சொந்த செலவில் சூனியம்!

Posted on Wednesday, July 9, 2008 by நல்லதந்தி

தமிழ் சினிமா ஹீரோக்களின் கேரியரில் கடைசிக்கட்டம் எதுவாக இருக்கும்


1.இராமநாரயணன் படத்தில் நடிப்பது


2.V.சேகர் படத்தில் நடிப்பது


3.கலைஞர் கருணாநிதி கதை வசனத்தில் நடிப்பது


இந்த மூன்று முடிவுகளில் எந்த முடிவை ஒரு ஹீரோ எடுத்தாலும் அவருக்கு சனி உச்சக்கட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.பாவம் பிரசாந்த் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் படுகின்ற பாட்டை சொல்லிமாளாது. கலை வாழ்விலும் அவரது சரிவு அதளபதாளத்தில் உள்ளது.

அடுத்து தனது கலைப் பயணத்தையும்,கூடவே தன் சொத்தையும் முடிவிற்க்கு கொண்டு வர தந்தையின் துணையோடு எடுக்கும் முயற்சிதான் கலைஞரின் கதை வசனத்தில் தன் சொந்த தயாரிப்பாக எடுக்கப் போகும் படம்.

பாவம் பிரசாந்த்!.

கலைஞர் எழுதிய பொன்னர் சங்கர் என்ற சரித்திர நாவல் திரைப்படமாகிறது. இதில் பொன்னராகவும், சங்கராகவும் பிரசாந்த் நடிக்கிறார். படத்தை இயக்கப் போவது பிரசாந்தின் அப்பா தியாகராஜன். இரண்டு வேடத்திலும் பிரசாந்த் நடிக்கட்டுமே என்று விரும்பியதும் கலைஞர்தானாம். "தமிழ் திரைப்பட வரலாற்றில் இத்தனை பொருட் செலவில் எடுக்கப்பட்ட முதல் சரித்திரப்படம் இதுவாகதான் இருக்க வேண்டும். ஆஸ்கார் விருதுக்கு ஆசைப்படுகிற தமிழன் அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம். (யப்பா கொசுத் தொல்லைதாங்க முடியலையே நாராயணா!-நல்லதந்தி)இந்த படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்புவேன்" என்கிறார் தியாகராஜன். உலகம் முழுவதும் அலசி, சிறந்த கிராபிக்ஸ் நிறுவனத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார்களாம். அதே மாதிரி முக்கிய காட்சிகளும் வெளிநாட்டில் படமாகவிருக்கிறது. "கதையில் கலைஞர் எழுதியிருக்கும் ஒவ்வொரு வரியையும் அப்படியே திரையில் பதிவு செய்ய விரும்புகிறேன். போர்க் காட்சிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களை பங்கு பெற செய்வேன். அதே போல் கணக்கில் அடங்காத குதிரைகள் யானைகள் என்று பிரமாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது" என்கிறார் தியாகராஜன். சரி, இவ்வளவு செலவை தாங்குகிற தயாரிப்பாளர் வேண்டுமே? "அதனால்தான் என் அப்பாவையே பொன்னர் சங்கரை தயாரிக்க சொன்னேன்" என்கிறார் பிரசாந்த்.(இதுக்குப் பேர்தான் சொந்தமா சூனியம் வெச்சிக்கிறதோ-நல்லதந்தி) ஒன்றரை வருடத்திற்கு முன்பே முழு ஸ்கிரிப்டையும் கொடுத்துவிட்டாராம் கலைஞர். அதை திரைக்கேற்ப வடிவமைக்கவே இத்தனை மாதங்கள் ஆகிவிட்டதாம். "என் கல்லூரி நாட்களில் இந்த கதையை படித்துவிட்டு இதை படமாக்கி அதில் நடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால், இப்போதுதான் அது கனிந்திருக்கிறது. நான் ஆசைப்பட்டதை என் பிள்ளை செய்கிறார்" என்றார் தியாகராஜன்.

நன்றி: தமிழ் சினிமா:-

2 Responses to "சொந்த செலவில் சூனியம்!":

வெண்பூ says:

//ஆஸ்கார் விருதுக்கு ஆசைப்படுகிற தமிழன் அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம்.//

கவலையே படாதீங்க. அண்ணன் ஜே.கே.ரித்தீஷ் மூலமா முதல் ஆஸ்கார் 'நாயகன்' படத்துக்கு கிடைக்கத்தான் போகுது. ஏன் கவலைப்படுறீங்க.

நல்லதந்தி says:

அண்ணன் ஜே.கே.ரித்திஷ்ற்க்கு இன்னும் ஆஸ்கார் கிடைக்கவில்லையா? ஆச்சரியமாக இருக்கிறது.எனது ஞாபகம் சரியாக இருந்தால் 20 வருடங்களுக்கு முன்பே அவரது கலையுலக பொன்விழா ஆண்டு சேவையைப்பாரட்டி ஆஸ்கார் கொடுத்ததாக என்னுடைய 2வது வயதில் பேப்பரில் படித்ததாக நினைவு.எதற்கும் ஆஸ்கார் கமிட்டியில் விசாரித்துப் பாருங்கள் .....வெண்பூ