்பவும் உங்க அமைச்சரவையில சேர்த்துக் கிட்டு இருக்கீங்க்களே!. அவர் செஞ்ச செயலால உங்களுக்கு ஏற்பட்ட அவமானம் போயிடுச்சாங்களா?. அந்த அவமானத்தை கழுவ அவர் உபயோகிச்ச “சோப் ”என்னாங்க?

8. தமிழைச் செம்மொழியாக்குவோம் அப்படின்னு அடிக்கடி ஜனங்களை உசுப்பேத்துவீங்களே, இப்போ தமிழ் செம்மொழியாகி ரெண்டு, மூணு வருசமாயிடுச்சீங்களே. அதனால தமிழுக்கு என்ன நன்மை கிடைச்சதுன்னு இன்னிய வரைக்கும் யாருக்கும் தெரியலைங்க?. உங்களுக்கு எதாவது நன்மை கிடைச்சுதாங்களா?

9. முல்லைப் பெரியாறு, பாலாறுன்னு அடிக்கடி பேசுவீங்களே, இப்போ வாயையே நீங்க திறக்கரதில்லையே? ஏங்க!... பாலாற்றில ஆந்திர காங்கிரஸ் அரசு எல்லாத் தடுப்பணையையும் கட்டி முடிச்சப்புறம் தான் பேசுவீங்களா?

10. கடைசியா .. நீங்க சில விஷயத்துக்கு உயிரை கொடுக்கிறேன்னு சொல்லும் போது எனக்கே சிரிப்பாயிடுதுங்க. நீங்க உங்களோட அறிக்கையை எழுதும் போது நீங்க மட்டும் சிரிப்பீங்களா? அல்லது அதை நம்புற தமிழர்களை நினைச்சி உங்க வீடே சிரிப்பாச் சிரிக்குமா?

பாராளுமன்றத்தேர்தலில் திமுக-காங் கூட்டணியை வெற்றி பெற வைக்கக் காரணங்கள்!

Posted on Tuesday, March 17, 2009 by நல்லதந்தி



பாராளுமன்றத்தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியை வெற்றி பெறவைத்தாக வேண்டும். அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் கலைஞர் சொல்லும் காரணங்கள் நமக்கும் மிகவும் நியாயமாகப் படுகின்றன.

மாநிலத்திலும், மத்தியிலும் ஒரே கூட்டணி ஆட்சி இருந்தால் பல நன்மைகள் தமிழகத்திற்குக் கிடைக்குமாம். தமிழகத்தின் நலனுக்காக மத்திய அரசை மிரட்டி மிரட்டி பல சலுகைகள் பெறலாமாம். முக்கியமான இலாகாக்களைப் பெற்று தமிழகத்தை முழு மூச்சாக முன்னேறச் செய்யலாமாம்.
எனவே ஒட்டு மொத்த தமிழக நலனுக்குக்காக அரசியல் மாறுபாடு இல்லாமல் இந்தக் கூட்டணிக்கே வாக்களிக்க வேண்டுகிறோம். இந்த வெற்றியால் தமிழகத்திற்கு கிடைக்கும் நன்மைகளாவன. பின் வருமாறு:

முல்லைப் பெரியாற்றுப் பிரச்சனையில் தமிழகத்திற்கு சாதகமாக மத்திய அரசு நடந்து கொள்ளும் இல்லாவிட்டால் மத்திய அரசின் சிண்டையைப் பிடித்து உலுக்கப் படும்.

காவிரிப் பிரச்சனை மத்திய அரசால் தமிழகத்தின் பக்கமாக தீர்க்கப் படும்.

பாலாற்று பிரச்சனையில் மத்திய அரசு தமிழகத்தின் நலனுக்காகப் பாடுபடும்.

ஒகேனக்கல் பிரச்சனையில் தமிழகத்தின் நலன் காக்க தீர்ப்பு கொடுக்கப் படும்.

சேது சமுத்திரத் திட்டம் ஒரே நாளில் முடிக்கப் படும்.

இலங்கைத் தமிழர் பிரச்சனை ஒரு வாரத்தில் தீர்த்து வைக்கப் படும்.

சேலம் இரயில்வே கோட்டத்திற்கு கட்டிடங்கள் கட்ட எப்படியாவது 50 எக்கர் நிலம் கண்டு பிடிக்கப் படும். சேலத்தில் எங்குமே நிலம் இல்லாவிட்டால் கொட நாட்டில் ஜெயலலிதா வளைத்துப் போட்டுள்ள மக்கள் எஸ்டேட்டில் இருந்து 50 ஏக்கர் பறிமுதல் செய்து கோட்டத்துக்காக வழங்கப்படும்.

கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு மத்திய அரசால் நிதி ஒதுக்க வைக்கப்படும்.

என்னையா இது கிண்டல் பண்றீங்களா!, என்கிறீர்களா அப்பாவி மக்களே!.....

2004-ல் பாராளுமன்றத்தேர்தல் பிரச்சாரத்தில் கலைஞரும், அடிப்பொடிகளும் மேற்கண்ட வாக்குறுதிகளை அள்ளி வீசினர். வாக்குறுதிகளின் ஃபார்மெட் கொஞ்சம் முன்னே பின்னே மாறி இருக்கலாம்.

அந்த தேர்தல் முடிந்து 40 தொகுதிகளும் உங்களுக்கே என்று மக்கள் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு அள்ளிக் கொடுத்தனர். மாறக இந்த கூட்டணி கும்பல் மக்களுக்கு, நாற்பது எங்களுக்கு, நாமம் உங்களுக்கு என்று நடத்திய நாடகத்தை எல்லோரும் அறிவார்கள்.

மேற்கண்ட ஆட்சி முடிந்து அடுத்த தேர்தலும் வந்து விட்டது. இந்தத் தடவையும் இந்தக் கும்பல் இதே வாக்குறுதியுடன் ஓட்டுக் கேட்க வருவார்கள் என்பது நிச்சயம்.

கலைஞரைப் பொறுத்தவரை இந்த வாக்குறுதிகளை 2014 பாராளுமன்றத்தேர்தலிலும் உபயோகப் படுத்துவார். சொன்னதைச் செய்வார், செய்வதைச் சொல்வார் எங்கள் சொல்லின் செல்வர் கலைஞர்!.

சொன்னது போலவே திருமங்கலத்தில் அச்சடித்தாற் போல நாற்பதாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தனர். ஸ்பெக்ட்ரம் போல பல ஊழல்களைச் சொல்லாமலேயே செய்தனர்.

 கலைஞர் இந்த ‘பஞ்ச்’ டையலாகைப் பயன் படுத்துவதை விட , ‘என்றைக்கும் “வாக்கு” மாறமாட்டார் எங்கள் கலைஞர்’ என்ற பஞ்ச் டையலாகைப் பயன் படுத்தலாம். கொஞ்சம் பொருத்தமாக இருக்கும். :)

மக்கள் “நலன்” என்று சொல்லிப் பாருங்கள் உதடுகள் ஒட்டாது. மக்களுக்கு “நாமம்” என்று சொல்லுங்கள் உதடுகள் பச்சக்கென்று ஒட்டும். ஒற்றுமையே பலம் என்று விளக்குவதற்காக கூட்டணி கும்பல்களிடம் இந்த பொன்மொழியை வாழும் வள்ளுவம் உபயோகிக்கலாம்.

வாழ்க கலைஞர்!, வளர்க மக்களின் மறதி!

இறுதிச் சங்கிலி!. உபயம் கலைஞர்.மு.க.!

Posted on Sunday, February 22, 2009 by நல்லதந்தி

இலங்கைப் பிரச்சனையில் பல்வேறு சடங்குகள் இதுவரையிலும் நடத்தப் பட்டாலும்.,அது எப்பொதுமே கலைஞர் கையால் நடத்தப்படும் சடங்காகுமா?. அவர் இந்த மாதிரி சடங்குகளை நடத்துவதில் ஈடு இணையற்ற புரோகிதர் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

ஏற்கனவே அவர் சட்டசபையில் நடத்திய “இறுதி வேண்டுகோள்” சடங்கின் ஈரம் 
இன்னும் காயாமல் இருக்கும் போதே மீண்டும் ஒரு வழமையான சங்கிலிச் சடங்கை தமது குடும்பத்தாரால் நடத்தியுள்ளார் ...சாரி ,.....கழகத்தாரால் நடத்தியுள்ளார்.

அய்யோ! அய்யய்யோ!. இலங்கைத் தமிழர்களின் மீது அவ்வளவு அன்பா? என்று நீங்கள் நினைக்க மாட்டீர்கள். ஒரு வேளை அந்த அளவிற்க்கு அப்புராணி தமிழனாக இருந்தால் கவலைப் பட வேண்டாம்.அதெல்லாம் ஒன்றுமில்லை . 
தமிழினத் தலைவர் என்றப் பட்டத்தால் வருகிற வழக்கமான ஜன்னி தான் பய்ப்
பட ஒன்று மில்லை, என்று குடும்ப டாக்டர்கள் ஆறுதல் தருகிறார்கள்!.

 
இந்த படத்தில் உள்ள வருங்கால முதல்வர், மற்றொரு வருங்கால முதல்வர்,இன்னுமொரு வருங்கால முதல்வர் இவர்கள் “நான் கடவுள்” படத்துக்கு டிக்கெட் வாங்க நிற்க வில்லை!. 
ஏதோ சங்கிலியாம் சிவாஜி நடித்தப் படமல்ல!. மீண்டும் ..மீண்டும் சங்கிலியாம்...அதனால் இது கழகம் சம்பந்தப் பட்ட வழக்கம் போல் ஒரு இலங்ககைத் தமிழர்களுக்கான மனிதசங்கிலிதான்!.
இந்தச் சிரித்த முகங்களைப் பார்த்தால், இன்னும் இலங்கையில் தமிழர்கள் துன்பப்படுவதாய்த் தெரியவில்லை!. இதையும் மீறி அவர்கள் துன்பப் பட்டால் அதற்க்கு கழகம் பொறுப்பாக முடியுமா?. 

பி.கு: கழகத்தின் போராட்டங்கள் எப்போதுமே ஒரு வழக்கமாகச் சுற்றி வரும் வட்டம் என்பதால், இதற்க்குப் பிறகு வரும் போராட்டம் உண்ணாவிரதப் போராட்டமாக இருந்து இருக்கக் கூடும். ஆனால் திருமா வளவன் போன்ற கழக அல்லக்கைகள் அதை நடத்தி ஒரு மாதம் மட்டுமே ஆனதால் அதை அடுத்த்ப் போராட்டமாக வைத்துக் கொள்ளக் கூடும். அதனால் அடுத்த கழகப் போராட்டம் “தமிழர் தந்தி” போராட்டமாக இருக்கக் கூடும். எனவே தமிழர்கள் இன்று சரக்கடித்தது போக மிச்சக் காசை பத்திரமாக வைத்துக் கொள்ளவும். நாளைக் காலை மத்திய அரசுக்கு தந்தி கொடுக்க உபயோகப் படும்!.

உயிர் கொடுப்பேன்,உண்ணாவிரதம் இருப்பேன் திகில் திரை விமர்சனங்கள்

Posted on Monday, January 19, 2009 by நல்லதந்தி

சமீபத்தில் வெளி வந்த இரண்டு படங்கள் நம் எல்லோருடைய நெஞ்சைக் கண்ணீரால் நனைய வைத்தன.இப்படியும் நடக்குமா என்று திகிலால் உறைய வைத்தன .

கலைஞர் கதை,வசனம்,திரைக்கதை எழுதி இயக்கி,நடித்த “சாகும் வரை உயிரைக் கொடுப்பேன்” திருமாவளவன் நடித்து,தயாரித்து இயக்கிய “உண்ணாமல் உண்ணாவிரதம்” ,இந்த இரண்டு படங்களும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும்,மக்களின் இரண்டு நாள் கவலையை திசைதிருப்பின என்றால் அதில் குற்றம் இல்லை.ஒரு கவலைக்கு பதில் இரண்டு கவலையாக மக்கள் படும்படிச் செய்து அதில் இருவரும் வெற்றி கண்டனர்.இரண்டிலும் வெளிக்கதையில் இலங்கைப் பிரச்சனையையே கதைக்களமாகக் கொண்டிருந்தாலும் உள்ளே வழக்கம் போல சொந்தக் கதைகளே பிரதானமாக இருந்தது.அதை இருவரும் வெளிக்காட்டாமல் தங்களை இலங்கைத்தியாகிகளாக சித்தரித்துக் காட்டியது இருவரின் டைரக்‌ஷன் திறமைக்கு நல்ல உதாரணம்.

கலைஞரின் “சாகும் வரை உயிர் கொடுப்பேன்” வழக்கமான கதைதான் என்றாலும் கலைஞர் பிக்சர்ஸ் என்ற கார்பரேட் கம்பனி தயாரிப்பாதலால் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கப் பட்டிருந்தது. வழக்கம் போல் படத்தின் திரைக்கதை காமெடியாக அமைக்கப் பட்டிருந்தது,ஜனங்களை எடை போடும் கலைஞரின் திறமையைக் காட்டியது.

மேடை ஏறும் போதெல்லாம் உயிரைக் கொடுப்பேன் என்கிற வசனத்தைக் கலைஞர் பேசுகிறார்.ஜனங்கள் சிறிது தொய்வடையும் போது,வசனகர்த்தா கலைஞர் வசனத்தை மாற்றிப்போட்டு கடலில் கட்டு மரமாவேன் என்று சொல்லும் போதிலும்,சில இடங்களில் விலா எலும்பை முறித்தாலும் ”ஒகேனக்கல்” ஆவேன் என்று பஞ்ச் டையலாக் அடிக்கும் போதும் நடிகர் கலைஞர் ஜொலிப்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.சும்மாவா எத்தனை வருட நடிப்பு அனுபவம்.

வசனமா நடிப்பா எதைப் பாராட்டுவது என்று திகைக்க வைத்து விடுகிறார் மனிதர். அதிலும் ”இலங்கைத் தமிழர்களுக்காக உயிர் கொடுப்பேன்” என்கின்ற வசனத்தை வழக்கம் போல் சொல்லாமல் ”கொடுப்பேன் உயிர் தமிழர்களுக்காக இலங்கை” என்று ஜூனூன் தமிழில் வசனம் பேசிவிட்டு எல்லாம் அன்னை சோனியாவின் ஆசியால் வருவது என நமுட்டு சிரிப்பு சிரிப்பது திரை அரங்கை அதிர வைக்கிறது.

ப்ரணாப் முகர்ஜியுடன் “போவீயா! போமாட்டாயா! போலேன்னா உன் பேச்சுக்கா!” என்ற பாடலில் கலைஞரும்,ப்ரணாப் முகர்ஜியும் டப்பாங்குத்து டான்ஸ் ஆடிஅசத்துகின்றனர்.நடன இயக்கத்தை மன்மோகன் சிங் கையாண்டு இருக்கிறார்.சில இடங்களில் நம்புகிறார்ப்போல அமைத்திருக்கிறார்.சில இடங்களில் சற்று சோடையாகும் போது கலைஞர் தன் அனுபவத்தால் அதைச் சமாளிக்கிறார்.

”இலங்கைத் தமிழன் சாகிறான்.அவனைக் காப்பாற்ற வழியில்லை வா!தமிழனே அனைவரும் சேர்த்து சாவோம்” என்று சங்கமம் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டே கவலைப் படும் காட்சி ஏற்கனவே கலைஞர் புரெடெக்‌ஷாரின் ”இலங்கைத் தமிழருக்கு இன்னுயிரைத் தருவோம் Part 3 யில் கலைஞர் இலங்கைத் தமிழர்களுக்காக பிறந்தநாளைக் கொண்டாட மாட்டேன் என பிறந்தநாள் கொண்டாட்ட பொதுக்கூட்டத்தின் போது சொன்னதை நினைவு படுத்துகிறது.டைரக்டர் கவனிக்கவில்லையா?.அதே போல் அந்தக் காட்சியில் அவர் அனைவரும் சாவோம் என்று கூறிக் கொண்டு அழுதவாறு வானத்தைப் பார்க்கும் போது ஆயுதமேற்றிக் கொண்டு இலங்கை செல்லும் இந்திய விமானம் கண்ணில் படுகிறது.இது டைரக்டரின் உத்தியா?அல்லது தெரியாமல் நடந்த தவறா? என்று தெரியவில்லை.கலைஞருக்குத்தான் வெளிச்சம்.

க்ளைமாக்ஸ் காட்சி திருமங்கலம் இடைத்தேர்தலில் அமைக்கப்பட்டு இருப்பது ஏனென்று புரியவில்லை.இப்போது கலைஞர் இயக்கத்தில் தயாராகிவரும் “பாரப்பா! பார்லிமெண்டப்பா!” என்கிற படத்தின் முதல் காட்சியாக இருக்குமோ என்னவோ?.ஆனாலும் கலைஞரின் இயக்கத்தில் ஒரு காட்சிகூட வீணாகாது என்று நிரூபிக்கும் வகையில் கடைசி காட்சி சூப்பர்!.

அழகிரிக்கு “ நீ தென்மண்டல திமுக செயல் அமைப்பாளராக இரு!” என்று கலைஞர் சாபம் விடும் காட்சி அற்புதம்.அதைக் கேட்டு எத்தனை பாரத்தை நான் தாங்குவேன் என்று அழுது பிறகு அதை வீரமுடன் ஏற்கும் காட்சியில் அழகிரி சோபிக்கிறார்.
இந்த மாதிரிக் காட்சிகள் கலைஞரின் இயக்கத்தில் வழக்கமாக பார்க்கும் ஒன்று என்றாலும் ஒவ்வொரு முறையும் நம்புமளவிற்கு இருப்பது கலைஞரின் திரைக்கதை அமைக்கும் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி!.

திருமாவளவனின் ”லோ” பட்ஜெட் படமான “உண்ணாமல் உண்ணாவிரதம்” இரண்டு நாள் கூட ஓடாதது,முதலில் திருமாவளவனுக்குத்தான் மகிழ்சி அளித்திருக்கும்.

கதை என்னவோ வழக்கமான பங்காளிச் சண்டைக்கதைதான் அதை இலங்கைத் தமிழர் பிரச்சனையில் ஏற்றிக் காட்டும் விதத்தில் இயக்குனர் வெற்றி பெறுகிறார்.இதற்கு முன்னரே தமிழக நடிக இயக்குனர்களின் பாரம்பரியப் படி இலங்கைப் பிரச்சனைக் கதையில் இவரும் பலமுறை நடித்திருக்கிறார் என்றாலும் இந்த தடவை இவரது நடிப்பு எடுபடவில்லை.

தம்பி செல்வப் பெருந்தகை வீட்டிலுள்ள நகை நட்டுக்களை அபேஸ் செய்து விட்டு மாயாவதி பஸ்ஸில் ஏறிக்கொண்டு திருமாவளவனுக்கு டாட்டா காட்டி சிரிக்கும் காட்சியில் இருவருமே தங்களுடைய அதி அற்புத நடிப்பை வெளிக்காட்டி இருந்தனர்.திருமாவளவன் அழ,செல்வப் பெருந்தகைச் சிரிக்க,கேமரா சுழன்று இருவரையும் சுத்தி வருவது டைரக்டரின் திறமை வெளிப்படுத்துகிறது.

செல்வப் பெருந்தகை மாயாவதி பஸ் கம்பனியில் கிளீனர் வேலையில் சேருமாறு திருமாவளவனுக்கு வேண்டுகோள் விடுக்கும் காட்சி செமை நக்கல்.பதிலுக்கு திருமாவளவன் பஸ்ஸைப் பஞ்சர் ஆக்குவேன் என்று ஆவேசமாக முள்ளை எடுத்துக் காண்பிக்கும் போது தியேட்டரே திகிலால் உறைகிறது.

ஸ்கூல் ஹெட்மாஸ்டர் கலைஞரிடம்,செல்வப் பெருந்தகை ஸ்கூலுக்கு வரமாட்டான் அவனுக்கு டி.ஸி கொடுத்து விடுங்கள் என திருமாவள்வன் கேட்கும் போது “வெயிட் அண்ட் ஸீ” என கலைஞர் புன்னகைக்கும் மர்மம் நமக்குப் புரிவதால் அவருடைய சிரிப்பு நமக்கும் தொற்றிக் கொள்கிறது.

தயாரிப்பாளர் திருமாவளவனுக்கு தன்னுடைய தயாரிப்பு கடலூர் ஏரியாவைத் தவிர வேறங்கும் ஓடாமல் இருப்பது பெருங்கவலையாக இருக்கும் போலிருக்கிறது.அதனால் தெற்குப் பக்கமும் ஓடுவதற்காக சில சண்டைக் காட்சிகளை மதுரையில் எடுத்து இருக்கிறார்.ப்ஸ் எரிக்கிறவரைக்கும் பல்லுக் குத்திக் கொண்டு வேடிக்கைப் பார்த்து விட்டு “ஆச்சா! சரி ஓடுங்கப்பா” என்று எரித்தவர்களைக் கேட்டுக் கொண்டு “பஸ் எரித்தவர்கள் யாராக இருந்தாலும் சுட்டுப் பிடிப்பேன்” என்று வானத்தை நோக்கி சுடும் காட்சி சிரிப்பை வரவழைக்கிறது.போலீஸ் கலைஞர்களைக் காமெடியனாக மட்டும் காட்டுவது கலைஞரின் பாணி என்றாலும்,கலைஞரிடம் சிஷ்யனாக இருந்தவர் என்று நிருபிக்கிறார் இயக்குனர் திருமாவளவன்.

க்ளைமாக்ஸ்தான் சப்பென்று போய்விட்டது.இலங்கை பிரச்சனை கட்டுரையை பேச்சுப் போட்டிக்காக படித்துக் கொண்டு வந்த திருமாவளவனை பேசக் கூடாது நீ பேசினால் அந்தச் சத்தத்தில் கூரை இடிந்து விடும், எனக்கு ஆபத்து என்கிறார் கலைஞர்.பேச முடியாததால் தொண்டைக் கட்டிப் போன திருமாவளவன் சாப்பிட முடியாமல் தவிக்கிறார்.தம்பி ஓடிப்போக,ஸ்கூல் எல்லாம் கிண்டல் செய்யகிறது வேறு வழியில்லாமல் உண்ணாவிரதத்தை அறிவிக்கிறார்.மாணவர்கள் கிண்டலை நிறுத்தியவுடன் உண்ணாவிரதம் க்ளோஸ்.பத்து நாளைக்காவது ஓடும் என்று கட்டு சோற்றைக் கட்டிக் கொண்டு படம் பார்க்க வந்தவர்கள் கதி பரிதாபம்.மம்தா பானர்ஜி நடித்த உண்ணாவிரதப் படம் போல 30 நாளைக்கு மேல் ஓடும் என எதிர்பார்த்தால் நீங்கள் இந்த ஊரில் இருப்பதற்கு இலயக்கில்லை என்று அர்த்தம்.

திரை முன்னோட்டம்

இராமதாஸ் அளிக்கும் “பத்துக்கு பத்து” குடும்பச்சித்திரத்தின் ஒரு காட்சி மறைமலை நகரில் படமாக்கப்பட்டது.கலைஞர்,இராமதாஸ் நடிக்கும் இப்படத்தில் காமெடிக்குப் பஞ்சமில்லை.மத்திய அரசின் ”பத்துக்குப் பத்து” வீட்டை சோனியா பெரியம்மா,மன்மோகன் சிங் மாமாவுடன் சேர்ந்து பங்காளிகளான கலைஞரும்,இராமதாஸும் கட்டுகிறார்கள்.இந்த வீட்டினால் அந்தத் தெருவே நாறுகிறது.இதனால் ஏற்படும் பிரச்சனைகளை நகைச்சுவையாக கொண்டு போயிருக்கிறாராம் டைரக்டர்.

தெருவில் உள்ளவர்கள் இந்த வீட்டில் வசிப்பவர்களை, இலங்கையில் குப்பை போட்டதற்கு திட்டும் போது தங்களுக்கும் அந்த வீட்டிற்கும் சம்பந்தமில்லாததைப் போல கலைஞரும்,இராமதாஸும் நிற்க்கும் காட்சி சூப்பர்.சில சமயங்களில் நல்லாயிருப்பார்களா இந்த வீட்டுக்காரர்கள்,நாசமாகப் போகட்டும்,கட்டையில போகட்டும் இந்த வீட்டில் உள்ள தங்களையே தாங்களே திட்டிக் கொள்ளும் ஸ்பிலிட்டிங் மல்டி பர்சனாலிட்டிக் காட்சிகளில் முதலிடம் தருவது கலைஞருக்கா இராமதாஸுக்கா என்று தமக்கு நிலைதடுமாறுகிறது,என்கிறார் நமது திரை நிருபர்.ஹாட்ஸ் ஹாஃப்.

தீபாவளிக்கு இரயில் பட்டாசு விடும் போதும்,மணலில் மல்டி ஸ்பெஸாலிட்டி ஆஸ்பத்திரி கட்டும் சீன்களிலும் வேடிக்கைப் பார்க்க தெருவே கூடும் போது, தான் வீட்டைச் சேர்ந்தவன் என்று காட்டிக் கொள்ள இராமதாஸ் முண்டியடித்துக் கொண்டு தலையைக் காட்டும் காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டு இருக்கின்றனவாம்.தமிழன் என்றால் இந்த மத்திய அரசு வீட்டுக்காரர்களுக்கு கிள்ளுக்கீரையாக இருக்கிறது என்ற வசனத்தை இராமதாஸ்,கண்ணாடியின் முன் நின்று தனக்குத்தானே ஆவேசமாகப் பேசும் காட்சி நேற்று படமாக்கும் போது படப்பிடிப்புக் குழுவினரே துக்கம் தாங்காமல் அழுதார்களாம்.

மொத்தத்தில் வீட்டில் இருக்கும் இராமதாஸ் வெளியேறும் காட்சி இன்னும் படமாக்க வில்லை என்பதால் ரிலீஸ் ஆக இன்னும் இரண்டு மூன்று மாதம் ஆகலாம்.

இடைத்தேர்தல் பதட்டத்தில் காமெடிக்”கலைஞர்”

Posted on Friday, December 19, 2008 by நல்லதந்தி

காமெடிக்கலைஞர் கருணாநிதி தமிழக மக்களுக்கு எப்பவுமே தன்னால முடிஞ்ச வஞ்சனையில்லாம பல கூத்துக்களை அள்ளி வழ்ங்கியிருக்கிறார்.என்றாலும் இந்த மதுரை திருமங்கலம் இடைத்தேர்தல் அறிக்கை தமாஷ் நிறைய வித்தியாசமானது.கலைஞர் செய்கிற நகைச்சுவைகள் பொதுவாக மற்றவரைத் துன்புறித்தியே தீரும்.

ஒருவன் அருகே வாழைப்பழத்தோலை போட்டு விட்டு ,அதனால் அவன் வழுக்கி விழும்போது சிரிக்கிற தமாஷ் இரகங்கள்.அதாவது மற்றவன் துன்பத்தில் இன்பம் காண்கின்ற வகைத் தமாஷூக்கள்.ஆனால்,இந்த இடைத்தேர்தலுக்காக அவர் விட்ட அறிக்கைத் தமாஷ் இந்த வகையைச் சேர்ந்ததல்ல.அது ஒரு தமிழக மக்கள் துன்பம் இல்லாமல் இரசிக்கக் கூடிய நகைச்சுவை வகையறாக்களைச் சேர்ந்தது.

அதாவது,எம்ஜிஆர் இருந்த காலத்தில் தமிழா!.என்னை வெட்டிப் போட்டாலும் முட்டி போட்டுக் கெஞ்சுவேன் .கட்டிப் போட்டாலும் கட்டு மரமாவேன் என்று கதறிப் பினாத்திய இரகம்.
அதிலும் தேர்தலை நினைத்துக் கதறி அழும் கட்டத்தில் பினாத்தும் பினாத்தல்கள் ஏ ஒன் இரகம்.சிவாஜி அழுகையையும் அந்த அழுகைப் பிறருக்குத் தெரிந்து விடக்கூடாதே என்று அழுகையை மென்று விழுங்கி விட்டு சிரிப்பது போல நடிக்கும் காட்சிக்கு இணையானது ஏன் அதை விட மேலானது. தேர்தல் ஏன் வந்தது(ஏன் வந்துத் தொலைந்தது!) என்று அவர் தலையில் அடித்துக் கொண்டே, கொடுக்கும் விளக்கங்கள் திமுக தொண்டர்களை இப்போதே உதறவைக்கும்.

இந்த அறிக்கையில் அவர் திருப்பத்தூர் இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆர் காங்கிரஸிற்க்கு ஆதரவு தந்த விஷயத்தில் அதிகம் புலம்பியதால் இந்தக் கட்டுரை.மற்ற தமாஷ்களுக்கு உள்ளே நான் போகவில்லை.




திமுகவினருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் ஒரு பகுதி.


எப்போதுமே ஒரு சட்டமன்ற உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ மறைந்து விட்டால், காலியான அந்த இடத்துக்கு 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் வரும். அப்படி வரும் இடைத்தேர்தலில்; இறந்துபோன உறுப்பினரின் கட்சியை சேர்ந்தவர்கள்தான் போட்டியிடுவார்கள்.


அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வால்மீகி என்ற காங்கிரஸ் உறுப்பினர் காலமாகிவிடவே; முதலில் உறுப்பினராக இருந்தவர்களுக்குத்தான் அந்த இடத்தை வழங்க வேண்டும் என்று ஒரு முடிவெடுத்து, அதன்படி அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அருணகிரி என்பவர் போட்டியிட வாய்ப்பளித்து, அதற்கான தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.


ஆச்சரியம் என்னவென்றால், அப்போது அதிமுக- காங்கிரஸ் தேர்தல் உறவு கிடையாது. அப்படியிருந்தும் ஒரு உறுப்பினர் இறந்தால்; காலியாகும் அந்த இடத்தை அந்த கட்சியின் உறுப்பினரே நிரப்ப வேண்டும் என்று ஒரு புதிய கொள்கையை எம்.ஜி.ஆர். வகுத்தார்.

தன் குருநாதர் வகுத்த வழியில் அம்மையார் ஜெயலலிதா நடைபோடுகிறார் என்பதை நம்பிட வேண்டுமானால்; திருமங்கலத்தில் வீர இளவரசன் மறைவு காரணமாக ஏற்பட்ட காலியிடத்தை நிரப்புவதற்கு; அவர் எந்தக் கட்சி உறுப்பினராக இருந்து மறைந்து போனாரோ; அந்தக் கட்சி உறுப்பினர் ஒருவரைத்தான் வேட்பாளராக நிறுத்தி, அவர் வெற்றிக்காகப் பாடுபட்டிருக்க வேண்டும்.

அதுதான் இடைத் தேர்தல்களுக்கு என எம்.ஜி.ஆர்.ரே வகுத்த வழி. ஆனால் இந்த அம்மையாரோ; திருமங்கலம் தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றிபெற்ற மதிமுக வேட்பாளர் வீர இளவரசன் மறைந்ததும்; அந்த தொகுதி இடைத் தேர்தலில் மதிமுகவே போட்டியிடட்டும் என்று பெருந்தன்மையோடு அறிவிக்காமல்; அந்தத் தொகுதியில் மதிமுக நிற்பதற்கும் இடங்கொடுக்காமல்; அங்கே அதிமுக தான் நிற்கும் என்று அறிவித்து விட்டதோடு அதற்கான தேர்தல் பணிகளையும் முடுக்கி விட்டுவிட்டார்.

அடடா மதிமுகாவின் மேல் கலைஞருக்கு என்ன ஒரு கரிசனம்.அய்யய்யோ மதிமுகாவின் தொகுதியை ஜெயலலிதா அநியாயமாகப் பிடிங்கிக் கொள்கிறாரே என்று கலைஞர் கதறும் பாணியே தனி.

திருப்பத்தூர் தேர்தலின் போது என்ன நடந்தது.காலியாகும் உறுப்பினர் தொகுதிக்கு ஏற்கனவே போட்டியிட்ட கட்சியே போட்டியிட வேண்டுமாம் ,இந்தக் கொள்கையை எம்.ஜி.ஆர் வகுத்தாராம்.உண்மையில் இந்த மரபு கூட்டணிக்கட்சிகளிடையே எம்.ஜி.ஆருக்கு முன்பே ஒரு மரபாகவே இருந்தது.ஆனால் அப்போது அதிமுக.காங்கிரஸ் கூட்டணி இல்லாத காலத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி இருந்த சமயத்தில் எதிர் கட்சியான காங்கிரஸிற்க்கு எம்.ஜி.ஆர் ஆதரவு தந்ததற்கான காரணம் திமுக-காங்கிரஸ் கூட்டணியை உடைக்க வேண்டும் என்பதற்குத்தான்.எம்.ஜி.ஆரின் இந்த அறிவிப்பால் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டு ,ஏற்கனவே கலைஞரின் மேல் கடுப்பாக இருந்த அன்றைய காங்கிரஸ் தலைவர் எம்.பி.சுப்ரமணியம் சட்டசபைத் தேர்தலோடு திமுக -காங்கிரஸ் கூட்டணி முடிந்து விட்டது என்று பேச அந்த இடைத்தேர்தலிலும்,இன்றைய திருமங்கலம் இடைத்தேர்தலில் கலைஞர் தடுமாறுவதைப் போல அன்றும் தடுமாறினார்.

தேர்தலில் காங்கிரஸிற்க்கு ஆதரவு ஆனால் கலைஞர் பிரச்சாரத்திற்க்குப் போகவில்லை.ஆனால் காங்கிரஸிற்குத் தீடீர் ஆதரவு தந்த எம்.ஜி.ஆர் தேர்தலில் காங்கிரஸிற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார்.திமுக தொண்டர்களும் கூட்டணிக் கட்சியான காங்கிரஸிற்க்கு வேலை செய்யாமல் ஜனதாவிற்கு வேலை செய்து தங்களுக்கு மிகவும் பழக்கமான, கூட இருந்தே கழுத்தறுக்கும்  உள்ளடி வேலைகள் செய்தனர்.( பா.ம.க கவனிக்க ).அந்தத் தேர்தலில் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்ட திரு.அருணகிரி வெற்றி பெற்றார்.அவர் வெற்றி பெற்றதும் காங்கிரஸ் தலைவர்களைக் கூடப் பார்க்காமல் முதலில் எம்.ஜி.ஆரைச் சந்தித்துத்தான் ஆசி பெற்றார்.திமுக தலைவர்களைப் பார்க்கமாட்டேன் என்று அறிக்கையே விட்டார். திமுக-காங்கிரஸ் கூட்டணி பணால் ஆனது.எம்.ஜி.ஆரின் திட்டம் முழுமையாக நிறைவேறியது.

எனவே திருப்பத்தூர் தேர்தலில்,எம்.ஜி.ஆர் காங்கிரஸை ஆதரித்ததன் காரணம் முழுக்க முழுக்க திமுக-காங்கிரஸ் கூட்டணியை உடைக்கத்தான்.


கலைஞரின் அறிக்கையை முழுமையாகப் படித்து சிரிக்க விரும்புகிறவர்களுக்கு.கீழே அவரது கட்டுரை.


எப்போதுமே ஒரு சட்டமன்ற உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ மறைந்து விட்டால், காலியான அந்த இடத்துக்கு 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் வரும். அப்படி வரும் இடைத்தேர்தலில்; இறந்துபோன உறுப்பினரின் கட்சியை சேர்ந்தவர்கள்தான் போட்டியிடுவார்கள்.


அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வால்மீகி என்ற காங்கிரஸ் உறுப்பினர் காலமாகிவிடவே; முதலில் உறுப்பினராக இருந்தவர்களுக்குத்தான் அந்த இடத்தை வழங்க வேண்டும் என்று ஒரு முடிவெடுத்து, அதன்படி அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அருணகிரி என்பவர் போட்டியிட வாய்ப்பளித்து, அதற்கான தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.

ஆச்சரியம் என்னவென்றால், அப்போது அதிமுக- காங்கிரஸ் தேர்தல் உறவு கிடையாது. அப்படியிருந்தும் ஒரு உறுப்பினர் இறந்தால்; காலியாகும் அந்த இடத்தை அந்த கட்சியின் உறுப்பினரே நிரப்ப வேண்டும் என்று ஒரு புதிய கொள்கையை எம்.ஜி.ஆர். வகுத்தார்.

தன் குருநாதர் வகுத்த வழியில் அம்மையார் ஜெயலலிதா நடைபோடுகிறார் என்பதை நம்பிட வேண்டுமானால்; திருமங்கலத்தில் வீர இளவரசன் மறைவு காரணமாக ஏற்பட்ட காலியிடத்தை நிரப்புவதற்கு; அவர் எந்தக் கட்சி உறுப்பினராக இருந்து மறைந்து போனாரோ; அந்தக் கட்சி உறுப்பினர் ஒருவரைத்தான் வேட்பாளராக நிறுத்தி, அவர் வெற்றிக்காகப் பாடுபட்டிருக்க வேண்டும்.

அதுதான் இடைத் தேர்தல்களுக்கு என எம்.ஜி.ஆர்.ரே வகுத்த வழி. ஆனால் இந்த அம்மையாரோ; திருமங்கலம் தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றிபெற்ற மதிமுக வேட்பாளர் வீர இளவரசன் மறைந்ததும்; அந்த தொகுதி இடைத் தேர்தலில் மதிமுகவே போட்டியிடட்டும் என்று பெருந்தன்மையோடு அறிவிக்காமல்; அந்தத் தொகுதியில் மதிமுக நிற்பதற்கும் இடங்கொடுக்காமல்; அங்கே அதிமுக தான் நிற்கும் என்று அறிவித்து விட்டதோடு அதற்கான தேர்தல் பணிகளையும் முடுக்கி விட்டுவிட்டார்.


இப்போது தேர்தல் எதற்கு?:



மழை, வெள்ளம், புயல் எல்லாம் வந்து; மக்கள் பல மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான நிவாரணப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ள நிலையில் திடீரென்று 2 மாதத்திற்குள் இடைத்தேர்தல் என்றால்; ஓர் அரசின் நிர்வாகத்திற்கு எவ்வளவு நெருக்கடி, எனவே வசதிப்படுமா? என்றெல்லாம் கூடக் கலந்து பேச வாய்ப்பின்றி; தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது.


நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வர இருக்கிறதே; அத்துடன் சேர்த்து இந்த திருமங்கலம் இடைத்தேர்தலை வைத்துக் கொண்டால் என்ன; என்று கேட்பதற்கும் முடியாமல்- நாடாளுமன்ற தொகுதிகள்; புதிதாக அமைக்கப்பட்டும், பிரிக்கப்பட்டும் அறிவிக்கப்பட்டிருப்பதால், அப்படி நாடாளுமன்றத் தேர்தலுடன் இந்த இடைத்தேர்தலை சேர்த்தால் வீண் குழப்பங்கள் நிர்வாகத் துறையில் ஏற்படும் என்பதை நாம் உணராமல் இல்லை.


அதற்காக இப்படி `விடியக் கல்யாணம்; பிடிடா பாக்கை!' என்ற பழமொழியை நினைவூட்டுகிற அளவுக்கு, இவ்வளவு அவசரமாக இந்தத் தேர்தல் வரவேண்டியதின் அவசியம்தான் என்னவோ?.



நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் பட்ஜெட் படிக்கப்பட்டு, அதில் சலுகைகளோ, புதிய திட்டங்களோ அறிவிக்கப்பட்டால் அது தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு முரணாகி விடக்கூடும் என்பதால், பட்ஜெட் அறிவிப்புக்கான பணிகளும், அதற்கு முன்னர் அவையில் படிக்க வேண்டிய ஆளுநர் உரையும் சட்டமன்றத்தில் நிறைவு பெற்றிட வேண்டியுள்ளது.



ஒரு காரணம் இருக்கத்தான் வேண்டும்...:



இந்த நெருக்கடிகள் நிறைந்த நிலையிலே திருமங்கலம் இடைத்தேர்தல் இவ்வளவு விரைவிலா என்ற கேள்வியும், ஏன் அவசரம் என்பதற்கான காரணமும் புரியாமல் இல்லை.


உடன்பிறப்பே, பார்த்தாயா; ஓர் இடைத்தேர்தல் அவசர அவசரமாக அறிவிக்கப்பட்டு விட்டது என்று ஆளுங்கட்சியும், அப்படி அறிவித்ததை எதிர்பார்த்து இருந்ததுபோல் எதிர்க்கட்சியும், இருப்பதற்கு நம்ப முடியாத ஒரு காரணம் இருக்கத்தான் வேண்டும்.


நாடாராளுமன்றத் தேர்தல் வருவதற்கு முன்பு இந்தத் திருமங்கலம் இடைத்தேர்தலில் ஜெயித்துவிட்டால் அந்த உற்சாகம் நாடாளுமன்றத் தேர்தலிலும் தம்மை வெற்றி முகட்டில் உட்கார வைக்கும் என்று ஜெயலலிதா கணக்குப் போட்டு; கணக்கை கணக்காகச் செய்து முடித்துவிட்டுக் களிப்பிலாழ்ந்திருக்கிறார் போலும்.



உடன்பிறப்பே, உனக்கு நினைவிருக்கிறதா?, தமிழகத்தில் மொழிப்போர் நடந்துமுடிந்த பிறகு; பாளைச் சிறையில் நானும் மற்றும் பல சிறைகளில் கழக உடன்பிறப்புகள் ஆயிரக்கணக்கினரும் சிறையை விட்டு வெளிவராத சமயத்தில்; தர்மபுரியில் ஓர் இடைத்தேர்தல் - அந்தத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று விட்டது. அடடே, அவ்வளவு பெரிய மொழிப்போருக்குப் பிறகும்; இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற முடியவில்லையே என்று எல்லோரிடமும் ஓர் ஏக்கம் பிறந்தது.


ஆனால், காங்கிரஸ் நண்பர்களோ அந்த தர்மபுரி இடைத்தேர்தலின் வெற்றி; 1967ம் ஆண்டு பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு அச்சாரம் என்றும், அறிகுறி என்றும் நம்பினார்கள்.



ஆனால், தர்மபுரி இடைத்தேர்தலில் திமுகவுக்கு வெற்றி அளிக்காத மக்கள்; அதைத் தொடர்ந்து 1967ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் திமுகவைத்தான் அறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சி அமைக்கிற அளவுக்கு வெற்றியை வழங்கினார்கள்; என்பதைக் கடந்தகால வரலாறு சுட்டிக்காட்டத் தவறவில்லை என்ற உண்மையை மறந்து விடக்கூடாது!.



மறவாமலும் மன திடத்துடனும் பாகு மொழி, பசப்பு மொழி பேசிப் பாராட்டிய கட்சிகள்கூட `எஸ்மா', `டெஸ்மா' சட்டங்களை நீட்டியவர்களை நோக்கி ``உஜார் உஜார்!'' என்று உரத்த குரல் எழுப்பியதை விடுத்து; இப்போது உமிழ்ந்த வாய்க்கே சர்க்கரை என உரைத்துக் கொண்டு; நம்மைப் பின்னிருந்து குத்திக் கிழித்திட முன்வருகிறார்கள் என்றால்;


அத்தகையோர்க்கு; நன்றிக்கும் அவர்களுக்கும் எவ்வளவு தொலைவு? நட்புக்கும் அவர்களுக்கும் என்ன உறவு? என்று நெஞ்சு கொதித்திடக் கேட்கத்தான் தோன்றும் உனக்கு!.


அன்பு உடன்பிறப்பே, அண்ணா தந்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் முக்கணைகளையும் பயன்படுத்திப் பலன் காண, பகைமுகாம் நோக்கிப் பணியாற்றிடக் கிளம்புக! என்று கூறியுள்ளார் கருணாநிதி.

விஜயகான்?.இஃப்தார் அரசியலின் இம்சைகள் ஆரம்பம்!

Posted on Tuesday, September 30, 2008 by நல்லதந்தி




அரசியல் தலைவர்கள் இஃப்தார் விருந்து கொடுப்பது.விருந்துக்குச் செல்வது என்பது இராஜாஜி-காமராஜர்-அண்ணா போன்ற தலைவர்கள் காலத்தில் இருந்ததாகத் தெரியவில்லை.டெல்லி அரசியல்வாதிகள், பொதுவாக காங்கிரஸ்காரர்களால் முஸ்லீம்களின் ஓட்டுக்காக ஆரம்பித்து இருப்பார்கள் என்றே நினக்கிறேன்.

தமிழ்நாட்டில் இந்த மாதிரி ஒட்டுக்காக வித்தைக் காட்டத் தெரிந்தவரான கலைஞரால் தான் இம் மாதிரியான வியாதிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்க வேண்டும். எம்.ஜி.ஆர் கூட இந்த விளையாட்டைக் கை கொள்ளவில்லை. எனென்றால் அப்போது முஸ்லீம்களின் ஓட்டுக்கள் முழுமையாக அவருக்கே விழுந்து கொண்டிருந்தது.மேலும் அரசியலில் அவர் மதத்தை கலக்க நினைத்ததில்லை.

இப்போது என்ன நடக்கிறது.இரம்ஜானுக்காக முஸ்லீம்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்களோ இல்லையோ?.இந்த சீசனுக்கு ஓட்டு பொறுக்க இந்த அரசியல் வாதிகள் ரம்ஜானை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

அவர்கள் தத்தம் கட்சிகளில் உள்ள முஸ்லீம் அடிப்பொடிகளுக்கு சமிக்ஞை கொடுத்து விட்டால் போதும் உடனே அரசியல் இஃப்தார் விழாக்கள் ஆரம்பமாகிவிடும்.

கலைஞருடன் ஸ்டாலினும் இன்ன பிற அமைச்சர்களும் பல் வேறு விழாக்களில் பங்கெடுக்க ரம்ஜான் நோன்பு களைக் கட்டத்துவங்கிவிடும்.
ஒரு பக்கம் கலைஞர் முஸ்லீம்களுக்கு தன் வழக்கமான குல்லா போட (!) மறு பக்கம் அவர்கள் அவருக்கு குல்லா போட ,அந்த போட்டோக்கள் அடுத்த நாள் பத்திரிக்கைகளில் பிரசுரமாக அமர்களமாக ஆரம்பமாகி விடும் ஓட்டு பொறுக்கும் அரசியல். மற்றத் தலைவர்களாவது விருந்துக்குப் போனோமா,நோன்புக் கஞ்சி குடிக்கிற போஸ் கொடுத்தோமா,விருந்து சாப்பிட்டோமா?.என்று வீடு திரும்பி விடுவார்கள்.

நம் கலைஞர் அப்படி ஒரு சாதாரணத்தலைவரா?.அங்குப் போய் உட்கார்ந்தவுடன் தான் தமது இந்து மதப் பகுத்தறிவு ஞாபகத்துக்கு வரும்.நான்கு வார்த்தை இந்துக் கடவுள் களைத் திட்டினால் தமக்கு நான்கு ஓட்டு சேர்த்து வருமே!.என்ற எண்ணம் வரும் உடனே அருகில் உள்ள முஸ்லீம் அன்பர்கள் முகம் சுளித்தாலும் இந்துக் கடவுளை ஏளனம் செய்து அர்ச்சகர் கலைஞர் ஒரு லட்சார்ச்சனை செய்வார். சபரிமலைக்கு விரதம் இருந்து செல்வதைக் கிண்டல் செய்யும் வாயால் ,ரம்ஜான் மாதத்திற்க்கு ஒரு மாதம் நோன்பிருப்பதை வாயாரப் புகழ்வார். கிருத்திகை,அமாவசைப் போன்ற நாட்களில் உபவாசம் இருப்பதை கிண்டல் செய்யும் வாயால் நோன்பால் ஏற்படும் உடல் நன்மைகளை முஸ்லீம் அன்பர்களுக்கே விளக்குவார்.தீடீரென ஆவேசம் வந்து விட்டால் தானும் ஒரு முஸ்லீம் தான் என்றுப் பார்ப்பவர்கள் பதறும் அளவிற்க்கு குண்டை வீசுவார்.

மறுபக்கம் முன்னால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் தம் பங்கிற்க்கு ரம்ஜான் நோன்பு ஓட்டுக்களுக்கு முடிந்தவரை அடிபோடுவார்.என்ன, செல்வி ஜெயலலிதா தமக்குத்தான் முக்காடு போட்டுக் கொள்வாரேத் தவிர மற்றவர்களுக்குப் போடமாட்டார்.

அப்புறம் வைகோ,ராமதாஸ் போன்றவர்களும் தத்தமது ரம்ஜான் கடமையைச் செவ்வனே செய்வார்கள்.பின்னே செய்யாமல் இருந்தால் ஓட்டுப் போய்விடாதா?

இப்போது புதுத் தலைவர்களான,விஜயகாந்த்,சரத்குமார்,கார்த்திக்(!),தமது கடமையை ஆற்றத் துவங்கியிருப்பார்கள்.

நேற்று விஜயகாந்த் அதிரடியாக தனது பெயரை ”விஜயகான்” என்று மாற்றி தமிழக அரசியலில் ஒரு புதுத்திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.பாழாய்ப் போன ஓட்டு என்ன பாடுபடுத்துகிறது பாருங்கள்!.

அடுத்து கலைஞரை நினைத்தால் இன்னும் பயமாய் இருக்கிறது.”விஜயகானா”ல் நாலைந்து முஸ்லீம் ஓட்டு தன்னை விட்டுப் போய்விடக்கூடாது என்பதற்க்காக மதம் மாறிவிட்டேன் என்று அறிக்கையை விரைவில் அவரிடமிருந்து வந்தாலும் வரலாம்?

இதெல்லாம் ஓட்டுக்காகத்தான் என்று குழந்தைக்குக் கூடத் தெரியும்.ஒரு வேளை முஸ்லீம்கள் தங்களது ஓட்டுக்கள் எல்லாம் அனைத்து தொகுதிகளிலும் முஸ்லீம் லீக்கட்சிக்கு மட்டும்தான், அந்தக் கட்சியும் எந்தக் கட்சியுடனும் கூட்டு சேரக்கூடாது,என்று அறிவித்துப் பார்க்கட்டும்.அப்போது தெரியும்! இந்த இஃப்தார் விருந்து வேடிக்கைகள் எல்லாம்!.

"மானிய விலையில் மட்டையாக்கும் பொருள்"கலைஞர் அதிரடித்திட்டம்!

Posted on Thursday, September 18, 2008 by நல்லதந்தி



டாஸ்மாக் கடைகளில் மானிய விலையில், 50 ரூபாய்க்கு குடி!(மை) பொருட்கள் வழங்கப்படும் என்று, முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார். அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி முதல் இந்த சலுகை விலை திட்டம் அமலுக்கு வருகிறது.

ஏழை, எளிய நடுத்தர பெருங்குடி மக்களை விலைவாசி ஏற்றத்தின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு, பெருங்குடி மக்களுக்குத் தேவையான சரக்கு,தண்ணி,பிளாஸ்டிக் கிளாஸ்,சைட் டிஷ்,சிகரெட் மற்றும் வாந்தி வருகிற மாதிரி இருந்தால் வாயில் போட்டுக் கொள்ள ஆரஞ்சு மிட்டாய், வாந்தி எடுத்து விட்டால் துடைத்துக் கொள்ள 25X25 cm கைக்குட்டை போன்றவைகள் ரூபாய் 50 க்கே டாஸ்மாக் கடைகளில் கிடைக்கும்.

மேல கண்ட 7 பொருள்களையும், நல்ல தரமான நிலையில், சராசரிக் குடிமகனின் ஒரு வேளைத்(!) தேவைக்குப் பயன்படும் வகையில், அவை ஒவ்வொன்றையும் ஒரு சிறிய பாலிதீன் பையில் அடைத்து பின் அந்த பைகள் அனைத்தையும் ``மானிய விலையில் மட்டையாக்கும் பொருள்'' என்ற தலைப்பில் ஒரு பையிலிட்டு, 50 ரூபாய்க்கு டாஸ்மாக் கடைகள் மூலம் விற்பனை செய்திடும் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திட இந்த அரசு முடிவு செய்துள்ளது.

விலைப்பட்டியல்:

180 மில்லி குவார்டர் MC பிராண்ட் 70.00 (டாஸ்மாக் ஊழியர்களின் கமிஷன் 3 ரூபாயைச் சேர்த்து)

தண்ணிபாக்கெட் இரண்டு ரூ.5.00 (பார் எடுத்த கண்மணி கமிஷனையும் சேர்த்து)

பிளாஸ்டிக் கிளாஸ் நிரோத் பலூன் அளவிற்கு மெல்லியது ஒன்று ரூ.2.50 (பார் எடுத்த கண்மணி கமிஷனையும் சேர்த்து)

சைட்டிஷ் நிலக்கடலை பாக்கெட் 15 கொட்டைகள் கொண்டது ஒன்று ரூ.2.50 (பார் எடுத்த கண்மணி கமிஷனையும் சேர்த்து)

சிகரெட் கோல்டு பில்டர் இரண்டு ரூ.8.00 (பார் சந்தை விலை)

ஆரஞ்சு மிட்டாய் ஒன்று ரூ.2.00(பார் சந்தை விலை)

கைக்குட்டை பாலியெஸ்டர் மிக்ஸிங் ஒன்று ரூ.5.00 (பார் சந்தை விலை)


விலையில் மொத்தம் 95 ரூபாய்க்கு வெளிச்சந்தையில் விற்கப்படும் இந்த குடி(மை) பொருள்களும் முதலில் குறிப்பிட்ட அந்த பைகளின் மூலம் 50 ரூபாய்க்கு டாஸ்மாக் கடைகள் வாயிலாக விற்பனை செய்யப்படும். அதாவது 95 ரூபாய் பெறுமானமுள்ள, விலை மதிப்புள்ள பொருட்கள் 50 ரூபாய் விலைக்கு தரப்படும்.


இந்த புதிய திட்டம், உத்தமர் காந்தியடிகள் பிறந்த நன்னாளான வரும் அக்டோபர் 2-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும். ஏழைக் குடிதாங்கிகளின் சிரமங்களை விலக்கிட மனித நேய உணர்வோடு பல்வேறு வகையில் விலைகளை குறைத்து "குஜால்" பொருள்களை வழங்குகின்ற இந்த வாய்ப்பை பாணாக்குடிதமிழர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கருணாநிதி கூறினார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு, முதல்-அமைச்சர் கருணாநிதி பதில் அளித்தார்.

கேள்வி:- இந்த புதிய திட்டத்தின் மூலமாக எத்தனை பேர் பயனடைவார்கள்?
பதில்:- தமிழகத்தில் மொத்தம் உள்ள ஐம்பது கோடி ஆண்கள் பயனடைவார்கள்.

கேள்வி:-இந்தியாவின் ஜனத்தொகையே 110 கோடிதானே?பதில்:-இந்தியாவின் ஜனத்தொகை குறைவாக இருப்பதற்கு தமிழன் என்ன செய்வான்?(லேசாக நமுட்டுச் சிரிப்புச் சிரித்தார்!)

." 'குன்ஸா புள்ளி விபர னெஸ்"ரெக்கார்ட் புத்தகத்தில் மயிலாப்பூர் எடிஷனில் பதினோராயிரத்து நூற்று பதினோராம் பக்கத்தில் தமிழகத்தின் மக்கள் தொகை எவ்வளவு என்று போட்டிருக்கிறது என்று பாருங்கள். விபரமில்லாமல் பேசுவதற்கு நான் என்ன ஆடா? மாடா?

கேள்வி:- தமிழக அரசுக்கு கூடுதலாக எவ்வளவு செலவாகும்?
பதில்:- ஆண்டு ஒன்றுக்கு சுமார் 100000 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும்.

கேள்வி:- இந்த அரசின் "ஒரு ரூபாய்க்கு ஒரு மீட்டர் பூ" திட்டத்தை நீங்கள் அண்ணாவின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அறிவித்திருந்த போதிலும், ஒரு சிலர் இதனை தேர்தல் நோக்கோடு நீங்கள் அறிவித்திருப்பதாக விமர்சனம் செய்கிறார்களே? மேலும் மின்வெட்டை மறைப்பதற்காகத்தான் இந்த திட்டத்தை நீங்கள் அறிவித்திருப்பதாகவும் சொல்கிறார்களே?
பதில்:- இதற்கு முன் "நமக்கு நாமமே!"திட்டத்தில் மக்கள் எல்லோருக்கும் பட்டை நாமம் கொடுத்தைக் கூட இன்னும் சில குடிகேடிகள் குறை சொல்லத்தானே செய்கிறார்கள்.

மின்வெட்டு இருந்தால்தானே மறைக்க வேண்டும். மின்வெட்டை மறைக்க வேண்டிய அவசியத்தில் தற்போது நான் இல்லையே? மின்சாரத்தை பயன்படுத்திக்கொண்டுதான் இந்த விளக்கொளியில் நான் உங்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருக்கிறேன். மின்சார விளக்குகள் எரிவது குருடர்களை தவிர மற்ற எல்லோருக்கும் தெரியும். இவ்வாறு தமிழக முதல்வர் கூறினார்.

மானிய விலையில் மட்டையாக்கும் பொருள் திட்டத்தை அறிவித்தவுடன், செய்தியைக் கேட்ட குடிமக்கள் கும்பலாகக் கூடி ஆனந்தக் கண்ணீரோடு குவார்டர் ஜோதியில் கலந்தனர்.

எப்போதுமே டாஸ்மாக் வாசலிலேயே உழப்பிக் கொண்டு கிடக்கும் "ரம்மு ராஜேந்திரன்" என்பவர் கூறும் போது,''தலைவருன்னா தலைவர்தான், எத்தினியோ ஏழைங்க வீட்டில இதனால அடுப்பு எரியும். எங்களுக்கு மஜாவா வவுறு எரியும்.முன்னெல்லாம் எங்களுக்கு வர்ற வருமானத்தில ஒரு வேளைதான் சரக்கு சாப்பிட முடிஞ்சது.இந்த மகராசன் இரண்டு வேளைக்கு வழி பண்ணிட்டாரு!.என்று போதையிலேயே கண்ணீர் விட்டார்.

மற்றொரு குடிமகனான "குடிகார குமாரு" என்பவர் கூறும் போது,"கலைஞர் தீர்கதரிசிதாங்க!...தவிச்சவாய்க்கு தண்ணிதராத கர்நாடகாகாரனுங்களுக்கும் சரி,ஆந்தராகாரனுங்களுக்கும் சரி,கேரளாகாரனுங்களுக்கும் சரி.இப்போ தண்ணி கொடுக்கப் போறது யாரு?.நம்ப கலைஞர் தானே?.இப்போதான், அவனுங்க கலைஞரோட பெருந்தன்மைய புரிஞ்சுக்கப் போறானுங்க!..."என்று சொல்லிக் கொண்டே கடைசி மிடக்கை 'கப்' என்று வாயில் ஊற்றிக் கொண்டார்.பிறகு "சார் ஒரே ஒரு குவார்டர் வாங்கித்தர்றீங்களா?.அக்டோபர் ரெண்டாம் தேதி மறக்காம திருப்பி கொடுத்திடறேன்" என்றார்.

கவிஞர் "வயித்தில குத்து" அவர்களிடம் கேட்டபோது,"சாதாரணமாகவே "மக்களை"ப் பற்றியே சிந்திப்பார்.இப்பொழுது அவர் சிந்திப்பதே "மக்களை"ப் பற்றியா இருக்கு!.
24 நாலு மணி நேர மின்வெட்டு திட்டமான "ஜொலிக்கும் சூரியன்" திட்டம் காரணமா மக்கள் எப்படா விடியும்! என்று ஆகாயத்தையே பார்க்கும் படி செய்து ஆகாயத்தைக் காட்டினார்."டீ குடிக்க தீக்குளிக்க" திட்டத்தின் படி எரிக்க மண்ணெண்ணெய் வழங்கினார். "வாயில மண்ணு" திட்டத்தின் படி ஆளுக்கு இரண்டு கிலோ மீட்டர் நிலம் வழங்கி பூமியைத் தந்தார்.ஒரு ரூபாய்க்கு ஒரு மீட்டர் பூ திட்டத்தின் படி காதில் வைத்துக் கொள்ள வாசனைப் பூ வழங்கி மக்களுக்கு வாசனைக் காற்றைக் வழங்கினார்.இப்போது "மானிய விலையில் மட்டையாக்கும் பொருள்" திட்டத்தால் மக்களுக்களுடைய தவித்த வாய்க்கு தாகத்துக்கு தண்ணி வழங்கியுள்ளார்.
கடவுளுக்கு அடுத்தபடியாக பஞ்சபூதத்தையும் அடக்கி ஆள்வது கலைஞர் தான்! .இனிமேல் நான் கலைஞரை கலைஞரன்னு கூப்பிட மாட்டேன்.பஞ்ச பூதத்தையும் காட்டியதால் அவரைச் செல்லமாக "பஞ்சர்"அப்படின்னுதான் கூப்பிடப்போறேன் என்றார் உணர்ச்சிப் பெருக்கோடு!.

பார் ஊழியர் கூறும் போது,"இது ரொம்ப நல்லத்திட்டம்,முன்னே விலை அதிகமா இருக்கும்போது எங்களுக்கு டிப்ஸ் ரொம்ப கம்மியா குடுத்தாங்க.இப்ப டிப்ஸும் அதிகமா எதிர்பாக்குறோம். இப்ப நாங்க நிறைய விலையேத்தி சொன்னாக்கூட சரக்கு விலை கம்மியா இருக்கறதாலே கம்மன்னு குடுத்துட்டு போயிடுவாங்க.பாரும் சண்டச்சச்சரவு இல்லாம இருக்கும்."சட்டம் ஒழுங்க" இப்ப காப்பாத்தி, ஒரே கல்லுல ரெண்டு மாங்க அடிச்சிட்டாரு கலைஞரு!.இன்னொரு விஷயமும் சொல்லணும் சரக்கு அதிகமா உள்ளார போறதால மப்பு ஏறி தலை தொங்கிடும், அதிகமா பேசவும் மாட்டாங்க!முடியவும் முடியாது! ".என்றார்.

அதிமுக பிரமுகரிடம் கேட்ட போது,"இதெல்லாம் என்னங்க!.அம்மா ஆட்சியில "நைட்டுக்கு நைன்டி" திட்டத்த மிஞ்ச முடியுமா?.இந்த ஆளு எப்பவுமே இப்பிடிதாங்க.அம்மா எதாவது நல்லத் திட்டத்த கொண்டாந்தா இவரு அப்பிடியே காப்பியடிச்சிடுவாரு!."என்றார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் இதைப் பற்றி கேட்ட போது,"என்னங்க திட்டம் இது!.டாஸ்மாக் வரைக்கும் ஜனங்க எதுக்கு போகணும்.வீட்டுக்கே கொண்டு வந்து தரமுடியாதா?.அப்படி தரமுடியாததற்க்கு காரணம் என்ன?.கட்சிக்காரங்க கொள்ளையடிக்கறதுக்குத்தானே?.அந்த பொருளெல்லாம் டாஸ்மாக்குக்கே வராது!.அப்படியே கேரளாவுக்கும்,ஆந்திராவுக்கும், கர்நாடகாவுக்கும் தான் போகும்.எங்க ஆட்சி வந்தா ஒவ்வொரு வீட்டுக்கும் இந்த குடி(மை) பொருட்கள் தேடித்தேடி வரும்!.அதை எப்படிச் செய்வோம்ங்கிறத எங்க ஆட்சி வரும்போது சொல்வோம்!"


பி.கு:- இது முழுக்க முழுக்க சிரிப்பு லொள்ளிற்கே!. யாருடைய மனதையும் புண்படுத்த அல்ல! :)

இன்னொரு பி.கு:- ஒரு வருத்தமான விஷயம் இது என்னுடைய 50 வது பதிவு!

மற்றோரு பி.கு:- இந்தப் பதிவு நண்பர் வால்பையனுக்கு அர்ப்பணம்!...அடத் தண்ணி காரணம் இல்லீங்க! வேற காரணம்! :)

தயாளு அம்மையாரைப் பகுத்தறிவாளராக்கி சாதனை செய்ததால் கலைஞருக்கு பகுத்தறிவு ஸ்வார்டு! மக்கள் மகிழ்ச்சி வெள்ளதில் செத்தனர்!

Posted on Monday, September 8, 2008 by நல்லதந்தி



பெரியார் பன்னாட்டு மையம் சார்பில் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு ``சமூக நீதிக்கான வீரமணி விருது'' வழங்கும் விழா நேற்று பெரியார் திடலில் நடந்தது. மையத்தின் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் இந்த விருதையும், ரூ.1 லட்சம் காசோலையையும் முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் வழங்கினார்.


விழாவில் முதல்-அமைச்சர் கருணாநிதி பேசியதாவது:-இங்கே வீரமணி பேசும் போது இது விருதல்ல, போர்வாள் என்றார். ஆங்கிலத்தில் இந்த சொல்லை மாற்றிச் சொன்னால் இது அவார்டு அல்ல, ஸ்வார்டு. இந்த வாளை நான் பெரியாரிடத்திலே பெற்று பல்லாண்டு காலம் பகுத்தறிவுவாதியாக, சுயமரியாதைக்காரனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அதனால் தான் நீங்களும் எனக்கு இந்த விருதை வழங்கியிருக்கிறீர்கள்.


இவருடைய வயதென்ன, பதவி என்ன, இவர் போய் வீரமணி பெயரால் ஒரு விருது வாங்குவதா? என்று சிண்டு முடிகிறவர்கள் பேசக்கூடும், எழுதக் கூடும். தகுதியானவர் பெயரால் தான் இந்த விருதை வாங்கியிருக்கிறேன்.


சுயமரியாதை, சமூக நீதியில் அக்கரையுள்ளவன் என்பதால் மட்டுமல்ல, இதற்காக தொடர்ந்து போராடுபவன் என்பதற்காக இந்த விருது வழங்கியிருப்பதை நான் மறந்து விடவில்லை. வெளிநாடுகளில் வாழ்கிற நண்பர்கள் என்றாலும் நம்மை இணைக்கிற கொள்கை உள்ளவர்களால் வீரமணி பெயரால் இந்த விருது வழங்கப்படுகிறது.


1920-ம் ஆண்டிலிருந்து நடந்து கொண்டிருக்கிற சமூக நீதிக்கான போரை வேகப்படுத்தி பல வெற்றிகளை பெற்ற பெரியார், அண்ணா ஆகியோரை தலைவர்களாக ஏற்றுக் கொண்டு களத்தில் நின்ற, நின்று கொண்டிருக்கிற எங்களுக்கும் இந்த உரிமை உண்டு. இந்த போராட்டம் முற்று பெற்றுவிட்டதா என்றால் இல்லை. இன்னும் போராடு என்று ஊக்கப்படுத்துகிற விதத்தில் தான் இந்த விருதை தந்திருக்கிறீர்கள்.


பெரியாருக்கு பின்னர் இந்த இயக்கம் அழிந்துவிட்டதா - போய்விட்டதா - போகக் கூடாதா - என்று எண்ணுகிறவர்களுக்கு பெரியாருக்கு பின்னர் வீரமணி - அவருக்கு பின்னரும் ஒரு படையை உருவாக்கி வைத்திருக்கிறார் என்பதை பார்க்கும் போது பெரியாரின் கொள்கைகள் என்றைக்கும் சாயாது, அழியாது என்று பெருமிதத்துடன் கூறிக் கொள்கிறேன்.


மாணவப் பருவத்திலேயே எப்படியோ என் உள்ளத்தில் இந்த சுயமரியாதை ஒட்டிக் கொண்டு என்னை வளர்த்திருக்கிறது. மூட நம்பிக்கைகள் உள்ள சின்ன ஊரில் பிறந்தவன் நான். அங்கிருந்து வந்து பெரியாரால், அண்ணாவால் உருவாக்கப்பட்டு இப்போது உங்கள் முன் உட்கார்ந்திருக்கிறேன் என்றால் இது நான் பெற்ற பேறு அல்ல, பெரியார் தந்த அறிவு, அதன் விளைவு. இவைகளை எல்லாம் நானே தான் சிந்தித்தேன், நானே தான் செய்தேன் என்று சொல்வது சுலபம். ஆனால் எதிர்காலத்தில் வரலாற்றில் ஒரு பொய்யை சொன்னவன் என்ற நிலைக்கு ஆளாக விரும்பவில்லை.நான் தயாரிக்கப்பட்டவன். பெரியாரால் தட்டி தட்டி சீர் செய்யப்பட்டவன். அண்ணாவால் நான் வலுப்பெற்றவன். நீங்கள் தருகிற விருதை பெறுகிற அளவுக்கு வளர்ந்திருக்கிறேன் என்றால் எப்படிப்பட்ட உற்றார், உறவினர்களுக்கு மத்தியில் வளர்ந்தேன் என்று சொன்னால் தான், நாமும் பெரியார் விருது பெறலாம் என்று எண்ண முடியும்.


என் தந்தை முத்துவேலர் பிறக்கும் போதே அவரது தந்தை இறந்துவிட்டார். ஒவ்வொரு வருடமும் அவர் தனது தந்தைக்கு திவசம் புரோகிதரை வைத்து கொடுப்பார். நாம் வைக்கும் உணவை அவர் உண்டு நமக்கு ஆசி வழங்குவதாக ஒரு நம்பிக்கை. இதை நான் பள்ளி சிறுவனாக இருந்த போதே எதிர்த்தவன். இதற்காக சில நேரம் அடியும் வாங்கியிருக்கிறேன்.ஒரு முறை புரோகிதர் வாயில் வெற்றிலை போட்டுக் கொண்டு மந்திரத்தை உளறிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த எனது தந்தை என் மகன் சொல்வது உண்மை தான் போலிருக்கிறது, எழுந்து ஓடிவிடு, இனி என் வீட்டில் திவசம், திதி எல்லாம் இல்லை என்றார்.


திருவாரூரில் ஒரு பயங்கர சடங்கு ஓங்காரம் என்று நடக்கும். நடுநிசியில் 10 பேர் கூடி `ஓம்' என்று கூச்சலோடு வலம் வருவார்கள். இந்த ஓங்காரத்தை மடக்குபவர்கள் ரத்தம் கக்கி சாவார்கள் என்று ஒரு மூடநம்பிக்கையும், பயமுறுத்தலும் உண்டு. ஒரு நாள் இயக்க நண்பர்கள் இதை மறிக்கப் போகிறோம் என்று அறிவித்து மறித்தார்கள். அதோடு கலைந்து சென்றவர்கள், அதன் பின்னர் திருவாரூரில் ஓங்காரமே கிடையாது.எனது உறவினர் சொர்ணத்தின் தந்தை கிருஷ்ணமூர்த்தி பிள்ளை துர்க்கை அம்மனின் பக்தர். அவர் ஒரு மந்திரவாதி எதிர்காலம் பற்றி எல்லாம் சொல்கிறார். அவரிடம் உன்னைப்பற்றி விசாரிக்கலாம் என்றார். நான் மறுத்தும் கேட்காமல் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டு அவர் மந்திரவாதியிடம் பேசிக் கொண்டிருந்தார். மந்திரவாதியுடன் அவரது மனைவியும் வந்திருந்தார்.


கிருஷ்ணமூர்த்தி மந்திரவாதியிடம் எங்களுக்கு எத்தனை வீடுகள் இருக்கிறது என்று சொல்லுங்கள் பார்க்கலாம் என்று கேட்க மந்திரவாதி அவரது மனைவியை பார்க்க, அந்த பெண் என்னைப் பார்க்க, நான் 5 விரலை காட்டினேன். அவரும் மந்திரவாதிக்கு சைகையில் 5 விரலை காட்ட மந்திரவாதி 5 வீடுகள் இருப்பதாக தவறாக கூறினார். அடுத்து எத்தனை மகன்கள் என்ற கேள்விக்கும் அதேமுறையில் ஒரு மகன் என்று தவறாக கூற இவன் சொல்வது சரிதான், எல்லாம் ஏமாற்று வேலை என்று கூறி மந்திரவாதியை விரட்டி விட்டார். அவர் இந்த குளறுபடிக்கு நான் தான் காரணம் என்று தெரிந்து கொண்டு இந்த பையன் 6 மாதத்தில் செத்துவிடுவான் என்று கூறிவிட்டு சென்று விட்டான்.இப்படி சுயமரியாதை ஏற்படக்கூடிய அளவுக்கு என்னிடம் மட்டுமல்ல, என்னை சுற்றியுள்ள பலருக்கும் ஏற்படக் கூடிய பல சம்பவங்கள் நடந்திருக்கிறது.


என்ன முக்கியமான காரணம் - நான் எஸ்.எஸ்.எல்.சி. தான். அதிலும் தோல்வி. இதற்காக யாரும் நாமும் எஸ்.எஸ்.எல்.சி. தேறவில்லை, நாமும் முதல்-அமைச்சர் ஆகிவிடலாம் என்று நினைக்கக் கூடாது. இந்த நிலைக்கு நான் வரக் காரணம் கருத்துக்கள், பகுத்தறிவு, பெரியார் ஏற்றி வைத்த சுடர் ஒளி.ஒரு இசைவாணர் குடும்பத்தில் பிறந்தவன். எனது தந்தை என்னை ஒருவரிடம் நாதசுரம் பயில அனுப்பினார். நான் ஒரு நாள் சென்றுவிட்டு மறுநாள் இனி நான் அங்கு போகமாட்டேன் என்று கூறிவிட்டேன். காரணம் கேட்ட போது அவர் குருநாதர் - ஆனால் அங்கு அய்யர், முதலியார் என்று சிலர் வந்தால் அவர் தன் தோளில் அணிந்திருக்கும் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொள்கிறார். இது குருநாதருக்கு அவமானம் என்றேன்.


அதன் பின்னர் தான் என்னை திருவாரூரில் ஒரு பள்ளிக்கு அனுப்பினார்கள். அங்கு 8-ம் வகுப்பில் சேரவேண்டும் என்ற போது தேர்வு வைத்தனர். அதில் தேர்வாகாமல், 7-ம் வகுப்புக்கு தேர்வு வைக்க அதிலும் தேர்வாகாமல், 6-ம் வகுப்புக்கு தேர்வு வைக்க அதிலும் தேர்வாகாமல், இறுதியாக 5-ம் வகுப்பில் சேர்த்துக் கொண்டனர். அதுவும் இதில் தேர்வாக்கவில்லை என்றால் எதிரில் உள்ள குளத்தில் குதித்து உயிரை விட்டுவிடுவேன் என்று பயமுறுத்தி சேர்ந்தேன்.


துண்டை தோளில் போட்டால் என்ன? இடுப்பில் கட்டினால் என்ன? இதில் என்ன சுயமரியாதை இருக்கிறது என்று நான் அப்போது எண்ணியிருந்தால், நான் இன்று இடுப்பில் துண்டை கட்டிக் கொண்டிருப்பேன். இந்த விருது பெறுவது சாதாரண விஷயமல்ல. அதுவும் திராவிட கழக தலைமைக் கழகத்தில் கொடுத்த இந்த விருது - விருதல்ல - போர்வாள் என்று மீண்டும் கூறிக் கொள்கிறேன்.இவ்வாறு கருணாநிதி கூறினார்.

10மணிக்கு கலைஞர் கவிதை|||10 மணிக்கு கரண்ட் போகணும் பெண்கள் கதறல்!

Posted on Sunday, September 7, 2008 by நல்லதந்தி



கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 10 மணிக்கு தமிழருவி என்ற தலைப்பில் இலக்கிய பாடல்களை எளிய கவிதை நடையில் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கி வருகிறார்.

அதன் ஒருபகுதியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு தாம் படைத்த சங்கத்தமிழிலிருந்து முதல்-அமைச்சர் கருணாநிதி `கள் உண்ட கடுவன்!' என்ற கவிதையை வழங்குகிறார்.

சங்கத்தமிழ்ப் புலவர் கபிலர் பாடிய அகநானூற்றுப் பாடலை, கடுவன் ஒன்று கள் உண்டு மயங்கிக் கண்ணுறங்கிக் கிடந்த காட்சியைக் கண்ட புலவர் கபிலர், அதன் காரணத்தை ஆராய்ந்து தெளிந்த நிகழ்வைத் தன் கற்பனைத் தேரோட்டி அற்புதக் கவிதையாய் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்குகிறார்.

இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் கருணாநிதியின் சங்கத்தமிழிலிருந்து `பாறையில் உருகுது பசு வெண்ணெய்!' என்ற கவிதையை வழங்குகிறார். வணங்காமுடி எனும் சங்க காலத்துப் பெருவீரன் தனக்கு அறிவுரை நல்கிடும் அன்பு நண்பனின் செயலைப் பாறையில் உருகும் பசு வெண்ணெய்க்கு உவமைகாட்டிக் குறுந்தொகையில் புலவர் வெள்ளிவீதியார் பாடிய பாடலை, காதல் துயருற்றக் காளை ஒருவனின் மனநிலையை நெஞ்சம் நெகிழ வைக்கும் கவிதைப் புதையலாய் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்குகிறார்.

மேற்கண்ட தகவலை கலைஞர் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.


அடுத்த செய்தி!


தமிழகத்தில் மின்சார தட்டுப்பாட்டை சமாளிக்க மேலும் கூடுதலாக 200 மெகாவாட் மின்சாரம் வாங்கப்படுகிறது. காலை 10 மணிக்கு முன் மின்தடை செய்யப்படுவதால் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்வது பாதிக்கப்படுகிறது என பெண்கள் கூறி உள்ளனர்.

தமிழ்நாட்டில் பருவமழை பொய்த்தது, காற்று வீசுவது குறைந்தது போன்ற காரணங்களால் மின்சார உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதல் மின்சாரத்தை வாங்க மின்சார வாரியம் பல்வேறு வழிகளில் நடவடிக்கை எடுத்து வருகிறது.மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி டெல்லி சென்று மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு கூடுதலாக 600 மெகாவாட் மின்சாரம் பெற்று வந்துள்ளார். இது மின் தட்டுப்பாட்டை ஓரளவுக்கு சமாளிக்க உதவும்.

காலை 10 மணிக்கு முன்பு மின்தடை செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் பொதுமக்கள் பலரும் புகார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்களுக்கும், வேலைக்கு செல்பவர்களுக்கும் காலையிலேயே சமையல் செய்து உணவு கொடுத்து அனுப்புவது காலை நேர மின்வெட்டால் வெகுவாக பாதிக்கப்படுகிறது என்று பெண்கள் கூறுகிறார்கள்.

குறிப்பாக கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் மிகவும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே காலை 10 மணிக்கு முன்பு மின்வெட்டு அமல்படுத்துவதை தவிர்த்து, 10 மணிக்கு மேல் மட்டுமே மின்வெட்டை அமல்படுத்த வேண்டும் என்று பெண்கள் தெரிவித்துள்ளனர்.

அமாவாசை அமைச்சர் ஆற்காடுவீராசாமியின் கையாலாகாத்தனமும்,காவாலித்தனமும்!

Posted on Saturday, August 30, 2008 by நல்லதந்தி

வருங்காலத்தில் மின்சார சேமிப்பு!


ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மின்சாரம் போவதைப் பார்த்திருப்பீர்கள்.அல்லது சில சமயங்களில்,மிகுந்த மின்பற்றாக் குறையின் காரணமாக சில நாட்களில் இரண்டுமணிநேரம்,மூன்று மணி நேரம் மின்வெட்டை அனுபவித்திருப்போம்.ஆனால் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்திற்க்கும் மேல் மின் வெட்டு ஏற்படுவதை வாரக் கணக்காக அனுபவித்து இருக்கிறீர்களா?.




சென்னையைத் தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே அதிக அளவில் மின்வெட்டு இருந்து வருகிறது!.அதன் உச்ச பட்சமாக கடந்த 6 தினங்களாக நடந்து வரும் மின்வெட்டுக் கூத்தின் காட்சி நேரம் கீழே!



அதிகாலை 12 முதல் 2 வரை (2 மணி நேரம்)

அதிகாலை 4 முதல் 5 வரை (1 மணி நேரம்)
காலை 7 முதல் 8 வரை (1 மணி நேரம்)

காலை 9 முதல் 10 வரை(1 மணி நேரம்)

காலை 10 முதல் 12 வரை (சில இடங்களில்)

மதியம் 2 முதல் 5 வரை(3 மணி நேரம்)

மாலை 6 முதல் 9 வரை(3 மணி நேரம்)

இரவு 10 முதல் 11 வரை (1 மணி நேரம்)


குறிப்பு: இந்த பட்டியல் மிகைப் படுத்தி எழுதப் பட்டதல்ல!.100% அக்மார்க் உண்மை!


ஒரு நாளைக்கு 12 மணி நேரம் மின்வெட்டை அமுலுக்கு கொண்டு வந்த அற்புத ஆட்சியை எந்த மாநிலத்திலாவது பார்க்கமுடியுமா?.

அமாவாசை ஆற்காடு வீராசாமி இப்போது தன் மனைவியை எந்த மாநிலத்திற்கு அனுப்பி,அந்த மாநிலத்தில் தமிழ்நாட்டை விட மின் வெட்டு அதிகம் என்று கண்டுபிடித்துச் சொல்லச் சொல்லுவார் என்று தெரியவில்லை!.

இந்த பக்கம் கலைஞர் கருணாநிதி பல்லுகுத்திக் கொண்டே இன்னிக்கு எந்த டான்ஸ் பாக்கலாம்,எந்த சினிமா விழாவுக்குப் போனால் கவர்ச்சி டான்ஸ்
காட்டுவார்கள்.அடடா இன்னிக்கு எந்த விழாவும் இல்லையா?.அப்போ மானாட மயிலாட தான் பாக்கணுமா?.என்று மக்களைப் பற்றிய இந்த ஒரே கவலையில் இருக்கிறார்.


தமிழ் நாட்டின் சிறு தொழில்களும்,குறுந்தொழில்களும் இந்த 9 மாதங்களாக மின் வெட்டால் நசிந்து விட்டன. கலைஞர் சென்னைக்கும் அதைச் சுற்றியுள்ள பன்னாட்டு தொழிற்சாலைகளுக்கும்,ஐ.டி கம்பனிகளுக்கும் மின்சாரம் கிடைத்தால் போதும் என்று நினைக்கிறார் போலிருக்கிறது.

தமிழக மக்களின் தொழில்களை அழித்து விட்டு பன்னாட்டு முதலாளிகளைச் செழிக்க வைப்பதுதான்,தமிழர் நலன் காக்கும் அரசு என்று வார்த்தைக்கு வார்த்தை ஜல்லியடித்துக் கொண்டிருக்கும் தி.மு.க அரசின்
வேலையா? .

அமாவாசை அமைச்சரின் பொன்மொழி:
ஒரு மணிநேர மின்சாரச்சிக்கனம்,இரண்டு மணிநேர மின் உற்பத்திக்குச் சமம்!
இப்படித்தான் மின் உற்பத்தியைப் பெருக்குகிறார் போலிருக்கிறது.நாம் நிஜமாகவே உற்பத்தியைப் பெருக்குவார்கள் என்று நினைத்தோம்!.


அமாவாசை ஆற்காடுவீராசாமியின் பொன்னேட்டில் பொறிக்கப் படவேண்டிய உளறல்கள்!


மே 06,2008

செங்கோட்டையன் -புதிய தொழிற்சாலைக்கு ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை கொடுத்து விட்டு ஏற்கனவே இருக்கிற தொழிற்சாலைகளுக்கு மின்சார சப்ளையை நிறுத்தியதால், அந்த தொழிற்சாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனது தொகுதியில் விசைத்தறி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விஸ்கோஸ் தொழிற்சாலை, ஊட்டி இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை என வரிசையாக மூடப்பட்டு வருகின்றன. ஆனால், மத்திய அரசில் தொடர்ந்து அங்கம் வகித்து வரும் நீங்கள் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆற்காடு வீராசாமி: விசைத்தறிகளுக்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. காற்றாலை மூலமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு ஆயிரம் மெகாவாட்டில் இருந்து ஆயிரத்து 400 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. இதனால், வெளியில் வாங்கும் 600 மெகாவாட் மின்சாரத்தில் 200 மெகாவாட்டை குறைத்துக் கொண்டுள்ளோம். தமிழகத்தில் மே மாதம் 30ம் தேதிக்குப் பிறகு காற்றாலை மூலம் மேலும் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கூடுதலாகக் கிடைக்கும். அதை மத்திய அரசின் பவர் டிரேடிங் கார்ப்பரேஷனுக்கு யூனிட் ஒன்றுக்கு ஏழு ரூபாய் என விற்கப்படும். அதன் மூலம் இரண்டாயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். கூடுதலாக மின்சாரம் உற்பத்தியாகும் நிலையில் மின்தடை என்ற பேசி நேரத்தை வீணாக்க வேண்டாம்.

செங்கோட்டையன் - அ.தி.மு.க: மின்வெட்டு இல்லையென்று அமைச்சர் சொல்கிறார். ஆனால், வாரத்திற்கு ஒரு நாள் தொழிற்சாலைகளுக்கு விடுமுறை விடுமாறு மின்வாரியம் சர்க்குலர் வெளியிட்டுள்ளது அமைச்சருக்கு தெரியுமா? அது தவிர பழுது பார்ப்பு என்ற பெயரில் மாதத்திற்கு ஐந்து நாட்கள் மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
ஆற்காடு வீராசாமி: இது தொடர்பாக தொழிற்சாலை உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, அவர்களும் மின்சாரத்தை நிறுத்த ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால், விசைத்தறிகளுக்கு இவற்றில் இருந்து விலக்கு தரப்பட்டு, தடையின்றி மின்சாரம் வழங்கப்படுகின்றன. உங்கள் மாவட்டத்தை சேர்ந்த விசைத்தறியாளர்களை பார்த்து இதை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இவ்வாறு விவாதம் நடந்தது.

மே மாதம்
""வரும் 15ம் தேதி முதல் தொழிற் சாலைகளுக்கான மின்சார விடுமுறை ரத்தாகிறது. அடுத்த 15 நாட்களில் தமிழகம் முழுவதும் மின்சார தட்டுப்பாடே இருக்காது,'' என்று தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார். திருச்சியில், மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த மாதம் 27ம் தேதி தொடங்கி காற்றாலை மூலம் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்குக் கிடைக்கிறது. மின் தேவையைப் பூர்த்தி செய்ய வெளிமாநிலத்திலிருந்து மின்சாரம் வாங்குவது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

காற்றாலை மின்சாரம் தற்போது கிடைப்பதால், வரும் 15க்குப் பிறகு தொழிற்சாலைகளுக்கான மின் வார விடுமுறை ரத்து செய்யப்படும். தமிழகத்தில் தற்போது மின்வெட்டு இல்லை. சில பகுதிகளிலுள்ள சிறிய அளவிலான மின்வெட்டு பாதிப்பும் வரும் 30ம் தேதிக்குப் பின் முற்றிலும் இருக்காது. தடையின்றி சப்ளை இருக்கும்.

ஜூலை 19,2008

"சென்னை மாநகரில் தினமும் ஒரு மணி நேரமும், மற்ற மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் தினமும் இரண்டு மணி நேரமும் மின் வெட்டு அமல்படுத்தப்படும். தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும். தென்மேற்கு பருவமழை பெய்து, நீர் நிலைகளில் போதுமான அளவு இருப்பு வரும் வரை இந்த நிலை நீடிக்கும்' என்று மின்துறை அமைச் சர் ஆற்காடு வீராசாமி அறிவித்தார்.தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை சமாளிப்பது குறித்து, தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு தொழில் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார்.

அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, நிதித்துறைச் செயலர், தொழில் துறைச் செயலர், எரிசக்தித்துறைச் செயலர், மின்வாரிய அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பின், அமைச்சர் ஆற்காடு வீராசாமி நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்துக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரம் மெகா வாட் மின்சாரம் பற்றாக்குறை உள்ளது. நாம் எதிர் பார்த்த அளவுக்கு காற்றாலையில் இருந்து மின்சாரம் உற்பத்தி ஆகவில்லை.காற்று சரியான அளவு வீசாததால், எதிர்பார்க்கப்பட்ட இரண் டாயிரத்து 700 மெகா வாட் மின்சாரத்துக்குப் பதிலாக ஆயிரத்து 800 மெகா வாட் மின்சாரம் தான் கிடைக்கிறது.

மழை பெய்யாததால் நீர் மின் சாரம் அதிகமாக கிடைக்கவில்லை. மத்திய தொகுப்பில் இருந்து நமக்கு வர வேண்டிய மின்சாரத்தில் 60 சதவீதம் தான் கிடைத்துக் கொண்டிருக்கிறது.அண்டை மாநிலங்களிலும் இதே நிலைமை தான் உள்ளது. கர்நாடகாவில் உள்ள அணைகளில் தண்ணீர் இல்லை. கேரளா நம்மிடம் நான்கு டி.எம்.சி., தண்ணீர் கேட்டுக் கொண்டுள்ளது. எனவே, தொழிற்சாலைகளுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட வாரம் ஒரு நாள் விடுமுறை திட் டம் பற்றி விவாதிக்கப் பட்டது.

இதன்படி, தமிழகத்தை ஆறு பகுதிகளாகப் பிரித்து, வாரத்துக்கு ஒரு நாள் ஒவ்வொரு பகுதியிலும் தொழிற்சாலைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்.கடந்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே 15 வரை இந்த திட்டத்தை அமல்படுத்திய போது அளிக்கப் பட்ட வரிச்சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று தொழிலதிபர்கள் கேட்டனர். அந்த வரி விலக்கு மேலும் தொடர்ந்து அளிக்கப்படும்.
இது தவிர, பர்னேஸ் ஆயிலை பயன்படுத்தி மின் உற்பத்தி செய் யும் தொழிற்சாலைகளுக்கு, "வாட்' வரி விலக்கு அளிக்கப் படும்.மேலும், டீசலை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு, "வாட்' வரி விலக்கு அளிக்க வேண்டுமென்ற புதிய கோரிக்கையை வைத்தனர்.

இது பற்றி விவாதித்து இறுதியில், இதனால் தொழிற்சாலைகளுக்கு ஏற்படும் இழப்பை, 60 சதவீதத்தை அரசும், 40 சதவீதத்தை தொழிற்சாலைகளும் ஈடு செய்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.இந்த முடிவுகள் அனைத்தும் முதல்வர் கருணாநிதி மற்றும் நிதியமைச்சருடன் கலந்து பேசி, உடனடியாக அறிவிப்பாக வெளியிடப்படும். தமிழகத்தில் அறிவிக் கப்படாத மின் வெட்டு இருக்காது.

வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்கும் திட்டத்தின் மூலம் 375 முதல் 400 மெகா வாட் மின்சாரம் மிச்சமாகும். மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் குறிப் பிட்ட நேரம் மட்டும் மின் தடை செய்வதன் மூலம் 300 மெகா வாட் மின்சாரம் மிச்சமாகும். சென்னையை எட்டு பகுதிகளாகப் பிரித்து, காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை, எட்டு மணி நேரத்தில் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு மணி நேரம் மின் நிறுத்தம் செய்யப்படும். இதேபோல, மற்ற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் தினமும் இரண்டு மணி நேரம் மின் தடை இருக்கும்.

கிராமப்புறங்களில் ஏற்படும் அதிக மின் தடையை சரி செய்யத் தான் இந்த முறை அமல்படுத்தப் படுகிறது. அதிகபட்சம் வாரத் துக்கு நான்கு நாட்கள் தினமும் 4 முதல் 5 மணி நேரமும், இரண்டு நாட்கள் மட்டும் 6 மணி நேரமும் விவசாயத்துக்கு மின்சாரம் வழங்கப் படும்.தென்மேற்கு பருவமழை நன் றாக பெய்து, நீர்த்தேக்கங்களில் ஆயிரம் மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய அளவுக்கு இருப்பு வரும் வரை இந்த நிலைமை இருக்கும்.
இரவு நேரங்களில் மாணவர்கள் படிப்புக்கு தடை ஏற்படக்கூடாது என்பதற்காக, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கண்டிப்பாக மின் தடை கூடாது என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல, குடிநீர் வினியோகம் அனைவருக்கும் கிடைக்கும் வகையில், அதற்கான மின் வெட்டு இருக்காது. மருத்துவமனைகளுக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பால் உற் பத்திப் பிரிவுகளுக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மின் உற்பத்தித் திறனை அதிகரிக்க, ஐந்தாயிரம் மெகா வாட் மின் உற்பத்திக்கு திட்டங்கள் தீட்டி, டெண்டர் விடப்பட்டு, பணிகள் துவக்கப்பட உள்ளன. அடுத்த ஆண்டில் பணிகள் முடிவடைந்து நான்காயிரத்து 500 மெகா வாட் மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.

ஆகஸ்ட் 11

சென்னையில் ஒரு மணி நேரமும், வெளிமாவட்டங்களில் இரண்டு மணி நேரமும் மின்வெட்டு ஏற்படுத் தப்பட்டது.இதற்கு எதிர்ப்பு கிளம் பியதும் அது ரத்து செய்யப் பட்டுவிட்டது.
டில்லியில் எட்டு மணிநேரம் மின்வெட்டும், மகாராஷ்டிரா உள்ளிட்ட நாடு முழுவதும் மின்பற்றாக்குறை இருக்கிறது. விவசாயிகள், சிறு தொழிற்சாலைகள் என தமிழகத்தில் ஆறு மண்டலங்களாக பிரித்து, ஒவ்வொரு நாள் விடுமுறை விடப்படுகிறது. காற்று வீசி, மழைப் பெய்தால் கூடுதல் மின்சாரம் கிடைத்தும் அதுவும் ரத்து செய்யப்படும். இன்னும் இரண்டரை ஆண்டுகளில் மின் உற்பத்தி செய்யும் பணிகள் துவங்கிவிடும்.

செருப்பால் அடித்து குடைபிடிப்பது எப்படி? or விரட்டிவிடப் பட்ட பிச்சைக்காரன் தட்டிலிருந்து சோறு பிடுங்குவது எப்படி-விளக்கம் தருபவர் கலைஞர்!

Posted on Monday, August 25, 2008 by நல்லதந்தி


















இந்த கூத்தப் பாத்த சிரிப்பை அடக்கமுடியலே!



அடக்கருமமே ஏன்யா இந்த ஆளு இப்படி இருக்காரு?


டிரவுசர் கிழியுற மாதிரி இருக்கு ... அதான் :(



கலைஞர் கருணாநிதிக்கு எப்போதுமே.வெட்கம்,மானம்,சூட்டு சொரணை,லஜ்ஜை,கூச்சக் கருமாந்திரங்கள் கிடையேவே கிடையாது,என்று அவர்களே கூப்பாடு போட்டுச் சொன்னாலும்,மட்டி,மடையர்களாலான எங்களைப் போன்ற சொற்ப சிலர் 'அவருக்கு இதில ஏதாவது ஒன்றாவது இருக்கும் அப்படி இல்லையன்னா அவரு மனுஷனாவே இருக்க முடியாது' என்று விவரம் புரியாமல் தெரியாத்தனமா பேசி வந்தோம்.



கலைஞர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. இன்னிக்குத் தானே எனக்கு எதுவும் கிடையாதப்பான்னு சொல்லிட்டாரு!..வயசுக்கும் அறிவுக்கும்,சம்மந்தமில்லைங்கறத கலைஞரப் பாத்து ஜனங்க கத்துக்கணும்.இன்னொன்னையும் கத்துக்கலாம்!.. மனிதனோட சுயநலங்கறது எப்பவுமே முடியாததுன்னு,அதுக்காக எந்த வயசிலேயும் மானத்தை இழக்கலாம்ங்கிறதை!.




எப்பவுமே சுணங்கி சுணங்கி வேலை செய்யும் கலைஞர்,எந்த முடிவு எடுக்கவும், (தம் சொந்த பந்தங்களை பதவியில் அமர்த்துவது தவிர) காலத்தை ஒத்திப் போடும் கலைஞர்,இந்த பா.ம.க விஷயத்தில அவர்களின் காலில் இவ்வளவு வேகமா விழுவுறது நமக்கு ஆச்சரியமா இருந்தாலும், கலைஞரோட அரசியலை அன்றாடம் பாத்துட்டு இருக்கறவங்களுக்கு,இதெல்லாம் ஒரு அதிர்ச்சியையும் கொடுக்காது!.கலைஞர் இதவிட ஜெகஜ்ஜால வித்தையை எல்லாம் முன்னெயே காட்டி இருக்காருன்னுதான் நினைச்சிக்குவாங்க!.


ஏன்னா பாஜக வோட ஆட்சியில பங்கு வகிச்சப்போ கலைஞருக்கு ஆட்சி முடிய கடைசி இரண்டு மாசத்துக்கு முன்னே தானே அது மதவாத கட்சின்னு தெரிஞ்சது!.(இதுல முரசொலிமாறன் கருமாதிக்கு அத்வானி வரலேங்கிற அல்பகாரணம் வேற.அன்னிக்கு பிரதமரா இருந்த வாஜ்பாஜ்யே கருமாதிக்கு வந்த போதும்,ப.ஜ.க வை கழட்டிவிட்டு, காங்கிரஸோட சேரக் காரணம் தேடிய லட்சணம் இது!).



இப்ப பா.ம.க.வ ஏன் கழட்டிவிடாங்கன்னு ஜனங்களுக்குத் தெரியும்.ஆனா கலைஞர், மக்களுக்கு உதவுற திட்டங்களுக்கு பா.ம.க. தடையா இருக்குதுன்னு கழட்டிவிட்டமாதிரி பில்டப் கொடுத்தாரு நம்ம கலைஞரு.



அப்படியே வெச்சிக்கிட்டாலும் இப்ப அவங்க மக்களுக்கு உதவுற திட்டங்களுக்கு முன்ன சொன்ன எதிர்ப்புகளைக் கை விட்டுட்டாங்களா?... கலைஞருக்கே வெளிச்சம்!.



செருப்படி வாங்கிக்கிட்டு தியாகத் திலகம் பா.ம.க. கலைஞரோட வீட்டு வாசலில காத்திருக்கப் போகுதா?.அல்லது அடுத்த செருப்படி வாங்க அ.தி.மு.க வாசலுக்குப் போகப் போகுதா?. ஆனா பா.ம.கவுக்கு இந்த ரெண்டு வூட்டத் தவிர எங்க போனாலும்,அடுத்தது காட்டைத்தான் தேடிப் போகோணும்.


வந்த செய்திகள் கீழே!





ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு மீண்டும் பாமக திரும்பினால் கூட்டணி வலுப்பெறும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதையடுத்து மீண்டும் திமுக அணிக்கு பாமக திரும்பவுள்ளதாக தெரிகிறது. கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றிருந்தது பாமக. திமுகவுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காததால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அப்போது அமைச்சரவையில் பங்கு கேட்க மாட்டோம் என பாமக அறிவித்தது. அதன்படி அமைச்சரவையில் பங்கு கேட்காமல் இருந்து வந்தது.




ஆனால் திமுக ஆட்சி பதவியேற்ற சில மாதங்களிலேயே பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பாமகவுக்கும், திமுகவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினரும் அறிக்கைப் போர், விமர்சனப் போர்களில் ஈடுபட்டு வந்தனர்.இந்த நிலையில் பாமக பொருளாளரும், வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குரு, முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோரை மிகக் கடுமையாக தாக்கிப் பேசியது திமுகவை கொதிப்படைய வைத்தது.




இதையடுத்து ஜனநாயக முற்போக்குக் கூட்டணியிலிருந்து பாமகவை நீக்கியது திமுக.இந்த நிலையில், திடீர் திருப்பமாக கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவுடன் முரண்பட்டு போக ஆரம்பித்துள்ளன. திமுக கூட்டணியை விட்டு விலகவும் அவை தீர்மானித்து விட்டன.இதன் காரணமாக ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதற்கிடையே, தமிழகத்தில் புதிதாக 3வது அணியை உருவாக்கப் போவதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்துள்ளன. இந்த மூன்றாவது அணியில் பாமக, தேமுதிக உள்ளிட்ட வலுவான கட்சிகள் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது.இதனால் திமுக தரப்பு கலக்கமடைந்தது.




இந்தப் பின்னணியில், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு முதல்வர் கருணாநிதி முக்கியத்துவம் வாய்ந்த பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு பாமக திரும்பி வந்தால் கூட்டணி வலுவடையும் என்று அவர் கூறியுள்ளார்.

இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியிலிருந்து விலகும் சூழ்நிலையில் திமுக கூட்டணியை பலப்படுத்த பாமகவுக்கு முதல்வர் விடுத்துள்ள அழைப்புதான் இது என்று கூறப்படுகிறது.இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறுகையில், முதல்வரின் கருத்து விடுதலைச் சிறுத்தைகளுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எமது முயற்சிகளுக்கு ஊக்கம் ஊட்டுகிற வகையில் முதல்வரின் கருத்து வெளிப்பட்டிருக்கிறது.பாமக இதுகுறித்து என்ன கருதுகிறது என்பதை பொறுத்து எங்களது முடிவை அறிவிக்கிறோம். டாக்டர் ராமதாஸையும் சந்திக்க திட்டமிட்டுள்ளேன் என்றார் அவர்.இதன் மூலம் திமுக கூட்டணிக்கு மீண்டும் பாமக திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக அரசியல் களம் மறுபடியும் சூடு பிடித்துள்ளது.





அடுத்த செய்தி!





"பா.ம.க., இருந்திருந்தால், கூட்டணி இன்னும் வலுவாக இருந்திருக்கும்' என முதல்வர் கருணாநிதி கருத்தை தெரிவித்துள் ளார். "தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் பா.ம.க., மீண்டும் இடம் பெறுவதால் வலுவாக இருக்கும்' என்ற கருத்தை முதல்வர் கருணாநிதியைச் சந்தித்த பின் மத்திய நிதியமைச்சர் சிதம்பரமும் நேற்று வெளிப்படுத்தியுள்ளார்.



மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், நேற்று காலை 11 மணியளவில் முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அவருடன் எல் அண்ட் டி நிறுவன தலைவர் நாயக், செயல் தலைவர் ரங்கசாமி, துணைத் தலைவர் சிவராமன் ஆகியோரும் சந்தித்துப் பேசினர். அரை மணி நேரம் இச்சந்திப்பு நடந்தது.




முதல்வரை சந்தித்துப் பேசிய பின் மத்திய அமைச்சர் சிதம்பரம், பா.ம.க., மீண்டும் சேர வாய்ப்பு இருப்பதைப் போன்ற சாதகமான பதிலை தெரிவித்துள்ளது, தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் கருணாநிதி நேற்று முன்தினம் அளித்த பேட்டியிலும் பா.ம.க., தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்."தி.மு.க., கூட்டணியில் இருந்து பா.ம.க., வெளியேறியது அவர்களாக ஏற்படுத்திய நிர்பந்தம். நாங்களாக அவர்களை வெளியேற்றவில்லை.ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் பா.ம.க., இருந்திருந்தால், கூட்டணி இன்னும் வலுவாக இருந்திருக்கும்' (இது எப்படி இருக்கு?)என அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.






கடந்த ஜூனில், பா.ம.க.,வை வெளியேற்றிய போது தி.மு.க., காட்டிய வேகமும், கோபமும் தற்போது குறைந்துள்ளதையே முதல்வரின் கருத்துக்கள் வெளிப்படுத்துகின்றன. அதற்கேற்ப "நாளையே மீண்டும் பா.ம.க., சேரலாம்' என்று அவர் கூறியிருப்பது, இக்கூட்டணி பிளவு ஏதுமின்றி இருக்க வேண்டும் என்று ஆசைப்படும் கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. தமிழக அரசியல் கூட்டணிக் கட்சிகள் இடையே பெரிய அளவில் திருப்பமும், பரபரப்பும் கொண்டதாக இக்கருத்து அமையும் என்ற சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

அவாள்-சவால் கதறவைக்கும் கலைஞரின் கண்ணீர்க் கவிதை!

Posted on Wednesday, August 20, 2008 by நல்லதந்தி


அவாள்-சவால் கதறவைக்கும் கலைஞரின் கண்ணீர்க் கவிதை!


ஒவ்வொரு வரியாக பத்தி பிரித்துப் எழுதியிருப்பதால் கவிதை என்றே கண்டுணர்க!......


அவர் கவிதை எழுதி சம்பந்தப் பட்டவர்களுக்கு துன்பம் கொடுக்கிறாரோ இல்லையோ,அந்த கவிதையை பிரசுரிக்கும் பத்திரிக்கைகளின் அச்சகங்களில் அச்சு கோர்ப்பவரில் இருந்து,வாங்கிப் படிப்பவர்கள்,அனைவருக்கும் ஜன்னி,பேதி வருவது சர்வ நிச்சயம்!.


இந்த கவிதையில் அவர் தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து கட்டி கலைஞர் தொலைக்காட்சியைப் பார்கின்ற பரவசத்தையும் அளிக்கிறார்!.


அய்யர்களைத் திட்டுவது மாதிரி இருந்தாலும் திட்டு வாங்குபவர்கள் மாறன் மகன்கள் என்பது போலத் தெரிகிறது.அவர்கள் பிராமணர்களா?(தாய் வழியில்).அதனால்தான், தாசில்தார் கலைஞர், அவர்களுக்கு புது சாதிச் சான்றிதழ்(வழக்கம் போல் பிடிக்காத மற்றவர்களுக்கு கொடுப்பது போல) கொடுக்கிறாரா தெரியவில்லை!


கவிதைக்கு அர்த்தம் கண்டுபிடித்தவர்கள் தயவு கூர்ந்து கீழ் கண்ட முகவரிக்கு ஒரு வரி எழுதிப் போட்டு விடவும்!.


திரு.அச்சுக் கோர்ப்பவர்

முரசொலி அச்சகம்

கோடம்பாக்கம்

சென்னை.


பி.கு: கவிஞர் கனிமொழியின் கவிதைகளைக் கண்டு(!) பிடித்து படித்தவர்கள்

படிக்கும் போதே கண்களில் சொர்கம் தெரிவதாகத் பரவசத்துடன் கூறியதாக, கேள்வி!.


பின்னே என்னத்துக்காக கவிதையைப் போட்டாய்? என்பவர்களுக்கு... யான் பெற்ற இ(து)ன்பம்! பெறுக இவ்வையகம் என்ற பரந்த மனப்பான்மைதான்! :)


உஷார். .....இனி கவிதை அரங்கேறும் நேரம்!...


அரசியலில் பொதுவாழ்வில்; ஏன், தனி வாழ்வில் கூட;


அனைவரையும் நம்பிவிடும் "அறியாமை'' என்றைக்கும் அடியேனுக்கு உண்டு!
(ஸ்ஸ்.....பெரியவங்க பேசும் போது சிரிக்கக்கூடாது!)

அடடா; அவர்கள் காரியமாகும் வரையில் நம் கரத்தைக் குலுக்குவதென்ன.....


அம்மவோ; காலைப்பிடிப்பது தான் என்ன? என்ன? என்ன?
(ரொம்ப நொந்துட்டார் போலிருக்கே...)

அடிச்சது "சான்ஸ்'' கிடைச்சது "வாய்ப்பு'' என்றதும் "ஆத்துக்காராள்'' காட்டிய
(இது முரசொலி மாறனின் மனைவிக்கு!)

அன்பும் நன்றியும் கூட ஆலாய்ப்பறந்துவிடும்; ஆவியாகி மறைந்து விடும்.


ஆயிரத்தில் ஒருவன் இவர்-ஆயுள் மட்டும் மறக்க மாட்டார்! அனுபவிக்கும் பதவி,


அதிர்ஷ்டத்தால் வந்ததல்ல; "அவன் போட்ட பிச்சை'' யென்று அன்றாடம் நினைத்திருப்பார்;
(இது முரசொலி மாறனின் மகன்களுக்கு)

அப்படியொரு அழுத்தமான எண்ணங்கொண்டு அசைத்துப்பார்த்தேன்


அடிமரம் ஒட்டிய கிளையொன்றை!


அடடா-கொடிய பூச்சிகளும் கொட்டும் தேள் கூட்டமும்


படிப்படியாய் அளந்து போட்டது போல் பாவி மனிதன் தலையிலிருந்து


படபடவென உதிர்ந்தென்னைத் தாக்கியதைக்கண்ட பின்பே
(அய்யய்யோ அவ்வளவு சிரமம் குடுத்திட்டீங்களா? பிரதர்ஸ்!)

உணர்ந்து கொண்டேன்; "அவாள்'' நமக்கு எப்போதும் "சவால்'' தான் என்ற உண்மை!
(அடடடா!. இப்பதான் அவர்கள்(அம்மா வழியில்) அய்யர்கள்ன்னு கண்டுபிடித்தாராம்)

உம்மையும் ஏமாற்ற உச்சி முதல் உள்ளங்கால் வரையில் கடும் விஷம் மொண்டு-


கலகலப்பு சிரிப்பு காட்டி வருகின்ற கயவர்களின்


நன்றியில்லா உள்ளம் கண்டு நாய்கள் கூட சிரிக்குமய்யா!
(யோவ்...வாங்கையா!...நாமும் சிரிச்சிடுவோம், இல்லையன்னா அடுத்த கவிதை ரெடியாயிரும்!........)