இந்தியாவில் எளிதாகக் கிடைப்பது தர்ப்பூசணி। வெயில் காலத்தில் மக்கள் தேடித் தேடிப் பார்த்து வாங்கி இந்தப் பழத்தை உண்பார்கள்। தாகத்தை மட்டுமே தணிக்கும் ஆற்றல் உள்ள தர்ப்பூசணிக்கு தற்போத ஆண்மையின் ஆற்றலை அதிகரிக்கும் சக்தி உண்டு என்று ஓரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள இந்திய டாக்டர் தலைமையிலான மருத்துவக்குழு ஒன்று மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது. தர்ப்பூசணியில் வயாகரா மாத்திரைக்கு இணையான மகத்துவம் இருப்பதாக அந்த மருத்துவக்குழு ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளது. தர்ப்பூசணி பழத்தில் உள்ள சிட்லின் என்ற சத்துப்பொருள், ரத்த நாளங்களை விரிவடையச் செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் என்றும், ரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புக்களை அந்தச் சத்துப்பொருள் ஊக்குவிப்பதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பு: தர்ப்பூசணியின் சதையை அடுத்த வெள்ளைத்தோலில் தான் இந்த சமாச்சாரம் அதிகம் உள்ளதாம்.பச்சைத்தோலையும் சாப்பிட்டு விட்டு வாய் கசக்கிறது என்று சொல்லாதீர்கள்!
சிட்டுக்குருவி லேகியம்VSதர்ப்பூசணி
Posted on Sunday, July 6, 2008
by நல்லதந்தி
Subscribe to:
Post Comments (Atom)
2 Responses to "சிட்டுக்குருவி லேகியம்VSதர்ப்பூசணி":
போட்டி வந்துடிச்சா?
சீசன் முடிஞ்சப்புறம் சொல்லுறீங்களே!
இப்ப என்னத்த செய்வேன்..
Post a Comment