சூப்பர்ஸ்டாரின் குசேலன் வெளியிடுவதில் சிக்கலா?

Posted on Wednesday, July 30, 2008 by நல்லதந்தி



தலைவர் படத்துக்கு நியூஸ் போடலேன்னு எனக்கு ரொம்ப நாளா வருத்தம் இருந்தது.இப்போ போட ஒரு சந்தர்ப்பம்.ஆனா நெகடிவ் நியூஸாப் போச்சேன்னுதான் வருத்தம்.சீக்கிரம் பிரச்சனைய முடிங்க தலைவா!



சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த "குசேலன்' படத்தை, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில், வினியோகஸ்தர்கள் நிர்ணயம் செய்யும் தொகையைக் கொடுத்து, படம் ரிலீஸ் செய்வர். லாபம் என்றாலும், நஷ்டம் என்றாலும் குறிப்பிட்டத் தொகை தியேட்டர் உரிமையாளர்களுக்குப் போய் சேரும்; இந்த முறைக்கு "மினிமம் கியாரன்டி' என்று பெயர். நட்சத்திர அந்தஸ்து பெற்ற சில நடிகர்களின் படங்கள் பெரிய அளவில் தியேட்டர் உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தி விடுகின்றன. இந்நிலையைப் போக்க, கடந்தாண்டு முதல், "சதவீத அடிப்படையில் முக்கிய நடிகர் படங்களை திரையிடுவது' என முடிவு செய்தனர்.
ரஜினி நடிக்கும் "குசேலன்' படம் 31ம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. அதன் தமிழக வினியோக உரிமையை பிரமிட் சாய்மீரா நிறுவனம் பெற்றுள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஒன்று முதல் நான்கு தியேட்டர்கள் வரையில் குத்தகை ஒப்பந்தம் எடுத்துள்ளது. "மற்ற தியேட்டர் உரிமையாளர்கள், "குசேலன்' படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்றால், தாங்கள் நிர்ணயம் செய்துள்ள தொகையைக் கொடுத்தால் மட்டுமே படப்பெட்டி வழங்கப்படும்' என அறிவித்துள்ளது.
" சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் சாய்மீராவின் கட்டுப்பாட்டில் எட்டு தியேட்டர்கள் உள்ளன. அவற்றில் "குசேலனை' ரிலீஸ் செய்ய முடிவு செய்து, அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால், தியேட்டர் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சதவீத அடிப்படையில் "குசேலனை' திரையிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்தப் பிரச்னையால், மற்ற தியேட்டர்களில் படம் வெளியாகுமா? ஆகாதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பிரச்னைக்குத் தீர்வு காண, தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினரும், வினியோகஸ்தர்களும், பிரமிட் சாய்மீரா நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

2 Responses to "சூப்பர்ஸ்டாரின் குசேலன் வெளியிடுவதில் சிக்கலா?":

Anonymous says:

//ஆனா நெகடிவ் நியூஸாப் போச்சேன்னுதான் வருத்தம்.சீக்கிரம் பிரச்சனைய முடிங்க தலைவா//

நல்ல தந்தி... சினி பீல்டை பொறுத்தவரை நெகட்டிவ் நியூஸ் வந்தாத்தால் கூடுதல் பப்ளிசிட்டி. அதனாலதான்... இப்ப்ப்ப்ப்பிடியெல்லாம் பீதியை கிளப்பி விடுவாங்க.

//இந்த கண்ணன் வேடம் குசேலன் படத்துல இருக்கா தலைவா?//

கண்டிப்பா இப்படி காட்சி குசேலன் படத்துல இல்லை.

நல்லதந்தி says:

//நல்ல தந்தி... சினி பீல்டை பொறுத்தவரை நெகட்டிவ் நியூஸ் வந்தாத்தால் கூடுதல் பப்ளிசிட்டி. அதனாலதான்... இப்ப்ப்ப்ப்பிடியெல்லாம் பீதியை கிளப்பி விடுவாங்க.//

அப்போ படம் சூப்பர் ஹிட்டானால் அதில் எனக்கும் ஒரு பங்குண்டு!.ஹய்யா!