சத்தியராஜ் கலந்து கொண்ட மனிதச் சங்கிலி விழாவில் (நிகழ்ச்சி?, கலைஞர் கலந்து கொண்டாலே விழாவாத்தான் நினைக்கத் தொன்றுகிறது அவர்தான் இது விழும் அரசல்ல விழா அரசு! என்று சிலேடையாக ஜெயலலிதாவிற்க்குப் பதில அளித்து இன்று வரை விழாவை விடாமலேயே இருக்கிறார்!) அவரைப்பற்றி எந்தப் பத்திரிக்கைகளும் சரியான படி எந்தத் தகவலும் கொடுக்கவில்லை.மைக் இல்லாததால் வாய்க்கு வந்தபடி பேசி தற்காலிகப் புகழ் பெற முடியாத ஆதங்கம் சத்தியராஜிற்கு இருப்பதால் அவருக்கு ஆறுதல் தரும் வகையில் நேரடி ரிப்போர்ட்த் தர நமது விஷேச நிருபரை அனுப்பியிருந்தோம்.
நமது நிருபரின் நேரடி ரிப்போர்ட்!
நடுவில் நின்ற நமீதாவின் ஒன்றை சத்தியராஜும் மற்றொன்றை சிபிராஜும் பிடித்துக் கொண்டு இருந்தனர் ---கையை!. வலது கையால் நக்மா வினுடையதைப் பிடித்துக் கொண்டிருந்தார்.அதே போல் சிபிராஜ் தன் இடது கையால் நிலாவினுடையதைப் பிடித்துக் கொண்டு நின்றார்.இருவரும், அந்த வட நாட்டு மங்கைகளிடம் தமிழை வளர்த்துக் கொண்டு இருந்தனர்.வாழ்க தமிழ்!
மழை வேறு வரவே சத்தியராஜ் குளிருக்காக கையை இறுக்கிக் கொண்டார். நமீதா வலிக்கிறது என்று சொன்னது நமது நிருபரின் பாம்புக் காதுக்கு விழுந்தது.
மனித சங்கிலி முடியும் நேரத்தில் அந்த அதிர்ச்சியான தகவல் நிருபருக்கு எட்டியது .அவர் சத்தியராஜிடம் “சீமானையும்,அமீரையும் கைது செஞ்சிட்டாங்க சார்! “என்றவுடன் ஆவேசமடைந்த சத்தியராஜ் ‘அடக் கேனக்கூ.......”என்று தன் வழக்கமான பாணியில் திட்ட எத்தனித்தவுடன்,பக்கத்தில் நின்ற நமது நிருபர் “சார் இந்த அரசு கலைஞர் அரசு “ என்றவுடன் வாயைப் பொத்திக் கொண்டு சின்னதாகக் கேனக்கூ...என்றார் தன் பழக்கதோஷத்தை விட முடியாமல்!.அது பூனை மியாவ் என்று கத்துவதைப் போலிருந்ததால் அருகில் உள்ள போலீசாருக்குக் கேட்கவில்லை.
நிகழ்சி முடித்ததும் கிளம்பிய சத்தியராஜை வழிமறித்த நமது நிருபர் எங்கே சார் சீமானையும்,அமீரையும் காப்பாற்றுவதற்க்கா? என்றார்.அந்தக் கருமத்துக்கெல்லாம் இப்பொ நேரமில்லை,எனக்கு வேற அர்ஜண்ட் வேலை இருக்கிறது என்றார்.நமீதாவைப் பார்த்துக் கொண்டே!
சார் என்னாங்க சார்! அவங்க பின்னாடியே நிப்போமுன்னிங்க இப்போ வீட்டிற்க்கு கிளம்பறிங்களே! என்று நமது நிருபர் கேட்க ,”வீட்டில ஒரு சின்ன வேலை இருக்குங்க” என்றார்.சுற்றி இருந்தவர்கள் சத்தியராஜையே பார்த்துக் கொண்டிருக்கவே வீர இமேஜைக் காப்பாற்ற வேறு வழியின்றி காவல் நிலையம் சென்றார்.
அடுத்து போலீஸ் ஸ்டேசன் சென்ற சத்தியராஜ் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
”யோவ்! தமிழனென்றால் இளிச்சவாயனா?.ஏன் அந்த நடிகனை கைது செய்யவில்லை?” என ஆவேசத்துடன் கேள்வி கேட்க,”சார் நீங்க சொன்னது வாஸ்தவம் தான் ஆனா அவரு இந்த மாதிரி பேசலையே?.வேணும்முன்னா அவரு எதாவது படத்தில இந்த மாதிரி வசனம் பேசியிருந்தா சொல்லுங்க, கலைஞரிடம் ,அந்த நடிகரால தொந்தரவு இருக்கான்னு கேட்டுட்டு அவரோட அறிவுரைப் படி சட்டம் தன் கடமையைச் செய்யுதுன்னு சொல்லிட்டு கைது செஞ்சிடலாம்” என்றார் அந்த உயர் போலீஸ் அதிகாரி.
”யோவ்! தமிழனன்னா இந்த மாதிரி ஆவேசமா பேசத்தான்யா செய்வான்,அதுக்கப்புறம் பொத்திக்கிட்டு சும்மாதானய்யா இருப்பான்!. என்னிக்காவது சொன்னதைச் செஞ்சிருக்கானய்யா! .எங்களைப் பாத்துக் கூட இன்னும் உங்களுக்குத் தெரியலையா?.என்னய்யா போலீஸ் நீங்க தூ...” என்று காரி உழிந்தார்.அந்த காரி உமிழ்தலில் ஸ்டேசன் சுவர்கள் எல்லாம் வார்னீஷ் போட்டது போல பளீச் சென்று ஆனதைப் பார்த்த போலீசார் சத்தியராஜைப் பார்த்து,” சார் கக்கூசையும் கொஞ்சம் சுத்தம் செய்யணும் சார்!” என்றனர்.
பிறகு ஆவேசமான சத்தியராஜ் மைக்கைக் கண்டது போல ஆவேசமாகப் பேசத்தொடங்கினார்.இரண்டு மணிநேரம் ஆனபிறகும் பேச்சை நிறுத்தாததால்,ஒரு போலீஸ்காரர் உயர் அதிகாரியுடம் கேட்டார்”சார்! ”கட்” சொல்லிடலாமா?.வீட்டுக்குப் போகணும் ரொம்பப் பசிக்குது சார்!”