தலைவரின் கொள்கையே தனிதான். வீட்டுக்கு ஒரு கொள்கை, நாட்டுக்கு ஒரு கொள்கை. தலைவர் மேடையில் கடவுள் இல்லை (இந்து மதக் கடவுள்) என்று கடவுள் நிந்தனை செய்வார்.மனைவியும், துணைவியும் கோவில் கோவிலாக பூஜை செய்து அதற்க்குப் பரிகாரம் செய்து கொண்டிருப்பார்கள். ஊருக்கெல்லாம் தமிழ் புத்தாண்டை மாற்றிக் காட்டினார். கலைஞர் டிவியில் அதற்கு சிறப்பு நிகழ்ச்சிகள்.
அதென்ன சித்திரை நன்நாள் பார்பனர்கள் கண்டு பிடித்த (!)தமிழ் வருடமே மாறிவிட்ட போது அந்த வருடம் உள்ளடக்கிய பார்பன மாதங்கள் ஏன் மாற்றப் படவில்லை. போய்த்தொலையட்டும்.
ஏற்கன்வே வினாயகர் சதுர்த்தி அன்று பிற டிவிக்களெல்லாம் கொண்டாத்தில் ஈடு பட்டு பணம் பார்த்த போது கலைஞர் டிவியும் சும்மா உட்கார்ந்து இருக்கவில்லை, அவர்களும் “விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள்” என்று ஒரு என்னவோ உளறி தேவையான அளவிற்க்கு பணம் பார்த்தார்கள்.
இந்த முறையும் சித்திரை நன்நாள் சிறப்பு நிகழ்ச்சிகளை என்று பினாத்தி காசு பார்க்கப் போகிறார்கள். கொளுகையே எங்கள் கோவணம் என்று ஜனங்களிடம் கதறும் கலைஞர், காசு விஷயத்தில் மட்டும், காசைத்தான் இறுக்கமாக முடிந்து கொள்வாரே தவிர கோவணத்தை யார் உருவினாலும் கண்டு கொள்ள மாட்டார், என்பது மக்களுக்கு நன்றாகத் தெரிந்த விஷயம் என்றாலும், நமக்குத்தான் பார்க்க கண்கூசுகிறது!.
அனைவருக்கும் உளம் நிறைந்த தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்!
15 Responses to "தமிழ்ப்புத்தாண்டை கலைஞர் டிவியின் சிறப்பு நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டாடுங்கள்!":
இந்தக் கண்றாவியை அனுபவித்துக் கொண்டே அவருக்கு குத்தித் தள்ளும் தமிழன்- ஒரு (ருபாய்) சோற்றாலடித்த பிண்டம்!
தமிழ்மணத்தில் இந்த இடுகைக்குப் பதிலாக இதற்கு முந்தைய இடுகைத் தெரிகிறது!.என்ன காரணம் என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்வீர்களா! :)
சித்திரை உள்ளிட்ட தமிழ் மாதங்களை பார்ப்பனர் கண்டுபிடுத்தார்களா? உங்கள் அறியாமைக்கு வருந்துகிறேன் ...
//சித்திரை உள்ளிட்ட தமிழ் மாதங்களை பார்ப்பனர் கண்டுபிடுத்தார்களா? உங்கள் அறியாமைக்கு வருந்துகிறேன் ..//
அனானி அவர்களே தமிழ்மாதங்களை பார்பனர்கள் கண்டு பிடித்தார்களென நான் சொல்லவில்லை!. அந்த இடத்தில் (!) என்று ஒரு ஆச்சரியக் குறி போட்டிருந்தேனே கவனிக்க வில்லையா?. அப்படிச் சொல்பவர்கள் தமிழ்ப்புத்தாண்டு மாற்றியதற்க்காக துள்ளிக்குதித்து தமிழுக்கு ஏற்பட்ட களங்கம் நீங்கியது என்று பெருமிதப்பட்ட தி.க. கும்பல்களே!.அதுவும் நன்னன் என்பவர் தமிழ் வருடங்கள் பிறந்தகதை அருவறுப்பான கதை என்று ஆரம்பித்து பார்பன வசை பொழிவதை நீங்கள் கண்டதில்லையா?
\\கொளுகையே எங்கள் கோவணம் என்று ஜனங்களிடம் கதறும் கலைஞர், காசு விஷயத்தில் மட்டும், காசைத்தான் இறுக்கமாக முடிந்து கொள்வாரே தவிர கோவணத்தை யார் உருவினாலும் கண்டு கொள்ள மாட்டார், என்பது மக்களுக்கு நன்றாகத் தெரிந்த விஷயம் என்றாலும்,\\
சூப்பர்..
வாழ்த்துக்கள்...
நண்பரே, உங்க பதிவு மிகவும் அருமை வோட்டும் போட்டாச்சு
நானும் ஒரு பதிவு போட்டு இருகிறேன் கண்டிப்பாக பிடிக்கும்,
படித்து பிடித்தால் வோட்ட போடுங்க :-)
வருடபிறப்பை தைக்கு பதிலாக வேறு மாதத்திற்கு மாற்றி இருந்தால் இன்னொரு நாள் லீவு எக்ஸ்ட்ரா கிடைச்சிருக்கும்!
ராகவன்,தமிழினி,அறிவே தெய்வம், சுரேஷ், வால்! அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்!.சுரேஷ் உங்களுக்கு ஓட்டுப்போட்டாச்சி!
அன்பு ராம் ,
இனிய தமிழ் புத்தாண்டு நல வாழ்த்துக்கள் .
அன்புடன்,
பாஸ்கர்
நன்றி! பாஸ்!. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.இந்த வருடம் இனிய வருடமாக அனைவருக்கும் வாழ்த்துகள்!
இது அவர் அவரது துணைவி,மனைவிக்குக் கொடுக்கும் மரியாதைங்கோ..
நம்ம மக்களுக்கு வருடப் பிறப்பு, தீபாவளி, பொங்கல், குடியேத்தம் எல்லாமே டிவி பொட்டியாண்டதான்.
லீவு விட்டால் டிவி பார்க்கலாம் - இதுதான் நம்ம மக்களின் கண்ணோட்டம்.
இலவச டிவி கொடுத்து மக்களின் எண்ணத்தை ஈடுகட்டினார்ல. அதை என்ன சொல்றீங்க.
தலைக்கு ஒரு கம்ப்யூட்டர் கொடுத்தா எல்லோரும் அறிவாளி ஆயிடுவாங்க. ஒரு பயலும் ஓட்டுப்போடமாட்டான். அதனால டிவியைக் கொடுத்து புத்தியைக் கெடுத்துடுவோம்னு ஐடியா பண்ணிட்டார். அது தெரியாமல் எல்லாரும் அவர்க்கு ஓட்டு பொட்டு ஏத்தி வைச்சுட்டோம்ல..
என்ன சொல்றீங்க
6 குடி எக்கேடு கெட்டா என்ன. டிவி பொட்டியாண்ட குந்திக்கினு திரிவோம்னு மக்கள் சாலியா கீறாங்க.
//மனைவியும், துணைவியும் கோவில் கோவிலாக பூஜை செய்து அதற்க்குப் பரிகாரம் செய்து கொண்டிருப்பார்கள்.
அனைவருக்கும் உளம் நிறைந்த தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்!
i have become ur follower unga pera nalla irukuya thanthi athuvum nalla thanthi ha ah super
வாங்க! தமிழ்(மண நட்சத்திரம்)நெஞ்சம்! .இந்த தடவை ஓட்டை மாத்திப் போட்டு பார்க்கலாம். வாங்க சின்னபையன் தொகுதி நிலவரமெல்லாம் எப்படி இருக்கு!. நீங்க தான் ஜெயிப்பீங்கன்னு பிரியாணி சாப்பிட்ட ஜனங்க பேசிக்கிறாங்க! :))
வாங்க சுரேஷ் உங்க அன்புக்கு நன்றி!. அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
:))
Post a Comment