சத்திரத்தில் ஒரு ராத்திரி! அல்லது கட்டிலில் கணக்கு பண்ணலாம்!
இது மளையாளப் பட விமரிசனம் அல்ல!.சூட்டிற்காக வைக்கப் பட்ட தலைப்பும் அல்ல!.
தவறாக வந்து,விஷம விஷயம் இல்லாது போனதால் மனத்திற்குள் திட்டுபவர்கள் மன்னிக்க.
இது ஒரு புதிர் கணக்கு!.
இதைப் படித்து விட்டு அட நல்லயிருக்கே! என்பவர்களின் பாரட்டு கே.நடராஜன் என்பவருக்கு போகட்டும். அடச்சீ! இதல்லாம் ஒரு புதிரா என்று திட்டுபவர்களும் அவரையே திட்டிக்கொள்ளுங்கள்.ஏன்னா? புதிர் அவரோடது!
ஒரு நாள் இரவு ஒரு சத்திரத்தில் தங்குவதற்கு 10 வழிப்போக்கர்கள்,இடம் தேடி வந்தனர்.
அந்தச் சத்திரத்திலோ 9 கட்டில்கள் மட்டுமே இருந்தன.ஆனால் ஒவ்வொருவரும் தமக்குத் தனித்தனியாக ஒரு கட்டில் வேண்டுமென்று வற்புறுத்தினர்.
சத்திரத்தின் நிர்வாகி சற்று நேரம் யோசித்தார்.பிறகு ஒரு ஐடியா செய்தார்.10 ஆசாமிகளில் இரண்டு பேரைக்கூப்பிட்டு, முதல் கட்டிலில், கொஞ்ச நேரத்துக்கு படுத்துக் கொள்ளுமாறு வேண்டிக்கொண்டார்.
மூன்றாவது ஆசாமியை இரண்டாவது கட்டிலில் படுத்துக்கொள்ளுமாறு சொன்னார்.நான்காவது ஆசாமியை மூன்றாவது கட்டிலிலும்,ஐந்தாவது ஆசாமியை நான்காவது கட்டிலிலும்,ஆறாவது ஆசாமியை ஐந்தாவது கட்டிலிலும் ,இதே வரிசைப் படி..கடைசியாக ஒன்பதாவது ஆசாமியை எட்டாவது கட்டிலில் படுக்கச் செய்தார்.
ஒன்பதாவது கட்டில் மீதம் இருக்கிறதல்லவா? அதில்,முதல் கட்டிலில் தற்காலிகமாக இருக்கும், பத்தாவது ஆசாமியைப் படுக்கச் செய்தார்.
இப்படி, ஒவ்வொருவருக்கும் ஒரு தனிக்கட்டில் கிடைத்து விட்டது.ஆனால் இருந்ததோ ஒன்பது கட்டில்.ஆட்களோ பத்துப் பேர்.இது எப்படி சாத்தியம்?.
புதிருக்குக்கான விடையை கண்டுபிடித்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
சரியான விடையை நான் அப்புறம் சொல்றேன்!
சரி இப்போ விடையை சொல்லிடுறேன்.
விடை: முதல் கட்டிலில் தற்காலிகமாகப் படுத்திருப்பவர் 10 அது ஆசாமி என்று முதலில் சொல்லப் படுகிறது.அவர் கணக்கில் சேரமாட்டார்.எனவே, இரண்டாவது கட்டிலில் படுத்து இருப்பவ்ர் இரண்டாவது ஆசாமி,மூன்றாவது கட்டிலில் இருப்பவர் மூன்றாவது ஆசாமி என்றுதானே இருக்க வேண்டும்?.
என்ன சரியா?. முதல் பின்னூட்டத்திலே அதைக் கண்டுபிடித்து என்னை கலவரப் படுத்திய அண்ணன் இலவசக் கொத்தனாருக்கு ஜே!.அவருக்கு வாழ்த்துக்கள் மட்டும் சொல்லி "எஸ்" ஆவது நல்லதந்தி!
சத்திரத்தில் ஒரு ராத்திரி! அல்லது கட்டிலில் கணக்கு பண்ணலாம்!
Posted on Saturday, August 16, 2008
by நல்லதந்தி
Subscribe to:
Post Comments (Atom)
11 Responses to "சத்திரத்தில் ஒரு ராத்திரி! அல்லது கட்டிலில் கணக்கு பண்ணலாம்!":
இரண்டாவது ஆசாமி என்ன ஆனார்?
சரியா போச்சா?
/
ஒரு நாள் இரவு ஒரு சத்திரத்தில் தங்குவதற்கு 10 வழிப்போக்கர்கள்,இடம் தேடி வந்தனர்.
/
எல்லாருமே வழிப்போக்கர்களா? வழிப்போக்கிகளும் இருந்திருந்தால் இந்த பிரச்சனையே வந்திருக்காதே!!
:))
//எல்லாருமே வழிப்போக்கர்களா? வழிப்போக்கிகளும் இருந்திருந்தால் இந்த பிரச்சனையே வந்திருக்காதே!!
:))//
இதை நான் யோசனை பண்ணலியே! சிவா!...சிவ..சிவ..
:))))))
10வது ஆசாமி எங்கே போனார்.
தவிர 1ம் வழிப்போக்கர் எப்படி 10ம் வழிப்போக்கர் ஆனார்.
என்னய்யா ஒரே கண்ணை கட்டிதே.
;-)
முதல் கட்டிலில் தானே 10ம் ஆசாமி படுத்திருக்கிறார்.
நம்ம வழிப்போக்கந்தான் இந்தியா போறேன்னு போனாரே!!! சத்திரத்துக்கு எதுக்கு போனாரு?
// ச்சின்னப் பையன் said...
நம்ம வழிப்போக்கந்தான் இந்தியா போறேன்னு போனாரே!!! சத்திரத்துக்கு எதுக்கு போனாரு?//
ஒரே குறும்பு! :)(அக்குறும்பு)
சரி இப்போ விடையை சொல்லிடுறேன்.
விடை: முதல் கட்டிலில் தற்காலிகமாகப் படுத்திருப்பவர் 10 அது ஆசாமி என்று முதலில் சொல்லப் படுகிறது.அவர் கணக்கில் சேரமாட்டார்.எனவே, இரண்டாவது கட்டிலில் படுத்து இருப்பவ்ர் இரண்டாவது ஆசாமி,மூன்றாவது கட்டிலில் இருப்பவர் மூன்றாவது ஆசாமி என்றுதானே இருக்க வேண்டும்?.
என்ன சரியா?. முதல் பின்னூட்டத்திலே அதைக் கண்டுபிடித்து என்னை கலவரப் படுத்திய அண்ணன் இலவசக் கொத்தனாருக்கு ஜே!.அவருக்கு வாழ்த்துக்கள் மட்டும் சொல்லி "எஸ்" ஆவது நல்லதந்தி!
:)))))))))))))))))
:)))))))))))))))))
Post a Comment