செருப்பால் அடித்து குடைபிடிப்பது எப்படி? or விரட்டிவிடப் பட்ட பிச்சைக்காரன் தட்டிலிருந்து சோறு பிடுங்குவது எப்படி-விளக்கம் தருபவர் கலைஞர்!

Posted on Monday, August 25, 2008 by நல்லதந்தி


















இந்த கூத்தப் பாத்த சிரிப்பை அடக்கமுடியலே!



அடக்கருமமே ஏன்யா இந்த ஆளு இப்படி இருக்காரு?


டிரவுசர் கிழியுற மாதிரி இருக்கு ... அதான் :(



கலைஞர் கருணாநிதிக்கு எப்போதுமே.வெட்கம்,மானம்,சூட்டு சொரணை,லஜ்ஜை,கூச்சக் கருமாந்திரங்கள் கிடையேவே கிடையாது,என்று அவர்களே கூப்பாடு போட்டுச் சொன்னாலும்,மட்டி,மடையர்களாலான எங்களைப் போன்ற சொற்ப சிலர் 'அவருக்கு இதில ஏதாவது ஒன்றாவது இருக்கும் அப்படி இல்லையன்னா அவரு மனுஷனாவே இருக்க முடியாது' என்று விவரம் புரியாமல் தெரியாத்தனமா பேசி வந்தோம்.



கலைஞர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. இன்னிக்குத் தானே எனக்கு எதுவும் கிடையாதப்பான்னு சொல்லிட்டாரு!..வயசுக்கும் அறிவுக்கும்,சம்மந்தமில்லைங்கறத கலைஞரப் பாத்து ஜனங்க கத்துக்கணும்.இன்னொன்னையும் கத்துக்கலாம்!.. மனிதனோட சுயநலங்கறது எப்பவுமே முடியாததுன்னு,அதுக்காக எந்த வயசிலேயும் மானத்தை இழக்கலாம்ங்கிறதை!.




எப்பவுமே சுணங்கி சுணங்கி வேலை செய்யும் கலைஞர்,எந்த முடிவு எடுக்கவும், (தம் சொந்த பந்தங்களை பதவியில் அமர்த்துவது தவிர) காலத்தை ஒத்திப் போடும் கலைஞர்,இந்த பா.ம.க விஷயத்தில அவர்களின் காலில் இவ்வளவு வேகமா விழுவுறது நமக்கு ஆச்சரியமா இருந்தாலும், கலைஞரோட அரசியலை அன்றாடம் பாத்துட்டு இருக்கறவங்களுக்கு,இதெல்லாம் ஒரு அதிர்ச்சியையும் கொடுக்காது!.கலைஞர் இதவிட ஜெகஜ்ஜால வித்தையை எல்லாம் முன்னெயே காட்டி இருக்காருன்னுதான் நினைச்சிக்குவாங்க!.


ஏன்னா பாஜக வோட ஆட்சியில பங்கு வகிச்சப்போ கலைஞருக்கு ஆட்சி முடிய கடைசி இரண்டு மாசத்துக்கு முன்னே தானே அது மதவாத கட்சின்னு தெரிஞ்சது!.(இதுல முரசொலிமாறன் கருமாதிக்கு அத்வானி வரலேங்கிற அல்பகாரணம் வேற.அன்னிக்கு பிரதமரா இருந்த வாஜ்பாஜ்யே கருமாதிக்கு வந்த போதும்,ப.ஜ.க வை கழட்டிவிட்டு, காங்கிரஸோட சேரக் காரணம் தேடிய லட்சணம் இது!).



இப்ப பா.ம.க.வ ஏன் கழட்டிவிடாங்கன்னு ஜனங்களுக்குத் தெரியும்.ஆனா கலைஞர், மக்களுக்கு உதவுற திட்டங்களுக்கு பா.ம.க. தடையா இருக்குதுன்னு கழட்டிவிட்டமாதிரி பில்டப் கொடுத்தாரு நம்ம கலைஞரு.



அப்படியே வெச்சிக்கிட்டாலும் இப்ப அவங்க மக்களுக்கு உதவுற திட்டங்களுக்கு முன்ன சொன்ன எதிர்ப்புகளைக் கை விட்டுட்டாங்களா?... கலைஞருக்கே வெளிச்சம்!.



செருப்படி வாங்கிக்கிட்டு தியாகத் திலகம் பா.ம.க. கலைஞரோட வீட்டு வாசலில காத்திருக்கப் போகுதா?.அல்லது அடுத்த செருப்படி வாங்க அ.தி.மு.க வாசலுக்குப் போகப் போகுதா?. ஆனா பா.ம.கவுக்கு இந்த ரெண்டு வூட்டத் தவிர எங்க போனாலும்,அடுத்தது காட்டைத்தான் தேடிப் போகோணும்.


வந்த செய்திகள் கீழே!





ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு மீண்டும் பாமக திரும்பினால் கூட்டணி வலுப்பெறும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதையடுத்து மீண்டும் திமுக அணிக்கு பாமக திரும்பவுள்ளதாக தெரிகிறது. கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றிருந்தது பாமக. திமுகவுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காததால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அப்போது அமைச்சரவையில் பங்கு கேட்க மாட்டோம் என பாமக அறிவித்தது. அதன்படி அமைச்சரவையில் பங்கு கேட்காமல் இருந்து வந்தது.




ஆனால் திமுக ஆட்சி பதவியேற்ற சில மாதங்களிலேயே பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பாமகவுக்கும், திமுகவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினரும் அறிக்கைப் போர், விமர்சனப் போர்களில் ஈடுபட்டு வந்தனர்.இந்த நிலையில் பாமக பொருளாளரும், வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குரு, முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோரை மிகக் கடுமையாக தாக்கிப் பேசியது திமுகவை கொதிப்படைய வைத்தது.




இதையடுத்து ஜனநாயக முற்போக்குக் கூட்டணியிலிருந்து பாமகவை நீக்கியது திமுக.இந்த நிலையில், திடீர் திருப்பமாக கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவுடன் முரண்பட்டு போக ஆரம்பித்துள்ளன. திமுக கூட்டணியை விட்டு விலகவும் அவை தீர்மானித்து விட்டன.இதன் காரணமாக ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதற்கிடையே, தமிழகத்தில் புதிதாக 3வது அணியை உருவாக்கப் போவதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்துள்ளன. இந்த மூன்றாவது அணியில் பாமக, தேமுதிக உள்ளிட்ட வலுவான கட்சிகள் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது.இதனால் திமுக தரப்பு கலக்கமடைந்தது.




இந்தப் பின்னணியில், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு முதல்வர் கருணாநிதி முக்கியத்துவம் வாய்ந்த பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு பாமக திரும்பி வந்தால் கூட்டணி வலுவடையும் என்று அவர் கூறியுள்ளார்.

இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியிலிருந்து விலகும் சூழ்நிலையில் திமுக கூட்டணியை பலப்படுத்த பாமகவுக்கு முதல்வர் விடுத்துள்ள அழைப்புதான் இது என்று கூறப்படுகிறது.இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறுகையில், முதல்வரின் கருத்து விடுதலைச் சிறுத்தைகளுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எமது முயற்சிகளுக்கு ஊக்கம் ஊட்டுகிற வகையில் முதல்வரின் கருத்து வெளிப்பட்டிருக்கிறது.பாமக இதுகுறித்து என்ன கருதுகிறது என்பதை பொறுத்து எங்களது முடிவை அறிவிக்கிறோம். டாக்டர் ராமதாஸையும் சந்திக்க திட்டமிட்டுள்ளேன் என்றார் அவர்.இதன் மூலம் திமுக கூட்டணிக்கு மீண்டும் பாமக திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக அரசியல் களம் மறுபடியும் சூடு பிடித்துள்ளது.





அடுத்த செய்தி!





"பா.ம.க., இருந்திருந்தால், கூட்டணி இன்னும் வலுவாக இருந்திருக்கும்' என முதல்வர் கருணாநிதி கருத்தை தெரிவித்துள் ளார். "தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் பா.ம.க., மீண்டும் இடம் பெறுவதால் வலுவாக இருக்கும்' என்ற கருத்தை முதல்வர் கருணாநிதியைச் சந்தித்த பின் மத்திய நிதியமைச்சர் சிதம்பரமும் நேற்று வெளிப்படுத்தியுள்ளார்.



மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், நேற்று காலை 11 மணியளவில் முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அவருடன் எல் அண்ட் டி நிறுவன தலைவர் நாயக், செயல் தலைவர் ரங்கசாமி, துணைத் தலைவர் சிவராமன் ஆகியோரும் சந்தித்துப் பேசினர். அரை மணி நேரம் இச்சந்திப்பு நடந்தது.




முதல்வரை சந்தித்துப் பேசிய பின் மத்திய அமைச்சர் சிதம்பரம், பா.ம.க., மீண்டும் சேர வாய்ப்பு இருப்பதைப் போன்ற சாதகமான பதிலை தெரிவித்துள்ளது, தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் கருணாநிதி நேற்று முன்தினம் அளித்த பேட்டியிலும் பா.ம.க., தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்."தி.மு.க., கூட்டணியில் இருந்து பா.ம.க., வெளியேறியது அவர்களாக ஏற்படுத்திய நிர்பந்தம். நாங்களாக அவர்களை வெளியேற்றவில்லை.ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் பா.ம.க., இருந்திருந்தால், கூட்டணி இன்னும் வலுவாக இருந்திருக்கும்' (இது எப்படி இருக்கு?)என அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.






கடந்த ஜூனில், பா.ம.க.,வை வெளியேற்றிய போது தி.மு.க., காட்டிய வேகமும், கோபமும் தற்போது குறைந்துள்ளதையே முதல்வரின் கருத்துக்கள் வெளிப்படுத்துகின்றன. அதற்கேற்ப "நாளையே மீண்டும் பா.ம.க., சேரலாம்' என்று அவர் கூறியிருப்பது, இக்கூட்டணி பிளவு ஏதுமின்றி இருக்க வேண்டும் என்று ஆசைப்படும் கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. தமிழக அரசியல் கூட்டணிக் கட்சிகள் இடையே பெரிய அளவில் திருப்பமும், பரபரப்பும் கொண்டதாக இக்கருத்து அமையும் என்ற சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

13 Responses to "செருப்பால் அடித்து குடைபிடிப்பது எப்படி? or விரட்டிவிடப் பட்ட பிச்சைக்காரன் தட்டிலிருந்து சோறு பிடுங்குவது எப்படி-விளக்கம் தருபவர் கலைஞர்!":

கோவி.கண்ணன் says:

இதெலலாம் அரசியலில் சகஜமப்பா...!

அப்பறம் காஞ்சி சாமியும், அம்மாவும் சேராம இருக்காங்களான்னு பாருங்க.

:)

Hariharan # 03985177737685368452 says:

காடுவெட்டி குருவுக்கு துணைமுதல்வர் பதவி அளிக்க கூட்டணி தர்மக் காவலன் கருணாநிதி சம்மதம் தெரிவித்த செய்தி பண்டிகைகால பரிசாக தமிழ் மக்களுக்குக் கிடைக்கப்போகிறது!

Anonymous says:

super... amma padam supper
enna sirippu vendi kidakku rascals

நல்லதந்தி says:

// கோவி.கண்ணன் said...
இதெலலாம் அரசியலில் சகஜமப்பா...!

அப்பறம் காஞ்சி சாமியும், அம்மாவும் சேராம இருக்காங்களான்னு பாருங்க.

:)
//

அரசியலில இது சகஜந்தானாலும்,இது பா.ம.க வையே மிஞ்சுகிற அந்தர் பல்டியா இருக்கே? :)

நல்லதந்தி says:

// Hariharan # 03985177737685368452 said...
காடுவெட்டி குருவுக்கு துணைமுதல்வர் பதவி அளிக்க கூட்டணி தர்மக் காவலன் கருணாநிதி சம்மதம் தெரிவித்த செய்தி பண்டிகைகால பரிசாக தமிழ் மக்களுக்குக் கிடைக்கப்போகிறது!//

ஆஹா இது மட்டும் நடந்த தமிழ்நாடு பீகாரையும் மிஞ்சி சரித்திரத்தில இடம் வாங்கிடும்.பின்னே மாவீரன் துணை முதல்வர் ஆகிறதுன்னா சும்மாவா?.
ஆனா இதையும் செய்வார் கலைஞர்.அவரோட பதவிக்கு ஆபத்துன்னா எந்த அளவுக்கும் இறங்குற மகானுபாவன் ஆயிற்றே!

Anonymous says:

// Arjun said...
super... amma padam supper
enna sirippu vendi kidakku rascals//

:)

Anonymous says:

பா.ம.க உஷாரா பதில் சொல்லியிருக்குப் பாத்தீங்களா?

Anonymous says:

உங்கள் செய்தியை விட படங்கள் சூப்பர்.

Anonymous says:

ஹையோ ஹையோ ....

எத்தனை கட்சியை சேர்த்தாலும் கலைஞர் மண்ணை கவ்வ போவது நிச்சயம். அழகிரி கம்பி என்ன போவது நிச்சயம்

Anonymous says:

இந்த கமெண்ட்ஸ்-ஐ படங்களுக்கு மேல் போடவும்.

ஜெயலலிதா படம் : என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு ராஸ்கல்ஸ்

மருத்துவர் ஐயா படம் : அடக்கருமமே ஏன்யா இந்த ஆளு இப்படி இருக்கான்?

கலைஞர் படம் : டிரவுசர் கிழியுற மாதிரி இருக்கு ... அதான் :(

Anonymous says:

GoviKannan, eppadi irundhalum J. Aatchi vandhaa ungaallu veeramani anga oodiduvaan nichayam.

நல்லதந்தி says:

//சூர்யா said...
உங்கள் செய்தியை விட படங்கள் சூப்பர்.//
வாங்க சூர்யா எங்கே ரொம்பநாளா ஆளைக் காணோம்.நல்ல இருக்கிங்களா?

நல்லதந்தி says:

//டிரவுசர் பாண்டி said...
இந்த கமெண்ட்ஸ்-ஐ படங்களுக்கு மேல் போடவும்.//

நீங்க சொன்ன மாதிரியே கமெண்ட்-ஐ போட்டுட்டேன்.டிரவுசர் பாண்டி.படங்களுக்கு மேல அல்ல கீழே! :)