ஆனந்தவிகடனுக்கு பதிலடி---அன்னக்கிளி குமுதம் விமரிசனம்!

Posted on Saturday, August 23, 2008 by நல்லதந்தி


ஹி..ஹி... சினிமா ஸ்டில் கிடைக்கலை அதான்!

ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு பள்ளிக்கூடம்; அதற்கு ஒரே ஒரு வாத்தியார்.(பாடம் கீடம் நடத்தியதாகத் தெரியவைல்லை) அவர் காதலிப்பது அன்னக்கிளியை.கைப் பிடிக்க நேர்வது சொர்ணக்கிளியை.இன்னும் கொஞ்சம் துணிவு இருந்திருந்தால் கதையைக் கவிதையாகப் பண்ணி இருக்கலாம். கை நழுவ விட்டுவிட்டார்கள். கதையே டல் அடிக்கிறது.


முழுக்க முழுக்க கிராமத்துச் சூழ்நிலையை வைத்துத் தரமான பிளாக் அண்ட் வொய்ட் படம் வந்து ரொம்பக் காலம் ஆகிவிட்டது என்று ஏங்குபவர்களுக்கு அன்னக்கிளி ஆறுதல் தரும்.


ஊஞ்சலாட்டம் முதல் நீச்சலோட்டம் வரை வாத்தியாரைய்யாவுக்கு வாத்தியாரம்மாவாக விளங்குகிறார் சுஜாதா.


சிவகுமாரின் வயிற்றை இரு கைகளிலும் ஏந்திக் கொண்டு, 'ஊம்.....இப்ப கால் ...இப்ப கை...' என்று நீச்சல் சொல்லிக் கொடுத்து விட்டு பிறகு அவரது இடுப்புத் துண்டைக் காணோம் என்று தெரிந்ததும் கூச்சத்துடன் ஓட்டம் பிடிப்பது கிளுகிளுப்பான -- அதே சமயம் அசிங்கமான -- குட்டிக் கதை.


அதென்னவோ தெரியவில்லை,படாபட் வந்த பிறகு தான் பழைய காதல் கதையில் சூடு பிடிக்கிறது.


முழங்காலை இரு கைகளாலும் கட்டிக் கொண்டு, சாய்ந்து சாய்ந்து ஆடிக்கொண்டே,"உங்களுக்கு எப்படி இந்தக் கிராமத்தில் பொழுது போகிறது?" என்று சிவகுமாரிடம் பேச்சுக் கொடுக்கும் சரளம்; 'என்னங்க,அன்னத்துக்கு ரெண்டு ரூபாய் கொடுங்க', என்று--கணவனுக்கும் அவளுக்கும் உள்ள உறவைப் பற்றி அறியாமலே----சொல்லிவிட்டு வீட்டுக்குப் போகும் லாவகம்---படே பட்தான் இந்த படாபட்.


அங்கே திரையில்,கண்ணகியின் போராட்டம்; இங்கே தியேட்டர் முதலாளியின் படுக்கை அறையில் அன்னக்கிளியின் போரட்டம்.டைரக்டர்களின் சாமர்த்தியத்துக்கு ஒரு சபாஷ்.


தன்னை நேசித்து,சமயத்தில் தனக்கு ஆயிரம் ரூபாய்ப் பணத்தை-குருவி சேர்ப்பதுபோலச் சேர்த்து--அனாயாசமாக எடுத்துக் கொடுத்த பேதைப் பெண்ணை ஏமாற்றி விட்டோமே என்று சிவகுமார் ஏக்கப் பட்டவராக இருக்க, அவரைப் பிரிந்து விட்டோமே என்று சுஜாதா ஏங்க இருவரும் சந்திக்கும் போது,உணர்ச்சி வசப் பட்டுத் தங்களை ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு விடுவதும்,சுஜாதா உடனே பிரக்ஞை வரப் பெற்றவராக,'போயிடுங்க வாத்தியாரையா, போயிடுங்க..' என்று பதறுவதும் நல்ல கட்டம்.


ஸ்ரீகாந்த், சோக காந்த்.


சில ரே ரக கிராமிய அழகுகள்; சில ஆழ்ந்த வசனங்கள்; சில புத்திக் கூர்மையுள்ள டைரக்ஷ்ன் பொறிகள். இவ்வளவு இருந்தும்---


அன்னக்கிளியை மனசில் நின்ன கிளி என்று சொல்லத் தோன்றவில்லை.


பி.கு : இந்த திரைப் படத்திலிருந்து தமிழ் திரை இசையை வேறு தளதிற்க்கு கொண்டு சென்ற இளைய ராஜாவின் இசையைப் பற்றி ஒரு வரி கூட எழுதாத ஞான சூனிய குமுதம் விமரிசகரைப் பற்றி என்ன சொல்ல!


15 Responses to "ஆனந்தவிகடனுக்கு பதிலடி---அன்னக்கிளி குமுதம் விமரிசனம்!":

உண்மைத்தமிழன் says:

நல்லதந்தி

நீங்கள் யாரோ, எவரோ..?

இநேற்றைய ஆனந்தவிகடனில் வந்திருந்த அன்னிக்கிளி விமர்சனத்திற்கு தோதான நேரம் பார்த்து குமுதம் விமர்சனத்தை போட்டிருக்கிறீர்கள்..

பாராட்டுக்கள்..

குமுதத்தின் செயலுக்கான காரணத்தை யூகிக்க முடியவில்லை..

மேற்கொண்டும் தெரிந்தால் சொல்லுங்கள்..

பின்குறிப்பு : 'நல்லத்தம்பி' என்றொரு 'தோழர்' இன்றிலிருந்து உங்களுக்குக் கிடைத்திருக்கிறார் போலத் தெரிகிறது. அக்கப்போரை தொடங்குங்கள்..

வாழ்க வளமுடன்

Unknown says:

பாராட்டுக்கள்..
வாழ்க வளமுடன்
அக்கப்போரை தொடங்குங்கள்..

Anonymous says:

பழைய பத்திரிகை எல்லாம் சேர்த்து வச்சிருபிங்க போல. படம் கிடைக்கலன்னா ஒரு கிளி அல்லது இளையராஜா படம் போட வேண்டியதுதான. அது என்ன சம்பந்தமே இல்லாம ஒரு படம். :)

நல்லதந்தி says:

படம் கிடைக்கலன்னா ஒரு கிளி அல்லது இளையராஜா படம் போட வேண்டியதுதான. அது என்ன சம்பந்தமே இல்லாம ஒரு படம். :)

அட சத்தியமா அது கிளி படம்தாங்க!.கொஞ்சம் வித்தியாசம இருக்கட்டுமே ஓவியகிளியைப் போட்டேன்.இருந்தாலும் உங்க பார்வை ரொம்ப ஷார்ப் கொம்பன்!.

நல்லதந்தி says:

//நல்லதந்தி

நீங்கள் யாரோ, எவரோ..?//

:)

நல்லதந்தி says:

//இநேற்றைய ஆனந்தவிகடனில் வந்திருந்த அன்னிக்கிளி விமர்சனத்திற்கு தோதான நேரம் பார்த்து குமுதம் விமர்சனத்தை போட்டிருக்கிறீர்கள்..

பாராட்டுக்கள்..//

:)

நல்லதந்தி says:

//குமுதத்தின் செயலுக்கான காரணத்தை யூகிக்க முடியவில்லை..//
?????????

நல்லதந்தி says:

//பின்குறிப்பு : 'நல்லத்தம்பி' என்றொரு 'தோழர்' இன்றிலிருந்து உங்களுக்குக் கிடைத்திருக்கிறார் போலத் தெரிகிறது. அக்கப்போரை தொடங்குங்கள்..//
:(

நல்லதந்தி says:

//வாழ்க வளமுடன்//

/\ :)

நல்லதந்தி says:

// புதுகைச் சாரல் said...
பாராட்டுக்கள்..
வாழ்க வளமுடன்
அக்கப்போரை தொடங்குங்கள்.//

அண்ணா வணக்கங்க!

Anonymous says:

என்னாசாமி நானும் பாத்துக்கிட்டே இருக்கேன்.உங்க சைட்டில மட்டும் கமெண்ட் போட ரொம்ப யோசிக்கிறாங்க!.ரொம்ப படுத்திடுவீரோ? :)

Anonymous says:

நல்லதந்தி ஒரு வில்லங்கமான மனுஷன் அதான்.

கமெண்ட்-ஆ முக்கியம். சூடான இடுகைல வருதாங்கிரத்துதான் முக்கியம்.

நல்லதந்தி ! ஏதாவது விழிப்'புணர்வு' ன்னு காம கதையாடல் எழுத ஆரம்பிங்க. முக்கியமா பொம்பள பெயரில் எழுதனும். கூடவே Contributor ன்னு ஒரு ஆம்பள பெயரையும் சேர்த்துக்கோங்க. யாரும் பின்னூட்டம் இடலன்னா அந்த ஆம்பள பெயரில் ஒரு நிமிட இடைவெளியில் நீங்களே பின்னூட்டம் இட்டுக்கலாம். அந்த ஆம்பள ஐ.டி யா ஜால்ரா போட உபயோகிச்சுக்கலாம்.

"ஏன் எல்லோரும் இப்படி இருக்காங்கன்னு?" எழுதி உள் வக்கிரங்களை தீர்த்துக்கலாம்.

அந்த கேப்பையில் நெய் வடிஞ்ச கதைக்கு பின்னூட்டம் போட நிறைய கூட்டம் வரும்.

ஆனா ஒண்ணு! கடைசியில உங்கள ஒரு மனநல மருத்துவ மனையில் சேர்த்துடுவாங்க.

Athisha says:

கலக்கல் பதிவு

நீங்க அவரு தானா???

நல்லதந்தி says:

//அதிஷா said...
கலக்கல் பதிவு

நீங்க அவரு தானா???//

ஆமாங்க நான் நானேதான்!.கண்டு புடுச்சிட்டீங்களே!.:)
இந்த தமிழ்மணத்தில ஆறு மாசமா மேஞ்சித்திரிஞ்சாலும்,ஒண்ணுமே புலப்பட மாட்டேங்குதே!.தமிழ்நாட்டு அரசியலே தேவல போலிருக்கே! :(

நல்லதந்தி says:

//டிரவுசர் பாண்டி said...
நல்லதந்தி ஒரு வில்லங்கமான மனுஷன் அதான்.

கமெண்ட்-ஆ முக்கியம். சூடான இடுகைல வருதாங்கிரத்துதான் முக்கியம்.

நல்லதந்தி ! ஏதாவது விழிப்'புணர்வு' ன்னு காம கதையாடல் எழுத ஆரம்பிங்க. முக்கியமா பொம்பள பெயரில் எழுதனும். கூடவே Contributor ன்னு ஒரு ஆம்பள பெயரையும் சேர்த்துக்கோங்க. யாரும் பின்னூட்டம் இடலன்னா அந்த ஆம்பள பெயரில் ஒரு நிமிட இடைவெளியில் நீங்களே பின்னூட்டம் இட்டுக்கலாம். அந்த ஆம்பள ஐ.டி யா ஜால்ரா போட உபயோகிச்சுக்கலாம்.

"ஏன் எல்லோரும் இப்படி இருக்காங்கன்னு?" எழுதி உள் வக்கிரங்களை தீர்த்துக்கலாம்.

அந்த கேப்பையில் நெய் வடிஞ்ச கதைக்கு பின்னூட்டம் போட நிறைய கூட்டம் வரும்.

ஆனா ஒண்ணு! கடைசியில உங்கள ஒரு மனநல மருத்துவ மனையில் சேர்த்துடுவாங்க.
//
நல்லதா எதாவது சொல்லுங்கப்பூ!...