Showing posts with label புதிர். Show all posts
Showing posts with label புதிர். Show all posts

சொன்னது யார்?.கண்டு பிடிங்க பாக்கலாம்!

Posted on Thursday, September 25, 2008 by நல்லதந்தி

இது ஒரு வழக்கம் போல் அரசியல் பதிவுதான்.ஆனாலும் ஒரே வித்தியாசம்,இது எந்த பிரச்சனைக்காகவும் எழுதப் பட்டதல்ல!.ஒரு புதிர் அவ்வளவுதான்.


கீழே உள்ள பத்தியைச் சொன்ன நபர் யார்?.இதைக் கண்டுபிடிப்பவர்களுக்கு வாழ்த்துகள் மட்டும் மனம் போல் அள்ளி வழங்கப் படும்!

ஜெயலலிதா குற்றங்கள் புரிந்திருப்பின் அவர் மீது வழக்குப் போட்டு, வழக்குகளை முறையாக நடத்தி,குற்றங்களைச் சட்டப்படி நிரூபித்த பிறகு எத்த்னை ஆண்டுகள் வேண்டுமானாலும் சிறைச்சாலைக்கு அனுப்பட்ட்டும். ஆனால் கடந்த சில மாதங்களாகத் தமிழகத்தில் நடைபெற்று வரும் நடவடிக்கைகள் அப்பட்டமான பழி வாங்கும் நடவடிக்கைகள்.கொடூரமான அத்துமீறல் செயல்கள் என்ற உணர்வினைத் தான் பரவலாக ஏற்படுத்தியுள்ளது. அதற்கு மகுடம் வைத்தது போன்றதே ஜெயலலிதாவின் மீது எடுக்கப்பட்டுள்ள கைது நடவடிக்கை!.”

இந்த வாசகத்தைச் சொன்னவர் யார்?

சோ
இல.கணேசன்
கி.வீரமணி
தா.பாண்டியன்
அத்வானி
வாஜ்பாய்
சோனியா
நல்லகண்ணு
சுப்ரமணிய சாமி
ராமதாஸ்

கண்டு பிடிங்க மக்கள்ஸ்!



விடையைச் சொல்லி விடும் நேரம் வந்துவிட்டது!.
நண்பர் அருவை பாஸ்கரும்,தமிழிஷில் நண்பர் கொம்பனும் சரியான விடையான “கி.வீரமணி” யைச் சொல்லி என்னிடமிருந்து அளவில்லா வாழ்த்துக்களை “மட்டும்” பெற்றுக்கொள்கிறார்கள்.இன்னொரு நண்பர் பின்னூட்டம் பெரியசாமி சந்தேகத்துடன் வீரமணியின் பெயரைக் குறிப்பிட்டதால் ஆறுதல் வாழ்த்தை மட்டும் பெறுகிறார். :)

சத்திரத்தில் ஒரு ராத்திரி! அல்லது கட்டிலில் கணக்கு பண்ணலாம்!

Posted on Saturday, August 16, 2008 by நல்லதந்தி

சத்திரத்தில் ஒரு ராத்திரி! அல்லது கட்டிலில் கணக்கு பண்ணலாம்!
இது மளையாளப் பட விமரிசனம் அல்ல!.சூட்டிற்காக வைக்கப் பட்ட தலைப்பும் அல்ல!.

தவறாக வந்து,விஷம விஷயம் இல்லாது போனதால் மனத்திற்குள் திட்டுபவர்கள் மன்னிக்க.

இது ஒரு புதிர் கணக்கு!.

இதைப் படித்து விட்டு அட நல்லயிருக்கே! என்பவர்களின் பாரட்டு கே.நடராஜன் என்பவருக்கு போகட்டும். அடச்சீ! இதல்லாம் ஒரு புதிரா என்று திட்டுபவர்களும் அவரையே திட்டிக்கொள்ளுங்கள்.ஏன்னா? புதிர் அவரோடது!


ஒரு நாள் இரவு ஒரு சத்திரத்தில் தங்குவதற்கு 10 வழிப்போக்கர்கள்,இடம் தேடி வந்தனர்.

அந்தச் சத்திரத்திலோ 9 கட்டில்கள் மட்டுமே இருந்தன.ஆனால் ஒவ்வொருவரும் தமக்குத் தனித்தனியாக ஒரு கட்டில் வேண்டுமென்று வற்புறுத்தினர்.

சத்திரத்தின் நிர்வாகி சற்று நேரம் யோசித்தார்.பிறகு ஒரு ஐடியா செய்தார்.10 ஆசாமிகளில் இரண்டு பேரைக்கூப்பிட்டு, முதல் கட்டிலில், கொஞ்ச நேரத்துக்கு படுத்துக் கொள்ளுமாறு வேண்டிக்கொண்டார்.

மூன்றாவது ஆசாமியை இரண்டாவது கட்டிலில் படுத்துக்கொள்ளுமாறு சொன்னார்.நான்காவது ஆசாமியை மூன்றாவது கட்டிலிலும்,ஐந்தாவது ஆசாமியை நான்காவது கட்டிலிலும்,ஆறாவது ஆசாமியை ஐந்தாவது கட்டிலிலும் ,இதே வரிசைப் படி..கடைசியாக ஒன்பதாவது ஆசாமியை எட்டாவது கட்டிலில் படுக்கச் செய்தார்.

ஒன்பதாவது கட்டில் மீதம் இருக்கிறதல்லவா? அதில்,முதல் கட்டிலில் தற்காலிகமாக இருக்கும், பத்தாவது ஆசாமியைப் படுக்கச் செய்தார்.

இப்படி, ஒவ்வொருவருக்கும் ஒரு தனிக்கட்டில் கிடைத்து விட்டது.ஆனால் இருந்ததோ ஒன்பது கட்டில்.ஆட்களோ பத்துப் பேர்.இது எப்படி சாத்தியம்?.

புதிருக்குக்கான விடையை கண்டுபிடித்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

சரியான விடையை நான் அப்புறம் சொல்றேன்!




சரி இப்போ விடையை சொல்லிடுறேன்.

விடை: முதல் கட்டிலில் தற்காலிகமாகப் படுத்திருப்பவர் 10 அது ஆசாமி என்று முதலில் சொல்லப் படுகிறது.அவர் கணக்கில் சேரமாட்டார்.எனவே, இரண்டாவது கட்டிலில் படுத்து இருப்பவ்ர் இரண்டாவது ஆசாமி,மூன்றாவது கட்டிலில் இருப்பவர் மூன்றாவது ஆசாமி என்றுதானே இருக்க வேண்டும்?.

என்ன சரியா?. முதல் பின்னூட்டத்திலே அதைக் கண்டுபிடித்து என்னை கலவரப் படுத்திய அண்ணன் இலவசக் கொத்தனாருக்கு ஜே!.அவருக்கு வாழ்த்துக்கள் மட்டும் சொல்லி "எஸ்" ஆவது நல்லதந்தி!