காலில் முள்ளு குத்தியதால் ஈழத்தமிழர்களுக்காக நடந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ள் முடியவில்லை! சத்தியராஜ் அழுகை!

Posted on Friday, October 24, 2008 by நல்லதந்தி


பிரபு சாலமன் டைரக்ட் செய்துள்ள "லாடம்" படத்தின் பாடல்கள்அடங்கிய சி.டி யை நடிகர் சத்தியராஜ் வெளியிட,டைரக்டர் அமீர் பெற்றுக் கொண்டார்.

விழாவில் ,சத்தியராஜ் பேசியதாவது:-
ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக ராமேஸ்வரத்தில் திரையுலகத்தினர் நடத்திய ஊர்வலத்தில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை.என் வீட்டில் முக்கிய நிகழ்ச்சி இருந்ததால்,என்னால் ராமேஸ்வரம் போக இயலவில்லை

வீடு முக்கியமா ஈழத்தமிழர் முக்கியமா என்பதற்க்கு வீடுதான் முக்கியம் என்ற சத்தியராஜின் உண்மையான பதிலுக்கு பாராட்டுக்கள்.ராமேஸ்வரத்திற்கு எதாவது ஆயிடுமோ அப்படிங்கற பயம் போலிருக்கு!.இவரு மட்டும் போயிருந்தாருன்னா,விதை ரெண்டும் வாய்க்கு வர்ற மாதிரி இவரு போடற சத்தத்துக்கு,ஒரு வேளை சிங்களக்காரன் பயந்து சிலோனை விட்டே ஓடிப் போயிருப்பான்.ஒரு நல்ல விஷயம் நடக்காம போயிருச்சே!.வீட்டில உள்ளவங்க எல்லாம் நல்லாயிருக்காங்களா சார்?.எப்பவுமே நாம செஃப்டியா இருக்கணும் சார்!

இலங்கை தமிழர்களுக்காக,சென்னையில் நாளை மனித சங்கிலி நடைபெற இருக்கிறது.அதில் கலந்துகொள்ளாதவர்கள் குறித்து முதல் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சொல்லப் பட்ட கருத்தை நான் வரவேற்கிறேன்.

அவர் சொன்னது போல்,இந்த போராட்டத்தில் பங்கேற்க்காதவர்கள் தமிழ்
நாட்ட்டில் இருக்கத் தகுதி இல்லாதவர்கள்.இதைகட்சிசார்பாகவோ, யாருக்கோ ஜால்ரா அடிக்கவோ நான் பேசவில்லை.தமிழன் என்ற உணர்வோடு பேசுகிறேன்.

இவரு வீட்டுப் பிரச்சனைக்காக இந்த தடவையும்" எஸ்கேப்"ஆகி விடாமல் இருக்க வேண்டும்.இல்லையன்னா இவருக்கும் தமிழ் நாட்டில் இருக்கிற தகுதி போய்விடும்.இது சென்னையில் தானே நடக்குது அதனால் காலையில சாப்பிட்டு விட்டு தெம்பா போய்டுங்க சார்!

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து கட்சி-மொழி-இன பாகுபாடின்றி
அனைவரும் ஒட்டு மொத்த குரல் கொடுக்க வேண்டும்.

குரல் மட்டும் தானே கொடுக்கச் சொல்றாரு. குரல் தானே கொடுத்திடுவோம் காசாப் பணமா?. வழக்கமா சத்தியராஜ் கொடுக்கிறதுதானே!. காசு கேட்டாத்தானே அவரு காணாமப் போவாரு!

டைரக்டர்கள் சீமான் - அமீர் ஆகிய இருவரையும் அரசியல் கட்சிகள் ஓரம் கட்டுகின்றன.அவர்கள் பேசியது சரியா,தவறா? என்று நான் கூற வில்லை. இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் சீமான் அமீர் பின்னால் நின்று அவர்களுக்கு ஆதரவாய் குரல் கொடுக்க வேண்டும்.


சீமான்,அமீர் மீது உங்களுக்கு என்ன சார் கோபம்! உங்கப் பையனை வெச்சிப் படம் எடுக்கலைன்னா?.நீங்க குரல் கொடுத்துக் கிட்டே பின்னாடி போயிருவீங்க,அவங்க ரெண்டு பேரும் உள்ள போய் களி திங்கணும் அதானே உங்க ஆசை?

எனக்குத் தனிப்பட்ட முறையில் இது போன்ற பிரச்சனை ஏற்பட்ட போது,
திரையுலகம் என் பின்னால் நிற்கவில்லை.திராவிடர் கழகமும்,விடுதலைச்
சிறுத்தைகளும் தான் உதவி செய்தார்கள்.

அண்ணா, தனிப்பட்ட முறையில் என்னத் தியாகம் செஞ்சி உங்களுக்குப் பிரச்சனை வந்துச்சிங்க,உங்கத் தியாகத்தால மக்களுக்கு எதாவது நன்மை கிடைச்சுதாங்க,விபரம் புரியாமல்தான் கேக்குறேன்.ஒரு வேளை தனிப்பட்ட பிரச்சனையன்னா உங்க குடும்பப் பிரச்சனை எதுனாச்சுங்களா?.

ஈழத் தமிழர்கள் நலனுக்காகத்தான் சீமானும்,அமீரும் அப்படி பேசியிருக் கிறார்கள்.எனவே அவர்களுக்கு பின்னால் அனைவரும் நிற்கவேண்டும்.

ரொம்ப உஷாராத்தான் இருக்குறீங்க போலிருக்கு!.ரொம்ப பின்னாடியே போய் கடலிலே விழுந்துடாதீங்க!

இவ்வாறு சத்தியராஜ் பேசினார்.

28 Responses to "காலில் முள்ளு குத்தியதால் ஈழத்தமிழர்களுக்காக நடந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ள் முடியவில்லை! சத்தியராஜ் அழுகை!":

கிரி says:

நல்ல தந்தி ஃபான்ட் சரியா தெரியலை

நல்லதந்தி says:

கிரி சரி செஞ்சிட்டேன்!.இப்ப பாருங்க! :)

கிரி says:

//கிரி சரி செஞ்சிட்டேன்!.இப்ப பாருங்க! //

சரியா இருக்கு :-)

நானும் ஒரு பதிவிட போகிறேன் ;-)

Anonymous says:

திபாளிக்கு முன்னாடியே பத்த வெச்சிட்யே சரவெடியை...

சட்டிராஜ் காது கிழிந்ததாக...Flash News...Sun Tv ல்

நல்லதந்தி says:

//நானும் ஒரு பதிவிட போகிறேன் ;-) //

தூள் கிளப்புங்க தலை!.நானும் படிக்க ஆவலாய் காத்திருக்கேன்!

நல்லதந்தி says:

//சட்டிராஜ் காது கிழிந்ததாக...Flash News...Sun Tv ல்//

வாங்க ப்ரீதாப்பிரியன். சட்டிராஜ் போட்ட சத்தத்தில நமக்கு காது கிழிஞ்சதில்லை.அதுக்கு பழிவாங்கத்தான் இந்த குத்து! :)
(அடடா நானும் சட்டிராஜன்னு எழுதிட்டேனே!.ஒரு வேளை இந்தப் பெயர்தான் அவருக்குப் ரொம்ப நல்லப் பொருந்துதோ?)

கிரி says:

நல்ல தந்தி உங்களை பதிவை படித்து விட்டு கருத்து எதுவும் கூறவில்லை என்று நினைக்க வேண்டாம். என்னுடைய பதிவில் கூற வேண்டி இருப்பதால் அதை இங்கே கூறினால் இரண்டும் ஒன்றாகி விடும் என்றே எதுவும் கூறவில்லை.

உங்கள் மொத்த பதிவிற்கும் என்னுடைய பதிவை என் பின்னூட்டமாக எடுத்துக்கொள்ளுங்கள் :-)

வால்பையன் says:

//சீமான்,அமீர் மீது உங்களுக்கு என்ன சார் கோபம்! //

உங்களுக்கு சத்தியராஜ் மீது என்ன கோபம்

அருப்புக்கோட்டை பாஸ்கர் says:

நம்ம ஆளுங்க வாய்க்கு முன்னாடி மைக் கொடுத்திட்டா என்ன வேணும்னாலும் பேசுவானுங்க ! இதே வேற கட்சி ஆட்சி செய்து கொண்டிருந்தால் இவர்கள் இப்படி பேசவும் துணிவார்களா ?

Anonymous says:

Patha vachuttiyea parattai!

Amam satty raj ennathan ninaithu kondirukkirar.

Ivar rameswaram pohathatharkku

Ivarin veetil function.

Anal manithachangilil oru appavi nadihan avan sontha veetil function irunthal athai vittu vittu manihta changiliyil kalanthu kolla vendum illiyeal avar thamil nattil vazha thahuthi attravara enniya ungal nyayam.

நல்லதந்தி says:

////சீமான்,அமீர் மீது உங்களுக்கு என்ன சார் கோபம்! //

உங்களுக்கு சத்தியராஜ் மீது என்ன கோபம்//
சத்தியராஜிற்கு குறிப்பிட்ட ஒருவரின் மீது மட்டும் என்ன கோபம்?

நல்லதந்தி says:

//நம்ம ஆளுங்க வாய்க்கு முன்னாடி மைக் கொடுத்திட்டா என்ன வேணும்னாலும் பேசுவானுங்க ! இதே வேற கட்சி ஆட்சி செய்து கொண்டிருந்தால் இவர்கள் இப்படி பேசவும் துணிவார்களா ?//

அதிமுக ந்னு தெளிவாத்தான் சொல்லுங்கள்!.அதை நினைத்தாலே இந்த கும்பலுக்கு ஜன்னி வந்து விடுமே அப்புறம் எங்கே மைக்கில பேசறது! :)

நல்லதந்தி says:

//Anal manithachangilil oru appavi nadihan avan sontha veetil function irunthal athai vittu vittu manihta changiliyil kalanthu kolla vendum illiyeal avar thamil nattil vazha thahuthi attravara enniya ungal nyayam.//

சத்தியராஜின் இந்த எரிச்சலான நடவடிக்கைக்குத்தான் இந்த பதிவே! :)

Anonymous says:

இவனுங்க திருந்தவே மாட்டாங்களா.

Anonymous says:

:)):))

Anonymous says:

Dr. Kalaignar M. Karunanithy
Chief Minister of Tamil Naad,
Respected Sir,
The Tamil People of Sri Lanka are glad that Tamil Naad has started showing interest in the Sri Lankan ethnic problem. But they are disappointed that the concerns of the Tamil People now trapped in the areas under the control of the LTTE are ignored. LTTE is using them as human shield to protect them. The People are also upset and worried that the enthusiasm displayed in Tamil Naad is showing tendencies of confrontation with the majority community the Sinhalese, with whom the Tamils had been living from time immemorial and will have to live in the future as well. Long before his assassination Mahatma Gandhi had warned that India and Ceylon can’t afford to quarrel each other, but more than that being immediate neighbours and having several things in common, Tamil Naad and Sri Lanka should maintain cordial relationship between the two.
We Sri Lankans remember with gratitude the innumerable detections in Tamil Naad, made by both the “Q” branch of the Tamil Naad Police and the Indian Navy, of several tons of material, including steel balls, aluminum foils, ball bearings and chemicals, used for the manufacture of bombs, claymore mines hand grenade etc. The credit goes to your Police of Tamil Naad and the Indian Navy for the detections, and if those detections had not taken place only God knows as to what would have happened to our countries. We are not un-mindful of what can happen to our country, if the LTTE is allowed to operate freely in Tamil Naad and that is why I re-iterate that both Tamil Naad and Sri Lanka should maintain close relationship between them. We can’t forget so easily as to what happened to Hon Rajiv Gandhi and there is no guarantee that a similar incident will not take place again, if the LTTE is allowed to operate freely in Tamil Naad. Please see that a Jaffna is not created in Tamil Naad.
The decision of the All Party Conference to seek the help of the Central Government to find an early solution is perfectly alright. But that is not the immediate need of our people trapped and kept under compulsion in Killinochchi by the LTTE. The decision of the All Party conference would have been more appropriate if it had also decided to request the Central Government to compel the LTTE to release the innocent civilians detained by force in areas under their control. The ultimatum of two weeks given to the Central Government to act has caused a furore among the hardliners in Sri Lanka, causing embarrassment to the Sri Lankan Government, which is aware of the compelling need to maintain good relationship with India.
I hope you will concede that all those who are in the fore-front of the campaign hardly know anything about the happenings in Sri Lanka and act only on the testimony of some LTTE supporters, who themselves are mis-led by some others. They never bother to find out the truth. Tamil Naad should be warned of the danger in acting on the advice of the TNA Members of Parliament who were fraudulently elected as members with the fire power of the LTTE and they act only as proxies of the LTTE. They carry out LTTE’s orders. No one cared to come to Sri Lanka to find out the truth. The people in Sri Lanka live in constant fear and tension due to the LTTE’s claymore- mine, land- mine and hand- grenade attacks that are taking place everyday in some part of Sri Lanka. That had caused the death of several innocent Sinhala Tamil and Muslim people. This is perhaps why no one from India undertakes a trip on a fact finding mission to Sri Lanka. It is this menace that we are trying to get rid of.
Hope you will recollect our first meeting in early 1976, over thirty years back. I was then the Member of Parliament for Killinochchi. Why we met is irrelevant here. But imagine what my feelings would be to see the people, with whom I lived for very many years, now living under the subjugation of the LTTE, deprived of almost all their rights and detained under compulsion for well over quarter of a century. You say that you are unable to eat or sleep with the Tamil problem not solved. If so Sir, how can I live peacefully?
Things are going from bad to worse everyday. But due to the false propaganda by the agents of the LTTE, the innocent people, cinema actors, university students of Tamil Naad hail them as heroes. If Tamil Naad wants a Jaffna without realizing the consequence only God can save it. But is Tamil Naad fair by the other States in exposing them also to the grave risk they face from suicide bombs, claymore mines etc. The children of the LTTE leaders have the best of education in Foreign Countries. So are the children of the TNA Members of Parliament too. The TNA Member’s families are settled in foreign countries. The children of the poor parents are sent to the battle front as sacrificial animals and as suicide bombers. They killed the Ex Prime Minister of India in Tamil Naad. They took away all the properties of the Muslims of the North who are Tamil speaking and lived with us for generations. They sent them out of the North with just 500 Rupees to live in refugee camps in the Sinhalese areas for over 17 years now. Our culture and civilization are gone. Our children’s education is ruined. According to recent news reports over six thousand children in the East do not know their alphabets.
The following are extracts from two letters I wrote to the Hon Dr. Manmohan Singh – Prime Minister of India and to the Secretary General of the United Nations His Excellency Ban-Ki-Moon the purpose of which is to impress on you that the LTTE had not shown any change in their behavior.
In my letter dated 16-01-2006 I wrote to the Hon. Prime Minister, “What the Sri Lankan Tamils need today is liberation from the LTTE, the so called liberators of the Tamils. It is very unfortunate that some leaders of Tamil Naad, without understanding the real problem fully and with hardly any knowledge of the ground situation in the North and the East of Sri Lanka, are trying to hold the Indian Government to ransom, with its numerical strength in Parliament. The Tamil Naad Members of Parliament who have joined the alliance should stop their veiled threats to the Government. They should study the situation and either help to find a solution or leave the matter entirely in the hands of the Central Government, to help the Sri Lankans to find a solution for their problem”.
In my letter dated 08-10-2005 to the Secretary General of United Nations I wrote, “ I take full responsibility for all what I have said here. The people who had been living in areas under the control of the LTTE sacrificed enough and it should be noted that all their sacrifices, tolerance and sufferings were all borne by them for the sake of their children. Now with a demand from the LTTE for one person from each house-hold they are prepared to defy the LTTE and revolt against them. They are also prepared to welcome and give all co-operations for a friendly army that will give an undertaking to give protection for their lives and properties inspite of any provocation that they may have to face, while engaged in the process of liberating them” .

I quote two paragraphs from my letter written to you when you had good relationship with both Mr. Vaiko and Mr. Nedumaran dated 08.10.2005 I wrote thus, “ In the interest of the Tamils of Sri Lanka the leaders of Tamil Naad should forget all their political differences and get together to find a solution to the ethnic problem. I have had discussions with a number of Sinhalese leaders of political parties most of whom are agreeable to accept a solution based on the Indian pattern of devolution. I am confident that there will be hardly any opposition to this proposal. We Tamils in Sri Lanka can’t expect anything more than that since we know the Indian attitude towards the creation of a separate Tamil State. Successive Governments of India had clearly spelt out that they can’t support separation. The Tamils of Sri Lanka can’t confront India on this issue”.

“You will be doing a great service to the Tamil People of Sri Lanka who are living in total subjugation in areas under the control of the LTTE. I am confident that you have the capacity to convince leaders like Hon.Vaiko and Mr.Nedumaran of the need for an early solution bases on the Indian pattern of devolution. It will be acceptable to a larger section of the Sinhalese, Tamils and Muslims as well. Having convinced the Leaders of Tamil Naad you should take up this issue with Delhi and through Delhi with the Sri Lankan Government. Your facilitation for talks on this basis will certainly bear fruit and will also be welcomed by the International Community. It will not be rejected by any body. The leaders of Tamil Naad too should feel glad to play a role in finding a solution to a long standing problem”.
Sir, we missed a good opportunity in October in 2005. Another opportunity has now come on your way to intervene and help to solve the ethnic problem easily. In an interview to the PTI too Members of Parliament of the TNA who are proxies of the LTTE had said that they are agreeable for a reasonable solution within a united Sri Lanka. This stand will certainly make things easy for you to help to find a solution. Please act immediately without any hesitation.
Thanking you,
Yours Sincerely
V.Anandasangaree
President -TULF
http://www.thenee.com/html/241008-6.html

Bleachingpowder says:

வாயை தொறந்தா தமிழு தமிழு புலம்புற இவர் படத்துல ஜோடி சேரரது பெரும்பாலும் கேரளா, மும்பை பொண்ணுங்களுடன் தான். ஏண்டானு கேட்டா, நான் இயக்குனர்களின் சுதந்திரத்தில் தலையிடுவதில்லை ஒரு டயலாக். சரி நீ தான் ஒரு படத்தை(கருமத்தை) டைரக்ட் பண்ணுனீயே அதுல ஏண்டா ஒரு தமிழ் பொண்ணுக்கு வாய்ப்பு கொடுக்கலேனு கேட்டா மண்டைய சொறியராரு நம்ம புரட்சி தமிழன்.

சரி போனது போச்சு, நீ தயாரிச்சு உன் பையன ஹீரோவா வச்சு ஒரு படம் எடுத்தில அதுலையாவது ஒரு தமிழ் பொண்னுக்கு வாய்ப்பு கொடுத்தியானா அதுவும் இல்லை. டெல்லியில் இருந்து நிலான்னு ஒரு குட்டிய உன் பையனுக்கு ஜோடியா போட்டாரு.

அப்புறம் அப்பாவும் பையனும் நமிதா கூட போட்டி ஜோடியா நடிக்குறீங்க.

இப்படி பிசியா இருக்குற உங்கள போய் ராமேஸ்வரத்திற்கு கூப்பிட்ட பாவம் நீங்க எப்படி போவிங்க.

ஆனா ராமேஸ்வரத்திற்கு போனவங்க எல்லாம் மற கழண்டு மாதிரி ஆயுதம் எடுப்போம், கடலை தாண்டுவோம் உளரிட்டு வந்தாங்க. நீங்க போயிருந்தா என் பொண்டாட்டி கூட நான் படுத்தா உனக்கென்ன சிங்கள அரசாங்கத்தை வாங்கு வாங்குனு வாங்கியிருப்பீங்க. தமிழ்நாட்டோட மானம் கொஞ்ச நாளைக்கு முன்னால் மாநிலம் தாண்டி போன மாதிரி, இந்த முறை கடல் தாண்டியும் போயிருக்கும்.

இப்பவும் ஒன்னும் கெட்டு போகல. நாளைக்கும் காலையில உங்க விட்டம்மா கோவிலுக்கும் போய் பூஜை, புனர்ச்காரம் எல்லாம் பண்ணிட்டு சூடா இட்லி, வடை, பொங்கல் எல்லாம் செஞ்சு தருவாங்க, ஒரு கட்டு கட்டிட்டு போயிருங்க. சாயாங்கலாம் ஆறு மணி வரைக்கும் தாங்கும்.

எச்சி கையால தமிழனுக்கு காக்க ஓட்டாத சத்தியராஜுக்கு புரட்சி தமிழன், புண்ணாக்கு தமிழன்னு ஒரு பட்டம் வேற...

நல்லதந்தி says:

வாங்க அனானி!.ஆனந்த சங்கரியின் கட்டுரையை துக்ளக்கிலும் படித்தேன்.விடுதலைப் புலிகளைப் பற்றி நமக்கு ஓரளவிற்குத் தெரிந்தாலும் உள்ளூர்காரர் அவர்களைப் பற்றி சொல்லும்தான் அங்கு நடக்கின்ற விஷயங்கள் நமக்குப் புரிகிறது.உண்மைக்கு மிக அருகினில் போவோம்.

நல்லதந்தி says:

//இப்பவும் ஒன்னும் கெட்டு போகல. நாளைக்கும் காலையில உங்க விட்டம்மா கோவிலுக்கும் போய் பூஜை, புனர்ச்காரம் எல்லாம் பண்ணிட்டு சூடா இட்லி, வடை, பொங்கல் எல்லாம் செஞ்சு தருவாங்க, ஒரு கட்டு கட்டிட்டு போயிருங்க. சாயாங்கலாம் ஆறு மணி வரைக்கும் தாங்கும்.

எச்சி கையால தமிழனுக்கு காக்க ஓட்டாத சத்தியராஜுக்கு புரட்சி தமிழன், புண்ணாக்கு தமிழன்னு ஒரு பட்டம் வேற....//

வாங்க ப்ளீச்சிங், பட்டைய கிளப்புறீங்க போலிருக்கு!

ஆட்காட்டி says:

புண்ணாக்காதேயுங்கோ.

Anonymous says:

வைகோ, சீமான், அமீர் மூவரும் தண்ணீர் கூட குடிக்காமல் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போகிறார்களாமே?

உண்மையா?

Anonymous says:

புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கம்..அதை ஆதரிப்பது தேச விரோதம் , இந்தியாவின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் முயற்சி , என்று தொடர்ச்சியான கூப்பாடுகளை எழுப்பி அந்தச்சூட்டில் குளிர்காய நினைக்கும் இந்தியாவின் தேசியவியாதிகளுக்கும் , கதர்ச்சட்டைச் சிங்கங்களுக்கும் எமது கேள்விகள்....

ஒரு கேள்விக்காவது உங்களால் பதில் சொல்ல முடிந்தால் நாம் வெகுவாக மகிழ்ச்சியடைவோம்!

ராஜிவை கொன்றவர்கள் புலிகள் என்கிறீர்கள்...சரிதான் , இருந்துவிட்டுப்போகட்டும் , அதற்காக புலிகளை ஒழிக்க வேண்டும் என்கிறீர்கள்....புலிகள் தமிழர்கள்தானே??? சீக்கியர்கள் தானே இந்திராவைக்கொன்றார்கள்??? ஒட்டுமொத்த சீக்கியர்களை கொன்றொழித்தா விட்டீர்கள்?? இல்லையே , ஒரு சீக்கியரை பிரதமராக்கி அழகு பார்க்கும்போது தமிழினத்தின் மீது மட்டும் ஏன் ஒரே வஞ்சனை???


அதே ராஜிவ் காந்தியை , சிறிலங்காவிற்கு , தலைநகரான கொழும்புவிற்கு பயணித்த போது ஒரு சிங்களன் துப்பாக்கியால் பின்மண்டையை அடித்தானே அப்போது எங்கே போயிற்று உங்கள் தேசப்பற்று??? சிங்களன் இந்தியாவை அவமதித்துவிட்டான் என்று ஒரு தூசு தட்டும் போராட்டத்தையாவது நிகழ்த்தியிருந்தால் சொல்லுங்கள் !! முடியுமா ?? முடியாதல்லவா???


சிங்களத்தின் இறையாண்மைக்குட்பட்ட தீர்வு என்று கூச்சலிடும் பார்ப்பன பயங்கரவாதிகளே , கிழக்கு பாகிஸ்தான் என்ற பாகிஸ்தானின் ஒரு அங்கமான பிரதேசத்தை உங்கள் ஆயுதத்தை பிரயோகித்து சற்றேறக்குறைய பிடுங்கித்தந்தீர்களே , அப்போது பாகிஸ்தானின் இறையாண்மை பாதுகாக்கப்படவில்லை என்ற எண்ணமே உதிக்கவில்லையா உங்களுக்கு ? அன்றைக்கும் கதர்ச்சட்டை தானே ஆட்சியில் இருந்தது???

இன்றைக்கு ஈழப்பிரச்சினை இலங்கையின் உள் விவகாரம் என்று ஒதுங்க நினைக்கும் இந்தியப்பேரரசே , அன்றைக்கு ஏன் அமைதிப்படையை அனுப்பினாய் ???

இலங்கையின் இறையாண்மைக்குட்பட்ட தீர்வுக்கு அமைதி வழியே சிறந்தது என்று புண்ணுக்கு புனுகு பூசும் கலையில் தேர்ந்த ஆலோசகர்களைக் கொண்டு புளுகு மூட்டையை அள்ளி வீசும் அரசே , சிங்களனுக்கு மட்டுமேன் ஆயுதம் கொடுக்கிறாய் ?? ஒருவன் கையில் கத்தியைக்கொடுத்துவிட்டு , மற்றொருவனை நிராயுதபாணியாக நிறுத்தி , இருவரையும் மேஜையில் உட்கார்ந்து "நல்லாப்பேசுங்கப்பா" என்று சொல்வதுதான் நடுநிலைமையா ??

சரி , கடல் தாண்டி சாகும் தமிழன் பற்றித்தான் கவலையில்லை , கடலில் மீன் பிடிக்கச்செல்லும் எம் தமிழக ( இந்திய ) மீனவன் பற்றிய கவலை கூட ஏன் இல்லை??? கச்சத்தீவில் வலையுலர்த்த அனுமதிக்குமாம் சிங்களம் , இன்றைக்கு பிரணாப்ஜி பாராளுமன்றத்தில் சொல்கிறார்....யார் வீட்டுச்சொத்தய்யா கச்சதீவு??? யாரைக்கேட்டுக்கொடுத்தீர்கள் சிங்களத்துக்கு ? இன்றைக்கு ஏன் இந்தியா , வலையுலர்த்தும் அனுமதிக்காக பிச்சையெடுக்கிறது???? இதே கொஞ்சம் காத்து வாங்க , காஷ்மீரில் ஒரு ஏக்கர் வேண்டுமென்று கேட்டால் கொடுத்துவிடுவீர்களா??? ஏன் இந்த பாரபட்சம்???

சரி , ஒன்று பட்ட இந்தியாவுக்குள் தனித்தமிழகம் என்ற பேச்செடுப்பது தவறு...ஆதங்கங்கள் ஆயிரமிருந்தாலும் ஒத்துக்கொள்கிறோம்!!!! ஆனால் , ஒன்றுபட்ட இந்தியா என்பதற்கான செயல்பாடுகள் இருக்கின்றன என்று உங்களால் உறுதியாகச்சொல்ல முடியுமா???

கர்நாடகா தண்ணீர் தரமாட்டேன் என்றது...சரியென்று நாம் சர்வ வல்லாண்மை பொருந்திய உச்சநீதிமன்றத்துக்கு போனோம் , அங்கேயும் உத்தரவு வந்தது ..ஆனால் காகிதத்துக்குண்டான மதிப்பைக்கூட கர்நாடகா காட்டவில்லையே?? கர்நாடகம் மட்டுமல்ல , பெரியார் நீர்த்தேக்கத்திலும் தமிழகம் தொடர்ச்சியாக வஞ்சிக்கப்படுகிறதே.....அதற்கென்ன செய்தது உங்கள் தேசியம்??

இராணுவத்தை அனுப்பி மதகுகளை திறந்து , தமிழக விவசாயியின் வயிற்றில் பாலை வார்த்திருந்தால் இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஒரு "ஓ" போட்டிருக்கலாம்...ஒன்றுமே செய்ய முடியவில்லையே இந்திய அரசால் , இந்திய சட்டத்தால்......வெறும் குப்பன்களின் , சுப்பன்களின் வரப்புத்தகராறைத் தீர்க்க மட்டுமே சட்டமென்றால் , அந்தச்சட்டம்தான் எதற்கு ???

காவிரித்தகராறில் கருநாடக வாழ் தமிழர்கள் அடித்து விரட்டப்பட்டனரே , அன்றைக்கு உங்கள் இந்திய இறையாண்மை தமிழர்களை காப்பாற்றி இருந்தால் , அல்லது முயற்சியாவது செய்திருந்தால் இன்னும் வலுவாக "ஓ" போட்டிருப்போம்..!!!! ஆனால் என்ன செய்தது இந்திய நடுவண் அரசு???

இன்றைக்கும் தமிழகம் வந்தாரை வாழவைத்துக்கொண்டிருக்கிறது...மாற்றுமொழியாளர்களாயிருந்தாலும் தம் சொந்தங்களாகவே கருதி வாழ்ந்துகொண்டிருக்கிறது....அவ்வளவு ஏன் தமிழகத்தின் மிகப்பெரும் அரசியல் இயக்கங்களின் தலைவர்களில் பெரும்பான்மையானோர் தமிழை தாய்மொழியாக கொண்டிராதவர்கள்!!!!!! கடந்த அரை நூற்றாண்டின் பெரும்பகுதியை தமிழைத்தாய்மொழியாக கொண்டிராதவர்களே ஆண்டிருக்கிறார்கள் என்பது வரலாறு!!

அதிமுகவின் தலைவியோ ஒரு பார்ப்பனர் , கன்னடர் .... இன்றைய தமிழ் மாநில காங்கிரசின் தலைவரோ ஒரு தெலுங்கர் , தேமுதிக என்னும் வளரும் இயக்கத்தின் தலைவரோ ஒரு தெலுங்கர் , மதிமுக என்னும் இயக்கத்தின் தலைவரோ ஒரு தெலுங்கர் கூட , இன்றைக்கு ரசிகர்கள் கட்சி ஆரம்பித்தால்தான் ஆச்சி என்று முழங்கும் ரஜினி கூட ஒரு கன்னடர்/மராட்டியர்தான் , நேற்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் ஒரு மலையாளி...

இப்படி , தம்மை ஆளும் ஆட்சியாளர்களிடம் கூட வேற்றுமையே பார்த்தறியாத தமிழினம் இப்படியே வாழாவிருந்துவிடும் என்ற நம்பிக்கையில்தானே எங்கள் உணர்வுகளை புறந்தள்ள பார்க்கிறீர்கள் இந்திய தேசிய வியாதிகளே???

இதே கேரளாவிலோ , ஆந்திராவிலோ , கர்நாடகத்திலோ , மராட்டியத்திலோ ஒரு தமிழன் எம்.எல் ஏ ஆகக்கூட முடிவது சந்தேகம்தான்!!! எங்களிடம் வந்து தேசியம் பேச என்ன தெனாவெட்டு இருக்க வேண்டும் உங்களுக்கு ??? உங்களிடம் தேசியம் கற்றுக்கொள்ளும் நிலையிலா நாங்கள் இருக்கிறோம்????

உச்சநீதிமன்றம் என்கிறீர்கள்...அது தலைநகரில் இருக்கிறது என்கிறீர்கள்...சந்தோசம்தான் , இங்கிருந்து சற்றேறக்குறைய ஒரு மூன்று நாள் பயணித்தால் சென்று சேரக்கூடிய ஊர் அது!!!!! பக்கத்து ஊருக்கு பஸ்ஸுக்கு கூட போக காசில்லாதவர்களை விட்டுவிடலாம்!!!!

ஆனால் பணமிருந்தும் டெல்லி போனால் , அங்கே எங்களுக்கு சம்பந்தமில்லாத வேறு தேசத்திற்கு வந்தது போலல்லவா உணர்கிறோம், இதில் மதராஸி என்ற கேலி வேறு!!!!!! எங்கள் மொழியில் பேசுவதில்லை அங்கே , எங்களைப்பற்றி என்ன சொல்கிறார்கள் அங்கே என்று கூடத் தெரிவதில்லை...எங்களை விட வெகு தொலைவில் டெல்லியை விட்டு யாரும் இருக்கவில்லை...அதனால் எங்களுக்குதான் அந்த வேதனை தெரியும்!!!!! இருந்தும் நாம் இந்திய தேசியத்துக்கு கட்டுப்பட்டுத்தான் காலம் ஓட்டிக்கொண்டிருக்கிறோம்...!!!

இத்தனை அளப்பரிய தியாகங்களை செய்து இந்தியாவின் இறையாண்மையைக்காப்பாற்றும் எங்களுக்கு நீங்கள் புலியை பற்றி பேசினால் இறையாண்மை போய்விடும் என்று பாடம் எடுப்பது , எட்டாங்கிளாஸ் வாத்தியார் ஏரோப்ப்ளேன் ஓட்டுவது போலில்லையா???

சரி இறையாண்மையை விடுங்கள், தடை செய்யப்பட்ட இயக்கம் பற்றி பேசக்கூடாது என்று சொல்லும் உங்களுக்கு , இந்திய நடுவண் அரசே தடை செய்யப்பட்ட இயக்கங்களோடு பேசிய கதை தெரியுமா ? தெரியவில்லை இன்றால் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்!!!!!

Anonymous says:

//வைகோ, சீமான், அமீர் மூவரும் தண்ணீர் கூட குடிக்காமல் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போகிறார்களாமே?

உண்மையா?//

உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பை புண்ணாக்குவது என்பது இதுதானா?

Madhu Ramanujam says:

நல்ல நகைச்சுவை உணர்வு கொண்ட அரசியல் பேச்சு!

//புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கம்..அதை ஆதரிப்பது தேச விரோதம் , இந்தியாவின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் முயற்சி , என்று தொடர்ச்சியான கூப்பாடுகளை எழுப்பி அந்தச்சூட்டில் குளிர்காய நினைக்கும் இந்தியாவின் தேசியவியாதிகளுக்கும் , கதர்ச்சட்டைச் சிங்கங்களுக்கும் எமது கேள்விகள்....//

இவரு அவருதானான்னு தெரியலை. ஆனால் இதே மேட்டரோட ஒரு பதிவு படிச்சேன். சில கேள்வி நல்லா இருந்தாலும், பல அரைவேக்காட்டுத் தனமாவே இருக்கு. இவருக்கு பதில் சொல்ல தனியா ஒரு பதிவு தான் எழுதணும்.

Anonymous says:

இந்த இணைப்பில் உள்ள உண்மை சம்பவத்தை பாருங்கள்.. நெஞ்சம் பதறுகிறது.

http://www.spur.asn.au/kattankudi_muslim_mosque_massare_by_ltte_1.htm

http://www.spur.asn.au/LTTE_20080529_Artillery_Attack_Jaffna.htm

http://www.spur.asn.au/LTTE_Atrocities_20061207_Somadevi_School_Massacre.htm

http://www.spur.asn.au/LTTE_Bomb_20080116_Okkampitiya_Monaragala.htm

Krish says:

//// புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கம்..அதை ஆதரிப்பது தேச விரோதம் , இந்தியாவின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் முயற்சி , என்று தொடர்ச்சியான கூப்பாடுகளை எழுப்பி அந்தச்சூட்டில் குளிர்காய நினைக்கும் இந்தியாவின் தேசியவியாதிகளுக்கும் , கதர்ச்சட்டைச் சிங்கங்களுக்கும் எமது கேள்விகள்....
////
பட்டய கிளப்பிடீங்க!!!

Anonymous says:

இந்த தமிழ்நாடு காங்கிரஸ் காரனுகளுக்கு சோனியா முந்தானைய புடிச்சிகிட்டு பின்னலையே போகதத் தான் தெரியும்!
சொந்தமாக் கருத்து சொல்லகூட திராணியில்லாத அடிமைகள்! நாட்டுக்காக போராடற புலிங்க தீவிரவாதிகள், அப்போ எல்லா எடதளையும் குண்டு வைக்கிற சிமி புரட்சிகரர்களா? உபி உயர்நீதிமன்றம் சிபி மேல இருந்த தடைய நீகுது!!!
என்ன கொடுமை சரவணா இது?

Bleachingpowder says:

//இந்தியாவின் தேசியவியாதிகளுக்கும் , கதர்ச்சட்டைச் சிங்கங்களுக்கும் எமது கேள்விகள்....ஒரு கேள்விக்காவது உங்களால் பதில் சொல்ல முடிந்தால் நாம் வெகுவாக மகிழ்ச்சியடைவோம்!//

அட பதறுங்களா !!!! சுப்பரமணியசாமி மாதிரி லூசுத்தனமா கேள்வி கேட்டுட்டு இதுல ஒரு கேள்விகாவது பதில் சொல்ல முடியுமானு சவால் வேற. எங்கயிருந்தய்யா நீங்களாம் வரீங்க. பேர சொல்ல கூட தைரியமில்லை, ஆனா ஆயுதம் எடுப்போம், கடலை தாண்டுவோம் முண்டாசு கட்டிட்டு வந்தரீங்க. அட போங்கய்யா.

முதல்ல ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். தமீழீழம் என்பது எங்கள் நாட்டு பிரச்சனை அல்ல, இது எங்கள் அண்டை நாட்டில் நடக்கும் உள்நாட்டு பிரச்சணை. அண்டை நாட்டு அரசாங்கத்துடன் சுமுக உறவு வைத்திருக்க் அவர்களுக்கு எங்களால் ஆன எல்லா உதவிகளையும் செய்வோம். எங்கள் நாட்டில் புலிகள் என்ற தீவிரவாத அமைப்பு, பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம், பொதுக்கூட்டம் என மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் மறைந்திருந்து பொட்டை தனமாக பொதுமக்களை கொண்று குவிக்கிறார்கள், அதனால் எங்களுக்கு ஆயுதம் தந்து உதவுங்கள் என்ற இலங்கை அரசாங்கம் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து இந்திய அரசாங்கம் அவர்களுக்கு பயிற்ச்சியும் ஆயுதங்களையும் வழங்கியது.

இந்தியா ஆயுதம் வழங்க கூடாது என புலம்பும் நீங்கள் மட்டும் என்ன வேல் கம்பை வைத்துக் கொண்டா சண்டை போடுகிறீர்கள். நீங்கள் கள்ள சந்தையில் எல்லா நாட்டோட ஆயுதங்களை வாங்கி இலங்கை ராணுவத்தோடு சண்டை போடுவீற்கள். ஆனால் அவர்களுக்கு இந்தியா எந்த ஆயுதமும் வழங்க கூடாது.... என்னங்கடா நியாயம் இது.

தமிழர்கள் மீது தாக்குதல் நடந்தால் அதை படமாகவும், வீடியோவாக உலகம் பூரா வெளிட்டு வருகிறீர்களே. நிங்கள் நடத்தும் மணித வெடிகுண்டு தாக்குதலால் பலியான பொதுமக்களின் படங்களை என்றேனும் பார்த்ததுண்டா... அதில் பலியான பொதுமக்களுக்கும் அதே வலியை தானே அனுபவித்திருப்பார்கள். சிங்கள மக்களுக்கும் மட்டுமென்ன உடம்பு இரும்புலையா செஞ்சிருக்காங்க.

வந்துட்டாங்க நியாயம் பேச சொம்போட...