பாகிஸ்தானில் மட்டும் அரசியல், பார்த்த சினிமாவையே மீண்டும்மீண்டும் பார்ப்பது போல, பார்த்த காட்சிகளே திரும்பதிரும்ப அரங்கேறுகிறது. நாற்பது ஆண்டுகளுக்கு முன் பார்த்த காட்சியை தற்போது மீண்டும் பாகிஸ்தான்மக்கள் பார்க்கிறார்கள்.
1969-ல் குமுதத்தில் வந்த தலையங்கத்தின் ஒரு பகுதியைப்படியுங்கள். நீங்கள் மாற்ற வேண்டியது 'அயூப்கான்' என்று வரும் இடத்தில்'முஷாரஃப்' என்று படிக்க வேண்டியது மட்டுமே!
பாவம், அயூப்கான்!.அஸ்தமனம் என்பது எல்லோருக்கும் உண்டுதான்.ஆனாலும்,தளபதியாக இருந்து ஜனாதிபதியாக உயர்ந்த இந்த பாகிஸ்த்தான் தலைவரின் அரசியல் வாழ்க்கை இப்படிப்பொசுக்கென்றா முடிய வேண்டும்?. பரிதாபத்திற்க்குரிய விஷயம். ஊழல்பிடித்த அரசியல்வாதிகளின் பிடியிலிருந்து அன்று மக்களை அவர் மீட்டார்.
இன்றோ,அவரது பிடியில் இருந்து தங்களை மீட்டுக்கொள்ள மக்கள் ஒரு புரட்சியே செய்து விட்டார்கள். விளைவு? சட்டத்தின் உயிர் ஊசலாட ஆரம்பித்தது.ஒழுங்குக்கு மூச்சுத் திணறலாயிற்று.
எந்த நாட்டிலுமே,வன்முறையை வன்முறையால்தான் ஒடுக்க முடியும் என்ற நெருக்கடியானகட்டம் வரும்போது, ‘கைவரிசையைக் காட்டுங்கள்' என்று இராணுவத்திற்க்கு கட்டளைஇடப்படுவது உண்டு.இராணுவத்திற்க்கு அயூப்கான் கட்டளை இடவில்லை.அதனிடம் சரணாகதி ஆகிவிட்டார்.‘துணைக்கு வாருங்கள்' என்று அவர் தற்போதைய தளபதி யாஹ்யாகானைக் கூப்பிடுவதோடுநிறுத்திக் கொள்ளவில்லை.தூக்கியே கொடுத்துவிட்டார் ஆட்சிப்பொறுப்பை.
இப்போது பாகிஸ்த்தானில் அமைதி நிலவுகிறது என்றால் அதற்க்கு ஒரே காரணம்தான்இருக்க முடியும்.துப்பாக்கி அங்கே அரசாங்கம் நடத்திக் கொண்டிருக்கிறது.பாகிஸ்த்தானிய மக்கள் அயூப்கானுக்கு எதிராகப் பொங்கியது ஏன்?
அரைத்த மசாலாவையே திரும்பத்திரும்ப அரைக்கும் பாகிஸ்தான் அரசியல்!
Posted on Tuesday, August 19, 2008
by நல்லதந்தி
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
//அஸ்தமனம் என்பது எல்லோருக்கும் உண்டுதான்.ஆனாலும்,தளபதியாக இருந்து ஜனாதிபதியாக உயர்ந்த இந்த பாகிஸ்த்தான் தலைவரின் அரசியல் வாழ்க்கை இப்படிப்பொசுக்கென்றா முடிய வேண்டும்?.//
:)
Post a Comment