முதலில் மராட்டிய மாநிலத்தில் உள்ள சதாரா என்ற இடத்தில் உள்ள கோவிலில் கடந்த 2005-ம் ஆண்டு நெரிசல் ஏற்பட்டு 300 பேர் உயிரிழந்தனர்,அதன் பின்னர் இமாச்சல பிரதேசத்தில் உள்ள நைனோ தேவி மலைக்கோவிலில் கடந்த ஆகஸ்டு 3-ந் தேதி அன்று நெரிசல் ஏற்பட்டு 162 பக்தர்கள் பலியாகினர்.
இந்த இரு சம்பவங்களின் போதே இஸ்லாமிய தீவிரவாதம் இருப்பதாகக் கருதப் பட்டது.இரண்டு சம்பவங்களிலும் குண்டு வைத்திருப்பதாக வந்த புரளியே காரணம் என்று சொல்லப்பட்டது.
மூன்றாவதாக இப்போது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மலைக் கோவிலில் நேற்று அதிகாலையில் நடந்த சம்பவம்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மலைக் கோவிலில் நேற்று அதிகாலை நவராத்திரி விழா நடந்தபோது வெடிகுண்டு புரளி ஏற்பட்டு பக்தர்கள் சிதறி ஓடினார்கள். அப்போது நெரிசலில் சிக்கி 180 பக்தர்கள் உயிர் இழந்தனர்.
பொதுவாக வெடிகுண்டு சம்பவங்களை இந்த இஸ்லாமிய தீவிரவாதிகள் நிகழ்த்துவதன் நோக்கம் சம்பவ இடங்களில் இறக்கும் மனித உயிர்கள மட்டுமல்ல நாட்டில் இந்து-முஸ்லீம், கலவரங்களைத் துண்டுவதும்,நாட்டில் எப்போதும் ஒரு பயம் நிறைந்த சூழ்நிலை மக்களிடையே நிலவவேண்டும் என்பதும்,நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்க வேண்டும் என்பதும் தான்.
எத்தனை வெடிகுண்டு சம்பவங்கள் நிகழ்த்தினாலும் இந்துக்கள் பொறுமையாக இருப்பது அவர்களுக்கு (பாகிஸ்த்தான் அரசுக்கு!) வெறுப்பைத் தோன்று வித்திருக்கக்கூடும்.கோவிலில் இம்மாதிரியான துர்சம்பவங்களை நிகழ்த்தும் போது குண்டு வைப்பதற்க்கான தொந்திரவும் இல்லை,அதற்கான பழியையும் ஏற்கவேண்டியிராது.மற்ற நாடுகளின் கண்டனத்திற்கும் ஆளாகவேண்டியிராது. எல்லாவற்றை விட முக்கியமாக இந்துக்களின் பொறுமையும், பெருந்தன்மையும் இதனால் சிதைந்து போய்விடும்.எனவே இந்த ஆயுதத்தை அவர்கள் கையில் எடுத்திருக்கிறார்கள்.
இந்தியத் திருநாட்டில் மதக் கலவரத்தை நிகழ்த்தி அதன் மூலம் இந்த நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை முடக்கி விடலாம் என்று பாகிஸ்த்தான் அரசு நினைக்கிறது.அதனால்தான் இம்மாதிரியான சம்பவங்கள் இப்போது அடிக்கடி நிகழத்துவங்கியுள்ளன.
மேலும் இணையத்தில் உள்ள சில வலைப் பக்கங்களில் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு ஆதரவாகச் சிலர் எழுதிவரும் கட்டுரைகள்,மத நெறியைச் சீர்குலைக்கும் நோக்கிலும்,முஸ்லீம்கள் இடையே இந்துத் துவேசத்தை பரப்ப நினக்கும் நோக்கிலும் இருப்பது, வெளிநாட்டுச் சதி, பெரும் அளவில் நம் மக்களைப் பின்னியுள்ளது,என்பதையே உணர்த்துகிறது.
நாட்டு மக்கள்,இந்துக்களானாலும்,சரி முஸ்லீம்களானாலும் சரி தங்களைச் சுற்றியுள்ளவர்களை கூர்ந்து கவனிக்க வேண்டிய தருணம் இது.மதத்தின் பேரால் அன்னிய சக்திகளிடம் அடிமையாகாமல் முஸ்லீம் அன்பர்கள் கவனத்துடன் இருக்க வேண்டிய தருணம் இது!.
வந்த செய்தி!
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே மெக்ரன்கார் என்ற பழங்கால கோட்டை உள்ளது. இது ஒரு சுற்றுலா தலம் ஆகும்.
15-ம் நூற்றாண்டில் ஜோத்பூரை ஆண்ட ராவ் ஜோதா என்ற மன்னர், இந்த கோட்டையில் சாமுண்டா தேவி சிலையை நிர்மாணித்து ஒரு அம்மன் கோவிலை அமைத்தார். பழமை வாய்ந்த அந்த மலைக்கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
சக்தி வாய்ந்த அம்மன் என்று கருதுவதால் ராஜஸ்தான் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டு, நவராத்திரியின் முதல் நாள் நேற்று தொடங்கியது. எனவே நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்தே சாமுண்டா தேவி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக நவராத்திரி முதல்நாள் பூஜை நேற்று அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கியது.
நவராத்திரி பூஜையில் பங்கேற்று தேவியை தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் கூடி இருந்தனர். ஆண்களுக்காக தனி வரிசையும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக தனி வரிசையும் அமைக்கப்பட்டு இருந்தது. சாமி கும்பிடும் ஆர்வத்தில் பக்தர்கள் அனைவரும் முண்டியடித்துக் கொண்டு இருந்தனர்.
நேற்று அதிகாலை 5.30 மணி அளவில், கோவிலின் முகப்பு பகுதியில் நின்ற ஆண்கள் வரிசையில் இருந்து கீழே சரிவான பகுதியை நோக்கி சில பக்தர்கள் சறுக்கி விழுந்தனர். அந்த சரிவு பகுதி, 75 மீட்டர் நீளம் கொண்டது ஆகும். இதனால், அந்த சரிவில் நின்ற பக்தர்களும் வழுக்கி விழுந்தனர். இதையடுத்து அந்த பகுதியில் கடும் பீதி ஏற்பட்டது.
சுவர் இடிந்து விழுந்து விட்டதாக ஒரு வதந்தியும், கோவிலில் குண்டு வெடித்ததாக ஒரு புரளியும் கிளம்பின. எனவே, ஆண்கள் வரிசையில் நின்று கொண்டு இருந்த பக்தர்கள் அனைவரும் அலறி அடித்தபடி சிதறி ஓடினர். சுமார் 2 கி.மீ., தொலைவுக்கு குறுகலான பாதையாக இருந்ததால், கடும் நெரிசல் ஏற்பட்டது.
சம்பவம் நடந்தபோது, சுமார் 20 ஆயிரம் பக்தர்கள் அங்கு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிர் பிழைப்பதற்காக ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டு ஓடினர். அதில் சிலர் தடுமாறி கீழே விழுந்தனர். அவர்களை மிதித்துக் கொண்டு மற்றவர்கள் ஓடியதால், காலில் மிதி பட்டு உயிரிழந்தனர். இதனால் ஒரே கூச்சலும், குழப்பமுமாக கேட்டது.
சுமார் 15 நிமிடங்கள் இந்த நெரிசல் நீடித்தது. அதற்குள் 20 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டனர். தனது தந்தையுடன் வந்த 5 வயது குழந்தை ஒன்று, அவர் இறந்தது அறியாமல், `அப்பா, எழுந்திருங்கள்' என்று கதறியது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
இதற்கிடையே சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. உயிர் பிழைத்த பக்தர்களும் போலீசாருக்கு உதவினர். நெரிசலில் சிக்கி காயங்களுடனும் மூச்சுத் திணறியபடியும் கிடந்தவர்களை மருத்துவமனைகளில் சேர்த்தனர். மகாத்மா காந்தி மருத்துவமனை, மதுரா தாஸ் மருத்துவமனை, சன் சிட்டி மருத்துவமனை உள்பட பல்வேறு மருத்துவமனைகளிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். நேற்று மாலை வரை 180 பேர் பலியாகி விட்டனர். மேலும் 60 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலர் கவலைக்கிடமாக உள்ளனர். எனினும், அனைத்து மருத்துவமனைகளில் இருந்தும் வரும் பட்டியலை சரிபார்த்த பிறகே பலியானவர்களின் சரியான எண்ணிக்கை தெரியும். இந்த தகவலை, ஜோத்பூர் மண்டல ஆணையர் கிரண் சோனி தெரிவித்தார்.
சாமுண்டா தேவி கோவிலில் நடந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாநில பேரிடர் நிர்வாக துறை மந்திரி லட்சுமி நாராயண், மாநில உள்துறை செயலாளர் தன்வி ஆகியோர் உயர் அதிகாரிகளுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். நெரிசல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக இருந்த தனி வரிசையில் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கோவிலுக்கு செல்லவும், திரும்பி வரவும் ஒரே வழி மட்டுமே இருந்ததால் பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கோவில் நிர்வாகத்தினர், முன் ஏற்பாடுகளை செய்து இருக்க வேண்டும் என்று பக்தர்கள் கூறினர்.