Showing posts with label செய்தி. Show all posts
Showing posts with label செய்தி. Show all posts

மின்சாரத்தை சேமிக்கும் வழிமுறைகளும் அது மிச்சமாவதால் ஏற்படும் நன்மைகளும்! படங்களுடன்!

Posted on Saturday, September 13, 2008 by நல்லதந்தி

மின்சாரத்தை பயன்படுத்துவதில் சிக்கனத்தை கடைபிடியுங்கள் என்று பொதுமக்களுக்கு மின்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
அனைத்து மின் நுகர்வோர்களும் மின் உபயோகத்தில் சிக்கனத்தை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் சில வழிமுறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளது.




மின்சிக்கனத்தினால் ஏற்படும் நன்மை - 1


அதன் விவரம் வருமாறு:-ஏ.சி.யை தவிர்க்க...*அத்தியாவசிய தேவைக்கு மேல் உபயோகிக்கும் மின் விளக்குகள், சாதனங்களை நிறுத்திவைக்கவும். *அலங்கார, ஆடம்பர மின் விளக்குகள் உபயோகத்தை தவிர்க்கவும். *குளிர்சாதன உபகரணம் உபயோகத்தை (ஏ.சி.) குறைத்துக்கொள்ளவும். குறிப்பாக மாலை 6மணிமுதல் இரவு 10மணிவரை குளிர்சாதனப்பெட்டி உபயோகத்தை அவசியம் தவிர்க்கவும்.

*தொழிற்சாலைகளில் மாலை 6மணிமுதல் இரவு 10மணிவரை மின் உபயோகத்தை தவிர்க்கவும்.இயற்கை சக்தி*பழுதற்ற மின்சாதனங்களையும் கையடக்க குழல் விளக்குகளையும் உபயோகித்து மின் சிக்கனத்தை கடைபிடிக்கவும்.*இயற்கை சக்திகளை பயன்படுத்தி மின் உபயோகத்தை குறைக்கவும்.

இது தொழிற்சாலைக்கும் விவசாயிகளுக்கும்..
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும்படி அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.



மின்சிக்கனத்தினால் ஏற்படும் நன்மை - 2

அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்கள் படிப்பதற்கும், வீடுகளில் மாலை நேர தேவைக்கும் மின்சாரம் வழங்குவது அரசின் முக்கிய நோக்கம்.

எனவே, வர்த்தக மையம் மற்றும் விழாக்களில் தேவையற்ற ஆடம்பர விளக்குகளை அமைக்க வேண்டாம் என்றும், விவசாயத்துக்கும், தொழிற்சாலைகள் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மின்சாரத்தை பயன்படுத்துவதை தவிர்க்கும்படியும் பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது அரசு அலுவலகங்களுக்கு...

மின்சாரத்தை சிக்கனமாக கடைபிடிப்பதற்கான நிபந்தனைகள் அடங்கிய நோட்டீஸ் அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது.
அதில் உள்ள நிபந்தனைகளை கண்டிப்பாக கடைபிடிக்கவும், தொடர்ந்து கண்காணிக்கவும் அறிவுரை வழங்கி அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.


மின்சிக்கனத்தினால் ஏற்படும் நன்மை - 3

தேவையற்று எரியும் லைட் மற்றும் ஃபேன்களை நிறுத்தி வைக்க வேண்டும். அலுவலக மேஜைக்கு தேவையான லைட் மற்றும் ஃபேன் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். பகலில் அலுவலக அறைக்கு போதுமான அளவு வெளிச்சம் இருக்கும் பட்சத்தில், தாழ்வாரம் மற்றும் நடைபாதையில் இருக்கும் லைட்களை நிறுத்தி வைக்கவும்.

இரண்டு ஏ.ஸி., இருக்கும் அறைகளில் ஒன்றை மட்டுமே இயக்கவும். அலுவலர்கள் இல்லாத சமயங்களில் அதையும் நிறுத்தி வைக்கவும். ஏ.ஸி., அறையில் 22 டிகிரி செல்சியஸ் நிலைக்கு அதிகமான நிலையில் பராமரிக்கும்போது, ஐந்து முதல் ஏழு சதவிகிதம் மின்சாரம் சிக்கனப்படுத்தப்படுகிறது. எனவே, அறையின் வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ்க்கு மேல் பராமரிக்கவும். ஏ.ஸி., செய்யப்பட்ட அறையில் ஃபேன் பயன்படுத்தும்போது, குளிர்ந்த காற்றோட்டம் அறை முழுவதும் பரவுகிறது. அதனால் ஏ.ஸி., குறைந்த மின்சாரத்தை எடுத்துக்கொள்கிறது.



மின்சிக்கனத்தினால் ஏற்படும் நன்மை - 4

கம்ப்யூட்டர் மற்றும் அலுவலக பயன்பாட்டு கருவிகளை பயன்படுத்தாத போது நிறுத்தி வைக்கவும். கம்ப்யூட்டர் ஸ்கீரின் சேவர் திரைகளை பாதுகாக்க மட்டுமே உதவுகிறது. அவற்றால் மின்சக்தி சேமிக்கப்படுவதில்லை. அதனால் தேவைக்கேற்ப இயக்கியும், நிறுத்தியும் பயன்படுத்தினால், மின்சாரம் சிக்கனமாவதுடன், கம்ப்யூட்டருக்கும் ஆயுளை தரும். கம்ப்யூட்டர், மானிட்டர், நகலெடுக்கும் கருவி ஆகியவற்றை "ஸ்லீப் மோடு' நிலையில் வைப்பதால் 40 சதவிகிதம் வரை மின்சாரத்தை சேமிக்க முடியும். நகலெடுக்கும் இயந்திரங்களை தேவையான நேரத்தில் மட்டும் பயன்படுத்தவும்.

அனைத்து தேவைகளையும் ஒருங்கிணைத்து செய்யவும். ஏனெனில் அடிக்கடி இயக்குவதும், நிறுத்துவதும் அல்லது மின் இணைப்பிலேயே வைத்திருப்பதும் மின் தேவையை அதிகரிக்கும். லேப்டாப் மற்றும் மொபைல்ஃபோன்களுக்கு சார்ஜ் ஏறிய பின்பும் மின் இணைப்பிலேயே வைத்திருப்பதை தவிர்க்கவும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் இடம்பிடித்துள்ளன.


எல்லாதரப்பினருக்கும் அறிவுரை சொன்ன மின் துறை, அரசியல் கட்சிகளுக்கு ஏன் அறிவுரை சொல்லவில்லை என கேட்கும் அப்பாவியா நீங்கள்!! அவர்களுக்காகத்தானே இந்த மின்சிக்கனமே!.மேலே உள்ளப் படங்களைப் பாருங்கையா!



(படங்கள்:சம்மந்தப் பட்டவர்களுக்கு நன்றி!)

கருணாவுடன் கொட்டமடித்த பானு!.பள்ளியறை முதல் படுகொலை வரை!

Posted on Friday, September 12, 2008 by நல்லதந்தி


இணைந்த கைகள்! (பள்ளியறை முதல் படுகொலை வரை!)

இப்படியும் நடக்குமா?? என்று சொல்வதே.அபத்தம் இப்படி நடக்காமல் இருந்து இருந்தால்தான் ஆச்சரியம் என்கிற அளவிற்க்கு சமூகத்தில் புரையோடிவிட்ட செயல் இது!பிரபலமானவரின் உறவினர்களால் நடந்து இருப்பதால் அதிக வெளிச்சம் பெறுகிறது.பணவெறி ஒரு குடும்பப் பெண்ணைக் கூட படுக்கை அறைக்கும் படுகொலை வரைக்கும் தள்ள முடியும் என்பதற்கு உதாரணம் இது!


விஜயனைக் கொலை செய்ய கருணாவை சம்மதிக்க வைக்க வேண்டும் என்பதற்காக அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் பானுமதி போயுள்ளார். அவருடன் சேர்ந்து இரவு விருந்து, கிளப்களுக்குப் போவது, நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவது என தடம் புரண்டு போயுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.எம்.ஜி.ஆர். உறவினர் விஜயன் கொலை வழக்கில், அவரது மனைவி சுதாவின் கூடப் பிறந்த தங்கையான பானுமதி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நியமித்த கூலிப் படையின் தலைவனான கருணா என்கிற கருணாகரன் உள்ளிட்ட பலரும் கைதாகியுள்ளனர்.
இந்த நிலையில் போலீஸ் விசாரணையில் பானுமதியின் மறுபக்கம் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது செயல்பாடுகள் எம்.ஜி.ஆரி.ன் புகழுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாதவையாக, அவற்றைக் குலைக்கும் வகையில் இருப்பது போலீஸாரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.புவனா மூலம் கருணாவின் அறிமுகம் பானுமதிக்கு கிடைத்ததும், அவரை வைத்து விஜயனை தீர்த்துக் கட்ட தீர்மானித்தார். ஆனால் ஆரம்பத்தில் கருணா ஒத்து வராதது போல நடித்துள்ளார். பானுமதியின் நிலையைப் பார்த்த அவர், அவர் மூலம் விஜயனை தீர்த்துக் கட்டி விட்டு, பானுமதியின் வசம் இருந்த பள்ளியைக் கைப்பற்றி விட வேண்டும் என்பதுதான்.இதனால் ஆரம்பத்தில் ஒத்து வராதது போல பிகு செய்துள்ளார் கருணா. இதையடுத்து அவரிடம் நைச்சியமாக நடந்து கொண்டால்தான் கருணா ஒத்து வருவார் என புவனா கூறியுள்ளார். இதையடுத்து கருணாவின் விருப்பம் போல நடக்க ஆரம்பித்துள்ளார் பானுமதி.அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்துள்ளார். கருணாவுடன் தினசரி இரவு ஷோ படம் பார்க்கப் போவது, கிளப்களுக்குப் போவது, விருந்துகளில் பங்கேற்பது, நட்சத்திர ஹோட்டல்களில் போய் தங்குவது என அத்தனையையும் செய்துள்ளார். கருணா கேட்ட அனைத்தையும் கொடுத்துள்ளார் பானு.சாதாரண அக்கா - தங்கை சண்டை, கூலிப்படை, கொலை என போயுள்ளது எம்.ஜி.ஆர். பக்தர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நன்றி...thatstamil

தயாளு அம்மையாரைப் பகுத்தறிவாளராக்கி சாதனை செய்ததால் கலைஞருக்கு பகுத்தறிவு ஸ்வார்டு! மக்கள் மகிழ்ச்சி வெள்ளதில் செத்தனர்!

Posted on Monday, September 8, 2008 by நல்லதந்தி



பெரியார் பன்னாட்டு மையம் சார்பில் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு ``சமூக நீதிக்கான வீரமணி விருது'' வழங்கும் விழா நேற்று பெரியார் திடலில் நடந்தது. மையத்தின் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் இந்த விருதையும், ரூ.1 லட்சம் காசோலையையும் முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் வழங்கினார்.


விழாவில் முதல்-அமைச்சர் கருணாநிதி பேசியதாவது:-இங்கே வீரமணி பேசும் போது இது விருதல்ல, போர்வாள் என்றார். ஆங்கிலத்தில் இந்த சொல்லை மாற்றிச் சொன்னால் இது அவார்டு அல்ல, ஸ்வார்டு. இந்த வாளை நான் பெரியாரிடத்திலே பெற்று பல்லாண்டு காலம் பகுத்தறிவுவாதியாக, சுயமரியாதைக்காரனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அதனால் தான் நீங்களும் எனக்கு இந்த விருதை வழங்கியிருக்கிறீர்கள்.


இவருடைய வயதென்ன, பதவி என்ன, இவர் போய் வீரமணி பெயரால் ஒரு விருது வாங்குவதா? என்று சிண்டு முடிகிறவர்கள் பேசக்கூடும், எழுதக் கூடும். தகுதியானவர் பெயரால் தான் இந்த விருதை வாங்கியிருக்கிறேன்.


சுயமரியாதை, சமூக நீதியில் அக்கரையுள்ளவன் என்பதால் மட்டுமல்ல, இதற்காக தொடர்ந்து போராடுபவன் என்பதற்காக இந்த விருது வழங்கியிருப்பதை நான் மறந்து விடவில்லை. வெளிநாடுகளில் வாழ்கிற நண்பர்கள் என்றாலும் நம்மை இணைக்கிற கொள்கை உள்ளவர்களால் வீரமணி பெயரால் இந்த விருது வழங்கப்படுகிறது.


1920-ம் ஆண்டிலிருந்து நடந்து கொண்டிருக்கிற சமூக நீதிக்கான போரை வேகப்படுத்தி பல வெற்றிகளை பெற்ற பெரியார், அண்ணா ஆகியோரை தலைவர்களாக ஏற்றுக் கொண்டு களத்தில் நின்ற, நின்று கொண்டிருக்கிற எங்களுக்கும் இந்த உரிமை உண்டு. இந்த போராட்டம் முற்று பெற்றுவிட்டதா என்றால் இல்லை. இன்னும் போராடு என்று ஊக்கப்படுத்துகிற விதத்தில் தான் இந்த விருதை தந்திருக்கிறீர்கள்.


பெரியாருக்கு பின்னர் இந்த இயக்கம் அழிந்துவிட்டதா - போய்விட்டதா - போகக் கூடாதா - என்று எண்ணுகிறவர்களுக்கு பெரியாருக்கு பின்னர் வீரமணி - அவருக்கு பின்னரும் ஒரு படையை உருவாக்கி வைத்திருக்கிறார் என்பதை பார்க்கும் போது பெரியாரின் கொள்கைகள் என்றைக்கும் சாயாது, அழியாது என்று பெருமிதத்துடன் கூறிக் கொள்கிறேன்.


மாணவப் பருவத்திலேயே எப்படியோ என் உள்ளத்தில் இந்த சுயமரியாதை ஒட்டிக் கொண்டு என்னை வளர்த்திருக்கிறது. மூட நம்பிக்கைகள் உள்ள சின்ன ஊரில் பிறந்தவன் நான். அங்கிருந்து வந்து பெரியாரால், அண்ணாவால் உருவாக்கப்பட்டு இப்போது உங்கள் முன் உட்கார்ந்திருக்கிறேன் என்றால் இது நான் பெற்ற பேறு அல்ல, பெரியார் தந்த அறிவு, அதன் விளைவு. இவைகளை எல்லாம் நானே தான் சிந்தித்தேன், நானே தான் செய்தேன் என்று சொல்வது சுலபம். ஆனால் எதிர்காலத்தில் வரலாற்றில் ஒரு பொய்யை சொன்னவன் என்ற நிலைக்கு ஆளாக விரும்பவில்லை.நான் தயாரிக்கப்பட்டவன். பெரியாரால் தட்டி தட்டி சீர் செய்யப்பட்டவன். அண்ணாவால் நான் வலுப்பெற்றவன். நீங்கள் தருகிற விருதை பெறுகிற அளவுக்கு வளர்ந்திருக்கிறேன் என்றால் எப்படிப்பட்ட உற்றார், உறவினர்களுக்கு மத்தியில் வளர்ந்தேன் என்று சொன்னால் தான், நாமும் பெரியார் விருது பெறலாம் என்று எண்ண முடியும்.


என் தந்தை முத்துவேலர் பிறக்கும் போதே அவரது தந்தை இறந்துவிட்டார். ஒவ்வொரு வருடமும் அவர் தனது தந்தைக்கு திவசம் புரோகிதரை வைத்து கொடுப்பார். நாம் வைக்கும் உணவை அவர் உண்டு நமக்கு ஆசி வழங்குவதாக ஒரு நம்பிக்கை. இதை நான் பள்ளி சிறுவனாக இருந்த போதே எதிர்த்தவன். இதற்காக சில நேரம் அடியும் வாங்கியிருக்கிறேன்.ஒரு முறை புரோகிதர் வாயில் வெற்றிலை போட்டுக் கொண்டு மந்திரத்தை உளறிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த எனது தந்தை என் மகன் சொல்வது உண்மை தான் போலிருக்கிறது, எழுந்து ஓடிவிடு, இனி என் வீட்டில் திவசம், திதி எல்லாம் இல்லை என்றார்.


திருவாரூரில் ஒரு பயங்கர சடங்கு ஓங்காரம் என்று நடக்கும். நடுநிசியில் 10 பேர் கூடி `ஓம்' என்று கூச்சலோடு வலம் வருவார்கள். இந்த ஓங்காரத்தை மடக்குபவர்கள் ரத்தம் கக்கி சாவார்கள் என்று ஒரு மூடநம்பிக்கையும், பயமுறுத்தலும் உண்டு. ஒரு நாள் இயக்க நண்பர்கள் இதை மறிக்கப் போகிறோம் என்று அறிவித்து மறித்தார்கள். அதோடு கலைந்து சென்றவர்கள், அதன் பின்னர் திருவாரூரில் ஓங்காரமே கிடையாது.எனது உறவினர் சொர்ணத்தின் தந்தை கிருஷ்ணமூர்த்தி பிள்ளை துர்க்கை அம்மனின் பக்தர். அவர் ஒரு மந்திரவாதி எதிர்காலம் பற்றி எல்லாம் சொல்கிறார். அவரிடம் உன்னைப்பற்றி விசாரிக்கலாம் என்றார். நான் மறுத்தும் கேட்காமல் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டு அவர் மந்திரவாதியிடம் பேசிக் கொண்டிருந்தார். மந்திரவாதியுடன் அவரது மனைவியும் வந்திருந்தார்.


கிருஷ்ணமூர்த்தி மந்திரவாதியிடம் எங்களுக்கு எத்தனை வீடுகள் இருக்கிறது என்று சொல்லுங்கள் பார்க்கலாம் என்று கேட்க மந்திரவாதி அவரது மனைவியை பார்க்க, அந்த பெண் என்னைப் பார்க்க, நான் 5 விரலை காட்டினேன். அவரும் மந்திரவாதிக்கு சைகையில் 5 விரலை காட்ட மந்திரவாதி 5 வீடுகள் இருப்பதாக தவறாக கூறினார். அடுத்து எத்தனை மகன்கள் என்ற கேள்விக்கும் அதேமுறையில் ஒரு மகன் என்று தவறாக கூற இவன் சொல்வது சரிதான், எல்லாம் ஏமாற்று வேலை என்று கூறி மந்திரவாதியை விரட்டி விட்டார். அவர் இந்த குளறுபடிக்கு நான் தான் காரணம் என்று தெரிந்து கொண்டு இந்த பையன் 6 மாதத்தில் செத்துவிடுவான் என்று கூறிவிட்டு சென்று விட்டான்.இப்படி சுயமரியாதை ஏற்படக்கூடிய அளவுக்கு என்னிடம் மட்டுமல்ல, என்னை சுற்றியுள்ள பலருக்கும் ஏற்படக் கூடிய பல சம்பவங்கள் நடந்திருக்கிறது.


என்ன முக்கியமான காரணம் - நான் எஸ்.எஸ்.எல்.சி. தான். அதிலும் தோல்வி. இதற்காக யாரும் நாமும் எஸ்.எஸ்.எல்.சி. தேறவில்லை, நாமும் முதல்-அமைச்சர் ஆகிவிடலாம் என்று நினைக்கக் கூடாது. இந்த நிலைக்கு நான் வரக் காரணம் கருத்துக்கள், பகுத்தறிவு, பெரியார் ஏற்றி வைத்த சுடர் ஒளி.ஒரு இசைவாணர் குடும்பத்தில் பிறந்தவன். எனது தந்தை என்னை ஒருவரிடம் நாதசுரம் பயில அனுப்பினார். நான் ஒரு நாள் சென்றுவிட்டு மறுநாள் இனி நான் அங்கு போகமாட்டேன் என்று கூறிவிட்டேன். காரணம் கேட்ட போது அவர் குருநாதர் - ஆனால் அங்கு அய்யர், முதலியார் என்று சிலர் வந்தால் அவர் தன் தோளில் அணிந்திருக்கும் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொள்கிறார். இது குருநாதருக்கு அவமானம் என்றேன்.


அதன் பின்னர் தான் என்னை திருவாரூரில் ஒரு பள்ளிக்கு அனுப்பினார்கள். அங்கு 8-ம் வகுப்பில் சேரவேண்டும் என்ற போது தேர்வு வைத்தனர். அதில் தேர்வாகாமல், 7-ம் வகுப்புக்கு தேர்வு வைக்க அதிலும் தேர்வாகாமல், 6-ம் வகுப்புக்கு தேர்வு வைக்க அதிலும் தேர்வாகாமல், இறுதியாக 5-ம் வகுப்பில் சேர்த்துக் கொண்டனர். அதுவும் இதில் தேர்வாக்கவில்லை என்றால் எதிரில் உள்ள குளத்தில் குதித்து உயிரை விட்டுவிடுவேன் என்று பயமுறுத்தி சேர்ந்தேன்.


துண்டை தோளில் போட்டால் என்ன? இடுப்பில் கட்டினால் என்ன? இதில் என்ன சுயமரியாதை இருக்கிறது என்று நான் அப்போது எண்ணியிருந்தால், நான் இன்று இடுப்பில் துண்டை கட்டிக் கொண்டிருப்பேன். இந்த விருது பெறுவது சாதாரண விஷயமல்ல. அதுவும் திராவிட கழக தலைமைக் கழகத்தில் கொடுத்த இந்த விருது - விருதல்ல - போர்வாள் என்று மீண்டும் கூறிக் கொள்கிறேன்.இவ்வாறு கருணாநிதி கூறினார்.

10மணிக்கு கலைஞர் கவிதை|||10 மணிக்கு கரண்ட் போகணும் பெண்கள் கதறல்!

Posted on Sunday, September 7, 2008 by நல்லதந்தி



கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 10 மணிக்கு தமிழருவி என்ற தலைப்பில் இலக்கிய பாடல்களை எளிய கவிதை நடையில் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கி வருகிறார்.

அதன் ஒருபகுதியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு தாம் படைத்த சங்கத்தமிழிலிருந்து முதல்-அமைச்சர் கருணாநிதி `கள் உண்ட கடுவன்!' என்ற கவிதையை வழங்குகிறார்.

சங்கத்தமிழ்ப் புலவர் கபிலர் பாடிய அகநானூற்றுப் பாடலை, கடுவன் ஒன்று கள் உண்டு மயங்கிக் கண்ணுறங்கிக் கிடந்த காட்சியைக் கண்ட புலவர் கபிலர், அதன் காரணத்தை ஆராய்ந்து தெளிந்த நிகழ்வைத் தன் கற்பனைத் தேரோட்டி அற்புதக் கவிதையாய் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்குகிறார்.

இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் கருணாநிதியின் சங்கத்தமிழிலிருந்து `பாறையில் உருகுது பசு வெண்ணெய்!' என்ற கவிதையை வழங்குகிறார். வணங்காமுடி எனும் சங்க காலத்துப் பெருவீரன் தனக்கு அறிவுரை நல்கிடும் அன்பு நண்பனின் செயலைப் பாறையில் உருகும் பசு வெண்ணெய்க்கு உவமைகாட்டிக் குறுந்தொகையில் புலவர் வெள்ளிவீதியார் பாடிய பாடலை, காதல் துயருற்றக் காளை ஒருவனின் மனநிலையை நெஞ்சம் நெகிழ வைக்கும் கவிதைப் புதையலாய் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்குகிறார்.

மேற்கண்ட தகவலை கலைஞர் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.


அடுத்த செய்தி!


தமிழகத்தில் மின்சார தட்டுப்பாட்டை சமாளிக்க மேலும் கூடுதலாக 200 மெகாவாட் மின்சாரம் வாங்கப்படுகிறது. காலை 10 மணிக்கு முன் மின்தடை செய்யப்படுவதால் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்வது பாதிக்கப்படுகிறது என பெண்கள் கூறி உள்ளனர்.

தமிழ்நாட்டில் பருவமழை பொய்த்தது, காற்று வீசுவது குறைந்தது போன்ற காரணங்களால் மின்சார உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதல் மின்சாரத்தை வாங்க மின்சார வாரியம் பல்வேறு வழிகளில் நடவடிக்கை எடுத்து வருகிறது.மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி டெல்லி சென்று மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு கூடுதலாக 600 மெகாவாட் மின்சாரம் பெற்று வந்துள்ளார். இது மின் தட்டுப்பாட்டை ஓரளவுக்கு சமாளிக்க உதவும்.

காலை 10 மணிக்கு முன்பு மின்தடை செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் பொதுமக்கள் பலரும் புகார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்களுக்கும், வேலைக்கு செல்பவர்களுக்கும் காலையிலேயே சமையல் செய்து உணவு கொடுத்து அனுப்புவது காலை நேர மின்வெட்டால் வெகுவாக பாதிக்கப்படுகிறது என்று பெண்கள் கூறுகிறார்கள்.

குறிப்பாக கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் மிகவும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே காலை 10 மணிக்கு முன்பு மின்வெட்டு அமல்படுத்துவதை தவிர்த்து, 10 மணிக்கு மேல் மட்டுமே மின்வெட்டை அமல்படுத்த வேண்டும் என்று பெண்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆளை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே!

Posted on Thursday, September 4, 2008 by நல்லதந்தி

உருப்படியான யோசனை!.

ஒரு கூட்டத்துக்கோ, விருந்துக்கோ புறப்படும் போது,அங்கே சந்திக்கப்போகும் ஒவ்வொருவரிடமும் கவனம் செலுத்துவது என்று தீர்மானத்துக் கொள்ளுங்கள்.

ஒருவர் உங்களுக்கு அறிமுகம் ஆகும் போது,அந்தப் பெயரைச் சரியாகத் தெரிந்து கொள்ளுங்கள்.அநேக தடவைகளில் அறிமுகம் என்பது அவசர அவசரமாக முடிந்துவிடும்.முணுமுணுவென்று ஏதோ சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள்.கூச்சப் படாமல் ஒரு தடவைக்கு இரண்டுதடவையாக அந்தப் புது நண்பரையே,அவர் பெயரைக் கேளுங்கள்.

அறிமுகம் ஆனவருடைய பெயர் அடிக்கடி பேச்சில் வ்ரும்படி உரையாடுங்கள்.அறிமுகம் ஆகும் போது "வணக்கம்" என்று வெறுமே மொட்டையாகச் சொல்வதை விட "வணக்கம் சரவணன்"..என்று சொல்வது நலம்.

முகத்தைக் கூர்ந்து கவனிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.முகத்தின் அமைப்பு,வடிவம் இவற்றை மனதில் பதித்துக் கொள்ளுங்கள்.காது,மூக்கு, முதலியவற்றின் அடையாளங்களில் விசேஷ கவனம் செலுத்துங்கள்.

பெயரைச் சட்டென்று நினைவுக்கு கொண்டு வரக்கூடியபடி அதற்குத் தொடர்பான இன்னொன்றையும் நினைவு படுத்திக் கொள்ளுங்கள். ஒருவர் "வீராசாமி" என்று பெயர் கொண்டிருந்தால்,"அமாவாசை அமைச்சர் ஆற்காடு வீராசாமி" என்று மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.இந்த கற்பனை எவ்வளவுக்கெவ்வளவு பித்துக்குளித்தனமாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு மேல்!.

நீங்கள் சந்திக்கும் மனிதர்களைப் பற்றிய சிறு சிறு குறிப்புகளை அன்றாடம் டைரியில் எழுதி வையுங்கள்.இது முக்கியம்.ஏனென்றால் ஒரு நாளில் நடைபெறும் விஷயங்களில் ஐந்தில் ஒரு பகுதி 24 மணிநேரத்தில் மறந்து விடுகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

முன்பு சந்தித்த நபரையே மீண்டும் பார்க்க நேரிட்டால் அவர் பெயரைச் சொல்ல நினைக்காதீர்கள்.நிதானித்து அவரை எந்தச் சந்தர்ப்பத்தில்,எப்படிச் சந்தித்தீர்கள் என்ற பழைய நிகழ்ச்சியை ஞாபகத்துக்கு கொண்டு வாருங்கள்.

மேல உள்ளவைகள் முகங்களையும்,பெயர்களையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள சில நல்ல வழிகள்.


கண்டதும்,சுட்டதும்.......நல்லதந்தி!.

அமாவாசை அமைச்சர் ஆற்காடுவீராசாமியின் கையாலாகாத்தனமும்,காவாலித்தனமும்!

Posted on Saturday, August 30, 2008 by நல்லதந்தி

வருங்காலத்தில் மின்சார சேமிப்பு!


ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மின்சாரம் போவதைப் பார்த்திருப்பீர்கள்.அல்லது சில சமயங்களில்,மிகுந்த மின்பற்றாக் குறையின் காரணமாக சில நாட்களில் இரண்டுமணிநேரம்,மூன்று மணி நேரம் மின்வெட்டை அனுபவித்திருப்போம்.ஆனால் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்திற்க்கும் மேல் மின் வெட்டு ஏற்படுவதை வாரக் கணக்காக அனுபவித்து இருக்கிறீர்களா?.




சென்னையைத் தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே அதிக அளவில் மின்வெட்டு இருந்து வருகிறது!.அதன் உச்ச பட்சமாக கடந்த 6 தினங்களாக நடந்து வரும் மின்வெட்டுக் கூத்தின் காட்சி நேரம் கீழே!



அதிகாலை 12 முதல் 2 வரை (2 மணி நேரம்)

அதிகாலை 4 முதல் 5 வரை (1 மணி நேரம்)
காலை 7 முதல் 8 வரை (1 மணி நேரம்)

காலை 9 முதல் 10 வரை(1 மணி நேரம்)

காலை 10 முதல் 12 வரை (சில இடங்களில்)

மதியம் 2 முதல் 5 வரை(3 மணி நேரம்)

மாலை 6 முதல் 9 வரை(3 மணி நேரம்)

இரவு 10 முதல் 11 வரை (1 மணி நேரம்)


குறிப்பு: இந்த பட்டியல் மிகைப் படுத்தி எழுதப் பட்டதல்ல!.100% அக்மார்க் உண்மை!


ஒரு நாளைக்கு 12 மணி நேரம் மின்வெட்டை அமுலுக்கு கொண்டு வந்த அற்புத ஆட்சியை எந்த மாநிலத்திலாவது பார்க்கமுடியுமா?.

அமாவாசை ஆற்காடு வீராசாமி இப்போது தன் மனைவியை எந்த மாநிலத்திற்கு அனுப்பி,அந்த மாநிலத்தில் தமிழ்நாட்டை விட மின் வெட்டு அதிகம் என்று கண்டுபிடித்துச் சொல்லச் சொல்லுவார் என்று தெரியவில்லை!.

இந்த பக்கம் கலைஞர் கருணாநிதி பல்லுகுத்திக் கொண்டே இன்னிக்கு எந்த டான்ஸ் பாக்கலாம்,எந்த சினிமா விழாவுக்குப் போனால் கவர்ச்சி டான்ஸ்
காட்டுவார்கள்.அடடா இன்னிக்கு எந்த விழாவும் இல்லையா?.அப்போ மானாட மயிலாட தான் பாக்கணுமா?.என்று மக்களைப் பற்றிய இந்த ஒரே கவலையில் இருக்கிறார்.


தமிழ் நாட்டின் சிறு தொழில்களும்,குறுந்தொழில்களும் இந்த 9 மாதங்களாக மின் வெட்டால் நசிந்து விட்டன. கலைஞர் சென்னைக்கும் அதைச் சுற்றியுள்ள பன்னாட்டு தொழிற்சாலைகளுக்கும்,ஐ.டி கம்பனிகளுக்கும் மின்சாரம் கிடைத்தால் போதும் என்று நினைக்கிறார் போலிருக்கிறது.

தமிழக மக்களின் தொழில்களை அழித்து விட்டு பன்னாட்டு முதலாளிகளைச் செழிக்க வைப்பதுதான்,தமிழர் நலன் காக்கும் அரசு என்று வார்த்தைக்கு வார்த்தை ஜல்லியடித்துக் கொண்டிருக்கும் தி.மு.க அரசின்
வேலையா? .

அமாவாசை அமைச்சரின் பொன்மொழி:
ஒரு மணிநேர மின்சாரச்சிக்கனம்,இரண்டு மணிநேர மின் உற்பத்திக்குச் சமம்!
இப்படித்தான் மின் உற்பத்தியைப் பெருக்குகிறார் போலிருக்கிறது.நாம் நிஜமாகவே உற்பத்தியைப் பெருக்குவார்கள் என்று நினைத்தோம்!.


அமாவாசை ஆற்காடுவீராசாமியின் பொன்னேட்டில் பொறிக்கப் படவேண்டிய உளறல்கள்!


மே 06,2008

செங்கோட்டையன் -புதிய தொழிற்சாலைக்கு ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை கொடுத்து விட்டு ஏற்கனவே இருக்கிற தொழிற்சாலைகளுக்கு மின்சார சப்ளையை நிறுத்தியதால், அந்த தொழிற்சாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனது தொகுதியில் விசைத்தறி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விஸ்கோஸ் தொழிற்சாலை, ஊட்டி இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை என வரிசையாக மூடப்பட்டு வருகின்றன. ஆனால், மத்திய அரசில் தொடர்ந்து அங்கம் வகித்து வரும் நீங்கள் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆற்காடு வீராசாமி: விசைத்தறிகளுக்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. காற்றாலை மூலமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு ஆயிரம் மெகாவாட்டில் இருந்து ஆயிரத்து 400 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. இதனால், வெளியில் வாங்கும் 600 மெகாவாட் மின்சாரத்தில் 200 மெகாவாட்டை குறைத்துக் கொண்டுள்ளோம். தமிழகத்தில் மே மாதம் 30ம் தேதிக்குப் பிறகு காற்றாலை மூலம் மேலும் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கூடுதலாகக் கிடைக்கும். அதை மத்திய அரசின் பவர் டிரேடிங் கார்ப்பரேஷனுக்கு யூனிட் ஒன்றுக்கு ஏழு ரூபாய் என விற்கப்படும். அதன் மூலம் இரண்டாயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். கூடுதலாக மின்சாரம் உற்பத்தியாகும் நிலையில் மின்தடை என்ற பேசி நேரத்தை வீணாக்க வேண்டாம்.

செங்கோட்டையன் - அ.தி.மு.க: மின்வெட்டு இல்லையென்று அமைச்சர் சொல்கிறார். ஆனால், வாரத்திற்கு ஒரு நாள் தொழிற்சாலைகளுக்கு விடுமுறை விடுமாறு மின்வாரியம் சர்க்குலர் வெளியிட்டுள்ளது அமைச்சருக்கு தெரியுமா? அது தவிர பழுது பார்ப்பு என்ற பெயரில் மாதத்திற்கு ஐந்து நாட்கள் மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
ஆற்காடு வீராசாமி: இது தொடர்பாக தொழிற்சாலை உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, அவர்களும் மின்சாரத்தை நிறுத்த ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால், விசைத்தறிகளுக்கு இவற்றில் இருந்து விலக்கு தரப்பட்டு, தடையின்றி மின்சாரம் வழங்கப்படுகின்றன. உங்கள் மாவட்டத்தை சேர்ந்த விசைத்தறியாளர்களை பார்த்து இதை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இவ்வாறு விவாதம் நடந்தது.

மே மாதம்
""வரும் 15ம் தேதி முதல் தொழிற் சாலைகளுக்கான மின்சார விடுமுறை ரத்தாகிறது. அடுத்த 15 நாட்களில் தமிழகம் முழுவதும் மின்சார தட்டுப்பாடே இருக்காது,'' என்று தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார். திருச்சியில், மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த மாதம் 27ம் தேதி தொடங்கி காற்றாலை மூலம் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்குக் கிடைக்கிறது. மின் தேவையைப் பூர்த்தி செய்ய வெளிமாநிலத்திலிருந்து மின்சாரம் வாங்குவது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

காற்றாலை மின்சாரம் தற்போது கிடைப்பதால், வரும் 15க்குப் பிறகு தொழிற்சாலைகளுக்கான மின் வார விடுமுறை ரத்து செய்யப்படும். தமிழகத்தில் தற்போது மின்வெட்டு இல்லை. சில பகுதிகளிலுள்ள சிறிய அளவிலான மின்வெட்டு பாதிப்பும் வரும் 30ம் தேதிக்குப் பின் முற்றிலும் இருக்காது. தடையின்றி சப்ளை இருக்கும்.

ஜூலை 19,2008

"சென்னை மாநகரில் தினமும் ஒரு மணி நேரமும், மற்ற மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் தினமும் இரண்டு மணி நேரமும் மின் வெட்டு அமல்படுத்தப்படும். தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும். தென்மேற்கு பருவமழை பெய்து, நீர் நிலைகளில் போதுமான அளவு இருப்பு வரும் வரை இந்த நிலை நீடிக்கும்' என்று மின்துறை அமைச் சர் ஆற்காடு வீராசாமி அறிவித்தார்.தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை சமாளிப்பது குறித்து, தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு தொழில் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார்.

அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, நிதித்துறைச் செயலர், தொழில் துறைச் செயலர், எரிசக்தித்துறைச் செயலர், மின்வாரிய அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பின், அமைச்சர் ஆற்காடு வீராசாமி நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்துக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரம் மெகா வாட் மின்சாரம் பற்றாக்குறை உள்ளது. நாம் எதிர் பார்த்த அளவுக்கு காற்றாலையில் இருந்து மின்சாரம் உற்பத்தி ஆகவில்லை.காற்று சரியான அளவு வீசாததால், எதிர்பார்க்கப்பட்ட இரண் டாயிரத்து 700 மெகா வாட் மின்சாரத்துக்குப் பதிலாக ஆயிரத்து 800 மெகா வாட் மின்சாரம் தான் கிடைக்கிறது.

மழை பெய்யாததால் நீர் மின் சாரம் அதிகமாக கிடைக்கவில்லை. மத்திய தொகுப்பில் இருந்து நமக்கு வர வேண்டிய மின்சாரத்தில் 60 சதவீதம் தான் கிடைத்துக் கொண்டிருக்கிறது.அண்டை மாநிலங்களிலும் இதே நிலைமை தான் உள்ளது. கர்நாடகாவில் உள்ள அணைகளில் தண்ணீர் இல்லை. கேரளா நம்மிடம் நான்கு டி.எம்.சி., தண்ணீர் கேட்டுக் கொண்டுள்ளது. எனவே, தொழிற்சாலைகளுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட வாரம் ஒரு நாள் விடுமுறை திட் டம் பற்றி விவாதிக்கப் பட்டது.

இதன்படி, தமிழகத்தை ஆறு பகுதிகளாகப் பிரித்து, வாரத்துக்கு ஒரு நாள் ஒவ்வொரு பகுதியிலும் தொழிற்சாலைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்.கடந்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே 15 வரை இந்த திட்டத்தை அமல்படுத்திய போது அளிக்கப் பட்ட வரிச்சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று தொழிலதிபர்கள் கேட்டனர். அந்த வரி விலக்கு மேலும் தொடர்ந்து அளிக்கப்படும்.
இது தவிர, பர்னேஸ் ஆயிலை பயன்படுத்தி மின் உற்பத்தி செய் யும் தொழிற்சாலைகளுக்கு, "வாட்' வரி விலக்கு அளிக்கப் படும்.மேலும், டீசலை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு, "வாட்' வரி விலக்கு அளிக்க வேண்டுமென்ற புதிய கோரிக்கையை வைத்தனர்.

இது பற்றி விவாதித்து இறுதியில், இதனால் தொழிற்சாலைகளுக்கு ஏற்படும் இழப்பை, 60 சதவீதத்தை அரசும், 40 சதவீதத்தை தொழிற்சாலைகளும் ஈடு செய்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.இந்த முடிவுகள் அனைத்தும் முதல்வர் கருணாநிதி மற்றும் நிதியமைச்சருடன் கலந்து பேசி, உடனடியாக அறிவிப்பாக வெளியிடப்படும். தமிழகத்தில் அறிவிக் கப்படாத மின் வெட்டு இருக்காது.

வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்கும் திட்டத்தின் மூலம் 375 முதல் 400 மெகா வாட் மின்சாரம் மிச்சமாகும். மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் குறிப் பிட்ட நேரம் மட்டும் மின் தடை செய்வதன் மூலம் 300 மெகா வாட் மின்சாரம் மிச்சமாகும். சென்னையை எட்டு பகுதிகளாகப் பிரித்து, காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை, எட்டு மணி நேரத்தில் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு மணி நேரம் மின் நிறுத்தம் செய்யப்படும். இதேபோல, மற்ற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் தினமும் இரண்டு மணி நேரம் மின் தடை இருக்கும்.

கிராமப்புறங்களில் ஏற்படும் அதிக மின் தடையை சரி செய்யத் தான் இந்த முறை அமல்படுத்தப் படுகிறது. அதிகபட்சம் வாரத் துக்கு நான்கு நாட்கள் தினமும் 4 முதல் 5 மணி நேரமும், இரண்டு நாட்கள் மட்டும் 6 மணி நேரமும் விவசாயத்துக்கு மின்சாரம் வழங்கப் படும்.தென்மேற்கு பருவமழை நன் றாக பெய்து, நீர்த்தேக்கங்களில் ஆயிரம் மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய அளவுக்கு இருப்பு வரும் வரை இந்த நிலைமை இருக்கும்.
இரவு நேரங்களில் மாணவர்கள் படிப்புக்கு தடை ஏற்படக்கூடாது என்பதற்காக, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கண்டிப்பாக மின் தடை கூடாது என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல, குடிநீர் வினியோகம் அனைவருக்கும் கிடைக்கும் வகையில், அதற்கான மின் வெட்டு இருக்காது. மருத்துவமனைகளுக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பால் உற் பத்திப் பிரிவுகளுக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மின் உற்பத்தித் திறனை அதிகரிக்க, ஐந்தாயிரம் மெகா வாட் மின் உற்பத்திக்கு திட்டங்கள் தீட்டி, டெண்டர் விடப்பட்டு, பணிகள் துவக்கப்பட உள்ளன. அடுத்த ஆண்டில் பணிகள் முடிவடைந்து நான்காயிரத்து 500 மெகா வாட் மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.

ஆகஸ்ட் 11

சென்னையில் ஒரு மணி நேரமும், வெளிமாவட்டங்களில் இரண்டு மணி நேரமும் மின்வெட்டு ஏற்படுத் தப்பட்டது.இதற்கு எதிர்ப்பு கிளம் பியதும் அது ரத்து செய்யப் பட்டுவிட்டது.
டில்லியில் எட்டு மணிநேரம் மின்வெட்டும், மகாராஷ்டிரா உள்ளிட்ட நாடு முழுவதும் மின்பற்றாக்குறை இருக்கிறது. விவசாயிகள், சிறு தொழிற்சாலைகள் என தமிழகத்தில் ஆறு மண்டலங்களாக பிரித்து, ஒவ்வொரு நாள் விடுமுறை விடப்படுகிறது. காற்று வீசி, மழைப் பெய்தால் கூடுதல் மின்சாரம் கிடைத்தும் அதுவும் ரத்து செய்யப்படும். இன்னும் இரண்டரை ஆண்டுகளில் மின் உற்பத்தி செய்யும் பணிகள் துவங்கிவிடும்.

நாட்டை கடவுளாலும் காப்பாற்ற முடியாது!-சுப்ரீம் கோர்ட்

Posted on Thursday, August 7, 2008 by நல்லதந்தி

கடவுளே இறங்கி வந்தாலும் இந்த நாட்டை அரசியல்வாதிகளிடமிருந்து காப்பாற்ற முடியாது-இம்முறை இப்படி வாய்ஸ் கொடுத்திருப்பது ரஜினிகாந்த் அல்ல, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பி.என். அகர்வால் மற்றும் ஜி.எஸ். சாங்வி இருவரும்தான்.அரசு குடியிருப்புகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருக்கும் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைக்கு வகைசெய்யும் புதிய சட்டத்திருத்தம் கொண்டு வர அரசு மறுத்துவிட்டதால் கடுப்படைந்த நீதிபதிகள் தெரிவித்த கருத்துதான் மேலே நீங்கள் படித்தது.இது மட்டுமல்ல... இது வரை எந்த வழக்கிலும் நீதிபதிகள் சொல்லாத, அரசுக்கெதிரான கடுமையான கருத்துக்களையும் இவ்விரு நீதிபதிகளும் தெரிவித்துள்ளனர்.இந்த அரசின் நடவடிக்கைகள் எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது. ஒரு சாதாரண எழுத்தருடைய கையெழுத்துக்கெதிராகக் கூட நடவடிக்கை எடுக்கத் திராணியற்ற அரசாகத்தான் இது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.கடவுளால் கூட காப்பாற்ற முடியாத அளவுக்கு மோசமான தேசமாகிவிட்டது இந்தியா. ஒருவேளை கடவுளே இந்த நாட்டுக்கு இறங்கிவந்தால்கூட, அவரால் இங்குள்ள மோசமான நிலைமைக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது. இந்த தேசத்தின் ஒழுங்கீனங்களை மாற்ற முடியாது. நம் நாட்டு லட்சணம் அப்படி.பல்வேறு பிரச்சினைகளில் அரசின் கையாலாகாத்தனம் வெட்ட வெளிச்சமாகத் தெரிவதால்தான், வெறுத்துப் போன மக்கள் பொது நல வழக்குகளோடு கோர்ட் படி ஏறுகின்றனர்.நேரத்துக்கொரு பேச்சு:அரசியல்வாதிகளைப் பாருங்கள். இவர்களை விட கேவலமாக யாராலும் நடந்து கொள்ள முடியாது. அதிகாரம் கையிலிருக்கும்போது நீதிமன்றத்தைவிட அரசு இயந்திரமும், நாடாளுமன்றமும்தான் பெரிது என முழங்குவார்கள்.நீதிபதிகளை விமர்சிப்பார்கள். ஆனால் அதிகாரத்தில் இல்லாதபோது, நியாயம் தேடி அதே நீதிமன்றத்துக்கு ஓடிவருவார்கள், என்றனர் இரு நீதிபதிகளும்.அரசுக் குடியிருப்புகளில் சட்டவிரேதமாக ஆக்கிரமித்திருக்கும் உயர் அதிகாரிகளை விரட்ட தற்போதுள்ள இந்தியக் குற்றவியல் சட்டம் 441-ல் போதிய வழிவகைகள் இல்லாததால் அதைத் திருத்த வேண்டும், கடுமையான சட்டங்களைக் கொண்டுவந்து இந்த அதிகாரிகளுக்கு தண்டனை தரவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல வழக்குத் தொடரப்பட்டது.இதுகுறித்து உடனடியாக பதிலளிக்குமாறு சுப்ரீம் கோர்ட் அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் இதற்கு பொறுப்பான பதிலைத் தராத மத்திய அரசு, புதிய சட்டங்கள் எதுவும் தேவையில்லை. ஏற்கெனவே உள்ள சட்டத்தைப் பயன்படுத்தியே கடும் நடவடிக்கை எடுக்க முடியும் என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அமரீந்தர் சரண் மூலம் பதிலளித்தது.இதில் கடுப்பான நீதிபதிகள்தான் அரசை இப்படி விளாசித் தள்ளிவிட்டனர். நாட்டில் உள்ள கிட்டத்தட்ட 1 லட்சம் உயர் தர அரசுக் குடியிருப்புகள் பெரும்பாலானவற்றில் பதவிக் காலம் முடிந்த பின்னரும் அரசு அதிகாரிகள் பலர் ஆக்கிரமித்துள்ளனர்.இன்னும் பல குடியிருப்புகளில் அதிரகாரிகளின் பெயர்களில் அவர்களது உறவினர்கள் ஆக்கிரமித்துள்ளனர். சில அதிகாரிகள் உள்வாடகைக்கும் (Sub-letting) விட்டுள்ளார்களாம்.ஆனால் அரசு வழக்கறிஞரோ, இவற்றை மறுத்ததோடு, மொத்தம் 300-க்கும் குபறைவான குடியிருப்புகள் மட்டுமே அந்த மாதிரி சட்டவிரோத ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும், மீதி 99 ஆயிரம் வீடுகளில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் ஒரே போடாகப் போட்டார்.அப்படியெனில் மனுதாரர் எங்களிடம் அளித்துள்ள அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் பொய்யா... அரசே குற்றவாளிகளுக்கு உடந்தையாய் இருந்தால் எப்படி... என மடக்கிய நீதிபதிகள், அடுத்த சில நிமிடங்களில் காய்ச்சி எடுத்துவிட்டார்கள் மத்திய அரசை!

நன்றி: thatstamil

பகுத்தறிவுப் பகலவன் - ஸ்டாலின்!

Posted on Tuesday, August 5, 2008 by நல்லதந்தி

இந்து கடவுள்களை திட்டித்தீர்ப்பது மட்டுமே பகுத்து உணரும் அறிவாகிய பகுத்தறிவு என்பதை நமக்கெல்லாம் உள்ளங்கை நெல்லிக் கனிபோல் மீண்டும் உணர்த்திய பகுத்தறிவர் ஸ்டாலின் வாழ்க!

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில், நேற்று, உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின், அவரது மனைவி துர்க்கா ஆகியோர் காணிக்கை அளித்து, பிரார்த்தனை செய்தனர். தென் தமிழகத்தின் புகழ் பெற்ற, 425 ஆண்டுகள் பழமையான, தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா, ஜூலை 26ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான மாதா தேர்ப்பவனி இன்றிரவு நடக்கிறது.
நேற்று மதியம் பனிமய மாதா பேராலயத்திற்கு, உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின், தனது மனைவி துர்க்காவுடன் வந்தார். அவர்களை பேராலய பங்குத்தந்தை ஜெராசின் கற்றார், உதவி பங்குத்தந்தை செல்வம் வரவேற்றனர். அமைச்சர் ஸ்டாலின், மனைவி துர்க்கா ஆகியோர் பனிமய மாதா சொரூபத்தின் அருகில் சென்று பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து, அவர்கள் மாதாவிற்கு காணிக்கை (மஞ்சள் வண்ணம் புத்தர் போட்ட மேலாடைத் துணியின் வண்ணம் என்பதால்! ஹி..ஹி ஹி)செலுத்தினர்.

நன்றி: தினமலர்

சூப்பர்ஸ்டாரின் குசேலன் வெளியிடுவதில் சிக்கலா?

Posted on Wednesday, July 30, 2008 by நல்லதந்தி



தலைவர் படத்துக்கு நியூஸ் போடலேன்னு எனக்கு ரொம்ப நாளா வருத்தம் இருந்தது.இப்போ போட ஒரு சந்தர்ப்பம்.ஆனா நெகடிவ் நியூஸாப் போச்சேன்னுதான் வருத்தம்.சீக்கிரம் பிரச்சனைய முடிங்க தலைவா!



சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த "குசேலன்' படத்தை, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில், வினியோகஸ்தர்கள் நிர்ணயம் செய்யும் தொகையைக் கொடுத்து, படம் ரிலீஸ் செய்வர். லாபம் என்றாலும், நஷ்டம் என்றாலும் குறிப்பிட்டத் தொகை தியேட்டர் உரிமையாளர்களுக்குப் போய் சேரும்; இந்த முறைக்கு "மினிமம் கியாரன்டி' என்று பெயர். நட்சத்திர அந்தஸ்து பெற்ற சில நடிகர்களின் படங்கள் பெரிய அளவில் தியேட்டர் உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தி விடுகின்றன. இந்நிலையைப் போக்க, கடந்தாண்டு முதல், "சதவீத அடிப்படையில் முக்கிய நடிகர் படங்களை திரையிடுவது' என முடிவு செய்தனர்.
ரஜினி நடிக்கும் "குசேலன்' படம் 31ம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. அதன் தமிழக வினியோக உரிமையை பிரமிட் சாய்மீரா நிறுவனம் பெற்றுள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஒன்று முதல் நான்கு தியேட்டர்கள் வரையில் குத்தகை ஒப்பந்தம் எடுத்துள்ளது. "மற்ற தியேட்டர் உரிமையாளர்கள், "குசேலன்' படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்றால், தாங்கள் நிர்ணயம் செய்துள்ள தொகையைக் கொடுத்தால் மட்டுமே படப்பெட்டி வழங்கப்படும்' என அறிவித்துள்ளது.
" சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் சாய்மீராவின் கட்டுப்பாட்டில் எட்டு தியேட்டர்கள் உள்ளன. அவற்றில் "குசேலனை' ரிலீஸ் செய்ய முடிவு செய்து, அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால், தியேட்டர் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சதவீத அடிப்படையில் "குசேலனை' திரையிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்தப் பிரச்னையால், மற்ற தியேட்டர்களில் படம் வெளியாகுமா? ஆகாதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பிரச்னைக்குத் தீர்வு காண, தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினரும், வினியோகஸ்தர்களும், பிரமிட் சாய்மீரா நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவை அழிக்க இஸ்லாமிய தீவிரவாதிகளின் இறுதிப் போரா?அல்லது அணுசக்தி ஒப்பந்தத்திற்கு பாகிஸ்தான் தெரிவிக்கும் எதிர்ப்பின் விளைவா?

Posted on Sunday, July 27, 2008 by நல்லதந்தி

பெங்களூரு குண்டுவெடிப்பு நடந்த அடுத்த நாளான நேற்று, குஜராத் தலைநகர் ஆமதாபாத்தில், தொடர்ச்சியாக 16 இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 20 பேர் பலியாயினர்; 100 பேர் படுகாயமடைந்தனர். ஒவ்வொரு மாநிலமாக பயங்கரவாதிகளின் தாக்குதல் தொடர்வதைக் கண்டு, "இவர்களின் அடுத்த இலக்கு எங்கே?' என்ற பீதி, நாடு முழுவதும் உள்ள மக்களிடையே எழுந்துள்ளது. "அமைதியாக இருக்கும்படி' பிரதமர் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நேற்று முன்தினம் மதியம் தொடர்ச்சியாக எட்டு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில், இரண்டு பேர் பலியாயினர்; 15 பேர் படுகாயமடைந்தனர்.
முதல்வர் மோடியின் தொகுதி: இத்தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தாக்குதல் நடந்த மறுநாளே மக்களிடையே பீதி மறையாத நிலையில், குஜராத் தலைநகர் ஆமதாபாத்தில் நேற்று தொடர்ச்சியாக 16 இடங்களில் குண்டுகள் வெடித்தன.ஆமதாபாத்திலுள்ள முதல்வர் மோடியின் தொகுதியான மணி நகர், இசான்பூர், நரோல் சர்க்கிள், பாபு நகர், ஹட்கேஷ்வர், சர்கேஜ், சாரங்பூர் பிரிட்ஜ், சக்லா பகுதி, கோவிந்த்வாடி, கிஷன்பூர், நரோதா பிட்டியா மற்றும் அம்ரைவாடி உட்பட 16 இடங்களில், நேற்று மாலை 6.45 மணியளவில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.
சர்கேஜ் பகுதியில் ஒரு பஸ்சில் குண்டு வெடித்தது. வெடிகுண்டுகள் சைக்கிள்கள் மற்றும் டிபன் பாக்ஸ்களில் வைக்கப்பட்டிருந்தன. குண்டு வெடிப்பு நடந்த பகுதிகள் பெரும்பாலானவை மார்க்கெட் பகுதிகள். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.ஒவ்வொரு மாநிலமாக பயங்கரவாதிகள் குறி வைத்துத் தாக்குதல் நடத்துவது கண்டு, நாடு முழுவதும் பொதுமக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர்.வெடிகுண்டு தாக்குதலுக்கு ஜனாதிபதி, பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் அத்வானி, பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மத்திய உள்துறை இணை அமைச்சர் சகீல் அகமது கூறுகையில், "பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து, மாநில தலைநகரங்களிலும் பாதுகாப்பை தீவிரப்படுத்துமாறு, அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கையை மத்திய அரசு அனுப்பியது. இதில் ஆமதாபாத் நகரும் அடங்கும்' என்றார். அனைத்து மக்களும் அமைதி காக்கும்படி பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜராத்தில் அனைத்து ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கர்நாடகாவைத் தொடர்ந்து பா.ஜ., ஆளும் குஜராத்தை குறிவைத்து, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளில் குண்டுவெடிப்புகள் தொடர்கதையாகி வருகின்றன. தனி குண்டுவெடிப்புகளை விட தற்போது தொடர் குண்டுவெடிப்புகள் நாட்டை அதிகமாக உலுக்கி வருகின்றன.2005 - டில்லி மார்க்கெட் குண்டு வெடிப்புகள்அக்டோபர் 29ம் தேதி டில்லியில் வெடித்த மூன்று குண்டுகளால் டில்லி அதிர்ந்தது. இந்த சம்பவத்தில் 62 பேர் கொல்லப்பட்டனர்; 210 பேர் படுகாயமடைந்தனர். இந்துக்கள் விமரிசையாகக் கொண்டாடும் தீபாவளி பண்டிகைக்கு இரு நாட்கள் முன், மக்கள் அதிகமாகக் கூடும் பகுதிகளான மத்திய மற்றும் தெற்கு டில்லி மார்க்கெட்டுகளில் இரு குண்டுகளும் கோவிந்தபுரியில் பஸ்சில் ஒரு குண்டும் வெடித்தன.இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு காரணம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். பாகிஸ்தான் தொடர்புடைய இஸ்லாமிய அமைப்புகளான இஸ்லாமிக் புரட்சிகர முன்னணி மற்றும் இஸ்லாமிக் இன்குலாப் மகஸ் ஆகிய அமைப்புகளுக்கும் இச்சம்பவத்தில் தொடர்பிருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
2006 - வாரணாசி குண்டு வெடிப்புகள்
இந்துக்களின் புனித நகரமான உ.பி.,யில் உள்ள வாரணாசியில் மார்ச் 7ம் தேதி மூன்று குண்டுகள் வெடித்தன. இதில் 28 பேர் கொல்லப்பட்டனர்; 101 பேர் காயமடைந்தனர்.சங்கத் மோச்சன் அனுமன் கோவில், வாரணாசி கன்டோன்மென்ட் ரயில்வே ஸ்டேஷன், டில்லி செல்லவிருந்த சிவகங்கா எக்ஸ்பிரஸ் ஆகிய மூன்று இடங்களில் குண்டுகள் வெடித்தன.இந்த குண்டு வெடிப்புக்கு காஷ்மீர் தீவிரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பா காரணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். வாரணாசியில் வெடித்த குண்டுகள் அனைத்தும் பீகாரில் தயார் செய்யப்பட்டவை என்று போலீசார் தெரிவித்தனர்.
2006 - மும்பை ரயில் குண்டு வெடிப்புகள்: மும்பையில் ஜூலை 11ம் தேதி தொடர்ச்சியாக வெடித்த ஏழு குண்டு வெடிப்புகளில் 209 பேர் கொல்லப்பட்டனர்; 700 பேர் காயமடைந்தனர்.சாந்தகுரூஸ், பந்த்ரா, ஜோகேஸ்வரி, மாஹிம், மீரா ரோடு, மாதுங்கா, பொரிவிலி ஆகிய ஏழு இடங்களில் ரயில்களில் குண்டுகள் வெடித்தன. மும்பை மக்கள் போக்குவரத்துக்கு அதிகம் நம்பியிருக்கும் ரயில்களில் வெடித்ததால் மரணமடைந்தோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.இந்த சம்பவத்துக்கு லஷ்கர்-இ-தொய்பா மற்றும் சிமி இஸ்லாமிய மாணவர் அமைப்பு காரணம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
2006 - மாலேகான் தொடர் குண்டு வெடிப்புகள்: மகாராஷ்டிராவில் நாசிக் அருகே மாலேகானில் செப்டம்பர் 8ம் தேதி நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில், 37 பேர் கொல்லப்பட்டனர்; 125 பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பில் பலியானோர் இஸ்லாமியர்களே. குண்டுகள் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்தன. மசூதி அருகே குண்டுகள் வெடித்ததால் அங்கு தப்பியோடுவதற்காக மக்களிடையே நெரிசல் ஏற்பட்டது. இந்த குண்டுவெடிப்புக்கு சிமி அமைப்பு காரணம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
2007 - ஐதராபாத் பொழுதுபோக்கு பூங்கா குண்டுவெடிப்பு: ஐதராபாத்தில் பொழுதுபோக்குப் பூங்கா மற்றும் சாலையோர உணவுக்கடையில் நடந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் 42 பேர் பலியானார்கள்; 54 பேர் காயமடைந்தனர். மூன்றாவது குண்டுவெடிப்புச் சம்பவம் நடக்கும் முன் போலீசார் நாட்டு வெடிகுண்டுகளைக் கைப்பற்றி அழித்தனர். சம்பவம் நடந்த மறுநாளும் 19 குண்டுகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.இச்சம்பவத்துக்கு வங்கதேசத்தைச் சேர்ந்த ஹர்கத் உல் ஜிகாத் அல் இஸ்லாமி எனும் அமைப்பு காரணம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
2008 - ஜெய்ப்பூர் சைக்கிள் குண்டுகள்: ஜெய்ப்பூரில் மே மாதம் 13ம் தேதி 15 நிமிடங்களுக்குள் ஒன்பது குண்டுவெடிப்புகள் நடந்தன. இதில் 63 பேர் கொல்லப்பட்டனர்; 210 பேர் காயமடைந்தனர். சைக்கிள்களில் வைக்கப்பட்டிருந்த இந்த குண்டுவெடிப்புக்கு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு இ-மெயில் வழியாக தகவல் அனுப்பி பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு இருப்பது இந்த சம்பவத்தில் தான் வெளியுலகுக்குத் தெரிந்தது. ராஜஸ்தானில் உள்ள வங்கதேசத்தவர்களை நாடு திருப்பி அனுப்பும் திட்டத்தால் வங்கதேச தீவிரவாத அமைப்புக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்று உள்துறை அமைச்சகம் சந்தேகிக்கிறது.
2008 - பெங்களூரு குண்டுவெடிப்புகள்: நேற்று முன்தினம் நடந்த குறைந்த சக்தி கொண்ட தொடர் குண்டுவெடிப்புகளில் பெரிய அளவில் உயிர்ச் சேதம் இல்லை. இச்சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்; 15 பேர் காயமடைந்தனர். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகமாக இருப்பதால் பெங்களூருவில் பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு லஷ்கர்-இ-தொய்பா மற்றும் சிமி அமைப்புகள் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

நன்றி: தினமலர்

மீண்டும் இஸ்லாமிய தீவிரவாதிகளின் அட்டூழியம்

Posted on Saturday, July 26, 2008 by நல்லதந்தி

மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் கூறுகையில், ""சம்பவங்களுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. எனினும், தடைச் செய்யப்பட்ட "சிமி' அமைப்பினர் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்,'' என்றார்.

கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரில் வெவ்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்திற்குள் எட்டு இடங்களில் தொடர்ந்து குண்டு வெடித்தது. ஐ.டி., நிறுவனங்களைக் குறி வைத்து பயங்கரவாதிகள் நடத்திய இந்தத் தாக்குதலுக்கு இரண்டு பேர் பலியாயினர்; 15 பேர் படுகாயமடைந்தனர்.பெங்களூரு நகரில் ஐ.டி., கம்பெனிகள் நிறைந்த ஓசூர் ரோடு பகுதியில் மடிவாளாவில் முதல் வெடிகுண்டு மதியம் 1.20 மணிக்கு வெடித்தது. ஆட்டோ ஒன்றில் சென்று கொண்டிருந்தவர் வெடிகுண்டு வெடித்ததை உணர்ந்தார்.
ஆட்டோவை நிறுத்திப் பார்த்த போது பெண் ஒருவர் ரத்தவெள்ளத்தில் மயங்கிக் கிடந்தார். அருகில் சென்று பார்த்த போது இறந்து கிடந்தார். அதற்குள் அப்பகுதியில் பெரும் கூட்டம் கூடியது. இறந்தப் பெண்ணின் பெயர் லட்சுமி எனத் தெரிந்தது. அவரது கணவர் ரவி, குண்டு வெடிப்பில் படுகாயமடைந்தார். அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இரண்டாவது வெடிகுண்டு மதியம் 1.25 மணிக்கு மைசூரு ரோடு பகுதியில் பெங்களூருப் பல்கலை அருகில் உள்ள நாயண்டஹள்ளி பந்தர்பாளையா பகுதியில் நடந்தது.
மூன்றாவது வெடிகுண்டு மதியம் 1.40 மணிக்கு ஆடுகோடி செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனை அருகிலும், நான்காவது வெடிகுண்டு மதியம் 1.42 மணிக்கு ஆடுகோடியின் மற்றொரு பகுதியிலும் வெடித்தது.ஐந்தாவது வெடிகுண்டு கோரமங்களா போலீஸ் நிலையம் அருகிலும், ஆறாவது வெடிகுண்டு அதே பகுதியிலும், ஏழாவது வெடிகுண்டு பரபரப்பு மிகுந்த விட்டல் மல்லையா மருத்துவமனை அருகிலுள்ள பூங்கா ஒன்றிலும், எட்டாவது வெடிகுண்டு லாங்க் போர்டு டவுன் ரிச்மண்ட் சர்க்கிள் அருகிலும் வெடித்தது.
பெரும் பீதியும், பரபரப்பும் : தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடங்களில் குவிக்கப்பட்டனர். ஆடுகோடியில் நடந்த சோதனையில், வெடிக்காத குண்டு ஒன்று கைப்பற்றப்பட்டது. தொடர் குண்டுவெடிப்பால் பெங்களூரு நகர மக்களிடையே பெரும் பீதியும், பரபரப்பும் ஏற்பட்டது. எங்கு பார்த்தாலும் மக்கள் அலறலுடன் சென்றனர். குண்டு வெடித்தப் பகுதிகளில் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.சம்பவம் நடந்த இடத்திற்கு வெடிகுண்டு நிபுணர்கள் சென்றனர். போலீஸ் மோப்ப நாய் கொண்டு செல்லப்பட்டது.
குண்டுவெடிப்பு நடந்த பகுதிகளில் நிபுணர்கள் கைப்பற்றிய வெடிகுண்டு சிதறல்கள், ஒயர்கள், இரும்புப் போல்ட்கள் போன்றவற்றைச் சோதனைக்கு அனுப்பி வைத்தனர். மொபைல் போன் மூலம் டைம் பாம் வைத்து வெடிக்கச் செய்துள்ளனர். பெங்களூருவிலிருந்து வெளியூர் செல்லும் அனைத்து வழிகளும் மூடப்பட்டன. குற்றவாளிகள் தப்பிச் செல்லாதபடி போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். வாகனங்கள் அனைத்தும் கடுமையான சோதனைக்குப் பின்னரே செல்ல அனுமதிக்கப்பட்டன.போலீஸ் முதற்கட்ட விசாரணையில், ஆந்திர மாநிலம், மசூதியில் நடந்த வெடிகுண்டு சம்பவம் போன்று இந்தச் சம்பவமும் நடத்தப்பட்டுள்ளது தெரிந்தது. ஒரே கும்பல் தான் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
பெங்களூரு நகரப் போலீஸ் கமிஷனர் சங்கர் பிதரி கூறுகையில், ""ஆந்திர மாநிலம் மசூதியில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் போன்றே நடந்துள்ளது. அதிக சக்தி இல்லாத வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதால், பெரிய அசம்பாவிதம் நடக்கவில்லை. சிமி இயக்கத்தினர், அல்கொய்தா அமைப்பினர் இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம்,'' என்றார்.கர்நாடக உள்துறை அமைச்சர் ஆச்சார்யா கூறுகையில், ""மக்கள் கூடும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. குண்டுவெடிப்புச் சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்கின்றனர் என்பதைக் கண்டறிய விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது,'' என்றார்.