மதுரை மக்கள் மு.க.அழகிரியை அஞ்சாநெஞ்சன் :))))))))))என்று பாராட்டுவதைக் கேட்க மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது என்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி கூறினார்.பழம்பெரும் பின்னணிப் பாடகர் டி.எம். சவுந்திரராஜன், பாடகி பி.சுசீலா ஆகியோருக்கு மதுரை தமுக்கம் மைதானத்தில் பிரமாண்ட பாராட்டு விழா நடந்தது. முதல்வரின் மூத்த மகன் மு.க. அழகிரி இந்த விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.மு.க.அழகிரி கல்வி அறக்கட்டளை சார்பில் டி.எம். சவுந்திரராஜனுக்கு ரூ.5 லட்சமும், சுசீலாவுக்கு ரூ.3 லட்சமும் பொற்கிழியாக இந்த விழாவில் வழங்கப்பட்டது.இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட முதல்வர் கருணாநிதி பேசியதாவது:மு.க.அழகிரிக்கு இன்னொரு பெயர் உண்டு. அது அஞ்சா நெஞ்சன். அப்படி அழைத்தே பழக்கப்பட்டவர்கள் மதுரை மக்கள். அழகிரிக்கு அஞ்சா நெஞ்சன் என்ற பட்டப் பெயர் வந்ததற்கு ஒரு காரணம் உண்டு.திருவாரூரில் அழகிரி பிறந்து, குழந்தையாக அறைக்குள்ளே கிடத்தப்பட்டிருந்தபோது, என் வீட்டுக்கு வந்தார் பெரியார்.குழந்தைக்கு என்ன பெயர் வைத்திருக்கிறாய், என்றார். நான் உடனே அழகிரி என்றேன். சரியான முரட்டுப் பெயரைத்தான் வைத்திருக்கிறாய் என்று அன்றைக்கே பெரியார் சொல்லிவிட்டார். (செத்துப்போனவர்களை வைத்து எத்தனை விளையாட்டுதான் விளையாடுவார்-தலைவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்-கலைஞர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்)மதுரை மாவட்டத்தில் உள்ள காளையர்களும் தோழர்களும் அதை உறுதி செய்திருக்கிறீர்கள்.இதைக் கண்டு உள்ளம் பூரிக்கிறேன். பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். எதற்கு அஞ்சாவிட்டாலும் கூட, ஏழைகளின் கண்ணீருக்கு அஞ்சவேண்டும் என்றான் ஒரு கவிஞன். அந்தப் பெருமையும் அழகிரிக்கு உண்டு. அந்த உள்ளம் வளர வாழ்த்துகிறேன்.தமிழ்த்தாயின் நன்றி!நண்பர் சவுந்திர்ராஜனுக்கு மிகச் சிறப்பான முறையில் பாராட்டுவிழா எடுத்திருக்கிறார் அழகிரி. அதை நினைக்கும் போதே எனக்குப் பெருமையாக இருக்கிறது. இந்த அளவு கூட்டத்தைப் பார்க்கும்போதே பிரமிப்பாக இருக்கிறது. அதுதான் அஞ்சாநெஞ்சனின் ஆற்றல்.டிஎம்எஸ் என்னோடு நெருங்கிப் பழகியவர். 1969-லே நான் முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொண்டபிறகு, தமிழ்த்தாய் வாழ்த்தாக தமிழர் நிகழ்வுகளிலெல்லாம் ஒலிக்கக்கூடிய ஒரு பாடலை உருவாக்க வேண்டும் என அனைவரும் விரும்பினர்.உடனே நான் மனோன்மணீயம் சுந்தரனாரின் நீராரும் கடலுடுத்த... பாடலின் சில பொதுவாக பகுதிகளை எடுத்து, யாருக்கும் பாதிப்பில்லாத வகையிலே தமிழ்த்தாய் வாழ்த்தாக்க முடிவு செய்து, சில பாடகர்களைப் பாடித்தருமாறு அழைத்தோம்.ஆனால் அந்தப் பாடலைப் பாட பலர் பயந்து கொண்டு வரமறுத்தார்கள். ஆனால் நண்பர் சவுந்திர்ராஜனும், பி.சுசீலாவும் சொன்ன வாக்கை மதித்துப் பாடிக் கொடுத்தார்கள். விஸ்வநாதன் –ராமமூர்த்தி (விஸ்வநாதன்\இராமமூர்த்தி 1964லிலேயே பிரிந்து விட்டதாக தகவல்கள் உள்ளன.கடைசியாக ஆயிரத்தில் ஒருவன் படத்திற்க்காக இசை அமைத்ததாக ஞாபகம்.அப்புறம் எப்படி 1969ல் இரண்டு பேரும் சேர்ந்து இசையமைத்தார்களோ தெரியவில்லை.மதுரையில் இவர்கள் இருவரும் உண்மையைச் சொல்லாததற்கு பயமும் காரணமாக இருக்கலாம்.எல்லாம் வல்லவராயிற்றே கலைஞர். அவர்தான் கலைஞர் பார் அவர்தான் கலைஞர்!.)இருவரும் அற்புதமாக மெட்டமைத்துக் கொடுத்தார்கள்.தமிழ் உள்ளளவும் உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல் இது. இதற்காக அந்த மாபெரும் இசைக் கலைஞர்களுக்கு தமிழ்த்தாய் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.டிஎம்எஸ் ஒரு தமிழன்...இது டி. எம். சவுந்திர்ராஜனின் சொந்த ஊர். அவர் பிறந்த வகுப்பு மற்றும் அந்த வகுப்பினர் அவர்பால் வைத்துள்ள பாசம் பற்றியெல்லாம் சொன்னார்கள். அவர் எந்த சமுதாயத்தில் பிறந்திருந்தாலும், அவர் ஒரு தமிழர் என்றுதான் என்னால் பார்க்க முடிகிறது. (தேவைப் படும் போது தமிழன் இல்லாவிட்டால் செளராஷ்ட்ரா?. எம்.ஜி.ஆர் அனுபவிக்காததா?..தமிழ்நாட்டில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் மொழியில் மட்டுமே, தமிழ் அல்லாத தமிழர்களுக்கு,(தமிழர்களின் வாழ்வில் இரண்டற கலந்து விட்ட அந்த தமிழர்களுக்கு) தமிழர்கள் சர்டிஃபிகெட் வேண்டுமா?? அணுக வேண்டிய முகவரி டாக்டர் கலைஞர்,தாசில்தார்,சென்னை)ஒரு தமிழன் இந்த அளவு திரைத் துறையில் கீர்த்தி பெற்றிருப்பது என்னை நெஞ்சு நிமிர வைக்கிறது.இவ்வளவு பெரிய விழா எடுத்த அழகிரியை மீண்டும் மீண்டும் பாராட்டாமல் இருக்க முடியாது. அவரைப் போற்றுகிறேன்.இந்த விழாவிலே அழகிரிதான் நன்றி கூறினார். ஆனால் அந்த நன்றியில் என் நன்றியும் கலந்திருக்கிறது, என்றார் கருண்நிதி.இயக்குநர்கள் கே.பாலச்சந்தர், இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் விழாவில் பங்கேற்றுப் பேசினர்.
நன்றி :-thatstamil
தமிழர்களுக்கு தமிழர் சர்டிஃபிகெட் வேண்டுமா?-அணுகவேண்டிய முகவரி டாக்டர் கலைஞர்,தாசில்தார்,சென்னை!
Posted on Thursday, August 7, 2008
by நல்லதந்தி
Subscribe to:
Post Comments (Atom)
23 Responses to "தமிழர்களுக்கு தமிழர் சர்டிஃபிகெட் வேண்டுமா?-அணுகவேண்டிய முகவரி டாக்டர் கலைஞர்,தாசில்தார்,சென்னை!":
அடப்பாவிகளா ஒருத்தர் கூட கமெண்ட் போடவில்லையே!.அழகிரி மேல் அவ்வளவு பயமா? :)
//அடப்பாவிகளா ஒருத்தர் கூட கமெண்ட் போடவில்லையே!.அழகிரி மேல் அவ்வளவு பயமா? :)//
ஹா ஹா ஹா ஹா
:))))))))))))))
:)
//விஸ்வநாதன்\இராமமூர்த்தி 1964லிலேயே பிரிந்து விட்டதாக தகவல்கள் உள்ளன.கடைசியாக ஆயிரத்தில் ஒருவன் படத்திற்க்காக இசை அமைத்ததாக ஞாபகம்.அப்புறம் எப்படி 1969ல் இரண்டு பேரும் சேர்ந்து இசையமைத்தார்களோ தெரியவில்லை.//
இதற்கு யாராவது விளக்கம் கொடுக்கலாம்.
:))))vanthathukku
super
படு மட்டமான பதிவு....உங்கள் தனிப்பட்ட கோபங்களை காட்ட மட்டுமே எழுதப்பட்டது...
//படு மட்டமான பதிவு....உங்கள் தனிப்பட்ட கோபங்களை காட்ட மட்டுமே எழுதப்பட்டது...//
:)
நல்லதந்தி!
ஹையோ ! ஹையோ .. என்னது இது பச்ச புள்ள தனமா.. அழ கூடாது
//No Pressure; No Diamonds said...
ஹையோ ! ஹையோ .. என்னது இது பச்ச புள்ள தனமா.. அழ கூடாது//
வயித்தெரிச்சலை கொட்டிக்காதீங்க சாமி! :)
ஆகா அட்டகாசம் அருமை சூப்பரப்பு
அருமையான அட்டகாசமான அசத்தலான பதிவு
தாசில்தார் கலைஞர் வாழ்க
தாசில்தார் குடும்பத்தில் பிறந்த தமிழ்நாட்டின் ஒளிவிளக்கு அண்ணன் முக அழகிரி வாழ்க
தமிழ்நாட்டின் வருங்கால முதல்வர் அஞ்சா செஞ்சன் வாழ்க
அப்படியே இந்தியன் சர்டிபிகேட் வாங்க எந்த முகவரிக்கு போகனும் அப்படின்னு சொல்லிட்டிங்கன்னா நன்னா இருக்கும். ஏன்னா சில அம்பிகள் இந்தியா இந்துக்களுக்கேன்னு சொல்லிட்டு திரியிறாங்க
//அப்படியே இந்தியன் சர்டிபிகேட் வாங்க எந்த முகவரிக்கு போகனும் அப்படின்னு சொல்லிட்டிங்கன்னா நன்னா இருக்கும்.//
காங்கிரஸ் முகவரிக்குப் போகலாம்.அவங்கதான் இத்தாலியில இருந்து வந்தாலும் இந்தியன் சர்டிபிகேட் இலவசமாத் தர்றாங்க.தமிழ்நாட்டிலேயே கலைஞர் ஐயா இதுக்கும் சர்டிபிகேட் உடனே தர்றாரு!.ஆனா ஒண்ணு கலைஞர் கிட்ட சர்டிபிகேட் வாங்கணும்னா ஐயர்வாளா இருக்கப் படாது அம்பி! :)) ;)
நம்ம அத்வானியும் அங்கே தான் சர்டிபிகேட் வாங்கினாரா, பார்த்தா அப்படி தெரியலியே. சரி அத விடுங்க இந்தியாவிலேயே வழி வழியாக இருப்பவர்கள் எங்கே போய் இந்தியன் சர்டிபிகேட் வாங்கனும்
//நம்ம அத்வானியும் அங்கே தான் சர்டிபிகேட் வாங்கினாரா, பார்த்தா அப்படி தெரியலியே. //
எதுக்கு அத்வானி சர்டிபிகேட் வாங்கணும் 1947 ஆகஸ்ட்டுக்கு முன் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே தேசமாய் இருந்தது மறந்து போச்சா?.அப்படிப் பாத்தா மன்மோகன் சிங் யார் கிட்டே சர்டிபிகேட் வாங்கணும்!
பாதி பதில் தான் சொல்லுவீங்க போல, சரி அத்வானிக்கு கொடி பிடிக்கிறதுல இருந்தே கொண்டை நல்லா தெரியுது
//செந்தழல் ரவி said...
படு மட்டமான பதிவு....உங்கள் தனிப்பட்ட கோபங்களை காட்ட மட்டுமே எழுதப்பட்டது...//
இதை யாரு சொல்றா வோய்?
இவ்ளோ நெருங்கியத் தொடர்பிருந்தும் கடற்கரையில் சிவாஜி சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் அவரைப் பற்றியப் பாடலைப் பாட முழுத் தகுதியுள்ள டி.எம்.எஸ்ஸைவிட்டுவிட்டு, சீர்காழி சிவசிதம்பரத்தை அழைத்தது ஏனோ..
முந்தைய ஆட்சிக் காலத்தில் நேரு ஸ்டேடியத்தில் நடந்த பாராட்டு விழாக் கூட்டத்தில் கருணாநிதியைப் பற்றி வாழ்த்திப் பாட அழைத்தும் மாட்டேன் என்று டி.எம்.எஸ். மறுத்த கோபத்தினால்தானே..
எப்படி அந்தக் கோபம் 1 வருடக் காலத்தில் அஞ்சாநெஞ்சனால் காணாமல் போனது..
எல்லாம் நடிப்புதான்..
//திருவாரூரில் அழகிரி பிறந்து, குழந்தையாக அறைக்குள்ளே கிடத்தப்பட்டிருந்தபோது, என் வீட்டுக்கு வந்தார் பெரியார்.//
நான் குழந்தையாக இருக்கும் போது கூட ராஜிவ் காந்தி எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது அவர் எங்கள் குடும்பத்தாரிடம், இவனை பின்னாளில் Bleachingpowder என்ற பேரில் blog எழுத சொல்லுங்கள் பெரிய ஆளாய் வருவானு சொல்லிட்டு போனார்.
இதே மாதிரி எங்க தாத்தா பிறந்தப்போ, எங்க வீட்டுக்கு காந்தி தாத்தாவும் வந்துட்டு போனார்.
இந்த மாதிரி உங்க வீட்டிற்கு யாராச்சும் வந்திருக்காங்களா நல்ல தந்தி??
//செந்தழல் ரவி said...
படு மட்டமான பதிவு....உங்கள் தனிப்பட்ட கோபங்களை காட்ட மட்டுமே எழுதப்பட்டது...//
இணைய தாசில்தார் செந்தழல் ரவி சொன்னால் சரியாகதான் இருக்கும் ஓய்
Post a Comment