புரட்சித்தலைவியின் விளாசல் ---- புத்தி வருமா?

Posted on Tuesday, July 8, 2008 by நல்லதந்தி

'ஒரு மாநிலத்தின் முதல்வர் என்பதை மறந்து திரைப் படம், நாடகம், ஆட்டம் போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் முதல்வர் கருணாநிதி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு திரைப்படத்துறைக்கே சென் றால், நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும்'என அ।தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, "திருமண நாள், பிறந்த நாள் போன்றவற்றின்போது, கருணாநிதியை தொந்தரவு செய்வதை தவிர்த்தால், மக்கள் நலத்திட் டங்களில் அவர் அதிக கவனம் செலுத்த முடியும்' என தொண்டர்களை கேட்டுக் கொண்டிருக்கிறார்। நாடு அசாதாரண சூழ் நிலையை சந்தித்துக் கொண்டிருப்பதாலும், பொதுத்தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதாலும், தனக்கு உருவாகி உள்ள தவறான தோற்றத்தை மாற்றிக் கொள்ள, நாட்டுப்பணிகள் மற்றும் வளர்ச்சிப்பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, தமிழகத்தை முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் செல்வது போல் பாவனை காட்டுவதற்காக இதுபோன்ற முடிவை எடுத்திருக்கிறார் என்று நினைத்தேன்.நான் என்ன நினைத்தேனோ, அதைத் தான் கருணாநிதி செய்திருக்கிறார்.

கருணாநிதி கதை, வசனம் எழுதிய " உளியின் ஓசை' படத்தின் சிறப்புக்காட்சிக்கு யார் யாரை அழைப்பது என்ற தீவிர சிந்தனையில் மூன்று நாட்கள் ஈடுபட்டிருந்தது தற்போது அம்பலமாகிவிட்டது. கடைசியாக தன் குடும்ப உறுப்பினர் உள்பட 150 பேரை திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு கருணாநிதி அழைத்திருக்கிறார். வந்தவர்கள் கருணாநிதியை புகழ அவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்திருக்கிறார்.ஆனால், அன்று இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகமே பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால் திண்டாடிக்கொண்டிருந்தது. மறுநாள் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் மேற் கொண்டனர். மக்கள் வேதனையில் நோகையில், குடும்ப உறுப்பினர்களுடன் அமர்ந்து "உல்லாச உலகம் எனக்கே சொந்தம்' என்ற பாணியில், திரைப்படத்தைக் கண்டுகளித்திருக்கிறார் கருணாநிதி.
அவருக்கு உண்மையிலேயே நாட்டு மக்களின் மீது அக்கறை இருந்திருக்குமானால், உளியின் ஓசை சிறப்பு காட்சியை பார்ப்பதை நிறுத்திவிட்டு மத்திய அரசுடன் பேசி, லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அன்றைக்கே முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும். தான் ஒரு மாநிலத்தின் முதல்வர் என்பதை மறந்து திரைப்படம், நாடகம், ஆட்டம் போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் முதல்வர் கருணாநிதி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு திரைப்படத் துறைக்கே சென்றால், அது நாட்டு மக்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

2 Responses to "புரட்சித்தலைவியின் விளாசல் ---- புத்தி வருமா?":

கோவி.கண்ணன் says:

//திரைப் படம், நாடகம், ஆட்டம் போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் முதல்வர் கருணாநிதி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு திரைப்படத்துறைக்கே சென் றால், நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும்//

திரைப்படம் வழியாக புகழடைந்து அரசியலுக்கு வந்து முதல்வராக இருந்த ஜே இப்படி பேசுவது விந்தையாக உள்ளது.

நல்லதந்தி says:

//திரைப்படம் வழியாக புகழடைந்து அரசியலுக்கு வந்து முதல்வராக இருந்த ஜே இப்படி பேசுவது விந்தையாக உள்ளது.//


மக்கள் பல பிரச்சனைகளில் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கும் போது இதைப் போல் வெட்டி செயல்களில் ஈடுபடுவதைதான் கண்டிக்கிறார்.

குறிப்பு : வழக்கமான உதா விற்கு மன்னிக்கவும்.

ரோம் பற்றியெறியும் போது பிடில் வாசித்த நீரோ மன்னனைப்போல!