Showing posts with label கலைஞர்டிவி. Show all posts
Showing posts with label கலைஞர்டிவி. Show all posts

தமிழ்ப்புத்தாண்டை கலைஞர் டிவியின் சிறப்பு நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டாடுங்கள்!

Posted on Tuesday, April 14, 2009 by நல்லதந்தி

sun raising


தமிழ்ப்புத்தாண்டை தை ஒண்ணாம் தேதி கொண்டாட வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்து, எராளமான திராவிட தமிழ்காக்கும் அடிப்பொடிகளின் ஏகோபித்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் பெற்ற தலைவர் கலைஞரின் டிவியில் இன்னிக்கு சித்திரை நன்நாள் சிறப்புக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளாம்.

தலைவரின் கொள்கையே தனிதான். வீட்டுக்கு ஒரு கொள்கை, நாட்டுக்கு ஒரு கொள்கை. தலைவர் மேடையில் கடவுள் இல்லை (இந்து மதக் கடவுள்) என்று கடவுள் நிந்தனை செய்வார்.மனைவியும், துணைவியும் கோவில் கோவிலாக பூஜை செய்து அதற்க்குப் பரிகாரம் செய்து கொண்டிருப்பார்கள். ஊருக்கெல்லாம் தமிழ் புத்தாண்டை மாற்றிக் காட்டினார். கலைஞர் டிவியில் அதற்கு சிறப்பு நிகழ்ச்சிகள். 

அதென்ன சித்திரை நன்நாள் பார்பனர்கள் கண்டு பிடித்த (!)தமிழ் வருடமே மாறிவிட்ட போது அந்த வருடம் உள்ளடக்கிய பார்பன மாதங்கள் ஏன் மாற்றப் படவில்லை. போய்த்தொலையட்டும்.

ஏற்கன்வே வினாயகர் சதுர்த்தி அன்று பிற டிவிக்களெல்லாம் கொண்டாத்தில் ஈடு பட்டு பணம் பார்த்த போது கலைஞர் டிவியும் சும்மா உட்கார்ந்து இருக்கவில்லை, அவர்களும் “விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள்” என்று ஒரு என்னவோ உளறி தேவையான அளவிற்க்கு பணம் பார்த்தார்கள்.

இந்த முறையும் சித்திரை நன்நாள் சிறப்பு நிகழ்ச்சிகளை என்று பினாத்தி காசு பார்க்கப் போகிறார்கள். கொளுகையே எங்கள் கோவணம் என்று ஜனங்களிடம் கதறும் கலைஞர், காசு விஷயத்தில் மட்டும், காசைத்தான் இறுக்கமாக முடிந்து கொள்வாரே தவிர கோவணத்தை யார் உருவினாலும் கண்டு கொள்ள மாட்டார், என்பது மக்களுக்கு நன்றாகத் தெரிந்த விஷயம் என்றாலும், நமக்குத்தான் பார்க்க கண்கூசுகிறது!.

அனைவருக்கும் உளம் நிறைந்த தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்!



நாளைக்கு எதற்கு விடுமுறை நாள்---கலைஞர் டிவிக்கு யாராவது சொல்லுங்களேன்!

Posted on Tuesday, September 2, 2008 by நல்லதந்தி



ஊரில் உள்ள தொலைக்காட்சிகளெல்லாம் நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்புத்திரைப் படம்,சிறப்பு குத்தாட்ட நிகழ்சிகள் என்று பணம் அள்ளும் வேலையை ஜருராக செய்து கொண்டிருக்கும் போது பகுத்தறிவு தொல்லைக்காட்சியான கலைஞர் டிவி மட்டும் சும்மா உக்காந்து பேன் பார்த்துக் கொண்டிருக்குமா?.ஆரம்பித்து விட்டது தன் சிறப்புக் கொடுமைகளை!.


ஆனால் தம்முடைய பகுத்தறிவிற்கு விநாயகர் சதுர்த்தி கொண்டாடலாமா?.பகுத்தறிவு படபடவென்று வேலை செய்ய,பணம் சம்பாதிக்கும் குறுக்கறிவு குத்தாட்டம் போட,தான் ஏற்கனவே தமிழ்ப்புத்தாண்டுக்கு கண்டுபிடித்து வைத்திருந்த அதே ஃபார்முலாவை கையில் எடுத்து விட்டது.


மற்ற டிவிக்களில் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் கொண்டாடும் போது பகுத்தறிவு டிவி மட்டும் சித்திரை நன்னாள் சிறப்பு நிகழ்ச்சியைக் கொண்டாடியது.அது என்னங்க சித்திரை நன்னாள்ன்னு நமக்கு மண்டை காய்ந்தது தான் மிச்சம்.தமிழ்ப் புத்தாண்டை மாற்றியதை வரவேற்ற பகுத்தறிவு மாமணிகள் யாரும் அது என்ன சித்திரை முதல் நாள் சிறப்பு நிகழ்ச்சி என்று கேட்கவில்லை.வேறு யாராவது கேட்டிருந்தால் கூட இவர்களே முன் நின்று அதற்கு சப்பைகட்டு கட்டியிருப்பார்கள்!.


இப்போது பகுத்தறிவு கலைஞர் டிவிக்கு நாளை விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகளாம்!.இந்தியாவிலேயே நாளைக்குத்தான் முதன்முறையாக விடுமுறை விடுகிறார்களா?அல்லது வருடத்திற்கு ஒரு முறைதான் விடுமுறை விடுகிறார்களா?.இதற்குமுன் விட்டதில்லையா?.என்று பகுத்தறிவாளர்கள் கேள்வி கேட்கமாட்டார்கள்.எனென்றால் பதில் கிடைக்காத கேள்விகளை கலைஞரிடம் கேட்க கூடாது என்பதுதான் பகுத்தறிவு என்று அவர்களுக்குத் தெரியும்!.


கலைஞர் டிவியிடம் பகுத்தறிவை விட பட்டறிவு அதிகம் இருக்கிறது.இல்லையென்றால் விநாயகர் சதுர்த்தியை,விநாயகரைத் தவிர்த்து விட்டு விடுமுறை நன்னாளாக அறிவித்து விளம்பரத்தில்..............ஸ்..ஸ்ஸ்ஸ்... அப்பா....எத்தனை "வி"...... ..காசு அள்ளும் கலையில் தேறியிருப்பார்களா?